• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராவணனின் ராஜ்ஜியம்.....3

MK23

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
11
10
13
Tamil nadu
அத்தியாயம் …3

ஆட்டோவில் சென்று கொண்டிருந்த ஆருத்ராவுக்கு இதயமோ படபடவென்று துடித்தது.

யாரோ ஒரு குழந்தைக்காகப் பேசப் போனதற்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது.

அவனின் கேள்வியும் பேச்சும் அவளை நிலைகுலையே செய்யச் சட்டென்று வெளியேறியவள் இவனுக்கு ஒரு பெண்ணைப் பெற்று கொடுத்துப் போன மகராசியை நினைத்துப் பரிதாபமாக இருந்தது.

என்ன மனுசன் இவன்?. தன் பெண் சாகப் போறேன் சொல்கிறாள்! எனக் கேட்டு அதிர்ந்த மாதிரி முகம் இருக்கவும் தொடர்ந்து பேசியவளை என்னமோ வார்த்தைகளால் சுட்டெரித்து விட்டான் ஆதிஜித்.

பெரிய இவன் …. இவன் பெண்ணை வைத்து இவனைப் பிடிக்க வேணுமாக்கும்…. அப்படி என்ன அவசியம் எனக்கு? …. ஒருத்தர் அவங்க பெண்ணுக்காகப் பதறிப் பேசிக் கொண்டு சத்தமிடுகிறாளே என்ற உண்ர்வே இல்லாமல் சொல்லிவிட்டாயா…
கொண்டு வந்து விட்டதற்கு மிக்க நன்றி!. ஆனால் இதைக் காரணமாக வைத்து நாளைக்கும் இங்கே வந்து நிற்க வேண்டாம். என் பெண்ணைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும். உன் அறிவுரைகளைச் சுமந்து கொண்டு என்னை வந்து கொட்ட வேண்டாம். ஆதினி அவளோட மனநிலையை சொன்னாள். அதை எனக்கிட்ட சொல்லிட்டீங்க… அதோட நினைத்து எனக்கு எப்படி இருக்கணும் கிளாஸ் எடுக்க வேண்டாம். இனி என் பெண்ணை இப்படி பேசாமல் பார்த்துக்க என்ன செய்யணும் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்க கருத்து மூட்டைகளை என்னையும் சேர்த்து சுமக்க வைக்க வேண்டாம். நீங்க இப்ப வெளியே போகலாம்’’ என வாசலை நோக்கிக் கையைக் காமிக்க அதிலே அதிர்ந்து போனாள் ஆருத்ரா.

வீட்டுக்கு வந்தவளை வெளியே போ என்ற சைகையில் அவளின் ஈகோ தாக்க …. ‘ச்சீய் போடாங்க’ எனத் தேன்றவும் அவனை முறைத்துவிட்டு விரைந்து வெளியேறிவிட்டாள் ஆருத்ரா.

அதுக்கு மேலே அங்கே நிற்க அவளுக்கு என்ன மான ரோஷம் அற்றவளா என நினைத்தவள் அவனைக் கண்ட மேனிக்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தபடி வீட்டிற்குச் சென்றாள் ஆருத்ரா.

அவளின் குடும்பம் மிடில் கிளாஸ். இப்போது இருப்பது ஆறு வீடுள்ள ஸ்டோர் வீடு தான். அவளின் தந்தை சிறுவயதிலேயே இறந்து
விட அவள் அம்மா ரஞ்சனி தான் ஆருத்ரா அவளின் தம்பி விக்னேஷ்யை வீட்டிற்கு முன் இட்லிக் கடை போட்டுப் படிக்க வைத்தார். இவள் படித்தும் தனியார் பள்ளிக்கு வேலைக்குப் போகத் தம்பி இன்னும் படித்துக் கொண்டிருக்கிறான்.பொறியியல் நாலவது வருசம். அவன் முடித்ததும் வேலைக்குப் போய்விட்டால் குடும்ப கஷ்டம் தீர்ந்து விடும்.

அம்மாவிற்கும் சிறிதளவு ஓய்வு கிடைக்கும். இத்தனை வருஷமாக வைராக்கியமாகத் தன் பிள்ளைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார். மகனும் வேலைக்குப் போகத் தொடங்கினால் மகளுக்குத் திருமண பண்ணி அனுப்பி வைத்துவிடலாமென நினைத்துக் கொண்டிருக்கிறார்.

வீட்டிற்கு ஆட்டோவில் வந்து இறங்கிய ஆருத்ரா முகம் கோபத்தில் சிவந்து இருந்தாலும் தன் வீட்டை நோக்கி நடக்க அங்கே பக்கத்து வீட்டுகார்களில் பார்வை அவள்மீது வித்தியாசமாக இருக்க என்னமோ நடந்திருக்கிறது…. எனத் தோன்றவும் இன்றைய நாளுக்கு வரக் கூடியது இன்னும் முடியலயா என ஆயாசத்துடன் தன் வீட்டிற்குள் நுழைந்தாள் ஆருத்ரா.

எப்போதும் மகள் வரும் வரை வாசல் திண்ணையில் அமர்ந்திருக்கும் அம்மாவைக் காணாமல் உள்ளே நுழைய….

அங்கு அவளின் தம்பியும் அவனுடன் கூட ஒரு பெண் இருக்கவும் மறுபுறம் அம்மா அழுதபடி மகனைத் திட்டிக் கொண்டிருக்க என்னடா இது புது பிரச்சினை? என நினைத்தவளுக்குத் தலைவலி்யே வந்துவிட்டது.

‘’பாருடி உன் தம்பி பண்ணிய வேலையை …. படிக்க அனுப்பினால் கல்யாணம் பண்ணிகிட்டு வந்திருக்கான். இவனுக்காக நானும் நீயும் ஓடாகத் தேய்கிறோம் என்ற அக்கறை இருக்கா….. ராவு பகலா நான் அடுப்பில் வெந்து சாகறேன். நீ காலையில் பள்ளிக்குப் போக இரவில் ஆன்லைன் கிளாஸ்னு எதையோ செய்து சம்பாதிக்கிற. எல்லாம் யாருக்காக இவன் சீக்கிரம் படித்து முடித்து உன்னையை ஒருவன் கையில் பிடித்துக் கொடுப்பான் நினைச்சால் இப்படி பண்ணிகிட்டு வந்து நிற்கிறான்”…. என அழுது புலம்ப…

“ம்மா… சும்மா புலம்பிகிட்டு இருக்காதீங்க… எனக்குப் பிடிச்சது கல்யாணம் பண்ணிகிட்டோம். உனக்கு எங்களைப் பார்த்துக்கணும் அவசியமில்லை. கேம்பஸ்ல எனக்கும் இவளுக்கும் வேலை கிடைச்சிருச்சு. இன்னும் இரண்டே மாதம் தான். அப்பறம் நானும் இவளும் பெங்களூர் போய்விடுவோம். என்னால் உனக்கோ அக்காவுக்கோ சிரமம்த்தைக் கொடுக்கமாட்டேன். நான் வேலைக்குப் போனால் அக்காவிற்கு நல்ல மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”….. எனச் சொல்லிய விக்னேஷ்யை கண்டவளோ விரக்தியான சிரிப்பை உதிர்த்தவள்…

“உனக்கு அந்தச் சிரமம் வேண்டாம்… இப்பவும் உன்னையே நாங்க தான் பார்த்துக்கிறோம்… இப்ப இன்னொரு ஆள்….அவ்வளவு தான்” என்றவள் யாரு இவள் கூடக் கேட்காமல் “சரிடா அந்தப் பெண்ணை அந்த அறைக்குள் கூட்டிட்டு போ. அங்கிருந்த பாய் தலையணையை இங்கே ஹாலில் எடுத்துப் போட்டுவிடு. நானும் அம்மாவும் இங்கே படுத்துக்கிறோம்” எனச் சொல்லி முடித்தவளோ….

“ அம்மா எழுந்து மற்ற ஆகுகிற வேலையைப் பாருங்க” என அவரை அதட்டியவள் வெளியே இருந்த குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்து படுத்தவளுக்கு உள்ளமும் உடலும் களைப்பாக இருந்தது.

அன்றும் படுத்தவுடன் உறங்கியவள் எப்ப விடியும் பள்ளி நோக்கிப் போகலாமெனப் படுத்தவள் அடுத்த நாள் எழுந்ததும் பள்ளிக்குச் சென்று விட்டாள் ஆருத்ரா.

வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. தம்பியின் சுயநலமான போக்கும் அம்மாவின் தொனதொனவெனப் பேச்சால் அவளின் மனத்தை அலை கழிக்க நேரமே கிளம்பி வந்தவளுக்கு பள்ளியில் ஒன்று இரண்டு பேர் தான் இருந்தார்கள். காலை ஏழு மணிக்கே வந்தால் யார் இருப்பார்கள்? … சுத்தம் பண்ணுகிற ஆயா ஒவ்வொரு வகுப்பைக் கூட்டிவிடுவதை பார்த்தபடி மரத்தடியில் அமர்ந்து விட்டாள் ஆருத்ரா.

நேற்றிரவும் சாப்பில…. இப்பவும் காபி கூடக் குடிக்காமல் வந்தவளுக்கு சோர்வும் அதிகமாக இருக்க அப்படியே மரத்தடியில் தலை சாய்த்தபடி அமர்ந்திருந்தவளின் மனம் ரணமாக இருந்தது.

ஆனாலும் திடமாக எதாவது செய்யணும். தம்பியை இரண்டு மாதமாக இருந்தாலும் பக்கத்தில் வேறு வீடு பார்த்து வைத்து விட வேண்டும் என நினைத்தவளோ….
அதிகப்படியான செலவு தான் … சமாளித்துக் கொள்ளலாமென எண்ணியபடி உட்கார்ந்து இருக்க பள்ளியின் காம்பௌண்டுக்குள் ஒரு கார் வந்து நிற்கக் காலை நேரத்தில் யார் ?என விழிகளைத் திறந்தவள் இன்னும் அகல விரிந்தது அவளின் பார்வை.

ஆம்! அக்காரிலிருந்து இறங்கி வந்தது யார்? எனப் பார்த்தவள் இந்த நேரத்தில் இவனுக்கு என்ன வேலையென யோசிக்க அவளை நோக்கி வந்தது ஆதிஜித்.

அவனைப் பார்த்ததும் அவளுக்குக் கீர்னு கோபம் தலைகேற மௌன கோபத்துடன் அமர்ந்தே இருந்தவளோ அவளின் அருகே வந்தவன் ‘’உன்னைப் பார்க்கத்தான் இங்கே வந்தேன்’’ எனச் சொல்லியவன் குரலும் முகமும் களையிழந்து போய்யிருந்தது.

ஆனாலும் அவனின் முகம் இறுக்கத்தை அதிகமாக்கி இருக்க…. எதுக்குடா இவன் என்னைத் தேடி வந்திருக்கான்?…

நேற்று பேசக் கூடாத வார்த்தைகளைப் பேசியவன் இன்று தன்னையே தேடி வருவதைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது.

வெளியே போச்சொல்லியவன் மேலே ஆத்திரமுமம் வந்தது. நேற்று வீட்டில் நடந்த பிரச்சினை இவனோட பிரச்சினையெனப் பலவித டென்ஷனில் இருந்தவள் இப்போது அடுத்து என்ன வருமோ? என யோசிக்க இந்தக் கடவுளுக்கு என் மேலே என்ன காண்டு! …. ஒரு பிரச்சினை தீர்வதற்குள் அடுத்து அடுத்து… போதுமடா சாமி நினைக்க வைக்கிறீயே!… நான் இங்கேயே தான் இருக்கேன். ஒவ்வொரு பிரச்சினையா கொடு! என மனதில் புலம்பியவள் அவன் எதுக்கு வந்தான்? அவனே சொல்லி முடிக்கட்டும் என அமர்ந்தே இருந்தாள் ஆருத்ரா.

‘’உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்’’ மீண்டும் அழுத்தமாகச் சொன்னவனை பதில் சொல்லாமலே பார்ப்பவளிடம் முகத்தைக் காமிக்க முடியவில்லை அவனால்.

ஏனென்றால் அவனுக்கு அவளின் உதவி தேவையாக இருக்கே. அதற்காகத் தணிந்து போக வேண்டிதாக இருக்கு…. இல்லையென்றால் இவள் எல்லாம் ஒரு ஆள் தேடி வந்திருப்பானா…. எனத் தனக்குள்ளே கொந்தளித்தவனுக்கு… நேற்றிலிருந்து மனைவி ஞாபகம் கூடப் பின் தள்ளிப் போக மகளின் மனதின் காயமும் அதனால் அக்குழந்தை எடுத்த முடிவால் இரவு முழுவதும் மகள் இருந்த அறைக்குள்ளே காவல் காத்துக் கொண்டிருந்தான்.

அவள் சிறு பிள்ளைதனமாக எதாவது செய்துக் கொண்டால் என்ன பண்ணவது? என்ற பயம் அதிகமாக இருந்தது.

இப்போ தான் இருப்பதே அவளுக்காகத் தான் என்றாலும் தன் மனைவியின் நினைவுகளுக்கு மீறி மகளைப் பார்க்க ஆளைப் போட்டுவிட்டு தினசரி வேலைகளை ஏனோதானோ செய்துகொண்டிருந்தான். அதுவும் நேற்று மனைவியின் நினைவு நாள் வேறு. அதிலிருந்து மீள முடியாமல் தவித்தவனுக்கு மகள் பெரிய மனுஷியாக ஆகிவிட்டாளெனக் கேட்டதும் சந்தோஷம் படுவதா துக்கம் படுவதா எனப் புரியாமல் வந்தவனுக்கு ஆருத்ரா பேச்சு மேலும் அவனை மிருக மாக்கியதால் எடுத்து எறிந்து பேசி விட்டான் ஆதிஜித்.

ஆனால் காலையில் எழுந்ததுமே ஆதினி குளித்துவிட்டு அதன்பின் என்ன பண்ணவது? எனப் புரியாமல் தன் முகத்தைப் பார்க்கவும் தான் குழந்தையை நெருங்கிப் போனாலும் பதில் சொல்லாமல் மௌனத்தைக் கொண்டிருக்க அதன் உடலில் தோன்றும் மாற்றங்களைத் தன்னிடம் பகிர முடியாமல் தடுமாற்றம் கொள்கிறாளெனப் புரிந்தால் தான் இப்போது ஆருத்ராவை தேடி வந்தான்.

எப்படியும் எட்டு மணிக்குப் பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்திருவாங்க என நினைத்து வந்தவனுக்கு அங்கே மரத்தடியில் யாருமற்ற அனாதை போல முகம் வாடிச் சுருண்டு அமர்ந்திருந்தவளின் தோற்றம் அவனுள் ஏதோ செய்தது.

அதைவிட அவளின் பெயரால் தான் அவனுக்கு இன்னும் கோபம் …. எப்படி தன் மனைவியின் பெயரும் இவள் பெயரும் ஒன்றாக இருக்கு எனச் சின்னப் பிள்ளைகள் அடம்பண்ணுமே என் அம்மா எனக்கு மட்டும் தான் என்பதை போல அவனின் மனம் அடம் பண்ணியது.

தன் மனைவியின் பெயரில் இன்னொருத்தியா என்று தோன்றியதால் அவளைக் கோபத்துடன் அதிமாகவே பேசிவிட்டாலும் இப்போ அவளின் தயவு தேவையாக இருக்கேயென எண்ணி வந்தவன் ‘’நீ வீட்டுக்கு வா ஆரு’’ எனச் சொல்லியவனை அதிர்வுடன் பார்த்தாள் ஆருத்ரா.

‘’எனது ஆரு’’…. என அதிர்ந்து கேட்டவள் ‘’சாரி சாரி… வீட்டுக்கு வாங்க ஆருத்ரா. காலையிலிருந்து உங்களை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஆதினி’’ என்றவன் அதற்கு மேலே என்ன எப்படி சொல்வது எனப் புரியாமல் அவள் முகத்தைப் பார்த்தவன் ‘’எனக்கும் என்ன செய்வது தெரியல?…. வீட்டிலிருக்கும் பொன்னம்மாளுக்கும் தெரியல… எனத் தயக்கமாகச் சொன்னாலும் நீ வந்து தான் ஆக வேண்டும் என்கிற பார்வையில் கெஞ்சல் இல்லை.

என்னமோ கட்டிய பொண்டாட்டியை கூப்பிடுகிற உரிமையான குரல்…
அது ஏன்? எப்படி? அவனுள் வந்தது கேட்தால் தெரியாது…. ஆனால் அவள் வீட்டிற்கு வந்தே
ஆக வேண்டும். அது மட்டுமே அவனின் எண்ணம்….
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
பாவம் ஆருத்ரா 😢
எவ்வளவு பிரச்சினைகளை தான் எதிர்கொள்வாள்😢
சுயநலமான தம்பி😬

ஆதிக்கு தன் ஈகோவை விட்டு கீழிறங்க மனசில்ல... ஆனா அவன் கூப்பிட்டதும் அவன் பார்வையை புரிஞ்சு பின்னாடியே வரணும்னு நினைக்கிறானே🤔🧐

அவனோட மனைவியோட பேரை வேற யாரும் வெச்சிருக்கக்கூடாதா என்ன? 🙄🤔

அவளுக்கு அவனோட போக விருப்பமில்லைன்னாலும் ஆதினிக்காக போவாளா இருக்குமோ? 🤔

அடுத்த எபிக்கு வெயிட்டிங்❤️