• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராஜ் - முறம்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
முறம்





ஒரு மாலைப் பொழுதில், சூரியனின் கதிர்கள் இன்னும் மங்கிய ஒளி வீசிக் கொண்டிருக்கிற நேரத்தில், சாலையின் ஓரத்தில் இருக்கும் மரங்களுக்கு நடுவே சிறு சிறு இடைவெளியில், சூரிய கதிர்கள் பூங்குழலி மீது படுகின்றன. சாலையின் மறுபுறத்தில் ஓங்கி வளர்ந்த மரங்கள் இருளை அதிக சீக்கிரம் வரவழைப்பதாக இருந்தன.



புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையில், இரு சக்கர மிதி வண்டியில் தனியாக போய்க்கொண்டு இருந்தாள் பூங்குழலி.

வகுப்பு முடிந்த பின்பும், கணினி வகுப்புக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதே அவள் தனியாக வர காரணமாக அமைந்தது.



மிதிவண்டி, சாலையில் போய்க் கொண்டிருந்தாலும் அவளுடைய எண்ணங்கள், வீட்டிற்கு போனவுடன் மறுபடி டியூஷனுக்கு (பயிற்சி மையம்) எப்போது போவது என்று எண்ணியவாறே மிதி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தன.

ஒரு இறக்கமான வளைவான திருப்பத்தில், அவளுடைய பாதையையும் திருப்ப வேண்டி இருந்தது. அங்கே சாலை போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், மேற்கொண்டு அதே சாலையில் பயணம் தொடர போதுமான வசதி அப்போது செய்யப்பட்டிருக்கவில்லை. ஏற்கனவே நேரம் அதிகமாகி விட்டபடியால், சற்றும் யோசிக்காமல் காட்டு வழிப் பாதையை தேர்ந்து எடுத்தாள் பூங்குழலி.



இன்று அவசர அவசரமாக டியூஷன் செல்ல காரணம், கடைசியாக டியூசனில் நடந்த பரிட்சையில் மதிப்பெண் தாள் இன்று தருவதே ஆகும். பூங்குழலியும் நன்கு படிக்கும் பெண் தான் இருந்தாலும்,

அவள் மீது அவளுக்கே நம்பிக்கை இல்லை. ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு என்னதான் பதில் தெரிந்து இருந்தாலும், ஒரு வேளை தப்பாகி விட்டாள் மற்றவர்கள் சிரித்து விடுவார்களோ என்று எண்ணியே பதில் சொல்லாமல் அமைதியாக இருந்து விடுவாள். இது போன்ற காரணங்களினால், நன்கு படிக்கும் திறன் இருந்தும், ஒரு சராசரி மாணவியாக படித்து வந்தாள் பூங்குழலி. இன்று டியூசனில் கொடுக்கும் வினாத்தாளில் நல்ல மதிப்பெண் எடுத்து விட்டால் அதே போன்று வரும் அரையாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து விடலாம். இதனால் முழு ஆண்டு தேர்வு எந்த வித பயம் இல்லாமல் எதிர்கொள்ள முடியும்.



இவ்வாறு எண்ணிக்கொண்டே மிதி வண்டியை செலுத்தியவள், மிதிவண்டியின் வேகம் குறைவதை கவனித்தாள். முன்பக்க சக்கரத்தில் காற்று இல்லை என்பதை உணர்ந்தாள்.

அவள் அப்பொழுது தான் மற்றொன்றையும் உணர்ந்தால் தான் மட்டும் இரவில் தனியாக ஒரு காட்டு வழியில் பயணித்து கொண்டிருப்பதை.

இரவின் தனிமை அவள் மனதில் ஒரு பயத்தை உண்டாக்கியது.நம்மைச் சுற்றி ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று தெரிந்தால் நம் மனது ஒரு சின்ன பயத்திற்கு உண்டாகும் அல்லவா, அதே போன்று ஒரு பதட்டமான பயம் அவளிடம் தோன்றியது.என்னவோ தெரியவில்லை அன்று நிலவும் கூட மேகங்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு வெளிவர முடியாமல் இருந்தது அவளை போல.



அவளுடைய கண்கள் அந்த இருட்டான பாதையில் தன் பயணத்தைத் தொடர மெல்ல மெல்ல பழகிக் கொண்டு இருந்தன. தயங்கியவாறே தன் பயணத்தைத் தொடர்ந்தாலும் இந்த காட்டுப் பகுதியில் நடந்த ஒரு சில சம்பவங்கள் அவளுக்கு தயக்கத்தை உண்டு பண்ணியது. இப்போது பயந்து என்ன பயன் நாம் கணினி முன்பு அதிக நேரம் செலவிடும் போது இதை நாம் யோசித்து இருக்க வேண்டும் என்று அவளை அவளே சமாதானப் படுத்திக்கொண்டாள்.இப்படி யோசித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கும் போது ஒரு சிறிய கட்டிடம் புலப்படுகிறது.



அது அவளுக்கு நன்கு தெரிந்த மலைவாழ் மக்களின் சிறு பிள்ளைகள் படிக்கும் திண்ணைப்பள்ளி தான்.ஆனால், இப்போது அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். கொஞ்சம் நாட்களுக்கு முன்பு அங்கு உறங்கிக்கொண்டிருந்த நபரை சிறுத்தை இழுத்துச் சென்றது இவளுக்கு ஞாபகம் வந்தது.சற்று தூரம் நடந்து வந்ததில், இவளுடைய மனதுக்கும் உடலுக்கும் சற்று ஓய்வு தேவைப்பட்டது.

மிதி வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு அந்த பள்ளியின் திண்ணையில் சற்று ஓரத்தில் அமர்ந்து இருந்தாள். விலங்குகள் நடமாட்டம் இருக்க வாய்ப்பு இருக்கும் என்பதால் அவளுடைய மூச்சுகாற்று கூட சற்று மெல்ல இருந்தது.

இப்போது அவளுடைய மனதில் இரண்டு வழிகள் தோன்றின, ஒன்று யாராவது இந்தப் பக்கம் வந்தால் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பது, மற்றொன்று சிறிது ஓய்வுக்குப் பின் நாமே முன்னோக்கிச் செல்வது.அவள் எதிர்பார்த்தது போல் சற்று நேரத்தில், தூரத்தில் ஒரு ஒளி தெரிந்தது.அந்த ஒளியானது அங்குள்ள பாதைகளுக்கு ஏற்றவாறு மேலும் / கீழும்,ஏறி,/ இறங்கி வந்து கொண்டிருந்தது.யாரோ ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கிறார் அருகில் வரும்போது அவரை அழைத்து அவரின் உதவியுடன் இந்த காட்டுப் பகுதியை கடந்து விடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தாள். இருசக்கர வாகனம் அருகில் வர வர அதில் உள்ள நபரை அழைப்பதற்கு தயாரானவள், சட்டென்று மூர்ச்சையாகிக் கீழே விழுந்தாள் அதே இடத்தில்.

எவ்வளவு நேரம் ஆனது என்று தெரியவில்லை, அவளுடைய வேர்வை துளிகளே அவளை எழுப்பி விட்டது போல் உடம்பு நடுங்கியவாறு மெல்ல கண் திறந்து பார்த்தாள். அவள் கண்ட காட்சி ஞாபகம் வரவே மறுபடியும் அவளுக்கு பயத்தை உண்டு பண்ணியது.இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நபரை, ஒரு சிறுத்தை பாய்ந்து தாக்கி இழுத்துச் சென்றதைப் பார்த்ததால், பூங்குழலி க்கு இந்த நிலை ஏற்பட்டது.அவளுடைய உடம்பின் நடுக்கங்கள் இன்னும் குறையவில்லை.



அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை,இன்னும் இங்கிருந்தால் ஆபத்து என்பதை மட்டும் உணர்ந்தாள்.உடனடியாக தன்னுடைய மிதிவண்டியை எடுத்துக்கொண்டு விரைந்தாள்.ஏற்கனவே பழுதுபட்டதினாலோ அல்லது இவளது பதட்டத்தினாலோ வேகமாக செல்ல இயலவில்லை.அதேசமயம் பிள்ளை இன்னும் வீடு வந்து சேரவில்லை என்று,எல்லா இடங்களிலும் பெற்றோர் தேட ஆரம்பித்துவிட்டனர்.அவர்கள் தேடும் போது சாலை பணி நடைபெறும் இடத்தில் இரு சக்கர வாகனங்கள் சென்றுவர ஒரு சிறிய பாதை அமைக்கப்பட்டு இருந்ததால், அவர்களால் தன் மகள் காட்டு வழியில் போயிருப்பதை யூகிக்க முடியவில்லை.தேடும் பணியில் பெற்றோர்கள் மட்டும் இல்லாமல் உறவின்முறை ஆட்களும் தேடிக் கொண்டிருந்தனர்.

அதில் பூங்குழலியின் அண்ணன் முறை ஒருவன் இவ்வாறுதான் காட்டு வழியில் வந்து இருப்பதை உணர்ந்தான். அவன் மட்டும் அந்த காட்டு வழியில் போய் தேட ஆரம்பித்த பொழுது, சற்று தூரத்தில் ஒரு இரு சக்கர வாகனம் கேட்பாரற்று கிடந்ததை பார்த்தான்.அங்குள்ள தடயங்கள் அவனுக்கு நன்கு உணர்த்தின மறுபடியும் அங்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்பதை. மேலும் முன்னோக்கி சென்றால் தனக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என்று கருதி, தன் கையிலுள்ள டார்ச்லைட் உதவியுடன் பின் நோக்கி விரைந்தான்.மறுபடியும் அவன் அந்த இடத்திற்கு வரும்போது அவனுடன் ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் உடன் இருந்தனர், அவர்கள் கையில் தேவையான ஒரு சில ஆயுதங்களும் இருந்தன.அந்த இடத்திற்கு வரும் நபர்களில் பூங்குழலியின் அப்பாவும் ஒருவர்.ஒரு சில தடயங்களை பார்த்துவிட்டு,ஒவ்வொரு நபரும் அவர்களின் யூகத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு விதமாய் பேசினார்கள்.பூங்குழலியின் அப்பா எதுவும் பேசவில்லை என்றாலும் அவருடைய மனது, பல ஆயிரம் தடவைக்கு மேல் இறைவனை வேண்டிக் கொண்டு இருந்தது தன்னுடைய மகளுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்று. அவர்களில் இரண்டு பேர் போலீசிற்கு தகவல் கொடுத்து யார் இந்த சம்பவத்திற்கு உள்ளானார்கள் என்பதை விசாரிக்கவும் மற்ற நான்கு பேர் முன்னோக்கி சென்று பூங்குழலி யை தேடவும் ஆயத்தமாயினர்.

இதற்கிடையில் முன்னே சென்ற பூங்குழலிக்கு அவள் எதிர்பார்த்தது போல் ஒரு ஆபத்து காத்திருந்தது.அவள் என்னதான் பதட்டத்துடன் சென்று கொண்டிருந்தாலும் அவளுடைய புலன்கள் மிகக் கூர்மையாக செயல்பட்டன.அவளின் இடது புறத்தில் கர்ஜனையுடன் கூடிய ஏதோ ஒன்று அவளை தாக்க வருவதாக தெரிந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் துரிதமாக செயல்பட்டதினால், அந்தக் கொடிய மிருகத்தின் தாக்குதலில் இருந்து ஒரு நிமிடம் தப்பித்தாள்.என்னதான் அந்தக் மிருகத்திடம் இருந்து தப்பித்தாலும், அவள் அந்த மிதி வண்டியில் இருந்து கீழே விழுந்து நிலைகுலைந்து போயிருந்தாள். இதனால் அவளை அறியாமல் அவளே கூச்சலிட ஆரம்பித்தாள்.இந்தக் கூச்சல் மிருகத்திற்கு மட்டும் உதவியாக அமைந்து விடவில்லை அவளை தேடி உதவிக்கு வருபவர்களுக்கும், வசதியாக அமைந்தது.



இந்த கூச்சலை கேட்ட பூங்குழலியின் அப்பா, அவரும் சத்தம் போட்டுக்கொண்டே, ஓடோடி வந்தார். சத்தம் வந்த திசை நோக்கி. எப்படியாவது தன் இரையை அடைந்துவிட வேண்டும் என்று பாய்ந்த அந்த சிறுத்தையின் மீது, அந்த சமயத்தில் கையில் சிக்கிய ஏதோ ஒன்றை எடுத்து அந்த சிறுத்தையின் மீது பலமாக தாக்கினால் பூங்குழலி. அந்த பலத்த அடியிலிருந்து சிறுத்தை எழ முயலும் போதே, பூங்குழலியின் அப்பா மற்றும் உடன் வந்தவர்கள் அங்கே வந்துவிட்டனர். அப்பாவைப் பார்த்த அந்த நொடியில் பூங்குழலி மேலும் கதறி அழுது விட்டாள். உடன் வந்து இருந்தவர்களின் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிறுத்தை தென்பட்டாலும், அது அவர்களை தாக்காமல் அப்படியே சென்று விட்டது.



தன் தந்தையின் மார்போடு அவள் தலை சாய்ந்த பின் அவளின் மூச்சுக் காற்று சற்றே நிலையாயிற்று.அப்பொழுதுதான் அவள் கவனித்தாள் கடைசி நொடியில் தான் பயன்படுத்திய ஆயுதத்தை. அது நீளம் குறைவான, அதே சமயத்தில் தடிமன் அதிகமான இரும்பு கம்பி ஆகும்.

கடைசி நிமிடத்தில் அந்த பொருள் கிடைத்தது, தெய்வத்தின் அருளோ அல்லது எதர்ச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை. எதுவாயினும் தற்போது பூங்குழலி காப்பாற்றப்பட்டு விட்டாள்.



"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்ச்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்".



என்ற வள்ளுவனின் சொல்லுக்கேற்ப தன் முயற்சியின் மூலமே தன்னை மீட்டு எடுத்தாள் என்பது அவளின் கூற்றாக தன் மகளுக்கு தான், பயத்தை வென்றெடுத்த நிகழ்வை தன் சிறு மகளுக்கு எடுத்துரைத்தாள்.



பூங்குழலி, மிருகத்திடம் இருந்து தப்பித்தது மகிழ்ச்சி அளித்தாலும், இவளை போன்று பல சிறுமிகள் கொடிய மிருகத்திடம் இருந்து இன்னும் தப்பிக்க முடியவில்லை என்பதே இந்த உலகின் நிதர்சனமான உண்மை.



💥முற்றும்💥



***
நன்றி
 

Sathish

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2021
1
1
3
Karaikudi
எழுத்தின் நடை கதை நடக்கும் களத்திற்கே நம்மை கொண்டுசெல்கிறது .
முறம் என்ற குறீயிடு மூலம் தற்கால பெண்கள் மனம் தளராமல் கொடிய காலத்தில் எவ்வாறு தங்களை தற்காத்து கொள்ளவேண்டும் என்று ஒரு சிறு நிகழ்வின் மூலம் கதை சொல்லியது மிக அருமை.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் !
 
  • Love
Reactions: Mari

Mari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2021
1
0
1
Puliyangudi
Fantastic lines... Too much involved while reading each lines. thanks and keep going....