அத்தியாயம் 13
"விக்கி சொல்லவும் எனக்கும் ஒரு தைரியம் வந்தது மிரு! எப்படியும் விக்கி இறங்கிட்டா ஹெல்ப் பண்ணுவான் கண்டுபிடிச்சிடலாம் நினச்சேன்" இரவு மிருதுளா நடந்ததை கணவனிடம் சொல்லவும் ஸ்ரீனிவாசன் இப்படி சொல்ல,
"விக்கி பண்றதெல்லாம் வர வர சரியே இல்லைங்க. அவ்வளவு அசால்ட்டா போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணுங்கணு சொல்லிட்டு போயிட்டே இருக்கான். கொஞ்சம் கூட அந்த பொண்ணை பத்தி இவன் நினச்சு பார்க்கல. இவனை நம்பி எல்லாம் எதுவும் ஆகுற மாதிரி எனக்கு தெரியல!" என்றார் மிருதுளா.
"வேற என்ன தான் பண்ணலாம்ன்ற? அவனும் அவனால முடிஞ்சதா மண்டபம் வரை போய் இப்ப மண்டபத்தோட ஓனர் வீட்டுக்கும் போய் செக் பண்ணிட்டு வந்திருக்கான். இதுக்கு மேல என்ன பண்ண அவனும்?" என்ற ஸ்ரீனிவாசன்,
"விஷ்வா நிச்சயமா அந்த பொண்ணை கூட்டிட்டு வர தான் போயிருக்கான். ஆனா அந்த பொண்ணு விஷ்வா கூட வரல. இவனும் அந்த பொண்ணும் தனித்தனியா மண்டபத்துல இருந்து வெளில வந்திருக்காங்க!" என ஒருமுறை சொல்லி பார்த்துக் கொண்டவர்,
"இதை நம்ம கற்பனைக்கு என்ன வேணா இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோன்னு சொல்லிக்கலாம் மிரு. ஆனா நிஜம் என்னவோ? அடுத்து எங்க இருந்து இதை ஸ்டார்ட் பண்ணனு தான் நாம யோசிக்கணும்!" என தெளிவாய் கூற,
"ம்ம் சரி தான். துகியும் கம்பளைண்ட் கொடுப்போம்னு தான் சொல்றா. நீங்க என்ன சொல்றிங்க?" என்றார் மிருதுளா.
"வேற வழி இல்லையே மிரு. அதுமட்டும் இல்ல எது பண்றதா இருந்தாலும் விக்ரமை வச்சு தான் நாம மூவ் பண்ணனும். அந்த பொண்ணை நாம தனியா விட்டது மாதிரியும் இருக்க கூடாது. விக்கியையும் இதை லூஸ்ல விட்ட மாதிரி இருக்க கூடாது"
"அவனா! நல்லா சொன்னிங்க. அவனெல்லாம் போக மாட்டான் ஸ்டேஷன்க்கு. இன்னைக்கு வரும் போது என்னென்ன சண்டை போட்டுச்சுங்களோ. துகிரா முகமே சரி இல்ல வந்ததும். ஆனாலும் நம்ம பையனாச்சேனு அவ என்கிட்ட ஒத்த வார்த்தை சொல்லல. போறதா இருந்தா நீங்க துகி கூட கிளம்புங்க" என்று மிருதுளா சொல்ல,
"நானா? உன் மகனுக்கு தான் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் சர்வ சாதாரணம் ஆச்சே! இன்ஸ்பெக்டர் கூட சல்யூட் வைக்குறார். எப்படி இவ்வளவு தூரம் வந்தான்னு ஆச்சர்யமாவும் இருக்கு கொஞ்சம் பயமாவும் இருக்கு!" என்ற ஸ்ரீனிவாசன்,
"நான் சொன்னேன்னு சொல்லு. போவான்!" என்றும் சொல்லிவிட, காலையில் அவே சொன்னதை நம்பி மகனிடம் கூறினார் மிருதுளா.
விக்ரம் அப்பொழுது தான் இலகுவான உடையில் வந்து சாப்பிட அமர்ந்திருந்தான்.
"இன்னைக்கு வெளில எங்கேயும் போகலையா விக்கி!" என மிருதுளா கேட்க,
"போனும் ம்மா. மதியமா தான் போனும். முக்கியமான வேலை. போனா எப்ப வருவேன் தெரியாது." என்று சொல்லி அலைபேசியிலும் கவனத்தை வைத்திருக்க, கணவன் கூறியதை மகனிடம் கூறினார் மிருதுளா.
"கோபப்படாம சொல்றதை கேளு விக்கி. ரெண்டும் அப்பாவி பொண்ணுங்க டா. கொஞ்சம் மனசு வை. இந்த ஒருவாட்டி மட்டும் துகியோட ஸ்டேஷன் வரை போய்ட்டு வா. அடுத்து என்னனு நாங்க பாத்துக்குறோம்" என மெதுவாய் நயமாய் மிருதுளா மகனிடம் கூற, அவனுமே வேறு சிந்தனையில் இருந்தவன் இதை பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை என்பதை போல,
"ம்ம் சரி ம்மா! ஒரு பதினோரு மணிக்கு தயாரா இருக்க சொல்லுங்க" என்று சொல்லி சாப்பிட்டு முடித்து எழ, துகிரா சரியாய் அந்த நேரம் தான் எழுந்து வந்தாள்.
'சிங்கம் என்ன கேசுவலா ட்ரெஸ் பண்ணிருக்கு!' சட்டென்று இப்படி தோன்றவும் அடுத்த நொடி அதி வேகமாய் தன் தலையில் தானே கொட்டிக் கொண்டாள் துகிரா.
"வாய் அடங்க மாட்டுதா டி உனக்கு!" என முணுமுணுத்துக் கொண்டு மிருதுளா அருகே வர, அவருமே என்னவோ முணுமுணுவென சொல்லிக் கொண்டிருப்பதை கண்டவள்,
"என்ன மிரும்மா! ஏதோ புலம்புற மாதிரி இருக்கு!" என்றாள்.
"வா துகி! இவனை தான் நினைச்சுட்டு இருந்தேன். எப்ப என்ன சொல்லுவான்னே புரியல. இப்ப உன்னை பதினோரு மணிக்கு ரெடியா இருக்க சொன்னான் கம்பளைண்ட் பண்ண"என்று மிருதுளா சொல்ல,
"ஓஹ்!" என்றவள் அமைதியாகிவிட்டாள்..
தான் செல்லும் வழி சரி தானா என்றே தெரியாமல் அடுத்தடுத்த முடிவை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என அவள் மனம் எடுத்து கொடுக்க, ஏதேனும் ஒரு வழியில் இனியா கிடைத்துவிட கூடாதா என தான் மனம் அடித்துக் கொண்டது.
"உனக்கு சரிணு தோணுச்சுன்னா கம்பளைண்ட் குடு துகி. கட்டாயப்படுத்தலாம் இல்ல!" அவள் முகம் கண்டு மிருதுளா சொல்ல,
"அதெல்லாம் ஒண்ணுமில்ல மிரும்மா. ஏற்கனவே ரொம்ப லேட். இனியாவது சீக்கிரம் இனியாவை கண்டுபிடிக்கணும். அதுக்கு போலீஸ்கிட்ட போறது தான் சரி!" என்று சொல்ல,
"சரி டா. அப்ப சாப்பிட்டு கிளம்பு அவனும் வந்துடுவான்!" என சொல்ல, துகிராவும் சாப்பிட்டு சென்று கிளம்பி வந்தாள்.
'இவங்ககிட்ட வாயை குடுக்கவே கூடாது. கடுப்பாகுற மாதிரி எதாவது சொல்லி வச்சிடுவாங்க!' விக்ரமை நினைத்த துகிரா அமைதியாய் கிளம்பி வர,
ஒரு மணி நேரத்திற்கு முன் பார்த்ததற்கு அப்படியே மாறாய் வெள்ளை முழுக்கை சட்டையில் முழு முறையான ஃபார்மல் உடையில் வந்து இறங்கி இருந்தான் விக்ரம்.
மனம் மீண்டும் எதுவோ குரல் கொடுக்க வரவும் சுதாரித்துக் கொண்ட துகிரா 'ஷட்டப் யுவர் மைண்ட் துகி!' என சொல்லிக் கொண்டு அமைதியாகி இருக்க,
"நல்லா கேட்டுக்கோ விக்கி! அங்க போய் சும்மா துகியை டென்ஷன் பண்ற மாதிரி எதாவது சொல்லிரு இருக்காத" என்று மிருதுளா விக்ரமிடம் சொல்ல,
"ம்மா!" என அன்னையை முறைத்து நின்றான் விக்ரம்.
"நீ செய்ய கூடியவன் தான். அதனால தான் சொல்றேன். அவ எதுவும் என்கிட்ட சொல்லல. நானா தான் சொல்றேன். இதுக்கும் அவகிட்ட சண்டைக்கு நிக்காத" என்றும் சேர்த்து கூறினார்.
அத்தனை ஆயாசமாய் வந்தது விக்ரமிற்கு. ஆனாலும் அன்னை சொல்லியபின் எவ்வளவு மறுக்க என தான் கிளம்பி இருந்தான் அவளுடன். மற்றபடி சுத்தமாய் இதில் விருப்பம் இல்லை.
"என்னம்மா கிளாஸ்ல பயங்கரமா இருக்கு!" கிண்டல் செய்து துகிரா வர,
"கிண்டலா பண்ற நீ!" என விளையாட்டாய் முறைத்தவர்,
"இவன்கிட்ட இவ்வளவு எதிர்த்து பேசுறதும் எனக்கு தெரிஞ்சு நீ ஒருத்தி தான். இவன் போடுற சீனுக்கே யாரும் இவனை சீண்ட மாட்டாங்க. நீ அவனை நேத்து போது எனக்கு எவ்வளவு திருப்தியா இருந்தது தெரியுமா?" என்றார் சிரித்தபடி.
"நான் ஒன்னும் வேணும்னு பேசலை மிரும்மா. விக்ரம் சார் வாய் இருக்கே! ஹப்பா! நேத்து அவங்க பேசினதை எல்லாம் கேட்டா நீங்க என்ன ஆவிங்களோ போங்க!" என்றாள் துகிராவும்.
"ப்ச்!" என்ற சத்தத்தோடு தண்ணீர் குடுத்த கிளாசினை தொம்மென மேஜையில் வைத்த விக்ரம் சாவியை எடுத்துக் கொண்டு வேகமாய் வாசல் நோக்கி நடக்க,
"நாம பேசுறதை கவனிச்சுட்டான் போல!" என்றார் மிருதுளா.
"பல்லி கூப்பிடயரை மாதிரி ப்ச்'உம் சொல்லியாச்சு. கார் கிளம்பிருக்கும்! பை மிரும்மா!" என்றவள் ஓட, அவள் சொல்லியதில் சிரித்தபடி நகர்ந்தார் மிருதுளாவும்.
"அங்க தான் கிளம்பி இருக்கேன். ஒரு சின்ன வேலை முடிச்சுட்டு வர்றேன். வெயிட் பண்ண சொல்லு!" என விக்ரம் அலைபேசியில் சொல்ல, அருகே துகிராவும் அமர்ந்திருந்தாள்.
"ஸ்டேஷன்ல என்ன சொல்லணும்?" விக்ரம் கேட்க, திரும்பி விக்ரமை கண்டாள் துகிரா.
"ப்ச்!" என்று சொல்லி அவள் பக்கம் திரும்பியவன் மீண்டும்,
"ஸ்டேஷன்ல என்ன சொல்லணும்?" என அவளிடம் கேட்க,
"என்கிட்ட தானா? காதுல ப்ளூடூத் இருக்கே. அங்க பேசுறீங்க நினச்சேன்!" என்றாள் துகிரா.
"இனியா என் சிஸ்டர். அவளை காணும். கண்டுபிடிச்சு குடுங்கனு கேட்க போறேன்!" துகிரா சொல்ல,
"ஹ்ம்! நீங்க அவங்களுக்கு யாரு, ஏன் அவங்க பரேன்ட்ஸ் வரல. எப்ப இருந்து காணும். மண்டபத்துல என்ன நடந்துச்சு. யாரெல்லாம் கூட இருந்தாங்க. விஷ்வா கேரக்டர், அந்த பொண்ணு கேரக்டர் அண்ட் அந்த மாப்பிள்ளை அவன் பேரு... ஹான் அந்த விவேக் அவனை பத்தின நியூஸ்னு எல்லாமே கேட்பாங்க!" என்ற விக்ரம்,
"உன்னையும் தான். நீ ஏன் வீட்டை விட்டு வந்தனு கூட கேட்பாங்க." என்று சொல்ல, மலைத்து அவனை கண்டவள்,
"என்ன பயமுறுத்துறீங்களா? கேட்டா எல்லாமே சரியா நானும் சொல்லுவேன். அதோட நானா ஒன்னும் வீட்டைவிட்டு வரல. நீங்க தான் உங்க பிரண்ட்டு மேல இறுக்க அக்கறைல பொண்ணை தூக்குறேன்னு என்னை தூக்கிட்டு வந்திங்க!" என்றும் சொல்ல, பல்லைக் கடித்தவன் சட்டென்று வண்டியை நிறுத்திவிட்டான்.
"லுக்! அதுக்கப்புறம் நீ வீட்டுக் போய்ட்ட தானே? உன் அம்மா அப்பா உன்னை நம்பாம சந்தேகப்பட்டு வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க தானே?" என சொல்லி காண்பிக்க, அந்த உண்மை சுட்டதில் இரு நொடி தான் மௌனமாகி இருந்தாள்.
"அதுவும் உங்களால மட்டும் தான் விக்ரம் சார். மண்டபத்துல நீங்க நடந்துகிட்டது அப்படி. நீங்க அன்னைக்கு என்னை கூட்டிட்டு போகாம இருந்திருந்தா எனக்கு இன்னைக்கு இந்த நிலைமை இல்ல!" என அவளும் கோபமாய் சொல்ல,
"ஆமாமா! அன்னைக்கு நான் சும்மா இருந்திருந்தா இப்ப அந்த விவேக் உன்னை நல்லா யூஸ் பண்ணி த்ரோ பண்ணி இருப்பான்! அப்ப தெரிஞ்சிருக்கும்" என அவன் வார்த்தைகள் எல்லாம் அவளை காயப்படுத்துவதாய் வந்து விழ, எரிச்சலாகி போனது துகிராவிற்கு.
வண்டியை ஸ்டார்ட் செய்தவன் மனமும் கடுப்பில் கலந்து இருக்க யோசித்தபடி வந்தான்.
"இதுக்கு தான் உங்ககிட்ட பேசவே கூடாதுனு வந்தேன். வாயை திறந்தாலே அசிட் தான் வந்து விழுது" பல்லைக் கடித்து துகிரா முணுமுணுக்க,
"அங்க நான் பேசிக்குறேன். நீ எதுவும் பேச வேண்டாம். புரியுதா?" என்றான் சில நிமிட சிந்தனைக்கு பின் விக்ரம்.
'பொய் சொல்ல பிறந்தவர் அங்க என்ன சொல்ல போறாரோ!' துகிரா நினைக்க,
"நான் என்ன சொன்னாலும் ஆமானு மட்டும் சொல்லு. அந்த பொண்ணை அப்ப தான் கண்டிபிடிக்க முடியும் உனக்கு பிரச்சனை இல்லாம!" விக்ரம் சொல்ல, தலையாட்டவில்லையே தவிர, அவன் சொல்வதை கேட்டு தான் ஆக வேண்டிய நிலை என்பதும் அவளுக்கு புரிந்தது.
காவல் நிலையம் வந்ததும் "இவங்க மிஸஸ் துகிரா விக்ரம்!" என இன்ஸ்பெக்டரிடம் விக்ரம் சொல்ல,
"எதே!" என வார்த்தையாயே வந்துவிட்டது துகிராவிற்கு.