• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -14

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
79
67
18
Chennai

உதிராத மலராய் நானிருப்பேன்
அத்தியாயம் -14


காந்தன் அவன் அறையினுள் திடீரென்று சிற்பியை அழைத்து வந்தது சிற்பிக்கு கொஞ்சம் பதற்றமாக இருந்தது.


அவள் கையை விடுவித்தவுடன் காந்தன் "சாரி சிற்பி உன்னோட பர்மிஷன் இல்லாம நான் உங்களை தொட்டு இருக்கக் கூடாது சாரி"


சிற்பியோ மெதுவாக "பரவாயில்லை இருக்கட்டும் சார்" என்றாள்.


காந்தனோ தொடர்ந்து "நிரஞ்சனுக்கு கோபம் வந்தால் சட்டுனு போகாது சண்டை பெரிசாக வேண்டாம்னு தான் உங்களை அங்கிருந்து நகர்த்த இப்படி அழைச்சுட்டு வந்தேன்" என்றான்.

அவனின் நல்ல எண்ணத்தைப் புரிந்துக் கொண்ட சிற்பி "தாங்ஸ் சார் எனக்காகத் தானே செய்து இருக்கீங்க" என்றாள் சிநேகமான புன்னகையில்…


காந்தன் பதிலுக்கு புன்னகைத்தவன் "என்னை சார் எல்லாம் கூப்பிடாதீங்க சிற்பி காந்தன் என்றே கூப்பிடுங்க"


அவள் யோசனையாய் நிற்பதைப் பார்த்த காந்தன் "சிற்பி நீங்க என்னை சார்னு கூப்பிடும் போது ரொம்ப அதிக வயசு ஆனது மாதிரி பீல் ஆகுது" என்றான்.

இவர்கள் பின்னாலேயே வந்த பார்த்தியும் சஹாவும் கதவில் காதை வைத்து அவர்கள் என்னச் செய்துக் கொண்டிருக்கிறார்கள்? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

காந்தன் "சிற்பி நான் உங்களுக்கு சாப்பாடு ஆர்டர் செய்து தரேன்" என்றான்.


"இல்லை வேண்டாம் நீங்க முதல்ல கதவை திறங்க நாம வெளியே போகலாம் இல்லைன்னா தப்பா நினைப்பாங்க" என்று அவள் பதறிக் கொண்டு நின்றாள்.ஆனால் காந்தன் இதைப் பற்றியெல்லாம் கலைப்படாமல் அமைதியாக நின்றான்.


அவர்கள் நால்வருக்குள்ளும் சில நேரங்களில் மனவருத்தங்கள் ஏற்படும் போது இப்படித் தான் காந்தன் செய்வான் என்று நண்பர்களுக்குள் தெரியும் அதனால் அவன் தைரியத்தில் இருந்தான்.


பார்த்தி சஹாவிடம் "நிரஞ்சன் சிற்பியை திட்டியே வெளியே அனுப்புவான்னு பார்த்தால் காந்தன் அட்வைஸ் செய்தே வெளியே அனுப்பப் போறான்" என்று கதவில் சாய்ந்துக் கொண்டு இவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கதவை திறக்கவும் இருவரும் அப்படியே சாய்ந்து விழப் போக காந்தன் அவர்களைப் பிடித்துக் கொண்டான்.

பார்த்தி சிற்பியிடம் "உன் காதைக் காட்டு"என்றதும் சிற்பி பயத்தில் காதுகளை தன் கையால் பொத்திக் கொண்டு "எதுக்கு?" என்று கேள்வியாக பார்த்தாள்.

அதற்கு சஹா சிரித்துக் கொண்டே "இவன் செ…செய்த அட்வைஸ்ல உன் காதுல இருந்து இந்நேரம் இரத்தம் வந்து இருக்கனுமே! அதை செக் செய்யத் தான் பார்த்தி கேட்கிறான்" என்றான்.


உடனே சிற்பி புரியாமல் "அப்படியா!" என்று ஆச்சரியத்தோடு தன் காதுகளைத் தொட்டுப் பார்த்தாள்.

இதைப் பார்த்து பார்த்தியும்,சஹாவும் காந்தனைப் பார்த்து சிரிக்க அவனோ சிற்பியை முறைத்தான்.

அவர்களின் சிரிப்பின் அர்த்தத்தை மெதுவாக புரிந்துக் கொண்ட சிற்பி நாக்கைக் கடித்துக் கொண்டு இரண்டு காதுகளிலும் கைவைத்து "சாரி" என்றாள்.

அவளின் செய்கையில் மூவரும் சிரித்தனர்.நடந்ததை எல்லாம் நிரஞ்சன் ஓரமாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.


மூவரும் ஒன்றாக கைநீட்ட காந்தன் "இனிமேல் நாம எல்லோரும் ப்ரெண்ட்ஸ்ஸாக இருக்கலாம்" என்றான்.

அதைப் பார்த்த சிற்பி நிரஞ்சனைப் பார்த்தாள்.அவனோ அவர்களை கண்டுக் கொள்ளாதது போல் நின்றான்.

சிற்பியின் பார்வை அர்த்தத்தை புரிந்துக் கொண்ட பார்த்தி "நிரஞ்சனுக்கு இன்னும் கொஞ்சம் டைம் ஆகும் சிற்பி நாம எல்லோரும் ஒன்றாக இருந்தால் தான் நமக்கு வெற்றி கிடைக்கும்" என்றான்.


உடனே சிற்பி "ஒரு நிமிஷம்" என்று நேராக நிரஞ்சன் அருகில் சென்றவள் "நான் பேசினது எதாவது தப்பா இருந்தால் என்னை மன்னிசிடுங்க சார் நான் சும்மா விளையாட்டுக்கு தான் பேசினேன் தவிர உங்களை நோக வைக்கனும் இல்லை" என்றவள் அவனைப் பார்த்தாள்.

அவனோ தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் தலையை திருப்பிக் கொண்டு நின்றான்.

சிற்பி அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் இவர்கள் மூவரிடமும் கைக்கோர்த்து நிற்கும் பொழுது நிரஞ்சன் கடைசியாக வந்து சேர்ந்துக் கொண்டான்.

அவளைப் பார்த்து "உனக்காக இல்லை என்னோட ப்ரெண்ட்ஸ்ஸிக்காக அவங்க எங்க இருக்காங்களோ அங்கேத் தான் நான் இருப்பேன்" என்றான்.


அவனின் பதிலில் திருப்தியடைந்தவள் சிரித்தபடி… காந்தனைப் பார்த்து "தாங்ஸ் காந்தன் நீங்க என்கிட்ட பேசின பிறகு தான் எல்லோரும் என்னை ஏத்துக்கிட்டாங்க" என்று அன்பாய் சிரிக்க… காந்தன் சிற்பியின் தோளோடு தன் தோளை இடித்துக் கொண்டு சிரித்தான்.


அதைப் பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சன் சிற்பியைப் பார்த்து "நோக வைக்கனும் அப்படினா என்ன அர்த்தம்?" என்று கேட்டான்.

சிறிது யோசித்தவள் "நோக… அப்படின்னா காயப்படுத்த அர்த்தம்" என்றாள்.அதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டான்.


பார்த்தி சிற்பியிடம் "எங்ககிட்ட நீ ப்ரெண்ஷிப் வைக்கிறதுக்கு கொடுத்து வைச்சு இருக்கனும்"

"என்ன கொடுத்து வைச்சு இருக்கனும்? எதாவது பணமா? இல்லை சர்ட்டிபிகேட்ஸ் அந்த மாதிரியா?"

உடனே சஹா "இப்போ உனக்கு இந்த மொக்கைத் தேவையா?" என்றவன் "நா…ங்க ரொம்ப பேமஸ் அ..தனால அவன் சொல்றான்"

யோசித்தவள் அவர்களை மேலும் கீழுமாக பார்த்தவள் "அப்படியா! நீங்க பேமஸ்னா ஏன் எனக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியலை" என்றாள் சீரியஸ்ஸாக…


அவள் சொன்னதைக் கேட்ட நிரஞ்சன் மெதுவாக "அ..து எதுக்கோ கற்பூர வாசனை தெரியுமான்னு பழமொழி வருமே அந்த மாதிரி இருக்கு" என்று மெதுவாகச் சொன்னான்.

அவன் பேசுவது சரியாக கேட்காததால் சிற்பி "என்னவோ சொன்னீங்க ஆனால் எனக்கு சரியா கேட்கலை" என்றாள்.

அவனோ "ஒன்னுமில்லை" என்று திரும்பிக் கொண்டான்.

உடனே பார்த்தி சஹாவிடம் "டேய் இந்த சின்னப் பொண்ணு நம்மளை இன்சல்ட் செய்துட்டா விடக் கூடாது காட்டுடா நம்ம திறமையை" என்றதும்


சிற்பி கெத்தாக "காட்டுங்க உங்க திறமையை நானும் பார்க்கிறேன்" என்றதும் சஹா அவர்கள் நால்வரும் பாடிய பாடல் நிகழ்ச்சி ஒன்றை அலைபேசியில் போட்டுக் காட்டினான்.அதை சிற்பி கண்களை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


இவர்கள் மூவரும் செய்த ரகளைகளை காந்தனும் நிரஞ்சனும் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.நிரஞ்சன் சிற்பியைப் பார்த்து "காந்தா இவ நமக்கு பி.ஏ வந்தாளா? இல்லை நாம இவளுக்கு பி.ஏவாகப் போறாமா?"


அவன் சொன்னதைக் கேட்டு சிரித்த காந்தன் "அது என்னன்னு எனக்கு தெரியலை ஆனால் நம்ம லைப்ல ரொம்ப வருஷம் கழிச்சு எந்த ஒரு எதிர்பார்ப்பு,பொய் பேச்சு,நடிப்பு இல்லாமல் வெகுளியா மனசுல நினைக்கிறதை நேராக பேசுற ஒரு ஆளை இன்னைக்கு சந்திச்சு இருக்கேன் அது மட்டும் உண்மை" என்றான்.அவன் சொன்னதற்கு மறுப்பு சொல்லாமல் அவள் காணொளியையும் இவர்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

அலைபேசியில் ஓடிய காணொளி முடிந்ததும் சிறுபிள்ளை போல் சத்தமாக கைத்தட்டியவள் "வாவ்… சூப்பர் வேற லெவல் நான் என்னமோ நினைச்சேன் ஆனால் நீங்க நாலுபேரும் பிச்சி உதறிட்டீங்க கையைக் கொடுங்க" என்று பார்த்தியிடம் கைக்குலுக்கியவள் "நீங்க சொன்னது உண்மை தான் சார் எவ்வளவு பேர் உங்க பாட்டை கேட்கிறாங்க நீங்க பேமஸ் தான் எனக்குத் தான் தெரியலை அது சரி நீங்க ஏன் எங்க ஊர் சைட்ல வந்து பாடலை?அதனாலத் தானே எனக்கெல்லாம் தெரியாம போச்சு"

அவள் கேட்ட கேள்வியில் நிரஞ்சன் தலையில் அடித்துக் கொண்டபடி… "காந்தா இவ தெரிஞ்சு பேசுறாளா? இல்லை தெரியாமல் பேசுறாளா?ஒன்னுமே புரியலை"என்று இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான்.


உடனே காந்தன் சிரித்துக் கொண்டே "சிற்பி எங்களுக்கு எங்க அழைப்பு வருதோ? அங்கே ஸ்பான்ஸர் வைச்சு எல்லாம் ரெடி செய்வாங்க அப்புறம் தான் நாங்க பாட வருவோம்" என்றான் பொறுமையாக…


"ஓ… அப்படியா! அப்போ இன்னும் எல்லோருக்கும் நல்லா தெரிஞ்சு பேமஸ் ஆகுறதுக்குத் தான் இப்போ இந்த போட்டியில் நீங்க கலந்துக்க போறீங்களா காந்தன்" என்றாள்.


அவளின் அடுத்த யோசனையான கேள்வியைக் கேட்டு காந்தன் நிரஞ்சனைப் பார்த்து கண்ணசைக்க… அவனோ "ம்ம்…" என்று அவளுக்கும் பொதுஅறிவு இருக்கிறது என்று புரிந்துக் கொண்டான்.

"எது எப்படியோ? நீங்க நாலுபேரும் பாடிய பாட்டு சூப்பர்" என்று சிற்பி ஒவ்வொருத்தருக்காகச் சென்று கைக்குலுக்கி நட்புப் பாராட்டினாள்.


நிரஞ்சன் முறை வரவும் அவள் கைநீட்டினாள்.அவனோ எங்கோ பார்த்தபடி கைகளை மார்புக் குறுக்கே கட்டியபடி அமர்ந்திருந்தான்.

அதைப் பார்த்த சிற்பி "பாராட்டத் தானே கை கொடுங்களேன்"

அவனோ "முடியாது" என்று அவளைப் பார்க்காமல் சொன்னான்.
அவளோ சரியென்று நகர்ந்தவள் பின்னால் சென்று அவன் கைவிரல்களைப் பிடித்து "வாழ்த்துக்கள்" என்று சொல்லி விட்டு "யார்கிட்ட சிற்பிகிட்ட நடக்காது" என்றாள்.


அவளின் செய்கையைப் பார்த்து
மூவரும் நிரஞ்சனைப் பார்த்து சிரிக்க அவளின் இந்த செய்கை அவனை கொஞ்சம் ஆச்சரியமடையச் செய்தது.


பேச்சை மாற்றுவதற்காக எல்லோரையும் சாப்பிட அழைத்தான் நிரஞ்சன். நால்வரும் சாப்பிட உட்காரும் பொழுது சிற்பி "நான் வெளியே இருக்கேன்" என்று அவள் செல்லப் போகும் போது அவளது கையைப் பிடித்துக் கொண்ட பார்த்தி "சிற்பி எல்லோரும் சேர்ந்தே ஷேர் செய்து சாப்பிடலாம்" என்றான்.உடனே மற்ற இருவரும் ஒத்துக் கொண்டனர்.


நிரஞ்சன் அமைதியாக இருந்தான்.சஹா "அவனைப் பா…பார்க்காதே சிப்பி நாங்க மூணு பேரும் தரோம் அதுவே போதும்" என்றான்.

அதைக் கேட்ட சிற்பி "என்ன சிப்பியா?"


"ஆமாம் உன் பேரு சிற்பியை விட சிப்பி தான் நல்லா இருக்கு" என்று சொன்னதும் சிற்பி "அப்போ நான் சுஹான்னு கூப்பிடவா?"


உடனே அவன் "ஹய்ய்ய்… இந்த பேரு நல்லா இருக்கே இனிமேல் என் பேரு சுஹா கொரியன்ஸ் பேரு நல்லா இருக்குல்லே" என்றான்.

"கொரியன்ஸ் எப்படி உங்களுக்கு தெரியும்?"

பார்த்தி கேள்வியாய்…"நீ கொரியன் சீரியல் பார்க்க மாட்டியா?"

"இப்படி வேற ஒன்னு இருக்குதா?"

உடனே சஹா "போச்சு நீ பிறந்ததற்கான பலனையே அனுபவிக்கலை நான் உனக்கு அப்புறமா காட்டுறேன் நாம மூன்று பேரும் சேர்ந்து பார்க்கலாம் ஓகேவா" என்றான்.

சிற்பியும் தன் பெருவிரலை உயர்த்திக் காட்டி சரியென்று ஒத்துக்கொண்டாள். மூவரும் சிற்பியிடம் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.நிரஞ்சன் சிற்பியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.அவளின் களமில்லா புன்னகையோடு அவர்களிடம் பேசிச்சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளைப் பற்றி காந்தன் எல்லா விவரங்களையும் கேட்டு தெரிந்துக் கொண்டான்.ஆனால சிற்பி தன் நிலைமையைப் பற்றி மட்டும் எதுவும் சொல்லவில்லை.
 
  • Love
Reactions: shasri