• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயம் 5

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
தன் முன்னே நின்றவர்களை நம்ப முடியாமல் பார்த்திருந்தான் தேவநந்தன்.. ஆனால் அவர்கள் தனக்காக வரவில்லை.. அவள் வந்தது தெரிந்து தானே வந்திருக்கிறார்கள் என்ற கோபம் ஆடவனுக்குள் உள்ளுக்குள் கனன்றது.

ஆனால் பெண்ணவளோ அவர்களை கண்ட சந்தோஷத்தில், "அத்தை மாமா கயலு வாங்க வாங்க.. எப்படி இருக்கீங்க.." என்று குழந்தையுடன் அவர்கள் முன்னே வந்து நின்றாள்.

"எப்படி இருக்க கன்யா.. எப்போ டா வந்த.." என்று பாசமாய் அவளின் தலையை தடவியபடி கஸ்தூரி கேட்டார்.

"நல்லா இருக்கேன் அத்தை.. நேத்து தான் அத்தை வந்தேன்.. ஆமா எதுக்காக அத்தை இப்படி செஞ்சீங்க.. அவரு மேல கோபம் னா அதை பக்கத்துல இருந்தே காட்டலாமே.. அதை விட்டு எதுக்காக அத்தை வீட்டை விட்டு போய் நம்ப குடும்பத்தோட மரியாதை என்ன அத்தை ஆகுறது.." என்றாள் பொறுப்புள்ளவளாய்.

அதை கண்ட கஸ்தூரிக்கு கண்கள் கரித்து கொண்டு வந்தது.

" இல்லை கன்யா நடந்த பிரச்சனை இன்னும் மனசை விட்டு போகலை டா.. எப்படி இருந்த குடும்பம் இப்போ எப்படி ஆகிடுச்சி.. அவ மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா நல்லா இருந்த குடும்பம் இப்படி சிதைஞ்சி போயிருக்காது.. நல்லா கம்பீரமா இருந்தவனும் இப்படி இருக்க மாட்டான்.. என்ன சொல்றது எல்லாம் நாங்க வாங்கி வந்த வரம் கன்யா.." என்றார் அழுதபடி.

"அப்படிலாம் எதுவும் இல்லை அத்தை.. கூடிய சீக்கிரமே இந்த பிரச்சனை எல்லாம் முடியும் அத்தை.. கவலைபடாதீங்க இந்தாங்க நீங்க பாப்பாவை பிடிங்க.. நான் போய் உங்களுக்கு சமைக்கிறேன்.." என்றபடி சந்தோஷமாய் குழந்தையை நீட்டிட அதை பார்த்த கஸ்தூரியின் முகத்தில் வெறுப்பில் இருந்தது.

அதை கண்ட தேவநந்தனின் ரத்த நாளங்கள் துடிக்க கன்யா குழந்தையை தன்னோடு அணைத்து கொண்டு,

"அத்தை நீங்க இப்படி பாக்குறதே தப்பு .. இவ குழந்தை அத்தை இவகிட்ட நம்ம விருப்பு வெறுப்பை காட்டகூடாது அத்தை.. குழந்தைங்க தெய்வத்துக்கு சம்மனு நீங்க தானே சொல்வீங்க.. இப்போ நீங்களே அவளை வெறுக்குறீங்களே.. ஒன்னுமறியா பச்சை மண்ணு என்ன அத்தை பன்னுச்சி.." என்றாள் கலங்கிய குரலில்.

"என்னால முடியலை கன்யா.. இந்த குழந்தையால தான் இந்த குடும்பமே தலைகுனிஞ்சி நிக்குது.. நானும் ஒரு தாய் தான்.. ஆனா என்னால இவளை ஏத்துக்க முடியலை கன்யா.." என்றார் வெறுப்பாக.

" மாமா நீங்களும் இப்படி இருந்தா எப்படி மாமா.. நீங்களாவது அத்தைக்கு சொல்லக்கூடாதா மாமா.." என்றாள் ஏக்கமாய்.

"என்ன சொல்ல கன்யா.. அவ சொன்னது உண்மை தானே.. எவ்வளவு சந்தோஷமா இருந்த குடும்பம்.. இன்னைக்கு இப்படி சிதைஞ்சி என் பையன் மானத்துக்கு பயந்து இப்போ எப்படி இருக்கான்.. இதையெல்லாம் மறந்துட்டு எப்படி மா இவளை ஏத்துக்க முடியும்.." என்றார் வாஞ்சிநாதனும்.

அதே நேரத்தில் அங்கே கோபமாய் வந்த தேவநந்தன் குழந்தையை அவளின் கையில் இருந்து பறித்துக் கொண்டு,

"அப்படி ஒன்னும் கஷ்டப்பட்டு யாரும் இவளை ஏத்துக்க தேவையில்லை.." என்று அவளிடம் முறைத்து கொண்டே சென்றவன் மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்து கொண்டு பிள்ளையுடன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

போகும் அவனை வலியுடன் பார்த்தவள் தன் முன்னே நின்றிருந்தவர்களை பார்த்தவள்,

"வாங்க அத்தை மாமா நான் போய் சாப்பாடு ரெடி பண்றேன்.." என்று உள்ளே சென்றவளை கைப்பிடித்த கஸ்தூரி,

"நீ போய் அந்த குழந்தையை பாரு கன்யா.. நான் போய் சமைக்குறேன்.. என்னங்க நீங்களும் கமலும் போய் காய் வாங்கிட்டு வாங்க.." என்று கணவருக்கும் மகளுக்கும் வேலையை சொன்னவர் நீண்ட நாட்களுக்கு பிறகு சமையல் கட்டிற்குள் சென்றாள்.

இங்கே குழந்தையுடன் தன்னறைக்கு வந்தவன் குழந்தையையே பார்த்தவனுக்கு மனம் வலித்தது.

அதே நேரம் அந்த அறைக்குள் வந்த கன்யா அவனை பார்த்தவள் அவனின் மனவலி புரிந்து எதுவும் சொல்லாமல் குழந்தையை மட்டும் எடுத்து கொண்டு செல்லப் போனவளின் கரத்தை இறுக்கமாய் பிடித்தவன் எதுவும் பேசாமல் குழந்தையுடன் அவளை அணைத்துக் கொண்டான்.

அவனின் அணைப்பு ஆறுதலுக்கு தேடும் மழலையாய் இருந்தது.

"ஒன்னுமில்லை சீக்கிரம் எல்லாமே சரியாகும்.. போய் ஆபிஸ்க்கு கிளம்புங்க.." என்று அவனை அணைத்து பிடிக்காமலே ஆறுதல் கூறினாள்.

பின்னே அவனை மீண்டும் அணைத்தாள் சுடுசொல்லால் அவளை வதைப்பானே.. அதை விட தன்னை கட்டுப்படுத்திக் கொள்வது மிகவும் எளிது என்ற எண்ணத்தில் நின்றிருந்தாள்.

"எப்போடி சரியாகும்.. நீதான டி இதுக்கு எல்லாம் காரணமானவ.. நீ இங்கேயிருந்து போனின்னா சரியா போயிடும்.. நீ போய்டுவியா டி.." என்றவனின் குரலில் என்ன இருந்ததுவோ அவனோ அறிவான்.

"நான் போறதுல உங்களுக்கு நல்லது நடந்துச்சின்னா நிச்சயம் நான் போறேன்ங்க இங்கேயிருந்து.." என்றாள் அப்போதும் அவனின் நலனை முன்னிட்டு.

"தயவு செஞ்சு இங்கேயிருந்து போயிடு டி.. என் முன்னாடி வரதை நிறுத்து டி.." என்றான் ஆக்ரோஷமாய்.

அவளோ அதற்கு ஒரு வெற்றுப் புன்னகையை தந்தவள் அவனின் அணைப்பினில் தான் இருந்தான்.

இத்தனை பேசியவன் அவளை விட்டு இமியும் கூட நகரவில்லை.. அவளை விட்டு போக சொன்னவனும் அவளை விட்டு நகரவில்லை.

"அது என்னடி அவங்க பெத்த என்னை விட நீ அவங்களுக்கு அவ்வளவு முக்கியமா போயிட்டாங்களா.. நீ இல்லைன்னு சொல்லவும் இங்கேயிருந்து போனவங்க நீ வரவும் திரும்பவும் வந்துட்டாங்க.. அவங்க பையனை விட அவங்க பேரப்பிள்ளையை விட நீ அவங்களுக்கு அவ்வளவு முக்கியமா.. உன்னோட நடிப்பை அவங்களும் உண்மைன்னு நம்புறாங்க இல்லை.. அப்போ வரத்தானே செய்வாங்க.." என்றவனின் வார்த்தை அவளை கொன்று குவித்தது.

வார்த்தையில் மென்மையாய் ஊசி ஏத்த முடியுமா..? இதோ கொஞ்சம் கொஞ்சமாய் வார்த்தையில் விஷத்தை ஏற்றுகிறானே..? என்று தெரிந்து அதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறாள் மங்கையவள்.

மெல்ல அவளை விட்டு விலகியவன், "இங்கேயிருந்து முதல்ல கிளம்பு.." என்று தன்னை நிதானப்படுத்த திரும்ப கொண்டான்.

அவனை பார்த்தவளுக்கு எப்போதும் போல் இப்போதும் அவனின் கம்பீர வதனம் வசீகரித்தது.

குழந்தையை அள்ளி எடுத்தவள் அவனை பார்த்து கொண்டே வெளியில் சென்றாள்.

அவளின் பார்வையும் நினைவும் அவனுக்கு தெரிந்தாலும் கூட அவளை திரும்பி பார்க்கவில்லை.

உண்மை எது தெரிந்தாலும் கூட அவள் தன்னிடம் மறைத்தது எத்தனை பெரிய தவறு.. அந்த தவறுக்கும் துணை போயிருக்கிறாள் என்றது தான் அவளின் மேல் கோபம் குறையாமல் இருந்தது.

"ரிஷி எங்கே இருக்க.." என்றபடி அவனை வீடு முழுவதும் தேடிவிட்டாள் சாலா.

அவனோ எங்கும் இல்லாது போக அவன் தனக்கென கொடுத்த அலைபேசியில் அவனை அழைத்தாள்.

அவனின் அலைபேசியும் கூட வீட்டிலே அடிக்க அவனை காணாமல் தவித்தவள் வீட்டிற்கு வெளியே வந்தவளின் முன்னே நின்றான் அவன்.

அவனை கண்டதும் ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டவள்,

"ரிஷி நீ எங்கே போன.. உன்னை எங்கெல்லாம் தேடுறது மாமா.. உன் போனுக்கு பண்ணா அதுவும் வீட்டுல தான் அடிக்குது.. அப்படி என்னை விட்டு எங்க தாண்டா போவ.. நான் எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா.." என்றாள் குழந்தையாய் அழுதபடி.

"ஏய் சாலா இங்கே பாரு மா மாமா எங்கேயும் போகலை.. உனக்கு புடிச்ச மீன் வாங்கிட்டு வந்து சமைக்கலாம்னு தாண்டா வெளியே போயிருந்த.. நீ தூங்கிட்டு இருந்தே டி.. சரி அதுக்குள்ள வந்துரலாம்னு தான் போனேன்.. அதுக்குள்ள இங்கே அலப்பறையை கூட்டி வச்சிருக்க.. உன்னை என்ன செஞ்சா தகும் டி.." என்றான் தன் கையில் இருந்த பையை சமையல் கட்டில் வைத்தபடி.

அவன் கூறியதில் சற்றே தெளிந்தவள்,

"அது என்ன எப்ப பாரு என்னை மட்டும் நீ விட்டுட்டு போற.. இனி நானும் உன்னோட தான் வருவேன்.. என்கிட்ட சொல்லாத நீ போய் பாரு.. அப்போ உனக்கு தெரியும்.. நீ இல்லைன்னு உடனே நான் எவ்வளவு பயந்தேன்னு தெரியுமா.." என்றாள் கலங்கிய கண்களை துடைத்தபடி.

அவள் உதட்டை பிதுக்கி அழுத செயல் மழலையை நினைவுபடுத்தியது.

அதை கண்டு சிரித்தவன் மெல்ல அவளருகில் வந்து அவளின் கண்ணீரை துடைத்து விட்டு,



ஒரு தாலாட்டு பாட்டொன்று பாட

நான் தாயாக வருவேன் உன் கூட
இந்த மீனாக்ஷி சந்தோஷமாக
கிளை நீ பூக்கவே வேர்களாய் தாங்குவேன்
கிளி நீ வாழவே கோபுரம் ஆகுவேன்

எதிர் நீச்சல் இல்லாமல் அலை தாண்ட முடியாதே..
அலையோடு பயம் என்றால் கறை சேர முடியாதே..
உளியாலே அடித்தாலும் பாறைகள் புலம்பாதே..
சில நேரம் வலி தாங்கி சிற்பங்கள் ஆகிடுதே..
தாழம்பூ மூடிகள் போட்டால் வாசனை கெட்டு போகுமா..?
தூரத்து தோல்விகள் எல்லாம் வெற்றியை தள்ளி போடுமா..?
வானவில்லின் வண்ணம் தான் சாயம் போகுமா..?
தீயை தீண்டாவிட்டால் மூங்கிலும் பாடுமா..?
நீரில் மூழ்காவிட்டால் முத்துக்கள் தோன்றுமா..?

ராஜாக்கள் ஆனாலும் போராட்டம் அங்குண்டு..
சூரியனே ஆனாலும் மேற்கோடு ஓய்வுண்டு..
காதல் தான் ஆனாலும் கண்ணீரின் கதை உண்டு..
கண்மனியே கலங்காதே காலங்கள் உனக்குண்டு..
தலை கீழாய் பிடித்திடும் போதும் நேராய் எரியும் தீபமே..
விதி உன்னை வதைத்திடும் போதும் மதியால் வென்றிட வேண்டுமே..
பூக்கள் பூக்கும் காலங்கள் கண்ணில் தெரியுமே..
உன்னை நீ நம்பினால் உலகையே ஆளலாம்..

விண்ணும் மண்ணும் போற்ற வாழ்ந்து தான் காட்டலாம்..

அவளை மடிதாங்கி பாடியவனின் கண்களில் கண்ணீரின் தடம் மிதந்தது.

சிறுவயதில் இருந்தே மனதால் இறுகி போனவன் கண்ணீரின் தடம் அறியாதவன் இன்று தன்னவளுக்காய் தோன்றும் கண்ணீர் கூட இனித்தது.

அவனின் பாடலை கேட்டுக் கொண்டே அவனின் மடி மீது படுத்தவள் அப்படியே உறங்கி போனாள் மீண்டும்.

அவளின் தலையில் அழுத்தமாய் இதழ் பதித்தவன் அவளை தன் இரு கைகளில் உள்ளிட்ட கொண்டவன் தங்கள் அறையில் அவளை படுக்க வைத்து விட்டு வெளியே வந்து தன் அலைபேசியை எடுத்தவன்,

"டாக்டர் அவளுக்கு டேப்லட் கொடுத்து தூங்க வச்சிட்டேன்.. நீங்க உடனே வரலாம்.." என்று அலைபேசியை வைத்தவனின் மனம் சிதைந்து போனது.


"மெர்லின் நீ இன்னும் என்ன பன்ற.. அந்த தேவநந்தனை உன்னால இன்னுமா நெருங்க முடியலை.. இதோ பாரு எனக்கு அவ வேணும்.. எனக்கு அவ கிடைக்காத செஞ்ச அவனோட குடும்பம் சிதைஞ்சி போகனும்.. இன்னும் உனக்கு எவ்வளவு நாள் வேணும்.." என்றான் மெர்லின் எதிரில் அமர்ந்திருந்தவன்.

"இதோ பாரு சும்மா என்கிட்ட உன்னோட அதிகாரத்தை காட்டாத ராக்கி.. நான் எத்தனை கஷ்டப்பட்டு அவங்களை எல்லாம் தனித் தனியா பிரிச்சேன்.. ஏன் அவளையும் உன்கிட்ட தானா கொடுத்தேன்.. ஆனா நீ என்ன பண்ண அவளை தொலைச்சிட்டு வந்து நின்னு என்கிட்ட இப்படி எகிறிட்டு இருக்க.. உனக்கு எப்படி அந்த குடும்பம் சிதையனுமோ எனக்கும் அது மாதிரி தான்.. அந்த குடும்பத்தை உரு தெரியாம அழிக்கனும்.. நான் அதுக்கு தான் காத்துட்டு இருக்கேன்.. கூடிய சீக்கிரமே நீ நெனச்சது நடக்கும்.." என்று பேசி கொண்டிருந்தவளின் இடையே அவளின் அலைபேசி அழைக்க அதை எடுத்து காதில் வைத்தவளுக்கு அந்த பக்கம் என்ன செய்தி சொல்லப்பட்டதோ அடுத்த நொடி அந்த அலைபேசியை வேகமாய் எடுத்து சுவற்றில் விசிறி அடித்தாள்.

அவளின் அடியின் வேகம் தாளாமல் அது சில்லு சில்லாய் சிதறி போனது.




இதயம் நுழையும்...
✍️



அடுத்த பாகத்துல பாக்காலம் பட்டூஸ்.. படிச்சிட்டு உங்க பொன்னான கருத்துக்களை பதிவிட்டு செல்லவும் மக்களே.
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
557
122
43
Dindugal
ஓ மை காட்.. என்ன நடந்தது.. இந்த ரிசி என்ன செய்ய போறான்?
 
  • Like
Reactions: ரமா

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
105
43
Theni
என்னதான் நடக்குது? இந்த மெர்லின் யாரு? ரிஷி என்ன பன்றான்
 
  • Like
Reactions: ரமா

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
என்னதான் நடக்குது? இந்த மெர்லின் யாரு? ரிஷி என்ன பன்றான்
read for next epi sis.. thank you so much sis
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,761
570
113
45
Ariyalur
நந்தன் மனைவி யாரு? கன்யாவா இல்ல வேற பெண்ணா 🤔🤔🤔🤔ரிஷி, விஷாலி ஜோடிக்கும் என்ன பிரச்னையோ