• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன் பார்வையில் கரைந்தேனடி -28

gomathi nagarajan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 18, 2025
36
5
8
chennai
நாட்கள் அவர்கள் நினைத்ததை விட வேகமாக சென்றது..

அவன் இந்த பேச்சை சொன்னதிலிருந்து அர்ஜுனன் அம்மா அவனுடன் பேசுவது ஏன் நிறுத்திவிட்டாள்..

“யாரோ ஒரு குழந்தைக்காக தன்னையே விட்டு விட்டு போகிறேன்” என்று சொல்கிறானே என்று பெற்றவள் மனம் பதறி போனது

மீராவின் வாழ்க்கை இன்னும் இருள் சூழ்ந்தது போல தான் இருந்தது.. காரணம் அம்மா என்று அழைக்க அந்த ஜீவன் என்னும் வீட்டிற்கு வரவில்லையே..

ஆனால் அர்ஜுன் அவளுக்காக ஒவ்வொரு அனாதை இல்லத்தில் குழந்தையை தேடி அலைந்தான்.எங்கே கேட்டாலும் அதற்கு 1008 ஃபார்மாலிட்டீஸ் அவனுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.. நினைத்தபடி உடனே குழந்தை கிடைக்குமா என்ன?

மீராவின் மனமோ ’அவள் அத்தையிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடலாம்’ என்று நினைக்க

ஆனால் யாழினி அதை தடுத்து நிறுத்தினாள்..

மீராவை திரும்பவும் தனிமை சூழ்ந்தது அவள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள்.. ஒரு கட்டத்தில் அவளால் இயல்பாக இருக்க முடியாமல் தன் உயிரை மாய்த்துக் கொள்ள கூட துணிந்தாள்

காரணம் இரண்டாம் தாரம் என்று தன் அத்தை வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தை வந்தது.. அவளுக்கு அதை நினைக்கும் போது வலிக்கத்தான் செய்தது.இப்போது குழந்தையும் இல்லை

அர்ஜுன் அவளிடம் பேசிக்கொண்டு இருக்க, அந்த நேரத்தில் அவனின் அம்மா வரவும் “என்னடா கண்டிப்பா குழந்தையை தத்து எடுக்க தான் போறியா, ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டீங்க போல” என்று கேட்க

“அம்மா உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?” என்று அவன் சீறினான்

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல டா..மீராக்கு ஏதும் பிரச்சனையா?” என்று அத்தை கேட்கும் போது அவள் தலையை குனிந்து கொண்டாள்..

“என்னம்மா சொல்றீங்க மீராக்கு எந்த பிரச்சனையும் இல்ல, பிரச்சனை என்கிட்ட தான்.. எனக்கு தான் போதுமா,எனக்கு குழந்தையை பிறக்காதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க..

இப்ப ஆக்சிடென்ட் ஆச்சுல்ல அதுல என்னோட ஆண்மையே போயிருச்சு போதுமா, உங்களுக்கு இந்த உண்மை தெரிஞ்சிடுச்சா இனிமேல் நமது கேள்வி கேட்காம அமைதியா இருப்பீங்களா” என்று அவன் சொல்ல

பெற்ற தாய்க்கு தன்மகன் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தையை கேட்டால் எப்படி இருக்கும்? அவள் கண் கலங்கியபடி “என்னடா சொல்ற அர்ஜுன்” என்று கேட்க

அதற்குள் அவன் அப்பா ,அண்ணன், அண்ணி அனைவரும் வந்து நிற்க..

“ஆமா எனக்கு தான் பிரச்சனை.. அதனால தான் நாங்க ஒரு குழந்தையை தத்து எடுக்க போறோம் போதுமா” என்று சொன்னபடி அறைக்குள் சென்று கதவை அடைத்தான்..

அர்ஜுனின் மனநிலையை பார்த்த அவன் குடும்பம் பரிதவித்தது. ஆனால் தன் தங்கைக்கு தான் பிரச்சனை என்று யாழினி கூட சொல்ல முடியவில்லை..

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மீரா அழுதாள்..இந்த வாழ்வு அர்ஜுன்காவது இனி சந்தோஷத்தை கொடுக்கட்டும் என்று அவள் கையில் தூக்க மாத்திரையை எடுத்தாள்..

அவள் எடுத்த அந்த நொடி பூட்டிருந்த அறையின் கதவை தட்டும் சத்தம் அதிகமாக கேட்டது..

சிறிது நேரம் கழித்து வெளியில் கார் சத்தம் கேட்க ,

அர்ஜுன்” இங்க பாரு ஒரு நிமிஷம் கதவ தொற” என்று மீராவை தொடர்ந்து அழைக்க

கொஞ்ச நேரம் கழித்து” அண்ணி மீராவை ஒரு நிமிஷம் கூப்பிடுங்க” என்று சொன்னவன் படியில் வேகமாக இறங்கினான்..


அதன் பிறகு வந்தவன் மீண்டும் கதவைத் தட்ட

அவன் அழைத்தது அவள் காதில் விழுந்தாலும் அவள் “அர்ஜுன் இனிமே நான் உனக்கு வேண்டாம்..நீ உங்க அம்மா அப்பா கூட சந்தோசமா இரு என்னால் அவங்களையும் விட்டுட்டு நீ கஷ்டப்படுற” என அவள் சொல்ல

சிறிது நேரம் கழித்து “அம்மா மீராமா” என்று குரல் கேட்கவும்

அவள் கதவை திறந்து ஓடி வந்தாள்..வந்து பார்த்ததும் அவள் இத்தனை நாள் சுயநலவில் தான் இருந்தால என்று கூட அவள் யோசிக்கவில்லை..

ஏனென்றால் அவள் கண் முன் இருந்தது அவளை முதன்முதலில் அம்மா என்று அழைத்த அந்த சிறுவன் மனீஷ்

இப்போதும் அவன் தான் அவள் கண் முன் நின்றான்..

ஆனால் அவள் இதற்கு முன் பார்த்த மனிஷ் போல் இல்லாமல் இவன் மிகவும் சோர்ந்து மெலிந்து போய் கன்னம் எல்லாம் ஒட்டி பார்க்கவே கவலையாக தான் இருந்தது அவளுக்கு..

அர்ஜுன் மனிஷை அழைத்து வந்து மீராவிடம் ஒப்படைக்க

அவனை பார்த்தது அவளுக்கு மகிழ்ச்சிதான்.. அவனை ஓடி வந்து அணைத்து கன்னத்தில் முத்தங்கள் கொடுக்க

“என்கிட்ட பேசாத மீராமா.. உன் கூட நான் பேசமாட்டேன்” என்று அவன் பிஞ்சு குரலில் சொல்ல

“ஏன் தங்கம் என்ன ஆச்சு” என்று அவள் கண்ணீருடன் கேட்க

“என்ன மறந்தே போயிட்டீங்களா?
நீங்க இல்லாம நான் ஸ்கூலுக்கு போல படிக்க மாட்டேன்னு சொல்லி அழுதேன் எல்லாரும் என்ன அடிச்சாங்க..ஸ்கூலுக்கு போகாமா அந்த ஆசிரமத்துல தான் இருந்தேன்.. பெரிய அண்ணா கூட என்கிட்ட பேசவே இல்ல நான் ஸ்கூலுக்கு வரலன்னு..

உங்களை நினைச்சு நினைச்சு அழுதிட்டே இருந்தேன்.உங்க கிட்ட போன் பேசுறதுக்கு நான் ரொம்ப ட்ரை பண்ணேன்.. ஆனா என்னால முடியல அம்மா” என்று அவன் மழலை குரலில் அவளின் கன்னத்தை பிடித்தபடி சொல்ல

“ஐயோ என்ன மன்னிச்சிடு தங்கம்” என்று அவள் அவனை கட்டிக் கொண்டாள்.. இதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த அர்ஜுன் அம்மா “என்னடா இது” என்று வந்து கேட்க

“அம்மா ஒரு மாசம் அந்த பையன் நம்ம கூட இருப்பான்..நம்ம எல்லாருக்கும் புடிச்ச நம்ம அவனையே தத்தெடுத்துக்கலாமா, அவனுக்கும் அம்மா பண்ணி யாரும் இல்ல” என்று அவன் சொல்ல

“என்ன சொல்ற அர்ஜுன்.. அப்புறம் ஒரு மாசம் கழிச்சு அவனை கொண்டு போய் விட்டுவிடுவியா? சொல்லுடா” என்று அவன் சட்டையை பிடித்து அடிக்காத குறையாக மீரா அவனிடம் கேட்க

அதற்குள் யாழினி அவளை பிடித்தபடி மனிஷையும் அந்த அறைக்குள் அழைத்து சென்று “அத்தை மனசுல நம்ம ஒரு மாசத்துல இடம் புடிச்சிரலாம் சரியா” என்று சொல்ல

“மீரா அம்மா நான் உங்க கூட இதே வீட்ல இருக்க போறேன்னா.. எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு” என்று அவன் சொல்ல

“இன்னும் என்னென்னவெல்லாம் பாக்கணும்னு இருக்கோ “என்று அர்ஜுனன் அம்மா தலையில் அடித்தபடி எதுவும் சொல்லாமல் அங்கிருந்து செல்ல

“மீரா உனக்கு இப்ப சந்தோசமா உன்னோட மனிஷ் உன்கிட்டே கூட்டி வந்துட்டேன்” என்று அவன் சொல்ல

மீரா அவனை ஓடி வந்து அணைத்தாள்.. அவன் கன்னத்தில் இதழ் பதித்து “தேங்க்யூ அர்ஜுன்” என்று அவள் சொல்ல

மனிஷ் இரண்டு பேருக்கும் இடையே வந்து நின்றபடி “மீராமா என்னைய அப்பதான் இங்க கூட்டிட்டு வந்தாங்க” என்று அவன் சொல்ல

“எப்படி அர்ஜூன் உனக்கு எப்படி இவனை கூப்பிட்டு வரணும்னு தோணுச்சு.. எனக்கு சுத்தமா மனிஷ் நியாபகத்திலேயே இல்ல” என்று மீரா சொல்லவும்

“இல்ல நான் ஒரு நாலஞ்சு காப்பகம் தேடி அலைஞ்ச, அப்போ ஃப்ரெண்ட் மூலமா தான் இங்க போனா.. குழந்தைங்கள சீக்கிரமா தத்து எடுத்துக்கலாம் சொன்னாங்க, ஆனா இப்ப கூட மனுஷன் நம்ம கூட ஒரு மாசம் இருப்பான்.. அவன புடிச்சா தான் நம்ம கூட தொடர்ந்து இருக்க முடியும் இல்லன்னா நம்மளை விட்டுட்டு அவன் போயிருவான்” என்று அவன் சொல்ல

“அதெல்லாம் இல்ல இவனை நான் விடமாட்டேன்” என்று மீரா அவன் கையை இறுக்கமாக பிடிக்க

“அம்மா நான் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன் பயப்படாதீங்க” என்று மனீஷ் அவளை பார்த்து சிரித்தபடி சொன்னான்..

இனிமேல் மீராவின் வாழ்வில் இன்பம் மட்டும் தான் என அவள் நினைத்துக் கொண்டு இருந்தாள்..

சேர்த்து வைத்த மொத்த பாசத்தையும் அவன் மீது கொட்ட வேண்டும் என்று துடித்தாள்..

மொத்த பாசத்தையும் அவனிடமே காட்டிவிட்டால், தன் கணவன் என்னவானோ என்று அவனையும் ஒரு பார்வை பார்த்தாள்..

அவள் வீட்டில் இப்போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள் என புரிந்து கொண்டான் அர்ஜுன்..

“மனிஷ் வா உனக்கு வர டிரஸ் மாத்தி விடுறேன். இங்க பாரு எப்படி வேர்த்து இருக்குன்னு” என மீரா அவணை அருகில் அழைக்க

அவன் ஒரு பேக் எடுத்து வர, அதிலிருந்து அனைத்தும் கொஞ்சம் பழைய துணிகள் தான் ..கிழிந்து கூட இருந்தது. அதை பார்த்ததும் மீரா “என்னடா எல்லாமே இப்படி இருக்கு” என்று கேட்க

“ஆமாமா அங்க எங்களுக்கு புது ட்ரஸ் அடிக்கடி எடுத்துக் கொடுக்க மாட்டாங்க.. எப்பவாவது தான் எடுத்து கொடுப்பாங்க” என்று அவன் சொல்ல

“ அர்ஜுன் வா வெளியே போகலாம்.. நம்ம ஒரு நல்ல டிரஸ் கடைக்கு போய் இவனுக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கிடலாம்.. இவன் இனிமே நம்ம கூட தான் இருப்பான்” என்று மீரா சொல்ல

“இப்பதான் வந்திருக்கோம் அவசரப்பட வேண்டாமே “என்று அர்ஜுன் சொல்லவும்

“எதுக்கு அப்படி சொல்ற, அப்ப இவனை திரும்ப கொண்டு போய் அங்கேயே விட்ருவியா நீ ..இவனை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்” என்று அவள் கலங்கிய கண்களுடன் அவனை பார்த்து சொல்லவும்..

“அப்படி சொல்லல மீரா, இப்பதான் அவன் வந்திருக்கான்.. பாவம் அவனுக்கும் டயர்டா இருக்கும் இல்ல” என்று அர்ஜுன் சொல்ல

“இல்ல இல்ல பாரு மனிஸ் டிரஸ் நல்லாவே இல்ல, அவனுக்கு போய் நம்ம புடிச்சது எல்லாத்தையும் வாங்கி கொடுக்கலாம்” என்று மீரா சொல்ல சிறிது நேரம் கூட தாமதிக்காமல் அவசர அவசரமாக கிளம்பினார்கள் மூன்று பேரும்..

மூன்று பேரும் காரில் கிளம்பி சென்று கொண்டிருக்க மனிஷ் காரை வினோதமாகத்தான் பார்த்தான்..அவனை தன் மடியில் சாய்த்தபடி மீரா அவன் தலையை கோதி விட்டுக் கொண்டே வந்தாள்

“நாளையில் இருந்து ஸ்கூல் போறியா? வேண்டாம் வேண்டாம்.. நாளைக்கு வேண்டாம் இன்னும் ஒரு இந்த வாரம் கழிச்சு போறியா ..நானும் அதே ஸ்கூல்ல மிஸ்ஸா வந்து ஜாயின் பண்ணிடுறேன்” என்று அவனுடன் மனதில் தோன்றிய அனைத்தையும் மீரா பேசிக்கொண்டே வர,

இதையெல்லாம் அர்ஜுன் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான்…

அவள் சொன்னபடியே ஒரு கடையில் காரை நிறுத்த, அர்ஜுன் வருகிறானா என்று கூட அவள் பார்க்காமல் அவனை மட்டும் தூக்கியபடி கடைக்குள் சென்று பிடித்த அனைத்தையும் மொத்தமாக வாங்கிக் கொண்டு வந்தாள்..

அவனுக்கு ஒவ்வொரு சட்டையும் வைத்துப் பார்த்து “இது உனக்கு அழகா இருக்க?” என்று சொல்ல சொல்ல சிறுவன் கண்ணிலும் மகிழ்ச்சி மின்னியது..

அனைத்தையும் பில் போட்டு அர்ஜுன் கையில் கொடுக்க, அவன் சிரித்தபடி மீராவை பார்த்தான்..

“என்னாச்சு அர்ஜுன் உனக்கு ஏதாச்சும் வாங்கனுமா?” என்று கேட்க

“இல்ல நீ சந்தோசமா இருக்க இல்ல எனக்கு அதுவே போதும்” என்று அவன் அவளை பார்த்தபடி சொல்லவும்

“நீ சீக்கிரம் பில் போட்டு வந்துரு, நானும் இவனும் அங்க உக்காந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு இருக்கோம்” என்று அவன் கையை பிடித்தபடி செல்ல

இரண்டு ஐஸ்கிரீமை வாங்கியபடி மீரா சாப்பிட்டுக் கொண்டே அர்ஜுனை பார்க்க,

“அவன் இந்த உலகத்தில் அதிசயமானவன் தான்.. தனக்கு வாழ்க்கை கொடுத்தது மட்டுமல்லாமல் இன்னொரு சிறுவனையும் தனக்காக அழைத்து வந்து வளர்க்கத் துணிந்தான். தன் அம்மாவிடம் அவனுக்கே குறை என்று சொல்லி அவர்களையும் சம்மதிக்க வைத்தான்.. இத்தகைய மனது யாருக்கு வரும்”என்று அவனை தன் மனதிற்குள் கோவில் கட்டி வழிபட நினைத்தாள்..

அர்ஜுன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க

குழந்தை இல்லாத தாய்க்கு குழந்தை கிடைத்தது.. அம்மா பாசம் தெரியாத அவனுக்கும் அம்மா கிடைத்தது.. ஆனால் இதனால் இவர்கள் வீட்டில் நிம்மதி கிடைக்குமா?

இப்படி ஒரு சந்தோஷத்திற்காக தான் அவள் தேடி தேடி அலைந்தாள்.. தேடி அலைந்த சந்தோசத்தை அர்ஜுன் அவளுக்காக உள்ளங்கையில் வைத்துக் கொண்டு வந்தான்..

எல்லாம் மீராவுக்காக பண்ணிய அர்ஜுன் கடைசியில் அர்ஜுன் மீதே ஒரு பழி விழ,அதை அவன் மனம் தாங்கிக் கொள்ளுமோ?

அதனால் மீரா அவனை விட்டு விலகினால் அவன் ஏற்றுக் கொள்வானோ?..