• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயம் 8💘

Rizka muneer "Rizii"

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 12, 2022
16
5
3
18
Kandy
tamil.pratilipi.com
Picsart_22-11-11_10-42-32-582~2.jpg



தொலைபேசியில் உரையாடி முடிந்ததும் அழைப்பை துண்டித்து விட்டு மாடியை நோக்கிச் சென்றான்.

தன் அறைக்குள் நுழையச் சென்றவன் அப்படியே புருவத்தை சுருக்கி வாசலிலேயே நின்றுவிட்டான்.

அறை உள்ள அனைத்துப் பொருட்களும் கட்சிதமாக அதே இடத்தில் வைக்கப்பட்டு அறை முழுவதும் சுத்தம் செய்து எந்தவித தூசித் துரும்புகளுமின்றி பளிச்செனக் காணப்பட்டது..

அறையை விழிகளை சூழற்றி ஆராய்ச்சி செய்தவன் பார்வை கட்டிலருகே நிலைத்து நின்றது.

வம்பு செய்யும் அடர்ந்தியாய் வளர்ந்திருந்த கூந்தலை அடக்கும் வகையில் ஒன்றாக சேர்த்து கொண்டையிட்டு நேற்றிட்ட ஓப்பனைகளை முழுவதுமாய் கலைத்து இயற்கை எளிலில் எந்த ஒரு ஆபரணமுமின்றி மேனி வெறிச்சோடி போயிருக்க நேற்று அணிந்திருந்த சேலையுடன் அதை இடுப்பில் சுற்றி சொருவியவாறு குனிந்திருந்தவளை விழியகற்றாது நோக்கினான்.

அவன் கொடுத்த வேலையை முழுதாய் முடித்தவளாய் குனிந்திருந்தவள் முகமெங்கும் முத்து முத்தாய் வியர்வை பூத்துக் கிடக்க எழுந்து அதை துடைக்கக் கூட மறந்து நொண்டியவாறு வெளியே செல்ல வந்தவள் அங்கு நின்றிருந்தவனை கவனிக்காது அவன் மார்பில் மோதி விழப் போனவளை சட்டென அவள் இடையை சுற்றி வளைத்து தாங்கிப் பிடித்துக்கொண்டான்.

முதலில் பயத்தில் விழிகளை இறுக்கமாய் மூடிக்கொண்டவள் பின் அவனின் கரம் இடையில் பட்டவுடன் உடல் சிலிர்த்து மின்சாரம் பாய்ச்ச சட்டென விழிகளை திறந்து அவனைப் பார்த்தாள். அவனும் அவளை விழிகளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

இருவரின் விழிகளும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க விழிகளில் விழிகலக்க இருவரும் இமைமூட மறந்தனர். சில நிமிடங்கள் மௌனமே அங்கு ஆட்சி புரிய முதலில் சுதாகரித்த வீர் அவள் இடையிலிருந்து கையை எடுக்க பிடிமானமின்றி ஆ.. எனக் கத்தியவாரே நிலத்தில் தொப்பென விழுந்தாள் மதி.

மதி இடுப்பை பிடித்தவாறு மிரண்ட விழிகளுடன் பாவமாக அவனைப் பார்க்க அவனோ அவளின் அருகே ஒரு காலை நிலத்தில் குற்றி குனிந்து "பேப்ஸ் உனக்கு சரியா கண்ணு தெரியலயா என்ன.. பாத்து வரமாட்ட,, இப்போ பாரு அநியாயமா இடுப்ப ஒடச்சிகிட்ட.." எள்ளலாக கேட்டவாரே "உச்சுச்சு" உச்சு கொட்டினான்.

"அடப்பாவி,, பயபுள்ள இடுப்ப ஒடச்சதுமில்லாம நான் ஒடச்சிகிட்டேனே.. சும்மாவே தல கிர் கிர்ருங்குது இதுல இதுவேறயா... " என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு மனதுக்குள் அவனை அர்ச்சித்து வெளியே அப்பாவியாய் அவனை மலங்க மலங்க பார்த்து வைத்தாள்.

"ஒரு வேல வேணும்னே வந்து மோதினியா... இந்த வீர மயக்க லூசுதனமா பிளான் போட்டு.. " என்று நக்கலாய் ஒற்றை புருவத்தை உயர்த்த அவள் கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் கன்னத்தை நனைத்தது.

அவன் தன்னை காயப்படுத்தும் எண்ணத்தில்தான் இப்படி நடந்து கொள்கிறான்,, வார்த்தையால் காயப்படுத்துகிறான் ,, என்று அவள் அறியாமல் இல்லை இந்த கண்ணீரிற்கு இன்னொரு காரணம் உள்ளது என அவளுக்கு அல்லவா தெரியும்...

காலில் குத்தியிருந்த கண்ணாடித்துண்டு சுல் சுல் என்று வலியை நொடிக்கொரு முறை கடத்திக் கொண்டிருக்க அதை தாங்க முடியாமல் உதட்டை பற்களால் கடித்து வலியை பொறுத்துக் கொண்டிருக்கிறாள்,,, ஆனால் விழிகள் தான் அதன் பிரதிபலத்தை கடத்துகிறது.

"இந்த அப்பாவி போல மூஞ்ச வெச்சிக்கிட்டு எப்ப பாரு அழுது வடிஞ்சிகிட்டிருக்குற முதல்ல ஸ்டாப் பண்ணு,, ரொம்ப இரிடேட் ஆவுது.." பல்லை கடித்து முறைத்தவாறு கூற அவளும் என்ன பண்ணுவாள் பிறப்பிலே வந்த முகப்பாவனையாச்சே , கண்ணீரோ அவனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் நிற்பேனா எனும் விதத்தில் வழிந்து கொண்டே இருக்க பெண்ணவளோ மறுபடியும் அதே பாவனையில் மிரட்சியுடன் அவனை பார்க்க அவனுக்கோ ஏகத்திற்கு எகுறியது.

"இடியட்.. 'ஐ சே டோன்ட் கிரை..." குரலுயர்த்தி அதிகாரமாய் உரும அவ்வளவு தான் இதயத்துடிப்பு எகிற பீதியில் தானாய் கைகள் உயர்ந்து சென்று கன்னத்தில் வழிந்து கொண்டிருந்திருந்த கண்ணீரை துடைக்க கண்ணீர் சுரப்பிகள் கூட தன் வேலையை நிறுத்திவிட்டது.

"ஆ ,, அது.." என்றவன் மதியின் கன்னத்தை தட்டி விட்டு எழுந்து நிற்க மதியும் மெதுவாய் தட்டுத் தடுமாறி எழுந்தவள் தழுதழுத்த குரலில் "நான் போறேன்" என்று விட்டுவெளியே செல்ல முயற்சிக்க அவள் கையைதன் வலியகரத்தால் பிடித்து வீர் தன்புறம் இழுக்க நிலத்தில் கண்ணாடித்துண்டு குத்திய பகுதியை படாது அடி வைத்தவள் அவன் இழுப்பில் நிலத்தில் கால் அழுத்தமாய் பதி ய வலியில் "ஆ.." என்று கத்திவள் கண்களிலிருந்து மறுபடியும் கண்ணீர் பொலபொலவென்று வடியத்துவங்கியது.

வீர் கண்ணை சுருக்கி துளைத்தெடுக்கும் பார்வையில் மதியை துளைக்க மறுபடியும்
கத்துவானோ என்று பயந்தில் தன் முகத்தை அழுத்த துடைத்துக் கொண்டாள் மதி.

இப்பொழுதுதான் வீர் அவதானித்தான் நிலத்தில் அவள் நடந்து வந்த காலடி சுவடுகள் இரத்தத்தால் பதிந்து இருப்பதை...

"கண்ணாடிய குத்திகிட்டயா" அலட்சியமாகவும் அதே சமயம் அழுத்தமாக வினவ அழுகையை அடக்கி உதட்டை கடித்தவாரே தலையை மேலும் கீழும் ஆட்ட அவள் கன்னத்தில் இடியாய் வந்து விழுந்தது ஓர் அறை.

பெண்ணவளின் வெண்ணிறபட்டு கன்னத்தில் அவன் ஐந்துவிரலும் பதிந்து கன்றிச்சிவந்து வீங்கியிருக்க அவளை நெருங்கி "இந்த அடி எதுக்கு தெரியுமா பேப்ஸ்,, நீ என்னோட ரூம்மயே தேட்டி பண்ணிட்ட.. அதுக்கு தான் இது... புரியுதா.." என்று குரலுயர்த்தி அழுத்தமாய் கூற காதுகளில் அவன் குரல் கிரீஷ் என ரீங்காரமிட பெண்ணவளின் நிலையோ அதோகதி,,,

நேற்றி காலையிலிருந்து வாயில் ஒருசொட்டு தண்ணீர் கூட படாததால் சோர்வுற்று இருந்தவளிற்கு உடம்பில் மீதமிருந்த சத்துக்கள் கண்ணீருடனும் இரத்தத்துடனும் கரைந்து செல்ல அதுவும்போக எஞ்சியிருந்த ஒரு சதவீதத் தெம்பில் ஸ்டடியாக நின்று கொண்டிருந்தாள்.. அதுவும் அவனடித்த அடியில் காலியாகிப் போக சோர்வு மொத்தமாய் திரட்டி கண்ணை மறைக்க, கால் வேறு ஆட்டம் காட்ட.. கண்கள் சொருகி இருள் சூழ்ந்துகொள்ள இமை குடையை மெதுவாக மூட ராட்சசன் மார்பிலேயே மயங்கி தஞ்சம் அடைந்தாள் அவன் திருமணம் எனும் பந்தம் மூலம் சிறை கொண்ட அவன் கைதி...


சில் மணித்துளிகள் கடந்து
கருமணிகள் அங்கும் இங்கும் உருள இமையெனும் குடை மெதுவாக திறந்துக்கொண்டது.. மயக்கம் தெளிந்தவள் தலையை பிடித்துக் கொண்டு கருமணிகளை உருட்டியவாறு மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.

அவன் அறைந்ததும் அதற்காக சொன்ன காரணமும் மட்டுமே நினைவிலிருக்க கன்னத்தை வருடியவாறு தன் தாடை இடது வலமாக அசைத்துப் பார்த்தவள் இதழ்கள் தானாய் "ராட்சசன்" என முணுமுணுத்தது.

எழுந்து செல்ல முயற்சித்தவள் அப்பொழுதுதான் அவதானித்தாள். அவள் இருப்பது அவன் அறையில் அதுவும் அவன் கட்டிலில்... "நான் எப்படி இங்க வந்தேன்.. " யோசனையுடன் எதர்ச்சியாய் அடிப்பட்ட காலை பார்க்க இரத்தப்போக்கு எதுவுமின்றி மருந்திட்டு கட்டுபோடப்பட்டிருந்தது.

"என்னடா இது,," விழி விரித்து காலை அசைத்துப்பார்க்க வலிகூட கொஞ்சம் குறைந்திருந்தது.

"ஒருவேல இதெல்லாம் அவர் பண்ணிருப்பாரோ..." என்று கன்னத்தில் ஒற்றை விரல் வைத்து அதிதீவிரமாய் யோசிக்க அங்கு கட்டிலுக்கு அருகே மேசையில் வைக்கப்பட்டிருந்த இருந்த அலைபேசி சத்தமாக அலற திடுக்கிட்டு திரும்பினாள்.

"யாரா இருக்கும்" நெற்றியை சுருக்கி கரத்தை நீட்டி எடுக்கச்சென்றவள் பின் சட்டென தன் கரத்தை தன்புறமே இழுத்து கொண்டாள்..

"எனக்கு எதுக்கு வீண் வம்பு,, அப்புறம் மறுபடியும் வந்து எனக்கு வந்த கால்,, நீ ஏன் எடுத்தன்னு அடிச்சுட்டாருன்னா.." இதழை பிதற்றி கன்னத்தை தேய்த்துக் கொள்ள மறுபடியும் விடாது அலைபேசி அலறிக் கொண்டே இருக்க தயங்கியவாரே காதில் எடுத்து வைக்க சொய்ங் என காதில் எதிரொலித்தது அவள் ராட்சசனின் குரல்.

"என்ன பண்ணிட்டிருக்க,, ஒரு கால் எடுக்க இவ்வளவு நேரமா.. " என்று சிடுசிடுவென பொரிந்து தள்ள மதியோ ரிசீவரை தள்ளி வைத்தவள் கீழ் உதட்டை லேசாக கடித்தவாறு கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

"நான் பேசுறது காதுல விழுதா இல்ல மறுபடியும் மயங்கி விழுந்துட்டியா"
.....

"உன்னதான் காது கேட்குதா இல்லையா... " இம்முறை சற்று குரலுயர்த்தி உருமினான்.

ரிசீவரை காதிற்கு அருகே கொண்டு வந்து எச்சிலை கூட்டி விழுங்கியவாறு "ஹான்ங்.. கேட்குது" என்க...

"ஆ.. கேட்குதுல, உனக்கு ஒன் மினிட் தரேன் அதுக்குள்ள என் முன்னாடி நிற்கனும், யுவர் டைம் ஸ்டார்ட் நவ்.. சீக்கிரம் கீழ வா.." அதிகாரமாய் கூறி விட்டு அழைப்பை துண்டிக்க மதியிற்கோ புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது...

"மேல இருந்து கீழ வர சொல்ல கால் பண்ணனுமா ".. என்றெண்ணி பெரு மூச்சை இழுத்து விட்டவள் தலையின் மேல் "ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம் "என்று பட்சி பறக்க சட்டென எழுந்து மணி அடிக்கமுன் பதற்றமாகவும் கேட் சாத்தி விடுவார்களோ என்ற பீதியிலும் பாடசாலையை அடைய விரையும் பள்ளிமாணவியாய் மாறி நொண்டியவாரே ஒட்டமும் நடையுமாய் கீழே விரைந்தாள்.



துடிக்கும்..
 

Attachments

  • Picsart_22-11-11_10-42-32-582~2.jpg
    Picsart_22-11-11_10-42-32-582~2.jpg
    99 KB · Views: 24