அம்மா என்று கனவில் விழித்தெழுந்தது யாரும் அல்ல மனிஷ் தான்..
அவனுக்கு மீராவின் குரலை ஃபோனிலும் கேட்காமல், நேரிலும் பார்க்காமல் பாவம் அந்த பிஞ்சுக் குழந்தை ஏங்கி தான் போனான்..
திடீரென்று பாசத்தை கொடுத்துவிட்டு பாதில்லையே காணாமல் போனால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும் அவனால்..
பள்ளியிலிருந்து நிறைய தடவை அவன் மீராவுடன் பேச முயற்சி செய்ய அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. ஏனென்றால் மீராவிற்கு ஃபோன் பேசும் மனநிலையில் இல்லையே
ஆனால் அதை புரிந்து கொள்ளும் வயதில் அந்த சிறுவனுக்கு இல்லை என்பதுதான் உண்மை
அவனும் அவளுக்காக ஏங்கி ஏங்கி அழுது கொண்டுதான் இருந்தான்.. “அம்மா என்று சொன்னால் அம்மா ஆகிவிட முடியாது” என தன் மனதை தேற்றும் வயதில் அவன் இல்லை..
அப்படியே இரண்டு பேரின் நாட்களும் நகர,கொஞ்ச நாள் கழித்து மீராவிடம் அர்ஜுன் “எங்கேயாவது போலாமா” என்று கேட்க
அவள் சுற்றி பார்க்கும் மனநிலையிலும் இல்லை, எதையும் ரசிக்கும் பொறுமையும் இப்போது அவளிடம் இல்லை.
எங்கே பார்த்தாலும் குழந்தைகள் விளையாடும் போது அம்மா என்று அழைக்கும் போது அவளுக்குள் வலியும் வேதனையும் தான் அதிகமாக இருந்தது.
வீட்டில் இருப்பவர்கள் கூட மீராவின் செயலை எண்ணி வருத்தப்பட்டு கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாது இவளுக்கு இப்படி ஆகிவிட்டது என்று..
“மீரா நீ இப்படியே வீட்டுக்குள்ளேயே இருக்காத வா ,நாம எங்கேயாவது போகலாம்” என்று அவன் அழைக்க
மன்னவன் அழைப்பில் மனம் சாய்ந்து அவனுடன் செல்லத்தான் ஆசை. ஆனால் திரும்பவும் அதே மாதிரி ஒரு ஆக்சிடென்ட் நடந்துவிடுமோ என்ற பயம் அவளுக்கு
“வேண்டா அர்ஜுன் நீ என் கூட வந்தா உன்னோட உயிருக்கு ஆபத்தா போயிரும்.. நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவள் ,என் கூட வராத” என்று தன்னைத்தானே அவள் தூற்றிக் கொண்டால்
“ஏய் அப்படி எல்லாம் இல்லடி ,நீ இப்படி இருக்காத.
தயவுசெஞ்சு சொன்னா புரிஞ்சுக்கோ “அன்னைக்கு நீ சொன்ன இல்ல, ஒரு ஆசிரமத்துக்கு போயிட்டு எல்லாருக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு வரலாம்னு
நாம இப்ப போலாமா” என்று அவன் குழந்தையை கூப்பிடுவது போல் அவள் பக்கத்தில் அமர்ந்து இரண்டு கையையும் நீட்டி அழைக்க
“நான் வரல அர்ஜுன்” என்று கண்ணீருடன் தலை அசைத்தாள் மீரா
“நான் சொன்னா கூட கேக்க மாட்டியா மீரா, இங்க பாரு உன்னோட முதல் குழந்தை நான் தான்.. எனக்கு எப்பவுமே குழந்தை நீ தான்.. இத நாம எப்பவும் மறந்துறக்கூடாது புரிஞ்சதா” என்று அவன் கேட்க
அவள் தலையசைத்தபடியே அவன் அருகே வர,” இங்க பாரு முகத்தை கழுவி வா நம்ம வெளிய போயிட்டு வரலாம்” என்று அவன் சொல்லவும்
அவளும் அவன் சொன்னபடியே முகத்தை கழுவி உடையை மாற்றிக் கொண்டு அவனுடன் காரில் ஏற
இதையெல்லாம் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த யாழினிக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. தன் தங்கையின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று,
ஆனால் அர்ஜுன் அவளை இழுத்துப் பிடித்து ஒரு நல்ல வழிக்கு கொண்டு வந்து விடுவான் என்று அவளுக்கு நல்லாவே தெரியும்..
அவளுக்கு குழந்தை இல்லை என்று அவளை யாரும் வீட்டை விட்டு அனுப்பும் அளவுக்கு கல்நெஞ்சகர்கள் இல்லை அந்த வீட்டில்..
ஆனால் மீராவோ அந்த மாதிரி நடந்து விடுமோ என்று பயந்து பயந்து அவள் வாழ்க்கையை தொலைக்க பார்க்கிறாள்..
இரண்டு பேரும் செல்லும்போது அர்ஜுன் அவளிடம் “உனக்கு ஏதாவது சாப்பிடணுமா?” என்று கேட்க
“ எனக்கு எதுவும் வேண்டாம் நம்ம ஆசிரமத்துக்கு போறோம் இல்ல, அவங்களுக்கு மட்டும் எல்லாம் வாங்கிக்கலாம்” என்று அவள் சொல்ல
அவள் மனதில் இப்போது வேறு எந்த சிந்தனையும் இல்லை.. சிந்தித்து சிந்தித்து பாவம் சிந்திப்பதையே தொலைத்து விட்டாலோ என்னவோ..
அர்ஜுன் காரை ஒரு இடத்தில் நிறுத்தியபடி"வா மீரா… உனக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும்."என சொல்ல
மீரா சற்று குழப்பமாய் உள்ளே நுழைந்தாள்.
அழகு அழகு முகங்களுடன் சிறுவர்கள் ஓடிக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.அது ஒரு அனாதை குழந்தைகள் காப்பகமாக இருந்தது.
சிறுவர்கள் அவர்களைப் பார்த்ததும், ஓடி வந்து வணக்கம் சொல்ல
"அண்ணா, அக்கா” என்று ஒரு சிறுவன் கூப்பிட்டது.
அந்த கணம்…
மீராவின் கண்களில் தானாகவே கண்ணீர் வடிய,அவளால் பேசவே முடியவில்லை.
அவளது உள்ளத்தில், ஒரு புதுப் பொலிவும், நிறைவும் தோன்றியது.
அர்ஜுன் மெதுவாக அவளது கையில் கையை வைத்து"நம்ம இருவருக்கும் ஒரு குழந்தை வேண்டுமென்று அவசியமில்லை…
ஆனால் நம்ம அன்பை பகிர்ந்து கொடுக்க வேண்டிய ஒருவராவது இருக்கணும்."
அந்த வார்த்தை, மீராவிடம் ஏதோ ஒரு உணர்வை தூண்டியது..
அவளது முகத்தில் புன்னகை கதிர் விழ
அந்த குழந்தைகள் அவர்களுடன் கதை பேசி, சிரித்துச் சந்தோஷப்பட்டார்கள்.
மீரா ஒவ்வொருவரையும் அருகே அழைத்து பேசினாள், தன் மடியில் அமர வைத்தாள்.
அனைவருக்கும் சாப்பாடு கொடுத்து சாப்பிட்டு முடிக்கும் வரை அருகில் இருந்தாள்.
அந்த மாலையில்...
அவர்கள் காரில் திரும்பிக்கொண்டிருக்கும்போது,
அவள் தன் தலையை அர்ஜுனின் தோளில் சாய்த்துக் கொண்டு மெதுவாக அவனை பார்த்து "நாம் இங்கிருந்து ஒருவனை வீட்டுக்கு அழைத்துப் போய் வளர்க்கலாமா?"என்று கேட்க
அவன் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. இப்போது திடீரென பிரேக் அடித்து நிறுத்தி மீராவை பார்த்தான்..
அர்ஜுன் கண்கள் மூடிக் கொண்டே தன் மனதில்"நான் அந்தக் கேள்விக்காகத்தான் இன்று உன்னை இங்குக் கூட்டிட்டு வந்தேன்."என்று நினைக்க
“என்ன அர்ஜுன் நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?” என அவள் அவனை பார்த்து கேட்க
“இல்ல மீரா இதை எப்படி வீட்ல சொல்றது நான் யோசிச்சேன், வேற ஒன்னும் இல்ல” என்று அர்ஜுன் சொல்ல
“ஆமா வீட்ல ஏத்துக்க மாட்டாங்களா?” என்று அவள் உடனே சோகமாக அவனிடம் கேட்கவும்
“நான் இருக்கேன் எல்லாம் பாத்துக்குறேன்” என்று சொன்னபடி மெதுவாக அவன் வீட்டை அடைந்தான்..
அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் நேரத்தில் அர்ஜுனனின் அம்மாவும் அப்பாவும் அமர்ந்திருக்க,
அந்த நேரத்தில் அர்ஜுன்
"அம்மா, அப்பா… ஒரு விஷயம் பேசணும். நாங்க ஒரு ஆசிரமத்துக்கு போயிருந்தோம்… அங்கே சில குழந்தைகளை பார்த்தோம். பாவம் அம்மா அப்பா இல்லாம அந்த பிஞ்சு குழந்தைங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க என்று அவன் சொல்ல
“அதான் நீங்க சாப்பாடு வாங்கி கொடுத்துட்டீங்கல்லடா,என்ன பண்றது கடவுள் இருக்காரு அந்த குழந்தைகளை எல்லாம் நல்லா பாத்துப்பாங்க” என்று அம்மா சொல்ல
“இல்லம்மா நம்ம அதுக்கும் மேல ஏதாவது பண்ண முடியுமான்னு பாக்கணும்..ஒரு வேலை சாப்பாடு போட்டதால அந்த குழந்தைகளோட கஷ்டம் போயிடாதில்லம்மா” என்று அர்ஜுன் சொல்லவும்
“சரிடா என்ன பண்ணலாம் நம்ம வேணா மாசம் எதாவது ஒரு அமௌன்ட் எடுத்து கொடுக்கலாமா?” என்று அப்பா கேட்கவும்
“இல்லப்பா அது வந்து” என்று அவன் தயங்கியபடி யாழினியை பார்க்க
யாழினிக்கு அர்ஜுன் முன்னாடியே அனைத்து விஷயங்களையும் சொன்னதால் அவளும் தன் அத்தை முன்பு “பேசாம ரித்விக் கூட விளையாடுவதற்கு ஒரு பையன் அங்க இருந்து கூப்பிட்டு வந்துரலாமா?” என்று கேட்க
“ஏய் யாழினி என்ன லூசு மாதிரி பேசுற” என்று அவள் கணவனே அவளை திட்ட
அவள் எதுவும் சொல்லாமல் குனிந்து கொண்டாள்.அங்கே முடிவெடுக்க வேண்டியது அவளோ அர்ஜுனோ இல்லையே அவனின் அம்மா அப்பா தானே..
அர்ஜுன் மெதுவாக தயங்கியபடி “அம்மா நான் ஒரு ஜோசியரை பார்த்துட்டு வந்தேன். அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியுமா?
என்னோட ஜாதகத்துல முதல் குழந்தை தத்து தடுத்து வளத்தா தான் எங்களுக்கு அடுத்து குழந்தை பாக்கியம் கிடைக்கும்னு சொல்லி இருக்காங்க அம்மா“என்று அவன் சொல்ல
அவன் அம்மா முகத்தில் ஒரு பதற்றம்.
அவள் பதற்றத்துடன் “அர்ஜுன்! நீ என்ன சொல்ற? நம்ம ரத்தம் இல்லாத, தெரியாத குடும்பத்துல பிறந்த ஒரு குழந்தையைநம்ம வீட்டு வாரிசா வளர்க்கணுமா?இதுக்கு முன்னாடி யாராவது நம்ம குடும்பத்துல இப்படி பண்ணியிருக்கோமா..
ஆமா உனக்கு யாருடா இப்படி எல்லாம் சொன்னது எந்த ஜோசியர்.. என்கிட்ட காட்டு” என்று அம்மா கோபத்தில் கேட்கவும்
அவன் அப்பா சிறிது அமைதியாக இருந்தாலும், கண்களில் குழப்பம்.
உடனே அர்ஜுன் “இதுல என்னம்மா தப்பு இருக்கு.. ஒரு குழந்தையை நம்ம கூட வச்சு பாசம் காட்டி வளர்த்தா நம்ம என்ன கொறஞ்சா போக போறோம்” என்று சொல்ல
அர்ஜுன் நீ புரிஞ்சுதான் பேசுறியா அப்படி நாம ஒரு குழந்தையை தத்து எடுத்தா எல்லாரும் என்ன சொல்வாங்க?
நம்ம குல தெய்வத்துக்கு ஒரு நேத்திக்கடன் செஞ்சுட்டு வந்துடலாம்..
நாம அப்படி வழிபடுறதுனால்தான் உனக்கு நல்ல சந்ததி பிறக்கணும்னு இருக்கோ என்னமோ..
அதெல்லாம் இல்லமா ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தா தான் எங்களுக்கு அடுத்து குழந்தை பாக்கியம் கிடைக்கும்..இல்லன்னா நாங்க ரெண்டு பேரும் இப்படியே இருக்க வேண்டியதுதான் என்று அர்ஜுன் சொல்லவும்..
“டேய் அர்ஜுன் என்னடா பேசிட்டு இருக்க?
சும்மாவே உனக்கு மீராவை கல்யாணம் பண்ணி வச்சதே நம்ம சொந்தக்காரங்க சில பேருக்கு பிடிக்கல..
எதுக்கு இப்படி டைவர்ஸ் ஆன பொண்ணா கல்யாணம் முடிச்சு இருக்கீங்கன்னு கேட்டாங்க, இப்போ குழந்தையும் தத்தெடுத்து வந்தா என்ன நினைப்பாங்க?” என்று அவள் சொல்ல
மீரா அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தன் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க எதுவும் பேச முடியாமல் யாழினி பார்த்தாள்…
அர்ஜுன், மிக அமைதியாக “அம்மா நாங்க ஒரு குழந்தையை தத்தெடுத்து கூப்பிட்டு தான் வரப்போறோம். உங்களுக்கு இஷ்டம்னா இங்க இருக்க, இல்லனா நானும் மீராவும் தனியா போயிருதோம்” என்று சொல்லி தட்டை தள்ளி வைத்துவிட்டு கையை கழுவி வேகமாக திரும்பி பார்க்காமல் சென்றான்..
“மீரா என்னம்மா சொல்றான் அர்ஜுன்..என்ன ஆச்சு?” என்று அவன் அம்மா மீராவை பார்த்து கேட்க
அவளோ “தெரியல அத்தை” என்று தலையை அசைத்தபடி அவன் பின்னாடியே சென்றாள்..
யாழினி முகத்தைப் பார்த்த அவள் அத்தை “யாழினி உன் தங்கச்சியை குத்தி காட்டணும்னு நான் பேசலாமா.. மன்னிச்சிரு” என்று சொல்ல
“பரவால்ல உங்க மனசுல இருந்தது சொல்லிட்டீங்க அவ்வளவுதானே.. அர்ஜுன் ஆசைப்பட்டன் தான் என் தங்கச்சியை கல்யாணம் முடிச்சு வச்சேன்” என்று அவளும் எதுவும் பேசாமல் எந்திரித்து சென்றாள்..
அந்த இரவிலே, மீரா மிகவும் மனம் உடைந்து போனாள்..” என்னால தான் அர்ஜுன் உங்க அம்மா கிட்ட நீ இப்படி எல்லாம் பேசின.. வேண்டாம் பேசாம உண்மைய சொல்லிடலாம்” என்று அவள் சொல்ல..
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மீரா நீ பேசாம இரு, நம்ம பாத்துக்கலாம்” என்று அவன் சொல்ல..
“இல்லடா எல்லாமே என்னோட தப்பு தான்” என்று அவள் சொல்லவும்..
அர்ஜுன் அவளது கையைக் கட்டி,
"மீரா… இது உன் தப்பு இல்ல.. நடந்தது எல்லாமே நன்மைக்கு தான்.. ஏதோ ஒரு குழந்தைக்கு நம்ம ஆதரவு கிடைக்கணும் தான் கடவுள் இந்த மாதிரி ஒரு ஆக்சிடென்ட் நமக்கு வர வச்சாங்களோ என்னவோ..
கவலைப்படாத மீரா எல்லாமே மாறும் நாம நாளைக்கு போய் ஒரு குழந்தையை தேடி அதுக்கு என்ன பார்மாலிட்டிஸ்னு பார்க்கலாம் என்று அவன் சொல்ல ..
“கண்டிப்பா ஒரு குழந்தை நமக்காக இருக்கும்ல அர்ஜூன்” என்று அவள் சிறு பிள்ளை போல் அவனை பிடித்து கேட்க
“நீ ஒன்னும் கவலைப் படாத, என்ன ஆனாலும் பரவால்ல நமக்காக ஒரு ஜீவன் நம்ம வீட்ல கூடிய சீக்கிரத்துல இருக்கும்” என்று அவன் சொல்ல
அவன் சொன்ன வார்த்தை அவளுக்கு சந்தோசமாகத்தான் இருந்தது.. தாய்மை அடையாத அவளது உள்ளம் இதை கேட்டதும் சந்தோஷத்தில் பொங்கியது..
என்னை கூப்பிடவும் அம்மா என்று அழைக்கவும் ஒரு ஜீவன் இருக்கிறது என்று அவள் நினைத்தாள்.. ஆனால் அவள் வீட்டில் அதற்கு எதிர் வினை எப்படி இருக்குமோ..