அத்தியாயம் …6
அம்மாவின் பேச்சில் நிலைகுலைந்து நின்றவளை தாங்கிய ஆதிஜித்தைப் பார்த்து அதிர்ந்து சட்னு அவனின் கைகளை எடுத்துவிட்டு அவனிடமிருந்து விலகினாள் ஆருத்ரா.
தன் மகளின் அருகே புதியதாக ஒருவன் நிற்பதைக் கண்ட ரஞ்சனியோ மகளை முறைத்தார்.
அம்மாவின் முறைப்பில் இன்னும் அவனிடமிருந்து விலகி நின்றவள் ‘’இத்தனை வருஷமாக உங்களுக்கு உதவியாக இருக்கணும் என் ஆசைகளை மறைத்து உழைச்சவளுக்கு நல்ல பெயரைப் பெத்த தாயை கொடுத்து வீட்டீங்க…
நேற்று உங்க மகன் ஒரு பெண்ணோட வந்து நின்றப்ப நீங்க வீட்டுக்குள் கூப்பிட்டு பேசத் தெரிந்த உங்களுக்கு மகள் மட்டும் கிள்ளுகீரையா… வாசலிலே நாலு பேரு முன் இவ்வளவு அசிங்கமாகக் கேவலமாகப் பேசறீங்க’’ எனப் பேசிக் கொண்டே இருந்தவளோ அங்கே குடியிருந்த மற்றவர்களின் பார்வையில் கூசியவள் சட்னு கிளம்பிச் செல்கிறவளை யாரும் தடுக்கவில்லை.
ஆதிஜித் அதுவரை அமைதியாக அங்கே நின்றவன் ஆருத்ரா போவதைப் பார்த்துவிட்டு ‘’உங்கள் பொண்ணு எங்க வீட்டுக்குத் தான் வந்தாங்க. என் பெண் பெரிய மனுசியானால் என்பதற்கு உதவியாக வந்தாள். ஆனால் இப்படி பேசுவீங்க தெரிந்திருந்தால்… பெத்த தாயே எப்படி உங்களால் இப்படி பேச முடிது? எனக் கடுமையான குரலில் கேட்டவன் தானும் வெளியே சென்றவன் பார்வை அங்குமிங்கும் அலசத் தெருவில் அவளே காணவில்லை.
இருபக்கமும் திரும்பிப் பார்த்தவன் எங்கிட்டு போனாளோ என உள்ளம் பதறியது.தன் காரில் எறி அவளைத் தேடிச் செல்ல அவளோ சாலையில் தன்னை மறந்து வேக வேகமாக நடந்தவளின் நேரத்திலே அவளின் கோபம் புரிந்தது ஆதிஜித்க்கு.
அவள் முன் தன் காரை நிறுத்தி ‘’ஏறு ஆருத்ரா’’ என அதிகாரமாகச் சொல்லிய ஆதிஜித்தை முறைத்தவள்
‘’என் அம்மா சொன்னதை உண்மையாக்க போறீங்களா’’ எனக் கேட்டதற்கு…
‘’ அதை உண்மையாக்குவதோ பொய் நிரூபிக்கணும் நினைப்பதை காரில் போய்க் கொண்டே பேசலாம்’’ என அழுத்தமாகச் சொல்லியவன் முறைக்க ‘’ஏறு ஆருத்ரா… இங்குயும் மற்றவர்கள் பார்வைக்குக் காட்சி பொருளாக வேண்டாமே’’ எனச் சொல்லியவனுக்குத் தன்மேலே குற்றயுணர்ச்சி அதிகமாக இருந்தது.
தான் அழைத்துப் போகாமல் இருந்திருந்தால் இப்போ வீட்டை விட்டு வெளியே போகணும் அவசியமிருக்காதே அவளுக்கு என எண்ணியவனுக்கு இதற்கான பொறுப்பைத் தான் ஏற்றுகணும் என நினைத்தபடி அவளை ‘’ஏறு’’ என மீண்டும் அழுத்தமாகச் சொல்லவும் வண்டியில் ஏறினாள் ஆருத்ரா.
‘’ஏன் இப்படி பேசறாங்க உங்க அம்மா?…. அந்தளவுக்கு சந்தேகமாகப் பேசுவதைப் பார்த்தால்’’.... எனப் பாதியிலே பேச்சை நிறுத்தி அவளைப் பார்க்க …
அவளோ ‘’அவங்களுக்கு நேற்று அவங்க மகன் செய்த காரியத்தின் பலன் என் மேலே காமிச்சிட்டாங்க. மகனை மற்றவர்கள் முன் விட்டுக் கொடுக்கக் கூடாது நினைக்கிறவங்க…. மகளை விட்டுக் கொடுப்பாங்களா… அவங்களுக்கு பயம். மகன் வேறு பக்கம் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான். இனி பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பது சிரமம் மனசிலே நினைச்சிட்டாங்க போல.
அதுவும் நீங்க வந்து நிற்கவும் அதை உறுதி பண்ணிகிட்டாங்க’’ என்றவள்…
‘’இப்பவும் என்னை வசை பாடினாலும் ராத்திரி நேரத்தில் எங்கே போவாளோ பயமும் இருக்கும். மகனுக்காக மறைச்சிட்டு இருப்பாங்க. புதுசா கல்யாண ஆகிருக்கில தம்பியாருக்கு. பொண்டாட்டி முன் வீரத்தைக் காமிக்கிறான்’’ எனச் சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு இப்போ எங்கே போவது பெரிய கேள்வி முன் நின்றது.
திடீரென்று ‘’நீங்க எதுக்கு வீட்டுக்கு வந்தீங்க’’ என அவனை நோக்கிக் கேட்டவளை…
‘’ உன் அலைபேசியை காரிலே விட்டுட்டே அதைக் கொடுக்க வந்தேன்’’ எனச் சொல்லிய ஆதிஜித் ‘’என்னாலே தானே இப்படி நடந்துச்சு’’ எனச் சொல்லவும்….
‘’இன்று என்ன நடக்கணும் விதித்திருக்கோ அது நடந்து இருக்கு. அவ்வளவு தான். என் அம்மா இப்ப மட்டுமல்ல சின்ன வயசிலே தந்தை இறந்தபிறகு எங்களைப் பாதுகாக்க பல போராட்டங்களின் வெளிப்பாட்டை இன்று வேறு மாதிரி வெடிச்சிருக்கு’’ எனச் சொல்லிக் கொண்டிருந்தவளை ஆச்சரியமாகப் பார்த்தான் ஆதிஜித்.
தன் மேலே குற்றம் சொன்னவங்களையும் அதுக்கு காரணம் இது தான் சொல்லிக் கொண்டு வருகிறவளை நினைத்து ஆச்சிரியமும் அதே அளவு பரிதாபமும் தோன்றியது.
மற்றவர்களுக்காகப் பாரப்பவர்கள் அனைவரும் வாழ்க்கையில் கஷ்டம் தான் படுகிறார்கள்.
இன்றும் ஆதினிக்காக வந்தது அவளின் வாழ்க்கை பாதையே மாற்றிவிட்டதேயென எண்ணியவனை…
‘’என்னை எதாவது ஹாஸ்டல் இருக்கிற இடம் தெரிந்தால் அங்கே இறக்கி விட முடியுமா’’ எனக் கேட்டவளின் திடமான மனத்தை இந்த நேரத்திலும் நிதானமாக எடுக்கும் முடிவை உணர்ந்தவனுக்கு அவள்மீது மரியாதையை உண்டு பண்ணியது.
‘’ உனக்குத் தப்பாகத் தெரியவில்லை என்றால் நான் ஓன்று சொல்கிறேன் கோபப்படக் கூடாது’’ எனச் சொல்லியவனை நிமிர்ந்து பார்த்தாள் ஆருத்ரா.
‘’இன்று எங்கே வீட்டிலே வந்து தங்கிக் கொள். நாளைக்கு நல்லா ஹாஸ்டலாகப் பார்த்துக்கலாம். இந்த நேரத்தில் ஹாஸ்டல் தேடுவது அவ்வளவு சேப்டி இல்லை’’ எனச் சொல்வும் அவனை ஆழ்ந்து பார்த்தவளோ….
‘’ அன்றைக்கு மாதிரி இன்றும் பேச மாட்டீங்க…. என்ன நிச்சயம்?’’ எனக் கேட்டு மறுப்பவளை ‘என்ன சொல்லி அழைத்துச் செல்ல? என யோசி்த்தவன் ‘’அன்னைக்கு பேசினது தப்பா இருக்கலாம். ஆனால் இன்னிக்கு என்னால் உனக்கு ஒரு பிரச்சினை என்பதால் இப்ப செய்கிற உதவி மனிதாபிமானத்தில் என நினைச்சு வா’’ எனச் சொல்லியவனோ தன் வீட்டை நோக்கிக் காரைச் செலுத்தினான் ஆதிஜித்.
அவன் செல்லும் வேகத்தைக் கவனித்தவளோ ‘’மெதுவாகப் போங்க’’ எனச் சொல்லியவள் ‘’உங்களிடம் ஒன்று கேட்கலாமா. தவறாக நினைக்கவில்லை என்றால்’’ எனக் கேட்க….
‘ம்ம்’ என்றவன் ‘’நீ என்ன கேட்ப என எனக்குத் தெரியும். ஆதினியின் அம்மாவைப் பற்றிக் கேட்கணும் நினைச்சிருப்ப’’ எனச் சொல்லியவனிடம் ‘ஆமாம்’ தலையாட்ட அவனோ பெருமூச்சுடன்…. ‘’இதைக் கேட்காதே ஆருத்ரா … அதைப் பற்றிச் சொன்னால் பல பிரச்சினைகள் முளைக்கும். சிலதை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது தானே’’ எனச் சொல்ல…
‘’எதையும் மனசுக்குள் வைத்து நீங்க அந்தப் பிஞ்சு மனசை நோகயடிக்கிறீங்க புரியலயா. பாவம் ஆதினி. நான் வந்தது ஆதினிக்காகத் தான் என்றாலும் அதே குழந்தையால் இன்று என் வாழ்க்கை பாதை மாறிருச்சு. அதற்காகக் குழந்தை மேலே கோபப்பட்டு விலக்கி வைக்க முடியுமா…
எங்க அம்மா தன் மகனின் மீதுள்ள அதீத பாசத்தால் எங்கே பொண்டாட்டியின் பேச்சைக் கேட்டுப் போய்விடுவானோ என்ற பயத்தில் தன் சுமையை இறக்கி வைக்க என்னைப் பேசிட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரம் அங்கிருந்தாலும் வீட்டிற்குள் என்னால் போக முடியாது சொல்லல. ஏனோ அங்கிருந்த அத்தனை பேரின் பார்வையில் இகழ்ச்சியாக இருக்கவும் தான் வெளியே வந்தேன்.
எனக்கு என் மேலே வைத்த நம்பிக்கை ஒன்றே காரணம். ஆனால் ஆதினி அம்மா இல்லாமல் யாரிடம் ஒட்டாமல் தனிமையை ரொம்ப உணருவதால் மனளவில் ரொம்ப உடைந்துவிட்டாள்.
இப்படி போனால் நாளாக நாளாக மன அழுத்தத்திற்கு ஆள்யாகிவிடுவாள்’’ எனச் சொல்லியவளின் பேச்சில் இருக்கும் உண்மையை உணர்ந்தவனுக்கு தன் மனைவி மட்டும் தன்னை விட்டுச் செல்லாமல் இருந்திருந்தால் மகள் கஷ்டப்பட விட்டுருப்பாளா என எண்ணியவன் வாய் மெதுவாக முணுமுணுத்தது. ‘’ஆதினி மட்டும் தனிமையை உணரவில்லையே’’.
‘’நானும் தான் யாருமில்லாத தனிமையை உணர்கிறேன். என்னுள் இருக்கும் வலியைப் பகிர வழி இல்லாமல் தவிக்கிறேன்’’ எனச் சொல்லியவனை அதிர்ந்து பார்த்தாள் ஆருத்ரா.
அவனின் வெறுத்த விழிகளில் மெல்லிய கண்ணீர் படலம். ‘’ஆதினியை தூக்கிக் கொஞ்சணும் ஆசை நெஞ்சு நிறைய ஆசை இருக்கத் தான் செய்கிறது. அவளை வெளியே கூட்டிட்டு போகணும். கேட்கிற எல்லாம் வாங்கித் தரணும் ரொம்ப ஆசை தான்.
ஆனால் அவள் பிறப்பிற்க்கு முன் எனக்கு என் மனைவிக்கு அவ்வளவு ஆசைகள். எங்க குடும்பத்தில் நாங்க கல்யாணம் செய்து கொள்வதை விரும்பாமல் போனதால் வெளியேறி வந்தோம். அவர்களிடமிருந்து தப்பித்து இங்கே எங்களுக்கான குடும்பத்தை உருவாக்கிக் கொண்டாலும் என் மனைவிக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். எங்கே வெளியில் போனால் தங்க குடும்பத்து ஆட்கள் பார்த்துவிட்டால் என்ன ஆகும் பயம் இருக்கும்.
அதனால் தான் எங்கள் தான் யாரும் இல்லாமல் அனாதையாக வாழ்கிறோம். எங்களுக்கு ஒரு குடும்பமாக வாழ ஒரு குழந்தை வரப் போகிறது என நினைச்சு நாங்க மகிழ்ச்சி கடலில் நீந்தினோம். குழந்தை தரித்த முதல் அதன் முதல் துடிப்பு, வயிற்றில் அங்குமிங்கும் நகருவதை உணர்ந்து ரசித்து அக்குழந்தையின் வாழ்நாளில் அம்மா அப்பாவா செய்ய வேண்டிய ஒவ்வொன்றும் கனவாக என்னிடம் அவள் சொல்லும்போது அவள் கண்கள் விரிந்து அக்காட்சியை அப்போதே நடப்பதைப் போலக் கனவு காண்போம் இருவரும்.
அதெல்லாம் கானலாக மாறும் என்பதை நானோ அவளோ நினைத்துப் பார்க்கவில்லை.
ஒரு இறப்பில் ஒரு புது வரவைக் கொண்டாடத் தோன்றவில்லை. அதைவிட எங்கே நானும் குழந்தையை நெருங்கினாள் அவளும் என்னை விட்டுப் போய்விடுவாளோ என்ற பயம்.
எங்களின் ராஜ்ஜியத்தின் அரசியாக ஆதினி வளரணும் அவள் அம்மாவின் ஆசை தான்.
என் மனைவிமீது நான் கொண்ட காதல் அளப்பரியாதா ஒன்று. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகுமா… அப்படி தான் அளவுக்கு மீறி அன்பைக் காட்டினால் ஆதினியும் என்னை விட்டுச் சென்று விடுவாளோ என்ற அச்சத்தில் குழந்தையை என்னிடம் நெருங்காமல் பார்த்துக் கொண்டேன்’’ எனச் சொல்லியவனின் குரலில் பெரும் வலியை உணர்ந்தாள் ஆருத்ரா.
‘அவள் அம்மா எப்படி இறந்தால் தெரியுமா ஆருத்ரா. அவளின் அம்மாவுக்கு வலி அதிகமாகி ஹாஸ்ப்பிட்டல் போய்விட்டோம். அங்கே நடந்த நிகழ்வுகள் என் கைமீறிப் போனது. அதற்குக் காரணம் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த உலகில் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த உறவுகள் மனிதத்தை மறந்து விட்டது தான் கொடுமை.
எங்க வீடு வசதி இல்லாத குடும்பம் தான். படிப்பில் தான் முன்னேற வேண்டிய சூழ்நிலை. ஆருத்ரா தேவி என் மனைவியின் பெயர். என் மாமாவின் மகள். அவள் பிறந்ததும் என் அம்மா என்னை அழைத்துக் கொண்டு சென்றார்கள்.எனக்கு அப்ப ஐந்து வயது இருக்கும். குழந்தையைத் தூக்கி என் கரங்களில் வைத்தபோது அதன் ஸ்பரிசத்தை உணர்ந்தபோது மகிழ்ச்சி அதிகமாகவே இருந்தது.
அப்போது அங்கே இருந்த ஒரு பாட்டி இவ தான்டா உன் பொண்டாட்டியெனச் சொல்லிக் கேலி செய்ய அது என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அன்றையிலிருந்து அவள் தான் எனக்கானவள் என மனசிற்குள் உறுதியாக்கிக் கொண்டேன்… ஆரு என் மேலே அதிகமாக அன்பினை காதலை பொழிந்தாள்… காலம் மாற மாற எல்லாம் மாறுமே. அப்படி தான் என் வாழ்க்கையும் மாறியது. பணம் என்ற காகிதத்தில் என் வாழ்க்கை ஊஞ்சாலாடியது. கிராமத்தில் எப்பவும் முறை வைத்துப் பேசுது சகஜமான ஒன்று தான். ஆனால் சிறு வயதில் பசுமரத்தாணி பதிந்து விட்டது இதயத்தில்.
அவன் பேசப் பேச அவனின் குமறல்களி
ல் இருந்த வலியைக் கண்டவளுக்குத் தன் வலி பின்னோக்கி சென்று விட்டது.