• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராவணனின் ராஜ்ஜியம்...8

MK23

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
11
10
13
Tamil nadu
அத்தியாயம்… 8


அன்றைக்கும் பள்ளிக்கு விடுமுறை எடுத்தால் தங்குவதற்கு இடம் தேடிச் சென்றாள் ஆருத்ரா.

இரண்டு நாளாக அலைகிறாள். சரியான இடம் அமையாமல் இருக்க அவனின் வீட்டில் இருக்கவும் முடியாமல் மனதிற்குள் ஒரு தவிப்பினை உண்டாக்கி இருந்தது.

ஆதினி வீட்டில் இருக்கும்போது அவளின் பின்னாலே சுற்றிக் கொண்டும் இரவில் அவளை இறுக அணைத்துக் கொண்டும் படுக்கும் குழந்தையின் செயலில் ஒரு பாதுகாப்பினை தேடுவது போல இருக்க… அதிலே மனம் வருத்தம் தான். ஆனால் அவனிடம் இதற்காகப் பேசினால் எனக்கு எல்லாம் தெரியும் என்கிற அளவுக்குப் பேசுவானென நினைத்தவள் அன்று ஹாஸ்டல் தேடிவிட்டு ஆதினி வீட்டுக்கு வர அங்கே ஆதிஜித் சத்தம் அதிகமாக இருந்தது.

விரைந்து உள்ளே வந்தவள் அங்கே இருந்த காட்சியில் அதிர்ந்து நின்றாள் ஆருத்ரா.

பெரியவர் ஒருவரும் ஒரு அம்மாவும் நிற்க ஆதினியோ பொன்னம்மாளின் கைக்குள் அடைக்கலமாக இருந்தவளை கவனித்ததும் வில்லிருந்து புறப்படும் அம்பாக வேகமாக வந்து ஆருத்ராவைக் கட்டிக் கொண்டவள் ‘’நீங்கள் எங்கே போறீங்களோ? அங்கேயே என்னையும் கூட்டிட்டு போய்யிருங்க’’ எனத் தேம்பிய படி பேசிய ஆதினியை அதிர்ச்சியுடன் நோக்க…

மகளின் பேச்சில் மேலும் முகம் இறுக அங்கே நின்ற பெரியவரைப் பார்த்து ‘’உங்க பெண் என்று பாராமல் அன்று அவளைப் பழி வாங்க லாரி வைத்து ஏற்றிக் கொன்று என்னிடமிருந்து பிரித்து விட்டீங்க. இன்னிக்கு என் மகளைப் பிடித்துக் கூட்டிட்டு போய் என்ன செய்யப் போறீங்க. அவளையும் கொன்றுவிடலாம் திட்டமா’’… எனப் பேசியவனின் வலியை உணர்ந்தவள் ஆதினியோடு அவன் அருகே வந்தாள் ஆருத்ரா.

அவன் மனைவியைக் கொன்றது அவளின் அப்பாவா என்பதிலே அதிர்ந்தவளுக்கு…

‘’பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் குடும்பம்…. இதில் சொந்தமாவது பந்தமாவது’’ என வெறுத்த குரலில் சொல்லியவனை இன்று மகளை இழக்க தயாராக இல்லை. தன் மனைவியின் மறு உருவம் தன் மகள் என்ற அவளைத் தன்னிடம் நெருங்காமல் வளர்த்தாலும் எங்கே அவளையும் கொல்ல எதாவது வழி தேடுவார்களேயென எண்ணியவன் தன் அன்பினை கூடக் காட்டாமல் ஒதுக்கி வைத்திருந்தான் பெற்ற மகளை அதீத அன்பைக் கொண்ட பாவப்பட்ட தந்தை.

இன்று சொந்தம் கொண்டாடி எங்க வீட்டு வாரிசு அவள் என அவளை அழைத்தே செல்வோம் எனப் பேசும் மாமாவையும் அவரின் மனைவியும் உதாசீனமாகப் பார்த்தவன் ஆருத்ரா தன்னருகே வந்ததும் சட்னு ‘’இவ தான் என் மனைவி. என் குழந்தைக்கு அம்மா. இனி அம்மா இல்லாமல் என் பெண் வளரமாட்டாள். இனி அதுயெல்லாம் காரணம் சொல்லிகிட்டு இனி இங்கே வராதீங்க’’ எனத் தயவு தாட்சனையின்றி பேசியவனோ ஆருத்ராவை தன் தோளோடு அணைத்தும் மகளை இன்னொரு பக்கம் அருகே பிடித்துக் கொண்டு நின்றவனின் முகத்தை அதிர்வுடன் நோக்கியவளுக்கு உலகமே தட்டமாலை சுற்றியது.

என்ன பேசுகிறான் இவன்?

தெரிந்து பேசறானா… இல்லை தெரியாமல் பேசறானா எனத் தெரியலயே …. இவன் பொண்ணுக்கு ஹெல்ப் பண்ண போய் நானே நாய் படாத பாடு படுவது பத்தாதா…

வகுப்பில் படிக்கும் குழந்தை உதவ போய் இவனிடம் பேச்சு வாங்கியது மட்டுமல்லாமல் அம்மா தம்பி எல்லாரும் ஒதுக்கி வெளியே துரத்தி விட்டது பத்தாதா. இதுல புதுசா ஒன்றை கிளப்பிவிடறானேயென மனதிற்குள் புலம்பியவள் அவன் பிடியிலிருந்து நெளிந்து வெளியே வர முயற்சிக்க…

அவளை ஆழ்ந்து பார்த்த விழிகளின் பாஷையில் அவள் முயற்சியைத் தடுத்து ‘’உங்க பெண் வாழக் கூடாது நினைத்தவர்கள் அவளின் குழந்தையை வாழ விடுவீங்களா…. இனி இந்தப் பேச்சை எடுத்துக் கொண்டு இங்கிட்டு வந்து விடாதீங்க. வெளியே போங்க’’ எனக் கர்ஜனை குரலில் கத்தினான் ஆதிஜித்.

அவனின் பேச்சிலே தளர்ந்து வெளியே செல்பவர்களைப் பார்த்தவளுக்கு பாவமாகத் தான் இருந்தது.

ஆனால் அவர்கள் பண்ணிய பாவத்திற்குகான பரிசு இந்தக் குழந்தை தான் தாயை இழந்து தவிக்கது என மனம் வருந்தியவள் அவனை விட்டு விலக அவனும் அவளின் தோளிலிருந்து கையை எடுத்தவன் எதுவும் பேசாமல் தன்னயறைக்குள் அடைந்து கொண்டான்.

அவன் மனம் தவிப்பை உணர்ந்தவளோ இதற்கு எப்படி ஆறுதல் சொல்ல? என யோசிக்க ஆதினியோ இன்னும் அவளை நெருங்கிப் பருந்துக்கு பயந்த கோழி குஞ்சு தாயின் இறக்கையில் பதுங்கிக் கொள்ளும். அப்படி இருந்தது ஆதினி ஆருத்ராவிடம் தஞ்சம் புகுந்தது.

அவளைச் சமாதானம் பண்ணிச் சாப்பிட வைத்தவள் இன்னும் ஆருத்ரா விட்டு விலகாமலே இருக்கவும் கதைகள் சொல்லிச் சிரிக்க வைத்து அவளை நார்மலானவுடன் ‘’போய் அப்பாவைச் சாப்பிட கூப்பிடு’’ என அனுப்ப ஆதினியும் தயக்கத்துடன் சென்றாள் ஆதிஜித் அறைக்குள்.


அவனின் பேச்சில் தனக்குள் கோபம் இருந்தாலும் அவன் வீட்டில் இருக்கும்போது ஏனோ அவனைத் தனியாகப் பார்க்கவோ இருக்கவோ அவளால் முடியவில்லை.

அவனே சொன்னானே… தனிமை கொல்லது என்று … அதுவும் நினைவுகளோடு போராட முடியாமல் தவிக்கிறேன் என அன்று சொல்லிய அவனின் குரல் அவளின் செவியில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இன்று தன் சம்மதம் இல்லாமல் அவனே உரிமை எடுத்துப் பேசியது கோபத்தை ஏற்படுத்தினாலும் அந்த நேரத்தைச் சமாளிக்க கூறி இருக்கலாமென இவளே முடிவு செய்தும் கொண்டவளுக்குத் தெரியவில்லை. அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் மனதிலிருந்து வந்தது என அறியவில்லை ஆருத்ரா.

ஆதினி மெதுவாகத் தன் அப்பாவின் அறைக்குள் சென்றவள் அங்கே அவனோ படுக்கையில் தலைக்கு மேலே கைவைத்து படுத்திருந்தவனின் மனம் கொதிகலனாக மாறியிருந்து…

இந்த நாலு ஐந்து நாளுக்குள் எத்தனை பிரச்சினைகள். பழையதில் வாழ்ந்தவனுக்கு நிகழ் காலத்தில் அழைத்து வருவதற்கு தான் ஆதினி பெரிய மனுஷி ஆன நாளாக மாறிவிட மகள் ஒரு புறம்…. நினைவுகள் ஒரு புறம்… ஆருத்ரா அவள் வந்தபிறகு வீட்டிற்குள் நடக்கும் மாற்றங்கள். தங்களால் அவள் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் வீட்டிலிருந்து வெளியே வந்தாலும் திடமாக நின்று நிதானமாகத் தன் செயல்களில் உறுதியாக இருப்பது எதாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியமும் அவனுக்கே பிரமிப்பாக இருந்தது.

இந்தளவுக்கு தைரியமான பெண்ணே தன் தாய் தம்பி பேசியதை ஒதுக்கித் தன் வாழ்க்கை எது தேவை? என ஆராய்ந்து அதன் வழியில் போகும் தெளிவை கண்டவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது.

இதில் தேவியின் அம்மாவும் அப்பாவும் வந்து ஆதினி அழைத்துப் போயே ஆகணும் விடாப்பிடியாக நிற்பவர்களை விலகிச் செல்ல ஆருத்ரா தான் ஆதினியின் அம்மா எனச் சொல்லியவன் அதை நிஜமாகவே நடந்தால் நம் பெண்ணிற்கு துணையாக இருப்பதை விட இனி வரும் காலத்தில் மகளின் மனதிற்குள் ஏற்படும் மாற்றங்களைப் பகிர அம்மாவென ஒருவர் வேண்டும் என நினைப்போடு தான் சொல்லிவிட்டான்.

ஆனால் அதைச் செயல்படுத்த இனி ஆருத்ராவிடம் பேச வேண்டும். இப்பவே வெளியே ஹாஸ்டல் தேடிக் கொண்டிருப்பவளை நிரந்தரமாக இங்கே தங்க வைக்க இது தான் வழியென நினைத்தவன் தன் மனைவியிடம் மானசீகமாக ‘தேவி எனக்குள் பல குழப்பங்கள் இருக்கு. இதை எல்லாம் சரிபண்ணிக் கொடுடி. நிஜமா நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை தான். இப்ப வாழ்வதே நம் மகளுக்காகத் தான். ஆனால் அவளை என்னால் சரியாக வளர்த்த முடியுமா என்ற பயம் அதிகமாகிட்டே இருக்கிறது. உன்னைத் தான் காப்பாற்ற முடியாமல் விட்டுவிட்டேன். ஆனால் நம் மகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கி விட வேண்டும். உன் கனவுகளை நினைவாக்க வேண்டும் என்ற ஆசையில் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். இதில் இன்று உன் அம்மா அப்பாவும் வந்து தேவை இல்லாத பேச்சுகள். இப்படியே போனால் நம் மகளின் மனம் கஷ்டப்படுமே. புரியாத வயதில் செத்து போகணும் முடிவு செய்தவளை நான் எப்படி காப்பாற்றுவேன்?. நீ தான் இதற்கு நல்ல வழியே கொடுக்கணும்’ எனத் தன்னுள் புலம்பிக்கொண்டிருந்தான் ஆதிஜித்.

‘என் மனக்குழப்பத்திற்கு நீதான் தீர்வு சொல்லணும்’ என நினைத்துக் கொண்டிருந்தவன் அருகே வந்த ஆதினி ‘’அப்பா’’ என அழைக்க முதல்முறையாகத் தன்னருகில் வந்த மகளை எழுந்து அமர்ந்தவன் ஆழ்ந்து பார்த்து ‘’ஆதி குட்டி’’ என அழைத்து அணைத்துக் கொண்டான் மகளை.

பிறந்தப்ப தூக்காத மகளை அணைத்துக் கொண்டிருந்தவன் விழிகளில் கண்ணீர் படலம்.

எத்தனையோ ஆசைகளை உள்யடக்கி தன் மகளைத் தூர நிறுத்தியவன் இன்று ஏனோ மகளை விடாமல் அணைத்துக் கொண்டவனின் அணைப்பில் ஆதினிக்கு மகிழ்ச்சி கடலில் மூழ்கினாள். அப்பா அப்பா என வாய் ஓயாமல் சொல்லிய மகளையிடம் மௌனமாக மன்னிப்பை யாசித்துக்கொண்டிருந்தான் அந்தப் பரிதாப தந்தை.

சிறிது நேரம் கழித்து மகளைப் பக்கத்தில் அமர வைத்தவனோ இந்த அப்பாவை ‘’மன்னிச்சுடு குட்டி’’ எனக் கேட்டவனை அப்பா என்ற வார்த்தைக்கு மேலே ஆதினியால் பேச முடியவில்லை.

‘’இனி அப்பா உன்னைத் தனியாக விடமாட்டேன் குட்டி’’ என்றவன் ‘’இனிமேல் அன்று பேசியது போலப் பேசக் கூடாது. எனக்கு உன்னை விட்டால் யாருமில்லை குட்டி’’ எனத் தவிப்புடன் சொல்லியதைக் கேட்ட ஆதினி அப்பாவின் மேல் உரிமையாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

மகளின் தலையை வருடியபடி ‘’நீ ஆருத்ரா மிஸ் பற்றி என்ன நினைக்கிற’’ எனக் கேட்டவனை சிறு குரலில் தயங்கியபடி ‘’அப்பா நான் ஒண்ணு சொல்வேன் கோவித்து கொள்ள மாட்டீங்க தானே’’ எனக் கேட்க….

‘’சொல்லுடா குட்டி அப்பா எதுவும் சொல்லமாட்டேன்’’ என உறுதி கூறியதும்….

‘’ மிஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் பா… இந்த நாலு ஐந்து நாளாக அவங்க என் கூடப் படுக்கிறாங்க. அதனால்தான் நான் நல்ல தூங்கிறேன் பா. அவங்க தனியாக ஹாஸ்டல் போகணும் சொன்னாங்க. ஆனால் அவங்க கிட்டே போக வேண்டாம் சொல்லப் பயமாக இருக்கு. நீங்க என்ன சொல்வீங்க? என்ற பயமும் இருக்கு’’ எனச் சின்னக் குரலில் சொல்லிய மகளை ஆழ்ந்து பார்த்தவன்…

‘’ அவங்க இங்கேயே இருந்தால் நீ சந்தோஷமாக இருப்பீயா குட்டி’’ எனக் கேட்க…

‘’ கண்டிப்பாக. அவங்க விதவிதமாகத் தலை சீவி பூ வைத்து… இங்கே பாருங்கள் எனக்கு மெகஹந்தி கூட வைத்து விட்டாங்க. அவங்க போய்யிட்டால் மறுபடியும்’’ சொல்லியவளுக்கு வார்த்தைகளை எப்படி சொல்லுவது எனப் புரியாமல் தடுமாறினாள் ஆதினி. ‘’எனக்குப் பிறந்தலிருந்து அம்மாவைப் போட்டோவில் தான் பார்த்து இருக்கேன். ஆனால் எனக்கு அம்மா வேணும் பா’’… எனச் சொல்லிய மகளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

‘’அப்பாகிட்ட கேட்க இனி எதற்கும் தயங்கவே கூடாது பாப்பா. அதைவிட முதல் முறையாக ஆருத்ரா இங்கே இருக்கணும் கேட்கிற. என் மகளின் ஆசையை நான் கண்டிப்பா நிறைவேற்றுவேன்’’ என உறுதியாகக் கூறிய அப்பாவை அணைத்துக் கொண்டாள் ஆதினி.

‘’சரி வா வெளியே போகலாம்’’ என மகளை அழைத்துக் கொண்டு வந்தவன் அங்கே டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த ஆருத்ரா தன் நகத்தைக் கடித்தபடி யோசித்து கொண்டிருந்தாள்.

தன் வாழ்க்கை எங்கே? எந்தத் திசையில் போகுதோ எனப் புரியாமல் சில குழப்பங்களோடு அமர்ந்திருந்தவளின் அருகே ஆதினியும் ஆதிஜித் வந்தார்கள்.

அவளின் அருகே ஆளுக்கொரு பக்கம் அமர அதிலே அதிர்ந்தவளோ ‘’என்ன யோசனை ஆரு? எனக் கேட்டபடி ஆதிஜித் அவளுக்குத் தட்டு எடுத்து வைத்தவன் ஆதினியோ தோசை எடுத்துத் தட்டில் வைத்தாள்.

தனக்கு ஒரு தட்டில் தோசை வைத்துக் கொண்டவன் சட்னியை அவளுக்கு ஊற்றிவிட்டு தனக்கும் ஊற்றிக் கொண்டவனை…

என்னடா நடக்கது… என்ற பார்வையோடு பார்த்தவளை ‘’சாப்பிடு’’ என்றவன் தானும் சாப்பிட ஆரம்பித்தான். ஆதினியோ அவளுக்கு ஒரு வாய் எடுத்து ஊட்டி விட ஆருத்ராவோ அப்பாவும் மகளுக்கும் என்னடா ஆச்சு. முதல கிணற்றில் போட்டக் கல்லைக் காணாம் போல என் வாழ்க்கை எங்கே எப்படி போச்சு தேடிக் கிட்டு இருக்கேன். இதில் புதுசா என்ன நடக்கது. நேற்று அம்மாவிடம் தம்பிடமும் வீர வசனம் பேசி அனுப்பி வைத்தார் உன் அப்பா.

அதற்கே விடையே காணாம். இதில் இன்னிக்கு பேசியது அதிகபடி. ஆனால் அதைப் பற்றிப் பேசாமல் இருவரும் ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து தோசை ஊட்டி விடறீங்க. இதில் அப்பாவும் பொண்ணும் ராசி ஆகிட்டிங்களா என்ன எனத் திருதிரு முழித்தாள் ஆருத்ரா.

அவளை ஓரக்கண்ணால் கவனித்தபடி சாப்பிட்டவன் ‘’சீக்கிரம் சாப்பிட்டு வா ஆருத்ரா நாம் பேசலாம். அதைவிட இன்னிக்கு என் மனசு ரொம்ப லேசாக இருக்கு. நானும் நீ ஆதினி மூன்று பேரும் கடற்கரைவரை காரில் ஒரு ரவுண்டு போய்யிட்டு வரலாம்.

ஆதினியை நான் முதல்முறையாக அங்கே தான் கூட்டிட்டு போகணும் ஆசைப்படறேன்’’ எனச் சொல்லியவனை ஆருத்ராவோ வாய் பிளந்து பார்க்க …

ஆதினியோ ‘’ஐ கடற்கரைக்குப் போறோமா… தேங்க்ஸ் பா’’ எனக் குதித்தாள்.

அவளின் ஆசையும் ஆர்ப்பரிப்பும் ஆர்ப்பாட்டத்தைக் கண்ட இருவருக்குமே கண்ணில் நீர் வடிந்தது.

சின்ன ஆசை தான். அதைக் கூட இன்று வரை நிறை
வேற்றாமல் இருந்த தன்னை நினைத்து வெட்கி தான் போனான் ஆதிஜித்.
 
  • Love
Reactions: Kameswari