• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ ..28

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம்…28


காலையிலிருந்து மனசோ படபடவென்று குழப்பத்தோடயே செய்யும் வேலையை மாற்றி மாற்றி எதாவது ஒன்று செய்து கொண்டிருந்த சுகாசினியைப் பார்த்தபடி கம்பெனிக்குக் கிளம்பினான் நிஷாந்தன் ..


இரவில் பேசிதற்கு பின் மீண்டும் பேசத் தொடங்க முயன்றவளை அவனோ அதுக்கு எதுவும் பதிலின்றி ஆதினியை அணைத்துக் கொண்டு தூங்கி விட இவள் தான் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு சோபாவிலே படுத்திருந்தாள்..


இடையில் முழித்தவன் இவள் இப்படி அமர்ந்திருப்பதைப் பார்த்தும் படுக்கையில் வந்து படுக்கச் சொல்லவில்லை .. அதைச் சொன்னால் அதற்காக ஒரு ஆர்க்யூமென்ட் நடக்கும் என்று நினைத்தவன் மீண்டும் துயிலில் ஆழ்ந்து விட்டான்.. அவன் மனம் தன் குழந்தையை அணைத்துக் கொண்டு படுத்திருப்பதே பெரும் சுகத்தையும் ஆழ் அமைதியும் தரவே அவனால் நிம்மதியாக உறங்க முயன்றது…


சுகாசினியோ புரண்டு புரண்டு படுத்துவிட்டு எழுந்தவள் விடியலில் குளித்துவிட்டு கீழே இறங்கி தோட்டத்தில் ஒரு வலம் வந்தாலும் அந்த மென்காற்றும் பூவின் சுகந்தமும் சிறிதளவு மனதிற்கு இதம் தர, அக்காற்றை நுரையீரலில் நிரப்பிக் கொண்டு வந்தவளிடம் கண்ணம்மா காலையின் உணவாக ஆதினிக்கு பாலும், கணவனுக்கு சத்து மாவு கஞ்சி, அவளுக்குக் காபி என்று தட்டில் வைத்துக் கொடுத்தை எடுத்துக் கொண்டு மேலே சென்றவள்… கணவனுக்குக் காபியை கொடுத்துவிட்டு இவள் கஞ்சியைச் குடிக்க, அதைப் புன்சிரிப்புடன் பார்த்தபடி இன்னும் அவள் என்ன என்ன செய்கிறாள்? என்று பார்த்துக் கொண்டே ஆதினியை தானே கவனித்தான். சுகாசினியை அவன் எந்த வேலையும் செய்ய விடாமல் தானே செய்வதைக் கண்டு பொருமியபடி அங்கே அமர்ந்திருந்தாள் சுகாசினி.


கம்பெனிக்குக் கிளம்பியதும் ''கீழே போகலாம்'', என்று அதுவரை பேசாமல் மௌனமாக இருந்தவன் பேச்சைக் கேட்டு அதிர்ந்தவள், நிமிர்ந்து அவனைப் பார்க்க, ''ஆபீஸ் தான் கூப்பிடுகிறேன்.. என்னமோ உன்னை வேறு எங்கோ கடத்திக் கொண்டுக் போகிற மாதிரி இந்த லுக் எதற்கு?'', என்று கேட்டவனை முறைத்தவள்,


''நா.. குழந்தை எப்படி தனியாக விட்டுச் செல்வது'', என்று எதையோ கேட்க வந்ததை விட்டு ஆதினியை பற்றி கேட்க,


நிஷாந்தனோ ''ஆச்சி பார்த்துக்கோவாங்க.. இன்று தன்விகா கூட இருப்பா'', என்று சொல்ல, மீண்டும் தடுமாறி படி ''நா..நா..'',என்று திக்குகிறவளை உற்றுப் பார்த்தவனோ ''நீ நீ தான்.. இன்று வந்து தான் ஆகணும்'', என்று சொல்லியவனை..


சிறு முறைப்புடன் ''நா அந்தளவுக்குப் படிக்கல.. அங்கே வந்து நா எந்த வேலை செய்ய முடியமால் மற்றவர்கள் முன் அவமானம் படணும் என்னைக் கூட்டிட்டுப் போறீங்களா'', என்று சிறு கோபமும் சங்கடமாகக் கேட்டவளைப் பார்த்தவனின் பார்வை கனிந்து இருந்தது.


''உனக்கு எந்தவித சங்கடமும் இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் .. அப்பறம் இன்னொன்று நீ மேலே கரஸ்ல படிக்க ஏற்பாடு பண்ணிருக்கேன்.. கம்ப்யூட்டர் கோர்ஸ்க்கும் அரேன்ஜ் பண்ணிருக்கேன்… அதனால் நீ தடுமாறாமல் உன் வேலையை பார்க்கலாம் .. அப்படி உனக்கு எதாவது டவுட் வந்தால் அதைக் கிளியர் பண்ணத்தானே நான் இருக்கேன்… அந்த டவுட் மட்டுமல்ல வேறு டவுட் வந்தாலும் நான் கிளியர் பண்ணுவேன் நீ சரி என்று சொன்னால்'', என்று ஒற்றை கண் சிமிட்டலில் இதழ்களில் வளைந்த புன்னகையுடன் சொல்லியவனைப் பார்த்தவளுக்கு மனமோ லஜ்ஜைப்பட்டு முகம் சிவந்தவள், சட்டென்று ஞாபகத்தோடு அதற்கு பணம் வேண்டுமே .. என்று நினைத்தவள் அவனிடம் ''இதற்கு எல்லாம் ப…பண.. பணம்'', என்றவளை ''அது தான் நீ வேலை பார்க்கப் போறீல அதுல இருந்து தான்…


அதைவிட உன் புருஷன் பல கம்பெனிக்கு முதலாளிமா அவன் நினைச்சா உனக்கு எது வேண்டும் என்றாலும் செய்யலாம்… ஆனால் அதை உள் அன்போடு வாங்க உனக்குத் தான் மனசில்லை'', என்று வெத்துக் குரலில் இயம்பியவன்..


''காலையில் போதுமே இதற்கு மேலே கேள்வியே கேட்டு துளைக்காமல் கிளம்பு'', என்று சொல்பவனை முறைத்துவிட்டு ''இவனிடமே வேலை செய்து இவனுக்கே பணம் கொடுக்கணும்.. அதைவிட என்னைப் பற்றிய எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை யார் இவனுக்குக் கொடுத்தா'', முணுமுணுத்துக் கொண்டே வர…


நிஷாந்தனோ ''அந்த அதிகாரத்தை யாரும் எனக்குத் தர வேண்டிதில்லை.. உன் கழுத்தில் கட்டிருக்கேனே அந்த மஞ்சக் கயிறு அதற்கான உரிமை என்ன? என்று ஊருக்கே சொல்லும்'', என்றவனின் பேச்சில் திகைத்தவளைக் கண்டவன் ''இந்த மஞ்சக் கயிறு மேஜிக் எல்லாரும் சொல்றாங்களே அது மாதிரி உனக்கு அன்போ பாசமோ காதலோ தோன்றவில்லை போல.. பேசாமல் இன்னொரு முறை இந்தக் கயிற்றை இறுக்கமாக கட்டிட வேண்டிய தான்'', என்று சொல்லிக் கொண்டே கீழே வந்தார்கள் ..


மாடியிலிருந்து கீழே வர அங்கே ஆச்சி நடுநாயகமாக அமர்ந்திருக்க குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் நடு ஹாலில் அவரைச் சுற்றி நின்றிருந்தனர்.


மகேந்திரன் தாயின் அருகே அமர்ந்திருக்க தன்விகாவும் அஸ்வினும் ஒரு புறமும் ராஜலட்சுமி ஒரு புறமும் நின்றாலும் அவளின் முகமோ சிடுசிடுப்புடன் இருந்தது.


இத்தனை நாள் தன் கைக்குள் வைத்து பம்பரமாக சுழற்றி விட்ட எல்லாரும் இந்தக் கிழவி வந்ததும் அதன்பின் நிற்பதைக் கண்டு கோபமும் ஆற்றாமையும் உண்டாக எதுவும் பேசாமல் கணவனை முறைத்தபடி நின்றிருந்தாள் ராஜலட்சுமி.


பேரன் வந்ததும் ''தன்விகா ஆதினியை வாங்கிக் கொண்டு போய் கண்ணம்மாவிடம் கொடுத்து தோட்டத்தில் வைச்சிருக்கச் சொல்லு அதற்கு ஆகாரம் இட்லி ஊட்டி விடச் சொன்னேன் சொல்லு'', என்று ரங்கநாயகி சொல்ல.. சுகாசினியோ ''நா போறேன் ஆச்சி'', என்று நகர இருந்தவளை ''நீ போக வேண்டாம் அதைக் கண்ணம்மா பார்த்துக்குவா.. இப்ப இங்கே எல்லாரிடமும் நா பேச வேண்டும்'', .. என்றவர்,


நிஷாந்தனை அருகில் கண்ணால் அழைக்க அவரின் அருகில் போனவனை தன்னருகில் அமர வைத்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டவர்,


''இன்று கம்பெனிக்குக் கொஞ்சம் மெதுவாக போகலாம் தானே.. இந்தக் குடும்பத்தில் சில முக்கியமான முடிவுகளை இன்று எடுத்தே ஆகணும் என்றவரை ''ம் சரி ஆச்சி நீங்க என்ன சொல்லணுமோ சொல்லுங்க'', என்று சொல்லிய நிஷாந்தன் அவரின் முகத்தைப் பார்த்தான்..


அவரோ எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தவர் , தன் மகனிடமும் வந்து நின்றது அவரின் பார்வை …


''மகேன்'',.. என்று அழைத்தவர்,'' நான் இப்ப பேசுவது உனக்கு வருத்தத்தை அளித்தால் மன்னிச்சுடு கண்ணு'', என்று தழுதழுத்த ரங்கநாயகி ..


''மகாலட்சுமி இறந்தபின் நீ நிஷாந்தனை வைச்சு தவிச்சுகிட்டு இருந்தே .. அப்ப தான் உன் அப்பாவும் மறைந்து போக என்னால் இரண்டு பக்கமும் இறப்பையும் தாங்க முடியாமல் இருந்தால் தான் உன்னையோ என் பேரனையோ கவனிக்க முடியாமல் போச்சு… கைக்குழந்தையை வச்சுகிட்டு தவிக்க அதனால் தான் ராஜலட்சுமியை உனக்குக் கல்யாணம் செய்து வைச்சேன்.. என் பேரனுக்குத் தாயாக என் மகனுக்கு மனைவியாகக் குடும்பத்தைக் கட்டுக்கோப்பாக வைச்சுக்குவா என்று நம்பிக்கையோடு இதைச் செய்தேன்.. ஆனால் அதில் நான் தோற்றுவிட்டேன்.. என் பேரனுக்கு அம்மாவா அவளால் இருக்க முடியல.. ஆனால் உனக்கு நல்ல மனைவியா இருப்பா நினைச்சால் அதிலே'', .. அதற்கு மேலே பேசத் திணறியவர் ராஜலட்சுமியை ஒரு பார்வை பார்க்க…


அதிலே அவள் வெடவெடத்துப் போனாள் .. எங்கே தன்னுடைய பேச்சு தன் குழந்தைகளுக்குத் தெரிந்து விடுமோ என்று..


ஆனால் விடாமல் பேசிய ரங்கநாயகி ''ராஜலட்சுமியோ வயிற்றிலே பிள்ளையை சுமந்துகொண்டு கணவனிடம் நிஷாந்தனை நெருங்கிக் கொஞ்சினால் என் குழந்தையை வயிற்றிலே சிதைத்து விடுவேன் என்று சொல்லும்போது எந்தக் கணவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும் …


இப்படியே ஒவ்வொரு முறையும் என் பேரன் அப்பாவை நெருங்கவும் முடியாமல் அந்தப் பிஞ்சு உள்ளம் எவ்வளவு தவிச்சு புரியாமல் கதறிருக்கு'',ம் …என்று நினைக்கும் போது, தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவர்..


''நா வரும்போது நீ நிஷாந்தனை வார்த்தையால் வதைக்கும்போதும் அவன் எதிர்த்துக் கேட்கும்போது எல்லாம் மகேந்திரனிடம் அவனைப் பற்றி தவறாகச் சித்திரிக்கப் படுவதைக் கண்டு அவனே ஒதுங்கிக் கொண்டான்… இதைவிட அவன் பதினாறு வயதில் நடந்த கொடுமை வாழ்க்கையில் எப்போது வடுவாக மாறியது அவனின் எந்த ஜென்மம்த்தின் பாவம் தொடர்ந்து வந்ததோ தெரியவில்லை..


அதைக் கேட்ட நிஷாந்தனின் முகம் வாடி வதங்கியது அந்த நிகழ்வை எண்ணி..


''கூட தோழியாக படிக்கும் பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தவன் தன் அறைக்கு எதார்த்தமாகக் கூட்டிச் சென்றவனின் அறைக் கதவைத் தாழிட்டு விட்டு மகேந்திரன் வந்ததும் ராஜலட்சுமி உன் மகனின் வண்டவளாத்தைப் பாருங்கள் … ஒரு பெண்ணைக் கூட்டி வந்து கூத்தடிக்கிறான் என்று சொல்லும்போது அதைக் கேட்டு அப்பெண்ணின் முன்னாலே நீ அவனைக் கேட்க கூடாத கேள்வி மட்டுமல்ல, அடிக்கவும் செய்த ஞாபகம் இருக்கா மகேன்'', என்று மகனிடம் ரங்கநாயகி கேட்க அவரோ தலை குனிந்து விட்டார் ..


அதைக் கேட்டபடி இருந்த மற்றவர்கள் திகைத்துப் போனாலும் சுகாசினிக்குத் தன் கணவன் முகத்தைப் பார்க்க அதுவோ கசங்கி ஒரு இறுக்கத்துடன் இருப்பதைக் கண்டு மருகினாள்.. அவனின் சிறு பால்யம் காலத்து பருவம் எவ்வளவு கடினமாக இருந்திருக்கிறது … அப்படி இருந்தும் அவன் தன்னிடம் ஒரு முறை கூட முகம் சுளித்தது இல்லையே என்று விழிகளில் கண்ணீர் தேங்கி நிற்க… அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..


''அதன்பின் தான் நிஷாந்தன் தன் வாழ்க்கையின் முடிவை தன் கையில் எடுத்துக் கொண்டு படிப்பிலும் முன்னேறினான்.. அதுக் கூட உனக்குப் பொறுக்கவில்லை தானே ராஜலட்சுமி..


உன் வயிற்றில் பிறந்தாலும் அக்குழந்தைகளை தன் தங்கை தம்பியாக உறவாட விடாமல் என்ன என்ன செய்தாய்… அப்படி இருந்தும் உன் குழந்தைகள் மீது அவன் பாசமாக தானே இருந்தான்'',.. என்று ராஜலட்சுமியை நோக்கிப் பார்வை செலுத்த அவளோ என்ன பதில் சொல்வது? என்று அறியாமல் கையை பிசைந்தார். தன் குழந்தைகளுக்கு முன் தன்னுடைய குணத்தை இந்தக் கிழவி பிட்டுபிட்டு வைப்பதை தடுக்க முடியாமல் இருந்தவர்க்கு அவரை முறைக்க…


''நிஷாந்தன் தன்விகாவையோ அஸ்வினையோ நெருங்கினாலே நிஷாந்தனை பற்றி தவறானவன் ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கிட்டான் என்று கதைக் கட்டி அவர்களை ஒண்ணா இருக்க விடாமல் பண்ணினாய்… என் பேரனை தான் ஒதுக்கினாய்.. ஆனால் அவனை நம்பி வந்த பெண்ணிற்கு என்ன பெயரை கொடுத்தாய்?… அந்த நேரத்தில் சுகாசினி அமைதியாகப் போனது அவளின் உடல்நிலை காரணமாக இருக்கலாம்… இல்லை என்றால் அவள் உன்னைக் குருத்து அரிவாளால் வகுந்து எடுத்து இருப்பாள்…


சின்ன சின்ன விஷயத்திற்கும் எல்லாரையும் ஆட்டி வைத்திருக்கும் உன்னை என்ன செய்வது.. எல்லாம் தெரிந்தும் நா மௌனமாக இருந்தற்கு காரணமே என் மகனின் சந்தோஷத்திற்காக மட்டுமே .. அந்த விதத்தில் அவனைச் சதோஷமாக வைச்சிருப்ப நினைச்சேன்.. ஆனால் அதிலும் உனக்கான ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொண்டே நினைக்கும் போது அறுவெறுப்பாக இருக்கிறது'', என்று முகம் சுளித்த ரங்கநாயகியும் அதைக் கேட்டுக் கூனிக் குறுகிப் போனாள் ராஜலட்சுமி..


மகேந்திரனோ குனிந்த தலை நிமிர வில்லை.. தன்விகாவோ அதற்கு மேலே அங்கே நிற்க முடியாமல் அழுதுக் கொண்டே அறைக்குள் ஓடிவிட்டாள்.. அவளைச் சமாதனப்படுத்த சுகாசினியும் சென்று விட, அஸ்வினோ அம்மாவின் முகத்தைப் பார்க்காமல் விடுவிடுவென்று வெளியேறிவிட்டான்…


ஆளுக்கொரு திசையில் செல்வதைக் கண்ட ரங்கநாயகி ''அஸ்வின் இங்கே வா'', சத்தமாக அழைக்க,


அவனோ ''இல்லை ஆச்சி நா அப்பறம் வரேன்'', என்று சொல்லியவனை ''இல்லை வந்துட்டுப் போ'', என்று சொல்ல மீண்டும் வந்தவனிடம் ''இதற்கு முன்னால், உன் அம்மா செய்து இன்னொன்று இருக்கு… உன் அப்பாவின் தொழிலில் நிஷாந்தனுக்கு பங்கில்லை அப்படி வேண்டும் என்றால் அவன் சம்பாதிக்கும் அத்தனையும் உங்களுக்கு மட்டுமே .. அதில் அவன் உழைக்கும் கருவியாக மட்டுமே இருக்கணும் உங்க அம்மா சொல்லிவிட்டாள்.. அதனால் தான் நிஷாந்தன் விலகி வேறு தொழில் தொடங்க, அதிலும் முட்டுக்கட்டை போட்டாள் உங்க அம்மா… வேறு தொழில் செய்தாலும் அதில் என் குழந்தைகளுக்குப் பங்கு கொடுத்தே ஆகணும்.. அதில் என் மகனுக்கும் சேர்ஸ் வேண்டும் என்று உன் அப்பாவை வாட்டி வதைத்தாள்.. அது உனக்குத் தெரியுமா?'', என்று அஸ்வினைக் கேட்க அவனோ அதிர்வடைந்தான்.. தன் தாயின் முகத்தைப் பார்த்தவனுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது.


''ஆச்சி இப்ப நான் சொல்வதைக் கேளுங்க.. என் அண்ணா தொழில் எனக்கு எந்தவித பங்கில்லையோ அதைப் போல என் அப்பாவின் தொழிலில் என் அண்ணாவுக்கு அடுத்தது தான் எனக்கும் அதை தெளிவாக உங்க மகனிடமும் அவங்க மனைவியிடமும் சொல்லி விடுங்கள்.. அப்பறம் நான் இன்னும் கொஞ்ச நாளில் வெளிநாட்டில் வேலைக்கான ஆபர் வந்திருச்சு.. நா அங்கே போய்ருவேன்'',.. என்று தன்னிலையே தெளிவாக எடுத்துரைத்தவன் ''நான் போவதற்குள் தன்விகாவிற்கு நல்ல மாப்பிள்ளை கிடைச்சா பாருங்க .. கல்யாணத்தை முடித்துவிட்டு போனால் இங்கே நான் வர மாட்டேன்'' என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்..


எல்லாரும் போன பின் அங்கே அமைதியான சூழல் ஏற்பட ராஜலட்சுமியோ ஆத்திரத்தோடு ஆங்காரத்தோடு கத்தினாள்.." உங்க ஆசை நிறைவேறியச்சா… என் பிள்ளைகளை எனனிடமிருந்து பிரித்து விட்டிங்களே.. இந்த வீட்டுக்கு இரண்டு தாரமாக வாழ்க்கை பட்டு வந்து எனக்கான குடும்பத்தை எனக்கு மட்டுமே உரிமை உருவாக்கியதில் என்ன தப்ப கண்டு பிடிச்சீங்க.. என் பிள்ளைக்கு மட்டுமே அவர் அப்பாவா இருக்கணும், அவர் சம்பாதிப்பது எல்லாம் என் குழந்தைகளுக்கு மட்டும் நினைச்சதில்லை என்ன குற்றம் நினைச்சு நடு ஹாலில் எல்லாரையும் உட்கார வைச்சு பஞ்சாயத்து பண்ணறீங்க… உங்க பேரன் உங்களுக்கு உசத்தியா இருக்கலாம் .. அதுக்காக நான் அவனை வைச்சு தாங்கணும் நினைச்சு என் வாழ்க்கையை உங்க கையில் எடுத்துக் கொண்டால் நான் சும்மா இருப்பனா.. எனக்கு என் புருஷன், என் பிள்ளைக அவ்வளவு தான்… மற்றவர்கள் யாருக்கும் இங்கே அதிகாரம் பண்ண இடமில்லை .. உங்க பேரன் பொண்டாட்டியை சொன்னேன் சொல்றீங்களே.. உங்க ஊர்க்காரன் வந்து சொன்னான் அதனால் சொன்னேன்.. ஒண்ணுமில்லாத வந்தவளுக்கு இத்தனை பேர் தாங்குகீறிங்க.. இப்ப என் பிள்ளைகளையும் பிரிச்சு விட்டிங்க… ரொம்பவும் சந்தோஷமா'',…. என்று கண்ட படி கத்தியவள் விருட்டென்று உள்ளே போய்விட்டாள் ராஜலட்சுமி.


நிஷாந்தனோ ''ஏன் ஆச்சி? இப்ப இந்தப் பேச்சு எல்லாம்.. இருக்கிற பிரச்சினைகள் பத்தாதா உங்களுக்கு'', .. என்று வருத்தப்பட..


அவரோ ''புண்பட்டு சீபிடிச்சு கிடக்கும் காயத்தை இப்படி கத்திக் கொண்டு தான் கீறி விடணும் .. எப்பவோ செய்து இருக்கணும்… ஆனால் நானும் சரியாகிவிடும் நினைச்சு நினைச்சு காலம் போனது தான் மிச்சம்'',.. என்று சொல்லியவர் தன் மகனின் தலையை வருடியபடி எல்லாவற்றிலும் ''ரொம்ப பாவப்பட்ட ஜீவன் என் மகன் தான்'', .. என்று கண் கலங்கினார் ரங்கநாயகி..


மகேந்திரன் தன் தாயின் கரங்களைத் தட்டிக் கொடுத்தவர்.. ''எல்லாம் சரியாகிவிடும் .. அவள் கெட்டவள் இல்லை .. தனக்கு உரியதை அடுத்தவர்களுக்குப் பங்கிடும் திறன் இல்லாதவள்.. அன்பாக இருந்தாலும் சரி பணமாக இருந்தாலும் சரி யாருக்கும் உரிமையில்லை என்று நினைப்பது .. அது அவளின் குணம் .. விடுங்கமா'',.. என்றவர், ''நிஷாந்த என்னை மன்னிச்சுடு கண்ணு.. நா..நான் சூழ்நிலை கைதியாக இருந்து உன்னைத் தவிக்க விட்டுட்டுத்தேன்'',.. என்று சொல்லியவரை


''விடுங்கபா முடிந்ததைப் பேச வேண்டாம் … இனி நடப்பதை பேசலாம்'', என்றவன், ''ஆச்சி நான் சுகாசினியை கம்பெனிக்கு அழைச்சிட்டு போறேன்.. அங்கே அவளுக்கு வேலையும் கற்றுக் கொடுத்து அவளின் படிப்புக்கும் ஏற்பாடு செய்யறேன்… நீங்க தான் ஆதினியை பார்த்துக்கணும்'', என்று கேட்டப் பேரனின் கன்னத்தை வருடியவர், ''நான் பார்த்துக்கிறேன் ராசா.. ஆனால் இந்த கிறுக்குப் பிள்ளை கையும் வாயும் வைச்சிகிட்டு கம்னு இருக்காதே ராசா'', என்று சுகாசினியை பற்றி சொல்ல…


தன்விகாவை சமாதானம் பண்ணி வைச்சிட்டு வெளியே வந்தவள் ஆச்சி பேசுவதைக் கேட்டு சுர்வென்று கோபம் வர.. ''நான் கிறுக்கச்சியா அப்பறம் எதுக்கு உன் பேரனுக்குக் கட்டி வைச்சீங்க.. நல்ல புத்திசாலியான பொண்ணைப் பார்த்துக் கட்டி வைக்க வேண்டிய தானே'', என்று எகிறியவளை…


''சும்மா வெடக்கோழி மாதிரி விரைச்சுகிட்டு நிற்காமல் புருசனோடு போய் சோலிகழுதையை பாருல… எப்ப பாரு சண்டைக் கோழி மாதிரி சிலுப்பிட்டு திரியாமல் அவன் சொன்னதை செய்..போ'', என்று ரங்கநாயகி சுகாசினியை விரட்ட நிஷாந்தனுக்கோ சிரிப்பு பொங்கியது. ஆனால் அதை அடக்கியபடி அவளை அழைத்துக் கொண்டு சென்றான் ..


மகேந்திரனும் ரங்கநாயகியும் அவர்கள் செல்வதைப் பார்த்து நிம்மதியாக இருந்தது மனசு இருவருக்கும்…


தன் கணவனோடு காரில் சென்று கொண்டிருந்தவளுக்கு மனம் ரொம்ப வலித்தது நிஷாந்தனை நினைத்து.. தனக்கும் தாய் தந்தை இருவரும் இல்லை தான்.. ஆனால் ஊரில் எல்லாருக்கும் ராணியாக வளர்த்த தன் தாத்து தன் மனசில் யாருமில்லை என்ற நினைப்பு வராமல் பார்த்துக்கிட்டார்…


அளவுக்கு அதிகமான பணம் இல்லை என்றாலும் தேவைக்கு இருப்பதை வைத்து நிம்மதியாகத் தானே இருந்தோம்… வயதிற்குரிய குறும்பும் ஆட்டம் பாட்டம் என்று மகிழ்ச்சியாகத் தானே தன் வாழ்க்கை ஓடியது என்று தன் வாழ்க்கையும் நிஷாந்தனின் பால்ய காலத்து வாழ்க்கையும் ஒப்பிட்டப் படியே வந்தவள் அடிக்கடி அவன் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தாள்…


அதைக் கவனித்தவனுக்கு மனசுக்குள் மத்தாப்பு பூ பூக்க, அவளையும் ரசனையோடு பார்த்தவன்… ''என்ன பட்டாசு மாதிரி பொரிந்து கொண்டு வருகிற அம்மணி அமைதியாக வரீங்க… எந்த கோட்டையைப் பிடிக்க இந்த அமைதி'', என்று அவளிடம் கேட்டவனை கண்டவள்…


''ம்ஹீம்..நா ஏன் கோட்டையை பிடிக்கப் போராடணும்… அது தான் ஏற்கெனவே கட்டி வைச்ச கோட்டையில் போய் ராணி மாதிரி ஆட்சி செய்ய போகிறேன்'',,…என்று ஸ்திரமாக சொல்லியவளை பார்த்தவன் மனம் அதிர்ந்தாலும் உவகை அடைந்தது தன்னவளின் பேச்சில்.


இப்படியே எதாவது பேசிக் கொண்டே கம்பெனிக்கு வந்தவர்கள் அங்கிருந்த முக்கியமான பலரிடம் தன் மனைவி என்று அறிமுகப்படுத்தி எந்திரங்கள் தயாரிக்கும் இடத்தை மற்ற இடங்களில் சுற்றி காமித்துவிட்டு தன் அறைக்கு அழைத்துச் சென்றவன் அங்கிருந்த தன் சேரில் அமர வைக்க முயன்றான் நிஷாந்தன்.


ஆனால் அதை மறுத்தவள் ''நீங்க உட்காருங்க'', என்று சொல்லிவிட்டு ''இங்கே நீங்க தான் ராஜாவாக இருக்கணும்.. மற்றவர்கள் இல்லை .. உங்க ஒத்தமித்த உழைப்பை கொட்டி இவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் மாதிரி கம்பெனியை செதுக்கிக் கொண்டு வந்திருக்கீங்க.. இதில் நான் வந்து கோலாச்சக் கூடாது'', என்று இதமாகப் பேசும் மனைவியை ஆச்சரியமாகப் பார்த்தான் நிஷாந்தன்.

தொடரும் ..

ஹாய் மக்கா .. அடுத்த அத்தியாயம் பதிவு பண்ணிட்டேன் படித்துப் பாருங்க மக்கா..😍 😍 😍 😍
20221216_155104.jpg














.

















.
 
Top