அத்தியாயம்… 4
காரில் பின் பக்கம் ஏற முயன்றவளை “நான் உன் வீட்டு டிரைவர் இல்லை…. முன்பக்கம் ஏறு” எனச் சொல்லியவனை முறைத்தாள் ஆருத்ரா.
“கட்டிய பொண்டாட்டிகிட்டே பேசற மாதிரி பேச்செல்லாம் தூள் பறக்கது” என முணுமுணுத்துக் கொண்டே ஏறியவள் தனக்குரிய விடுமுறையை பள்ளிக்கு மெயில் அனுப்பிவிட்டு “போகும்போது மெடிக்கலில் வண்டியை நிறுத்துங்க” என்றாள் ஆருத்ரா.
“ஏன் என்ன ஆச்சு?…. உனக்கு எதாவது பண்ணுதா …. டாக்டர் கிட்டே போகலாமா” எனப் பதறியவனை வினோதமாகப் பார்த்தவளோ இவனுக்கு அடிப்படை அறிவு கூட இல்லையா … பொண்டாட்டிக்கு இதெல்லாம் வாங்கித் தந்திருக்க மாட்டானா என மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவள் “ஆதினிக்கு சில பொருட்கள் வாங்கணும்” எனச் சொல்லவும்….
‘ஓ… ஆமாமல அது தான் காலையில் என் முகத்தைப் பார்த்துக் கேட்க யோசித்ததோ’ என நினைத்தவனோ மெடிக்கல் அருகே நிற்க அவள் இறங்கிப் போய்த் தேவையான எல்லாமே வாங்கிட்டு வந்தவள் மீண்டும் வண்டியில் ஏறினாள் ஆருத்ரா.
அம்மாவுக்குச் சொல்லணுமலேயென யோசித்தவள் வீட்டுக்குப் போய்ச் சொல்லிக்கலாமென நினைத்துக் கொண்டே தன் அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் சொன்னதற்காக அவனின் வீட்டுக்குச் செல்ல இஷ்டமில்லை ஆருத்ராவுக்கு. ஆதினிக்காக மட்டுமே… என நினைத்தவள் நேற்று பேசியதற்கு இவன் முகத்திலே முழிக்கக் கூடாதுனு நினைத்தால் கடவுள் அப்படி எல்லாம் உன்னை விட்டுவிட மாட்டேன் எனச் சொல்வதைப் போல இருந்தது.
காரில் இருவருக்கிடையே மௌனமே குடியேறிந்தது. மகளுக்காக அவன் தன்னை மீறிய செயலாக இன்னொரு பெண்ணோடு உதவியை நாடி வந்தவனுக்குத் தன் மேலே அதீத கோபம் தான்.
‘நேற்று வீட்டை விட்டு வெளியே போச்சொல்லிவிட்டு இப்போ நீ வந்தே ஆகணும் அழைத்துப் போக வைத்த சூழ்நிலை கைதாக்கிய காலத்தின் மீதும் தன் மீதும் கோபம் தான்’.
வாழ்க்கை ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க விடாதா…. நேற்று மனைவியின் நினைவு நாள் மட்டுமா….. இல்லையே அவளை முதல் சந்திப்பே அதே தேதி திருமணம் நடந்ததும் அதே தேதி. அவள் உலகத்தை விட்டுச் சென்றதும் அதே தேதி. இப்போ மகள் பெரிய மனுஷியாகி இருப்பதும் அதே தேதி தான். ஒரே நாள் நடந்த நிகழ்வுகள் வருடம் முழுவதும் துரத்திக் கொண்டு இருக்கிறது. தினமும் வலியை அதிகமாக்கி கொண்டே போகிறது.
தன் மனத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆருத்ரா எதையோ கேட்கச் சட்னு புரியாமல் பேசியதைக் கவனிக்காமல் அவளைப் பார்த்தான் ஆதிஜித்.
“என்ன இன்னும் எதும் வாங்கணுமா” எனக் கேட்வனுக்கு “உங்க வீட்டில் பெரியவர்கள் உறவினர்கள் யாருமே இல்லையா…. இதற்கெல்லாம் வீட்டில் இருப்பவர்கள் சடங்குச் சம்பிரதாயம் செய்யவாங்களே” எனக் கேட்க அதில் முகம் மாறியவன்…
“அதைப் பற்றித் தெரிந்து என்ன பண்ணப் போற…. உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்யதால் போதும்” எனக் கடுகடுத்தவனை முறைத்தாள் ஆருத்ரா.
“நீங்க மனுசனே இல்ல தெரியுமா… அதனால் தான் உங்க பொண்ணு உலகத்தை விட்டே போகணும் நினைக்கது போல ”… என்றவளை முறைத்தவனோ…
“ஷட் அப்! நான் மனுஷன் இல்லை தான்… அதற்கு என்ன பண்ணலாம்?” என எகத்தாளமாகக் கேட்டான் ஆதிஜித்.
“உன் உதவி எனக்குத் தேவையில்லை. ஆனால் வீட்டிலிருக்கும் ஆதினிக்கு தேவை. அதற்காகத் தான் உன்னை அழைத்துப் போகிறேன். நீ தேவை இல்லாத விஷயங்களில் எல்லாம் தலையீடு செய்ய வேண்டாம்…. ஓவராக அட்வான்டேஜ் எடுத்துக்க வேண்டாம்” என முகத்தில் அடித்தமாதிரி கடுமையான குரலில் சொல்லியவனை முறைத்தவள் ….
“காரை நிறுத்துங்கள்!” எனக் கத்தினாள் ஆருத்ரா.
அவனின் சொல்ம்புகள் அவளின் இதயத்தில் பதம் பார்க்கக் குருதி வெள்ளம் கசிய தொடங்கியது.
“வண்டி எங்கயும் நிற்காது. நேராக வீட்டிற்குத் தான்” என அழுத்தமாகச் சொல்லியவனை முறைத்து….
“ இனி இப்படி எடுத்தெறிந்து நீங்கப் பேசினால் நானும் பேசுவேன். நான் உங்க வீட்டு வேலைகாரி இல்லை. இப்படி ஒருமையில் பேசி அதிகார பண்ண” எனச் சொல்லியவள்…
“இனி மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும் ஞாபகம் வைத்துக்கோங்க. நேற்று உங்க பெண் அழுது மனதில் இருக்கும் வலியைச் சொன்னதால் வீட்டில் கொண்டு வந்து விட்டேன். அவளின் மனத்தை உங்களுக்குப் புரிய வைக்கணும் நினைச்சு பேசியது. இப்போ நானே உங்க வீட்டுக்கு வரல… உங்களுக்கு என் தயவு தேவை. அதனால் தேடி வந்திருக்கீங்க. சும்மா இப்படி எதற்கெடுத்தாலும் குதர்க்கமாகப் பேசற வேலை வேண்டாம்” என எண்ணெய்யில் போட்ட அப்பளமாகப் பொரிந்தாள் ஆருத்ரா.
அவளின் பேச்சில் இருக்கும் நியாயங்கள் புரிந்தாலும் தன்னிடத்தை விட்டு இறங்கிப் போய் இவளிடம் பேச வைத்த காலத்தையும் மனதிற்குள் திட்டித் தீர்த்தான் ஆதிஜித்.
ஆனாலும் அவள் பேசுவதற்கு பதில் சொல்லவில்லை என்றால் அவன் ஆதிஜித் இல்லையே…..
“உன் திருவாயை வைத்துக் கொண்டு சும்மா வந்தால் நான் ஏன்மா பேசப் போறேன்” என்றவன் “அங்கே வீட்டுக்கு வருவதே ஆதினிக்காகத் தான் நீ புரிந்து கொண்டால் சரி தான்” என்றவன் கரங்களில் வண்டி சீறி பாய்ந்தது.
‘கடுவன் பூனை’ எனத் திட்டியவள் ஜன்னல் வழியே வெளியே பார்க்கத் தொடங்கி விட்டாள் ஆருத்ரா.
அவனின் மனமோ கொதிகலனாக இவளைப் பார்க்கும்போது எல்லாம் தோன்றவும் ஏன்? அப்படி தோனது. தான் யாருக்கு மரியாதை இல்லாமல் பேசியது இல்லை. ஆனால் இவளிடம் மட்டுமே வார்த்தைக்கு வார்த்தை மல்லு கட்டி கொண்டிருக்கிறேன் எனத் தன் போக்கில் சிந்தனையின் ஓட்டத்தைச் செலுத்தியவன் தன் வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தினான் ஆதிஜித்.
வேகமாகக் காரை விட்டு இறங்கியவள் வீட்டினுள் நுழைய முடியாமல் தயக்கத்துடன் நின்றவளை பின்னால் வந்தவன் “உள்ளே போ” என அழுத்தமாகச் சொல்ல இருக்கையில் அமர்ந்திருந்த ஆதினியோ “மிஸ்” என ஓடி வந்து கட்டிப்பிடித்தாள் ஆருத்ராவை….
தன்னைக் கட்டிப்பிடித்த ஆதினியை கண்டவள் தன்னருகே நின்றவனை ஏளனமாகப் பார்த்துச் செல்ல அவனுக்கும் அவளின் பார்வையை பார்த்து லேசாக முகத்தில் புன்னகை கோடுகள்.
உள்ளே வந்தவளோ ஆருத்ராவை தன்னயறைக்குள் அழைத்துச் சென்றவள் “காலையிலிருந்து நேற்று மாதிரியே இருக்கு மிஸ்” எனஆதினி சொல்லவவும்….
‘ம்ம்’ என்றவளோ “அது ஐந்து ஆறு நாட்கள் இருக்கத் தான் செய்யும். தினமும் குளித்து இதை வைத்துக் கொள்ளணும்.நேற்று எப்படி வைக்கணும் சொன்னல” என்றவளிடம் “ம்ம்… என் டிரஸ் இன்றும் இப்படி ஆகிருச்சே” எனக் காலையில் குளித்துப் போட்ட உடையிலும் இருக்க….
“ இன்னொரு முறை குளி ஆதினி” என்றவள் “பொன்னம்மாள் அம்மா வீட்டில் இருக்காங்களா” எனக் கேட்ட ஆருத்ராவுக்கு
“உள்ளே சமையலறையில் இருக்காங்க “என ஆதினி சொல்லவும்….
“இரு வரேன்” எனச் சமையலறைக்கு சென்றவள் “மஞ்சள் எடுத்துக் கொண்டு நீங்களும் வாங்க மா” என அவரையும் அழைக்க…. அவரோ “நீங்களேயே பார்த்துக்கோங்க மிஸ். என்ன சாப்பிட கொடுப்பது மற்றும் சொல்லுங்க. நான் செய்றேன்” எனச் சொல்லியவரிடம்…
“உளுந்து கஞ்சி” வைங்க எனச் சொல்லியவள் கூட “இடியாப்பம் தேங்காய் பால் செய்யுங்கள் … வயிற்றுக்கு இதமாக இருக்கும்” எனச் சொல்லிச் செல்கிறவளை அங்கிருந்து இருக்கையில் அமர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் ஆதிஜித். தன் மனைவி மட்டும் இப்ப வீட்டிலிருந்தால் வீடே அல்லோகபட்டிருக்கும் எனப் பெருமூச்சுடன் நினைத்தவன்…
பல வருசம் கழித்து இருளடைந்த வீட்டிற்கு வெளிச்சம் வந்து போல இருந்தது ஆருத்ராவின் வருகை. தனக்கு இப்படி மகளைக் கவனிக்கத் தெரியாதேயென நினைத்தவனின் எதிரே வந்த நின்றாள் ஆருத்ரா.
‘என்ன? புருவம் சுருக்கியவனிடம் “நாட்டு கோழி முட்டையும்….. அவளுக்குப் பிடித்த ஸ்வீட்ஸ் பூக்களும் வாங்கிக்கொள்ள. ஆதினிக்கு புது டிரஸ் ஒன்றை எடுத்து வாங்க” எனச் சொல்லிவிட்டு செல்கிறவளை…
‘எனது முட்டை வாங்கணுமா… நாட்டு கோழி முட்டை தான் வேணுமா… எனக்குத் தெரியாதே’ எனப் புலம்பி யோசித்தாலும் ‘என்ன மாதிரி புது டிரஸ் எடுக்கணும்’ எனப் புரியாமல் மகளுக்காகச் செய்து தானே ஆக வேண்டும் என நினைத்து எழுந்து மறுபடியும் வெளியே சென்றவனுக்கு ஏனோ இதமாக இருந்தது மனம்.
எப்பவும் தொலைந்த காலத்தோடு போராடிப் போராடிக் களைத்து போனவனுக்கு இன்று மகளின் தேவை அதற்காக ஆருத்ரா சொல்வதை வாங்கணும் எனச் செல்ல அவனின் மனம் நிகழ் காலத்தில் சஞ்சரித்தது.
ஆதினிக்கு தலையில் எண்ணெய் வைத்து மஞ்சள் தடவி குளிக்க வைத்து அவளுக்காக வாங்கி வந்த உடைகளைப் பார்த்ததும் பரவாயில்லையே சிடுமூஞ்சிக்கு சொல்லாமலே பட்டுப் பாவாடை டிரஸ் எடுத்து வந்திருக்கிறானேயென எண்ணியவள் அதை அணிவித்து தலையைக் காய வைத்து அழகாகப் பின்னல் போட்டுப் பூவை வைக்கக் கழுத்திலும் காதிலும் எப்பவும் பள்ளிக்கு அணியும் தோடு மெல்லிய செயின் இருக்கவும் திரும்ப அவனைத் தேடிப் போனாள் ஆருத்ரா.
“ஆதினிக்கு தங்கத்திலே செயினும் தோடும் இருந்தால் கொடுங்கள்” என்றவளை…
“ அதிகாரம் தூள் பறக்கது” எனச் சொல்லியவனோ…
“இது கூடத் தெரியாமலே தானே என்னை அழைத்து வந்தீங்க” எனச் சொல்லியவளை ஆழ்ந்து பார்த்தவன்… அவளின் உடையும் நனைந்தே இருந்தாலும் அதைப் பற்றி யோசிக்காமல் தன்னுடன் தர்க்கம் பண்ணிகிட்டு இருப்பவளை “இரு எடுத்து வரேன்” எனத் தன் அறைக்குள் சென்றான் ஆதிஜித்.
அங்கே மனைவியின் நகை லாக்கரில் இப்போதைக்கு அணிய சிம்பிளான அணிகலன்களை எடுத்து அவளிடம் கொடுத்தவன் “உன் உடையும் ஈரமாக இருக்கு. வேறு மாற்றிக்கொள்” எனச் சொல்லவும் …
“தேவையில்லை சார்…. இது காய்ந்துவிடும்” என அழுத்தமான குரலில் சொல்லியவள் அவன் கொடுத்ததை போட்டு அழகு பார்த்துவிட்டு ஆதினியை வெளியே அழைத்து வந்தாள் ஆருத்ரா.
தன் மகளை நிமிர்ந்து பார்த்தவனோ திகைத்துச் சட்னு எழுந்து நின்றவனுக்கு சரியாகக் கூட நிற்க முடியாமல் தடுமாறியவனிடம் “அப்பாவிடம் போய்க் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு ஆதினி” என ஆருத்ரா சொல்லவும்…
தன்னை நெருங்கும் மகளை இமை மூடினாலே மண்ணிலிருந்து மறைந்து விடுவாளோ எனத் தோன்ற அருகில் வந்த மகளை அணைத்து உச்சி மோர்ந்தவனுக்கு கைகால் எல்லாம் உதற ஆரம்பித்தது.
“ஆரு மற்றது என்ன செய்யணுமோ? அதை நீயே பாரு” எனச் சொல்லிச் செல்கிறவனை விசித்திரமாகப் பார்த்தாள் ஆருத்ரா.
அவனின் படபடப்பும் பதட்டமான முகமும் சட்னு அவனின் அறைக்குள் சென்ற வேகத்தைக் கண்டவளுக்கு பாவமாகவும் இருந்தது. மனைவி இருந்திருந்தால் இவன் அடுத்தவங்க உதவியை நாட மாட்டான். முழு நேரமும் மனைவி மட்டுமே சிந்திக்கும் அவனைப் பார்த்தவள் "அம்மா படம் எங்கே இருக்கு?" ஆதினியெனக் கேட்க…
அவளோ "பூஜையறையில் இருக்கிறது மிஸ் எனச் சொல்லவும்… நீ உள்ளே போகக் கூடாது. வெளியே இருந்தே விழுந்து கும்பிடு" எனச் சொல்லி ஆதினியை அழைத்துச் செல்ல
அங்கே நிழல் படமோ ஆருத்ராவை வெறித்துப் பார்த்த உணர்வினை தந்தது.