• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ ..26

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
71
28
Karur
அத்தியாயம் ..26



பழைய நினைவுகளை அசைப் போட்டபடி இருந்த சுகாசினிக்குத் தன்னுடைய தவறுகளை விட நிஷாந்தனிடமே அதித கோபம் உண்டாயிற்று .. அவன் ஏன்? இப்படி இருக்கான்.. பெரிய கம்பெனி வச்சிருக்கான்.. வெளிநாட்டில் எல்லாம் போய் பிசின்ஸ் பண்ணுகிறான் பெத்தப் பேரு…. ஆனால் வீட்டில் நடப்பதும்.. தான் இந்த வீட்டை விட்டுப் போய் இரண்டு வருடங்கள் ஆகப் போனப் போதும் வாரமல் விவாகரத்து வாங்கக் கோர்ட் படியேறிய போதும் வந்தவன் இப்ப எனன நினைத்துக் கொண்டு இங்கே அழைத்து வந்திருக்கிறான்.. என்ற வினா அவளுள் எழும்பியதும் ,இன்று ஆச்சியும் வரவும் அவளுக்கு ஏனோ மனத்தில் ஒரு இறுக்கத்தை உண்டாக்கியது…


வீட்டை விட்டு வெளியேறியதும் நேரே தன் ஊர்க்குப் போக, அங்கே ஊரே அவளை அரவணைக்க, அவளுக்கு அதுவே அத்தனை நாட்கள் மனதில் பட்ட அடிகளுக்கு மருந்தாக மாறியது..


நிஷாந்தனின் வீட்டில் ராஜலட்சுமி கொட்டிய வார்த்தைகளோ இதயத்தில் குத்திக் குதறிக் குருதி வெள்ளமாய் பெருக.. நாளாக நாளாக அதுவோ பெரும் வடுவாக மாறியது..


அதை விட தன்னுள் விழுந்த விதை அழகிய முத்தாக வளர்வதும் கண்டு மனதிற்குள் என்ன மாறி உணர்வது தெரியாமல் திகைத்தவளுக்கு அந்தச் சந்தோஷத்தை அவளால் உணர முடியவில்லை.


ஆரம்பத்தில் அவளின் உடலின் மாற்றம் அதனால் ஏற்பட்ட அசௌகரியமான நிலை என கடந்ததால் கணவனை நினைக்கவோ அவனைப் பற்றி யோசிக்கவோ இல்லை .. இதற்கான காரணகர்த்தா அவனே என்று அவன் மேல் வெறுப்பு மட்டுமே அதிகமாகவே தோன்றியது.


ரங்கநாயகியோ உருக்குலைந்து வந்த சுகாசினியைப் பார்த்து மனம் வெம்பினாலும் அவள் உண்டாகி இருக்கும் செய்தியில் உள்ளம் மகிழ்ந்து மற்றதை தூர தள்ளி வைத்தார்..


நாளாக நாளாக பிரச்சினைகள் ஓய்ந்து பின் மறைந்து காணாமல் போய்விடும்.. திரும்பத் திரும்பப் பேசி அதை சரியாக்கவும் முடியாமல் மனத்தை நோக்கடித்துக் கொள்வதைவிட பிரச்சினைகளை தள்ளி வைத்துவிட்டு இப்போதைய தேவை சுகாசினியும் அவளுள் உதித்திருக்கும் மகவு மட்டுமே

முக்கியமானதாக தோன்றியது…


அதன் பின் அவளிடம் நிஷாந்தனைப் பற்றியோ அங்கே ஊரில் நடந்த எதைப் பற்றியும் பேசாமல் அவளைக் கவனித்துக் கொண்டவருக்குத் தன் பேரனின் வாழ்க்கையும் கானலாக மாறியது எண்ணி மிகவும் வருந்தியவர், அதைச் சுகாசினியிடம் காட்டாமல் மறைத்துக் கொண்டு நடமாடினார்..


முடிந்தவரை அவளைச் மகிழ்ச்சியுடன் வச்சிக்க தன்னால் இயன்ற வரை சிரிப்புடன் கலகலப்பாக வைத்துக் கொள்ள முயன்றாலும் அவளின் பார்வையோ எங்கோ சூன்யத்தை வெறித்து வெத்துப் பார்வையாகவே இருக்க, அவளின் கண்ணின் சிரிப்பை இன்று வரை அவரால் கொண்டு வர முடியவில்லை …


அவளுக்குத் தெரியாமல் சில ரகசியங்களை செய்தவர், அவள் பார்வை வட்டத்திற்குள் வராமல் பார்த்துக் கொண்டது சுகாசினிக்குத் தெரியவில்லை.


இதனால் வரை தனக்குத் தெரியாமல் நடந்த எதையும் கண்டு கொள்ளாமல் இருந்த சுகாசினி நினைவு எல்லாம் கட்டினவனையும் மகவு பற்றியே சுற்றிக் கொண்டிருக்க, இன்று அவன் வீடு தேடி வந்த தன்னை நினைத்து இன்னும் மானம் கெட்டு இருக்கிறோம் என்று நினைத்தவளுக்குக் கண்ணீர் உகுந்தது..


இப்படி பல நினைவுகளின் அரிச்சுவடிகளை ஆரம்பத்திலிருந்து நினைத்தவளுக்கு, அன்று தேடி வந்து தன் வாழ்க்கையை கெடுத்த காளியப்பன் ஊரில் இருக்கும்போது எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தாலும் அதைப் பற்றி மேலே சிந்திக்க வில்லை..


ஆனால் தன்னை கீழ் தரமாகப் பேசிய ராஜலட்சுமியை இனி பேச முடியாமல் ஊமையாக்கி விட வேண்டும் .. வாய் இருக்கு என்று வாய் கசந்தது மாங்காய் புளித்தது என்று கண்டதை உளரும் அவரை அடக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக , ஆனால் அதைப் பேசும் போது அந்தம்மா சாக்கடையில் உருளும் பன்றியாக பேசும் வார்த்தைகள் அறுவெறுப்பு உண்டாவதால் தான் ஒதுங்கிப் போனாள் சுகாசினி அன்று .


இனி இது தான் நிரந்தரமான இடம் என்று இங்கே வந்தபின் இனி அமைதியாக இருப்பதில் அர்த்தமில்லை என்று நினைத்தவள் அதற்கான வழியை ரங்கநாயகியே உருவாக்கி தருவார் என்று அறியவில்லை அப்பேதை.


இப்படி ஏதோ ஏதோ நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு மணியை பார்க்க அதோ இந்த அறைக்கு வந்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆனதை எண்ணி 'அச்சோ ஆதினி பாப்பு', என்று திரும்பிப் பார்க்கக் குழந்தையோ இன்னும் எழுந்துக் கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்திலே இருக்க மனம் ஆசுவாசம் ஆனது சுகாசினிக்கு.


இவ்வளவு நேரமாக கடந்த காலத்தில் ஒன்றியவள், அதில் தான் செய்த அதிகமாக அவன் செய்து அதிகமாக என்று தராசு வச்சு நிர்ணயம் செய்யவதை இயல கூடிய மனநிலையில் அவள் இல்லை.


இப்படிபட்ட மனநிலையில் இருந்தவளுக்கு கீழே ரங்கநாயகியின் குரலொலியில் அதிர்ந்தவள் சட்டென்று மாடியிலிருந்து எட்டிப் பார்த்தாள்..


''இன்னும் மேலே என்ன பண்ணற சுகா.. துணியை எடுத்து வைக்க இவ்வளவு நேரமா, குட்டி இன்னும் தூங்கி எந்திருக்காமலா இருக்கா'', என்று பல கேள்விகளை எழுப்ப..


அவளோ.. ''ஆச்சி'', பல்லைக் கடித்தவள், ''ஒவ்வொரு கேள்வியா கேளுங்கள்'', என்று கொஞ்சம் சத்தமான குரலில் சொல்லியவள், ''பாப்பு இன்னும் எழுந்திருக்கல'', என்று சொல்ல,


''அவளைத் தூக்கிட்டுக் கீழே வா'', என்று ஆச்சி சத்தமிட்டார்..


'மகன் வீட்டுக்கு வந்ததும் ஆச்சியின் சத்தம் ஓவராக தான் இருக்கு', என முணுமுணுத்துக் கொண்டே குழந்தையை தூக்க, அதுவோ சிணுங்கியதைக் கண்டு முதுகில் தட்டிக் கொடுத்தபடி கீழே வந்தாள்..


மேலே ஆச்சி சொன்னபடி ஆடைகளை அடுக்காமல் தன்னுள் மூழ்கி இருந்தவளுக்கு இதைப் பற்றி எதாவது ஆச்சி கேட்டால் பார்த்துக்கலாம் என்று நினைத்துக் கொண்டே வந்தாள் சுகாசினி.


''ஏன்டி சுகா, அதென்ன ஒரு துணிமணியை அடக்க இவ்வளவு நேரமா, போனமா மளமளவென்று வேலையை முடிச்சமா இல்லாமல் இருக்க'', என்று அவளிடம் காய்ந்தவர்,


''புருசன்காரன் வீட்டுக்கு வர நேரமாச்சே, தலை சீவி முகத்தை கழுவி பவுடர் கிவுடர் போட்டு பூவை வைச்சிட்டு வாய்க்கு ருசியாக எதாவது செய்து வைக்கணும் என்று தோனுச்சா.. நாம் தானே அவரை கவனித்துக் கொள்ளணும் எண்ணம் வரணும் மனசிலே… என்ன தான் படிச்ச மேதாவி தனத்தோட இருந்தாலும் குடும்பத்தை கட்டுக் கோப்பாக வைச்சிருப்பது பொம்பளை கையிலே தானே'',… என்று மூச்சு விடாமல் பேசியவர் முன்னே தண்ணீரை நீட்டினாள் சுகாசினி.


நக்கலோட கலந்த சிறு சிரிப்போட இருப்பவளைப் பார்த்து ''என்னடி சிரிப்பு'', என்று கேட்டவரை ''மேடையில் பேசுவதைப் போல பேசிக் களைத்து விட்டாய் ஆச்சி.. தொண்டை வற்றிப் போய்யிருக்கும் தண்ணீயை குடிங்க'', என்றவள், ''இன்னும் அந்தக் காலத்துக் கணக்காக புருசனை எதிர்ப்பார்த்து வாசலிலே அலங்காரம் பண்ணி நிற்கச் சொல்லறீங்களா'', என்று கொஞ்சம் கோபத்துடன் கேட்டவளைக் கண்ட ரங்கநாயகி…


''அதனால் என்னடி உன் புருசனுக்காக தானே.. அதிலென்ன தப்பிருக்கு.. சின்ன சின்ன விஷயங்கள் புருசனுக்காக செய்யும் போது அவனுக்கும் தனக்காக ஒருத்தி வீட்டில் காத்திருக்கிறாள் என்ற எண்ணத்தோடு வீடு வந்து சேர்வான்.. அவன் உழைப்பது எல்லாம் யாருக்கு உனக்காக தானே .. இப்படி அவன் நேரம் காலம் தெரியாமல் உழைக்கிறவனுக்கு வீட்டில் அனுசரியணையாக இருந்தால் தானே அவன் இன்னும் பல மடங்கு முன்னேறுவான் '', என்று சொல்லியவர்,


''வாய்க்கு வாய் பேசாமல் சொன்னதை செய் போ.... ஆதினி எழுந்தால் நா பார்த்துக் கொள்கிறேன்'', என்று சொல்லி அவளை மாடிக்கு அனுப்பினார் ரங்கநாயகி ..


''ஏன்? ஆச்சி இந்தக் காலத்திலும் இப்படி பேசறீங்க… இப்ப பெண்களும் வேலைக்குப் போறாங்க.. சரிக்கு சரி நிகராக வேலை பார்க்கிறாங்க தெரியுமா?'', என்று சொன்னவள்,'' உன் பேரனுக்காக நா இப்படி வந்து செய்து மயக்கணுமா'', என்று கேட்டவளை முறைத்தவர்,


''ஏன்டி இப்ப கிராமத்திலே தான் ஆம்பிள பொம்பள எல்லாரும் தானே வேலைக்குப் போறாங்க … அதுக்காக அவங்க பிரிஞ்சு நின்னுக்கிறாங்களா… எந்த நேரத்தில் வளைஞ்சு கொடுக்கணுமோ அப்ப வளைஞ்சுக் கொடுக்கணும் எந்த நேரத்திலே இழுத்துப் பிடிக்கணுமோ அதைச் செய்யணும் … நேரத்திற்குத் தகுந்த நெளிவு சுளிவு வேண்டும்… இப்படி எதுவும் தெரியாத ஆளாக உன்னை வளர்த்து வச்சிட்டேன் நானே.. என்ற பேரன் உன் புருசன் ,அதை ஞாபகம் வச்சுக்கோ… இரண்டு பேரும் சேர்ந்து பொம்பளை பிள்ளை ஒண்ணு பெத்து வச்சிருக்கீங்க அதை ஞாபகம் வச்சுகிட்டு பேசு'', கொஞ்சம் சுருக்கென்று சொன்னவர்…



''உன் விளையாட்டு தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டுப் பொழைக்கிற வழியே பாரு'', என்று மேலும் பேசியவர், ''உன்னிடம் பேசியே தொண்டை தண்ணீ வத்திப் போச்சு, ஏல மருமகளே எங்கடி இருக்க… மாமியார்காரிக்குக் காபித் தண்ணீ நேரத்துக் கொடுக்கணும் இருக்கா'', அங்கே இவர்கள் பேசுவதைக் கேட்டபடி அமர்ந்திருந்த ராஜலட்சுமியைப் பார்த்து ஜாடையாகப் பேசினார்..


''கிழவி ரொம்ப ஓவரா போற'', என்று போகிற போக்கில் சொல்லியபடியே நகர்ந்த சுகாசினி, ராஜலட்சுமி விட்டு வாங்கும் ஆச்சியைக் கண்டு சிரித்தபடி மாடிப்படி ஏறினாள்..


ரங்கநாயகி பேசியதைக் கேட்டு முகம் சுளித்த ராஜலட்சுமி ''கண்ணம்மா'', என்று கூப்பிட..


அதைக் கவனித்த ரங்கநாயகி ''ஏன்டி உன்கிட்ட சொன்னா உனக்கு ஒரு ஆளா… அவளைப் பூப் பறிக்க தோட்டத்திற்கு அனுப்பிருக்கேன்… நீ போய் போட்டுட்டு வா.. என்றவர் ஆமாம் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்.. நீ அப்ப என் பிள்ளை கைக்குள்ள போட்டுக்க ஆடாத ஆட்டமல ஆடின… இப்ப வீட்டுக்குப் பெரிய மனுசியா இங்கே இருக்க ,தெரியாத பச்ச பிள்ளைக்கு இதை எல்லாம் எடுத்துச் சொல்லணும் தோனுச்சா.. அவனை உன் பிள்ளையா நினைச்சிருந்தா இதை எல்லாம் செய்திருப்ப.. அவன் தான் உனக்கு ஆகாதவனே அதனால் தான் அம்போ விட்டுட்டு வீட்டுக்கு வந்த மகாலட்சுமியை துரத்தி விட்டுட்ட''… என்று அவளிடம் காய்ந்தார்..


இப்படி எல்லாரிடமும் விட்டு விளாசிய ரங்கநாயகி ஓய்ந்து சோபாவில் அமர அவர் முன் ஒரு காபி டம்ளர் நீட்ட, அதை வாங்கியவர் ஒரே மூச்சாகக் குடித்துவிட்டு நிமிர அங்கே கன்னம் குழி விழ சிரித்தபடி நின்ற நிஷாந்தனைக் கண்டு "வந்துட்டீயா கண்ணு, வா உட்காரு", என்று தன் அருகே கையை காமிக்க, அவர் அருகில் அமர்ந்தவன்.. "என்ன ஆச்சி எல்லாரையும் சும்மா சாட்டையிலே சுழற்றி அடிக்கிற'', என்று சொல்லிச் சிரித்தான் நிஷாந்தன்.


அவரும் சிரித்தபடி ''எல்லாம் யாருக்காகக் கண்ணு.. உனக்காகவும் அந்தப் புரியாத கழுதைக்காகவும் தான்'', என்று சொல்லியவர், சுற்றுமுற்றும் பார்க்க..


''என்ன ஆச்சி?'', என்று நிஷாந்தன் கேட்டபடி சுற்றிப் பார்க்க, ''கழுதை சொன்னேனா .. உன் பொண்டாட்டி காதில் இது விழுந்தது என்னை கீரையா ஆய்ந்து மத்தால் கடைஞ்சிருவா'', என்று மெதுவான குரலில் சொல்ல அதைக் கேட்டவன் "ஹாஹா, ஹாஹா" என்று சிரித்தான்…


அவனின் மனம் விட்டுச் சிரிக்கும் அழகைப் பார்த்து கண்கள் கலங்கியவர் "இப்படியே என்னைக்கும் சிரித்தபடி இருக்கணும் ராசா", என்று சொல்ல பக்கத்து அறையில் படுத்திருந்த ஆதினியின் சிணுங்கலில் சட்டென்று எழுந்தவன் அங்கே போனான் நிஷாந்தன்.


ஆதினி தன் அப்பாவைப் பார்த்தும் சிணுங்கலை விட்டு சிரிக்க,அவனோ.. "ஹேய் பேபி",.. என்று அவளைத் தூக்கிப் போட்டுப் பிடிக்க ஆதினியோ கிளுக்கிச் சிரித்தாள்.. குழந்தையின் சிரிப்பு அழகில் மெய்மறந்தவன்.. அதனுடன் கதைப் பேசியபடி இருப்பதைக் கண்ட ரங்கநாயகி ..


''ராசா இந்தப் பாலை பாப்புக்குக் குடிக்க வைத்துவிட்டு மேலே தூக்கிட்டுப் போய் குளிச்சிட்டு வாங்க அப்பா மகளும்'', என்று சொல்லியவர்,


ஆதினிக்குச் சிரித்தபடி பாலைக் குடிக்க வைத்த நி‌ஷாந்தன், குழந்தையை தூக்கியபடியே மேலே போனான்..


சோபாவில் அமர்ந்த ரங்கநாயகியோ ராஜலட்சுமியை கண்ணால் தேட அவர் இவரைக் கண்டு அறையில் பம்முவதைக் கண்டு அசலாட்டாகச் சிரித்தார்…


மாடிக்குப் போனவன், அப்போது தான் தன் நீளக் கூந்தலை பிண்ணிவிட்டு, கண்ணம்மா கொடுத்தப் பூவை தலையில் வைத்தவள் தன் சேலையை திருத்தியபடி 'அச்சோ குட்டி எழுந்திருவாளே', என்று கதவைத் திறக்க, நிஷாந்தனும் உள்ளே வர குழந்தை அவனின் தோளில் தொத்தியபடி வருவதைக் கண்டு திகைத்து நின்றாள் சுகாசினி .


அவள் திகைத்துச் சிலையாக நிற்பதைக் கண்டு நிஷாந்தன் நமட்டுச் சிரிப்பு சிரிக்க, கையிலிருந்த ஆதினியோ ''மா..மா..'', அவளைக் கூப்பிட தன்னிலைக்குத் திரும்பியவளோ குழந்தையை நோக்கிக் கை நீட்டினாள்..


ஆனால் ஆதினியோ 'ம்ஹூம்.',. என்று அவனின் தோளில் சாய, அதில் அவள் முகம் கடுகடுக்கப் ''புள்ளையை கொடுங்க'', என்று பல்லைக் கடித்தபடி கேட்டவளைப் பார்த்துச் சிரித்த நிஷாந்தன் ஆதினியின் முதுகில் தட்டிக் கொடுத்தவன், ''உன் வயிற்றில் இருக்கும் வரை தான் .. அதன்பின்?'', கேள்விக் குறியை கையால் சைகை செய்தவன் குழந்தை அழைத்துக் கொண்டு அறைக்குள் போனான்.


அதில் கோபம் கொண்டவள், அவனிடம் எதுவோ கேட்க வாயைத் திறக்க, அதைக் கண்டவன் ''ஏதாகிலும் அப்பறம் பேசிக்கலாம் .. குழந்தையை வைச்சு எந்த ஆர்க்கீயூமென்ட் வேண்டாம்'', என்று குரலில் கடுமையை காட்டியவன் அதன் பிறகு ஆதினியோடு மூழ்கினான்.


அப்பாவின் மகளின் தனியுலத்தில் தனக்கு இடமில்லை என்பதை அறிந்து மனம் வெதும்பியவளோ மனதிற்குள் அவனைத் தாளித்துக் கொண்டிருந்தாள் சுகாசினி .

தொடரும் ..

ஹாய் மக்கா கதையின் அடுத்தப்பகுதி போட்டாச்சு.. படித்துக் கருத்துக்களை கூறுங்கள் மக்கா.. 😍 😍 😍
20221216_155104.jpg







.
 

Lakshmi murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
653
130
63
Coimbatore
சுகாசினிக்கு கொஞ்சம் பொறாமை தானே.