• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராவணனின் ராஜ்ஜியம்...5

MK23

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
11
10
13
Tamil nadu
அத்தியாயம் …5

ஆதிஜித் தன் அறைக்குள் நுழைந்தவன் தனக்குள் இருக்கும் தவிப்பினை தாங்கிட இயல முடியவில்லை. இதே மாதிரி தானே தன்னவளும் அலங்கார பண்ணிக் கொண்டு தன் எதிரில் வந்து நின்று கண் சிமிட்டுவாள் என்ற உணர்வு அவனை அலையாக வாரிச் சுருட்டிக் கொண்டது. தன் நினைவுகளோடு ஆழ்ந்தவன் அறையிலிருந்து வெளியே வரவே இல்லை. ஆனால் வெளியே பேச்சும் சிரிப்பும் களை கட்டியது அவனின் செவியைத் தீண்டிச் சென்றது.

ஆதினிக்கு அலங்காரம் பண்ணி அழகு பார்த்த ஆருத்ரா தன் அலைபேசி வாயிலாகப் பல படங்களைப் பல கோணங்களில் எடுத்தாள். ஒவ்வொரு படத்திலும் ஆதினியின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் சிரிப்பும் பார்த்த ஆருத்ராவுக்கு அத்தனை மகிழ்ச்சி.

என்னமோ அவளின் மனம் ஆதினியிடம் தானாகவே உரிமையை எடுத்துக் கொண்டது.

‘’மிஸ் மிஸ்’’ என அவளின் சேலையை பிடித்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தாள் ஆதினி.

இத்தனை வருஷத்தில் ஆதினியின் சிரிப்பொலி வீடு எங்கும் கேட்க அறைக்குள் இருந்தவனுக்கு பலவித மனநிலையில் தடுமாறியது.

மகளின் சிரிப்பை அவன் கண்டதில்லை. சின்னக் குழந்தையாக இருக்கும் போதுமே பொன்னம்மாள் தான் பார்த்துக் கொள்வார். மகளைத் தானும் நெருங்காமல் தன்னை அவளும் நெருங்காமல் விலக்கி வைத்தவனுக்கு குற்றயுணர்ச்சி அதிகமாகவே இருந்தது.

கடந்த காலத்தை நினைத்து நிகழ் காலத்தில் வாழும் மகளுக்குத் துரோகம் பண்ணுகிறோமோ என்கிற எண்ணமும் தோன்ற செத்துப் போகணும் என நினைக்கும் அளவுக்கு மனத்தை விட்டுட்டே ஆதினியின் மீது எந்தத் தவறும் இல்லையே. எல்லா தவறும் தன் மேலே தானேயென நினைத்தவன் அமைதியை கடைபிடித்து உள்ளேயே அமர்ந்திருந்தான் ஆதிஜித்.

‘’மிஸ் எனக்கு ஜிமிக்கி தோடு வேணும். நம்ம கிளாஸ் ராணி இருக்காளே…. அவள் போட்டிருந்த மாதிரியே… அவ தான் சொன்னால் விதவிதமாக ஜிமிக்கி சில்வர், கோல்டு கலரில் இருக்குமா எனக்கு வாங்கித் தர முடியுமா’’ எனத் தன்னோட சின்ன சின்ன ஆசைகளைச் சொல்லித் தயங்கி தயங்கி கேட்டவளை அணைத்துக் கொண்ட ஆருத்ரா…

‘’உனக்கு என்ன வேணுமானாலும் என்னிடம் கேட்கலாம். என்னிடம் மனசு விட்டும் பேசலாம் சரியா… நேற்று பேசின மாதிரி முட்டாள் தனமான வார்த்தைகளை எப்போவும் பேசக் கூடாது. ஏனா ஆதினி ஸ்டார்ங் கேர்ள் தானே’’ எனச் சொல்ல ‘’ஆமாம் ஆமாம் …ஆதினி ஸ்டார்ங் கேர்ள்’’ எனச் சொல்லிச் சிரித்தாள் குழந்தை.

‘’உனக்கு என்ன பிடிக்கும் சாப்பாட்டில்’’ என உரிமையாகக் கேட்ட ஆருத்ராவுக்கு ….

‘’எனக்கு என்ன பிடிக்கும்னே தெரியலயே மிஸ்’’ என்றவள்….

‘’பொன்னம்மாள் பாட்டி என்ன தருவாங்களோ அதுவே சாப்பிட்டுக்குவேன்’’ எனச் சொல்ல…

ஆருத்ரா மனசு வலித்தது. பள்ளி விட்டால் வீடு… என இருக்கும் பெண்போல. இங்கே அவளுக்கு மனசு விட்டுப் பேசவோ எதையும் சொல்லவோ யாருமில்லை நினைக்கும்போது வருத்தமாகத் தான் இருந்தது ஆருத்ராவுக்கு.

ஆனால் இதற்குத் தன்னால் என்ன செய்ய முடியும்? என்ற யோசனையோடு இன்று அவளுக்காக எதாவது செய்து தரலாமா எனத் தோன்றவும்….

‘’மதியம் உனக்குப் பிரியாணியும் பாயசமும் செய்யலாமா … உனக்குப் பிடிக்கும் தானே’’ எனக் கேட்க… ‘’அதெல்லாம் பாட்டி செய்யமாட்டார்களே’’ என்ற ஆதினிடம் ‘’நான் செய்கிறேன். நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு’’ எனச் சொல்ல….

‘’நோ மிஸ் நானும் கூட’’ எனக் கெஞ்சியவளை கொஞ்சினாள் ஆருத்ரா.

ஆதினியை டைனிங் டேபிளில் உட்கார வைத்துவிட்டு மளமளவென்று சமையல் செய்யக் கூடமாட ஒத்தாசைக்கு பொன்னம்மாள்.

ஆதினிடம் பேசிப்படியே சமையலை செய்தவள் ‘’ஆதினி உங்க அப்பா சாப்பிட வராங்களா கேளு’’ எனச் சொல்லிய ஆருத்ராவிடமவ….

‘’நோ மிஸ் அப்பா கூப்பிட்டாலே பதில் சொல்லமாட்டாங்க’’ என முணுமுணுக்க…

‘’அப்படியே விடக் கூடாது… ஆதினி. பிடிவாதமாகச் சாப்பிட வந்தே ஆகணும் கூப்பிடனும்… அம்மாவுக்கு அடுத்து அப்பா தானே’’ என்று சொன்னதும் ‘ம்ம்’ என்றவள் தயங்கிய படியே அப்பாவின் அறையை எட்டிப் பார்த்தாள் ஆதினி.

மகள் வெளியே நின்று பார்ப்பதை உணர்ந்தவன் எழுந்து வெளியே வரவும்… ஆதினியோ டைனிங் டேபிள் அமரவும் அவள் அருகில் தானும் அமர்நதான் ஆதிஜித்.

இருவருக்கும் பொன்னம்மாள் எடுத்து வைக்க ஆருத்ராவை ‘’சாப்பிடு’’ எனச் சொன்னான் ஆதிஜித்… ‘’வேண்டாம் சார்’’ என்றவளை முறைத்தவன் ‘’உட்காரு’’ என அதிகாரமாக அழைத்தான் ஆதிஜித்.

‘’என்ன அதிகாரம் எல்லாம் தூள் பறக்கது’’ என முணுமுணுத்துக் கொண்டே அமர்ந்தவளுக்கும் உணவைத் தட்டில் எடுத்து வைத்தார் பொன்னம்மாள்.

ஆதினியோ ‘மிஸ்’ அழைத்துப் பள்ளியில் பேசும் கதைகளைப் பேசிக் கொண்டே பிரியாணி சூப்பராக இருக்கு மிஸ் எனச் சொல்லிச் சாப்பிட்டாள் ஆதினி.

அங்கே தனியாளாக உணர்ந்தது ஆதிஜித் மட்டுமே.

மாலைவரை அங்கே இருந்தவள் ஆதினிக்கு தேவையான எல்லாவற்றையும் எப்படி செய்யணும்? எனச் சொல்லிப் பொன்னம்மாளை ஆதினி கூடவே இருக்கச் சொல்லிக் கிளம்பினாள் ஆருத்ரா.

சட்னு முகம் மாறினாலும் இன்னும் நாலு நாள் பள்ளிக்கு வர வேண்டாமெனச் சொல்லிவிட வீட்டில் தனியாக இருக்க யோசனையோடு சரினு தலையாட்டினாள் ஆதினி.

ஆதிஜித்தோ ‘’ நான் கொண்டு வந்து விடுகிறேன்’’ எனக் கிளம்பியவனை…

‘’ வேண்டாம் சார் நான் ஆட்டோ பிடித்துப் போய்கிறேன்’’ எனச் சொல்லியவளை முறைத்தவன் ‘’கூட்டிட்டு வந்தவனுக்கு கொண்டு விடத் தெரியாதா’’ எனக் கடுமையான குரலில் கேட்டவனை அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது.


அவனோடு காரில் ஏறியவளை பள்ளியில் விடாமல் ‘’உன் வீடு எங்கே இருக்கு?’’ எனக் கேட்டான் ஆதிஜித்…

‘’ஸ்கூலில் விட்டுருங்க. என் வண்டி அங்கே இருக்கு’’ எனச் சொல்ல…

‘’மணி எத்தனை பாரு?… ஏழு ஆகப் போகது. இனி பள்ளிக்குப் போய்யிட்டு வீட்டுக்குப் போகக் கேட்டாகும். நானே வீட்டிலே விட்டு விடுகிறேன்’’ என அழுத்தமாகச் சொன்னான் ஆதிஜித்.

அதன்பின் எதுவும் பேசாமல் தன் இருக்குமிடத்தைச் சொல்லியவளிடம் ‘’இன்னிக்கு நீ வந்தால் ஆதினி ரொம்ப சந்தோஷமாக இருந்தாள்’’ என்றவன் ‘’ரொம்ப வருசம் கழித்து நல்ல சாப்பாடு வேறு’’ என ஆதிஜித் சொல்லவும்….

‘ம்ம்’ என்றவள் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. அவன் பேசினாலே தேள் கொடுக்கில் கொட்டுவது போல வலிக்க வைக்கிறான். அதனால் பேசாமல் மௌனமாக இருந்து கொள்ளலாமென முடிவை எடுத்தவள் அவன் மறுபடியும் பேசத் தொடங்கிய எதற்கும் எந்த ரீயாக்ஷனும் கொடுக்காமல் மௌனமாக இருந்தவளை சரியான அழுத்தக்காரியென முணுமுணுத்தான் ஆதிஜித்.

இவனோடு பேசித் தர்க்கம் பண்ணிக் கொண்டே இருக்க முடியாது என நினைத்தவள் அவன் மேலே ஒரு பரிதாபமும் தோன்றியது.

இறந்து போன பொண்டாட்டியை நினைத்துக் கொண்டே வாழ்கிறானே… முதல் நாள் பொண்டாட்டி இறந்தால் மறுநாள் மாப்பிள்ளையாகும் காலகட்டத்தில் இவன் இப்படி இருப்பது ஆச்சரியம் தான். ஆனால் குழந்தையையும் கவனித்துக் கொள்ளலாமென நினைத்தவள் அவனின் புறம் திரும்பி வீட்டின் வழியே சொன்னதும் அவள் வீட்டின் அருகே நிறுத்தினான் ஆதிஜித்.

காரிலிருந்து இறங்கியவள் ‘’ரொம்ப நன்றி சார்’’ என அழுத்தமான குரலில் சொல்லியவள் ‘’உங்க பெண்ணுக்கு என்ன தேவையோ இனி உங்களிடம் கேட்கச் சொல்லிருக்கேன்’’ எனச் சொல்லிவிட்டு ஸ்டோர் வீட்டுக்குள் சென்றாள் ஆருத்ரா.

அவள் வீடு கடைசியாக இருக்க மாலை நேரத்தில் அங்கே இருப்பவர்கள் வேலை முடிந்து வந்தும் எல்லாரும் அவரவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது ஆருத்ரா வீட்டினுள் அம்மாவின் குரலும் தம்பியின் குரலும் அனல் பறக்கச் சண்டை.

விரைந்து அங்கே சென்றவளை “படி ஏறாதே…. காலையிலிருந்து எங்கே ஊர் மேய்ந்தியோ அங்கேயே போய்ரு” என விக்னேஷ் பேசியதைக் கேட்டு அதிர்ந்து நின்றாள் ஆருத்ரா.

அவனின் உக்கிரமான முகத்தில் இகழ்ச்சி கலந்து இருப்பதைக் கண்டவளுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது ஆருத்ராவுக்கு.

‘என்ன வார்த்தை பேசி விட்டான்’. இதைக் கேட்டு அம்மாவும் அமைதியாக இருக்காங்களே! எனத் தோன்ற அவரின் புறம் திரும்பியவளை “உன் தம்பி தான் ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிக் குடும்ப மானத்தை வாங்கினான். நீ ஸ்கூலுக்குப் போறேன் சொல்லிட்டு எங்கே போனே?… நேற்றும் லேட்டாகத் தான் வந்தே… இவன் பண்ணி வச்சக் காரணத்தாலே அதைக் கவனிக்கலே நானு… இன்னிக்கு காலையிலே சாப்பிடல நீ… அது தான் மதியம் சாப்பாடு எடுத்துட்டு வந்தேன். நீ ஸ்கூலுக்கே வரலேனு சொல்லறாங்க…. லீவு போட்டு எங்கே போனே?” … எனக் கேட்டவரை ஆழ்ந்து பார்த்த ஆருத்ரா மனம் கதிகலங்கி போனது. நேற்று தம்பியை ஒன்றும் சொல்லாமல் தன்னிடம் புலம்பியவர் இன்று தன்னை இவ்வளவு கேவலமாகப் பேசுவதைக் கண்டு அதிர்ந்து நின்றாள் ஆருத்ரா.

‘’அம்மா என்ன பேசறீங்க தெரிந்து தான் பேசறீங்களா?…. என்னைப் பற்றி இவ்வளவு கேவலமாகப் பேசறீங்க’’… எனக் கோபத்துடன் சீறியவள் … ‘’நேற்று மகன் கல்யாணம் பண்ணி வந்ததும் ஆரத்தி கரைத்து உள்ளே அழைத்துக் கொண்டு போகத் தெரிந்தது. ஆனால் இன்று நான் ஸ்கூல் போகலேனு எதாவது காரணம் இருக்கும் தெரியாதா… இத்தனை வயசாகியும் உங்க சுமை குறைய வேண்டும் என்று நானும் என் வேலை உண்டு…. நான் உண்டு தானே இருக்கேன். வாசலிலே நிற்க வைத்து எவ்வளவு கேவலமாகப் பேசறீங்க…. அந்தளவுக்கு நான் மோசமானவாளா’’…. எனக் கத்தியவளின் மனம் நொறுங்கி போனது.

அக்கம் பக்கம் எல்லாருடைய பார்வையும் தன் மேலே ‘ஈ’ ஆக மொய்க்க… அதைக் கண்டவளுக்கு அதீத கோபம் வந்தது.

படிக்கும்போதே டியூசன் எடுத்துக் காலேஜ் போக மாலை நேரத்தில் ஹோம் டியூசன் எடுக்கப் போய் அதிலிருந்து வரும் பணத்தில் தம்பி படிப்புச் செலவு பார்த்தவள் தனக்குனு ஆசைக்கு ஒன்று வாங்கிருப்பாளா….. ஏன்? இன்று ஆதினி ஆசையாக ஜிமிக்கி … இருபது முப்பது ரூபாய் வருமா… அதைக் கூடச் செலவு பண்ணினால் அவனின் படிப்புச் செலவுக்கு வேண்டுமேயெனச் சேர்த்து வைத்தவளே என்ன கேள்வி கேட்டு விட்டான்?. அப்படி போகிற அளவு ஆசை இருந்தால் அந்த வயசிலே போய்யிருக்கலாமே…

வேலைக்குப் போகும் இடத்தில் எத்தனை பேர் கண்கள் தன்மீது தவறாகப் படுவதும் அவர்களிடமிருந்து விலகி வருவது அவ்வளவு எளிதான விசயமா… அதையெல்லாம் தாண்டி வந்தவளை எங்கே ஊர் மேய்ந்தே? கேட்கிறான்…. இவனுக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது. ஆண் திமிரா எனத் தம்பியை முறைத்தவள் … ‘’படிக்கிற வயசிலே நீதான் கல்யாணம் பண்ணிகிட்டு வீட்டுக்கு அழைத்து வந்திருக்க… நீ ஒரு ரூபாய் சம்பாதித்து இந்த வீட்டிற்கோ இல்லை எனக்கோ கொடுத்து இருக்கீயா… ஏன் இப்ப கல்யாணம் பண்ணிட்டு வந்தப் பெண்ணுக்கு ஒரு முழம் பூ வாங்க வேண்டும் என்றாலும் என்கிட்ட தான் வந்து நிற்கணும்’’ என்றவள் தன் அம்மாவைப் பார்த்து ‘’நாளைக்குக் கொள்ளி வைக்க மகன் மட்டும் வேணும். அவன் என்ன தப்பு செஞ்சாலும் சரி ஏத்துகிட்டே… பெண்ணாகப் போனதால் கேட்கக் கூடாத வார்த்தை எல்லாம் கேட்டுத்தானே… எனக்கு என் மேலே நம்பிக்கையே இல்லாமல் தான் இத்தனை நாளாக இருந்தீயா’’ எனக்
கேட்டுத் தள்ளாடிய ஆருத்ராவை தாங்கிப் பிடித்தான் ஆதிஜித்.
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
கொள்ளிவைக்கும் மகன் என்ன தவறு செய்தாலும் அது தவறில்லை. ஆனால் குடும்பத்திற்காக உழைத்து பார்த்து பார்த்து செய்து தன் ஆசைகளை கருக்கிக் கொள்ளும் மகளை நொடியினில் அனைத்தையும் மறந்து எவ்வளவு சுலபமாக கேவலமான வார்த்தைகளைக் கொண்டு சாடி விடுகின்றனர். 😢😢😢

ஆதி அங்கேயே இருந்திருக்கிறான் போல 🧐 இனி 🤔