இராவணனின் ராஜ்ஜியம்….
நாயகன் …. ஆதிஜித்
நாயகி…. ஆருத்ரா
அத்தியாயம்…1
கணபதி துதி…
"நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந்த திரிகர்த்த
தஞ்சத் தருள்சண் முகனுக் முயல்வார்கள்
செய் சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரஆனைபதம் பணிவாம்"….
இன்று அவளுக்கு நினைவு நாள்….
பூஜையறையில் இருக்கும் அவளின் படத்திற்கு பொட்டு வைத்து அவளுக்குப் பிடித்த செண்பகப் பூவைச் சூடினான்.
பூவின் வாசம் பூஜை அறையை நிரம்பினாலும் அதில் அவளின் வாசனை தான் அவன் நாசி உணர்ந்தது.
அவனின் அறையில் கூட அவளின் கால் கொலுசின் ஒலி தன் செவிகளைத் தீண்டிச் செல்கிறது.
குளியலறையில் கண்ணாடியில் ஒட்டப் பட்டிருக்கும் சிகப்பு பொட்டுகள் பௌர்ணமியின் வட்டமாக அவனுள்.
அவளின் ஆடைகள் இருக்கும் கப்போர்டு திறந்தாலே அவளுக்குப் பிடித்த வண்ணங்கள் அத்தனையும் வரிசையாக வீற்றிருக்கும்.
டிரேசிங் டேபிளில் அவள் வைக்கும் வண்ண வண்ண பொட்டு அட்டைகள் கையில் அணியும் கண்ணாடி வளையல்களோ பல வண்ணங்களோடு அணி வகிக்கும்.
அவனைச் சுற்றி எப்போதும் சுழலும் இயந்திரம் அவளின் சுவாச காற்றே. அதில் தான் தினம் தினம் உயிர்ப்பித்து உயிர் வாழ்கிறான்.
பூஜை அறையிலோ தினமும் விட இன்று அவளின் நிழல் படம் புன்னகையுடன் தன்னை உற்றுப் பார்ப்பதைப் போல ஒரு பிம்பத்தை உண்டாக்கியது ஆதிஜித்க்கு.
நிழல் பிம்பத்திற்கும் உயிர் இல்லை
நினைவுகள் மட்டும் உயிரோடு உரையாடிக் கொண்டிருக்கிறது ....
அவனின் உயிர் அவளாகிப் போக அதுவோ காற்றில் கரைந்து அவனையே சுற்றிக் கொண்டிருக்கிறது தொலைந்து போன நினைவுகளாக….
இருவர் மனங்களின் ஒளிர்ந்த காதலின் தீபச் சுடரின்
சிதறல்களாக மிளிர்கிறது
அவளின் விழி வீச்சின் மின்னலில் அவனின் இதயக் கூட்டில் இன்று வரை…
நேரம் காலம் இல்லாமல் அவளின் நினைவுகள் வாட்டி எடுத்துக் கொண்டிருக்க அவளின் மறுபிம்பமாக ஆதினி ‘’ப்பா’’ எனக் கூப்பிட்டுக் கொண்டே அங்கே வந்தாள் ….
பத்து வயது முடிந்து பதினொன்று தொடங்கியது இன்று தான். தாயின் கருவறையில் அழகாக உருவான கரு வெளியே வரும் நேரம் இறைவனின் பாதங்களைச் சரணயடைந்து விட்டது அவனின் உயிரான அவளின் உயிர்.
பச்சிளங்குழந்தையின் அழுக் குரல் ஒரு பக்கம் காதல் மனைவியின் மறைவு ஒரு பக்கம் என அவனின் அவஸ்தைகளும் துயரங்களையும் துன்பங்களையும் வார்த்தைகளால் எழுதிட முடியாது. அந்தளவுக்கு அவனின் உயிரோடு தானும் போய்யிட வேண்டும் என நினைக்கும் அளவுக்கு அவன் மனம் துன்பத்தில் ஆழ்ந்திருந்திருந்தது.
அதன்பின் நினைத்துக் கொள்வதற்கும் நினைத்துக் கொள்வதை நினைவுபடுத்துவதற்கும்
நித்தம் நிகழ்வினை
நடந்தேறி கொண்டே தான்
இருக்கிறது அவனின் வாழ்வில் அவளின் சுவடுகள்.
பூஜையறைக்குள் வந்த ஆதினி தாயின் நிழல் படத்தை உற்றுப் பார்த்துவிட்டுக் கண்ணை மூடி ‘ம்மா என் முகத்தைப் பார்க்கக் கூடாதுனு நான் பிறந்தவுடனே என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டிங்களாமா’…. என மனதிற்குள் வினா எழுப்பி அதற்கான விடை கிடைக்காமல் தவிக்கும் குழந்தை தான் ஆதினி.
அப்பாவும் மகளும் நிழல் படத்தையே பார்க்க அதனுள் இருந்த உருவம் அவர்களை எப்போது போலப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.
பூஜையறையை விட்டு வெளியே வந்த இருவரும் டைனிங் டேபிளுக்குப் போனதும் அங்கே வேலை செய்யும் பொன்னம்மாள் இருவருக்கும் உணவினை எடுத்து வைத்தார்.
ஆதிஜித் மகளின் தட்டில் எல்லாம் இருக்கா அவள் சாப்பிடுகிறாளா என்ற கவனம் மட்டுமே இருக்க… ஆதினி ‘’ப்பா’’ என அழைத்தாலும் பார்வையாலே என்னவென்று கேட்பது மட்டுமே?.
மகள் சொன்னதும் அதை வாங்கிக் கொடுப்பதும் குழந்தை அருகில் வந்தால் ‘பொன்னம்மாள்’ என அழைத்துக் கண் காட்ட அவர் ஆதினியை தூக்கிக் கொண்டு விளையாட்டு காட்ட போய்விடுவார்.
மகளைத் தூக்கிக் கொஞ்சவோ பேசவோ விளையாடுவோ என எதுவும் செய்யாமல் ஊமை போல நடந்து கொள்ளும் ஆதிஜித்வின் பாசத்திற்கு ஏங்கும் சின்னந்சிறு பறவை தான் ஆதினி.
மகள் அழைக்கும் குரலுக்குத் தகுந்தபடி பார்வைகள் மட்டுமே மாறுபடும் அவனிடம்.
மற்றபடி அவன் வீட்டில் மௌனத்தை மட்டுமே கொண்டு தொலைந்த காலத்தின் நினைவுகளோடு அல்லாடிக் கொண்டிருக்கும் ஜீவன் தான்.
தாய் பாசமும் அறியாமல் தந்தையின் பாசமும் கிடைக்காமல் அக்குழந்தையோ வாய் இருந்தும் பேசாத குழந்தையாக இருந்தாள்.
பள்ளியில் மட்டுமே ஆசிரியர் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்வது விளையாட்டு நேரத்தில் தனியாக விளையாடுவதும் வீட்டிற்கு வந்தால் பொன்னம்மாள் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டு விட்டுத் தன் அறைக்குள் சென்று உட்கார்ந்து கொள்வாள்.
அங்கே அவள் படிப்பதா இல்லை டிவி பார்ப்பதா எல்லாம் ஆதினிக்கு என்ன தோன்றுகிறதோ? அதைச் செய்வாள். ஐந்து வயது வரை தான் பொன்னம்மாள் குளிக்க வைத்து உடை மாற்ற உதவினார். அதன்பின் தானாகவே எல்லாம் செய்யப் பழகிக் கொண்டாள் ஆதினி.
அப்பா அம்மாவின் நினைப்பில் வாழ்வதும் ஆதினிக்கோ ஒருவர் இல்லாமல் மற்றவர் இருந்தும் இல்லாமல் தவிக்கும் குழந்தை.
இன்று அவளுக்குப் பிறந்த நாள் என்று தெரிந்தாலும் அதைப் பெரிதாகக் கொண்டாடியது இல்லை இன்றுவரை ஆதிஜித்.
அவனின் ராஜ்ஜியத்தில் அவளுடையவளுக்கு மட்டுமே இடம். அதில் எவரும் இல்லை அவனைப் பொறுத்தவரை… தன் மனைவி மறைந்த தினத்தில் மகளின் பிறப்பு.….
பள்ளியில் ஆதினி வயது குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளை கொண்டாடுவதுமம் என் அம்மா எனக்குப் பிடித்த உணவைச் சமைத்துக் கொடுத்தார்.
அப்பா புது உடை கேக் பலூன் எனக் கதைகள் சொல்லச் சொல்லக் கொஞ்சம் விவரம் தெரிந்த வயதானதால் ஆதினிக்கு அந்த ஆசை இருக்கத் தான் செய்தது.
ஆனால் அதை அப்பாவிடம் எப்படிக் கேட்பது? எனத் தெரியாமல் தட்டிலிருந்த தோசையை சாப்பிட முடியாமல் திணறிக் கொண்டிருந்தது குழந்தை.
அதைக் கவனித்த பொன்னம்மாள் ‘’தம்பி’’ என அழைக்கச் சாப்பிட்ட படி என்ன? என்ற விழி உயர்த்தி நிமிர்ந்து பார்த்தான் ஆதிஜித்.
‘’இன்னிக்கு பாப்பாவுக்குப் பிறந்தநாள். அவங்க ஸ்கூலில் குழந்தைகள் பலூன் கேக் எல்லாம் வாங்கி வெட்டுவோம்…. உங்க வீட்டில் செய்யமாட்டாங்களா என ஆதினி பாப்பாவிடம் கேட்டு இருக்காங்க. பாப்பா அதை உங்களிடம் சொல்ல முடியாமல் பயப்படது’’ எனச் சொல்ல….
அவர் சொல்வதைக் கேட்டவன் ‘’சாயங்காலம் கேக் வாங்கி அனுப்பறேன். நீங்க என்ன செய்யணுமோ அதைச் செய்துக்கோங்க. நான் இரவு லேட்டாகத் தான் வருவேன்’’ என வெறுமையான குரலில் சொல்லி விட்டு ‘’பள்ளி வேன் சரியான நேரத்தில் வந்துவிடும். நீங்க ஏற்றி விட்டிருங்க’’ என்றவன் எழுந்து சென்று விட்டான் ஆதிஜித்.
ஆதினியின் கண்களில் கதக்கு நீர் வடிய உதடுகளைப் பிதுக்கி அழுகை வருவதைக் கண்ட பொன்னம்மாளுக்கு போனவளை நினைத்துக் குழந்தையை அனாதை போல் இருக்க வைக்கிறாறே இந்தச் தம்பியெனத் தோன்றினாலும் ‘’குட்டி கண்ணு’’ சாயங்காலம் கேக் வரும் வெட்டலாமெனச் சொல்லிச் சமாதானக் குரலில் ஆதினியிடம் பேச… ‘ம்ம்’ எனச் சொல்லிவிட்டு ஸ்கூல் பேக் எடுத்துக் கொண்டதும் லஞ்ச் பையைப் பொன்னமாள் எடுத்துக் கொண்டு வரவும் வீட்டின் வாசலில் ஸ்கூல் வேன் வந்ததும் ஏற்றிவிட்டார்.
ஆதிஜித் தன் காரில் கம்பெனியை நோக்கிச் செலுத்தியவனுக்கு மனமோ குற்றப்பத்திரிகை வாசிக்க அதனால் அவனுள் மனயுளைச்சலை உண்டாக்கியது.
ஒவ்வொரு முறையும் குழந்தை அன்பாகப் பாசமாகத் தன்னைத் தூக்க மாட்டாரா அப்பா எனத் தன்னை நோக்கி வரும்போது எல்லாம் மகளைத் தன்னிடம் நெருங்க விடாமல் தடுக்கும் நிழல் மனத்தை என்ன தான் செய்வது.
அவனால் குழந்தையின் முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லையே. பார்த்தாலே குழந்தை மேலே அதீத அன்பை மறைத்து வெறுப்பை வார்த்தையாலே கொட்டி விடுமோ என்ற பயம் தான் அதிகமாக இருக்கிறது.
ஆமாம்! மனைவியின் மறுபிம்பம் தான் மகள். அவளின் முகசாயலில் இருக்கும் குழந்தையைப் பார்க்கும்போது அவனுள் ஏனோ பெரிய அச்சம் உண்டாக அதனாலே அவன் குழந்தையை நெருங்குவும் விடமாட்டான். தானும் நெருங்கமாட்டான்.
இன்று கூடத் தன் கம்பெனிக்குச் செல்ல விருப்பமில்லை தான். ஆனால் முக்கியமான கிளைன்ட் மீட்டிங் இருப்பதாலே செல்ல வேண்டிய கட்டாயம்.
அவனின் நினைவுகள் ஒருபக்கம் மறுபக்கம் மகள் வேலையென ஓடிக் கொண்டிருப்பவனின் ஏக்கத்தை எவரிடமும் பகிராமல் தனக்குள்ளே அடக்கிக் கொண்டு பயணிக்கும் ஒருவனின் வாழ்வு எந்நேரம் திசை மாறும் என்பதை விதி தீர்மானித்து விட்டது.
இதே நாளில் அவனின் மனம் சுக்கு நூறாக உடைக்க காத்திருக்கிறாள் ஒருத்தியென அறியாமல் கம்பெனிக்குச் சென்றுகொண்டிருந்தான் ஆதிஜித்.
பள்ளி வேனில் எப்பவும் அமரும் சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த ஆதினிக்கு பள்ளிக்குச் செல்லவே விருப்பமில்லை.
எங்காயாவது இறங்கி சென்று விடலாமா எனத் தோன்றியது. அப்பாவுக்குத் தன் மேலே பாசமே இல்லை. அம்மாவும் இல்லை. தான் ஏன் இருக்கணும் தோன்ற தானும் செத்து விடலாமா… அப்படி போய்விட்டால் அப்பா தன் மேலே பாசமாக இருப்பாரா… எனப் பலவிதமாக யோசித்தது.
தப்பு தவறு அறியாத குழந்தையின் மனம் இன்று தவறாகச் சிந்திக்க தொடங்கியது. அது வயதின் மாற்றத்தால் உண்டானாதா… இல்லை உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றமா… மனநிலையில் புரியாத குழப்பமா என அதில் தோன்றும் உணர்வுகளைப் புரியாமல் தவித்து அன்பிற்கு ஏங்கும் பெண் குழந்தை….
ஆனால் தான் ஏன் இருக்கணும்? என்ற கேள்வி பெண்ணிடம் தோன்ற எப்பவும் யாருடனும் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருக்கும் ஆதினியின் மாற்றம் யாருக்கு தான் புரியும்.
தானும் அம்மாவிடம் செல்ல வேண்டும் என்றால் எப்படி போவது… எனக்குப் பயமாக இருக்கே. செத்துப் போனால் அம்மாவிடம் சென்று விடலாம். ஆனால் எப்படி செத்துப் போவது எனக் குழப்பங்களோடு தன் வகுப்பிற்கு சென்றாள் ஆதினி.
அன்று முழுவதும் யாருடன் பேசாமல் பள்ளியில் அமர்ந்திருந்த ஆதினி பாடத்தையும் கவனிக்கவில்லை. மதிய சாப்பாடும் சாப்பிடாமல் வகுப்பிலே டேபிளின் மேலே படுத்து விட்டாள்.
அன்று முழுவதும் ஆதினி எப்படி செத்துப் போவது? என்கிற கேள்விக்கு விடை தெரியாமலே மனதிலிருக்க அக்குழந்தைக்குள் சிறு மாற்றம் தோன்றியது உடலளவில்.
அடிவயிற்றில் சுரீர் என வலி தொடங்கி உடம்பே முறுக்கும் வலியை அனுபவித்தது. ஆனால் தனக்கு என்ன பண்ணினாலும் யாருகிட்டயும் சொல்லிப் பழக்கமில்லாதால் டேபிளில் படுத்து உறங்கிவிட்டாள் ஆதினி.
வகுப்பும் ஆரம்பிக்கும் நேரத்தில் உயரமும் அதற்குத் தகுந்த வாளிப்பான உடல்வாகுடன் கம்பீரமாக வகுப்பு அறைக்கு வந்தாள் ஆருத்ரா.
ஆசிரியர்களுக்குரிய மிடுக்கும் கூர்ந்த பார்வையுடன் வந்தவள்
ஆதினி டேபிளில் படுத்திருக்க அவளுக்கு ‘’என்னாச்சு’’ எனச் சிறு பதட்டத்துடன் பக்கத்திலிருந்த பிள்ளையிடம் கேட்டவளுக்குத் ‘’தலைவலினு சொன்னால் மிஸ்’’ எனச் சொன்னதும் நெற்றி கழுத்தைத் தொட்டு பார்க்க இதமான சூடு மட்டும் இருந்தாலும் முகம் வாடி இருக்கவும் தூங்கட்டும்னு அருகிலிருந்த பிள்ளையிடம் சொல்லிய ஆருத்ரா தன்னுடைய பாடமான அறிவியலை எடுத்தாள்.
மாலைவரை அப்படியே படுத்திருந்த ஆதினி ஸ்கூல் முடிந்தும் எந்திரிக்காமல் இருக்க மற்ற பிள்ளைகள் வேனில் ஆட்டோவில் செல்லச் சென்றுவிட்டனர்.
ஆதினியை தேடவோ யாருமில்லை.
அதனாலே ஆதினி வகுப்பில் இருந்ததை யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.
எப்பவும் அமைதியாகவே இருக்கும் பிள்ளை அவள். வேன் டிரைவர் ஆயாம்மா யாரும் ஆதினி வேனில் தான் இருப்பாளென நினைத்துக் கவனிக்காமல் விட்டு விட்டார்கள்.
அன்று எல்லா வகுப்பும் முடிந்து பிள்ளைகள் செல்வதைக் கவனித்துவிட்டு தன்னுடைய வகுப்பில் இன்னும் யாரும் இருக்கிறார்களா என ஒருமுறை சரிப்பார்க்க வந்தவள் ஆதினி இன்னும் எழுந்து கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுடன் பிள்ளையின் அருகே ஓடினாள் ஆருத்ரா.
தொடரும் .....