• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ - சமித்ரா

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
278
#விமலா_ரெவியூஸ்

ஹாய் மக்களே
எல்லாரு எப்படி இருக்கீங்க, ரொம்ப நாளாச்சு இந்தப்பக்கம் வந்து, சைலன்டா வந்து சைலன்டா போய்டலாம்னு உறுதிமொழி எடுத்துருந்தேன். அதான் ஹீஹீ
ஓகே இப்போ ஏன் வந்தேன்னா வைகைல இப்ப முடிஞ்ச “இலக்கணம் பிழையானதோ” கதையைப்பத்தி சொல்லத்தான்.

அறிமுக எழுத்தாளர் - சமித்ரா
கதை - இலக்கணம் பிழையானதோ
நாயகன் - நிஷாந்தன்
நாயகி - சுஹாசினி
குட்டிப்பொண்ணு - ஆதினி
கதாசிரியருக்கு இது முதல் கதை. கதைக்களமும், கதைத்தேர்வும் அருமை. தாயன்பை அறிந்து கொள்ள முடியாத நிசாந்தனுக்கு சித்தியாக வருகிறார் ராஜலட்சுமி. ஆரம்பத்தில் இருந்தே நிசாந்தனை தந்தையோடு ஒட்ட விடாமல் பல சூழ்ச்சிகளை செய்கிறார். அதனால் அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக, பின் ஒரு நிகழ்வால் மொத்தமாக விலகுகிறான். அதன்பிறகு தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு தன் ராஜ்ஜியத்தை நிருவிக்கிறான்.
பட்டாம்பூச்சியாய் கிராமத்தில் சுற்றித் திரியும் சுகாஷினியின் வாழ்க்கையில் நடக்கும் சில கசப்பான நிகழ்வுகளால் அவள் வாழ்க்கையில் வழுக்கட்டாயமாக நுழைக்கப்படுகிறான் நிஷாந்தன்.
இப்படியான இவர்கள் வாழ்க்கையில் ராஜ்லாட்சுமியின் சதியில் இருவரும் பிரிகிறார்கள், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் நிற்கும் மனவியை சமாளித்து தங்கள் வாழ்க்கையை எப்படி சரி செய்கிறான் என்பதே கதை.
கதை எங்கும் தொய்வில்லை. குடும்ப அரசியலை மையமாக வைத்த, அருமையான குடும்பக்கதை. சில இடங்களில் எழுத்துப்பிழைகள் மட்டுமே. அதை அடுத்து வரும் கதைகளில் சரி செய்து கொள்ளுங்கள் எழுத்தாளரே.
மேலும் பல நல்ல கதைகள் படைக்க வாழ்த்துக்கள்.'

1675242175421.png
 
Top