• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராவணனின் ராஜ்ஜியம்...9

MK23

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
11
10
13
Tamil nadu
அத்தியாயம்…. 9


கடற்கரை ஒட்டிய சாலையில் காரை ஓட்டிக் கொண்டு வந்தவன் அருகில் ஆதினியும் பின்னால் ஆருத்ராவும் அமர்ந்திருக்க ஆதினியோ காரின் சன்னலை லேசாக திறந்து வைத்து அதில் வீசும் காற்றை சுவாசித்தபடி விளக்குகளில் ஒளிரும் கடற்கரையின் அலைகளை ஆருத்ராவிடம் காமித்து குதித்தாள்.

“மிஸ் சூப்பரா இருக்கு பாருங்க…. அழகா இருக்குல என்றவள் அப்பா நீங்களும் பாருங்களேன்”… எனத் தன் அப்பாவையும் அழைத்து காட்டி அவளின் உலகத்திற்குள் இருவரையும் இழுத்தாள் ஆதினி.

அவளின் மலர்ந்த முகமும் ஆரப்பாட்டமான பேச்சும் ஆரப்பரிப்பும் சிரிப்பை இருவரும் ரசனையோடு ரசித்தாலும் ஆதிஜித் மனதிற்குள் வலி அதிகமானது.

என் மகளின் இந்தச் சின்ன ஆசையை கூட நிறைவேற்ற முடியாத அப்பாவாக தான் நடந்து கொண்டதை எண்ணி வெட்கிக் கொண்டவனுக்கு மீண்டும் நத்தையாக தனக்குள் சுருண்டு கொண்டான் ஆதிஜித்.

மனைவியோடு தினமும் இந்தக் கடற்கரையில் இரவு எட்டு மணிக்கு மேலே இரு சக்கர வண்டியில் ஒரு ரவுண்டு அடிக்கும் போது அவள் தன் இடையை கட்டிக் கொண்டு “வேகமாக போங்க” எனக் கூச்சலிட்டு விசில் அடித்து அவளின் ஆசையை பார்த்தவன்.

அதுவும் பின்னால் இருந்து கட்டிக் கொண்டு அவனை இறுக்கி லேசாக எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு தன் காதலை காட்டியவள். அவளின் ஒவ்வொரு செயலும் அவனின் அணுவில் நீக்கமற நிறைந்திருக்க சட்னு அவனால் நிலை கொள்ள முடியாமல் ஓரமாக வண்டியை நிறுத்த “என்னாச்சு” பதறினாள் ஆருத்ரா.

“அப்பா…. அப்பா.. ஏன் உங்க முகம் மாறிருச்சு? … எதாவது பண்ணுதா” எனக் கேட்டவளுக்கும் பதில் சொல்லாமல் தன் இதயக் கூட்டை மெதுவாக தடவி விட்டவன்…

“ஆருத்ரா ஆதினியை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் நடங்க … நான் வந்தறேன்” எனச் சொல்லியவனின் குரல் ரொம்ப மெலிந்து எதையோ தாங்க முடியாத சுமையை சுமப்பது போல இருக்க…

“ ஆதி உங்களுக்கு உடம்பு எதாவது பண்ணுதா…. வேணுமானால் ஹாஸ்ப்பிட்டல் போகலாம்” எனப் பதட்டத்துடன் கேட்டு காரிலிருந்து இறங்கி அவன் பக்கம் வந்து நின்றவளின் முகத்தில் அச்சம் குடிக் கொண்டிருக்க…

அதைக் கண்டவனின் விழிகள் இறுக மூடித் திறந்தவன் “ஐ ம் ஆல் ரைட் மா … பிளீஸ் ஆதினி என் முகம் மாறியதைப் பார்த்து பயந்து வி்ட்டாள். நீ கூட்டிட்டு போ. இது பாதுகாப்பான இடம் தான்” எனச் சொல்ல….

“ ஆதினி வாடா”... என அவளை அழைக்க அவளும் இறங்கியதும்… “அப்பா” என அழைத்தவளை…

“ஒண்ணுமில்லே ஆதிமா … நீ மிஸ் கூடப் போ நான் வரேன்” எனச் சொல்லி ஆருத்ராவோடு அனுப்பி வைக்க…

இருவரும் திரும்பிப் பார்த்தபடியே நடப்பதைக் கவனித்தவனுக்கு தன் நெஞ்சத்தை அழுத்தி பிடித்து ‘கடவுளே என்னால் எப்படி என் தேவியை மறக்க முடியும்’ என மனதினுள் கதறினான் ஆதிஜித

‘நிழலாக இருக்கும் பிம்பத்திற்கும்
உயிர் இல்லை .நினைவுகள் மட்டும் உயிரோடு உரையாடிக்
கொண்டிருக்கிறது …. நான் என்ன செய்வேன்…. நிஜத்திற்கும் நிழலுக்கும் இடையே நான் போராடியே என் பெண்ணின் வாழ்க்கையும் சேர்த்து அழித்து விடுவேனா’ எனப் புலம்பியவன் தூரத்தில் செல்லும் அவர்களைப் பார்த்தபடியே காரினுள் அமர்ந்திருந்தான் ஆதிஜித்.

தன்னவள் தன்னுடன் வாழ்ந்த காலம் சொற்பமே. ஆனால் அவளைக் கொண்டே என் உலகம் இயங்குகிறது. அதிலிருந்து மீள என்னால் எதுவும் செய்யமுடியவில்லையே. எதாவது ஒன்றாவது தன்னைத் திசை திருப்பி விடும் நினைத்தால் அதுவும் வழியில்லை என நினைத்தவன் இறங்கி சென்ற ஆதினியும் ஆருத்ராவும் தூரத்தில் புள்ளியாக தெரிய சட்னு இறங்கி அவர்களை நோக்கிச் சென்றான் ஆதிஜித்.

இருபட்ட மனத்தோடு இருப்பவனோ விரைந்து அவர்களோடு இணைய ஆதினியின் வாடிய முகத்தைக் கண்டு மனம் வருந்தினான் ஆதிஜித்.

“ஆதி குட்டி… அப்பா வந்திருவாங்க. அவங்களுக்கு இன்று ஓவர் டென்ஷன் தானே. அதில் வேறு உன்னை வெளியே கூட்டிட்டு வரணும் கூட்டிட்டு வந்திருக்காங்க. எதுக்குத் தெரியுமா. உன் கூடவே இருக்கத் தானே” எனச் சமாதானமாக பேசியபடி அவளுடன் நடக்க

“இல்லை மிஸ்… அப்பாவுக்கு என்னை எப்பவும் பிடிக்காது. இன்னிக்கு ஊரிலிருந்து அவங்க வந்தாங்கனு நல்லா பேசினார். வெளியே கூட்டிட்டு வந்தாலும் அவர் நம்முடன் வரல பாருங்க. அவருக்குப் பிடிக்காத எதையும் இனி செய்ய சொல்ல மாட்டேன். வாங்க.. நாம் வீட்டுக்குத் திரும்பப் போகலாம்” என அழு குரலில் சொல்லிய ஆதினியின் பின்னாலே வேக பெருமூச்சுடன் வந்தவனோ அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்க அதைக் கண்டு திகைத்து அதிர்ந்து பார்த்த ஆதினியோ…

“ அப்பா” எனக் கூச்சலிட்டு அவனின் கழுத்தில் ஜம்ப் பண்ணிக் கட்டிக் கொள்ள…. தன் இரு கரங்களைக் கட்டிக் கொண்டு அவர்களைப் பார்த்தபடி நின்றாள் ஆருத்ரா.

அவளைத் தூக்கியவனோ இறக்கி விட மனமே இல்லாமல் இறக்கி விட ‘அப்பா அப்பா!” என ஆயிரத்தெட்டு அப்பா கூப்பிட்டாள் ஆதினி.

சிறு குழந்தைகளின் உலகம் வேறானது. அதில் அவர்களுக்குரிய எதிர்ப்பார்ப்புகள் ஆசைகள் எல்லாம் நிராசையாக போகும் போது அவர்களின் பாதை எதை தேர்ந்தெடுப்பது எனத் தெரியாமல் தடுமாறி குழம்பி விடுவார்கள். அதன்பின் அவர்களின் வாழ்க்கை திசை மாறிச் சென்று விடும்.

கிடைக்க வேண்டிய அன்பு கிடைக்கும் நேரத்தில் கிடைத்தால் அதற்குரிய மதிப்பு அதிகம் தானே. சிறு வயதிலிருந்து கிடைக்காத ஒன்றை கிடைத்த குழந்தையோ அது மீண்டும் தன்னை விட்டு விலகிப் போய்விடுவாரோ என்ற அச்சம் இருக்க தானே செய்யும். மற்றவர்கள் எத்தனை முறை சொன்னாலும் ஆழப்பதிந்த ஒன்றை அவ்வளவு எளிதில் ரப்பரால் அழிப்பது போல அழிக்க முடியுமா.

அதன்பின் ஆதினி தன் அப்பாவின் கைகளை விடாமல் பற்றிக் கொண்டவளின் தலையை வருடியவன் கடலின் அருகே அழைத்துச் செல்ல ஆருத்ராவோ “நான் இங்கே அமர்ந்து கொள்கிறேன்” எனக் கடற்கரை மண்ணில் அமர்ந்து விட்டாள்.

ஆதினியோ “அப்பா பிளீஸ் பா கடல் அலையில் காலை நனைக்கலாம்” என முகத்தை சுருக்கி கேட்டவிதத்தைக் கண்டு சிரித்தவன் தன் காலில் பேண்ட் முழுங்கால் வரை சுருட்டி விட்டு மகளோடு அலைகளில் விளையாடினர் இருவரும்.

ஆதினியின் முகத்தில் மலர்ந்த சிரிப்பினை பார்த்தபடி அமர்ந்திருந்த ஆருத்ராவுக்கு மனம் லேசானது. இந்த நாலைந்து நாட்களில் தன் வாழ்க்கை மட்டுமல்ல. இந்தப் பெண்ணின் வாழ்க்கையும் மாறிவிட்டது.

அதன் விழிகளில் தான் எத்தனை ஏக்கம்?. அத்தனையும் வறண்ட பாலையில் பெய்யும் மழையாக பெய்து அவளின் மனத்தை குளிர்வித்து விட்டதே.

இத்தனை நாட்களாக அம்மா இல்லாமல் அப்பாவின் அன்பிற்கு ஏங்கியவளுக்கு அது கிடைத்தவுடன் அவள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள்?. இதே மகிழ்ச்சியும் சந்தோஷமும் அவளின் வாழ்க்கையில் நிலைத்து இருக்கட்டும் என வேண்டிக் கொண்டு இருக்கும் போதே….

ஆதினி “மிஸ் நீங்களும் வாங்க ஜாலியாக இருக்கிறது” என அழைக்க ….

“வேண்டாம் டா… நீ விளையாடு” எனச் சொல்லவும் ஆதிஜித் குழந்தையின் காதில் “நீ போய் அழைத்து வா” என அனுப்பி வைத்தான் ஆதினியை.

ஆருத்ராவின் அருகே வந்தவளோ அவளின் கைகளைப் பிடித்து இழுக்க “இரு இரு வரேன்” என எழுந்தவள் நடுவில் ஆதினி மற்ற இருவரும் ஆளுக்கொரு பக்கம் கைகளைப் பிடித்து அலைகளோடு விளையாடினார்கள்.

நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஆதிஜித் தான் “போதும் ஆதிமா. வா கொஞ்ச நேரம் மணலில் உட்காரலாம்” எனக் கூப்பிட “இன்னும் கொஞ்ச நேரம் பா” என்றவளை மறக்க முடியாமல் ஆருத்ராவை பார்த்தான் ஆதிஜித்.

“ஆதிகுட்டி.. வாங்க! நாம் மணலில் வீடு கட்டலாம்” எனச் சொல்லி அழைத்து சென்று மணலில் வீடு கட்டவது எப்படி அவளோடு பேசிக் கொண்டே ஆருத்ராவும் ஆதினியும் மணல்வீடு கட்டினார்கள்.

“மிஸ் நானே கட்டறேன்” என்றவளிடம் “ம்ம் செய்” எனச் சொல்லி ஒதுங்கிய ஆருத்ராவை தன்னருகில் உட்கார அழைத்தான் ஆதிஜித்.

அவனின் அருகே அமர்ந்தவளை ஆழ்ந்து பார்த்தவனோ “ஆரு” என அழைக்க….

அவளோ “இந்தப் பெயரை உங்கள் மனைவியையும் அழைத்து இருப்பதால் என்னை அப்படி கூப்பிடுருங்களா” எனக் கேட்டவளை விழிகள் அகல உற்றுப் பார்த்தவன்…

“ இல்லை… அவளை நான் எப்பவும் தேவி என்று தான் அழைப்பேன்” எனச் சொல்லியவன்….

உன் பெயரைக் கேட்டவுடன் எனக்குக் கோபம் வந்தாலும் ஆனால் முதல் முறையிலிருந்து ஆரு எனத் தான் கூப்பிட தோன்றியது” என்றவன்…

“ நேற்று உன் அம்மாவும் தம்பியும் பேசிய போது நான் சொன்னது உனக்குக் காதில் விழுந்திருக்கும் நினைக்கிறேன்” என்றவனை…

‘ ம்ம்’ எனத் தலையசைத்தவளை “அவர்கள் அளவுக்கு அதிகமாக உன் கேரக்டரை பற்றிப் பேசியது மட்டுமல்ல…. என் பெண்ணிற்காக உன்னை மயக்கி வைத்து இருக்கேன் எனச் சொல்லவும் தான் நான் ஆமாம் எனச் சொன்னேன்” என்றவன்…

“ இன்று தேவியின் அம்மாவும் அப்பாவும் வந்தபோதும் உன்னை என் மகளுக்கு அம்மா என அறிமுகப்படுத்தி விட்டேன். இதில் எதிலும் உன்னைக் கேட்டும் செய்யவில்லை. ஆலோசித்தும் பேசவில்லை.

அந்த நேரத்தில் என் ஆழ் மனம் சொன்னதை பேசிவிட்டேன்” என்றவன்…

“ ஆனால் இப்பவும் நான் நினைவுகளோடு போராடிகிட்டே இருக்கேன் ஆருத்ரா. இப்படியே இருந்தால் சீக்கிரம் நானும் என் மனைவி சென்ற இடத்திற்கு சென்று விடுவேன். உண்மையை சொன்னால் எனக்கு அது விடுதலை தான்” என்றவளை அதட்டினாள் ஆருத்ரா.

“என்ன பேசிகிட்டு இருக்கீங்க? தெரிந்து தான் பேசறீங்களா…. அன்னிக்கு ஆதினி பேசியதற்கு நீங்க பேசுவதற்கு பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் அவள் குழந்தை. புரியாத வயது…. ஆனால் நீங்க அப்படியா” எனக் கடிந்தவள்…

“ இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் யாரையாவது சார்ந்தே வளர்க்கப்படுகிறோம் தான். அதில் கணவன் மனைவி உறவு என்பது புரிதலோடு காதல் வாழ்க்கையை வாழ்ந்தால் ஒருவர் இருந்து மற்றவர் இல்லாமல் இருக்கும் போது அது கொடுமையான ஒன்று தான். அன்றில் பறவைகளாக வாழ்ந்தவர்களால் வாழ முடியாது தான். ஆனால் உங்களை நம்பி ஒரு ஜீவனை விட்டுச் சென்று இருக்கிறார் உங்க மனைவி. நீங்க அவளுக்காவது வாழ்ந்து தானே ஆக வேண்டும்” எனச் சொல்லியவளின் வார்த்தைகளில் இருப்பதை அறியாதவனா….

கடலோடு போராடும் அலையாக தினம் தினம் அவனின் மனம் அனுபவிக்கும் வலி…

கடலின் முதல் அலை எது எனத் தெரியுமா?
கடைசி அலை எது தான் அறியுமா?
அணைத்து நிற்கும் கரையும்
அறிவதில்லையே அதை ….
எத்தனையாவது அலை தீண்டினாலும் ஒரேமாதிரி முத்தமிட்டு அனுப்புகிறது.
என் அடுத்தடுத்த தவிப்புகளை
நீ அப்படித்தான் விரல்விட்டு எண்ணத்தெரியாத
குழந்தைபோல் கையாள்கிறாய்.
இனி ஒவ்வொரு அலைக்கும்
கரை ஒதுங்கியும் கடல் மூழ்கியும்
அலைக்கழியும் சிப்பியின் பிரயாசையில்
எனக்கான முத்தினை செய்து அனுப்பி வைப்பாயா…. அம் முத்து என்னையும் என் மகளையும் அரவணைத்துக் கொள்ளுமா கடலே… என அவனின் விழிகள் தூரத்தில் இருந்து வரும் கடலின் அலைகளோடு உ
ரையாடிக் கொண்டிருந்தான் மனதோடு ஆதிஜித்.
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஆதி இன்னுமே ஆருத்ராகிட்ட எதுவுமே கேட்கலையே 🤔