• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயம் 9

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
230
43
Salem
அம்மா என்று அலறலுடன் எழுந்து அமர்ந்தவளின் முகமெங்கும் வியர்த்திருக்க பதட்டத்துடன் இருந்தாள் பெண்ணவள்.

அவளின் அருகில் உறங்கி கொண்டிருந்தவன் அவளின் அலறல் சத்தத்தில் வேகமாய் எழுந்தவன்,

"என்னம்மா என்னாச்சி டா.. எதுக்கு மா இந்த பதட்டம்.. ரிலாக்ஸ் டா ரிலாக்ஸ் மா.." என்று பதட்டத்துடன் அவளின் முதுகை தடவி கொடுத்து கொண்டிருந்தான்.

அதில் சற்று ஆசுவாசம் அடைந்தவள்,

"சாரிங்க கொஞ்சம் டென்சன் ஆயிட்டேன்.. என்னை யாரோ கூப்பிட்ட மாறி இருந்துச்சி.." என்றாள் பதிலாய்.

" ஒன்னும் இல்லை டா.. நான் தான் உன்னோட இருக்கேன் இல்லை.. என்னையவே நினைச்சிட்டு படுத்திருந்திருப்ப அது தான் மா கனவா வந்துருக்கும்.. ஒன்னும் இல்லை பேபி ரிலாக்ஸ் மா.." என்று அவளுக்கு ஆறுதல் அளித்தான்.

'அவளுக்கு நன்றாய் தெரியும் கனவில் தான் கேட்ட குரல் அருகில் இருப்பவனின் குரல் அல்ல.. ஆனால் அது எங்கே எப்போதோ கேட்ட குரலாய் தெரிகிறதே..' என்று எண்ணியவளுக்கு சுத்தமாய் ஒன்றும் புரியவில்லை.

அவளை தன்னுடன் அணைத்து பிடித்து தன் மார்பில் போட்டு கொண்டவன் அருகிலிருந்த டேபிளில் இருந்த மாத்திரை டப்பாவில் கை விட்டு ஒரு சிறிய மாத்திரையை எடுத்து அவளுக்கு கொடுத்து அதை முழுங்க செய்தவன் அப்படியே கட்டிலில் அவளுடனே சாய்ந்து அரவணைத்து ஆறுதல் கூறினான்.. அதே கேட்டு கொண்டே தலையாட்டியவள் அப்படியே மீண்டும் அவனின் மார்பில் நன்றாய் உறங்கி விட்டாள்.

அதன் பின்பு ஆடவனின் தூக்கம் சுத்தமாய் பறிபோனது.


இங்கே மீண்டும் வீட்டிற்கு வந்த தேவநந்தனுக்கு காபி கோப்பையை நீட்டினாள் கன்யா.. அவளை பார்த்து கொண்டே வாங்கி கொண்டவன் அவளின் முன்னே அதை முழுதாய் குடித்து முடித்ததும்,

"ஆமா என்னடி மயக்க மருந்து எதாவது திரும்பவும் வச்சிட்டியா என்ன.. காபி எல்லாம் கொடுக்கற.." என்றான் அவளை வதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.

அவளோ அதை பெரிதாய் எடுத்து கொள்ளாமல் அவன் கொடுத்த வெறும் கோப்பையை எடுத்துக் கொண்டவள்,

'ஆமா அப்படியே இவரு புதுசா மயங்க போறாரு மயக்க மருந்து வைக்க.. ஏற்கனவே மயங்கியே இன்னும் முழுசா எந்திரிக்கலை.. அதுக்குள்ளே இன்னொரு மயக்க மருந்து வைக்குறாங்க..' என்று முணுமுணுத்தபடி சென்றாள்.

அவள் முணுமுணுத்தது காதில் விழுந்தாலும் விழாதது போல், "ஏய் இதோ பாருடி எதா இருந்தாலும் காதில் விழுகறதை போல சொல்லிட்டு போடி.." என்றான் கோபமாய்.

"அய்யோ அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.. நீங்க யாரு உங்களுக்கு போய் மயக்க மருந்து குடுத்து மயக்க முடியுமா.. நீங்க யாரு தி கிரேட் தேவநந்தன் ஆச்சே.. இவரை யாராவது ஏமாத்திட முடியுமா என்ன.." என்றவளின் குரலில் நிச்சயம் நக்கல் இருந்தது.

"அது தான் ஏமாத்திட்டியே டி.. எத்தனை ஆசை வச்சிருந்தேன் உன்மேல.. உயிரையே வச்சிருந்தேனேடி.. கொஞ்சமும் என்னை நீ யோசிக்கவே இல்லையே டி.. என்கிட்ட மறைக்க கூடாதுன்னு நினைக்கலையே டி.. என் அப்பா அம்மா தங்கச்சி எல்லாரும் உனக்கு சப்போர்ட் பண்றாங்க.. ஆனா என்னோட வலி என்னன்னு யாரும் கொஞ்சமும் யோசிக்கலையே.. நீ என்ன சொன்னாலும் அப்படியே நம்பினேன் டி.. என் வாழ்க்கையில நீ எனக்கு ரொம்ப முக்கியம்னு நினைச்சேன்.. ஆனா நீ என் மூஞ்சியில கரியை பூசிட்டேடி.. என்னடி அப்படியே அமைதியா ஆயிட்ட..

இப்போ பேசுடி உன்னோட நக்கலான பேச்சை.. உன்னால பேச முடியாது டி.. ஏன்னா தப்பு செஞ்சவ நீதானடி.. என் நம்பிக்கையை சுத்தமா சிதைச்சி என்னை உயிரோட புதைச்சிட்டியேடி.." என்றவனின் குரலில் இருந்த வலி பெண்ணவளுக்கு புரிந்தாலும் கூட அவனிடம் தன் தரப்பை கூற முடியாமல் தவித்து நிற்கிறாள் பெண்ணவள்.


அவளுக்கு நன்றாக தெரியும் தான் கூறப்போகும் உண்மையால் தன்னவன் இனி வாழ்வில் யாரையும் நம்பமாட்டான் என்று.. ஆனாலும் இதனை சரிப்படுத்த வேண்டிய கட்டாயம் தனக்கு உள்ளதால் அவன் என்ன பேசினாலும் பொறுத்து போனாள் பெண்ணவள்.

இனி தான் என்ன பேசினாலும் அவள் எதுவும் பேசமாட்டாள் என்று புரிந்தவர் அவளை வெறுமையான பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றான்.

அவனின் வெறுமையான பார்வையின் வீரியம் தாங்காத பெண்ணவளின் கண்கள் கலங்கி கரை புரண்டோடியது.

எத்தனை காதல் அவன் மேல் வைத்தேன்.. ஆனால் இன்று அனைத்தும் கானல் நீராய் போனதே.. இதற்கு என்ன விடை காலம் வைத்திருக்கிறதோ தெரியவில்லையே என்று நினைத்தவள் தங்களின் முதல் சந்திப்பிறகு சென்றாள். வண்டியில் சென்று கொண்டிருந்தவனுக்கும் அவளை முதன் முதலில் பார்த்த நாள் நினைவில் ஊஞ்சல் ஆடியது.

அரண்மனை போன்ற வீட்டின் வாரிசு தேவநந்தன்.. கோடிகளில் புரள்பவன் நிறைய கம்பெனிகளை வைத்து நடத்துபவன்.

வீட்டின் மேல் பாசம் அதிகம்.. வீட்டில் இருப்பதை தாண்டி வெளியே வந்தால் அவனின் முகமே வேறாய் தான் இருக்கும்.

தேவகன்யா டிகிரி முடித்து ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பவள்.. மஞ்சள் கலரில் செதுக்கி வைத்த சிற்பமாய் நின்றவளை காணும் ஆனவர்கள் அவளை தாண்டி போகவே யோசிப்பார்கள்.

தாயும் தந்தையும் ஒரு ஆக்ஸிடெண்டில் இறந்து போக யாருமில்லாத வீட்டில் தனியே இருக்க பிடிக்காதவள் தனியே ஒரு ஓர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில் தங்கியவள் வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் நிறைய அனாதை விடுதிகளுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் பண உதவியாகவும் உடல் ரீதியாகவும் உதவி செய்தவளை அப்படி ஒரு இல்லத்தில் தான் முதலில் சந்தித்தான் தேவநந்தன்.

அன்று பெண்ணவளின் பிறந்த நாள்.. தாய் தந்தை இருந்தவரை அவர்களுடன் கோவிலுக்கு சென்று விட்டு வருபவள் அனாதை இல்லங்களுக்கு சென்று தன் கையினால் உணவு பரிமாறி வருவாள்.

இன்றும் அதே நினைவில் பச்சை கலர் பார்டரும் மாம்பழ கலர் புடவையென அம்மன் சிலையாக வந்தவளின் மேல் தெரியாமல் ஒரு வாலிபன் இடித்து விட அவனும் அவளிடம் சாரி சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தவன் அங்கே நிச்சயம் அப்படி ஒரு அழகு சிலையை எதிர்பார்க்கவில்லை என அவனின் ஆறாம் அறிவு கூறியது.

அவளும் அவனை நிமிர்ந்து பாராமல் சாரி சார் என்ற வாக்கியத்துடன் முடித்து கொண்டு அங்கே உள்ளே சென்றாள்.

ஏனென்று புரியாமல் தானும் அவளுடனே உள்ளே சென்றவனின் பார்வை அவளையே சுற்றி வந்தது.

ஆனால் பாவையோ அவனை சுத்தமாய் மறந்திருந்தாள்.

அவள் அங்கிருந்த நேரம் வரை அவனும் அங்கேயே இருந்தவன் அவள் கிளம்பியதும் அங்கிருந்த அலுவலக அறைக்கு சென்றவன் அங்கே அமர்ந்திருந்தவரை கண்டு,

"சார் வணக்கம்.." என்றான் மெல்ல.

அவனை பார்த்தவர், "சார் நீங்களா வாங்க.. நீங்க இன்னும் போகலையா சார்.." என்றார் இயல்பாய் பேசியபடி.

ஆமாம் இப்போது தான் இங்கே வந்த இந்த ஆசிரமத்தின் முன்னேற்றத்திற்காக ஒரு நூலகத்தை திறக்க தேவையான பணத்தை ஒரே செக்கில் கொடுத்தவனை அத்தனை சுலபமாய் மறந்து விட முடியுமா என்ன..? அது தான் இந்த பலத்த வரவேற்பு.

"இல்லை சார் அது வந்து உங்ககிட்ட ஒரு விஷயம் பேசனும் அது தான் ஒரு உதவி கேட்க வந்தேன்.." என்று உலறி கொட்டினான்.

யாரிடமும் இப்படி தடுமாறி நின்றதில்லை.. தன் குடும்பத்தை தவிர வேறு யாருடனும் யாரை பற்றியும் இப்படி யோசிக்க கூட மாட்டான்.

அவனுக்கு ஒவ்வொரு விநாடியும் முக்கியம்.. அப்படிபட்டவனை ஒரே நாளில் சிதறடித்திருந்தாள் பாவையிவள்.

"கேளுங்க சார் என்ன உதவி.." என்றார் அவர் சிரிப்புடன்.

" சார் சாரி தப்பா நினைச்சிக்காதீங்க.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முந்தி ஒரு பொண்ணு இங்கே வந்தாளே.. ஒரு மாம்பழ கலர் புடவையில.. " என்றான் கேள்வியாய்.

சற்று நேரம் யோசித்தவரின் கண் முன்னே தேவகன்யா சிரிப்புடன் நின்றாள்.

" அட ஆமாம் தம்பி நம்ப தேவகன்யா.. என்னாச்சி தம்பி அந்த பொண்ணுக்கு.." என்றார் படபடப்பாய்.

தேவகன்யா அழகான பெயர்.. நிச்சயம் தேவகன்னிகை தான் என்று யோசித்தவன் தன் முன்னே இருந்தவரை கண்டவன்,

"அய்யோ சார் அவங்களுக்கு எதுவும் இல்லை.. அவங்க யாரு அவங்க குடும்பத்தை பத்தி விசாரிக்கலாம்னு தான் கேட்டேன்.." என்றான் புன்சிரிப்புடன்.


அதில் சற்று ஆசுவாசமடைந்தவர் அவனை யோசனையுடன் பார்த்து, "நீங்க ஏன் தம்பி அவளை பத்தி தெரிஞ்சிக்கனும்.. நீங்க நினைக்கிற மாறி பொண்ணு அது இல்லை பா.." என்றார் காட்டமாய்.

அவர் தன்னை தவறாய் நினைத்தது புரிந்ததும் அதை புன்சிரிப்படன் எதிர்கொண்டவன்,

"அய்யா நீங்க என்னை தப்பா புரிஞ்சிகிட்டீங்க.. நீங்க கேள்விபட்டுருப்பீங்க நந்தா குரூப்ஸ்.. அது எங்களோட தொழில்.. நான் தேவநந்தன்.. எனக்கு அந்த பொண்ணை பார்த்ததும் புடிச்சி போச்சி.. நிச்சயம் தப்பா இல்லை.. கல்யாணம் செஞ்சிக்கனும்ங்கற ஆசையில தான் கேட்டேன்.. மத்தபடி நீங்க நினைக்கற மாறி மோசமான ஆள் நான இல்லைங்க.. மன்னிச்சிடுங்க அய்யா.." என்று கையெடுத்து வணங்கியவன் எழுந்து வெளியே செல்லும் நேரம்,

"பொண்ணு பேரு தேவகன்யா.. அப்பா அம்மா ரெண்டு வருஷத்துக்கு முந்தி நடந்த ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க.. அவளுக்குன்னு இருந்த பெரிய வீட்டை வாடகைக்கு விட்டுட்டு இப்போ நர்மதா ஓர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டல்ல இருக்கா.. அவளுக்கு சொந்தம் பந்தம்னு சொல்லிக்க யாருமில்லை.. அவளுக்கு தெரிஞ்சது எல்லாமே இந்த ஆசிரமம் தான்.." என்றார் பெரியவர் அழுத்தமாய்.

அவரை அதை விட ஏன் என்ற கேள்வியுடன் அழுத்தமாய் பார்த்தான் ஆடவன்.

அதை புரிந்தவர், "சாரி தம்பி உங்களை தெரியும்.. ஆனாலும் நீங்க கேட்டதும் நான் சொல்லாததுக்கு காரணம் இருக்கு.. இப்போ சொன்னதுக்கும் காரணம் இருக்கு.. அவளுக்கு யாருமில்லைன்னு நான் சொன்னது பொய்.. அவளுக்கு நாங்க எல்லாம் இருக்கோம்.. ஆனாலும் அந்த சின்ன பொண்ணு தனக்குன்னு ஒரு குடும்பம் இல்லாம தவிக்குறா.. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னு அதுல எங்களை விட யாருக்கு அதிக சந்தோஷம் இருக்கும்..

அவளுக்கு கெட்டது எதுவும் நடக்க கூடாதுன்னு தான் நீங்க கேட்டதும் நான் சொல்லலை.. இப்போ சொல்ல காரணம் உங்களை முழுசா நம்புறேன்..

உங்க காதலை உங்க கண்ல பார்த்தேன்.. அதுல அந்த பொண்ணுக்கான தவிப்பு தெரிஞ்சிது.. உங்க மனசை தெரிஞ்சிக்க தான் நான் அப்படி சொன்னேன்.." என்றார் பதிலாய்.

அதை கேட்டவன் சந்தோஷமாய் தேங்க்ஸ் என்று கூறி அவரிடம் இருந்து விடை பெற்றவன் வழியெங்கும் அவளின் நினைவு தான்.

எங்கு திரும்பினாலும் எதிலும் அவளின் வதனம் வந்து ஆடவனை கட்டி இழுத்தது.

தனது கையில் இருந்த அலைபேசியை காரோடு கனெக்ட் செய்தவன் அதில் ஹரிஹரனின் குரல் மனதை வசியம் செய்தது.


தாஜ்மஹால் ஒன்று

வந்து காதல் சொல்லியதே..
தங்கநிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே..

அந்த ஓசோன் தாண்டி வந்து,
ஒரு ஒளிதுளி பேசியதே..
இனியெல்லாம் காதல் மாயம்,
எனை கொன்றாய் இந்த யுகம்...
சித்திரை மாதம்
மார்கழி ஆனது வா...
நீ வா...என் அதிசய பூவே வா...

நீ வா...நீ வா...என் அழகிய தீவே வா...


வீசி வரும் தென்றலை கிழித்து

ஆடைகள் நெய்து தருவேனே..
பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி
காலடி செய்து தருவேனே..
வானவில்லில் ஒரு நிறம் பிரித்து
உதட்டுக்கு சாயம் தருவேனே..
மின்னல் தரும் ஒலியினை உருக்கி
வளையலும் செய்து தருவேனே..
என் இதயம் சிறகாச்சு..
என் இளமை நிஜமாச்சு..
என் இதயம் சிறகாச்சு,
என் இளமை நிஜமாச்சு..
நீ வா.. நீ வா.. என் அதிசய பூவே வா..
நீ வா.. நீ வா.. என் அழகிய தீவே வா..

காற்றை பிடித்து வானத்தில் ஏறி
நிலவை திறந்தேன்
நீ தெரிந்தாய்..
மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன்
துளியாய் அதிலே நீ தெரிந்தாய்..
புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன்
பூவாய் அதிலே நீ முளைத்தாய்..
கடலை பிடித்து அலைகள் வடித்தேன்
நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய்..
நீ கேட்டால் போதுமடி
என் உயிரை பரிசளிப்பேன்..
நீ கேட்டால் போதுமடி
என் உயிரை பரிசளிப்பேன்..
நீ வா.. நீ வா.. என் அதிசய பூவே வா..

நீ வா. .நீ வா.. என் அழகிய தீவே வா..


அவளை பார்த்து நொடியில் இருந்து காதலிக்க ஆரம்பித்தவன் இன்று அவளை வெறுக்க காரணம் தான் என்னவோ..?


காத்திருங்கள் மக்களே அடுத்தடுத்த பாகத்தில் இதற்கான பதிலும் வருகிறேன்.


இதயம் நுழையும்..
✍️
 
  • Love
Reactions: Sailajaa sundhar