• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராவணனின் ராஜ்ஜியம்....2

MK23

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
11
10
13
Tamil nadu
அத்தியாயம் …..2

மாலை நேரத்தில் வேன் வரும் பாதையைப் பார்த்தப்படியே நின்றிருந்தாள் பொன்னம்மாள்.

வேன் அருகே வர மற்றப் பிள்ளைகள் இறங்கவும் ஆதினி இறங்காமல் இருக்க வேனினுள் எட்டிப் பார்த்தவர் “எங்க ஆதினி பாப்பா வரலயா? எனப் பயமும் பதட்டமுமாகக் கேட்டார் பொன்னம்மாள்.

அதன்பின் தான் டிரைவரும் ஆயாம்மாவும் ஆதினி அமர்ந்திருந்த இடம் காலியாக இருக்க…. அவள் வகுப்பு குழந்தைகளிடம் கேட்க…. “அவர்களோ மதியத்திலிருந்து தலைவலி டேபிளில் படுத்து விட்டாள். வேனில் வந்தாலோ வரலயானு எங்களுக்குத் தெரியவில்லை” எனச் சொல்லவும் பொன்னம்மாவுக்குக் கைகால் எல்லாம் பதறியது….

“வேன் டிரைவரை உடனே பள்ளிக்குப் போன் பண்ணுங்க” என்றவள் ஆதிஜித்க்கு போன் பண்ண வேகமாக வீட்டிற்கு ஓடினார் பொன்னம்மாள்.

ஆதிஜித் நம்பர்க்கு அழைத்தவரோ அது பிஸியாக இருக்குனு வரவும் திரும்பத் திரும்பக் கூப்பிட்டார்… அவனோ போனை சைலன்ட் மோட்டில் போட்டுவிட்டு காரைக் கடற்கரை வழியே செலுத்திக் காருக்குள் இருந்தபடியே ஓடியாடும் அலைகளை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ஆதிஜித்.

“ஜித் இந்த அலைகளைப் பாருங்களேன் எவ்வளவு துள்ளி துள்ளி கடற்கரை மண்ணோடு ஓடிப் பிடித்து விளையாடுங்க…. மண்ணுக்கும் அதுக்கும் போட்டியா இருக்குமோ… இல்லை இரண்டும் கணவன் மனைவியாக ஊடலாகி கணவன் அலையாக வந்து கட்டி அணைக்க ஓடி வர மண்ணோ பிணுங்கி நிற்க அலையோ வாரிச் சுருட்டி அணைத்துக் கொண்டு செல்ல மீண்டும் சண்டை போட ஜாலியாக விளையாடுது போல” என்ற குரல் அவனின் செவிகளைத் தீண்டிச் சென்றது.

எப்பவும் கடற்கரைக்கு வந்தால் இருவரின் பெயரையும் மண்ணில் எழுதி அதில் ஆர்டீன் வரைந்து அதற்குள் இருவரும் நிற்க அவர்களின் பாதங்களைத் தொட்டு தழுவிச் செல்லும் அலைகளில் மென்கூச்சரியலில் அவள் கலுக்கென்று சிரித்து அவனின் பாதங்கள்மேல் ஏறி நின்று கழுத்தைக் கட்டிக் கொள்ள அவனுக்கு இவ்வுலகமே மறந்து போகும்.

அவளின் ஒவ்வொரு செயலும் அவனையே மறக்க வைக்க அதற்கும் பொய் கோபமாக அவளுன் சண்டை போடுவான். “நீ என்னைத் தொட்டாலே என்னை மறந்திறேன். அந்தளவுக்கு என்னை மயக்கி வைத்திருக்கே” என ஊடலாகச் சொல்லியவனை பொய்யாக முறைத்து “என்னைத் தவிர எவ உங்களைத் தொடுவாள் … தொட விட்டு விடுவேனா நான்… நமக்குக்கு பெண் குழந்தையே பிறந்தாலும் எனக்குப் பின் தான் அவள் சொல்லிட்டேன்” என உதட்டைச் சுளிக்க அவளை அதரங்களோடு அவளையும் அணைத்துக் கொண்டாடினான் ஆதிஜித்.

அவளின் ஒவ்வொரு பேச்சும் செயலும் உணர்வும் அவனின் செவிகளில் தீண்டி இதயத்தைப் பதம் பார்த்துக் கொண்டே இருந்தது. அதுவும் இந்த நாள் அவனால் ஜீரணிக்க முடியாத நாள். ஏன்? என அவனால் அதைத் தாங்க முடியாமல் இருக்கிறானென இன்று வரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் மனதிற்குள் பதுக்கி வைத்திருக்கிறான்.அதன் ரகசியம் அவனுக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்தது.

நினைவு நாள் மட்டுமே எல்லாருக்கும் தெரியும். ஆனால் அது மட்டுமா… என நினைத்தவனுக்குப் பலமுறை அவன் அலைபேசி வைப்ரேட் பண்ணிக் கொண்டே இருக்க நினைவுலகத்திற்கு வந்தவன் சட்னு போனை எடுக்க அங்கிட்டு இருந்துப் பதறிய குரலில் சொல்லியதை கேட்டவன் விரைந்து வாகனத்தை எடுத்து வீட்டை நோக்கிச் சென்றான் ஆதிஜித்.

“ஆதினி ஆதினி” என எழுப்ப மெதுவாகக் கண்ணைத் திறக்கச் சிரமம்பட்டு திறந்த ஆதினி சுற்றும்முற்றும் விழிகளை அலைபாய்ந்து அடி வயிற்றை அழுத்திப் பிடித்து மீண்டும் சுருண்டு வலியுடன் முகத்தைச் சுருக்குவதைக் கண்ட ஆருத்ரா….

“ஆதினி உனக்கு என்ன பண்ணது? எழுந்திரு” எனக் குரலில் அழுத்துடன் சொல்லிதில் பயத்துடன் எழுந்து அமர்ந்த ஆதினிக்கு மிஸ் பார்த்ததும் பயப்பட….

“ஏன்? நீ வீட்டுக்குப் போகல… உனக்கு வேன் வந்திருக்குமே”…. எனக் கேட்டவருக்குப் பதில் சொல்லாமல் முகம் சுருக்கிக் கொண்டே “ரொம்ப வயிறு வலிக்குது மிஸ்” எனச் சொல்லவும்….

“மதியம் லஞ்ச் என்ன சாப்பிட்டே?…
ரொம்ப முடியவில்லை என்றால் முதல சொல்லணுமலே” என அதட்டிய குரலில் பேசிய ஆருத்ரா “எழுந்திரு… உன் வேன் போய்யிருக்கும். உன் வீட்டுக்குப் போன் பண்ணி வரச் சொல்லாம்” எனச் சொல்லிய ஆருத்ரா எப்பவும் பெற்றோர்களின் நம்பர் வகுப்பு ஆசிரியர் சார்பில் அவளிடம் இருக்கவும்…. உடனே போன் பண்ணினால் அங்கே ரிங் மட்டுமே போகுதே தவிர எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் பண்ணியவளோ… “ஷீட்….. என்ன இது? பிள்ளை வரல வீட்டிலிருக்கிறவங்களுக்கு அக்கறை இல்லை போல… எதுக்கு இந்த அலட்சியம்” எனக் கோபத்துடன் பேசிய ஆருத்ரா “நீ வா” என ஆதினியிடம் சொல்லியவள் மெதுவாக எழுந்த பெண்ணிற்கு உள்ளாடை நசநசவென்று இருக்க பயத்துடன் மிஸ்ஸை பார்த்தவளோ எழுந்து நிற்கும் போதே யூனிப்பார்ம் வெள்ளை நிறத்தில் இருக்கவும் … பின்பக்கம் சிகப்பாக மாறி இருப்பதைக் கண்டு “மிஸ் நான் செத்துவிடுவேனா” என அச்சத்துடன் கேட்டாள் ஆதினி.

அவள் கேட்டதைக் கேட்டவளோ “ஸ்டுப்பிட் என்ன பேச்சு இது?….. எனக் கேட்டு ஆதினியை ஆழ்ந்து பார்த்து அவளின் உடையைப் பார்க்க அது எதனால் புரிந்தது ஆருத்ராவுக்கு.

“மிஸ் நான் செத்துட்டா நல்லது தான். என் அம்மாகிட்டே போகலாமலே… ஆனால் எனக்குப் பயமாக இருக்கு. செத்துப் போகும்போது இப்படி தான் வலிக்குமா”…. எனக் கேட்டவளை முறைத்த ஆருத்ராவுக்கு மனதினுள் திக்கென்று இருந்தது.

என்ன பேச்சு ஆதினி?. உனக்கேன்? அம்மாவிடம் போகனும் சொல்லற… லூசு மாதிரி இப்படி பேசக் கூடாது… உனக்கு எதுவுமில்லை. இது நீ பெரிய பெண்ணாக ஆகிவிட்ட… ஏஜ் அட்டென் பண்ணினால் இப்படி தான் இருக்கும்” எனச் சொல்லி ஆதினின் உடல் மாற்றத்தைச் சொல்லியவள்…. “உனக்கு இதெல்லாம் உனக்கு வீட்டில் யாரும் சொன்னதில்லையா” எனக் கேட்டபடி “வா…. பாத்ரூம் கிளின் பண்ணிகிட்டு வீட்டுக்குப் போகலாம்” எனச் சொன்ன ஆருத்ராவுக்கு ஆதினியின் பேச்சால் அதிர்ந்து போய்யிருந்தாள்.

சின்னக் குழந்தைக்குச் செத்து போகணும் ஏன் தோனது? …. அப்படி அவளுள் இருக்கும் பிரச்சினை என்னவா இருக்கும் என மனதினுள் ஓடியது ஆருத்ராவுக்கு… அவளுள் இதயத்தில் சிறு துளியாக நெருப்பு துகள் சிதற ஆரம்பித்தது ஆருத்ராவுக்குள்.

ஆனாலும் ஆதினிக்கு தன் ஹேண்ட் பேக்கில் வைத்திருக்கும் நாப்கினை எடுத்து எப்படி வைக்கணும்? சொல்லிக் கொடுத்துவிட்டு அவளைப் பாத்ரூம்க்குள் அனுப்பிய ஆருத்ரா…. மீண்டும் ஆதினியின் வீட்டுக்கு அலைபேசி வாயிலாக அழைத்தாள். எந்தவித ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருக்கவும் …. “இப்படிப்பட்ட இடத்தில் வளர்ந்தால் செத்துப் போகணும் தோனத் தான் செய்யும். எப்படிப்பட்ட குடும்பமோ இக்குழந்தைக்கு தெரியல…. அம்மா இல்லையெனத் தெரியும். மற்ற விவரங்கள் எதுவும் தெரியாது ஆருத்ராவுக்கு. பேரன்ஸ் மீட்டிங் என்றாலும் யாரும் வரமாட்டார்கள். படிப்பிலும் சராசரியான அறுபது சதவீதம் வாங்கும் குழந்தை தான். அதனாலே இன்னும் கொஞ்சம் கவனமாகப் படி சொன்னால் போதும் நினைப்பாள் ஆருத்ரா.

பாத்ரூம் இருந்து வெளியே வந்த ஆதினியிடம் “சரியாக வைத்துக் கொண்டாயா” எனக் கேட்டவளுக்கு ‘ம்ம்’ …. எனச் சொல்லிய ஆதினியை வெளியே வாட்ச் மேன் கிட்டே “இவர்கள் வீட்டிலிருந்து கேட்டால் நான் கூட்டி வருகிறேன் எனச் சொல்லு” என்றவள் தன் வண்டியைப் பள்ளியிலே விட்டுட்டு ஒரு ஆட்டோ பிடித்து ஆதினியை அழைத்துக் கொண்டு அவளின் வீட்டிற்கு சென்றாள் ஆருத்ரா.

ஆதினியிடம் அட்ரஸை கேட்டு அவள் சொன்ன வழியில் சென்றவளோ வீட்டின் கேட் முன் நிற்கவும்….

ஆதினியோடு இறங்கியவள் “ஆட்டோகாரிடம் “கொஞ்ச நேரம் காத்திருங்க” எனச் சொல்லிவிட்டு திரும்ப அங்கே பதட்டத்துடன் பொன்னமா இவர்களை நெருங்கியவள் “ஆதினி பாப்பா நீயேன் வேன்ல வரல…. எனக்குப் பயமா போச்சு” என ஆதினியிடம் கேட்க…..

அதற்குப் பதில் சொல்லாமல் வலியோடு நின்று தன் மிஸ்ஸை பார்க்கவும் “ஏம்மா வீட்டில் யாரும் இல்லையா”… என ஆருத்ரா கேட்கவும்….

“இல்லைங்க! நான் இந்த வீட்டில் வேலை செய்துக் கொண்டே பாப்பாவை பார்த்துக்குவேன். இன்னிக்கு வேன் வரும் நேரம் அங்கே தான் நின்றேன். ஆனால் வேனில் பாப்பா இல்லை. டிரைவர் ஆயாம்மாவைக் கேட்டால் தெரியல சொல்லறாங்க….. எனக்கு என்ன செய்வது தெரியாமல் இங்கே வீட்டிற்கு வந்தேன்” எனச் சொல்லவும்…

“ஆதினிக்கு அம்மா இல்லை தெரியும்… அவங்க அப்பாவும் போன் எடுக்கல… வேறு யாருமில்லையா வீட்டில். பாப்பா ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டா” எனச் சொன்னதும்….

"எனது பாப்பா வயசுக்கு வந்திருச்சா!…. என் கண்ணு!” எனச் சொல்லி ஆதினியின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சிய பொன்னம்மாள்….. “நீங்க யாரு?” என அப்பத் தான் ஆருத்ராவை பற்றிக் கேட்டார்.

“நான் அவளின் வகுப்பு மிஸ். மதியத்திலிருந்து வயறு வலிக்கது சொல்லித் தூங்கி விட்டாள். ஸ்கூல் விட்டதும் அவளுக்குத் தெரியல…. நான் கிளாஸ் செக் பண்ணப் போகும்போது இவள் தூங்கிட்டே இருக்கவும் நானே அழைத்து வந்தேன்… இவளோட அப்பாவுக்குப் போன் பண்ணி உடனே வரச் சொல்லுங்க” என்றவள் “ஆட்டோக்கார் நீங்கக் கிளம்புங்கள். நான் வருவதற்கு கொஞ்ச நேரம் ஆகும்” எனச் சொல்லிவிட்டு ஆதினியோடு அவள் வீட்டிற்குள் நுழைந்தாள் ஆருத்ரா.

உள்ளே அவர்களுடன் சென்ற பொன்னம்மாள் ஆதிஜித்க்கு போன் பண்ணி ஆதினி விஷயத்தைச் சொல்லிச் “சீக்கிரம் வாங்க தம்பி” எனச் சொல்லவும் அவனும் விரைவில் வீட்டுக்கு வந்தான்.

அதற்குள் ஆதினியை குளிக்கச் சொல்லி உடை மாற்றிவிட்டு அவளுக்குப் பாலும் பழமும் கொடுத்துச் சாப்பிட வைத்தாள் ஆருத்ரா.

என்னவோ ஆதினியிடம் பேசியதிலிருந்து அவளுக்கு மனதிற்குள் படபடப்பாக இருந்தது. அவளைத் தனியாக விடத் தைரியமாக இல்லாமல் ஆதிஜித் வரும்வரை காத்திருந்தவள் அவனிடம் பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்து ஆதினியோடு சின்ன சின்னக் கேள்விகளைக் கேட்டபடி அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.

சிறு குழந்தையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத மனிதனின் மேலே அளவுக்கு அதிகமாகக் கோபமும் இருந்தது.

ஆதிஜித் விரைந்து தன் காரைச் செலுத்தியவனுக்கு கைகள் நடுங்கியது. பொன்னம்மாள் சொன்னா விஷயத்தைக் கேட்டதும் அவனுள் பயவுணர்வு அதிகமாகிவிட்டது. தன் மனைவி இருந்திருந்தால் இந்தளவு பயமிருந்திருக்காதே…..

அவள் இல்லாமல் இனி ஆதினியை எப்படி என்னால் தனியாகக் கவனித்துக் கொள்ள முடியும்? என யோசனையோடு இருந்தவன் தன் மனைவியின் கனவான அவள் பேசிய வார்த்தைகள் ஞாபகம் வந்தது.

“கர்ப்பமாக இருக்கும்போது பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைக்க வேண்டும் … அவளுக்கான உடைகள் முதல் நகைகள்வரை சேர்ப்பதும்… வயதுக்கு வந்தால் நாம் விசேஷமாகச் செய்யணும் ஜித். நம் குழந்தைக்குப் பிடித்த மாதிரி டிரஸ் வாங்கித் தரணும்… விதவிதமாக அலங்காரம் பண்ணி நிறைய போட்டோ எடுக்கணும் ஜித். அவளுக்கு எந்தக் குறையும் இல்லாமல் கண்ணுக்குள் வைத்துப் பாதுக்காக்கணும்”… என அவளின் ஆசைகளை அடுக்கியவள் விட்டுட்டு போவாளென அவன் நினைத்தா பார்த்தான். “என்னை ஏண்டி விட்டுட்டு போன… நான் எப்படி இனி நம்ம குழந்தையைத் தனியாக வைத்துப் பார்த்துக் கொள்வேன்… நீ வந்து விடமுடியாத தூரத்திற்கு செல்லும்போதே எங்களையும் கூட்டிட்டு போய்யிருக்கலாமலே”….. எனப் புலம்பியபடி வண்டியை வீட்டின் முன் நிறுத்தியவன் அதிலிருந்து இறங்கி உள்ளே செல்ல…

அங்கே ஆருத்ராவின் அருகே அமர்ந்திருந்த மகளின் புன்னகை முகத்தைப் பார்த்ததும் அவனால் அதைக் காண கிடைக்காத அரிய நிகழ்வாகத் தன் மனதிற்குள் நிழல் படமாகப் பதிந்தது…

ஆதினிக்கு ஹான்சல் மற்றும் கிரெடல் என்று இரண்டு உடன்பிறப்புக் கதையை முகபாவங்களில் நடித்துக் காட்ட அதைக் கேட்டு முதலில் ஏனோதானோ என்ற இருந்தவள் அதன்பின் கதையை முழுவதும் கேட்டதும் சிரிக்க ஆரம்பித்தாள். அதைப் பார்த்த ஆருத்ரா மனமும் இலேசானது ….

மிஸ் சொல்லும் கதையைச் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருக்க யாரோ வரும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த ஆதினி அங்கே தன் அப்பா நிற்கவும் “ப்பா”… என அழைத்து அதற்கு மேலே பேச முடியாமல் தவித்த குழந்தையை முதல் முறையாக நெருங்க எண்ணினாலும் நெருங்க முடியாமல் தவித்து நின்றவனை ஆழ்ந்து பார்த்த ஆருத்ரா….

அங்கே இருந்த பொன்னம்மாவிடம் “ஆதினியை உள்ளே கூட்டிட்டு போய் அவள் கூடவே இருங்க” என அழுத்தமாகச் சொல்லியவள் “ஆதினி எதையும் யோசிக்காமல் ஜாலியாக இருக்கணும்… நான் நாளைக்கு உன்னைப் பார்க்க வரும்போது இப்படி சிரித்த மாதிரியே சந்தோஷமாக இருக்கணும்” என ஆருத்ரா சொல்லவும் அதைக் கேட்டுத் தலையாட்டிய ஆதினி உள்ளே சென்றதும்…

தன் முன் நிற்கும் அவனை நிமிர்ந்து கூர்மையான பார்வையுடன் பார்த்த “நீங்கத் தானே ஆதினி அப்பா …. ஒரு அவசரத்திற்க்கு கூடப் போன் எடுக்கல என்றால் என்ன அர்த்தம்?… உங்க பெண் மேலே அவ்வளவு தான் அக்கறையா…. அதுவும் இன்று” எனச் சொல்லிய ஆருத்ரா…. கோப பெருமூச்சுடன் “உங்கள் பெண் எப்படி சாகணும்? யோசிக்கிறாள்…. செத்துப் போவது எப்படினு கேட்கிறாள்?. இன்று பெரிய பெண்ணாக மாறியதை கூடத் தெரியாமல் வலியுடன் செத்துப் போனால் இப்படி தான் வலிக்குமா கேட்கிறாள்….. அவளுக்கு அவளின் அம்மாவிடம் போக வேண்டும் எனச் சொல்கிறாள்…. அவள் இப்படி சிந்திப்பதற்கு காரணம் நீங்கத் தானே. அவளும் உங்களுக்கு வேண்டாம் நினைச்சு தான் எப்படியோ போகட்டும் விட்டுட்டீங்களா”…. எனச் சினத்துடன் சீறினாள் ஆதிஜித்கிட்டே….

எனது என் பெண் என்னை விட்டுப் போகணும் நினைக்கிறாளா…
என அதிர்ந்து அதிர்ச்சியைத் தத்துயெடுத்தது அவனின் முகம்…

தொடரும்...
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
மகளின் எண்ணத்தைக் அறிந்த பிறகாவது ஆதி மாறுவானா? 🤔

நடுமண்டையில ஓங்கி அடிச்ச மாதிரி இத்தனை வருஷமா அவன் பண்ணிட்டிருந்த தப்பை புரிய வைக்கணும் ஆதிக்கு 👍

இனி என்ன பண்றான்னு பார்ப்போம் 😍