• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ ..19

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
71
28
Karur
அத்தியாயம் ..19


சுகாசினி நிஷாந்தன் சொன்னதும் அவளால் உடனே கட்டிலில் அமர முடியவில்லை .. ஏதோ மனதிற்குள் தயக்கம் ஒரு உறுத்தல் இருக்க, உட்காரலாமா வேண்டாமா என்ற சிந்தனையோடு நின்றவளை கண்டவன், ''சுகாசினி'', என்று பெயரை அழுத்தமாக உச்சரித்தவன்,


''பயப்படாமல் உடகாரு.. இப்போது இங்கே எதுவும் நடக்கப் போவதில்லை'', என்று சொல்லியவன், ''நீ ஏதோ என்னிடம் கேட்க வந்ததைக் கேளு'', என்று சொல்ல,


அவளோ சட்டென்று ''என்னை ஏன் கல்யாணம் செய்தீங்க?'', என்று கேட்க முடியாமல் திகைத்து பார்த்தவளைக் கண்டு முறுவலித்த நிஷாந்தன்…


அவள் கேட்க நினைத்ததை அவன் வாய் மூலமாகக் கேட்கும் போது சிறு அதிர்ச்சி உண்டாக அதற்கு என்ன பதில் சொல்வது? என்று தெரியாமல் நாலா பக்கமும் தலையை ஆட்டினாள்….


அவன் அருகில் அமர்ந்த போதே அவளுக்குள் ஏனோ ஒரு தடுமாற்றம் அவனின் வசீகரமான பார்வையில் நிலை தடுமாறி தான் அமர்ந்தாள்.. அதிலும் அவனிடம் கேட்க வந்ததை எப்படி நேரடியாகக் கேட்பது என்று அறியாமல் திணறியவளுக்கு அவனே ''இது தானே நீ என்னிடம் கேட்க நினைத்தது என்று சொல்ல'', அவளோ 'ம்ம்' தலையாட்டிப் பொம்மை போல தலையை உருட்டினாள் சுகாசினி ..


அவளின் தலையாட்டிலில் சிரித்தவன், ''உனக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்? என்று எனக்குத் தெரியாது… அதைப் போல உன்னைப் பற்றியும் எனக்குத் தெரியாது தான்.. என் ஆச்சியும் உன் தாத்தாவும் சேர்ந்து முடிவு பண்ணி நம்மை இப்பந்தத்திற்குள் இணைத்து வைத்து விட்டாங்க… இதை நா வேண்டாம் சொல்லி விலகிப் போய்யிருக்க ஒரு நொடி ஆயிருக்காது.. ஆனால் என்னால் அதைச் செய்ய முடியாதற்கு காரணம் உன் தாத்தா தான்'',.. என்று சொல்ல ..


அவன் கேள்வியும் அதற்கான பதிலிலும் அவனே சொல்வதைக் கேட்டவளுக்கு..


''என் தாத்தாவா அவர் உங்ககிட்ட பேசினாரா'', என்று கேட்டவளின் பேச்சில் தனக்குத் தெரியாமல் எப்பப் போய் பேசினார் என்று உள்ளம் கேள்வி கேட்பதை அவள் முகம் காட்டிக் கொடுக்க..


அவனோ ''அவர் என்னைப் பார்க்கவில்லை, ஆனால் நீயும் உன் தாத்தாவும் உங்கள் வீட்டின் பின்னால் அமர்ந்து பேசுவதைக் கேட்டதால் தான் இக்கல்யாணம்.. ஆனால் அதற்காக மட்டுமல்ல .. இன்னும் சில காரணங்கள் இருக்கிறது .. ஆனால் அதை இப்ப தெரிந்துகொள்ளவதை விட நாம் நம்மை பற்றி நன்கு தெரிந்த பிறகு அறிந்து கொள்ளலாம்'', என்று சொல்லிவிட்டு, ''இன்னொன்று இனி உன் தாத்தாவுக்கு அந்தக் காளியப்பனால் எந்தத் தொந்தரவும் வராது.. அதற்கு நா கேரண்டி'', என்று சொன்னான் நிஷாந்தன் ,


காளிப்பனால் தாத்தாவிற்கு எந்தத் தொந்தரவும் வராது என்று சொன்னதைக் கேட்டு அவளின் மனம் லேசாக.. எப்பவும் போல கிண்டலாக பேசத் தொடங்கி விட்டாள் சுகாசினி…


''ஒ..பீரித்திக்கு நாங்க கேரண்டி சொல்வதைப் போல காளியப்பன் எதும் செய்ய மாட்டான் என்பதற்கு நீங்க கேரண்டியா'',.. என்று சிறு சிரிப்பு கலந்த கேலிக் குரலில் கேட்டவளை…


''ப்ரீத்தியா அது யாரு?'', என்று கேட்ட நிஷாந்தனுக்கு சட்டென்று அது விளம்பரம் என்பது புரியவில்லை. அவனைப் பொறுத்தவரை டிவியில் நியூஸ், தொழில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்றால் பார்ப்பது.. ப்ரீத்தி என்று அவள் சொல்லவதைக் கேட்டு முழித்தவனைக் கண்டவள்,


''சார்க்கு அதுக் கூடத் தெரியல போல.. அது எல்லாம் ஆதிக் காலத்து அரத பழசு விளம்பரம் சார்'',… என்று நய்யாண்டிக் குரலில் சொல்லிச் சிரிக்க,


அவளின் சிரிப்பை கண்டு மனம் லேசானாலும் அவளின் நய்யாண்டிப் பேச்சில் உள்ளம் சுருங்கிப் போக அவனுடைய முகபாவமே மாறியது.. ஆனால் அதை மறைத்தவன், ''ம்ம்'',.. என்று மட்டும் சொல்லியவன், ''நைட் ஊருக்குக் கிளம்ப வேண்டும்'',.. என்று மொட்டையாகச் சொல்லியவன்,

''எனக்குக் கம்பெனி கால் பேசணும்'', என்று சொல்லித் தன் அலைபேசியை எடுக்க....


அவளுக்கு முகமே மாறிவிட்டது .. சிறு கேலிக்கே இப்படி தொட்டாசிணுங்கியா இருந்தால் இவனிடம் எப்படி பேசுவது என்று புரியாமல் இருந்தவளுக்கும் இரவு ஊருக்குக் கிளம்புவதா.. என்று அதிர்ந்து அவன் முகத்தைப் பார்க்க ..



அவனோ தன் அலைபேசி வாயிலாக மும்முரமாகப் பேசுவதைக் கண்டு திகைத்து எழுந்தாள்… தாத்தாவையும் கூட்டிப் போகிறோமா இல்லையா என்று தெரியாமல் முழித்தவளுக்கு அவரை எப்படியாவது கூட்டிட்டுப் போயே ஆகணும் என்று நினைத்து அவனிடம் அதைக் கேட்க முயல.. அவனோ அதைக் கவனிக்கவில்லை..


அவளிடமும் என்றுமில்லாத தவிப்பும் தயக்கமும் இருப்பதால்.. அவனின் முகமோ எந்த பாவனையின்றி இருக்கவே அவனிடம் பேசவே ரொம்பவும் யோசித்தாள் சுகாசினி.


அவனுக்கும் அவளின் அருகாமையை பாதிக்கவே அவளிடம் பேசும் பேச்சை பாதியிலே முடித்துவிட்டு தன் வேலையில் மூழ்கினான்..


தாயின் அரவணைப்பு இல்லாதவனுக்குத் தாரமாக பக்கத்தில் அமர்ந்திருப்பவளை ஆசைத் தீர முகம் பார்த்துப் தன்னுடைய ஏக்கங்களை ஆசைகளை அவளிடம் கொட்ட வேண்டும் என்பதே அவனுடைய ஆசை மனதிற்குள் பிராண்டியது..


ஆனால் எப்பவும் பெண்களை தூர நிறுத்திப் பழகியவனுக்கு மற்றவர்களை நெருங்கிப் பழகுவது வாய்ப்பில்லாமல் போக.. தன் சித்தியால் மனதிற்குள் ஏற்பட்ட பாதிப்பால் பெண் என்றாலே காத தூரம் ஒதுங்கிச் செல்வது உண்டு ..


பெண்களிடத்தில் வலிந்து போய் பேசுவது அவனுடைய சுபாவமும் இல்லாமல் போக காலையில் தாலிக் கட்டித் தனக்கானவள் நினைத்த சுகாசினியோட நடந்த நிகழ்வுகளை கூற முடிந்தவனால் தன் உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்துப் பேசத் தெரியவில்லை… அதனால் தான் அவளின் கிண்டல் பேச்சில் கூட முகம் இறுகி மாறிவிட வேலை இருப்பதாகக் காட்டிக் கொண்டான்…


ஆனால் மனைவி திகைத்துத் தன் முகத்தைப் பார்ப்பதுமாக நிற்பதும் எதுவோ மீண்டும் கேட்க வருவதும் கண்டவனுக்கு அவளை உயர்த்தி ஒரு பார்வை பார்க்க அதிலே அரண்டவள் வேகமாக அவ்விடத்தை விட்டு

சென்று விட்டாள் சுகாசினி ..


அதன்பின் மதிய விருந்து முடிந்த போதும் சரி அவன் எதுவும் பேசாமல் இருக்க, அவனுடன் அமர்ந்து அவளால் இலகுவாகச் சாப்பிட கூட முடியவில்லை.. அவளுக்குள் இருந்ததை கேட்க முடியாமல் மனமோ அரித்துக் கொண்டிருக்க, தன் தாத்தாவைப் பார்ப்பதும் பிறகு இவன் முகத்தைப் பார்ப்பதுமாக நேரத்தைக் கடத்தினாள் ..


ஆனால் சுகாசினியின் சுபாவம் இது இல்லையே.. அவன் அருகில் தன்னால் பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொள்வது எது? என்று புரியாமலே இருக்க..


அப்போது ராமசாமியும் நிஷாந்தனும் தனியாக அமர்ந்து பேசுவதைப் பார்த்தவளுக்கு தனக்குத் தெரியாத ரகசியம் என்ன வேண்டிய இருக்கு என்ற மனதிற்குள் புகைச்சல் உண்டாக்க.. அதை வெளியே காமிக்காமல் உர்னு முகத்தை வைத்தபடி நின்றாள் சுகாசினி….


அவர்களைத் தேடி வந்த ரங்கநாயகி தான் நினைத்தைப் பேசத் தொடங்கவும்.. சுகாசினியோ அவர் பேசயவதைக் கேட்க…''தன் வீட்டுக்கு நிஷாந்தனையும் சுகாவையும் அழைத்துச் செல்வதாகக் கூறி ராமசாமியிடம் நீங்களும் வாங்க'', என்று அழைக்க,


அவரோ ''இல்ல தாயீ நா சித்த உறங்குகிறேன்'', என்று சொல்ல, அவரோ'' ம் சரிங்க, அப்படியே நா நிஷாந்தின் அம்மா சமாதிக்குக் கூட்டிப் போய் ஆசீர்வாதம் வாங்கிட்டு வந்தறேன்'', என்று சொல்லிய ரங்கநாயகிக்கு சரி என தலையாட்டிவர்,


தன் பேத்தி முகம் வாடி இருப்பதைக் கண்டு ''கண்ணு, ஏன் இப்படி விசனப்படறே?'',.. உன் வாழ்க்கையை பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைத்து விட்ட சந்தோஷம் டா எனக்கு'', .. என்று சொல்லியவரின் கண்ணும் கலங்க, சுகாசினியும் கண் கலங்கினாள்..


ஆச்சி வீட்டுக்கு எத்தனை முறை போய்யிருந்தாலும், இனி அதுதான் தனக்கானது என்பதும் இதனால் வரை தன் வீடாக இருந்தது இனி அப்படி இருக்க இயலாது என்பதை உணர்ந்தவளுக்கு மனம் வலித்தது..


அதை மற்றவர்கள் உணர்ந்தாலும் அந்த நேரத்தைப் பெண்களின் மனம் கடந்து வருவது கடினமாக இருப்பது தானே.. அதை உணர்ந்த ரங்கநாயகியோ அச்சூழலை இலகுவாக்க.. '' இத்தனை நாள் இங்கிருந்து எல்லாரையும் மிரட்டி மீன் பிடித்தவள், அங்கே வந்து என்ன என்ன அதிகாரம் பண்ணப் போகிறாளோ.. பேராண்டி அவள் இப்ப எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறாள் என்று அடக்க ஒடக்கமான பொண்ணு நினைச்சிடாதே.. பேச ஆரம்பிச்சா அப்பறம் காதில் பஞ்சு வைச்சுக்கணும்.. இல்லை உன் ஹெட் பட்ஸ் காதில் சொருகிக்கோ'', என்று கிண்டலடிக்க,


சுகாசினியோ ''ஆச்சி'', என்று பல்லைக் கடிக்க, அதைப் பார்த்துத் தாத்தாவும் ஆச்சியும் சேர்ந்து சிரிக்க அவளின் அருகில் நின்றவனோ சிரிப்பு இல்லாமல் எந்த உணர்வுகளின்றி நின்றான்..


அவன் சுகாசினி மற்றவர்களிடம் பேசுவதைப் போல சகஜமாகத் தன்னிடமும் தயக்கமின்றி உரையாட வேண்டும் எதிர்ப்பார்ப்பு அதிகமாக அவனிடம் இருந்தது ..


அவனால் மற்றவர்களிடம் அவ்வளவு எளிதாக ஒட்டிக் கொள்ள முடியாதவனுக்குச் சுகாசினி எல்லாருடையும் பேசுவதும் வம்பிளப்பதும் சுவராசிமாக இருந்ததைக் கண்டு தன்னிடமும் அப்படியே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதீதமாக எதிர்ப்பார்த்தான்…


மதிய விருந்தின் போது ஊரிலுள்ளவர்கள், வேலப்பன் தாயம்மா, வாண்டுகளோடு கதைப் பேசியபடி அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தவளைக் கவனித்தவனுக்கு தன்னிடம் அப்படி இருக்க வேண்டும் தோன்ற செய்யது தான்…


ஆனால் சுகாசினிக்கு காலையிலே அறிமுகமாகி அடுத்த நிமிடம் அவனிடம் தாலியைக் கட்டி மனைவியாக வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்ததை அவளால் இன்னும் நம்ப முடியாமல் இருக்க .. இரவு வேறு ஊர்க்கும் கிளம்ப வேண்டும் என்று நினைத்தாலே மனதிற்குள் பீதியாக இருக்க, இதைத் தாத்தாவிடம் பேசணும் நினைத்தால் அதற்குரிய நேரமும் கிடைக்காமல் தவித்தாள்.. தன்னுடைய மனதில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றிய உழன்றாள்....


அதனால் அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு அவ்வீட்டின் பொறுப்பாக எப்பவும் தான் மட்டுமே என்பதால் அங்குள்ள மற்ற வேலைகளும் அவளை இழுத்துக் கொண்டது.. ''நீ கல்யாணப் பெண் என்று கொஞ்சம் நேரம் உட்காரு'', என்று சொன்னாலும் அவளால் உட்கார முடியவில்லை.

மனதில் ஓடுகிற எண்ணத்திற்குள் மூழ்கி மூச்சயடைக்க வைப்பதைத் தாங்க இயலாமல் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தாள் சுகாசினி …


இப்ப அந்த இடத்தில் தன் தாய் இருந்திருந்தால் தனக்கு இச்சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்று கற்றுக் கொடுத்து இருப்பாரா என்று ஏக்கம் மனதில் சூழ்ந்திருக்க.. ஆச்சியின் கிண்டலுக்குப் அவள் பெரிதாகப் பதில் சொல்லாமல் அவர்களுடன் மௌனமாகக் கிளம்பி விட்டாள் ..


சீக்கிரம் அவர்களோடு போய்யிட்டு வந்து தாத்தாவிடம் பேசியே ஆகணும் என்று உறுதியோடு அவர்களோட போக… அருகில் தானே வீடு என்பதால் நடந்தே சென்றனர்..


தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றவர் அங்கே மகாலட்சுமி படத்திற்கு முன் விளக்கேற்றி விழுந்து கும்பிட்டு விட்டு அவர்களுக்குச் சாங்கியத்திற்குப் பாலும் பழமும் கொடுக்க, நிஷாந்தனோ எந்த உணர்வுகளையும் காட்டாமல் விசை போட்ட மனித இயந்திரமாக இருப்பதைக் கண்டு மனம் சுணங்கிய சுகாசினி அவனிடம் பேச முயற்சிக்கவில்லை…


ரங்கநாயகி பேசுவதற்கு ஒன்று இரண்டு பதிலை அளித்தபடி அனைவரும் தோட்டத்தில் இருக்கும் மகாலட்சுமியின் சமாதியில் சாமி கும்பிட்டு வீட்டுக்கு வந்தவர்கள் அமைதியின் பிறப்பிடம் போல மூவரிடம் மௌனமே குடியேறிருந்தது..


இரவு பேரன் கிளம்ப வேண்டும் என்று சொன்னதிலிருந்து தானும் ராமசாமியும் அழைத்துக் கொண்டு அவர்களோடு போவதா இல்ல.. அவர்களை மட்டும் அனுப்பவதா என்ற குழப்ப நிலையில் இருப்பவரை நெருங்கிய சுகாசினியோ ''எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது.. அங்கே உங்கள் மகன் மருமகள் இன்று நடந்து சென்ற முறையில் எனக்குள் ஏதோ பயமாக இருக்கு'', என்றவள், ''தன் தாத்தாவையும் அழைத்துச் செல்ல வேண்டும்'', என்று கோரிக்கையைச் சொல்ல,


அவரோ ''அதைப் பற்றி தான் நானும் யோசனை செய்யறேன்'', என்றவர் ,''நிஷாந்தனிடம் இதைப் பற்றி பேசினார்'',.


அதற்கு நிஷாந்தன் சொன்ன பதிலில் அதிர்ந்தவர், ''ஏன் ராசா இப்படி சொல்லற?'',.. என்று கேட்க ''இது என் முடிவு அல்ல ஆச்சி, இது அவருடைய முடிவு, அதன்பின் அதைப் பேசவதற்கு ஒன்றுமில்லை'', என்று சொல்லிக் கொண்டிருந்தான் ..


அப்போது அங்கே மூச்சு வாங்க வேகமாக ஓடி வந்த வேலப்பன்.. பதட்டத்துடன் திக்கித் திணறியவனிடம் ''எ..என்ன.. என்ன ஆச்சு அண்ணே?'', என்று சுகாசினியும் பயத்துடன் கேட்டதற்கு,


ராமசாமியின் வீட்டுப பக்கம் வேலப்பன் கையை நீட்ட என்னவோ ஏதோ என்று மூவரும் பதறிக் கொண்டு ஓடினர்…


அங்கே ராமசாமியோ நிம்மதியாகக் கட்டிலில் உறங்கியபடியே இருக்க அவருடைய ஆத்மா காற்றில் கரைந்து விட்டது ..


தன் பேத்தியை கரை சேர்த்து விட்ட நிம்மதியும் அவரோ படுக்கத் துயலிலே அவரின் உயிர் பிரிந்தது.


அதைப் பார்த்தவுடனே கண்டுப்பிடித்த நிஷாந்தன் சடன் பிரேக் போட்டு அப்படியே நின்றவன், பின்னாலே ஓடி வந்த சுகாசினியோ ஒன்றும் புரியாமல் மறத்துப் போய் தாத்தாவை நெருங்கி எழுப்பினாள்…


அவரோ எழுப்பினாலும் எந்திருக்க முடியாத தூரத்திற்குச் சென்று விட்டார் என்பதை அவளின் மூளை ஏற்கவில்லை ..


''எழுந்திருஙக தாத்து''.. என்றவள் ''நைட் அவர் ஊருக்குப் போகணுமே, நீயில்லாமல் நா மட்டும் போ மாட்டேன், எழுந்திருங்க'',.. என்று அவரின் உடலை அசைக்க அவரோ அசையாமல் படுத்துக் கிடந்தார்.


எத்தனை வருட. மனதின் ஆசையை நிறைவேற்றி வைத்தத் திருப்தி அவரின் முகத்தின் தேஜஸில் மின்னியது.. அதைப் பார்த்தபடி ரங்கநாயகி சுகாசினின் தோளில் கை வைத்துத் தன் மேலே சாய்த்துக் கொள்ள அவளோ கதறித் தீர்த்தாள்..


அவளின் கதறல் ஊரே எதிரொலிக்க அங்கே இருந்த அத்தனை பேரின் விழிகளிலும் கண்ணீர் கொட்டியது ..


சுகாசினின் அழுகை நிஷாந்தனைப் பாதிக்க அவளுக்கென்று இருந்த ஒற்றை உறவு இல்லாமல் போன நிலையில் அவளும் தன்னைப் போல தான் என்று எண்ணியவன் அவளிடம் நெருங்க முடியாத அளவுக்கு அவளைச் சுற்றி ஆட்களின் சிறையில் இருந்தாள் சுகாசினி…


ரங்கநாயகியோ அழுது அழுது மயக்கநிலைக்குச் செல்லும் சுகாசினியைக் கண்டவர்க்கு துக்கம் தொண்டையை அடைக்க,அவளைத் தாயம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு எழுந்தவர்…


தன் பேரனிடம் வந்து ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்கவும் அதற்குத் துணையாக வேலப்பனை வைத்துக் கொள்ளச் சொன்னவர்,


தன் தழுதழுத்தக் குரலில் அவர் மேலும் சில வார்த்தைகளை உதிர்க்க அதில் திகைத்து ஆச்சியை பார்த்தவன்.. ''இதை நீங்க சொல்லவே வேண்டாம் நா பார்த்துக் கொள்கிறேன்'', என்று பதிலை அளித்தவன் அதற்கான வேலைகளை செய்ய போன் மூலமாகச் சொல்பவர்களுக்குச் சொல்லியவன், மற்றவையை வேலப்பனைக் கொண்டு செய்து முடித்துக் களைப்பில் அப்படியே சோர்ந்து அமர்ந்தவன் மனம் தளர்ந்து போனது.. நேற்றிலிருந்து எல்லாம் கனவில் நடப்பது போல் நடக்க, இன்று அது கனவு அல்ல நிஜமே என்று உரைக்குமாறு ராமசாமியின் இறப்பு அவனுக்குப் புரிய வைத்தது …

தொடரும்..

ஹாய் ஹாய் அடுத்த அத்தியாயம் பதிவு பண்ணிட்டேன்.. படித்துப் பாருங்கள் மக்கா.. 😍
20221216_155104.jpg















.
 
  • Like
Reactions: Vathani