அத்தியாயம் 16
அம்முவின் அம்மாவை வீட்டுக்கு அழைத்தும் வந்து விட்டனர். அவருக்கு மகளிடம் கேட்க பல கேள்விகள் இருந்தன.தான் செல்லும் பாதையெல்லாம் தன் தாயின் பார்வை சுற்றி வருவதை கவனித்தவள் அவரை வருத்த நினைக்காமல் அவரை அமர வைத்து தன் முழு காதலையும் நேற்று நடந்ததுவை வரை அனைத்தையும் கூறி முடித்தவள் தயக்கத்துடன் அவர் முகத்தை ஏறிட்டு பார்க்க மகளின் நிலையை நினைத்து கவலையடைந்தார் அவர்.
தன் தாயின் முகத்தில் தெரிந்த கவலையில் இவளுக்கும் நெஞ்சடைத்து. சிறு விசும்பலுடன் அவர் மடியில் தலை சாய்க தாயின் கை தானாக உயர்ந்தது அவளை வருட.
"இப்போ சொல்லுமா. அந்த டாக்டர் தம்பியை தவிர வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிப்பியாடா?" என கேட்க என்னவோ அந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தான் தள்ளப்பட்டதாகவே எண்ணி நெஞ்சு முழுக்க வேதனையால் துடிக்க தாய் மடியில் இருந்து சடார் என எழுந்து கொண்டவள் அவசர அவசரமாக தலையை இடம் வலம் ஆட்டிவைத்தாள்.
அவளின் ஆவேசத்தையும் காதலின் ஆழத்தையும் புரிந்து கொண்ட தாய் புன்னகையுடன், "தம்பி ஏதோ தப்பா புரிஞ்சிருக்காரு போலடா.சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்" என எதையோ நினைத்து பெருமூச்சு விட அவளும் அதனை அறியப்பெற்றவளாக தாயை அணைத்துக் கொண்டாள்.
...
இரவுணவும் உண்ணாமல் தன்னுள்ளே உழன்று கொண்டிருந்தான் ஆதவ் க்ரிஷ். தூக்கமும் தொலைதூரம் போனது வேங்கைக்கு.
அவளுக்கும் அதே நிலை தான்.இரு காதல் உள்ளங்களும் தூங்காமல் அந்த இரவை கடத்தின.ஒன்று தன் காதலை புரிந்தும் அதனை ஏற்றுக் கொள்ள மறுக்க மற்றோன்றோ அதனை இன்னும் புரியவே தவறுகிறது...
இதுவே காதலின் நியதியாகியது இங்கே...
...
அடுத்த நாள் காலைப் பொழுது பல சாதனைகளை படைத்த களைப்பில் இனிதென புலர்ந்திருந்தது.
காலையில் வழமை போல ஜாக்கிங் சென்று வந்தவன் நேரே தனது உடற்பயிற்சி அறைக்கு சென்று சில நேரங்கள் கடந்திருக்க வெளியே வந்தான்.வந்தவன் குளித்து முடித்து விட்டு அன்று ஏனோ சாதாரணமாக ரெடியாகினான்.வெள்ளை சேட்,கறுப்பு பேண்ட் அணிந்தவனுக்கு அதுவும் தனி கம்பீரத்தை கொடுத்தது. அவனுடைய கட்டுமஸ்தான தேகத்துக்கு அது ஒரு எடுப்பாகவே இருந்தது. தலை முடியை ஜெல் இட்டு வாரி சரி செய்திருக்க அவன் உச்சிமுடியோ அவனை போலவே அடங்காமல் அவன் நுதலை தொட்டு சரசம் செய்து கொண்டிருந்தது.
எப்பொழுதும் அவன் செயல்களில் ஓர் தனி நேர்த்தி இருக்கும்.அது அவனே அவனுடைய சிறுபராயத்தில் இருந்து அவனை கவனித்து வந்ததால் வந்ததோ என்னவோ!!!
அதே கம்பீரம் மாறாமல் தன் அக்மார்க் நடையுடன் கீழே வந்தவனுக்கு அந்த டைனிங் அறையை பார்த்தும் நேற்று நடந்தவை சிறுக சிறுக நினைவில் வந்தது. அப்படியே திரும்பி மேலே அவளறையை பார்க்க அதுவும் அவள் உள்ளம் போல பூட்டியே இருந்தது.ஒரு சிறு தோள் குலுக்கலுடன்,மரகதம் பரிமாற சாப்பிட்டு விட்டு ஆபிஸிற்கு கிளம்பி விட்டான்.
ஆபிஸ் வரவே அனைவரும் அவனுக்கு காலை வணக்கம் தெரிவிக்க வழமை போலவே அவனும் பதிலேதும் கூறாமல் தனதறை நோக்கி சென்று மறைந்தான். அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்த விக்ரமும் அவனிடம் அனுமதி பெற்று அவனறையினுள் நுழைந்தான்.
அன்றைய நாள் செடூலை அவனிடம் நீட்டிய விக்ரம் ஆதவையே பார்த்துக் கொண்டிருக்க அதனை நிதானமாக பார்த்து வந்த ஆதவின் பார்வை ஓரிடத்தில் நிலை குற்றி நின்றது. அதனையும் விக்ரமைமும் மாறி மாறி பார்க்க விக்ரமிற்கு தான் அவன் பார்வையில் தொண்டையில் பயப் பந்து உருண்டது.எச்சில் விழுங்கிக் கொண்டே ஆதவை குழப்பத்துடன் பார்த்தவன் ஆதவின் "வட் இஸ் திஸ்?" என்ற கேள்வியில் பதில் அளிக்க ஆயத்தமானான்.
"அ..அது சார் யாரோ கவிதா என்றவங்க உங்கள மீட் பண்ண அப்பொய்ன்ட்மன்ட் வாங்கி இ..இருக்கிறாங்க" என ஆதவின் பார்வை மாற்றத்தில் வார்த்தைகள் தந்தியடித்தன ஆடவனுக்கு.
அவனை புருவ முடிச்சுடன் ஏறிட்ட வேங்கை.."கேன்ஸல் தட்" என்றவாறு லெப்டொப்பில் மூழ்கி விட்டான்.
விக்ரமும் வேறு வழியில்லாமல் வெளியே வந்து ஆதவின் கட்டளைக்கிணங்க அவன் சொன்ன வேலையையுய் கட்சிதமாக முடித்து விட்டான்.
அன்று வேலைப்பளு காரணமாக ஆதவ் அதில் மூழ்கிப் போயிருக்க அவனை கலைத்தது அவனின் அறைக்கதவு திறக்கும் சத்தம்.
எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் தன்னுடைய அனுமதி இல்லாமல் தன் அறைக்கதவை திறந்திருப்பான் என உச்சகட்ட கோபத்தில் அவன் நிமிர்ந்து பார்க்க,அங்கே நின்றதோ அவன் இல்லை அவள்.
ஆண்கள் என்றாலே உண்டு இல்லை என்று செய்பவன் தன் எதிரே நிற்பது பெண் என்று தெரிந்தும் சும்மா விடுவானா இந்த ஆதவ பிறவி..!?
அங்கே நின்றிருந்ததோ நவநாகரீக மங்கை ஒருத்தி. அவள் பின்னே ரிஷப்ஷனிஸ்டும் விக்ரமும் பயத்துடன் ஓடி வந்து சேர்ந்தனர்.
பின்ன, ஆதவின் அனுமதியோடு அங்கே வந்தாலே கடித்து குதறுபவன் போல தான் பேசுவான்.இதுல இவ என்னடானா அவனுடைய அனுமதி இல்லாமல் நுழைந்திருக்கிறாள். அதிலும் விக்ரமிற்கு தான் இன்னும் வியர்த்துக் கொட்டியது. ஏனென்றால் ஆதவ் காலையில் அனுமதி வழங்க வேண்டாம் என கூறியிருந்த பெண்ணே இவள் தான். அவளே தயாளனின் மகள் கவிதா.
ஆதவோ சுட்டெரிக்கும் பார்வையில் அவளை பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பார்வையில் ஒரு கணம் பயத்தில் தடுமாறியவள் பின்னர் ரசனையாக அவனை பார்த்திருந்தாள்.
கூர் பார்வையில் அனைத்தையும் கட்சிதமாக கணிப்பவன் இதனை தவற விடுவானா என்ன?இருந்தும் அவன் நிதானமாக இருந்தான். அது பூகம்பமாய் தாக்க இருக்கிறது என்பதை அறியாத பேதையும், அவனும் தன்னை இரசிக்கிறான் என நினைத்து அட்வான்டேஜ் எடுத்து பேசலானாள்.
"பாருங்க க்ரிஷ் இவங்க உங்கள மீட் பண்ணவே எனக்கு பர்மிஷன் தரமாட்டிக்காங்க. என்னைய யார்னு தெரியாது போலும்; ஒரு தடவை யாருனு சொல்லுங்க க்ரிஷ்..." என ஒவ்வொரு தடவையும் க்ரிஷ் க்ரிஷ் என சொல்லச் சொல்ல ஆதவிற்கோ கோபத்தில் நரம்புகள் புடைத்து நின்றன.
அப்படியே நிதானமாக எழுந்து வந்தவன் அவளிடமிருந்து சற்று தள்ளி நின்று பாதங்களை அகட்டி வைத்து பேண்ட் பாக்கட்டினுள் கையிட்டு நின்று கொண்டான். அந்த தோரணையிலே அடுத்து நடக்க இருப்பது விக்ரமிற்கு புரிந்து விட்டது. கவிதாவை பெருமூச்சுடன் பார்த்தவன் இவளுக்கு இது தேவை தான் என மனதில் கவுண்டர் வேறு கொடுத்துக் கொண்டு மீண்டும் ஆதவின் புறம் தலை சாய்த்து நின்றான்.
அவளோ அவனை இன்னும் நெருங்கி வந்து "பாருங்க க்ரிஷ்" என சிணுங்க அவன் அப்போதும் அசையாது நின்றிருந்தது தான் விந்தை..
அதனை தனக்கு சார்ப்பாக எண்ணிக் கொண்ட கவிதா இது தான் சந்தர்ப்பம் என்று அவனைத் தொட எத்தணித்த அடுத்த கணம் சுருண்டு போய் தரையில் வீழ்ந்தாள்.
ஆம் ஆதவ் அவளை அறைந்திருந்தான். கன்னம் மரத்தது போல இருக்க வலியில் நிமிர்ந்து கலங்கிய கண்களுடன் அவனைப் பார்க்க அவனோ அவளை வெட்டி வீசி விடுமளவு ருத்ரமூர்த்தியாக மாறி பார்வையாலே எரித்துக் கொண்டிருந்தான்.
"என் பர்மிஷன் இல்லாம உள்ள வந்ததே தப்பு. இதுல நான் என்னவோ உனக்கு முறைப் பையன் மாதிரி பேச்சா பேசுற.? தொலைச்சு கட்டி விடுவன்..இடியட்" என கடித்த பற்களிடையே வார்த்தைகளை இவன் கடிந்து துப்ப, அவனுடைய சத்தத்தில் அவளோ அரண்டு போயிருந்தாள்.
"என்னை டச் பண்ணனும் கிட்ட வரனும்னு நினைச்ச உயிரோட இருக்க மாட்ட" என விரல் நீட்டி எச்சரித்தவன் "கெட் லொஸ்ட் நோன்சென்ஸ்" என கூற அவன் அறைந்ததும் இல்லாமல் ஊழியர்கள் முன் திட்டியதும் அவளுக்கு அவமானமாக இருக்க அழுது கொண்டே திமிருடன் வெளியேறி இருந்தாள்.
வெளியே வந்தவளை விக்ரம் ஏளனமாக பார்த்து சிரிக்க அதில் இன்னும் கோபம் வரப்பெற்றவள் எதுவும் செய்ய முடியாத நிலையில் விக்ரமை முறைத்து விட்டு வெளியேறினாள்.
விக்ரம் எவ்வளவு எடுத்து கூறியும் கேட்காதவள் க்ரிஷ் அவளது காதலன் என கண்ணில் கனவுடன் கூறியவளை பார்த்து அரண்டு விழித்தான் விக்ரம்; "இனி உன்ன அந்த கடவுள் கூட காப்பாத்த முடியாது" என மனதினுள் அவளுக்காக பரிதாபப்பட்டவன் நடப்பவற்றை வேடிக்கை பார்க்கத் தொடங்கி இருந்தான். இருந்தும் உள்ளுக்குள் ஆதவை நினைத்து நடுங்கிக் கொண்டு தான் இருந்தான்.
விக்ரமிற்கு ஆதவின் கடந்த காலம் பற்றி தெரியும். அது போல அவன் அவசர திருமணம் செய்துள்ளான் என்று வரை தெரிந்து வைத்திருந்தவனுக்கு அவள் யாரென்று தெரியாது. அவளை காணும் போது இவன் நிலை?????
அப்படியே போகும் கவிதாவைப் பார்த்து நின்றிருந்தவன் ஆதவ் அழைக்கவும் அடித்து பிடித்துக் கொண்டு ஓடினான்.
ரிஷப்ஷனிஸ்டையும் வார்ன் பண்ணி அனுப்பியவன் விக்ரமை கவிதாவை ஃபோலோ செய்ய சொல்லி அனுப்பி வைத்தான்.
அவனைக் கொலை செய்ய இந்த கொஞ்ச நாட்களாக முயற்சிகள் நடக்கின்றனவல்லவா... ஆதலால் இதுவும் தன் கண் காணா எதிரியின் திட்டமாக இருக்குமோ என ஊகித்தே ஆதவ் க்ரிஷ், விக்ரமை அனுப்பி வைத்தான்.
இங்கே கவிதாவோ தனதில்லம் சென்றால் கன்னக் காயத்தை வைத்து அவர்கள் ஏதும் கேள்விகள் கேட்கக் கூடும் என நினைத்து தனது மற்றைய பங்களாவை நோக்கி சென்றாள். அந்தளவுக்கு ஆதவ் அறைந்தது அவளின் கன்னத்தில் பதிந்திருந்தது.
அவள் இறங்கும் இடத்தை நோட்டமிட்ட விக்ரம், அதனை ஃபோடோ எடுத்து ஆதவிற்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி இருந்தான்.
அங்கே நோடிஃபிகேஷன் சத்தத்தில் அதனை உள் சென்று பார்க்க போன ஆதவிற்கோ தொலைபேசி அழைப்பு வரவும் அதனை அப்படியே வைத்து விட்டு தொலைபேசி அழைப்பில் மூழ்கிப் போனவனை மேலும் வேலைகள் வந்து சுருட்டிக் கொண்டன.
அதன் பின்னர் அவன் அந்த புகைப்படத்தை பார்க்க மறந்தே விட்டான்.
அது விதி செய்த சதியோ தெரியவில்லை!!!!!அதனை பார்க்கும் போது ஆதவின் நிலை!!!
தொடரும்...
தீரா.