• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ ..31 நிறைவு பகுதி ..

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம் ..31..


நிஷாந்தனுக்கு இயல்பாகவே அவள் அவனின் முகம் நோக்கி கண்களில் காதலை நிரப்பிக் கொண்டு கரங்களால் தன்னைப் பிணைத்துக் கொண்டு மனைவி தன்னுடன் உறவாட வேண்டும் என்ற ஆசை நாளாக நாளாக அதிகமாகிக் கொண்டே போனது…


ஆதினியோடு இருக்கும்போது தெரிந்தோ தெரியாமலோ உரசிக் கொண்டு செல்லும் மெய்யின் தூண்டலை அவள் உணர்ந்தாளா.. இல்லையோ இவனுள் தீப்பற்றக் கொண்டதுப் போல அனல் அடித்தது.. ஆனால் அதை அவளிடம் மறைத்துக் கொண்டு உரையாடுவதும் கேலியாகப் பேசிக் கொண்டிருப்பது மனதிற்குள் சிறு சலனம் உண்டானது. அவளுக்குள் நானோ எனக்குள் அவளா.. அவளுள் பனியாய் உறைந்துவிட ஆசை நிஷாந்தனுக்கு..


அதை அவளிடம் பகிர்ந்து தன் உள்ளத்தின் பலநாட்கள் கொண்ட காதலை பேரலையாக அவளுள் பொங்கிப் பெருக வேண்டும் என்று நினைத்திருக்க…


அவளோ பழையதை நினைத்துக் கொண்டு இன்னும் உழன்று கொண்டிருக்கிறாளா என்ற எண்ணம் ஓட அதை இன்று பேசிட வேண்டும் என்று நினைத்துத் தான் வந்தான் நிஷாந்தன் ..


ஆனால் தோட்டத்தில் ஆச்சி மனைவி தம்பி தங்கை அப்பா மகள் என்று அங்கே சிரிப்பும் பாட்டும் களை கட்டவும் அவர்களிடத்திற்குப் போனவன் திகைத்தான்…


ஆச்சியின் பாட்டும் கும்மாளமுமாக கபடி ஆடிவர… எதிரில் தன் மனைவி சுகாசினி பாட்டு பாடி வருவதைக் கண்டவனுக்கு தன் மனைவியின் குரலில் வெண்பனி குழைவாக இதமாகவும் தேன் குரலாக இருக்கவும் அதை ரசித்தபடி நின்றவன்.. அதற்குள் ஆச்சி கூப்பிட ,தன் மனைவியோ சிவந்து நிற்கும் அழகும் ஆதினியோ ''ப்..பா'', என்ற அழைப்பை கேட்டவன் எந்தப் பக்கம் செல்வது என்று சிறிது தடுமாற்றம் உண்டாக அப்படி நின்றவனிடம் ஆச்சி ''நீ இந்தப் பக்கம் வந்திரு ராசா.. அந்தப் பக்கத்திற்குப் புதியதாக ஒரு ஆளை சேர்த்திக்கலாம்'', என்று சொல்லியவர் தன் மருமகளை ராஜலட்சுமியை அழைத்தார்…


''மருமகளே என் மருமகளே.. மறைந்திருக்கும் பார்க்கும் மர்மம் என்ன.. என் உடை அழகா.. என் நடை அழகா என் இடை அழகா'', என் விளையாட்டா அழகா பாட்டின் லிரிக்ஸ்ஸே மாற்றி பாடினார் ரங்கநாயகி.


தூணுக்குப் பின் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த ராஜலட்சுமியை தான் அப்படி பாடி அழைத்தார் ரங்கநாயகி..


அதற்கு அஸ்வினோ ''ஆச்சி உனக்கு இருக்கே லொள்ளு அது யாருக்கும் வராது போ'', என்று கலாய்த்தான் அஸ்வின்..


''அட போடா பேராண்டி என் மருமகளின் மவுசு என்ன பவுசு என்ன.. நீயெல்லாம் கத்துக்குட்டி உனக்கு இதுயெல்லாம் தெரியாது'', என்று கிண்டலாகச் சொல்லியவர், ''வாம்மா மின்னல்'', என்று மருமகளை இழுத்து வர அஸ்வினை கைக்காட்டினார்…


அவனோ ராஜலட்சுமியை கையைப்பிடிக்க பல நாட்கள் ஆனபின் தன் மகன் அருகே வந்து ''வாம்மா'', கூப்பிட்டதும் சட்டென்று கண்களில் கண்ணீர் வடிய அவர் வந்து சுகாசினி பக்கம் நிற்க அவளோ சற்றே ஒதுங்கி நின்று கொண்டாள்..


உடைந்த பானை திரும்ப ஒட்டாது போல காலப்போக்கில் சரியானதால் உண்டு சுகாசினிக்கும் ராஜலட்சுமிக்கும்..


மறுபடியும் ஆட்டம் தொடங்க எல்லாரும் அவுட்டாகி அங்கே நிஷாந்தனும் சுகாசினி மட்டுமே நிற்க.. இருவரில் யார் ஜெயிப்பார்கள் என்று அஸ்வின் ஆச்சி இருவரும் நிஷாந்தனுக்குச் சப்போர்ட் பேச… சுகாசினிக்கோ தன்விகா குரல் கொடுத்தாள் ..


ஆச்சியை முறைத்தபடி நிஷாந்தனை ''கபடி கபடி'', என்று தொடங்கப் போகும் நேரம் மழை லேசாகத் தூவ தொடங்கியது …


மகேந்திரன் ஆதினியை தூக்கிக் கொண்டு உள்ளே போய்விட ரங்கநாயகி கண் ஜாடை காமிக்க மற்றவர்கள் மெதுவாக நகர்ந்தனர்.


இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்தபடி நின்றதால் மற்றவர்கள் போனதை கவனிக்காமல் ஆட்டத்தில் ஒன்ற.. நிஷாந்தனின் கைப்பிடியில் சுகாசினி இருக்க அவளோ கோட்டை தொட்டுவிடத் துடிக்கும் நேரத்தில் அவள் மேல் நிஷாந்தன் அழுத்தம் கூடவும் சட்டென்று திரும்பிப் பார்த்தவளின் முகம் அதிர்ந்தது. மேனியோ மழையாலா இல்லை அவனின் தொடுதாலா சிலிர்த்து அடங்கியது.


நிஷாந்தனின் முகத்தில் தெரிந்த காதலின் வர்ணஜாலங்களைக் கண்டு அப்படியே உறைந்து போனாள்.. அதைப் பார்த்தவன் அவளின் அதரங்களை நோக்கி அவன் அதரங்கள் பயணிக்க நெருங்கிட ஒரு நூல் இடைவெளியே இருக்க .. அவளின் உதடுகளோ நடுக்கத்துடன் கண்களோ குழைந்து அவனைப் பார்த்தச் சொற்ப வினாடியில் அவளின் இதழில் புதைந்து போனான் நிஷாந்தன் …


நொடிகள் யுகங்களாக மாறி மூச்சுக் காற்றின் ஓசையோ செவியில் அறைய மழையோ வலுத்தது.


அதற்குமேல் அங்கே இருந்து எழுந்தவன், அவள் புறம் கையை நீட்ட அவளோ சிறு நாணத்துடன் தன் கைகளை அவனிடத்தில் கொடுத்தவுடன் இழுத்து தன் மேலே போட்டுக் கொண்டவன் இறுக்கி அணைத்துக் கொண்டு மழையில் நனைந்தார்கள்…


சிறிது நேரம் கழித்து பின் பக்க வாசலில் வழியே மேலே தன் அறைக்கு மனைவியை அழைத்துச் சென்றவன்.. அவளை விட மனமில்லாமல் அவளுள் ஆழ்ந்து போனான் நிஷாந்தன்..


அவளோ பனியாய் உருகி அவனிடம் மெய்யுருகி நிற்பவள் தன்னையும் மறந்து அவனையும் மறக்க வைத்து இருவரும் வேறு உலகில் அடியெடுத்து வைக்க, அங்கே பூக்களின் நறுமணத்தையும், பட்டாம்பூச்சியின் வண்ணச் சிறகின் படப்படப்பையும் அவளுள் உணர்ந்தவனுக்கு அந்த மாய உலகிலிருந்து வெளியே வர முடியவில்லை .. சிறுக சிறுக சேர்த்து வைத்தத் தேன் துளிகளாக அவளுள் சேமித்தவனின் முகமோ பிரகாசமாக இருந்தது …


''அவளுள் அவனா.. அவனுள் அவளா'',..


எதுவோ ஒன்று தடம்மாறி தங்களின் சுயத்தை இழந்து காதல் என்னும் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுத்தனர்..


நேரம் கடந்ததை அறியாமல் ஒருவருக்குள் ஒருவர் ஐக்கியமாகியவர்கள், சுகாசினின் மேனி குளிரில் நடுங்கவும் தன்னிலை திரும்பிய நிஷாந்தன் அவள் நுதலில் அழுத்தமாக முத்திரையிட்டு அவளை விட்டு விலக, அவளோ சிவந்தகிடந்த முகத்தோடு எழுந்தவள் அவனின் சிரிப்பில் மேலும் சிவந்து குளியலறைக்கு ஓடினாள்..


மெத்தையில் மல்லாந்து படுத்திருந்த நிஷாந்தனின் மனம் நிறைவாக இருக்க ,அவள் வந்தும் தன்னையும் சுத்தப்படுத்தி விட்டு வந்தவன், வெளியே கண்ணம்மா உணவு வைத்திருந்ததை எடுத்து வைத்தவளை பின்னால் கட்டிக் கொண்டான்..


அவளோ ''விடுங்க'',, என்று சொல்ல அவனோ ''இந்த ங்க நீ விடு.. மச்சான் உங்க ஊர் பாஷையில் ஆசையா கூப்பிடேன்'', என்று கேட்டவனிடம் சிறு முறைப்பும் செல்ல சிணுங்கலோடு ''ம்ஹீம்.. உங் உங் .உங்களை கண்ணா தான் கூப்பிட்டா'', என்று கேட்டவளை இறுக்கியவன் ''உன் செல்ல கண்ணன், மாயக் கண்ணன் நான் தானே'', என்று கண்ணைச் சிமிட்டியவனின் அழகில் , சொக்கி வெட்கியவள் அவனின் உணவை அவனுக்கு ஊட்டிபடி இருந்தாள் சுகாசினி..


அன்றே சொல்லிவிட்டான்.. ''தினமும் ஆதினிக்கு நா ஊட்டுவேன்.. எனக்கு நீ ஊட்ட வேண்டும்'', என்று கன்டீசன் போட்டு விட்டதால் அவளே அவனுக்குத் தினமும் ஊட்டிவிட அவளின் விரல்களையும் சேர்த்து உண்பதும் அதற்கு அவள் முறைப்பதும் செல்ல விளையாட்டாக இருந்தது…


சாப்பிட்டு முடித்ததும் தன் கையணைப்பில் அவளை வைத்துக் கொண்டவன் அவளிடம் பேசினான் தன்னுடைய வாழ்வில் நடந்தது ''ஊரில் அவளைத் தாத்தாவோடு பின்னால் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தபோது அவர்க்காக அவரின் பாசத்தின் மொத்த உருவமாக நீயிருப்பதைக் கண்டும், நீ அவருக்காக எதையும் செய்வதாய் என்று உன் வாய்மொழியாகக் கேக்கும் போது எனக்காக நீ எதுவும் செய்யும் உன் பாசம் காதல் நேசம் அன்பு முழுவதும் வேண்டும் என்றே தன் மனம் ஏங்கியதை சொன்னவனின், முகத்தைப் பார்த்தவள் அதிலிருந்த உணர்வுகளைப் படிக்க முயன்றாள்.


ஆச்சிடம் வந்து உனக்கானப் பிரச்சினையை கேட்டு அங்கே காளியப்பனைப் போய் மிரட்டி வந்ததும்,'' அப்பறம் நம் திருமணம், உன் தாத்தா மறைவு என்று உன்னை அங்கேயே விட்டு வர வேண்டிய சூழ்நிலை .. அதனால் தான் விட்டு வந்தேன்.. உனக்குத் திரும்பக் காளியப்பனால் பிரச்சினை என்று தெரிந்தபோது மீண்டும் வந்து அழைத்து வந்தேன் .. ஆனால் நீ கோபம் இருப்பதும் மீண்டும் ஒரு ராஜலட்சுமியை இந்த வீடு தாங்காது'', என்று நினைக்கவும் ''முடிந்தளவு நா உன்னை மறைமுகமாக யாரும் பேசிடாமல் பார்த்துக் கொண்டேன்'',..


''இதே மாதிரி அந்த மழைநாளில் நடந்த நிகழ்வு எதிர்ப்பாராத ஒன்று தான்…அதைச் சொன்னப்போது சுகாசினி முகமோ அந்திமந்தரையாக மலர்ந்து சிவந்தது.. அதில் உருவானவள் தானே ஆதினி என்ற நல்முத்து வாழ்க்கையில் வரமாக வந்தவளாயிற்றே..


''தன்விகா பர்த்டே அன்று நடந்து அடுத்தநாள் மகேந்திரனிடம் தொழிலிருநது விட்டிலிருந்து எல்லாமே சரிப்பங்காக பிரிக்க வேண்டும் '',என்று தான் சொல்லியதைக் கேட்டவளோ தனக்காக எத்தனையோ பார்த்துப் பார்த்துச் செய்யும் கணவனுக்குத் தான் செய்யதது என்ன? என்ற கேள்வி வானுயர உயர்ந்து நிற்க அதில் அச்சப்பட்டுப் போனாள் சுகாசினி.


''நான் பேசியதை அறியாமல் நீயும் பேசவும் தான் உன் கோபம் அடங்கும் வரை ஒதுங்கி இருந்தேன்.. அதன் பிறகு காளியப்பன் இங்கே வந்து நீ அவனுடன் வாழ்ந்து விட்டு வசதிக்காக என்னைக் கல்யாணம் பண்ணியதாகச் சொல்லவும் அதைக் கேட்டு அப்பாவுக்கு மனசு நொந்து போனதால் ராஜலட்சுமி பேசியதற்கும் நீ ஊருக்குப் போனதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாகி நின்று விட்டார்'',.


''நீ ஊருக்குப் போகும்போதே நான் ஆச்சியிடம் தகவல் சொல்லிவிட்டேன்.. அங்கே திரும்பக் காளியப்பன் தகராறு வராமல் இருக்க அவனைப் போலீஸில் பிடித்துக் கொடுத்து விட்டு உனக்குத் துணையாகத் தாயம்மா. .. கூட இருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு , நீ ஆதினியை தாங்கிய நொடி அருகில் தினமும் இல்லாமல் போனாலும் நீ ஆழ்ந்து உறங்கும் போது உன்னை என் கைக்குள் வைத்திருந்தேன்.. அதை உனக்குத் தெரியாமல் செய்ய ஆச்சி எத்தனையோ செய்தார்கள் .. நானும் வேலை விஷயமாக வெளிநாடு செல்ல, கடைசியில் உனக்கு வலியெடுத்த நேரம் அங்கே ஹாஸ்ப்பிட்டல் வந்தது தெய்வச் செயல் தான்…


''நீ உள்ளே துடித்தாய்.. நான் உனக்காக வெளியே துடித்தேன் அவ்வளவு தான் குட்டியை முதல் முறை கையிலேந்தி அந்த நொடி என் அம்மாவே எனக்கு மகளாக அவதரித்தாள் என்று நினைப்பு தான் வரவும் அதன் பிஞ்சு பாதங்களும் பஞ்சுப் போல மேனியும் என்னால் குழந்தையை மற்றவர்கள் கையில் கொடுக்க முடியவில்லை'',.


''உன்னை அறைக்கு அழைத்துவந்த போது நீ மயக்கத்தில் இருந்தப்ப எடுத்த படம் தான் நீ ஆபீஸ்ஸில் பார்த்தப்படம்'',.. அவன் சீராக நிதானமாக எல்லாமே சொல்வதைக் கேட்டு ஆச்சரியமும் மனதிற்குள் சிறு சோகத்தின் சாயலும் தோன்றிய அவளை வாட்டியது…


''அப்பறம் நீ கோர்ட்டில் டைவர்ஸ் கேட்டுப் போனதும் அதை இல்லாமல் ஆக்குவது எனக்கு ஒன்றும் பெரிய காரியம் இல்லை தான். ஆனால் உனக்கு என்னைச் சுத்தமாகவே பிடிக்கவில்லையா.. ஏன் கேள்வி எனக்குள் எழும்பியது... என்னை வேண்டாம் என்று ஒதுக்கும் அளவுக்கு பிடிக்காமல் போயிருச்சே என்று மனமோ கொந்தளிக்க, உன்னை மிரட்டித் தான் அழைத்து வந்தேன் இங்கே ..


ஏன் சுகாசினி என்னை உனக்குப் பிடிக்கவில்லையா? என்று ஆதங்கமாகக் கேட்டவன்.... ஆனால் உன்னைத் தொடும்போது என்னுள் நீயிருக்கும் போதும் அந்த வெறுப்போ எதுவும் தெரியவில்லையே.. நிஜமா என்னைப் பிடிக்கவில்லையா?'', என்று மழலையாகக் கேட்டவனை அன்னார்ந்து பார்த்தவள் அவன் வாயைத் தன் கரங்களால் மூடிவிட்டு ''உங்களை ரொம்ப பிடிக்கும்'',..


''ஆனால் நீங்க தாத்தா இருந்ததும் என்னிடம் சொல்லாமல் வந்தது, இங்கே அழைத்து வந்தபின் நீங்கள் என்னைத் தவிர்க்கிறீங்க என்று நினைத்தது, அன்று தன்விகாவின் பிறந்தநாளின் மறுநாள் இருக்கும் கோபத்தில் சாப்பாட்டை தட்டிவிட்டு சென்றுவிட்டு என் மேலே எனக்குக் கோபம்.. ஆனால் கீழே உங்க சித்தி பேசியதும் காளியப்பன் வந்ததும் தவறாக என் கேரக்டரை சித்தரித்தது.. என்னால் தாங்க முடியவில்லை … என் உடலின் ஏற்பட்ட மாற்றமும் என்னால் சரியாகச் சிந்திக்க முடியாமல் போகவும் தான் நான் ஊருக்குப் போய்விட்டேன்.. அங்கே போனாலும் நீங்க வருவீங்க ரொம்ப எதிர்ப்பார்த்து ஏமாந்து போவேன் தெரியுமா?.. அதுவும் எங்கயாவது காரின் ஒலி கேட்டாலே என் மேனி உள்ளம் பரபரக்கும் நீங்க வந்து விடடீங்க.. என்று ஒவ்வொரு முறையும் ஏமார்ந்தால் தான் நான் என்னைப் பிடிக்கவில்லை .. ஆச்சிக்காகக் கல்யாணம் செய்து கிட்டிங்க என்று நினைத்துத் தான் நான் கோர்ட்க்குப் போனேன். உங்களுக்குப் பிடிச்ச மாதிரி வாழ்க்கை அமைத்துக் கொள்ளட்டும் என்று எண்ணித்தான்'', என்று சிறு குரலில் சொல்லியவளை,


சிறு கோபத்துடன் ஏறியிட்டவன், ''வேறு கல்யாணம் ..வேறு பொண்ணா.. என்னை என்ன நினைச்சு பேசற.. உன்னைப் பிடிச்சு தான் கல்யாணமே பண்ணினேன்… பிடிக்காமல் போய்யிருந்தால் அந்த நேரத்தில் உனக்கு வேறு யாரையாவது கல்யாணம் பண்ணி வைத்திருப்பேன்'', என்று சொல்லியவனை முறைத்து கரங்களால் நெஞ்சில் அடித்தாள் சுகாசினி ..


''எனது வேறு பையனைப் பார்த்துக் கல்யாணம் செய்து வைப்பீங்களா'', என்று அடிக்க.. அவனோ ''ஏய் போதும் டி விடு உன் மாமா பாவமல்ல விடுடி'', என்று அவள் கரங்களைத் தடுத்தவன் அவன் இதழ்களை நோக்கிக் குனிந்தவன், ''உனக்கு எல்லாம் சந்தேகமும் தீர்ந்தா.. அப்படியே இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருந்தே சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்'', என்று சிரித்தவனை கண் கொட்டாமல் பார்த்தவளின் கண்களில் வழிந்த காதலில் கரைந்து உருகிப் போனான் நிஷாந்தன்.


அங்கே விட்டுப் போன நாட்கள் நிரப்பப் போராடியவர்கள் இனி வரும் நாட்கள் காதலால் ஒருவர்க்கு ஒருவர் போட்டியிட்டு வென்றனர்.


காலங்களில் எத்தனையோ கஷ்டத்தை வாரி வழங்கி இருந்தாலும் இனி வரும் காலம் அவர்களுக்கு சந்தோஷத்தை அள்ளி தருவதை யாராலும் நிறுத்த முடியாது.. மாற்றவும் முடியாது..



மறுநாள் விடியலில் விழித்தவளின் முன் நிஷாந்தன் குறும்புப் பார்வையில் ஆளை சுருட்டி வைத்தும் கொள்ளும் மையல் பார்வையில் வெட்கியவள் ''காலையில் என்ன பார்வை இது.. விடுங்க.. ஆதினி எழுந்துவிடுவாள்'', என்று சொன்னவளை விழி அசைக்காமல் நோக்கியவன் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன் அருகில் துயில் கொண்டிருந்த ஆதினியை கண்ணால் காமிக்க, அவனின்பால் சுரந்த பேரன்பில் திளைத்தாள் சுகாசினி …


காலை வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு கீழே வரும்போதே ரங்கநாயகி பீரிஸ் ஆகி உட்கார்ந்திருந்த நிலையைக் கண்ட சுகாசினி வேகமாக அவர் அருகில் போக ,''அங்கே ராஜலட்சுமி பவ்வியமாக அவரிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது ..


''ஏன்டி இங்கே ஒருத்தி நடப்பது நிஜமா இல்லையா உறைஞ்சு போய் உட்கார்ந்து இருக்கேன் .. நீ நக்கலாகச் சிரிக்கீரியா'', என்று கண்களால் மிரட்ட அதைப் பார்த்து நிஷாந்தன் மகேந்திரன் தன்விகா அஸ்வின் எல்லாரும் கலகலத்தனர்..


ஆதினியோ எல்லாரையும் சுற்றிப் பார்த்தவள் தன் அப்பாவிடமிருந்து இறங்கி ராஜலட்சுமியை நோக்கி கையை நீட்டிப் போக.. அதிலே கண்களில் கண்ணீர் வடிய ''என் தங்கமே'', என்று குழந்தையை மென்மையாக அணைத்துக் கொண்டவர்.. தன் மனதினுள்ள காழ்ப்புணர்ச்சியை இக்குழந்தையால் தீர்த்து வைக்கத் தான் மகாலட்சுமியாக பிறந்ததோ என்று அணைத்துக் கொள்ள..


ரங்கநாயகியோ ''ஏய் சுகா எனக்கு நெஞ்சு வலிக்குடி ஆம்புலன்ஸ் போன் பண்ணு.. இந்தக் காட்சி எல்லாம் என்னாலே நம்ப முடியலே சீக்கிரம் டி'', என்று அவளிடம் சொல்லியதைக் கேட்டு குடும்பமே ''கொல்'', என்று சிரித்தது…


வீட்டிற்குள் எத்தனையோ வஞ்சனைகள் காழ்ப்புணர்ச்சி பொறாமைகள் என குடும்ப அரசியலில் அச்சாணியாக உள்ளே நுழையும் ஒரு பெண் எவ்வாறு கையாளப்படுகிறாள்.. அதனால் அவளுக்குள் இருக்கும் மனக் குறைகளை அவளின் கணவன் துடைத்து தன்னில் பாதியாக இணைத்துக் கொண்டால் அங்கே வாழ்க்கை இலக்கணம் பிழையாகாதே….. என்று சிறப்புடன் வாழ்வாங்கு வாழட்டும் .. வாழ்க வளமுடன்…



சுபம்…


ஹாய் மக்கா கதை முடிநதுவிட்டது .. இத்தனை நாட்கள் கதையை படித்து எனக்கு ஊக்கம் கொடுத்த அனைத்துத் தோழமைகளுக்கும் மிக்க நன்றி 😍 😍 😍 😍 😍
20221216_155104.jpg


























.



















.

















.
 
Top