உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -12
மகிழுந்திலிருந்து இறங்கியதும் சபரியைப் பார்த்து சிற்பி "வணக்கம் மாமா நல்லா இருக்கீங்க?" என்று பயத்தோடு கேட்டாள்.
சபரியோ அவளை மேலும் கீழுமாக பார்த்தவர் "ம்ம்…" என்று ஒற்றை முணங்கலில் பதிலளித்தவர் "மணி எட்டாகப் போகுது பத்து மணிக்கு இன்டர்வியூ இருக்கு சீக்கிரம் ரெடியாகு எனக்கு சரியான டைம்க்கு போனால் தான் பிடிக்கும்" என்று தன் விருப்பத்தை அவளிடம் சொன்னார்.
சிற்பியோ மனதினுள் 'ஒரு வார்த்தை நல்லா இருக்கியாம்மா அம்மா என்ன செய்றாங்கன்னு கூட கேட்கலை சிற்பி வேலைக்கு போறேன்னு ஒரு தென்றல் புயலாகி வருதேன்னு பெரிய டையலாக் எல்லாம் பேசுன இப்போ வசமா சிக்கிகிட்டே இப்போ நீயே சிக்கிக்கிட்ட சிதம்பரம்'என்று அவள் ஆழ்ந்த யோசனையோடு நின்றாள்.
அப்பொழுது சபரி "சரியான நேரத்துல வந்துடுவேல்ல"என்றதும் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டினாள்.
இடையினில் பூர்ணா "என்னங்க ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்" என்றதும் இருவரும் பின்னால் "அம்மா ப்ளீஸ் வேண்டாம்"என்று கண்களால் கெஞ்சியபடி கைகளால் சைகைக் காட்டினார்கள்.
பூர்ணா தலையசைத்து விட்டு "முதல்ல சிற்பியை இன்டர்வியூக்கு அழைச்சுட்டு போய்ட்டு வாங்க வந்தவுடன் பேசலாம்" என்று அவர் சிற்பிக்கு அவள் தங்க வேண்டிய அறையை காண்பிக்கச் சென்று விட்டார்.
சபரி செழியனிடம் "ஊர்ல எப்படி எல்லாம் நல்லா படியா முடிஞ்சதா?"
"ம்ம்… எல்லாம் நல்ல படியா முடிஞ்சதுப்பா"
"எப்போ வேலைக்கு போக ஆரம்பிக்கலாம்னு இருக்கே?"
"நாளைக்கு கம்பெனில வர்றதாக சொல்லிட்டேன்" என்றான்.
"ம்ம்… சரி" என்று சபரி சென்றதும் தான் அவனால் மூச்சே விட முடிந்தது.
பூர்ணாவிடம் தன் தங்கையைப் பற்றியும், அருள்மணி,கனிகா என எல்லோர் பற்றியும் விசாரித்தார் சபரி.கனிகாவின் மாப்பிள்ளை வீட்டில் எதிர்பாராமல் கேட்ட பத்து பவுண் நகையை சபரி தன் மருமகளுக்கு சீதனமாகக் கொடுத்தது வீட்டுப் பெரியவர்கள் நான்கு பேரைத் தவிர யாருக்கும் தெரியாது.தெரிந்து விட்டால் தன் மச்சானின் மதிப்பு குறைந்து விடும் என்று சபரி யாரிடமும் சொல்லாமல் பார்த்துக் கொண்டார்.அவர் கனிகாவின் திருமணத்திற்குத் தான் வரவில்லை.ஆனால் தேவையான எல்லாவற்றையும் பார்த்து பார்த்துச் செய்திருந்தார்.ஒருவாரம் கனிகாவை பெங்களூரில் விருந்திற்கு அழைத்தது அவர்கள் மட்டும் தெரிந்த விஷயம்.சபரி வெளியில் காட்டமாக இருந்தாலும் சொந்தங்களை அனுசரித்து செல்பவர் என்று இந்த தலைமுறையினர் அறிந்திராத ஒரு பண்பு.
சிற்பிக்கு இப்பொழுது தன்னைச் சுற்றி என்ன இருக்கிறது என்று பார்க்கக் கூட நேரம் இல்லாமல் இருந்தது.அவள் தன்னை துரிதமாக தயார் செய்து வெளியே வந்தாள்.அங்கே அவளுக்காக எல்லோரும் சாப்பாட்டு மேஜையில் காத்திருந்தனர்.
தற்பொழுது பேருக்காக ஒன்றை வாயில் போட்டு கொறித்து விட்டு அத்தையிடமும் செழியனிடமும் சொல்லி விட்டு சபரியுடன் வேகமாக கிளம்பினாள் சிற்பி.
சபரி மகிழுந்தில் அமர பின்னால் சிற்பியும் அமர்ந்துக் கொண்டாள்.
மகிழுந்து சீரான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது.
சபரி மகிழுந்தில் கவனம் செலுத்தியபடி வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தபடி…
"சிற்பி"
"சொல்லுங்க மாமா"
"இனி வெளியே வைச்சு என்னை மாமான்னு கூப்பிடாதே! சாருன்னே கூப்பிடு"
"சரிங்க சார்" என்றாள்.
அதைக் கேட்டு சிரித்தவர் "குட் உடனே புரிஞ்சுக்கிட்டே சந்தோஷம்.அப்புறம் நான் தான் உன்னுடைய மாமான்னு யாருக்கும் சொல்ல வேண்டாம் நம்ம ரெண்டுபேருடைய உறவும் மேனஜர்,பி.ஏ அந்த அளவிலேயே இருக்கட்டும்" என்றார்.
சபரி சொன்னதைக் கேட்டதும் சிற்பிக்கு புரிந்தது தான் பி.ஏ.வாக வேலைக்குச் செல்கிறோம் என்று.
"ஏன்? எதற்கு? அப்படிங்கிற காரணம் உனக்கு தோணலாம் ஆனால் உண்மை இதுதான் வெளியே யார்கிட்டயும் என் மூலமா அவங்க அஅகரிசனம் வாங்குறது எனக்கு பிடிக்காது" என்றார்.
சிற்பி "சரிங்க சார் நீங்க சொல்ற எல்லாத்தையும் நினைவில் வைச்சு அதையே நான் செய்றேன்" என்றாள்.
அதற்கும் ஒரு சிறு தலையசைப்பை பதிலாக தந்தவர் "வெளியே தங்கலாம்னு முடிவு செய்து இருக்கியா?"
அவள் ஆமாம் என்று தலையசைத்தவளிடம் "செழியன் பூர்ணாகிட்ட பேசும் போது காதுல விழுந்துச்சு கொஞ்ச நாள் நம்ம வீட்லயே தங்கு அப்புறமா பார்த்துக்கலாம்" என்றார்.
அதற்கும் ம்ம்… என்று பதிலளித்தாள்.அவர்கள் இறங்க வேண்டிய சங்கீத மேளாவுடைய அலுவலகம் வரவும் இருவரும் மகிழுந்திலிருந்து இறங்கி அந்த உயர்ந்த கட்டிடத்தை நோக்கி இருவரும் சென்றனர்.அந்த பெயர்பலகையை வாசித்ததும் அவள் நெஞ்சில் உண்டான அதிர்ச்சியை தன்னுள்ளே மறைத்துக் கொண்டாள் பெண்ணவள்.
அந்தக் கட்டிடத்தையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே வந்தாள்.அங்குள்ளவர்களின் முன்னால் இவளோ ஏதோ பள்ளிக்கு முதன்முதலாக நுழைந்த குழந்தைப் போல் பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.
சபரியின் பின்னால் நடந்தவள் அடுத்து சாம்பவியின் அறையை நோக்கி வந்தனர்.சிற்பியை வெளியே இருக்கச் சொல்லி விட்டு சபரி மட்டும் உள்ளேச் சென்று சிற்பி வந்ததைச் சொன்னார்.
சபரி வெளியே வந்து சிற்பியை உள்ளே அனுப்பினார்.இதயம் வேகமாக துடிக்க… பதற்றத்தோடு உள்ளே நுழைந்தவள் "கு…குட் மார்னிங் மேம்"
சாம்பவி எந்த சலனமில்லாமல் அவளை பார்வையாலேயே நோட்டம் இட்டவள் "குட் மார்னிங் உட்காருங்க" என்றாள் ஆங்கிலத்தில்…
சிற்பி உட்கார்ந்ததும் கொஞ்சம் தன்னை சமன் படுத்தியவளிடம் சாம்பவி
"சிற்பி"
"ஆமாம் மேம்"
மேலும் அவளைப் பற்றி விசாரித்தவள்
"உங்க சர்ட்டிபிகேட்ஸ் எல்லாம் பார்த்தேன் ரொம்ப நல்ல மார்க்ஸ் ஸ்கோர் செய்து இருக்கீங்க ஏன் மேல டிகிரி படிக்கலையா?"
"கொஞ்சம் பர்ஸ்னல் ப்ராப்ளம் மேம் அதான் ஆனா போஸ்ட் மூலமாக படிக்கலாம்னு ஒரு எண்ணம் இருக்கு"
"குட் இங்கே என்ன வொர்க்ஸ்னு தெரியுமா?"
"தெரியாது மேம்"
"சபரி சார் எதுவும் சொல்லலையா?"
"இல்லை சார் எதுவும் சொல்லலை முதல்ல இன்டர்வியூல செலக்ட் ஆனா தான் மேற்கண்ட விஷயங்களைப் பற்றி பேச முடியும்னு சொல்லிட்டாங்க"
"சரி உங்களுக்கு மியூசிக் பற்றி என்னத் தெரியும்?"
சாம்பவி அப்படிக் கேட்டதும் தன்னை நினைத்து நொந்தவள் அதைப் பற்றிய அடிப்படை விஷயங்களைச் சொன்னாள்.அதைக்கேட்ட சாம்பவி திருப்தியோடு…
"உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சேன் ஆனா நீங்க சொன்ன சில விஷயங்கள் எனக்கே புதுசா இருந்தது.அப்போ கண்டிப்பா இந்த மியூசிக்கை விரும்பி தெரிந்த நபராகத் தான் இருக்க முடியும். நீங்க என்னோட மியூசிக் பேண்ட்டோட சேர்ந்து வொர்க் செய்ய போறீங்க. வாழ்த்துக்கள் மற்ற விஷயங்களை சபரி சார் சொல்வாங்க" என்று சிநேகமாய் சிறு கையணைப்பில் அனுப்பினாள்.
உடனே சபரியை அழைத்து சாம்பவி எல்லா விஷயங்களையும் சொன்னாள்.அதைக் கேட்ட சபரிக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
சிற்பியிடம் புன்னகை மட்டும் சிந்தியவர் அவளிடம் செய்ய வேண்டிய வேலைகளைச் சொன்னார்.தினமும் வந்து சிற்பி தன் வருகையை பதிவேற்றிய பின் இங்குள்ளவர்களிடம் அவள் வந்து மியூசிக் லவ்வர்ஸ் குழுவினர் முடிக்க வேண்டியவற்றை வாங்கி அதை சரியாய் செய்ய வேண்டும்.இதற்கிடையில் அவர்களின் பேட்டிகள்,போட்டியின் நாட்கள் செல்ல நாட்கள்,விளம்பரங்கள் எடுக்க வேண்டிய இடங்களுக்கு செல்வது என்று நிறைய பொறுப்புகள் அவளைச் சுற்றி இருந்தன.
இதையெல்லாம் பார்த்தவளுக்கு மலைப்பாக இருந்தது.இதை எல்லாம் தான் எப்படி செய்யப் போகிறோம்? என்பதே இன்னும் மிகைப்பாக இருந்தது.
அடுத்து மியூசிக் லவ்வர்ஸ் இருக்கும் இடத்திற்குச் சென்றனர் மூவரும்.சபரி,சிற்பியுடன் கம்பெனியில் உள்ள ஒருவரும் உடன் வந்திருந்தார்.இரண்டு நாட்களில் ஒரு ஆடிசன் இருப்பதால் அதைப் பற்றிய விவரங்களோடு வந்திருந்தார்.
அதனால் சிற்பியினால் சபரியிடம் எந்தவொரு சந்தேகத்தையும் கேட்க முடியவில்லை.மியூசிக் லவ்வர்ஸ் குழு என்பது பெண்களாகத் தான் இருக்கும் என்று இவள் நினைத்துக் கொண்டு வந்தாள்.அதைப் பற்றி எதாவது அலைபேசியில் போட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் சபரி எதாவது சத்தம் போடுவார் என்று அமைதியாக வந்தாள்.
நிரஞ்சனிடம் பார்த்தி "நிரஞ்சா சாம்பவி சொல்லி ஒரு வாரம் மேல ஆகப் போகுது இன்னும் அங்கிருந்து எந்த பதிலும் வரலையே"
அவனோ ஆழ்ந்த யோசனையில் இருக்க… காந்தன் "பார்த்தி சொல்றதும் சரி தானே இன்னைக்குப் போய் நாம நேர்ல போய் என்ன முடிவு செய்து இருக்கீங்கன்னு கேட்கலாம்"
மூவரும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்."நீங்க சொன்ன விஷயங்களைத் தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்.ஆனால் நம்மாள போய் கேட்டால் நாம வேற வாய்ப்பு கிடைக்காததுனால வந்தோம்னு நினைக்கக் கூடாதேன்னு யோசனையாக இருக்கு" என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே…
அந்த பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் போய் அவர்கள் மகிழுந்து உள்ளே நுழைந்தது.மூவருமாய் செல்ல சிற்பியை மட்டும் சபரி வெளியே நிற்கச் சொல்லி விட்டு இவர்கள் இருக்கும் வீட்டின் வாயிற்கதவை தட்டினார்கள்.
பேசிக் கொண்டிருக்கும் போதே யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க… காந்தன் பார்த்தியிடம் "போய் யாருன்னு பாரு" என்றதும்
பார்த்தி கதவை திறந்தான்.அங்கே நின்றுக் கொண்டிருந்த சபரியையும் அவருடன் இன்னொருவர் இருப்பதையும் கண்டவன் "வாங்க சார் உள்ளே வாங்க உட்காருங்க" என்று இருக்கையை காட்டியவன் வேகமாய் உள்ளே சென்று நிரஞ்சனிடம் "சபரி சார் வந்து இருக்காரு" என்றான்.
நால்வரும் ஒருவருக்கொருவர் பார்த்து விட்டு நால்வருமாய் வெளியே வந்தனர்.
நிரஞ்சன் சபரியைக் கண்டதும் "வாங்க சார்" என்றவன் இருவரும் தங்கள் நலம் விசாரித்துக் கொண்டனர்.
"அப்புறம் ப்ராக்டீஸ் எப்படி போய் இருக்கு?"
"ம்ம்… நல்லா போய்ட்டு இருக்கு சார்"
"சரிங்க நிரஞ்சன் முக்கியமான விஷயம் சொல்லத் தான் வந்தேன் மேடம் உங்க கண்டிஷனுக்கு ஒத்துகிட்டாங்க அப்புறம் வாரத்துக்கு ஒரு முறை வந்து நீங்க ஆபிஸ்ல நீங்க ரெடி செய்து இருக்க பாடலைப் பற்றி ப்ராபமென்ஸ் செய்து காட்டணும் ஆனால் போட்டிக்காக வெளிநாட்டுக்கு போகும் போது இதே நிலைமை சாத்தியமாகுமான்னு எனக்கு தெரியாது உங்க ஸ்டடியூல் பற்றி மற்ற நிகழ்ச்சிகள்னு சங்கீத மேளாவுடைய விஷயங்கள்னு எல்லாத்துக்காகவும் நாங்க ஒரு பி.ஏ நியமிச்சு இருக்கோம் இனிமேல் அவங்களும் உங்ககூட வேலைப்பார்ப்பாங்க உங்களுக்கு ஓகே தானே" என்றார்.
நிரஞ்சன் மற்ற மூவரையும் பார்த்தான்.அவர்கள் மெதுவாக பெருவிரலைத் தூக்கி சரியென்பது ஒத்துக் கொள்ள அவனும் "எங்களுக்கு ஓகே சார் நீங்க உங்களுக்காகவும்,எங்களுக்காகவும் செய்றீங்க நாங்க ஏன் வேண்டாம்னு சொல்லப் போறோம்" என்று அருகில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தபடி…
"ஓகே சந்தோஷம் இன்னைக்கே அவங்களை வேலைல சேரச் சொல்லியாச்சு" என்றதும்
பக்கத்தில் அமர்ந்திருந்தவர் எழுந்து வெளியே சென்றார்.நால்வரும் புரியாமல் சபரியைப் பார்க்க அவரோ "அவங்க வெளியே இருக்காங்க அதான் அவன் கூப்பிட போய் இருக்கான்" என்றார்.
நால்வரும் அருகில் இருப்பவர் தான் அந்த நபர் என்று நினைத்து இருந்தனர்.தங்களுக்குள் பார்வையை பரிமாறிய படி வாசலைப் பார்த்தனர்.முன்னால் அந்த நபரும் அவருக்கு பின்னால் அவரை விட குள்ளமாக இருக்க வேண்டும் அதனால் வருபவரை சரியாக அவர்களால் பார்க்க முடியவில்லை.
சபரி எழுந்து "முன்னால் வாம்மா" என்றவர் அவர்களைப் பார்த்து "சிற்பி இவங்க கூடத் தான் இனிமேல் நீ வேலைச் செய்யப் போறே" என்று அவளையும் நால்வரையும் அறிமுகப்படுத்தினார்.
நால்வருக்கும் அவள் பெண் என்பதே பெருத்த அதிர்ச்சியாக இருந்தது என்றால் அவளும் அதே நிலைமையில் தான் அவர்களை அதிர்ச்சி விலகாமல் பார்த்தாள்.