அத்தியாயம் ..29
நிஷாந்தனின் எதிரில் அமர்ந்த சுகாசினியைப் பார்த்தவன் அவள் இவ்வளவு இலகுவான மனநிலையில் இருப்பது இன்று தான் என்று தோன்றியது.. கல்யாணம் ஆனலிருந்து ஒரு இறுக்கத்தோடு இருப்பவளின் பேச்சும் தோரணையும் கொஞ்சம் மாறி இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல் , ''சுகாசினி'' என்று முழுப் பெயரில் அவளைக் கூப்பிட,
அவளோ அவனின் ஆபிஸ் அறையின் அலங்காரத்தை ரசனை பார்வையோடு ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு அங்கே மேசையில் ஒரு படம் அவளைக் கவர்ந்து இழுக்க அதை சட்னு கையில் எடுத்துப் பார்த்தவள் வெலவெலத்துப் போனாள்.. இது எப்படி சாத்தியம் என்று கேள்வி அவளுள் எழுந்தவுடன் அவனை உற்றுப் பார்க்க, அவளின் செயலைக் கவனித்தபடி இருந்தனவோ
''சுகா.. இந்தப் படம் எப்படி?'', என்று தெரிந்துகொள்ளணுமா'', என்று கேட்க..
அவளோ 'ஆமாம்' என்று தலையசைத்தாள்…
நிஷாந்தனோ ''அதைப்பற்றியே பேச்சு நாம் வீட்டில் போய் வைத்துக் கொள்ளலாம்… இப்ப ஆபீஸ் வந்த பின் இங்கே இருக்கும் வேலையை பார்ப்போமா'', என்று சொல்லியவன்..
''இன்று முழுவதும் கம்பெனியை ஒவ்வொரு இடங்களா சுற்றி பாரு.. கேண்டீன் எல்லாம் சரியாக இருக்கானு பாரு.. ஏன்? இந்த வேலையை சொல்கிறேன் என்றால் எப்போதும் மேனேஜ்மென்ட்க்கும் ஒர்க்கர்ஸ் சின்ன சின்ன பிரச்சினை வந்து கொண்டே இருக்கும்.. அதை ஆரம்பத்திலே களைந்து விட்டால் பிரச்சினைகளின்றி ஸ்முத்தாக கம்பெனி ரன் ஆகும் அதற்காகத் தான்..
அவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யவும் இருபக்க உள்ள மிஸ் அண்டர்டேஸ்டிங் சரி பண்ணவது உன்னைப் போல ஒரு ஆள் வேண்டும்'',. என்று சொல்லியவனை விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுகாசினி.
''பலபேரைப் பார்க்கும்போது அவர்களின் வேலைக்கேற்ப ஊதியம் மற்ற அலவுன்ஸ் எப்படி தரலாம் என்று உனக்கு ஐடியா வரலாம்.. இங்கே மற்ற வேலைக்கு ஆள் இருந்தாலும் வேலை செய்பவர்களின் குறை தீர்க்க ஆள்யில்லாத குறையை இனி நீ தான் பார்த்துக்கணும் ,என்று சொல்லியவன், ''இப்ப நீ தனியாகப் போய் சுற்றிப் பார்.. மற்றதை லஞ்ச் டைம்மில் பேசிக் கொள்ளலாம்.. இப்போ எனக்கு ஒரு மீட்டீங் இருக்கு'', என்று அவளை அனுப்பி விட்டுத் தன் வேலையை பார்த்தான் நிஷாந்தன்.
அவன் அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு அவனின் உயரமும் அங்கே வேலை செய்பவர்களின் மேல் வைத்திருக்கும் அக்கறையும் கண்டு ஆச்சரியமாக இருந்தது. அதைவிட அந்தப் படம் அவளால் அதை ஈஸியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. 'ஹாஸ்ப்பிட்டலில் எடுத்தபடம்', என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால் எப்படி என்று தான் புரியவில்லை? என்று யோசித்தபடி கம்பெனியை சுற்றிக் கொண்டு இருந்தவளுக்கு கேண்டீன் பக்கம் வந்தது தெரிந்ததும் அங்கே போய் கிச்சன், மற்றும் பொருட்கள் வைத்திருக்கும் இடம் எல்லாம் சுத்தமாக இருக்கிறதா என்று கவனித்தவள் அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்..
அங்கே வேலை செய்யும் மாதவன் அவள் அருகில் வந்தவர், ''மேடம் என்ன குடீக்கிறிங்க?'', என்று கேட்டவரை அமரச் சொன்னவள் ''ஒர்க்கர்ஸ்க்குத் தரும் உணவுப் பட்டிலையும் அதற்காக வாங்கும் விலையும் கேட்டு தெரிந்து கொண்டவள் அதில் சிலதை மாற்றி அமைக்க வேண்டும்'', என்று சொல்லியவள் ''அதை அவரிடம் கேட்டு விட்டுச் சொல்கிறேன்'', என்று அவரிடம் சொல்லிவிட்டு ..'' ஜூஸ் ஒன்று இப்பக் கொடுங்க'', சொல்லி அவரை அனுப்பியவள் சுற்றிலும் நோக்க அங்கே ஒவ்வொருவரா வர சாப்பிட்டு செல்ல சிலர் கூடி நின்று பேசுவதை எல்லாம் கவனித்தபடி அமர்ந்திருந்தாள் ஜூஸை குடித்தபடி ..
சில மணித்துளிகள் கடக்கவும் ஜூஸ் இன்னொன்று வாங்கிக் கொண்டு தன் கணவனின் அறைக்குச் செல்ல அவனோ அப்போது தான் வேலை முடித்து சீட்டில் சாய்ந்து அமர…
அவனுக்கான ஜூஸை அவனிடம் நீட்ட அவனோ வியந்தபடி அதை வாங்கியவன் ''என்ன சுகா ரொம்ப போர்யடிக்கதா.. வீட்டுக்குப் போன் பண்ணி ஆச்சிடம் பேசீனியா'', என்று கேட்டவனிடம்..
''ஆச்சியிடம் பேசல இனி தான் பேசணும்'', என்று சொல்லியவள், ''வேலைக்கு வந்துவிட்டு போர்யடிக்கதா கேட்டால் என்ன பதில் சொல்வது.. அப்பறம் உங்களிடம் ஒண்ணு கேட்கணும்'', என்று தயங்கிச் சொல்கிறவளை ஊடுருவிப் பார்த்தவனின் கண்கள் கூறும் மொழிகளை அறியாத அப்பெண் உள்ளத்தில் சிறு தடுமாற்றம் தோன்ற அதை மறைக்கத் தெரியாமல் தலை குனிந்து தன் சேலை நுனியை சுருட்டிக் கொண்டுருந்தவளைப் பார்த்தவனோ மென்மையான சிரிப்பினை உதிர்த்து, ''என்ன கேட்கணுமாலும் கேள்? ''ஸ்பிக் அவுட்'', என்று சொல்லியவனைக் கண்டவளுக்கு.. ''இந்த மாதிரி சிறு இங்கிலீஷ் வார்த்தைகளையும் கற்றுக் கொண்டால் நாளை நீயே ஈஸியா பேச வரும்'', என்று சொல்ல..
அவளுக்கு சுர்வென்று கோபம் வருவதைப் பார்த்தவன் ''ஹேய் கூல் பேபி… ஒரு கம்பெனிக்கு வேலைக்கு வரும்போது இந்த மாதிரி மற்றவர்கள் முன் முழிக்கக் கூடாது என்று தான்'', தன் கைகளை உயர்த்தி சரண்யடைவதைப் போல காமித்தவனைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது ..
இவனிடம் ஒரு நாள் ஒரு முறை கூட இயல்பாகவோ இனிமையாகவோ நடந்ததில்லை.. ஆனால் இவன் ஒவ்வொரு முறையும் அவன் அன்பினால் என்னை இறுக்கிக் கட்டி வைக்கிறானே என்று எண்ணிக் கொண்டே அவனையே பார்த்தவள் தான் கேட்க வந்ததையும் கேட்டாள் .. ''இந்த வேலை எனக்காக உருவாக்கியதா'', என்று கேட்பவளைப் பார்த்தவன்…
''ஆமாம் சொன்னால் என்ன செய்வாய்'', என்று கேலியாகக் கேட்க ..
அதற்கு முறைத்தவளை கண்டவனோ சிறு சிரிப்புடன் ''நீ வேலைக்குப் போயே ஆகணும் சொல்லும்போது அதற்கான வழியை உனக்கு நா தானே உருவாக்கித் தரணும்'', என்று சொல்லியவன், ''என் வேலை முடிந்தது வீட்டுக்குப் போகலாமா.. அம்மு என்ன பண்ணுகிறாளோ'', என்று அவளை விட இவன் தான் குழந்தைக்காக ஏங்கினான்.
இவ்வளவு நேரம் குழந்தை ஆச்சியிடம் இருப்பதால் கவலையின்றி இருந்தவளுக்கு நிஷாந்தனின் பரப்பரப்பு கிளம்பும் வேகமும் கண்டு ஆச்சரியம் தான்.. இவனுக்குள் இன்னும் என்ன ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறானோ தெரியல… காலையில் பார்த்தப் போட்டோவிலிருந்து கம்பெனியின் ஒரு இடுக்கு இல்லாமல் அவனின் பார்வை எல்லா பக்கமும் ஆழ்ந்து பார்ப்பதும் கண் பார்வையிலே எல்லாரிடமும் வேலை வாங்கும் லாவகமும் கண்டு வியந்து போனவள் அவனோடு தானும் கிளம்பினாள் வீட்டுக்கு ..
போகும் வழியெங்கும் இருவரிடமும் ஒரு பேரமைதி இருந்தது .. அவள் அவனைப் பற்றி எண்ணங்களில் மனதிற்குள் ஊடுருவிச் செல்லுவதை அசைப் போட்டவள்,இவன் தன் வாழ்க்கையில் நுழைந்த காலத்திலிருந்து அவனின் ஒவ்வொரு செயல்களையும் நினைத்தபடி காரின் சீட்டில் சாயந்துபடி வந்தவள், தனக்குத் தெரியாமல் தன் வாழ்க்கையில் பல ரகசியம் இவனிடம் இருக்கிறது.. அதை அறிந்துகொள்ளவிடில் மண்டை வெடித்துவிடும் நிலைக்கு வந்த சுகாசினி ''உங்களிடம் ஒன்று கேட்கணும்'', என்று அவன் புறம் திரும்பிப் பார்த்தவள்,அவனின் புற அழகு ஈர்க்க அதைவிட அவன் அகத்தினுள் ஒளிந்திருக்கும் நிஜங்களை அறிய மனம் விளைந்தது.
அவனோ ''என்ன கேட்பதாக இருந்தாலும் மெதுவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.. இப்ப ஆதினியை பார்க்கணும் நான்'', என்று சொல்லியவனிடம் கார் பறந்தது..
அவனின் வேகத்தைக் கண்டவள் ''ஏன்? இவ்வளவு வேகம், பாப்பு ஆச்சிடம் தானே இருக்கா .. அழ மாட்டா'', என்று சொல்லியவளிடம் ''அவள் அழமாட்டா தெரியும்..ஆனால்…'', என்று சொல்லியவன், ''வீடே வந்திருச்சு'', என்று போர்ட்டிகோவில் காரை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே வேகமாகப் போவதைக் கண்டவளுக்கு, இவன் ஏன் இப்படி அவசரப்படுகிறான்? என்று நினைத்தவள் அவன் அளவுக்கு பாப்பு மேலே தனக்கு அக்கறை இல்லையா டவுட்டே வந்துவிட்டது சுகாசினிக்கு…
அவளுக்குப் புரியவில்லை .. என்ன தான் மற்றவர்கள் கவனிப்பதாக இருந்தாலும் தாய் தந்தை கவனிப்பது போல வராது அதை அனுபவித்த அவனுக்கு மட்டுமே அதன் வலி தெரியும் என்பதை அவள் அறியவில்லை..
நிஷாந்தன் வீட்டினுள்ளே போனவன் ஆச்சியிடம் ஆதினி விளையாடிக் கொண்டு இருப்பதைக் கண்டவன் ''அம்மு'' என்று கூப்பிட குழந்தையோ ''ப்..பா'', என்று கை நீட்டுவதைக் கண்டு வேகமாகத் தூக்கி அணைத்துக் கொண்டு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு கொண்டாடுவதைக் கண்ட ரங்கநாயகி
''என்னடா பேராண்டி கம்பெனியே கதியா இருப்பே .. இப்ப பிள்ளை பாசம் கட்டி இழுக்கதோ'', என்று வம்பிளக்க.. அவனோ ''ஏன் நீங்களும் போய் உங்க புள்ளையை கொஞ்சுங்க யார் வேண்டாம் சொன்னது.. இப்ப எனக்கும் என் குட்டிம்மாவுக்கும் இடையே யாரும் வரக் கூடாது'', என்று சொல்லியவன் குழந்தையை தூக்கிக் கொண்டு மாடிக்குப் போய்விட்டான்..
சுகாசினி இதை எல்லாம் பார்த்து அமைதியாக நிற்பதைக் கண்டவர் ''ஏன்டி சுகா.. பிள்ளை பிள்ளை குட்டிப் பின்னால் சுத்தறானே பொண்டாட்டி உன் பின்னாலே சுத்தணும உனக்கு எண்ணம் வேண்டாமா''.. என்று கேலியாகக் கேட்டவரை முறைத்தவள்,
'' ஏன் ஆச்சி நீ என்ன எல்லாம் சித்து வேலை பண்ணிருக்க.. எனக்குத் தெரியாமல்… கூட வச்சுப் பாசத்தோடு கவனிச்சிகிற நினைச்சா உன் பேரனுக்காகத் தானே என்னைக் கவனிச்சீயா'', என்று கேட்டவளை கூர்ந்து பார்த்தவர்,
''இப்படி உட்காரு சுகா'', என்று அழுத்தமாகச் சொல்லி தன்னருகில் அமர வைத்தவர், ''கிராமத்தில் இருக்கும்போது நீ இப்படி இல்லையே சுகா.. எதார்த்தமாக இயல்பாக எல்லாரிடம் அன்பு செல்லுக்கிற அந்தப் பெண் எங்கே தொலைந்து போனாள் எனக்குத் தெரியல… எது உன்னை இந்தளவுக்கு மாற்றியது எனக்குப் புரியல.. ஆனால் என் பேரன் எப்ப உனக்குத் தாலி கட்டினானோ அப்ப இருந்து அவனின் பார்வையிலே தான் உன் வாழ்க்கை ஓடுகிறது ..
ஆனால் உனக்குக் கண்ணிருந்தும் குருடாகத் தான் இருக்கிற… நீ இந்த வீட்டை விட்டு வெளியேறி அடுத்த நொடியே உன்னை அவன் பார்வை வட்டத்திற்குள் கொண்டு வந்தவன் உனக்குத் தெரியாமல் பலதை செய்யதிருக்கிறான் ஏன் தெரியுமா?.. தனக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கி அதில் மனைவி மகள் என்று தூக்காணங் குருவி கூடு மாதிரி ஒரு அழகிய கூட்டைக் கட்டிக் கொண்டுக் காத்திருக்கிறான்.. ஆனால் அது உனக்குப் புரியவும் இல்லை அவனைப் பற்றி தெரிந்து கொள்ளவும் இல்லை… இங்கே வீட்டுக்கு வந்து கலாட்டா பண்ணின காளியப்பன் அங்கே உன்கிட்ட நெருங்க கூட இல்லை .. அதுயென் தெரியாது உனக்கு.. அதையெல்லாம் என் பேரனிடம் போய் கேளு சொல்வான்.. இப்படியே வீம்பு பிடிச்சிட்டு உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்வது பத்தாமல் அவன் வாழ்க்கையும் சேர்த்து வாழ விடாமல் செய்வது சரியா என்று யோசி.. நானும் உன் தாத்தாவும் உனக்காக இதைப் பேசும்போது கூட அவன் கல்யாணம் வேண்டாம் சொன்னவன் அதன்பின் ஏன் ஒத்துக் கொண்டான் அதை அவனிடம் கேளு. அப்பதான் அவனைப் பற்றி தெரியும் அவன் உன் மேலே வச்சிருக்கும் காதலும் புரியும்..
சும்மா எதுக்கெடுத்தாலும் வறட்டுப் பிடிவாதம் பிடிச்சிட்டுகிட்டுச் சுத்தாதே… கடைசியாக நீ கோர்ட்டில் போய் நின்று போதும் மனம் தளர்ந்தவன் எப்படியாவது உன்னை அவனிடம் சேர்த்துக் கொள்ள எவ்வளவு கஷ்டப்பட்டான் என்று எனக்குத் தான் தெரியும் .. என்று கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவர் ..''இனியேனும் புத்தியா பொழைக்கிற வழியை பாரு'', என்று சொல்லியவர்.. ''இதற்கு மேலே சொல்ல ஒன்றும் இல்லை சுகா'',.. என்று எழுந்து சென்றுவிட்டார்.
அவர் எழுந்து சென்றாலும் அதே இடத்தில் சிலையாக அமர்ந்தவளின் மனம் தன்னவனின் மறுபிம்பத்தை அறிந்து திகைத்து அவனின் சொல்லாத பேரன்பில் திளைத்தவள் அவனை வாட்டி வதைத்தத் தினங்களும் அவளுள் காட்சியாக தான் செய்த முட்டாள் தனத்தை எண்ணி வருந்தி அதனால் ஏற்பட்ட உள்ளத்தின் அழுத்ததுடன் மாடியேறி போனாள் சுகாசினி.
தொடரும்..
ஹாய் மக்கா இன்னும் இரண்டு அத்தியாயத்தில் கதை முடிந்துவிடும் .. உங்கள் லைக்ஸ் கமெண்ட்ஸ் ரொம்ப நன்ற
.