மருத்துவர் குழு சாலாவை பரிசோதிக்க வெளியே பதட்டமாய் நடந்து கொண்டிருந்தான் ரிஷி.. கொஞ்ச நாட்களாக சாலா கேட்கும் கேள்விகளுக்கு அவனால் பதிலை சொல்ல முடியவில்லை.
நெஞ்சம் முழுவதும் அவளின் மேல் அவன் வைத்த நேசம் அவனை உருக்குலைத்தது.
அவளுக்கு பழைய நினைவு வந்தால் அடுத்த நொடி நிச்சயம் தன்னை விட்டு நீங்கி சென்று விடுவாள் என நினைத்தவனின் உள்ளம் அனலாய் தகித்தது.
' இல்லை என்ன நடந்தாலும் என் சாலாவை யாருக்கும் நான் விட்டுத் தரமாட்டேன்..' என்று மனதில் உருப்போட்டு கொண்டிருக்கிறான் ரிஷி.
ஆனால் அவனுக்கு தெரியாதே இன்னும் சில தினங்களில் சாலா என்ற விசாலி அவனை விட்டு விலக போகிறாள் என்று.. அது தெரிந்தால் தாங்குவானா..?
அதே நேரம் அங்கே வந்த மருத்துவரை கண்டவன் வேகமாய் அவரருகே வந்து,
"டாக்டர் என்னோட சாலா எப்படி இருக்கா.." என்றான் படபடப்பாய்.
அவனின் பதட்டத்தை கண்டவர் மெல்ல புன்னகைத்தபடி, "ரிஷி அவங்களுக்கு பழைய நினைவுகள் திரும்பவும் வருதுன்னு நினைக்குறேன்.. இல்லை அவங்க அதை முயற்சி பண்ணி வர வைக்க பாக்குறாங்களான்னு தெரியலை.. அது தான் இப்போதைய நிலைக்கு காரணம்.. இப்போ மயக்கத்துல தான் இருக்காங்க.. ஒரு பத்து நிமிஷத்துல கண் விழிச்சிடுவாங்க.. போய் பாருங்க.. அப்புறம் இதுபோல ஹெவி டோஸை கொடுக்கறதை நிறுத்திடுங்க.. அது அவங்க உயிருக்கும் கூட ஆபத்தை விளைவிக்கலாம்.." என்று அவனிடம் கூறியபடி சென்றுவிட்டார்.
அவர் சொன்னதை யோசிக்கும் சற்று நேரம் அங்கே வந்த நர்ஸ் சாலா கண் திறந்து விட்டதாக சொன்ன செய்தியில் வதனம் சந்தோஷத்தில் விகசிக்க தன்னவளை காண சென்றான்.
அங்கே கண்களை மலர்த்தியபடி விழிகளால் நாலாபுறமும் தன்னவனை தேடியவளின் விழிகளில் பதட்டமான முகத்துடன் எதிரே நின்றிருந்த ரிஷியை கண்டவளின் கண்கள் ஆனந்தத்தில் மலர தன் கையை உயர்த்தி, "மாமா.." என்றாள் ஆசையாய்.
"சாலா.." என்றவனின் உதடுகள் அடுத்த வார்த்தை பேச முடியாமல் ஊமையாய் போயின.
"ரிஷி என்னாச்சி எனக்கு.. உடம்பெல்லாம் வலிக்குது மாமா.." என்றாள் கேள்வியாய்.
" உனக்கு ஒன்னும் இல்லை டா பேபி.. மாத்திரை சரியா சாப்பிடலை இல்லை அது தான் மயங்கிட்டே டா.. இப்போ ஓகே டா.." என்றான் அவளை சமாதானம் செய்தபடி.
அதை கேட்டவளின் முகம் வாடிபோனது.. கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருக்க, "என்னை நீங்க கல்யாணம் செஞ்சிகிட்டு ரொம்பவே கஷ்டப்படுறீங்க மாமா.. மாசத்துல முக்காவாசி நாள் இப்படித்தான் நோய்ன்னு படுத்துர்றேன்.. என்கிட்ட இருந்து எந்த சந்தோஷமும் உங்களுக்கு கிடைக்கலை இல்லை மாமா.. வேற யாரையாவது கட்டியிருந்தா நீ நிம்மதியா இருந்துருப்ப இல்லை மாமா.." என்றாள் துக்கம் பொங்க.
"ஏய் சாலா என்ன இது ஏன்டி இப்படி பேசுற.. நீ இல்லாம ஒரு வாழ்க்கையா.. அது நரகமா இருந்துருக்கும் டி.. இதோ பாருடி உடம்பால தான் சந்தோஷம்னு இல்லை.. மனசுலேயும் சந்தோஷமா இருக்கலாம்னு எனக்கு உணர்த்துனவ டி நீ.. உன்னை தாண்டி என் வாழ்க்கையில இனி யாருக்கும் இடம் இல்லை டி.. இதோ பாரு ரொம்ப பேசாத.. ரொம்பவும் யோசிக்காத டா சாலா.. எல்லாமே சீக்கிரம் சரியாகும் டா.." என்று அவளுக்கு ஆறுதல் சொல்வதை போல் தனக்கும் கூறி கொண்டான்.
தன்னவனின் காதலில் எப்பொழுதும் போல் இப்போதும் உருகி போனாள் பெண்ணவள்.
ஆனால் அவளுக்கு தெரியாதே இந்த புத்தி கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது.
சோர்வுடன் வீட்டிற்கு வந்த தேவநந்தனுக்கு கன்யா காபி டம்ளரை அவனின் முன்னே நீட்டினாள்.
அதை வாங்கியவன் எதுவும் பேசாமல் குடித்து விட்டு காலி டம்ளரை அங்கிருந்த டேபிளில் வைத்தவன் விழியை நாலாபுறமும் அலைய விட்டான்.
அங்கே கயலுடன் விளையாடி கொண்டிருந்தாள் அவன் தேடலுக்கு விடையானவள்.
" பட்டு மா.." என்று மென்மையாய் அழைத்தான்.
அவளோ தன்னுடன் விளையாண்ட கயலை விட்டு அவனின் குரல் கேட்டதும் தன் பொக்கை வாயை சிரித்தபடி அவனிடம் தவழ்ந்து வந்தாள்.
அதே நேரம் அங்கே வந்த வாஞ்சிநாதனும் கஸ்தூரியும் அதை பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியே காட்டி கொள்ளவில்லை.
அதை பற்றி பெரிதும் கவலைப்படாதவன் பிள்ளையை தூக்கி கொண்டு உள்ளே செல்ல முயன்றவனை,
"கன்யா பிள்ளைக்கு ஒரு வயசு வரப்போகுது.. இன்னும் பேரு வைக்கலையா.. இல்லை நாம இல்லாத அதையும் வச்சிட்டானாமா.." என்றார் சுவற்றை பார்த்தபடி.
அந்த கேள்வியில் சுவிட்ச் போட்டாற் போல நின்றவன் யாரிடமும் பிள்ளையிடம் திரும்பி,
"பட்டு மா உனக்கு இன்னும் பேரை வைக்கலையே சீக்கிரமா வச்சிடலாமா டா தங்கம்.." என்று குழந்தையை கொஞ்சியபடி பெற்றவருக்கு இன்னும் குழந்தைக்கு பெயர் வைக்கவில்லை என்பதை உணர்த்தினான்.
அவர்கள் பேசவில்லை இவனும் பேசவில்லை.. ஆனால் மூன்றாம் மனிதரை போல் இருந்த பேச்சுவார்த்தை கன்யாவிற்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.
மீண்டும் அனைவரையும் இந்த குடும்பத்தில் ஒன்றிணைக்க வேண்டும். இந்த குடும்பம் பழையபடி சந்தோஷமாய் மாற வேண்டும்.. இது மட்டும் தான் தற்போது அவளின் தவம்.
"கன்யா வர்ற வெள்ளிக்கிழமை நல்ல நாள் தான்.. நம்ம அம்மன் கோவில்ல போய் சோறு ஊட்டி பேரு வச்சிடலாம்.. அதுக்கு ஏற்பாடு பண்ணுமா.." என்று சொல்லியபடி அங்கிருந்து சென்றார் கஸ்தூரி.
அதை கேட்டதும் சந்தோஷத்துடன் பிள்ளையுடன் அங்கிருந்து தனது அறைக்கு சென்றான்.
அவனுக்கு தான் தெரியுமே தன் தாய் தந்தையை பற்றி.. கோபத்தில் தான் அவனிடம் பேசவில்லையே தவிர அவன் ஒரு முடிவு எடுத்தால் அதற்கு நிச்சயமாய் ஆதரவு தருபவர்கள் பெரும்பாலும் அவர்கள் தானே.
அந்த நியாயத்தில் தானே இத்தனை பெரிய முடிவெடுத்தான்.
மெர்லின் தன் வீட்டிற்கு வர அங்கே அவளை வரவேற்க யாருமில்லை.. வீடே வெற்றிடமாய் இருந்தது.
உள்ளே வந்தவள் தனது அறைக்கு வேகமாய் செல்ல அங்கே சுவரில் மாட்டியிருந்த போட்டோவை கண்டவள் அதில் இருந்த ஆணை கண்டதும் அவளின் கண்களில் கண்ணீர் சுரந்தது.
அந்த நிழற்படத்தை தன் கையால் வருடியவள், "அண்ணா என்னை இப்படி தனியே போராட விட்டுட்டு நீ மட்டும் போயிட்ட இல்லை.. உனக்கு உன் தங்கச்சி முக்கியமா தெரியலை இல்லை.. நீ மட்டும் தான் என்னோட உலகம்னு வாழ்ந்தேன்.. ஆனா நீ என்னை பத்தி கொஞ்சமும் யோசிக்காம இப்படி பண்ணிட்டே இல்லை.. அப்பா அம்மா இல்லாத எனக்கு எல்லாமே நீதானே அண்ணா.. எனக்கு நீ வேணும் அண்ணா.. என்னால தனியா இந்த பாரத்தை சுமக்க முடியலை அண்ணா.." என்றாள் கண் கலங்கியவாறு .
தன் கண்களை துடைத்தவள், "மாட்டேன் அண்ணா யாருயும் உயிரோட விடமாட்டேன்.. உன்னை என்கிட்ட இருந்து பிரிச்ச யாரையும் நான் விட மாட்டேன் அண்ணா.. என் குடும்பத்தை எனக்கு இல்லாம பண்ணவங்க அவங்களும் குடும்பம் இல்லாம தான் நிக்கணும்.. எனக்குன்னு இருந்த குடும்பமே நீதானே அண்ணா.. உன்னை சாகடிச்ச யாரையும் நான் உயிரோட விடமாட்டேன் அண்ணா.. நிச்சயம் மாட்டேன்.. அவங்களை அழிக்க நான் எந்த எல்லைக்கும் போவேன் அண்ணா.." என்றவளின் குரலில் அத்தனை வஞ்சம் இருந்தது.
அங்கிருந்த கட்டிலில் வந்து அமர்ந்தவளுக்கு தன் அண்ணன் நினைவாகவே இருந்தது.
எத்தனை பாசமாய் என்னை வளர்த்தான்.. தன் அலைபேசியை எடுத்தவள் தனக்காக தன் தமையன் பாடிய பாடலை ஓடவிட்டவளின் கண்கள் கண்ணீர் கரைபுரண்டது.
வெண் மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும்
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்
விடிகாலை வெள்ளி மீனே…
என் வாழ்வே உன்னால் தானே
கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே
கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே…
ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்
என்னாளும் எந்தன் பக்கம் தாயே நீ வேண்டும்
உன் கண்ணில் கண்ணீர் வந்தால் எந்தன் கண்ணில் ரத்தம் பாயும்
உன் ஆவி எந்தன் ஆவி ரெண்டும் ஒன்றாகும்
உன் கண்கள் இல்லாமல் என் கண்கள் பார்க்குமோ
உன் கால்கள் இல்லாமல் என் கால்கள் போகுமோ
என் வானம் விடிவதும் பகல் முடிவதும்
உந்தன் பார்வையால்….
அதற்கு மேலும் அந்த பாடலை கேட்கும் மனம் இல்லாமல் அதை அணைத்து வைத்தவள் விடிய விடிய தன் அண்ணனின் நினைவில் காய்ச்சல் கண்டாள்.
கலங்கிய கண்ணீரை துடைத்தபடி எழுந்தவள் உடல் சூடு உணர்ந்தவள் முகம் கழுவி ஒரு மாத்திரையை போட்டு விட்டு அப்படியே படுத்து கண் அயர்ந்துவிட்டாள்.
வெள்ளிக்கிழமை காலையில் குடும்பமே தயார் ஆகி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அங்கே குழந்தைக்கு நெய் சோறு ஊட்டி பெயர் வைக்கும் வைபவத்திற்கு அனைத்தும் தயராய் இருந்தது.
குழந்தையை தன் மடியில் அமர்த்தியவன் அய்யர் சொன்னதை அச்சரம் பிசகாமல் அப்படியே செய்தான்.
அய்யரோ, "குழந்தையோட அம்மாவை வர சொல்லுங்க.. அவங்களும் மனையில உட்காரனும் இல்லை.." என்றபடி தன் வேலையை செய்தார்.
அதை கேட்ட கஸ்தூரியும் வாஞ்சிநாதனும் கன்யாவை பார்க்க அவளோ தேவநந்தனை பார்க்க அவனோ அவளின் மேல் வெறுப்பை பொழிந்தபடி அவளுக்கு இடம் விட்டு தள்ளி அமர்ந்தான்.
அதில் சந்தோஷமாய் அமர்ந்தாள் பெண்ணவள்.
" குழந்தைக்கு என்ன பெயர் வச்சிருக்கேள் அதை குழந்தை காதுல சொல்லிடுங்கோ.. அப்புறம் சோறு ஊட்டலாம்.." என்று அய்யர் கூறினார்.
நிச்சயம் அவன் ஏதேனும் பெயர் செலக்ட் பண்ணி வைத்திருப்பான் என்று எண்ணியவள் அவனின் வதனத்தை கான அவனோ அனைவரையும் ஒரு முறை பார்த்தவன் குழந்தையின் காதிலே,
"மிருதுளா.. மிருதுளா.. மிருதுளா.." என்று கூறினான்.
அதை கேட்ட அனைவருக்கும் சந்தோஷமாய் இருந்தது.
பெண்ணவளும் சந்தோஷமாய் பிள்ளையை வாங்கி , "மிருதுளா.. மிருதுளா.. மிருதுளா.." என்று சந்தோஷமாய் கூறினாள்.
அதை போல் கஸ்தூரி வாஞ்சிநாதன் கயல் என அனைவரும் குட்டியின் காதில் பேரை கூற அதில் சிரித்தாள் பெண்சிட்டு.
சோறு ஊட்டும் நேரம் பிள்ளையை தன் தாயிடம் கொடுத்தவன் முதல் சோற்றை ஊட்டுமாறு அவரிடம் கூறினான்.
அவரும் கண் கலங்கியபடி கிண்ணத்தில் இருந்த நெய் கலந்த பருப்பு சாதத்தை குலைத்து மிருதுளாவின் வாயில் திணித்தார்.
தன் பாட்டியை சிரித்தபடி வாங்கி கொண்ட பூஞ்சிட்டும் மலர்ந்து மணம் வீசியது சிரிப்பில்.
அதை கண்ட கஸ்தூரியின் நினைவில் இன்னொரு பால் முகம் சிரித்தபடி வந்தது.
அதை கண்டதும் அழுத கண்களை துடைத்தபடி பிள்ளையை கன்யாவிடம் கொடுத்து விட்டு அங்கிருந்த அம்மனிடம் சென்றுவிட்டார்.
"ஏம்மா இது உனக்கே சரியா இருக்கா.. இப்படி என் குடும்பத்தை பிரிச்சி சிதைச்சி வச்சிருக்கியே தாயி.. உன்னை கை தூக்கி வணங்கின நாள் முதலா எது நடந்தாலும் உன்னை தானே தேடி வருவேன்.. ஆனா இன்னைக்கு என் குடும்பம் இப்படி சந்தோஷத்தை இழந்துட்டு நிக்குதே ம்மா.. என் குடும்பம் பழையபடி சந்தோஷமா மாறாதா.. எம்பிள்ளைங்க திரும்பவும் ஒன்னா இருக்கமாட்டாங்களா ம்மா.." என்று அந்த அம்மனிடம் மனம் விட்டு வேண்டினார்.
அதே நேரம் சாலாவுடன் அதே அம்மன் கோவிலுக்கு வந்த ரிஷி அங்கே தேவநந்தன் குடும்பத்தை கண்டு அதிர்ச்சியில் சிலையாய் நின்றுவிட்டான்.
இவன் ஏன் தேவநந்தன் குடும்பத்தை கண்டு பயப்பட வேண்டும்.. காரணம் தான் என்னவோ..
அடுத்த பாகத்தில் பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் பண்ணிருந்த அத்தனை பேருக்கும் மனதார நன்றிகள் செல்லம்ஸ்.
இதயம் நுழையும்...