அத்தியாயம் ..23
நாட்களோ மின்னல் வேகத்தில் போனாலும் நிஷாந்தனின் வாழ்வில் எந்தவித மாற்றமுமில்லை.. மனைவி என்று ஒருத்தி வந்தால் தன் வாழ்வின் திசை மாறும் என்று சிறு எதிர்ப்பார்ப்பு மனதின் ஓரத்தில் சிறு துளியாக மழையின் முதலில் விழும் ஒற்றை துளியின் சிலிர்ப்பாக இருக்குமோ என்று நினைத்திருக்க அதுவோ அவன் வாழ்வில் கனா தான் போல் என்று எப்பவும் போல மனித இயந்திரமாக அவன் வாழ்க்கைச் சென்றது…
சுகாசினியும் அவனை நெருங்கவோ பேசவோ முயற்சியும் செய்யவில்லை..
ஏனோதானோ என்று அவளும் எதிலும் ஒன்ற முடியாமல் அவ்வீட்டில் அவனைப் போலவே தனித் தீவாக அந்த அறைக்குள்வஇருந்தாள்…
காலையில் கணவன் கிளம்பும் வரை அங்கே இருப்பவள் கீழே வந்து கண்ணம்மாவிற்கு எதாவது உதவி செய்தால் ராஜலட்சுமியின் மூக்கு வேர்த்து விடும்.. உடனே அவளை வார்த்தையால் சாட, அதற்குப்பின் அங்கே இருக்க முடியாமல் மாடியறைக்கு வந்து விடுவாள்..
சுகாசினியும் ஒன்றும் பேசத் தெரியாத பேதை அல்ல.. ஆனால் ராஜலட்சுமியிடம் ஏனோ வாய்க்கு வாய் பேச அது குழாயடி சண்டை போல ஆகி மற்றவர்கள் பார்வைக்கு விருந்தாக இருக்க விரும்பவில்லை ..
ஆனால் ஒரே வித்தியாசம் தினமும் தன்விகா மட்டும் அடிக்கடி தாய்க்குத் தெரியாமல் வந்து காலேஜ்ல நடப்பது பிரண்ஸ் கூடப் பேசியது என்று அவளிடம் கொஞ்சம் நேரம் பேசுவது உண்டு .. சுகாசினிக்கும் ஏனோ அவளிடம் ஒரு ஒட்டுதலோடு பழகினாள்…
அன்று தன்விகாவின் இன்னொரு அண்ணன் அஸ்வினும் மேனஜ்மென்ட் கோர்ஸ் படிக்கிற அவனும் இரவு வீட்டிற்கு வருவதாக இருந்தது ..
ராஜலட்சுமியோ வெளியே போனால் கண்ணம்மாவை உதவிக்கு வைத்துக் கொண்டு சுகாசினியும் தன்விகாவும் வித்தியாசமான உணவினை எதாவது செய்யலாம் என்று முடிவு செய்து ..
தன்விகாவை துணைக்குச் சேர்த்துக் கொண்டு யூ டியூப்ல பார்த்து சிக்கன் பிரியாணியும், நாண், பன்னீர் கிரேவி என்று செய்து அசத்திருந்தாள் சுகாசினி …
தன்விகா அன்று காலேஜ்ஜில் ரேங்க் ஹோல்டராக வந்தற்கும் அஸ்வின் வருவதை தன்விகா சொல்லவும் வித்தியாசமாக இருக்கட்டும் தன் திறமையை சமையிலில் காட்டிருந்தாள்..
இத்தனை நாட்கள் தன் கணவனுக்கு இது மாதிரி செய்து அசத்தணும் என்று நினைத்துச் செய்தாவளுக்கு, இவர்களுக்காகச் செய்வது கண்டு அங்கே இருக்கும் கண்ணம்மாவிற்கே வருத்தம் இருக்க..
ஓரளவுக்கு மேலே சுகாசினிடம் பேச முடியாத காரணத்தால் அதைச் சொல்ல முடியாமல் இருந்தார்.,
தன்விகாவோ.. ''அண்ணி இது எல்லாம் அண்ணாவுக்கு ரொம்ப பிடிக்கும் .. உங்களுக்குத் தெரியும் தானே'', என்று கலாய்க்க.. அதுவரை அவனைப் பற்றிச் சிந்தனையின்றி நின்றவள்..'' ஓ அவருக்கும் பிடிக்குமா'', என்று நினைத்து மலுப்பலோடு சிரித்துவிட்டு அவனுக்காகத் தனியாக ஹாக்பேக்கில் போட்டு சூடாக இருக்கட்டும் எடுத்தும் வைத்தாள் சுகாசினி .
இதைப் பார்த்த கண்ணம்மாவிற்கு மனம் மகிழ்ந்து எப்படியோ இனியாவது சரியாகட்டும் அவர்களின் வாழ்க்கை என்று நினைத்தபடி மற்ற வேலைகளைப் பார்த்தார்..
வெளியே போய்யிட்டு வீட்டுக்கு வந்த ராஜலட்சுமியோ கிச்சனில் சத்தம் கேட்க அங்கே வந்தவர் சுகாசினியைக் கண்டதும் கூடவே தன்விகாவைக் கண்டு மகளை ''உன் அறைக்குப் போ'', என உருமியவர், சுகாசினியிடம் ''ஒண்ணுமில்லாத வந்தவளுக்குச் சாப்பிடும் சாப்பாடு ஜீரணிக்க இந்த வேலையாவது செய்யத் தெரியதே.. பரவாயில்லை.. சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று இல்லாமல் விதவிதமாகச் செய்யத் தெரிகிறது'', .. என்று பரிகாசமாகப் பேசியவர், ''நாளையிலிருந்து எல்லா வேலையும் நீயே பாரு'',… என்று அதிகாரமாகச் சொல்லியவர், ''கண்ணம்மா இனி நீ மேல் வேலை செய்தால் போதும்'', என்று சொல்ல ..
சுகாசினிக்கோ சுர்வென்று கோபம் வர..அதை அடக்கிக் கொண்டு '' நா ஒன்றும் இந்த வீட்டு வேலைகாரி இல்லை .. நீங்க சொல்லும் வேலையை அடிமையாகச் செய்யவதற்கு வேறு ஆளை பாருங்க'', என்றவள், தன்னயறைக்குச் சென்று விட்டாள்..
சோற்றுக்காக இங்கே இருப்பதாகவும் ஒண்ணுமில்லாமல் வந்தாகப் பேசும் ராஜலட்சுமி மீது கட்டுக்கடங்காமல் ஆத்திரம் வந்தாலும் இதை எல்லாம் காமிக்க வேண்டிய ஆள் தன்னைத் தாலிக் கூட்டி வந்தவனிடம் தான், இன்று வரட்டும் என்று காத்திக்க.
அவன் வரும்முன்னே சாப்பிட்டு வந்து எப்போதும் தூங்கிவிடுவாள்.. அவன் வேலையை பொறுத்து லேட்டாகவும் வரலாம், அப்படியே நேரமே வந்தாலும் அவனோட அமர்ந்து உண்பதில்லை அன்றைய ஒருநாள் தவிர…
அறைக்குள் இருந்தாலும் அவனிடம் பேச்சு வார்த்தை இல்லாமல் மௌன மொழியை உருவாக இருவரிடமும் எந்தவித முன்னேற்றமும் வாழ்க்கையில் இல்லாமல் போக.. முன்னது யார் எடுத்து வைத்து நெருங்குவது என்று மறைமுகக் கண்ணாமூச்சி விளையாட்டால் அவன் படுக்கையில் இருந்தால் இவள் முன்பக்கம் சோபாவில் இருப்பாள்.. இப்படியே மாறி மாறி ஓடியது..
இன்று தான் ஏனோ தன்விகாவிற்குச் செய்தை எடுத்து தன் கணவனுக்கு எடுத்து வைத்தாள் .. ஆனால் அங்கே வந்த ராஜலட்சுமியின் பேச்சு அவளை தன்மானத்தைச் சீண்ட வேகமாக மாடிக்கு வந்துவிட்டாள் சுகாசினி ..
கீழே கண்ணம்மா எல்லாருக்கும் உணவை பறிமாற அப்போது தான் வந்த அஸ்வினோ ''ஆஹா சூப்பரா இருக்கு கண்ணம்மா மா'', என்று சொல்லவும் ராஜலட்சுமி முன் அவர் எதுவும் பேசாமல் இருக்க, தன்விகாவோ.. ''நிஜமா நல்ல இருக்கல.. இதை என் அண்ணியும் நானும் செய்யதமாக்கும்'', என்று இல்லாத காலரைத் தூக்கிக் கொண்டவளின் தலையில் கொட்டியவன், ''சும்மா கப்ஸா அடிக்காதே'', என்று சொல்ல..
ராஜலட்சுமியோ ''அண்ணியா.. அவ இனி இந்த வீட்டுக்கு வந்திருக்கும் புது குக்'',.. என்று சொல்லுவதைக் கேட்டு மகேந்திரன் ''ராஜி என்ன இது'', .. என்று கேட்பதைக் கண்டு அவரை முறைத்தவள், ''என்ன புதுசா மருமகள் பாசமா.. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம் அப்படி இருக்கு'', என்று சொல்வதைக் கேட்ட அஸ்வினோ'' யாருமாம் மா இதில் ஒண்ட வந்தது நீங்களா இல்லை புதுசா வந்திருவங்களை சொல்லறீங்களா'', என்று கேட்டவனை..
''வாயை மூடிகிட்டு திண்ணுட்டு எழுந்துப் போடா'', மகனையும் கடிய தன்விகாவிற்கு மனமே விட்டது தன் தாயின் பேச்சில்… அவங்க எவ்வளவு அன்பா பாசமா இருக்காங்க.. இந்த அம்மா மட்டும் எப்பவும் மற்றவர்களை விரட்டியும் திட்டிகிட்டே இருக்கே என்று சொல்வதைக் கேட்டுப் பாதிச் சாப்பாட்டிலே எழுந்து போய்விட்டாள்..
மனைவியின் பேச்சில் இவளிடம் பேசுவதற்கு குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளலாம் என்று நினைத்து மகேந்திரனும் எழுந்து போக அஸ்வினோ ''இந்த வீட்டிற்கு ஏன் தான் வருகிறோம் என்று தோனது'', என்று முணுமுணுத்துக் கொண்டே சாப்பிட்டு எழுந்து போய்விட்டான்..
ராஜலட்சுமி நிதானமாகச் சாப்பிட்டவர், மிச்சம் மீதி ஹாட்பேக்கில் இருப்பதை அப்படியே எடுத்துக் குப்பையில் கொட்டுவதைக் கண்டு அதிர்ந்து நின்ற கண்ணம்மாவிடம் ''உனக்கு மதியம் வைச்ச சாப்பாட்டை சாப்பிடு'', அதிகாரமாகக் கூறிவிட்டு செல்ல,
நல்லவேளை நிஷாந்தனுக்குத் தனியாக எடுத்து வைத்ததை இந்தம்மா பார்க்கல என்று நினைத்தபடி தன் வழக்கமான வேலைகளைச் செய்துக் கொண்டிருக்க,
வேலை முடித்து அப்போது தான் வந்த நிஷாந்தன் மாடி ஏறவும், ''தம்பி'' என்று அழைத்த கண்ணம்மாவைப் பார்த்தவனைச் ''சாப்பிட்டு போங்க'', என்று சொல்ல...
அவனோ வேலை அலுப்பில் 'வேண்டாம்', என்று தலையாட்டவும் ''இன்று சின்னம்மா தான் செய்தாங்க அதற்காகவது ஒரு வாய் சாப்பிட்டு அதுக்கு எடுத்துப் போங்க'', என்று சொல்லவும்
''சுகாசினியா'',என ஆச்சரியமாகக் கேட்டவன், டைனிங் டேபிள் அமர அவனுக்காக எடுத்து வைத்த உணவை உண்டவன் அதன் ருசி ,அவனுக்குப் பிடிக்க, ''அவ சாப்பிட்டளா'', என்று கேட்டவனை :'இல்ல தம்பி நீங்க சாப்பிட்டதும் சாப்பிறேனு சொன்னாங்க'', என்று பொய் உரைக்க,
''ஓ.. சூப்பரா செய்யது இருக்கா'', என்று சொல்லிவிட்டு அவளுக்குரியதை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனான் நிஷாந்தன்.
அங்கே சோபாவில் குறுகிப் படுத்திருந்தவளோ இவன் வரும் சத்தம் கேட்டும் எழாமல் இருக்க அங்கிருந்த டீபாயின் மீது அவளுக்கான உணவை வைத்தவன்,
''சுகாசினி நீ தான் இன்றுநசமைச்சே கண்ணம்மா சொன்னாங்க… எல்லாமே நல்லா இருந்தது… இவ்வளவு நாளா எனக்குத் தெரியல பாரேன்'', என்று பேசியபடி இருந்தவனை எழுந்து நின்று அவன் அருகில் போனவள்..
''ஏன் தெரிந்திருந்தால் நிரந்திரமான வேலைக்காரியா அப்பாயிமென்ட் போட்டுக்கலாம் என்ற எண்ணமாக… ரொம்ப படிக்காதவள், ஒண்ணும் கொண்டு வராதவளுக்கு இதை விட பெரிதா என்ன வேலை தர முடியும்'', என்று கேட்டவளை…
அழுத்தமாகப் பார்த்தவன், உணவினை சுட்டிக் காட்டி ''இதற்கு எல்லாம் ஆள்யிருக்கு… ஆனால் உனக்குக் கொடுக்க என் பொண்டாட்டியா இருக்கணும் வேலை தான் இருக்கு அதைச் செய்ய ரெடியா'',.. என்று கேட்டவனை அதிர்ச்சியுடன் பார்த்தவளை.. ''நாக்கு இருக்கு சுழன்று வார்த்தைகளை கொட்டிவிடாதே அதை எப்பவும் கொட்டிவிட்டால் மிஞ்சுவது எதுவுமில்லை'', என்று சொல்லியவன்.. குளியலறைக்குச் சென்று விட்டான்
அவன் வார்த்தைகள் மனத்தை வருத்த அப்படியே அமர்ந்திருக்க வெளியே வந்தவன் அவள் அருகில் அமர்ந்து,
''இங்கே பாரு கனி'',.. என்று பெயரைச் சுருக்கிக் கூப்பிட்டவனை மெய்மறந்த நிலையில் அவனை நோக்கியவளைக் கண்டவன் கனிவாகவே, பேசினான்..
''உனக்குக்குள் என்ன வருத்தம் கோபம் என்று எனக்குப் புரியல.. அதற்காக எப்பப் பேசினாலும் சண்டை மட்டுமே போடுகிற மாதிரி பேசுவது நல்லா இருக்கா'', என்று சிறுபிள்ளைக்கு எடுத்துச் சொல்லுவதைப் போல சொல்பவனை என்ன மறுமொழி சொல்வது என்று தெரியாமல் பார்த்தவளின் முகத்தைக் கைகளில் ஏந்தியவன், ''உன்னுடைய கோபத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கிராமத்தில் எப்படி இருந்தியோ அப்படி விகல்பமில்லாத ஜாலியான பெண்ணாக இரு…. இங்கே இருப்பவர்களின் பேச்சில் உன்னை அடக்கிக் கொண்டு அவர்களைப் போல நீயும் மாறிவிடாதே.. உன்னுடைய ஒரிஜினல் குணத்தை மற்றவர்களுக்காக இழந்து விட்டால் பின்னால் தேடினாலும் கிடைக்காது'', என்று சொன்னவன், அவளின் நுதலில் பூவை மெதுவாக வருடுவதுப் போல் மென்மையான முத்தத்தைப் பதித்தவன் ''இன்று இதுப் போதும் மிச்சத்ததை அப்பறம் பார்த்துக்கலாம்'', என்று சொல்லிச் சிறு புன்சிரிப்புடன் சொல்லுகிறவனை பார்த்தபடி இருந்தவளுக்கு இந்நொடி என்ன நடந்தது என்று அவளால் கணிக்க முடியவில்லை …
அவனின் பேச்சின் வசியமாக அவனுள் இழுத்துவிட்டதா என்று நினைக்க,
நிஷாந்தனோ ''இன்று தான் என் வாழ்வில் எனக்காக ஒருத்தி சமைத்த உணவை திருப்தியாகச் சாப்பிட்ட இந்த உணர்வை எப்படி சொல்வது என்று தெரியல… பிறந்தலிருந்து இன்று தான் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறேன்'', என்று சொல்வதைக் கேட்டவளுக்குக் குற்றயுணர்ச்சியாக இருந்தது . இன்றும் அவனுக்காகச் சமைக்கலயே என்று தோன்ற
இத்தனை நாட்கள் இங்கு இருந்தாலும் அவனுக்காக எதுவும் செய்யவில்லை என்று தலை குனிந்தவளின் முகத்தை நிமிர்த்தியவன்,'' சாப்பாடு சூப்பரா இருந்தது என்று சொல்லி நீயும் சாப்பிட்டு படு'', எனக்குத் கொஞ்சம் வேலை இருக்கு லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்..
அவளோ அவனைப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டு விட்டு அப்படியே உறங்கிவிட , அவளை அலக்காகத் தூக்கி படுக்கையில் படுக்க வைத்ததையோ அருகிலே அவள் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தயோ அவள் உணரவில்லை..
அதன்பின் ராஜலட்சுமி பேசுவதைக் காதில் வாங்காமல் விடியலில் எழுந்து வீட்டைச் சுற்றி இருக்கும் பூக்களை மரங்கள் செடி கொடிகளை ரசித்தபடி நடப்பதும், கணவனிடம் ஒன்று இரண்டு வார்த்தை கேட்பதற்கு உரையாடுவதும், தன்விகாவிடம் ஜாலியாக அரட்டை அடிப்பது அவள் பொழுதுகள் போயின..
அஸ்வினோ ஒருமுறை பேச இவளாக முயன்றபோது ராஜலட்சுமி ''என்ன வீட்டில் அவனையும் உன் கைக்குள் போட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணமா'', என்று நாரசாரமான பேச்சில் ''ச்சீய்'', ஒதுங்கியவள், தன்னால் அண்ணிக்கு தேவை இல்லாத பேச்சு எதற்கு என்று அவனும் ஒதுங்கிப் போய்விட்டான்…
கணவனாக நிஷாந்தன் அவளிடம் நெருங்கவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும்போது அவளிடம் அமர்ந்து அவளைப் பேசச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருப்பது உண்டு …
அன்று தன்விகா பிறந்த நாள் என்று ஹோட்டலுக்கு வரணும் என்று வற்புறுத்தி அண்ணாவிடமும் சுகாசினியிடம் சொல்லவும்…
தானே மனைவியை அழைத்துக் கொண்டு ஹோட்டல் வருவதாகச் சொன்னவன், மாலையில் மனைவி அழைத்துக் கொண்டுப் போனான். ராஜலட்சுமிக்காக யோசனை செய்தாலும் தங்கைக்காக அவளை அழைத்துச் சென்றான் நிஷாந்தன்.
கண்ணம்மாவோ அவளின் நீளக் கூந்தலின் அடர்த்திக்கேற்ப மல்லிகைப் பூவைத் தர அதை வைத்துக் கொண்டவளின் அழகு மெருகேற காரில் அவன் அருகில் அமர்ந்து வருபவளை ரசித்தபடி வண்டியை செலுத்தினான் நிஷாந்தன்.
அதில் அவளுக்குள் ஏதோ செய்ய, ''ரோட்டைப் பார்த்துக் காரை ஓட்டுஙக'', என்றவளை .. ''ஒ'',…என்றவன் ''ஹோட்டல் போவதைவிட வீட்டுக்குப் போய்விடலாமா'', என்று கேட்டவனை முறைத்தவள், ''தன்விகாவுக்காக போகணும் இல்லை அவ வருத்தப்படுவா'',.. என்று சொல்லுபவளை ''ம்க்கூம் தங்கைக்காக இவ்வளவு பார்க்கிற.. புருசனுக்காக மனம் இறங்குதா'', என்று வாய்விட்டுச் சொன்னவனுக்குத்,
தன் மேலே ஆச்சரியம், தனக்கு இப்படி எல்லாம் பேச வருகிறதே என்று.. இயந்திரத்தோடு வாழ்பவனுக்கு இப்படி எல்லாம் பேச வருதே என்று நினைத்து சிறு சிரிப்பை உதிர்த்தவன், சுகாசினியைப் பார்க்க அவளோ அவனுக்கு எந்தப் பதிலும் அளிக்காமல் வெளியே வேடிக்கை பார்த்தாள் ..
பெரிய ஹோட்டலின் முன் காரை நிறுத்திவிட்டு அங்கே இருந்த வாட்ச்மேனிடம் கார் கீயை கொடுத்தவன் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே செல்லத் தன்விகாவோ இவர்களைப் பார்த்ததும் கையை காமிப்பதைப் பார்த்து அவனும் சுகாசினியோடு அங்கே செல்லவும், அவளுடைய நண்பர்கள் கூட்டம் ராஜலட்சுமி மகேந்திரன் அஸ்வின் எல்லாரும் இருப்பதைக் கண்டு சுகாசினி கணவனை விட்டு தன்விகாவிடம் சென்றாள்.
அதிலே மனம் சுருங்கியவன், எதுவும் பேசாமல் ஒரு மேஜையின் அருகில் அமர எல்லாரு முன் தன்விகா கேக் வெட்டியவள், முதலில் அண்ணாவை நோக்கி அவனிடம் செல்லவதைக் கண்டு காண்டான ராஜலட்சுமி அதன்பின் ஆடியது உத்திரதாண்டவம் தான் ..
அண்ணாவுக்குக் கொடுத்த கேக்கை தங்கைக்கும் ஊட்டியவன் கண்கள் நெகிழ்ச்சியில் கண் கலங்கியது..
அம்மாக்கு அப்பா,அஸவின் சுகாசினி மற்றவர்களுக்கு என் கேக்கை கொடுத்துவிட்டு சிறு கலகலப்பான சூழ்நிலை அவ்விடத்தில் இருக்க, ராஜலட்சுமிக்கோ அதைத் தாங்க இயலவில்லை ..
அப்பொழுது எல்லாருக்கும் அவரவர் பிடித்த உணவைக் கொடுக்க, சுகாசினி சொன்ன உணவை கொண்டு வந்த தந்த வெயிட்டர் முன்னிலையிலே ''கிராமத்தில் பழைய கஞ்சிக்கே வழியில்லாதவள் எல்லாம் வெஜ்புலாவ் கேட்குதாம்'', என்று நக்கலடிக்க சட்டென்று அங்கே நிசப்தமாக மாறியது அவ்விடம்…
கண்கள் கலங்கிய சுகாசினியோ வாயைத் திறக்கும் முன் எழுந்து நிமிர்ந்து நின்ற நிஷாந்தன் ''அதே கிராமத்தில் தான் அந்தக் கஞ்சிக்கே பிச்சை எடுத்தவங்க பேசக் கூடாது'', சுருக்கென்று சொல்ல,
மகேந்திரனோ ''நிஷாந்த்'', அதட்டி ஏதோ சொல்ல வர, கையை நீட்டிவன் சுகாசினியை இழுத்துக் கொண்டு அங்கிருந்தவர்களிடம் ஒரு சாரியை வார்த்தையை உதிர்த்துவிட்டு வெளியேறினான்..
நேராக வீட்டிற்குச் செல்லாமல் பிச்சுக்கு மனைவி அழைத்து வர, அதுவரை ராஜலட்சுமியின் பேச்சில் இருந்த நய்யாண்டியும் மட்டம் தட்டுதலையும் வீட்டுக்குள் இருந்தவரை பெரிதாக எண்ணதாவளுக்கு மற்றவர் முன்னிலையில் பேசியதும் தாங்க முடியாமல் மனதில் குமறியவளோ இறுகிப் போய் அமர்ந்திருந்தக் கோலத்தைக் கண்டு மனம் வருந்தியவன் பீச்சில் காரை நிறுத்தி இறங்கச் சொன்னான் நிஷாந்தன்.
அவளோ மறுப்பாகச் சொன்ன வார்த்தைகள் அவனின் மனத்தை ஈட்டியாகக் குத்திக் கிழித்தது..
தொடரும்..
ஹாய் அடுத்தபகுதி படித்துப் பாருங்கள் மக்கா
.

Last edited: