உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -10
அவள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அருள்மணி "சிற்பி இங்கே வாம்மா" என்றழைத்தார்.
அவரின் பொறுமையான அழைப்பில் கோபமடைந்த தாமரை "அவளுக்கு நீங்க கொடுக்கிற செல்லம் எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்குன்னு பார்த்தீங்களா? வெளியூர்ல போய் வேலை பார்க்கப் போறாளாம் எவ்வளவு திமிரு நம்ம குடும்பத்துல யாருமே இந்தமாதிரி வேலைக்கு போகலை அவ இப்படி போனால் ஊர்ல உள்ளவங்களுக்கு வாயில அவல் போட்டக் கதையாகிப் போகாதா? குடும்பம்னா கஷ்டம் நஷ்டம் எல்லாம் இருக்கத் தான் செய்யும் அதுக்காக உடனே பையைத் தூக்கிட்டு நானும் சம்பாதிக்கப் போறேன்னு சொல்லுறதா? நாளைக்கு எதாவது ஒன்னு நடந்தால் யாரு இவளை கல்யாணம் செய்வாங்கன்னு கவலை அவளுக்கு இல்லை எனக்கு இருக்கு" என்று ஏற்கனவே அடக்கி வைத்திருந்த வேதனை எல்லாம் இன்று சிற்பி கேட்ட கேள்வியினால் பொங்கி ஆற்றாமையாலும் இயலாமையினாலும் பேசினார் தாமரை.
ஏற்கனவே கனிகாவின் பிரிவு,அடுத்து கணவனின் நோய் தன்மை என வேதனையில் இருந்தவருக்கு சிற்பியும் தன்னை தனியாக விட்டுப் போகிறேன் என்று சொன்னால் தனிமை அவர்களை கொன்று தின்று விடாதா?இதையெல்லாம் மனதின் ஒரம் வைத்துக் கொண்டு வெளியே சிற்பியைக் வார்த்தைகளால் வைந்துக் கொண்டிருந்தார் தாமரை.
தாமரை தொடர்ந்து பேசுவதைக் கண்ட பூர்ணா அவளிடம் "தாமரை கொஞ்சம் அமைதியாக இரு சிற்பியும் அண்ணனும் பேசட்டும் உனக்கு இருக்கிற வருத்தத்தை எல்லாம் அவ மேல காட்டாதே! சின்னப் பொண்ணு எவ்வளவு அக்கறையா? பேசுறாள் நீ என்னன்னா சிற்பி ஏதோ பெரிய கொலைக்குத்தம் செஞ்சிட்டு வந்த மாதிரி நின்னு சத்தம் போடுறே? இந்தக் காலத்துல பெற்றவங்க கஷ்டத்தை எத்தனை பிள்ளைங்க புரிஞ்சுகிறாங்க சொல்லு,என்கிட்டயும் பணம் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டே அவ வேலைக்கு போறேன்னு சொன்னாலும் ஒத்துக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறே என்னத் தான் நினைச்சுட்டு இருக்கே தாமரை?" என்று பூர்ணா உரிமையாய் கேள்வி கேட்டார்.
தாமரை பதில் எதுவும் பேசாமல் வழியும் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டிருந்தாள்.
சிற்பி அமைதியாய் அப்பாவின் அருகில் போய் உட்கார்ந்துக் கொண்டாள்.
"சிற்பி அப்பா உனக்கு கஷ்டம் தரேனாம்மா?"
அவர் சொன்னதைக் கேட்டு உடனே மறுத்தவள் "அப்பா ஏன்ப்பா இப்படி பேசுறீங்க? நான் எப்பவுமே நினைக்க மாட்டேன் நீங்க என் அப்பா" என்று தன் தந்தையின் கையை அழுத்தமாய் பிடித்துக் கொண்டாள்.
"அப்புறம் ஏன்ம்மா உன் கனவை விட்டுட்டு வேலைக்கு போறேன்னு சொல்லுற?"
"அப்பா இப்போ எனக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லை அதுக்கு பதிலா வேலைக்கு போகலாம்னு நினைக்கிறேன்" என்றாள்.
சிற்பியைப் பார்த்துச் சிரித்தவர் "நான் உன்னோட டீச்சர் உத்யோகத்திற்கு போறதைப் பத்தி பேசலைம்மா அதை விட முக்கியமான ஒரு ஆசை வைச்சு இருந்தியே அதைச் சொன்னேன்"
சட்டென்று அருள்மணியை மேலும் பேச விடாமல் தடுத்தவள் "அப்பா அதெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்காக சொன்னது அதைப் போய் நீங்க சீரியஸ்ஸா எடுத்துட்டு இருக்கீங்க? நானே அதை மறந்துட்டேன் நீங்க ஏன் இன்னும் அதையெல்லாம் நினைச்சுட்டு இருக்கீங்க?" என்று வாய் வார்த்தையாய் சொன்னாலும் அவள் விழிகள் இரண்டும் கலங்கி கண்ணீரால் நிரம்பி இருந்தது.
அதை ஒரு பெருமூச்சால் உள்ளிழுத்துக் கொண்டவள் "அப்பா நீங்க எப்பவும் சொல்லுவீங்கல்ல எனக்கு ஆண்பிள்ளைன்னு கவலையே இல்லை ஏன்னா எல்லாத்தையும் என் பொண்ணே பார்த்துப்பான்னு அதே மாதிரி இப்போ ஒரு இக்கட்டான சூழ்நிலை என்னை கொஞ்சம் என் விருப்பத்துக்கு இருக்க விடுங்கப்பா அம்மாக்கு புரிய வைங்க ஒன்னு அல்லது இரண்டு வருஷம் தான் வேலை பார்ப்பேன் அப்புறம் திரும்ப நம்ம ஊருக்கே வந்துடுவேன் இருக்கிற கடனும் முடிஞ்சிடும் அதுக்குள்ளே நீங்களும் நல்ல தெம்பா மாறி பழைய படி உங்க தொழிலைப் பார்க்க ஆரம்பிச்சிடுவீங்க அப்போ நீங்க என்னச் சொன்னாலும் நான் கேட்பேன் அப்பா" என்று அப்பாவிடம் கெஞ்சியவள் அம்மாவைப் பார்த்தாள்.அப்பாவை எப்படியும் செல்லம் கொஞ்சியே சம்மதிக்க வைத்து விடுவாள்.ஆனால் தாமரை எப்போதும் தன் முடிவை சட்டென்று மாற்றிக் கொள்ள மாட்டார்.தாயின் குணத்தைக் கொண்டிருந்த சிற்பியோ அதையும் மாற்றிக் காட்டுவாள்.
அவரோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.ஒரு தாயாக தன் மகளை அவர் வேலைக்கு அனுப்பி கஷ்டப்பட வைக்க அவருக்கு விருப்பம் இல்லை.கனிகா எப்படியோ அதைப் போல் தான் சிற்பியும் என்பது தான் தாமரையின் எண்ணம்.
"யாரு இப்போ அவளுக்கு அங்கே வேலை வைச்சு காத்திட்டு இருக்காங்களாம்? வேலைக்கு போறேன் போறேன்னு தொல்லை செய்துட்டு இருக்கா?" என்றார் கோபமும் கவலையுமாய்…
அதுவரை அமைதியாக இருந்த செழியன் "அத்தை அது என் பொறுப்பு நான் சிற்பிக்கு நல்ல ஒரு வேலைப் பார்த்து தரேன்" என்று சொன்னான்.
உடனே பூர்ணா எழுந்து வந்து "இதுக்கெல்லாம் காரணம் நீதானா?சிற்பி எப்படி இவ்வளவு தைரியமா பேசுறாளேன்னு நினைச்சேன் இதுக்கு முழுக்க காரணமானவனே இவன் தான் " என்று அவனை அடிக்க கையை ஓங்கியபடி வந்தார்.
"ஐ…யோ என்னைப் பெற்ற தாயே! முதல்ல நான் சொல்றதைக் கேளுங்க அப்புறம் நீங்க வன்முறைக்கு இறங்குங்க சிற்பி தான் உதவின்னு கேட்டா நான் எப்படி முடியாதுன்னு சொல்ல முடியும்? முதல்ல மாமாகிட்டயும் அத்தைகிட்டயும் சம்மதம் வாங்கு அப்புறம் பேசிக்கலாம்னு தான்ம்மா சொன்னேன் சிற்பி வாயைத் திறந்து சொல்லேன் அமைதியா இருக்கே"
என்று அம்மாவிடம் அடிவாங்குவதற்கு பயந்து அவளை துணைக்கு அழைக்க அவளோ அங்கே ஒருத்தன் இருப்பது போலவே காட்டிக் கொள்ளவில்லை.
பூர்ணா செழியன் முதுகில் ஒரு அடி வைத்தார்.பாவமாய் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்த செழியன் "அடியேய் சண்டிராணி என்னையே மாட்டி விடுறியா? இரு உன்னை அப்புறமா கவனிச்சுகிறேன்" என்று பூர்ணாவிடமிருந்து தப்பித்து ஓடினான்.
அவன் சென்றதும் சிரித்துக் கொண்டே சிற்பி பூர்ணா அத்தையிடம் நடந்ததைச் சொன்னாள்.
அதைக் கேட்ட பூர்ணா "அவன் தான் சொன்னால்ல அப்பவே இதை சொல்ல வேண்டியது தானே"
"இல்லை அத்தை அத்தான் எப்பவும் என்னை வம்பு இழுத்துகிட்டே இருந்தாங்க அதுக்குத் தான் இந்த சின்ன பழிவாங்கல்" என்று சொல்லி சிரித்தாள்.
சிற்பி எப்போதும் இப்படித் தான் இருக்கும் எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் எளிதில் கடந்து விடுவாள்.மற்றவர்களையும் கடக்க வைத்து விடுவாள்.இது தான் அவளுடைய குணம்.இந்த குணமகளை பிரிய மனமில்லாமல் தான் தாமரை தவித்துக் கொண்டிருந்தார்.
அம்மாவின் அருகில் வந்து அவர் மடியில் தலைவைத்து படுத்தவள் "அம்மா கொஞ்ச நாளைக்குத் தான்ம்மா இந்த பிரிவு கஷ்டமாத் தெரியும் அப்புறம் சரியாயிடும் தினமும் நான் வீடியோ கால் பேசுறேன் முடிந்த வரை ரெண்டுமாசத்துக்கு ஒருமுறை வந்து தங்கிட்டு போறேன்ம்மா நீ முழுசா அப்பாவை மட்டும் எந்த கவலையும் இல்லாமல் கவனிச்சு பாரும்மா எல்லாமே மாறும்" என்று சொன்னவளின் கண்ணீர் தாமரையின் புடவையை தாண்டி சென்ற கண்ணீரின் ஈரம் அவருக்கும் மகளின் மனதின் எண்ணம் புரிந்தது.
சிற்பிக்கும் இதில் விருப்பமில்லை.தன் அப்பாவிற்காக வலுக்கட்டாயமாக செல்லும் மகளை மனதில் நினைத்து பெருமைப்பட்டவர் அவளிள் தலையை அன்பாய் வருடிக் கொடுத்தபடி "போய்ட்டு வாம்மா அம்மா சம்மதிக்கிறேன் நீ சொன்ன மாதிரி தினமும் என்கிட்டயும் அப்பாகிட்டயும் போன் போட்டு பேசனும் சரியா?" என்று உறுதி வாங்கிக் கொண்டார்.
அவர் சொன்னதைக் கேட்ட சிற்பி எழுந்து அம்மாவைக் கட்டிக் கொண்டவள் "ரொம்ப தாங்ஸ்ம்மா நீங்க சொல்றதை நான் கண்டிப்பா கேட்பேன் சரியா" என்று சொன்னவள் பிரிய வேண்டுமே என்று கவலையும் மகிழ்ச்சியும் கலந்து சிரித்தபடிச் சொன்னாள் சிற்பி.
பூர்ணா மகிழ்ச்சியாய் "எப்படியோ மொத்தக் குடும்பமும் ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க நான் இதைப் பற்றி உடனே உங்க அண்ணன்கிட்ட பேசுறேன் இல்லைன்னா என்னைச் சத்தம் போடுவாங்க" என்றதும்
தாமரை "அண்ணி நீங்க பேசி முடிச்சுட்டு அண்ணன்கிட்ட நான் பேசனும்னு சொல்லி போனை என்கிட்ட தாங்க" என்றாள்.
அவள் சொன்னபடியே பூர்ணா தன் கணவனை அலைபேசியில் அழைத்தாள்.அழைப்பை எடுத்தவர் "முக்கியமான வேலைல இருக்கேன் பூர்ணா அப்புறமா பேசுறேன்"
"என்னங்க ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் தாமரை வேற பேசனும்னு சொல்றா"என்றதும் அவர் "சீக்கிரமா சொல்லு" என்றதும் சிற்பியின் முடிவைப் பற்றிச் சொன்னாள்.
பூர்ணா சொன்னதைக் கேட்ட அவருடைய கணவன் சிறிது யோசனையில் மூழ்கியவர் "பூர்ணா சிற்பிக்கிட்ட உடனே அவ இதுவரைக்கும் படிச்சு வாங்கின எல்லா சர்ட்டிபிகேட்டையும் எனக்கு உடனே மெயில் பண்ணச் சொல்லு அவ எக்ஸ்ட்ரா படிச்ச டிப்ளமோ சர்ட்டிபிகேட்ஸ்ஸையும் சேர்த்து அனுப்பச் சொல்லு" என்றவர் "தாமரைகிட்ட போனைக் கொடு" என்றார்.
தாமரையிடம் அலைபேசியைக் கொடுத்து விட்டு சிற்பியிடம் அவருடைய மாமா சொன்ன விஷயங்களை எல்லாம் பூர்ணா மின்னஞ்சல் அனுப்பச் சொன்னார்.
சிற்பியும் யோசனையோடு எல்லாவற்றையும் உடனே அவளுடைய மாமாவிற்கு மின்னஞ்சல் எண்ணிற்கு அனுப்பவதற்காகச் சென்றாள்.
இங்கே அலைபேசியை வாங்கிய தாமரை "அண்ணே சபரி அண்ணே எப்படி இருக்கீங்க?" என்று நலம் விசாரித்தவள் பொதுவாய் பேச அவரும் எல்லாவற்றையும் கேட்டு வைத்து விசாரித்துக் கொண்டார்.
கடைசியில் தாமரை சிற்பி பெங்களூர் வரும் விஷயம் பற்றியும் சொன்னவர் "அவளுக்கு ஒரு நல்ல பாதுகாப்பான இடத்தில் வேலைக்கு சேர்த்து விடுங்க சபரி அண்ணே" என்று வேண்டுகோள் ஒன்றையும் வைத்தாள்.
அதைக் கேட்ட சபரி "தாமரை நீ கவலைப் படாதே!சிற்பியை நான் பார்த்துகிறேன்.இங்கே நான் இருக்கும் இடத்தில் ஒரு வேலை இருக்கு முயற்சி செய்றேன் கிடைத்தால் அவள் இங்கேயே வேலைச் செய்யட்டும்" என்று பதிலையும் சொன்னார்.
அதைக்கேட்ட தாமரைக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது.தன் அண்ணனின் மேற்பார்வையிலேயே சிற்பி இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தவர் அவள் அங்கேத் தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தவர் இதைப் பற்றி அங்குள்ள எல்லோரிடமும் சொன்னாள்.சிற்பிக்கு மாமாவுடன் வேலை என்றதும் திக்கென்று இருந்தது.
சபரி ரொம்ப கறார் பேர்வழி.எதுவும் சரியாக இருக்க வேண்டும் இல்லையென்றால் சத்தம் போடுவார்.அதனாலயே அவரைப் பார்த்தால் சிற்பிக்கு ஒரு பயம்.வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அடம் பிடித்து முடிவெடுத்தால் இப்போ சிங்கம் வாயிலயா என் தலை மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலைமையில் இருந்தாள்.
அவள் அந்த எண்ணத்தோடு கூடிய பதற்றத்தில் இருந்தாள்.
இங்கே சபரி மின்னஞ்சலில் வந்த அவளுடைய சான்றிதழ்களை பார்த்ததும் அவருக்கு திருப்தியாக இருந்தது.உடனே இந்த சான்றிதழ்கள் அனைத்தையும் சபரி சாம்பவிக்கு அனுப்பியவர் சிற்பியின் விவரங்களையும் அனுப்பனார். ஆனால் அவள் தனக்கு உறவுமுறை என்ற தகவலை மட்டும் அனுப்பாமல் சாம்பவியின் பதிலுக்காக காத்திருந்தார்.