அத்தியாயம் 17
"மிரும்மா! இனியா வந்ததும் நான் அவளோட கிளம்பிடுறேன். முதல் வேலையே என் வீட்டுக்கு போறது தான். என்னை நான் நிரூபிக்கணும். அதை விட இனியா லைஃப் என்னனு பாக்கணும். நிச்சயம் ரொம்ப உடைஞ்சு போயிருப்பா. பார்த்தீங்க இல்ல போட்டோலயே எவ்வளவு அழுறான்னு!" என துகிரா மிருதுளாவிடம் கூற,
"நானும் உன் வீட்டுக்கு வந்து எடுத்து சொல்றேன். கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க!" என்றார் மிருதுளாவும்.
"கண்டிப்பா நீங்க வரணும் மிரும்மா! நீங்க எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிருக்கீங்க! ஆனா ஒண்ணு! நீங்க தப்பா நினைச்சாலும் பரவால்ல. உங்க புள்ளையை மட்டும் கூட்டிட்டு போவோம்ன்னு சொல்லாதீங்க!" என்று சொல்லவும் முறைத்தபடி சிரித்தார் மிருதுளா.
மிருதுளாவிற்கு இன்னும் கொஞ்சம் குழப்பம் தான். மகன் அனுப்பிய புகைப்படம் அதில் இனியா அழுத நிலையில் என கண்டவருக்கு இனியாவிற்கு எதுவும் பிரச்சனையோ என தோன்றாமல் இல்லை.
ஆனாலும் அவ்வளவுக்கு எதுவும் சிந்திக்காமல் இப்படி சந்தோசமாய் இருப்பவளிடம் அதை சொல்லி குழப்பவும் பிடிக்கவில்லை.
அவன் வரட்டும் என்றே அமைதியாய் காத்திருந்தார்.
"விஷ்வா இல்லைன்னு அவளுக்கும் தெரியும் போல. கொஞ்ச நாள் ஆகும் மறந்து கடந்து வர. அதான் நான் இருக்கேனே! பாத்துக்க வேண்டியது தான்!" என்ற துகிரா,
"என் பெரியம்மா தான் ஓவரா பேசுவாங்க. சமாதானம் ஆகிட்டா உடனே மாப்பிள்ளை பார்க்க தான் நிப்பாங்க. மகளோட மனசுன்னு எல்லாம் அவங்க பார்க்கவே மாட்டாங்க எப்படி தான் சமாளிக்கவோ!" என அடுத்து இப்படி தான் என புலம்பும் நிலைக்கே சென்றுவிட்டாள் துகிரா.
"ஆனா ஒண்ணு மிரும்மா! என் பெரியம்மா மட்டும் இல்ல. என் வீட்டுல யார் என்ன பேசினாலும் சரி. எங்களை ரொம்ப மரியாதை இல்லாம பேசிட்டா நிச்சயம் யார் என்னனு எல்லாம் பார்க்க மாட்டேன். இனியாவோட தனியா ஹாஸ்டல் போய்டுவேன். செல்ப் ரெஸ்பெக்ட் இல்லாம வாழ்ந்து எதுக்கு?" என்பது வரை அவள் பேச,
"விக்ரம் வரட்டுமே துகி! ஏன் இவ்வளவு யோசிக்குற?" என்றார் மிருதுளா.
"அதுவும் சரி தான். ஆனாலும் எப்ப கிளம்புவோம்னு இருக்கு இங்க இருந்து!" என்றவளை மிருதுளா பார்க்க,
"எனக்கு உங்களை பிடிக்கும் தான் மிரும்மா. ஆனா உங்க பையனுக்கு என்னை பிடிக்காது. எவ்வளவு நாள் அவங்களுக்கு தொல்லையா நான் இங்க இருக்க? நல்லவேளை இனியா கிடைச்சுட்டா" என மீண்டும் மீண்டும் சொல்ல, அவள் எண்ணம் நன்றாய் புரிந்தது மிருதுளாவிற்கு.
வாசலில் விக்ரம் கார் வரும் சத்தம் கேட்கவும் இருவருமே எழுந்து செல்ல, அங்கே விக்ரம் மட்டும் இறங்கி உள்ளே நுழைந்தான்.
"மிரும்மா!" என மிருதுளாவை தான் கேள்வியாய் கண்டாள் துகிரா.
"விக்கி! எங்க டா இனியா? அவளை பார்த்தியா இல்லையா?" என மிருதுளா வந்து விக்ரமிடம் நிற்க,
"நான் எப்ப பார்த்தேன்ன்னு சொன்னேன்?" என்றவனை விழி அகற்றாமல் துகிரா காண,
"அப்போ ஏன் டா போன் எடுக்கல? இனியா போட்டோ எப்படி கிடைச்சுது?" என்றார்.
"அதான் சொன்னேனே ம்மா முக்கியமான வேலைன்னு. போன இடத்துல இந்த போட்டோ கிடைச்சுது. இப்ப அந்த பொண்ணு யார்கிட்ட இருக்கான்னும் கண்டு பிடிச்சாச்சு!" விக்ரம் சொல்ல, அதிர்ந்தாள் துகிரா.
"யார்கிட்டனா? எங்க இருக்கா? யார் கூட இருக்கா?" என கேட்க,
"ஒரு பொறுக்கி நாய்கிட்ட. என்கிட்டயே வாலாட்டுறான்!" விக்ரம் சொல்ல,
"விக்கி! முழுசா சொல்றியா இல்லையா? என்னை நடந்தது? இப்ப இனியா எங்க?" மிருதுளா கோபத்தோடு சத்தமாய் கேட்க,
"அப்ப போலீஸ்கிட்ட போகலாம் மிரும்மா!" என துகிரா சொல்ல,
"போலீஸ்கிட்ட போனா எல்லாம் திரும்ப வர முடியாது. ரெண்டு நாள் வெயிட் பண்ணுங்க. தானா வர வைக்குறேன்!" என்றான் அத்தனை சாதாரணமாய்.
"விக்கி! என்ன சொல்ற நீ? கம்பளைண்ட் குடுத்துருக்கோமே!" என்றவர் சூழ்நிலை புரிய, மகனின் இந்த சாதாரணமான பதில்களில் கோபம் கொண்டு கேட்டார்.
"ம்மா சொன்னா புரிஞ்சிக்கோங்க! அன்னைக்கு வந்ததா சொன்னிங்களே அந்த மினிஸ்டர் பையன். அவன் தான் எல்லாத்துக்கும் காரணம். விஷ்வா ஹாஸ்பிடல்ல இருக்கும் போது அந்த பொண்ணும் அங்க வந்திருக்கு. அங்க வச்சு தான் அந்த பொண்ணை தூக்கிருக்காங்க!" என சொல்லி அந்த வீடியோவை காட்ட, தலை சுற்றி மயக்கமே வரும் போல இருந்தது துகிராவிற்கு.
"இப்ப என்ன தான் பண்றது விக்கி? போலீஸ்கிட்ட போனா அவங்க பார்த்துக்க மாட்டாங்களா?"
"அவங்க என்ன பாக்குறது? அவனை நான் பாத்துக்கறேன். அதான் சொல்றேனே ரெண்டு நாள் மட்டும் தான் . அப்புறம் இருக்கு அவனுக்கு!" என்றான் அப்போதுமே!.
"அவன் என்கிட்ட தான் இருக்கான். அவனால இப்ப எதுவும் அசைய கூட முடியாது பல்லு பிடிங்கின பாம்பு மாதிரி தான். இப்ப அவனை சும்மா விட்டா மறுபடியும் நம்மகிட்ட வம்பு பண்ண தான் நினைப்பான்." விக்ரம் சொல்ல,
"நீங்க என்னவும் பண்ணுங்க. ஆனா இனியா? உங்க ஈகோ பிரச்சினைல அவ என்னை பாடுபடுவா?" என துகிரா கேட்க,
"எங்க இருக்கான்னு தெரிஞ்சா கூட்டிட்டு வர மாட்டேனா? சும்மா சொன்னதையே சொல்லிட்டு. அதான் சொல்றேனே! அந்த பொண்ணு யார்கிட்ட இருக்கோ அவனே இப்ப என்கிட்ட தான் இருக்கான் அவனால எதுவும் செய்ய முடியாது!" என சொல்ல,
"என்ன டா பேசுற நீ?" என்ற மிருதுளாவிற்கும் கோபம் அதிகமானது.
விக்ரம் அலைபேசி சத்தம் அதே நேரம் கேட்க,
"இதோ! மினிஸ்டர் தான்!" என்ற விக்ரம் இகழ்ச்சியாய் புன்னகைத்து அழைப்பை இப்பொழுது தான் ஏற்றான்.
"சொல்லுங்க மாணிக்கராஜ்!" என்றபடி.
தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் துகிரா. என்ன பேசுகிறோம் என புரிந்தேன் கொஞ்சமும் பெண் என்ற அக்கறை இன்றி இவ்வளவு பேசுபவனிடம் வேறு என்னை எதிர்பார்க்க இனி என்று தான் நினைத்தது அவள் மனம்.
மிருதுளாவிற்கும் அதை புரிந்து கொள்ள முடிந்தது.
"விக்ரம்! நான் தான் சொன்னேனே அவன் இனி உன் பக்கம் வர மாட்டான்னு! பின்ன ஏன் இப்படி எல்லாம் பண்ற? ராஜேஷை விட்ரு!" இப்படி தான் கூறினார் எடுத்ததும்.
"வர மாட்டானா? வந்துட்டான். அவனை நான் ஏன் சும்மா விடணும்?" என ஆக்ரோஷ்மாய் கேட்ட விக்ரம் அதன்பின் தான் தன் பேச்சில் அதிர்ந்து நின்ற தாயை கவனித்தவன் மணிகராஜ்ஜின் பேச்சை கேட்டபடி தன் அறை நோக்கி சென்றான்.
"அவன் உன் வீட்டுக்கு வந்தது தப்பு தான் நான் சொல்றேன். அவனைஜ் விட்ரு!" மீண்டும் அவர் கேட்க,
"என் வீட்டு பொண்ணை தூக்க நினைச்சு வேற ஒரு பொண்ணை தூக்கி இருக்கான். அவனை நான் சும்மா விடுறதா?" விக்ரம் சொல்ல,
"பொண்ணா?" என அதிர்ந்து அவர் விழிக்க,
"பொண்ணு தான்! அதுவும் உங்க பையன் தான் தூக்கினது தான். எவிடென்ஸ் எல்லாம் பக்காவா பாக்கனுமா?" என கேட்க, பதிலே சொல்ல முடியவில்லை அவருக்கு.
"என்னை டச் பண்ண நினச்சா என்ன ஆகும்னு அவனுக்கு தெரிய வேண்டாம்?" விக்ரம் சொல்ல,
"விக்ரம் ப்ளீஸ்! இது சாதாரண விஷயம் இல்ல இதெல்லாம் வெளில வந்தா என் அரசியல் வாழ்க்கை..." என அவர் சொல்ல முடியாமல் வார்த்தைகள் திக்க,
"அதை நான் ஏன் நினைக்கணும் மிஸ்டர் மினிஸ்டர்? அவ்வளவு தூரம் சொல்லியும் பயம் இல்லாம போச்சே! அந்த பொண்ணு எங்கன்னு இப்ப வரை அவன் சொல்லல என்கிட்ட. அவ்வளவு தைரியமா அவனுக்கு? அப்போ பார்த்துடுவோம்!" என்றான் அவரிடமும் சவாலாய்.
"விக்ரம்! ப்ளீஸ்! பேசுவோம். நான் பேசுறேன். நான் பத்திரமா அந்த பொண்ணை..." என மாணிக்கராஜ் சொல்ல வர, யாப் சொல்வதையும் காதில் வாங்குவதாய் இல்லை அவன்.
"இது என் பிரச்சனை. எனக்கு பார்த்துக்க தெரியும். எனக்கு மீட்க தெரியும். நான் யாரையும் துணைக்கு கூப்பிடல. நீங்களும் மோதி பார்க்க நினைச்சா நான் ரெடி!" என்றவன் உள்ளுக்குள் அவ்வளவு எரிமலைகள்.
தன்னை ஒருவன் எதிர்ப்பதா என்பதோடு அதில் கொஞ்சமும் நியாயமில்லையே என்ற எண்ணம் தான்.
தான் தவறு செய்யும் பற்றத்தில் இவ்வளவு கோவம் அவனிடம் இருக்காது. அவன் தப்பை மறைத்து தன்னை பழி வாங்க என அவன் செய்ய நினைக்கும் செயலுக்கு எப்போதும் விக்ரம் பதில் இப்படி தான் இருக்கும்.
"மிரும்மா! நான் ஸ்டேஷன் போக போறேன்!" துகிரா சொல்ல,
"துகி!" என்றவருக்கு அவளை சமாதானப்படுத்த முடியவில்லை. அவள் நினைப்பது நூறு சதவீதம் சரி தானே!
தனக்கே மகன் மேல் அத்தனை கோபம் வர, அவளை எப்படி கட்டுப்படுத்த முடியும்?
கீழே மிருதுளாவின் குரலும் அதனை விட வேகமாய் துகிராவின் காட்டு கத்தலும் என கேட்டு விக்ரம் தன் அறையில் இருந்து வெளிவர,
"விக்கி! தயவு செஞ்சு அந்த பொண்ணை போய் கூட்டிட்டு வா. துகி இப்பவே போலீஸ்கிட்ட போறேன்ன்னு சொல்ற!" என சொல்ல,
"அவ்வளவு திமிரா? அதான் சொல்றேன்ல இது என் பிரச்சனை நான் தான் பாக்கணும். நீ போலீஸ்கிட்ட போனா மட்டும் கிடைச்சிடுமா?" விக்ரம் கோபமாய் கேட்க,
"ஏன் கிடைக்க மாட்டா? இனியாவை கடத்தினவன் உங்ககிட்ட தானே இருக்கான்? அதையும் சேர்த்து சொல்லுவேன். உங்களையும் விசாரிக்க சொல்லுவேன்!" என அவ்வளவு சத்தமாய் கோபமாய் துகிரா சொல்ல,
"யூ இடியட்! சொன்னா புரியாதா உனக்கு? நீ சொன்னதும் வந்து என்னை அரெஸ்ட் பண்ணிடுவாங்கன்னு நினைப்பா?" விக்ரம் சொல்ல,
"டேய்! கொஞ்சம் பார்த்து தான் பேசேன் டா. அவ கோவமும் சரி தானே?" என மிருதுளாவும் சொல்ல,
"என்னை சரி? அங்க போலீஸ்கிட்ட இவளுக்காக இவளுக்கு சீக்கிரம் வேலை முடியனும்ன்னு நான் இவ புருஷன்ன்னு சொல்லி இருக்கேன் ஸ்டேஷன்ல. அங்க போய் இவ என்னையே சொல்லுவா நான் பார்த்துட்டு இருக்கணுமா? எனக்கு என்னை தலையெழுத்தா?" என அவனும் சொல்ல, மிருதுளாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான் கேட்ட ஒவ்வொன்றும்.
அதில் அவர் தலை சுற்றி நிற்க, "எனக்காகவா பண்ணிங்க? நடக்குறதை பார்த்தா அப்படி தெரியல. தொலைஞ்சு போனது என்னோட சிஸ்டர். இனி நான் பார்த்துக்குறேன்." என்றவளை அவன் ஏளனமாய் பார்க்க, அதன்பின்னும் துகிரா பேச்சை நிறுத்தவே இல்லை.
"உங்களால முடியும் ஆனா நீங்க ஹெல்ப் பண்ணல. அப்போ உங்க துணை எனக்கு தேவை இல்ல" என்றவளை மிருதுளா பேசி பார்க்க,
"நான் பாத்துக்குறேன் இனி. கண்டிப்பா உங்களை தான் போலீஸ்ல முதல் அக்யூஸ்ட்டா சொல்லுவேன்" என்றவள் பேச்சு எல்லை மீறி இருக்க, விக்ரம் பொறுமை இழந்து தான் அப்பொழுதே நின்றிருந்தான்.
"அதுமட்டும் இல்ல. அன்னைக்கு சொன்னது உண்மை இல்ல. நீங்க யார்னே தெரியாதுன்னு சொல்லுவேன்!" என்றவள் வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.
அவ்வளவு தான் அவளால் முடிந்தது. காவல் நிலையம் அவள் செல்லும் முன் தான் கூறிய பொய்யை உண்மையாக்கி துகிராவை மனைவியாக்கி இருந்தான் விக்ரம்.