• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராவணனின் ராஜ்ஜியம்....7

MK23

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
11
10
13
Tamil nadu
அத்தியாயம்…7

“என் மாமா மகள் தான் ஆருத்ரா தேவி. நல்ல வசதியான குடும்பம். அதனாலே என் குடும்பத்தைக் கொஞ்சம் எப்பவும் தரம் தாழ்த்தியே பேசுவார்கள். ஆனால் தேவியோ சிறுவயதிலிருந்து என் மேலே அளவு கடந்த பாசத்தை வைத்து விட்டாள். அத்தான் அத்தான் என் பின்னாலே சுத்தியவள் வயதுக்கு வந்தபிறகு ஜித் அழைக்க ஆரம்பித்து விட்டாள். நானும் படித்து ஐடி துறைக்கு வேலைக்கு வந்தபின் ஓரளவுக்கு என் வீடும் கொஞ்சம் ஏறுமுகமாக இருந்தது.

அப்போது ஆருத்ராவுக்கு கல்யாணம் என அம்மா போன் பண்ணிச் சொல்ல நானோ பதட்டமாக என்ன செய்வது என யோசிக்கும் போதே ஆருத்ரா இங்கே கிளம்பி வந்துவிட்டாள் யாருக்கு தெரியாமல். அதன்பின் நடந்த எங்கள் கல்யாணம் பெரிய போராட்டம் தான்.

கல்யாணம் ஆனபின் தினமும் எனக்காக வாசலிலே தவம் கிடப்பவள் நான் வந்தபின் என் தோளிலே தொங்கிக் கொண்டு அலைந்து கொண்டிருப்பாள். என்னைத் தாய் போலக் கவனித்தவளும்ம் அவளே. எனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்பவள் சாப்பாடு ஊட்டி விடுவது டிரஸ் எடுத்து வைக்க எல்லாம் செய்கிறவளை நான் கடிந்து ஒரு வார்த்தை சொல்ல முடியாது. அப்பறம் முகத்தைத் தூக்கி வைத்தால் சமாதானம் பண்ண வைக்கச் சுற்றில் விடும் அன்பான ராட்சஷி.

அதுவும் ஆதினி வயிற்றில் உதிர்த்தப்பின் அவளைத் தங்க தட்டில் வைத்துத் தாங்க நினைச்சால் உடனே நடக்கணும் என அதீத பிடிவாதமும் அவளிடம் வந்துவிட்டது. டாக்டரிடம் போவதிலிருந்து குழந்தையின் துடிப்பு, அசைவு எல்லாமே எங்களை ஒரு மாயஜால உலகத்திற்குள் அழைத்துச் சென்றது.

இப்படி சந்தோஷமாக இருந்தால் கண்பட்டு போகுமா … தெரியல. அப்படி தான் ஆயிற்று. ஒருநாள் இரவு கடற்கரைக்குப் போயே ஆக வேண்டும் ஆசையாக இருக்க அடம்பிடித்து இரவு பதினொரு மணிக்கு மேலே போனோம்.

அங்கே என் அருகே அமர்ந்து என் தோளில் சாய்ந்த படி பல கதைகளைப் பேசினாள். பெண் பிறந்தால் என்னன்ன செய்யணும். குழந்தைக்குப் பிடித்ததை எல்லாம் வாங்கி தரணும். அவள் விரும்புவதை செய்யணும் அவ்வளவு ஆசை. அத்தனையும் நிராசையாகி போனது. பெயர் முதற்கொண்டு முடிவு செய்தவள் அவளின் கல்யாணம் வரை என்ன வாங்க வேண்டும் எனப் பலதை சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரே ராத்திரியில் உலகமே அழிய போகுதா….எனக் கிண்டல் பண்ணினாலும் அவள் பேசுவதைக் கேட்டபடி அமர்ந்திருந்தேன்.

திடீரென்று அவள் இடுப்பை பிடித்த படி அம்மா” என அலறவும் “என்ன ஆச்சு தேவி? பதற… “வலிக்கது ஜித்” கதறினாள். அவளைத் தூக்கிய படி “ஹாஸ்ப்பிட்டல் போய்விடலாமென வேகமாகக் காரில் ஏற்றிக் கொண்டு வரும்போது எனத் திணறியவன் எதிரே வந்த லாரி மோதியது. அதில் அவளுக்கு ரொம்ப அடி எனக்கும் காலில் அடி … இரவு நேரம் …. யாருமில்லாத பைபாஸ் ரோடு… போற வர வண்டி எல்லாம் நிற்காமலே செல்ல எனக்கு அவளின் அழுகையும் வலியால் துடிப்பதையும் காண முடியாமல் கதறினேன். கடவுளே எனக்குனு இருக்கிற ஒரே ஜீவன் இவள் தானெனக் கத்தினேன். அது கடவுள் காதில் விழுந்தோ இல்லையோ… அங்கிட்டு போனவர்கள் ஆம்புலன்ஸ் போன் பண்ணிச் சொல்ல நானும் ஒண்ணுமில்லே டா மயங்கியவளை எழுந்திரு கதற ஹாஸ்ப்பிட்டல் போனபோது அவள் என் மடியிலே கடைசி நேர உயிரைக் கையில் பிடித்திருந்தவளின் விரல்களை விலக்கிக் கூட்டிச் சென்று குழந்தை ஆபிரேஷன் பண்ணி எடுத்து விட்டார்கள். அவளோ காற்றில் கரைந்து போனாள். நாங்க வாழ்ந்த காலம் குறைவாக இருக்கலாம். ஆனால் அவளுக்காக நான் மட்டும் தானேயென எண்ணி வீட்டை விட்டு வந்தவளை என்னால் காப்பாற்ற முடியாமல் போனது என் தப்பு தானே” எனக் கேட்டவனின் குரலிருந்த அதீத வலியை உணர்ந்தவளோ அவனின் கை மேலே தன் கையை வைத்து அழுத்தினாள் ஆருத்ரா.

ஆதிஜித் வலியோடு பேசுவதைப் பார்க்கும்போது ஆதினி மாதிரியே தோன்றியது ஆருத்ராவுக்கு.

“எவ்வளவு காதல் தெரியுமா அவள் என்மேல் வைத்தது. கொஞ்சநஞ்சமல்ல… எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நானே தான் உன் பொண்டாட்டி ஜித் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாள்.

நான் வீட்டிலிருக்கும்போது அவளின் பார்வை ஒரு நொடி என்னை விட்டு விலகாது. அவள் விழியின் வாயிலாக இமைச் சிறைக்குள் பூட்டி வைத்துக் கொள்வாள். அவள் இல்லாத இவ்வுலகம் எனக்கு நரகமாக இருக்கு. ஆனால் எங்களுக்கு ஒரு உறவு இருந்ததை தனியாக விட்டுச் செல்ல முடியாமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கேன்” எனச் சொல்லிக் கொண்டிருப்பவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? எனப் புரியவில்லை ஆருத்ராவுக்கு

எப்படி இந்த மாற்றம்?. நேற்று அந்தளவுக்குக் கீழ்தரமாகப் பேசியவன் இன்று தன் வாழ்ந்த கதையை மனைவிமீது கொண்ட காதலை கூறுவதைக் கேட்டவளுக்கு அவனை எப்படி ஆறுதல் படுத்துவது? எனப் புரியவில்லை. ஒரு காதலில் ஒருவர் இல்லை என்றால் கரையானாக அரித்து விடுமா. எல்லாரையும் ஏன் பெற்ற குழந்தையும் ஒதுக்கி வைக்குமளவுக்கு வெறுப்பை தருமா? என யோசித்தவள் ஆதிஜித்தை பார்க்க அவனின் முகம் கவலை தளும்பி வாடி இருந்தது.

“பெண்ணாக இருந்தால் அழுது தீர்த்து இருக்கலாம். ஆணாக இருப்பதால் மற்றவர்கள் முன் அழவதற்கு முடியலயே” எனப் புலம்பலோடு தன் வீட்டில் வண்டியை நிறுத்த அங்கே வாசலிலே ஆதினி நின்று கொண்டிருக்க இந்த நேரத்தில் ஏன் தனியாக ஆதினி நிற்கிறாளெனப் பதட்டத்துடன் இறங்கி சென்றாள் ஆருத்ரா.

ஆருத்ராவின் செய்கையைக் கண்டவனோ நேற்று பேசியது, இன்று காலையிலிருந்து தன் குடும்பத்தில் ஒருவராக மாறி மகளின் மகிழ்ச்சியை கண்டது.… தன்னால் அவளுக்கு அவள் வீட்டில் ஏற்பட்ட அவமானத்தைத் தூசியாக ஒதுக்கித் தள்ளித் தனக்கு ஆதரவாக நடந்து கொண்ட அவளின் மனத்தைக் கண்டவனுக்கு இப்படியும் சிலர் இருக்கிறார்கள் போல் இவ்வுலகில் என நினைத்தபடி தானும் காரிலிருந்து இறங்கினான் ஆதிஜித்.

“ஆதினி என்னாச்சு ஏன் வெளியே நிற்கிற… பொன்னம்மாள் எங்கே போனாங்க?” எனப் பல கேள்வியைக் கேட்டபடி அவளின் அருகே செல்ல ஆதினியோ “மிஸ்” என ஆருத்ராவைக் கட்டிக் கொண்டாள்….

கிட்டதட்ட மணி ஒன்பதுக்கு மேலே ஆகவும் எப்பவும் போலப் படுக்கச் சென்ற ஆதினிக்கு தனியாகப் படுக்கப் பயமாக இருந்தது … ஏதோ ஏதோ கெட்ட கனவு அவளின் தூக்கத்திற்கு இடையூறாக இருந்தால் எழுந்து வெளியே வந்து விட்டேன் எனச் சொன்னாள் ஆதினி.

“ம்ம்… எதுக்கு பயப்படணும். ஆதினி ஸ்டாரங்க் கேர்ள் காலையில் தானே சொன்னீங்களே” எனச் சொல்லிக் கொண்டே அவளோடு வீட்டிற்குள் நுழைய அதன்பின் ஆதிஜித் என்ற ஒருவன் இருப்பதை மறந்து விட்டார்கள் இருவரும்.

மறுநாள் எழுந்தபோது தான் பள்ளிக்கு உடுத்திட்டு போக உடையே இல்லையென யோசித்து அமர்ந்திருந்தவள் மேலும் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டாள் ஆருத்ரா.

இன்று ஹாஸ்டல் வேற தேட போகணும். நல்ல ஹாஸ்டலாக இருக்கணும் ஸ்கூல் பக்கமாக இருந்தால் நல்லது எனப் பல சிந்தனைகளோடு இருந்தவளை கலைத்தது ஆதிஜித் குரல்.

வீட்டின் வெளியே அவளின் தாய் ரஞ்சனியும் விக்னேஷ் இருவரும் நிற்க அதைக் கண்டு தான் அழைத்தான் ஆருத்ராவை.

அவர்களை உள்ளே கூப்பிட இஷ்டமில்லை. நேற்று வாசலிலே வைத்து ஆருத்ராவை பேசியதை கண்டவனுக்கு அவர்கள்மீது மரியாதை இல்லை. என்னதான் லேட்டாகப் போனால் இப்படி பேசுவாங்களா. தன் பெண் மேலே நம்பிக்கை இல்லையா. இத்தனை வருசம் வளர்த்து ஆளாக்கியவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால் வெளியாட்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என யோசனையோடு நின்றுகொண்டிருந்தான்திஜித்.

ஆதினியோடு வெளியே வந்தவள் அங்கே தன் அம்மாவைப் பார்த்ததும் “நீ உள்ளே போ ஆதினி” என அவளை அனுப்பி விட்டுத் தன் அம்மாவைக் கூர்விழிகளால் குத்திக் கீறினாள் ஆருத்ரா.

நேற்று பேசிய நஞ்சு வார்த்தைக்களுக்கும் அந்த நேரத்தில் வெளியேறிச் செல்ல நேர்ந்த நிகழ்வில் அவளுள் அதீத வெறுப்பினை உண்டாக்கியது.

இரவு இவனும் வீட்டிற்கு அழைத்து வராமல் இருந்திருந்தால் தன் நிலமை எப்படி ஆகிருக்குமோ…. இவன் அன்று பேசியது முதல் முறை தன்னைப் பற்றித் தெரியாதவன் பேசியதற்காக அவனிடம் விவாதம் பண்ணாமல் ஒதுங்கிப் போனாலும் அடுத்த நாள் அவனே தேடி வந்ததும் அல்லாமல் தன்னைத் தரக்குறைவாக ஒரு பார்வை இல்லை இப்ப வரையென நினைத்தபடி நின்றிருக்க ….

“நான் தான் சொன்னேன்ல மா நேற்று என் பொண்ணை பேசியே துரத்தி விட்டேன் புலம்பின. ஸ்கூலில் போய்ப் பார்க்கலாம் அங்கு இழுத்து போய்க் கடைசியில் அம்மணி எங்கே இருக்கா பாரு. ஜாலியா ஆடி அசைந்து எழுந்து வரா. உன்னால் தான் டா நேற்று அவளைப் பேசினேன் என்னையும் என் பொண்டாட்டியும் திட்டித் தீர்த்தே. ஆனால் உன் பொண்ணு சுகமாகப் பெரிய வீட்டு ஆளைத் தான் கைக்குள்ளே போட்டு இருக்கா” என எகத்தாளமாகப் பேசிக் கொண்டிருப்பவனை கைகளைக் கட்டிக் கொண்டு யாருக்கோ வந்த விருந்தோ போலப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆருத்ரா.

“நீ சொன்னப்ப கூட நம்பலடா இப்ப நான் கண்ணாலே பார்க்கும்போது தான் புரிது” எனக் கண்ணீர் வடிக்க நின்ற ரஞ்சனியை கண்டவளுக்கு மிக வருத்தமே உண்டானது.

“எத்தனை நாளோ வருசமோ பழக்கம் தெரியலயே… டியூசன் எடுக்கப் போறேன் என நம்பி அனுப்பி வைத்தேன். ஆனால் இவ இப்படி தான் வந்து பணம் கொண்டு வந்தாலென நினைக்கும்போது இவளைப் பெற்ற வயிற்றில் நெருஞ்சியை கட்டிருக்கலாம்” எனப் பேசியவரைக் கண் சிமிட்டாமல் பார்த்தாள் ஆருத்ரா.

என்னவெல்லாம் பேசுகிறார்கள் என நினைத்தவளோ “இன்னும் பேச எதாவது இருக்கா…. இருந்தால் பேசிட்டு செல்லுங்கள். அதன்பின் இந்தபக்கம் வரவே கூடாது” என அழுத்தமாகத் தோரணையாகக்கூடிய ஆருத்ராவை பிரமிப்பூட்டும் பார்வையோடு பார்த்தான் ஆதிஜித்.

அவளைப் பார்த்தலிருந்து கவனித்து கொண்டு தான் இருக்கிறான். ஒருயிரு வார்த்தையிலே அடுத்த பேச முடியாத அளவிற்கு பேசும் அவளின் செயலும் நிமிர்ந்து நிற்கும் பாங்கும் எது வந்தாலும் என்னைப் பார்த்துக் கொள்வேன் என்ற திடமும் கண்டு அவன் தன் மகளும் இதே போலத் தான் இருக்கணும் என நினைக்கத் தோனியது.

“ஏன்டி இன்னும் பேசினால் என்ன பண்ணுவ. அவன் தான் நம்ம குடும்ப மானத்தை வாங்கினான் ராத்திரி முழுவதும் உன்கிட்ட தானே புலம்பினேன். அக்கபக்கம் எல்லாம் எப்படி பேசறாங்க சொன்னேன்ல…. நீயும் இப்ப அதே காரியத்தைத் தானே செய்திருக்க” எனச் சொல்லியவரை…

“நேற்றே இதே எல்லாம் பேசிட்டிங்க. புதுசா எதாவது இருந்தால் சொல்லுங்க. இல்லை என்றால் இடத்தைக் காலி பண்ணுங்க. இது உங்க வீடு அல்ல. அடுத்தவங்க வீட்டின் முன் வந்து சத்தம் போடாதீங்க” என்றவள்…

“ நீங்கள் ஏன் சார் வெளியே நின்று வேடிக்கை பார்க்கிறீங்க. யாரும் சண்டை போட்டதை பார்த்ததில்லையா”… என நக்கலாகக் கேட்டபடி “உள்ளே வாங்க” எனச் சொல்லிவிட்டு அவன் சென்றதும் கதவை வேகமாகச் சாத்தியவள் “உங்க வீட்டு முன் சத்தம் போட்ட அவங்களுக்காக நான் சாரி கேட்டுகிறேன் சார்…. இன்னிக்கு நல்ல ஹாஸ்டல் கிடைச்சா போய்யிருவேன்” எனச் சொல்லியவள் ஆதினி இருக்கும் அறைக்குள் சென்றவளுக்கு தன் மேலே கோபம் வந்தது.

அடுத்தவர்களைச் சார்ந்து நிற்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய கடவுள்மீது கோபம் தான். இவனே முதல் நாள் இப்படி தான் பேசினான். இப்ப அம்மா தம்பி இருவரும் இவன் முன்னால் இப்படி பேசறாங்களே… நல்ல அபிப்பிராயம் அவனுக்குத் தன் மேலே இல்லையெனத் தெரியும். நேற்று ஏதோ என் நல்ல நேரம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இங்கே இருந்தால் சொல்லாமல் இருக்க மாட்டானேயென எண்ணியவளுக்கு அழுகை வரப்பார்த்தது.

வெளியே இன்னும் ரஞ்சனியின் குரல் ஒலிக்க அதுக்கு ஆதிஜித் சொன்ன பதிலில் பதிலின்றி போயினர் இருவரும்.

அதை உள்ளே இருந்து கேட்டவளுக்கோ சுரீரென்று இருக்க இப்போது அதற்கு வேறு சண்டை போடனுமா என மனம் ஆயாசமாக உணர்
ந்து தளர்ந்து போனது ஆருத்ராவுக்கு.
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அப்படியென்ன சொல்லி இருப்பான் ஆதி 🤔