• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயம் 4

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
230
43
Salem
"இன்னும் கொஞ்சமா சாப்பிடு மா... உடம்புல கொஞ்சமும் சத்தே இல்லை டா சாலா.. டாக்டர் என்னை திட்டுறாங்க உனக்கு சாப்பாடு போடுறான்னா இல்லையான்னு.." என்று கிண்டல் பேசியபடி தன்னவளுக்கு உணவை ஊட்டி கொண்டிருந்தான் ரிஷி.
ஏனோ அவனின் காதலில் இப்பொழுதும் உருகி தான் போகிறாள் பெண்ணவள். அவனையே பார்த்து கொண்டிருந்தவளை கண்டவன்,
"என்ன மா.." என்றான் மென்மையாய்.
"மாமா என் மேல ஏன்டா உனக்கு இவ்ளோ காதல்.. உண்மையை சொல்லவா மாமா.. உன்னோட காதல்ல உருகி போற அதே நேரம் மனசோரம் ஏதோ இனம்புரியா ஒரு தவிப்பும் துடிப்பும் இருக்கு மாமா.. இது ஏன்னு எனக்கு புரியலை மாமா.." என்றாள் கலக்கமாய்.
அவளின் கலக்கம் புரிந்தும் ஆறடி ஆண் மகன் தடுமாறித்தான் போனான்.
அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று மட்டும் ஆடவனுக்கு தெரியவில்லை.
அவன் கொடுத்த உணவை முழுதாய் உண்டு முடித்தவள் அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அவனின் கரங்கள் மென்மையாய் அவளின் தலையை வருடி கொடுத்தது.
" மாமா உன்கிட்ட ஒன்னு கேட்கவா.." என்று அவன் நெஞ்சில் சாய்ந்தபடியே பேசினாள்.
"ஏன் மாமா எனக்கு செந்த பந்தம் யாருமில்லையா.. உனக்கும் அப்படி யாருமில்லையா மாமா.. ஏன் நாம இப்படி இங்கே தனியா இருக்கோம்.." என்றாள் கேள்வியாய்.
அவளின் கேள்வியில் அவளை மென்மையாய் வருடி கொண்டிருந்த அவனின் கரங்கள் அப்படியே அந்தரத்தில் நின்றது.
"மாமா என்னாச்சி ஏன் ஒரு மாறி ஆயிட்டீங்க.." என்றபடி அவனின் முகத்தை பார்க்க அதுவோ ஆயிரம் வலிகளை கொண்டிருந்தது.
"மாமா என்னாச்சி.." என்றாள் அவனின் முகத்தை வருடியபடி.
"ஒன்னுமில்லை டா.. எனக்கு யாருமில்லை.. நான் ஒரு அனாதை.. உனக்கும் சொந்தம்னு சொல்ல யாருமில்லை.. ஒரு பங்ஷன்ல உன்னை பாத்து காதலிச்சேன்.. நீயும் என்னோட காதலை ஏத்துகிட்டே.. சந்தோஷமா தான் இருந்தோம்.. அப்போ தான் உனக்கு ஆக்ஸிடென்ட் ஆகி பழைய நினைவுலாம் மறந்துட்டே.. என்னையவே உனக்கு அடையாளம் தெரியலை.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தான் என்னைய நெருங்க விட்டே.. என்னைய நம்பவே ஆரம்பிச்சே சாலா.." என்றான் எங்கோ பார்த்து கொண்டே.
அவனின் மார்பில் தங்களின் கதை கேட்டு கொண்டே சாய்ந்தவள் அப்படியே தூங்கிவிட்டாள்.
தன் தோளில் மழலையாய் தூங்கியவளை கண்டவனுக்குள் பழைய நினைவுகள் வண்டாய் குடைந்தது.
'சாலா என்னை மன்னிச்சிடுடி உன்கிட்ட நான் சொன்னது அத்தனையும் பொய் டி.. உண்மை தெரியும் போது நீ என்னை வெறுத்துராதே கண்ணம்மா.. அதை தாங்க கூடிய சக்தி எனக்கு இல்லை டி.. உன்கிட்ட சொன்னதுல ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்மை டி.. எனக்குன்னு யாருமில்லை நான் ஒரு அனாதை.. இது மட்டும் உண்மை டி.. ஐ லவ் யூ டி.. எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டு பிரிஞ்சி போயிடாத டி.. அதை தாங்கிக்க நான் உயிரோட இருக்க மாட்டேன் கண்ணம்மா.. ' என்று அவளிடம் மனதோடு பேசியவன் அவளை இறுக்கமாய் அணைத்து கொண்டான்.
மருத்துவமனையில் இருந்த தேவகன்யாவின் முகம் களையிழந்து போயிருந்தது.
இரவு கண்ட கனவின் கருப்பு பக்கம் இன்னும் அவளின் மனதில் ஆழமாய் நுழைந்திருந்தது.
" மிஸ்ஸஸ் தேவகன்யா நீங்க வீட்டுக்கு போலாம்.. ஒன் வீக் கழிச்சி வாங்க இந்த ஸ்டிச்சஸ் பிரிச்சிடலாம்.." என்று சொன்னபடி அவளுக்கு சில மருந்துகளை கையில் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள் நர்ஸ்.
"சிஸ்டர்.." என்று சென்றவளை மீண்டும் அழைத்தாள் கன்யா.
" சொல்லுங்க மா.." என்று சிரித்தபடி அவளிடம் திரும்பினாள்.
"எனக்கு ஆன செலவுக்கு இதை எடுத்துக்கோங்க.." என்றபடி தன் உடமைகளில் இருந்த வளையலை கொடுத்தாள்.
" இல்லைம்மா அன்னைக்கு உங்களை அட்மிட் பண்ணாரு இல்லை அவரே எல்லா பேமன்டும் கொடுத்துட்டு தான் மா போனாரு.. இதை நீங்களே வச்சிக்கோங்க.." என்றபடி அந்த நர்ஸ் செல்லவும் தனக்கு உதவி செய்தவன் யார் என்று தெரியாமல் அவனுக்கு மானசீகமாய் ஒரு நன்றியை தெரிவித்தாள்.
ஆனால் அவன் யார் என்று தெரிந்தால் இந்த நன்றியை அவள் சொல்லியிருப்பாளா என்பது சந்தேகமே.
தன் உடமைகளை எடுத்து கொண்டவள் அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவளின் முன்னே அந்த கார் வந்து நின்றது.
அதை கண்டவள் உள்ளே யார் இருக்கிறார்கள் என்று பார்க்க அதில் டிரைவர் சீட்டில் மட்டும் ஒருவன் அமர்ந்திருக்க ஒரு பெருமூச்சுடன் அந்த வண்டியின் பின்னால் அமர்ந்தாள் பெண்ணவள்.
எப்படி தான் இருக்கும் இடம் தெரியும் என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை.. நிச்சயம் தன்னை அவன் அறிந்திருப்பான் என்று நினைத்தவள் கண்களை மூடியபடி சீட்டில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்.
சரியாக தேவநந்தனின் வீட்டின் போர்டிகோவில் அந்த கார் நிற்க டிரைவரோ, "அம்மா வீடு வந்துருச்சிங்க.." என்றான் பவ்யமாய்.
அடுத்த நடக்க போவதை அறிந்தவளின் கால்கள் பிண்ணி பினைந்தது உள்ளே செல்ல முடியாமல்.
ஆனால் அவள் வாசலில் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடி உள்ளிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்க அதுவரை இருந்த தயக்கம் பயம் அனைத்தையும் விரட்டியவள் வேகமாய் ஓடி சென்றாள் குழந்தையை நோக்கி.
தொட்டிலில் அழுது கொண்டிருந்த மழலையை தூக்கி கொண்டவள் இறுக்கமாய் அணைத்து கொண்டாள் பிள்ளையை.
கண்கள் கலங்கி தவித்து துடிக்க பிள்ளையை தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டவள் மெதுவாய் முதுகை வருடி கொடுக்க,
"பாப்பு எப்படி டா இருக்க.. என்னை மன்னிச்சிடு தங்கம்.. உங்களை விட்டு நான் போயிருக்க கூடாது டி என் பட்டு மா.. ஆனா வேற வழி தெரியலை டா அம்மு.. என்னை மன்னிச்சிடுங்க தங்கமே.." என்று பேசி கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
தன் முதுகின் பின்னே ஊசியாய் துளைக்கும் பார்வை உந்த திரும்பி பார்த்தவளின் விழிகள் தெறித்து விடும் அளவு உடல் நடுங்கியது பெண்ணவளுக்கு.
அவளின் எதிரே கர்ஜிக்கும் சிங்கமாய் நின்றிருந்தான் தேவநந்தன்.
அவன் முகத்தில் அத்தனை கோபம் இருந்தது.
அவனை கண்டதும் உடல் நடுங்க நின்றவளை பார்வையால் கொன்றவன் வேகமாய் வந்து பிள்ளையை பறித்து கொண்டான்.
" நீ யாருடி என் வீட்டு பிள்ளையை தொட.. ஏன் நாங்க இன்னும் உயிரோட இருக்கோமா இல்லையான்னு பாக்க வந்தியா.. உன்னால எல்லா சொந்தமும் என்னை விட்டு போயிடுச்சி டி.. போடி போ எதுக்கு இங்கே வந்த.. என் குடியை கெடுத்தவளே நீதாண்டி.. எதுக்கு என் முன்னாடி வந்து நிக்குற.. உன்னை போல ஒரு துரோகியை நான் பார்த்தே இல்லை டி.." என்றான் கோபத்துடன்.
அவளின் கைகளில் பதுமையாய் இருந்த குழந்தை வேகமாய் அவளிடமிருந்து பறிக்கவும் அவனின் கத்தல் சத்தமும் மீண்டும் அழ ஆரம்பித்தது.
குழந்தை அழ ஆரம்பித்ததும் பெண்ணவளின் மனம் பரிதவித்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் பற்றுக் முடியாதவள்,
"என் மேல எவ்வளவு கோபத்தையும் காட்டுங்க.. ப்ளீஸ் இப்போ பாப்பாவை கொடுங்க.. அவ பயத்துல அழறா.." என்று அழுதபடி குழந்தையை வாங்க முனைய அவனோ ஆக்ரோஷத்தின் பிடியில் இருக்க அவளின் கையை தட்டி விட்டவன் அவளின் கழுத்தை பிடித்து நெறித்தான்.
சிங்கத்தின் கையில் சிக்கிய மானாய் இருந்தவளுக்கு தன் நிலையை விட குழந்தையின் அழுகுரல் தான் பெரிதாய் தெரிந்தது.
" ப்..ளி..ஸ்.. கு..ழ.." என்று முடிக்க முடியாமல் அவன் நெறித்ததில் கண்கள் ரெண்டும் வெளியே வந்து விழுந்தது.
ஒரு கட்டத்தில் மேல் அவளின் நிலையை கண்டவன் அப்படியே கீழே விட விழுந்தவள் அடுத்த நொடி எழுந்து குழந்தையை அவனிடமிருந்து வாங்கி கொண்டாள்.
தன் கழுத்தை அவன் நெறித்ததை விட பிள்ளை அழுததை தான் அவளால் தாங்க முடியவில்லை.
உள்ளே பார்த்து, "வரதம்மா பிள்ளைக்கு பால் எடுத்துட்டு வாங்க.." என்று குரல் கொடுத்தாள் ரொம்ப நாள் பழகியவளை போல்.
அவளின் குரல் கேட்டு உள்ளிருந்து சந்தோஷமாய் வந்த வரதம்மா அவளை கண்டு வேகமாய் வந்து அவளிடம் பாட்டிலை கொடுத்தவள்,
"பாப்பா வந்துட்டியா கண்ணு.. எத்தனை மாசமாச்சி உன்னை பார்த்து.." என்று சந்தோஷத்துடன் அவளை நெட்டி முறித்தாள்.
இருவரையும் கண்ட தேவநந்தனுக்கு ஆத்திரமாய் வந்தது.
"வரதம்மா.." என்று ஒரு குரல் கொடுக்கவும் அவனுக்கு பயந்து வேகமாய் உள்ளே சென்றுவிட்டார் முதியவர்.
குழந்தைக்கு பாலை கொடுத்து முடித்தவள் வாயை துடைத்து விட்டு தன் தோளில் தூக்கி போட்டு கொண்டவள் அங்கிருந்த அறைக்கு செல்ல முயன்றாள் தேவகன்யா.
அவளை ஆத்திரத்துடன் கண்டவன் சொடக்கிட்டு அழைத்தவன்,
"இந்த வீட்ல நீ.வேலைக்காரி தான்.. இப்பவும் பாப்பாக்காக மட்டும் தான் உன்னை உள்ளே விட்டுருக்கேன்.. நீ எனக்கு செஞ்ச துரோகத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்துட்டதா நினைக்க வேண்டாம்.. " என்று அவளிடம் கர்ஜித்தவன் அடு்த்த நொடி அங்கிருந்து சென்று விட்டான்.
அவன் சென்றதும் ஒரு பெருமூச்சு விட்டவள் ஏதோ இந்த அளவுக்காவது விட்டானே என்ற நிம்மதியுடன் குழந்தையுடன் உள்ளே சென்றாள்.
"ஹேய் நந்து என்ன பன்றீங்க.. போய் வேலையை பாருங்க.. காலையிலே இப்படித் தான் பண்ணுவீங்களா.." என்று கொஞ்சியபடி விழுந்தது பெண்ணவளின் குரல்.
அந்த குரலில் விதிர்த்து போய் எழுந்தவன் அது கற்பனை என்று உணர்ந்ததும் தன் மேலேயே கோபம் வந்தது.
யாரை மறக்க முயற்சி செய்கிறோமே அவளே கனவில் வந்ததை ஆடவனால் தாங்க முடியவில்லை.
அந்த ஆத்திரத்தை யாரின் மேலும் காட்ட முடியாமல் ஜீம் ரூமிற்கு சென்றவன் அங்கிருந்த பன்ச் பேக்கில் காட்ட தொடங்கினான். அதே நேரம் குழந்தையுடன் இருந்த தேவகன்யாவின் குரல் அந்த அரண்மனை எங்கும் ஒலித்தது பாடலாய்.

செங்காந்தலே உனை அள்ளவா…
செல்ல தென்றலே உனை ஏந்தவா…
அழைத்தேன் உன்னை என்னோடு…
இருப்பேன் என்றும் உன்னோடு…
அன்பே உன் கைகள் என்னை தீண்டுமா…


குழந்தையை தன் மார்போடு அமைத்திருந்த தேவகன்யாவின் முன்னே நின்றார்கள் அவர்கள்.
அவர்களை கண்டதும் அவளின் முகத்தில் சந்தோஷம் மலர்ந்து விரிந்தது.
உள்ளே ஜிம்மில் இருந்தவன் இவளின் குரலில் வெளியே வர அங்கிருந்தவர்களை கண்டவனின் கண்களை நம்ப முடியாமல் திகைத்து நின்றிருந்தான்.

அப்படி யார் வந்திருப்பார்கள்..? அடுத்த பாகத்தில் பாக்கலாம் மக்களே..

இதயம் நுழையும்...
✍️