• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -9

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
79
67
18
Chennai
"செழியா என்னோட படிப்பு முக்கியம் தான் ஆனால் அதை எல்லாம் விட எனக்கு இப்போ அப்பா மட்டும் தான் கண்ணுக்கு தெரியுறாங்க இங்கே வேலைக்கு போகலாம்னா பெரிய அளவில் சம்பளம் எதுவும் கிடைக்காது அதனால சென்னையில் எதாவது வேலைக் கிடைக்குமான்னு பார்த்து சொல்லுங்க" என்றாள்.


அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த செழியன் மனதினுள் 'ஒருவார்த்தை எனக்காக செய்வியான்னு கேட்டால் உன்னோட எல்லா கஷ்டங்களையும் நான் தாங்கிக் கொள்வேன் சிற்பி ஆனால் இப்போ உன்கிட்ட என் காதலைச் சொல்லி அதன் மூலமா நான் ஆதாயம் தேடுற மாதிரி இருக்கும் எனக்கு அது வேண்டாம்' என்று மனதில் நினைத்தவன் அவளையே யோசனையோடு பார்த்தான்.


"என்ன செழியன் பதிலே சொல்ல மாட்டேங்கிறீங்க?"

"ம்ம்… கண்டிப்பா சொல்றேன் சிற்பி.ஆனால் நாங்க எல்லோரும் இப்போ பெங்களூர்ல தான் இருக்கோம் அங்கே வேணும்னா நான் வேலைப் பார்த்து தரேன் ஏன்னா சென்னைல யாரும் தெரிஞ்சவங்க இல்லை,பெங்களூர்னா நான் என்றவன் மாற்றி நாங்க இருக்கோம்ல உனக்கு தைரியமா இருக்கும்" என்றான்.


அவன் சொன்னதைக் கேட்டு அவளும் தலையசைத்தாள்.

"முதல்ல அத்தைகிட்டயும்,
மாமாகிட்டயும் பேசி சம்மதம் வாங்கு அவங்க சரின்னு சொல்லிட்டாங்கன்னா நேரத்தை வேஸ்ட் செய்யாமல் உடனே எங்க கூட நாளைக்கே பெங்களூர் கிளம்பு நம்ம வீட்டிலிருந்தே நீ இன்டர்வியூக்கு போகலாம்" என்றான்.

அவன் சொன்னதை ஆழ்ந்து யோசித்தவள் "ம்ம்… சரி தான் அத்தான் நீங்க சொல்றதும் நல்ல யோசனயாகத் தான் படுது ஆனால் நான் பெங்களூர் வந்தால் உங்க வீட்ல தங்க மாட்டேன் மாமா ரொம்ப கண்டிப்பு பண்ணுவாங்க அதனால நான் ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல சேர்ந்துக்கிறேன் அப்போத் தான் எனக்கும் வெளி ஆளுங்ககிட்ட பழக ஈஸியா இருக்கும்" என்று தன் யோசனையையும் அவள் முடிவையையும் சேர்த்தே சொன்னாள்.


சிற்பி யாருக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாது என்று நாசுக்காக விலகிச் செல்ல நினைக்கும் புத்திசாலிதனத்தை நினைத்து சிரித்தவன் அவளின் இந்தத் தன்மைத் தானே இன்னும் இன்னுமாய் அவளை பிடிக்கச் செய்கிறது.


செழியனிடம் பேசி முடித்ததும் சிற்பி முடிவாக வேலைக்குச் செல்வதைப் பற்றி அத்தை இருக்கும் போதே பேசி சம்மதம் வாங்கி வேலைக்குச் சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தாள் சிற்பி.


அதனால் எல்லோரும் ஒன்றாக இருக்கும் தருணத்திற்காக காத்திருந்தாள் சிற்பி.

சாம்பவிக்கு நிரஞ்சன் சொன்ன விஷயத்தைக் கேட்டு ரொம்ப யோசனையாக இருந்தது.'எதாவது சிறிது சொதப்பல் நடந்தாலும் அவள் கையை விட்டு அலுவலகமும்,தலைமையையும் போய் விடுமே என்பதே அவளின் பெரிய கவலையாக இருந்தது.இதைப் பற்றி யாரிடம் பேசலாம் என்று நினைத்தவளுக்கு முன்னால் நினைவுக்கு வந்தது சபரி தான்.அவர் தான் அவளுடைய அப்பா தலைமை வகிக்கும் முன்பே தாத்தாவின் கடைசி காலத்திலிருந்து வேலைக்கு சேர்ந்தவர் அவரிடம் நடந்ததைப் பற்றி ஒரு ஆலோசனை செய்தால் நிச்சயம் எதாவது ஒரு வழி கிடைக்கும்' என்று முடிவெடுத்தாள்.


உடனே மேனஜர் சபரியை தன் அறைக்கு வரச் சொன்னாள்.

அருள்மணியின் அருகினில் தாமரை இருக்கும் போது பூர்ணா மறுநாள் ஊருக்கு கிளம்புவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.அப்பொழுது அவர்களுக்கு அருகில் வந்தவள் கொஞ்சம் பதற்றமாய் "அப்பா ஒரு விஷயம் பேசனும்ப்பா"


"சொல்லு மக்கா என்ன சேதி?"


"அ…து அப்பா" என்று அவள் திணறிக் கொண்டிருப்பதைப் பார்த்த சிற்பியை கூர்ந்து கவனித்தவர் ஏதோ பெரிய விஷயமா சொல்லப் போகிறாள் என்று யோசனையோடு அவளையேப் பார்த்தார்.

****

சாம்பவியை சந்திக்க வந்தார் சபரி.அவரை உள்ளே வரச் சொல்லி இருக்கையில் அமர வைத்தவள் அமைதியாக இருந்தாள்.

முதலில் சபரியே ஆரம்பித்தார்.

"மேடம் என்னை வரச் சொல்லி இருந்தீங்களா?"


அவர் சொன்னதைக் கேட்டு சற்று கோபமுகம் காட்டியவள் "அங்கிள் எத்தனை தடவை சொல்லி இருக்கேன் என்னை மேடம்னு சொல்லாதீங்க நான் எப்பவும் உங்க பொண்ணு சாம்பவி தான்" என்றாள்.


அதைக் கேட்டு சிரித்தவர் "சாம்பவி எப்பவும் என் பொண்ணு தான் ஆனால் இப்போ அவ இருக்கிற பதவி எப்பேர் பட்ட பதவி அதுல நான் போய் பேர் சொல்லி கூப்பிட்டால் மரியாதையா இருக்குமா?" என்றார் சிரித்தபடி…


"போங்க அங்கிள் எப்போ பார்த்தாலும் எதாவது ஒரு காரணம் சொல்லிட்டு இருக்கீங்க அப்பா சொன்னது சரி தான் சபரி அங்கிள் என் ப்ரெண்ட்டா இருந்தாலும் அவரை சில விஷயங்களில் மாத்தவே முடியாதுன்னு சொல்லுவாங்க,அதே மாதிரி தான் இருக்கீங்க " என்று ஆதங்கத்தோடு பேசினாள்.


அவளின் பேச்சைக் கேட்டு மெல்லிய புன்னகை ஒன்றை சிதற விட்டவர் "என்ன விஷயம்மா? பார்க்கனும்னு அழைச்சே?"

"அங்கிள் ஒரு சின்னது இல்லை பெரிய பிரச்சினை நீங்க தான் எனக்கு ஒரு நல்ல எனக்கு ஏத்தமாதிரியான வழியை சொல்லனும்"


"ம்ம்… சொல்லும்மா என்ன பிரச்சினை?"


நிரஞ்சன் சொன்ன விஷயங்களோடு நடந்த எல்லாத்தையும் சாம்பவி சபரியிடம் சொன்னாள்.


அனைத்தையும் சொல்லி முடித்தவள் கடைசியில் "அங்கிள் என்னோட லட்சிய கனவுல எப்படியாவது நான் வின் பண்ணனும் நீங்க தான் எனக்கு இந்த விஷயத்துல உதவி செய்யனும்" என்று சபரியிடம் தன் பிரச்சினை முழுவதையும் சொன்னாள்.


அவள் சொன்னவற்றை எல்லாம் ஆழ்ந்துக் கேட்டவர் கடைசியாக "உன் முடிவு எப்படி இருக்கனும்னு நீ சொன்னதால் அதுக்கு ஏத்த மாதிரியான யோசனையைச் சொல்றேன்" என்றவர் சிறிது நேரத்திற்கு பிறகு….

"சாம்பவி நிரஞ்சனும் அவனோட குழுவும் நல்ல ஒரு மியூஸிக் குழு இப்போ நீ அவங்களை விட்டுட்டா நினைச்ச காரியத்தை நடத்த முடியாது அதனால் அவர்கள் சொல்ற கண்டிஷனுக்கு ஒத்துக்கோம்மா" என்றார்.


அவரை புரியாமல் பார்த்த சாம்பவி "என்னச் சொல்லுறீங்க அங்கிள்? எனக்கு வேலை முடியனும் அப்படிங்கிறதுக்காக நான் மொத்தமா அவங்களை நம்பி சங்கீத மேளாவுடைய மொத்த எதிர்காலத்தையும் அவங்க மேல திணிக்க முடியாது" என்றாள் சற்றே கோபத்தோடு…


சபரியோ பொறுமையாக… "சாம்பவி நான் சொல்ற விஷயத்தை நல்ல விளக்கம்மா புரிஞ்சுக்கோம்மா,அவங்க சொல்ற கண்டிஷனுக்கு ஒத்துக்கோ.ஆனால் அவங்களை உன் கண்ட்ரோல்ல வைச்சுக்கோ' என்றார்.

"அங்கிள் தெளிவான பதிலைச் சொல்லுங்க"


சபரி "சாம்பவி நிரஞ்சன் சொன்னமாதிரி அவங்க வீட்ல இருந்தே தங்கள் பயிற்சியைச் செய்யட்டும் ஆனால் அவங்க என்ன செய்யனும்? என்னச் செய்றாங்கன்னு பார்த்துக் கொள்ள ஒரு ஆளை வேலைக்கு போடு வாரத்துல ஒரு நாள் இங்கே நம்ம ஆபிஸ்ல வரவழைத்து ஆறு நாளாக செய்த பயிற்சியையும் பாட்டையும் உன்கிட்டயும், உன்னோட குழுக்கிட்டயும் பாடிக் காட்டச் சொல்லு அதுல எதாவது மாற்றம் செய்யனும்னு நீங்க விரும்புறதை அவங்க கிட்டச் சொல்லி மாற்றலாம். பிறகு அந்த டீம் போக இடங்கள்,பேட்டி இதைப் பற்றிய விவரங்களை நீ வைக்கிற அந்த பி.ஏகிட்ட சொல்லி அந்தக் குழுவை சரியான நேரத்துல செய்ய வைக்கலாம், இந்த பி.ஏ மூலமா நமக்குத் தேவையான விஷயங்களை வாங்கிக் கொள்ளலாம்" என்று யோசனையைச் சொன்னார் சபரி.


அவர் சொன்னதைக் கேட்ட பிறகு இந்த யோசனை நல்லதாகப் பட்டது சாம்பவிக்கு.


அதனால் சபரியிடம் "அங்கிள் நீங்க சொன்னது செம ஐடியா. அவங்க நம்மளை விட்டுப் போக மாட்டாங்க என்னோட வேலையும் சரியாக நடக்கும்" என்று முடிவெடுத்தவாறேச் சொன்னாள்.

சபரி "சாம்பவி முக்கியமான விஷயம் நீ நியமனம் செய்யப் போற ஆளு இந்தக் குழுவைப் பற்றிய அறிமுகம் இல்லாதவங்களாக இருந்தால் ரொம்ப நல்லது"

"ஏன் அங்கிள்?"

"ஏன்னா இவங்க பேன்ஸ் அந்த மாதிரி யாராவது வேலைக்கு வந்தாங்கன்னா இவங்க. எதாவது தவறு செய்தால் பெரிதாக எடுத்து உன்கிட்ட சொல்லமாட்டாங்க அப்புறம் அவங்க என்னச் செய்றாங்கன்னு தங்களுடைய விருப்பத்திற்காகத் தான் பார்ப்பாங்களே தவிர அதில் ஒரு நேர்மையான வேலை இருக்காதும்மா அதுக்காகத் தான் சொல்றேன் நாம பொறுப்பைக் கொடுக்கிறவங்க அதை செய்ய தகுதியானவங்களாகத் தான் இருக்கனும்" என்று தன் இத்தனை வருட அனுபவத்தால் விளைந்த அறிவால் பேசினார்.


சபரி அங்கிள் சொல்வது எல்லாம் சாம்பவிக்கு சரியாகப் படவே அவரிடம் "அங்கிள் நீங்க சொன்ன காரணங்கள் எல்லாமே சரிதான் அதனால இன்னும் ஒரு உதவியையும் சேர்த்தே நீங்களே செஞ்சிடுங்க. இதுக்கான சரியான நபரை நீங்க தேர்ந்தெடுத்து என் முன்னால கொண்டு வாங்க நானும் அவங்களை தனியா இன்டர்வியூ பண்றேன் திருப்தியாக இருந்தால் உடனே வேலைல சேரச் சொல்லலாம்,சம்பளம் மத்த விஷயங்களைப் பற்றி நான் உங்களுக்கு மெஸேஜ் செய்றேன் லேட் செய்யாமல் சீக்கிரமாக நீங்க எதிர்பார்க்கிற மாதிரி நபரை அழைச்சுட்டு வாங்க அங்கிள்" என்று அவருக்கு அன்பாய் கட்டளையிட்டாள் சாம்பவி.


சபரியும் சரியென்று ஒத்துக் கொண்டு அதற்கான வேலைகளைப் பார்க்கச் சென்றார்.

*****

சிற்பியின் தயக்கம் புதியதாய் தெரிந்த அருள்மணி அவளைப் பார்த்து "என்ன விஷயம்மா ஏன் அமைதியாக இருக்கே?"


"அப்பா… நான் உங்க பொறுப்பில் பாதியை நான் சுமக்கிறேனேப்பா"

அருள்மணி,தாமரை என எல்லோரும் புரியாமல் விழித்தனர்.

"என்னம்மா சொல்ற? புரியும் படி சொல்லு"


"அப்பா நான் வேலைக்கு போகலாம்னு முடிவு செய்து இருக்கேன்,அதனால அத்தையோட நானும் நாளைக்கே பெங்களூர் போறேன்பா" என்று தன் முடிவாகச் சொன்னாள்.


அதைக் கேட்ட தாமரை கோபமாய் அவளுக்கு அருகில் வந்தவர் "என்ன சிற்பி பேச்செல்லாம் வித்தியாசமா இருக்கு?எப்பவும் அனுமதி கேட்பே இப்போ அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்றதும் பெரிய மனுஷியாட்டம் நீ முடிவு செய்துட்டு எங்ககிட்ட வந்து தகவல் சொல்லுறியா?"


"அம்மா… ஏன்ம்மா இப்படி எல்லாம் பேசுறீங்க? நான் இந்த மாதிரி முடிவு செய்துட்டு பேசலைம்மா நான் உங்ககிட்ட பர்மிஷன் கேட்டால் பொம்பளை பிள்ளை அவ்வளவு தூரம் எதுக்கு போகனும்னு சொல்லி
தடுப்பீங்க அதனாலத் தான் நான் போறேன்னு பேசினேன்" என்று தன் பக்க நியாயத்தைச் சொன்னாள்.


அருள்மணி எதுவும் சொல்லாமல் தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சிற்பி அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவளின் கவனம் முழுவதும் அப்பாவிடமே இருந்தது.


தாமரை சத்தமாய் "இப்போ என்னத் தான் செய்யலாம்னு முடிவு செய்து இருக்கே?"


அவளோ கண்ணீரைக் கண்கள் முழுவதும் நிரப்பிக் கொண்டு "அம்மா ப்ளீஸ் நான் சொல்ல வர்றதை புரிஞ்சுக்கோங்கம்மா அப்பாக்கு உதவியா இருக்கனும்னு நினைக்கிறேன் பாராமாக இல்லை உங்களுக்கு ஒரு ஆண்பிள்ளை இருந்தான்னா என்னச் செய்வானோ? அதைத் தான் நானும் செய்யனும்னு நினைக்கிறேன் இப்போ என்னோட படிப்பு முடிஞ்சு இருக்கு அதுக்கான ஒரு வேலை பார்க்கலாம்னு இருக்கேன் எனக்கு போறதுக்கு அனுமதி கொடுங்க" என்று அருள்மணியைப் பார்த்துக் கொண்டேச் சொன்னாள் சிற்பி.
 
Last edited:
  • Like
Reactions: shasri