• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன்னை கண் தேடுதே.......💔

மகேஸ்வரி மணி

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
12
பலரின் மனதை மயக்கும் அந்த உதக மண்டலத்தின் ஒரு பகுதிதான் குன்னூர்

மேகங்களுக்கு என்ன ஏக்கமோ காலையே கரைந்து கொண்டிருக்க அதன் விளைவாக சூரியன் தன்னை முழுதாக மறைத்து வைத்து கொண்டிருந்தான்

அந்த இருள் சூழ்ந்த வேளையில் குன்னூர் மலைப்பகுதி கண்ணுக்கு குளிர்ச்சியை அளிக்க அந்த தேயிலை தோட்டங்களின் இலைகளில் இசைமீட்டும் மழைத்துளிகளும் வாசனையும் ஒரு வித உணர்ச்சியை ஏற்படுத்தியது

மணி ஆறு என்று காட்ட விசாலா எப்போது விழுத்தாலோ எழுந்து ஜன்னல் அருகில் அமர்ந்தவள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அந்த அழகை பார்த்து பார்த்து பிரமித்து கொண்டிருந்தாள் ஆனால் அவள் மனதில் மட்டும் எப்போதும் போல் இன்றும் புயல் வட்டமிட்டுக் கொண்டிருந்தது

விசாலா நாற்பதுகளில் நடைபோடும் பெண்மணி மகள் மேகா தற்போது தான் திருமணம் முடிந்து புகுந்தவீட்டிற்கு சென்றிருக்கிறாள் விசாலாக்கு தனிமை ஒன்றும் புதியதில்லை இருபது வருடமாக இங்குதான் வசித்து வருகிறாள் மேகாவை கை குழந்தையாக தூக்கி கொண்டு வந்தவள் இங்கு உள்ள பிரபலமான தேயிலைதோட்டம் ஒன்றில் வேலை செய்து தன் மகளை வளர்த்து படிக்க வைத்து இன்று திருமணமும் செய்து வைத்திருக்கிறாள் மேகாவும் அதற்கு சளைத்தவள் இல்லை பள்ளி செல்லும் நாட்களிலியே அம்மாவிற்கு உதவ வேண்டும் என்று பள்ளி முடிந்தவுடானும் விடுமுறை நாட்களிலிலும் இங்கு வேலைக்கு வந்துவிடுவாள் அன்னைக்கு பெரிய துணை அவள் தான் இன்று அவளும் திருமணமாகி சென்றுவிட தனிமை நிரந்தரம் ஆகிவிட்டது விசாலத்திற்கு


ஆனால் தற்போது இருக்கும் தனிமை அவளை ஒரு நிமிடம் அசைத்து பார்க்கதான் செய்தது என்ன செய்வது கடைசி காலங்களில் துணை இல்லாமல் தனிமையாக இருப்பது எவ்வளவு கொடியது அதை வார்த்தைகளால் கூற முடியாது அதற்கும் மேல் இந்த சமூகம் தனியாக இருப்பவர்களை நிம்மதியாக இருக்க விடுவதில்லை அவர்களை வார்த்தைகளால் குத்தி கிழித்து விடுவார்கள் அதுவும் பெண் என்றால் கேட்கவா வேண்டும் அதில் இவள் மட்டும் விதிவிலக்கா என்ன


நினைக்க நினைக்க மனது மேலும் பொங்கியது ஆனால் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை முகம் மட்டும் இறுகிபோய் இருந்தது ஏனென்றால் நேற்று நடந்த நிகழ்வு அப்படிப்பட்டது


பக்கத்து தெரு மஞ்சுளா மகனிற்கு கல்யாணம் என்று அழைக்க செல்ல விருப்பம் இல்லை என்றாலும் அழைத்த கடனுக்காக சென்றபோது அங்கு

காலை முகூர்த்தம் முடிந்து மணமக்கள் மறுவீடு செல்வதற்காக தயாராகி கொண்டிருக்க விசாலா அங்கு சென்று மணமக்களை ஆசீர்வதித்துவிட்டு சாப்பிட்டு கிளம்பும் சமயத்தில் மஞ்சுளா வந்து பேசிக்கொண்டு இருக்கும் சமயத்தில் மணமக்கள் வெளியே வர அருகில் இருந்த ஒரு பெண்மணியோ " நில்லுங்க " என்று மணமக்களை தடுத்து நிறுத்த

எல்லோரும் அவரையே என்னவென்று நோக்கினர்

அந்த பெண்ணோ " ஏ மஞ்சுளா இங்க வா கல்யாணத்துக்கு வந்தளா சாப்ட்டாளானு அனுப்பி வைக்காம இப்படி பிள்ளைங்க கிளம்புற சமயத்துல இவளை நிக்க வைத்து பேசிட்டு இருக்கியே இவ முகத்துல முழிச்சிட்டு போய் நம்ம பொண்ணும் வாளாவெட்டியா வந்து இருக்கவா உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை " சரி உனக்கு தான் இல்லைனு பார்த்தா அவளும் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம இங்க நிக்குறா என்று நாக்கில் நரம்பு இல்லாமல் வார்த்தைகளை கடித்து துப்ப

அனைவரும் அவளையே பார்க்க அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் விறுவிறுவென வந்துவிட வீட்டிற்கு வந்தவளுக்கு தலையே பாரமாக இருந்தது நான் என்ன தவறு செய்தவன் அவன் பிறந்ததிலிருந்து இன்று வரை ஆசைப்பட்ட எதற்கும் அடம்பிடித்தில்லை ஏதோ வாழ்க்கையின் போக்கில் போகிறாள் பாதியில் விட்டுச் சென்றது அவன் தவறு நான் என்ன செய்தேன் ஏன் இந்த சமூகம் என்னை இழிவாக பார்க்கிறது என்று வந்ததிலிருந்து அதே நினைப்பில் தான் உலன்று கொண்டிருக்கிறாள்


அந்த நினைப்பிலேயே நின்றவளுக்கு நேரம் சென்றது கூட தெரியவில்லை


ஜன்னலயே வெறித்துக் கொண்டிருந்தவளின் காதில் அழைப்பேசி சிணுங்க அதற்கு விடைகொடுத்து காதில் வைத்தாள்

"அம்மா எழுந்துட்டியா என்ன செய்யுற"

மேகுமா எழுந்துட்டேன் இதோ இருக்கேன் நீ என்ன செய்யுற மா

இருக்கேன் ஒரு முக்கியமான விஷயம் சொல்லலாம்னு கூப்ட்டேன்

என்ன மா சொல்லு

நீ பாட்டி ஆகப்போற மா எனக்கு நாள் தள்ளி போயிருக்கு என்க

சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை விசாலத்திற்கு அப்படியா மா ரொம்ப சந்தோஷம் உடம்ப பத்திரமா பார்த்துக்கோ ரொம்ப வெய்ட் தூக்காத பார்த்து கவனமா இரு அம்மா இப்போ வரேன் என்று மூச்சுவிடாமல் பேச

மேகா : மா மெதுவா மெதுவா பதட்டப்படாம பொறுமையா வா நான் வைச்சுடுறேன்
என்றவள் அழைப்பை துண்டித்துவிட மகிழ்ச்சியுடன் மகளை பார்க்க ஆவலாக கிளம்பினாள்

----------------------------------------------------------

மழை வானத்தை பிளந்து கொண்டு கொட்ட கொட்டும் மழையை கூட சட்டை செய்யாது அடிமேல் அடிவைத்து தொப்பலாக நனைந்தவாறு மெல்ல நடந்துகொண்டிருந்தான் அவன் முகத்தில் வளர்ந்திருந்த நரைத்த தாடியும் மீசையும் காடு போல் இருக்க தலைமுடியும் பல வருடங்கள் சீப்பயே பார்க்காதது போல் அட்டை போன்று இருந்தது முகம் கைகால் எல்லாம் புள்ளியாக இருக்க மொத்ததில் பார்பவர்களுக்கு பிச்சைக்காரன் என்று தோன்றும் அளவிற்கு இருந்தான் அவன்

சோர்ந்து போய் நடந்து வந்தவன் கால் இடரி தரையில் விழுந்து மயங்கிவிட அருகில் இருந்தவர்கள் அவனை ஒரு புழுவை பார்ப்பதுபோல் பாத்துவிட்டு சென்றனர்மகேஸ்வரி ❤️என்னடா இவ ஏற்கனவே உள்ள ஸ்டோரியே ஒழுங்கா போட மாட்டேங்குறா இதுல புது ஸ்டோரி வேறயானு நீங்க நினைக்குறது எனக்கு புரியுது இது சங்கமம் போட்டிக்காக எழுதுற சின்ன கதைதான் பத்து பாகங்கள் தான் வரும் அதனால ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க கண்ணாளா ஸ்டோரி நாளைக்கு வந்துடும் மக்களே மறக்காம கமெண்ட் பண்ணிட்டு போங்க டா டா செல்லம்ஸ்🤗🤗👍🙏😔
 

Attachments

  • Quotes_Creator_20220201_165740.png
    Quotes_Creator_20220201_165740.png
    236.9 KB · Views: 37

Vikijzo

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 18, 2023
Messages
5
Могу я связаться с администрацией?
Это важно.
С уважением.
 
Top