அத்தியாயம் 16
ராஜேஷ் இருக்குமிடம் வந்து சேரும் முன் அத்தனை அழைப்பு மாணிக்கராஜிடம் இருந்து விக்ரமிற்கு.
நேற்றில் இருந்து அழைத்துக் கொண்டிருக்கிறார் எடுக்கவே இல்லை விக்ரம். கிளம்பி விக்ரம் வீட்டிற்கு சென்றுவிடலாமா என்று கூட நினைத்தார்.
ஆனாலும் மகன் அவசரப்பட்டு அவர்கள் வீடு வரை சென்றதற்கு தான் இன்று இந்த நிலைமை என்று புரிந்து இப்பொழுது விக்ரம் அழைப்பையும் ஏற்கவில்லை என்பதில் நிலைகுலைந்து போயிருந்தார் மாணிக்கராஜ்.
நேற்றில் இருந்து மகனை காணவில்லை. உடனே போலீஸிடம் செல்லவும் முடியாது. ராஜேஷ் சினிமாத்துறையில் இருப்பவன்.
நிச்சயம் தெரியும் இது விக்ரம் வேலை தான். மகனை கூட அன்றே அத்தனை எச்சரித்துவிட்டார். தவறு தங்கள் மீது தான். இதில் விக்ரமிடம் நேரடியாய் மோதாமல் அவன் வீடுவரை சென்றது. தவறு தான் என்றும் ராஜேஷிடம் பலமுறை கூறிவிட்டார்.
இப்பொழுது நடப்பதற்கு எல்லாம் முழுதாய் ராஜேஷின் அசட்டுத்தனம் தான் காரணம்.
விக்ரம் எதுவும் செய்துவிட கூடாதே என அத்தனை வேண்டி மீண்டும் மீண்டும் அழைத்தும் அவன் அழைப்பை ஏற்கவில்லை.
இதில் ராஜேஷ் செய்திருக்கும் மற்றொரு செயல் தெரிந்தால் நிச்சயம் மாணிக்கராஜே மகனை கண்டு அதிர வாய்ப்பிருக்க, இப்பொழுது விக்ரம் அழைப்பை ஏற்காததற்கே பயந்து போயிருந்தார் அவர்.
அந்த வீட்டிற்குள் வந்த வேகத்தில் ராஜேஷ் சட்டையை கொத்தாய் பிடித்து தூக்கி இருந்தான் விக்ரம்.
"விக்ரம்!" என அவன் செய்கையில் அதிர்ந்து ராஜேஷ் விழிக்க,
"அந்த பொண்ணை எங்க?" என்று தான் முதலில் கேட்டான் விக்ரம்.
மனதில் துணுக்குற்றாலும் "எந்த பொண்ணு?" என ராஜேஷ் கேட்க,
"ராஜேஷ்! ராஜேஷ்! எனக்கு பொறுமை எல்லாம் கிடையாது. எங்க அந்த பொண்ணு?" என மீண்டுமாய் அவன் சட்டையைப் பற்றி இழுத்து ஒரு சுற்று சுற்றி விக்ரம் கேட்க,
"விக்ரம் கையை எடுங்க! இதுக்கெல்லாம் பதில் சொல்லணும் நீங்க. என் அப்பாவை அவ்வளவு சாதாரணமா நினைச்சுட்டிங்களா?" என ராஜேஷ் இப்பொழுது கோபமாய் கேட்க,
"உன்னை..." என்றவன் ஒரு கையால் அவனைப் பிடித்து மறு கையால் சட்டென துப்பாக்கியை எடுத்து அவன் முன் நீட்டியிருக்க, சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை ராஜேஷ் அதை.
"மறுபடியும் சொல்றேன். எனக்கு பொறுமை எல்லாம் இல்லை. சொல்லு! எதுக்காக அன்னைக்கு ஹாஸ்பிடல் வந்த? அந்த பொண்ணை எங்க வஞ்சிருக்க?" என கேட்க, பயத்தில் நடுங்கி நின்றிருந்தான் ராஜேஷ்.
"சார்!" என விக்ரம் பிஏவும் அதிர்ந்து அருகே வர,
"சொல்றியா இல்லையா டா!" என ராஜேஷ் நெற்றியில் துப்பாக்கியால் ஒரு அழுத்தம் விக்ரம் கொடுக்க,
"விக்ரம்!" என கண்களை மூடிக் கொண்டு அதிர்ந்து நின்ற ராஜேஷ், தனக்கு எதுவுமில்லை என்றதில் பலத்த மூச்சை விட்டுக் கொண்டு,
"சொல்றேன்!" என்றவன் சொல்லில் தான் இன்னும் கோபமாய் தான் நின்றான் விக்ரம்.
அவனுக்குமே அதி குழப்பம் தான். சம்மந்தமே இல்லாமல் இவன் இனியாவை கடத்த என்ன இருக்கிறது என்று.
"அந்த பொண்ணு சேஃபா தான் இருக்கு. நான் எதுவும் பண்ணல!" என கூற,
"இருக்கனும். அப்படி இல்லாம போனா நீயும் இல்லாம போய்டுவ டா நாயே!" என விக்ரம் திட்ட,
"விக்ரம் நான் சொல்றதையும் கொஞ்சம் கேளு! உனக்கு வேண்டிய பொண்ணு தான் என்கிட்ட இருக்குறா. நீ நடந்துக்குறது கொஞ்சமும் நல்லா இல்லை. நான் நினைச்சா என்ன வேணா செய்யலாம்!" என ராஜேஷ் சொல்ல,
"என்ன டா சும்மா பயம் காட்ட ட்ரை பண்ற? அந்த பொண்ணு எனக்கு வேண்டிய பொண்ணுன்னு நான் சொன்னேனா? நீ யாரையோ தூக்கிட்டு போய் என்னை பிளாக்மெயில் பண்ண நினைச்சிருக்க. ஆனா ஏன்? அது தான் எனக்கு தெரியணும். விஷ்வாவை எப்படி உனக்கு தெரியும்? என்ன பண்ற நீ?" என்ற விக்ரம்,
"என்ன வேணா செய்யலாமா? அதுவும் நீ நினைச்சா? அந்த நினைப்பு வேற இருக்கா உனக்கு. அந்த நினைப்பு வந்ததே தப்பு. நீ இந்த வீட்டை தாண்டி வெளில போய் பாரு டா. உனக்கு சவாலாவே சொல்றேன்" என அத்தனை கோபம் விக்ரமிடம்.
என்ன நினைத்து அந்த பெண்ணை இவன் கடத்தி இருப்பான். எதற்காக என கேள்வியும் உள்ளுக்குள் ஓடிக் கொண்டு தான் இருந்தது.
"உனக்கு வேண்டிய பொண்ணில்லையா? அப்புறம் ஏன் அந்த பொண்ணை தேடி இப்ப என்கிட்ட வந்திருக்க? சும்மா அவளை காப்பாத்த என்கிட்ட கதை சொல்றல்ல நீ! விக்ரம்! எனக்கு உன்னை நல்லா தெரியும். என்னை ஏமாத்த பாக்காத! ரெண்டு நாள் என்னை அடைச்சு வச்சுட்டா நீ பெரிய ஆள்ன்னு அர்த்தம் இல்ல!" என ராஜேஷ் சொல்லும் போதே விக்ரமின் பிஏ அவன் முகத்தில் ஒரு கையால் குத்துவிட, அலறி துடித்தான் ராஜேஷ்.
"ராஜேஷ்! நீங்க பெரிய அக்டர்! அந்த பேரை காப்பாத்திக்க நினைக்குற யாரும் இப்படி பேச மாட்டாங்க! சார் உங்ககிட்ட இவ்வளவு பொறுமையா இருக்குறாங்கன்னா அதுக்கு கண்டிப்பா அர்த்தம் இருக்கும். உண்மையை சொல்லலைனா காணாம போயிடுவீங்க!" என்றான் அவன்.
"இங்க பார்த்தியா!" என தனது மொபைலை எடுத்து கால் லாக் பகுதியை காண்பித்தான் விக்ரம்.
"உன் அப்பாகிட்ட இருந்து எவ்வளவு கால் வந்திருக்கு பாரு. நேத்துல இருந்து ட்ரை பன்றார் என்கிட்ட பேச. பையனை காணும்ன்னு தெரிஞ்சு இன்னும் போலீஸ்க்கு போகல. வேற யாரையும் தேடியும் போகல. அந்த மனுஷனுக்கு என்னை தெரியும். நான் என்ன பண்ணுவேன்னும் தெரியும். உன்னை மாதிரி இல்ல உன் அப்பா. பொழைக்க தெரிஞ்சவர்!" விக்ரம் சொல்ல,
"இது தான். இந்த உன்னோட ஆட்டிட்யூட் தான் விக்ரம் எனக்கு பிடிக்கல. அப்படி என்ன தலைக்கனம் உனக்கு? என் அப்பா எவ்வளவு பெரிய மினிஸ்டர்? அவரையே ஆட்டி பாக்க நினைக்குற உன்னை நான் எப்படி சும்மா விட? ஒரு புள்ளையா எனக்கு கோபம் வரும்!" என்றான் ராஜேஷ் கோபமாய்.
"ஏன் டா பொறுக்கி ராஸ்கல். என்னவோ நிஜமான ஹீரோ மாதிரி பேசிகிட்டு திரியுற! உன் அப்பன் என் காசுல உனக்கு படம் ப்ரோடியூஸ் பண்ணுவான். அது ஓடலைனா என் காசை திருப்பி தர கை வலிக்கும். அதை நான் கேட்டேன்னா உனக்கு நான் தப்பானவனா? உங்களை மாதிரி ஆளுங்களை தெரியாமலா இந்த தொழிலுக்கு நான் வந்திருப்பேன்? இல்ல என்னை தெரியாமலா உன் அப்பன் போலீஸ்கிட்ட போகாம ரவுடி மாதிரி உன்னை வளத்து என்கிட்ட நேந்து விடுவான்?" என கேட்ட விக்ரம்,
"உங்களுக்கு எங்கேங்க யார் பேர்ல சொத்து இருக்கு. உன் அப்பா உனக்கு படம் பண்ண யார் யாருக்கு லஞ்சம் கொடுத்தது? உன் வீட்டுல இருக்க ஒவ்வொரு பொருளோட மதிப்பென்ன! இதெல்லாம் தெரிஞ்சும் உன் அப்பாக்கு ஒரு மாசம் டைம் குடுத்தேன். ஆனா நீ என்ன பண்ணிருக்க. என் வீட்டுக்கு வந்திருக்க அதுவும் நான் இல்லாத நேரமா. சரின்னு அதையும் உன் அப்பாகிட்ட பேசி பைசல் பண்ணிட்டேன். அப்புறமும் தேவை இல்லாம ஏதோ ஒரு பொண்ணை கடத்தி என் வீட்டோட சம்மந்தப்படுத்தி... இல்ல எனக்கு புரில.. என்ன டா உன் பிரச்சனை? சினி ஃபில்டுல நீ இருக்கணுமா வேண்டாமா? இல்ல இவன் என்ன பண்ணிடுவான்னு நினைக்குறியா?" என விக்ரம் பேச பேச முகம் கறுத்தது ராஜேஷிற்கு.
"எனக்கு தலைக்கனம்? அதை நீ பார்த்த? ரைட்! என்னை புரியாதவங்களுக்கு நான் என்னைக்கும் என்னை புரிய வைக்க முயற்சி பண்ணினது இல்ல!" என்ற விக்ரம்,
"அந்த பொண்ணுக்கும் எனக்கும் எந்த சம்மந்தம்ன்னு உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல. அண்ட் என்னோட பணத்தை ஏமாத்த பாத்ததும் கூட உன் அப்பா. ஸோ இவ்வளவு மிஸ்டேக் வச்சுட்டு என்கிட்ட மோதி இருக்குற உன்னை... நான் என்ன பண்ணலாம்?" என்ற விக்ரம்,
"என்ன வேணா பண்ணலாம் தானே?" என்றும் கேட்க, ராஜேஷ் மனம் பலவற்றை கணக்கிடு செய்ய ஆரம்பித்தது.
"அந்த பொண்ணை எங்க?" என மீண்டும் அதில் வந்து நின்றான் விக்ரம்.
"என்ன பாக்குற? உயிரோட தான் இருக்கா இல்ல..." என்றவன் பார்வையில்,
"நான் தான் சொன்னேனே விக்ரம்! பத்திரமா தான் இருக்கு. எனக்கு நீ என் அப்பாவை மிரட்டினது பிடிக்கல. அதுக்கு பழி வாங்க தான் அன்னைக்கு உன் வீட்டுக்கு வந்ததும் இந்த பொண்ணை கடத்தினதும்" என்ற ராஜேஷ்,
"இப்ப நீ என்னை வெளில விட்டா நானும் அந்த பொண்ணை விட்டிடுறேன்!" என சமரசம் செய்து கொள்ளப் பார்த்தான்.
"நீ என் வீட்டுக்கு வந்ததுக்கு தான் இங்க இருக்க. அந்த பொண்ணு..." என்றவன்,
"ஓகே! பார்த்துடலாம். நீ இவ்வளவு தூரம் வந்ததே தப்பு. நீ என்ன பண்றன்னு நான் பாக்குறேன். அந்த பொன்னையும் என்ன பண்ணிடுறன்னு பாக்குறேன்!" என்றவன் நகர,
"உனக்கு கொஞ்சம் கூட பயம் இல்லையா விக்ரம்! என் கையில அந்த பொண்ணை வச்சுட்டு நான் ஏன் நீ சொல்றதை எல்லாம் கேட்கணும்?" ராஜேஷ் கேட்க,
"ஏன்னா எனக்கு அந்த பொண்ணு அவ்வளவு முக்கியம் இல்ல. ஆனா அந்த பொண்ணுக்கு எதாவது ஆச்சுன்னா ராஜேஷ்ன்னு ஒருத்தன் இந்த உலகத்துல இருந்த தடம் தெரியாம ஆக்கவும் என்னால முடியும். நீ நம்ப மாட்ட! உனக்காக தான் இப்ப உன்னை அப்படியே விட்டுட்டு போறேன். பாக்கலாம் எத்தனை நாள் நீ மறைச்சு வைக்குறன்னு!" என்றவன் நிஜமாய் அந்த வீட்டை விட்டு வெளியேற,
'நிஜமாவே அந்த பொண்ணு இவன் காதலி இல்லையா!' என குழப்பத்தில் நின்றான் ராஜேஷ்.
"சார்! என்ன சார் இப்படி சொல்லிட்டு வந்துட்டீங்க. இவ்வளவு பண்ணினவங்க அந்த பொண்ணை சும்மா விட்டு வைப்பாங்களா? உடனே ரெஸ்க்யூ பண்ண எதாவது ஸ்டெப் எடுக்கணும் சார்!" என விக்ரம் பிஏ அவனுடன் வெளிவந்து சொல்ல,
"அப்படி இவனுக்கு பயந்து நான் போகணுமா? நெவர்! நான் யார்னு அவனுக்கு தெரியனும். அப்படி அந்த பொண்ணுக்கு எதாவதுன்னா இவனை நான் சும்மா விட மாட்டேன். சொன்னதை செய்வேன்!" என்ற விக்ரம் அவனை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
வீட்டிற்கு வந்த விக்ரமை அத்தனை ஆவலாய் எதிர்பார்த்து காத்திருந்த துகிராவிடம் நடந்ததை மேலோட்டமாய் மட்டும் விக்ரம் சொல்லவும் அதிர்ந்தவள்,
"உங்க ஈகோ பிரச்சனைக்காக அவளை அடகு வச்சிருக்கீங்களா?" என தலையில் கைவைத்துவிட,
"விக்கி! ஒரு பொண்ணை வச்சி என்ன டா விளையாட்டு இது?" என மிருதுளாவும் பதற, விக்ரம் அதற்கெல்லாம் அசருபவன் இல்லையே!.
தொடரும்..