• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன் பார்வையில் கரைந்தேனடி -30

gomathi nagarajan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 18, 2025
36
5
8
chennai
அந்த பெயரை கேட்டதும் மீரா அர்ஜுனை ஒரு சந்தேகப்பார்வையுடன் பார்க்க

“எந்த நிவேதா, என்ன சொல்ற நீ?” என்று அவன் கோபமாக கேட்கவும்

“என்னடா இப்படி கேக்குற.. நம்ம பையன் மேல சத்தியமா உனக்கு என்னைய தெரியலையா?” என்று மனிஷை அவள் இழுத்து தலையில் கையை வைத்தபடி கேட்கவும்

“இங்க பாரு பையன விடு முதல்ல” என கோபமாக அவன் சொல்ல

“இப்ப எதுக்கு நீ இப்படி கோபப்படுற” என அவள் கேட்கவும்

“ஏய் நீ யாருன்னு தெரியலைன்னு சொல்ற, நம்ம பையன் சொல்லிட்டு இருக்க..இது எங்க பையன்” என்று அர்ஜுன் சொல்ல

“ஏன் அர்ஜுன் எப்படி பண்ற?
நாம காலேஜ் டைம்ல லவ் பண்ணது எல்லாம் மறந்துட்டியா, நம்ம ரெண்டு பேரும் லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருந்தமே.. அப்பதான் நான் கன்சீவ் ஆயிட்டேன், ஆனா அது அபார்ட் பண்ணா என்னோட உயிருக்கு ஆபத்துன்னு சொன்னதுனால இஷ்டமே இல்லாமல் தான் இந்த குழந்தையை பெற்றேன்..

அவன் மூஞ்ச கூட பார்க்க விரும்பாம தான் ஹாஸ்பிடலில் இருந்து ஒரு அமௌன்ட் மட்டும் கொடுத்துட்டு நான் எனக்கு புடிச்ச மாதிரி வாழனும்னு போயிட்டேன்.. எனக்கு இந்த மேரேஜ் குழந்தை இந்த கமிட்மெண்ட் பிடிக்காது, அதனாலதான் உன்னையும் விட்டுட்டு வந்தேன்.. அதுக்கு அப்புறம் தான் அந்த ஹாஸ்பிடல்ல ஒரு நாள் போய் நான் கேட்கும் போது சொன்னாங்க இந்த மாதிரி ஒரு காப்பகத்துல உங்க குழந்தைய விட்டு இருக்கோன்னு”..

அங்க வந்து பார்த்தா இவன் பேரு மணிஷ்.. இங்கதான் சின்ன வயசுல இருந்தே நாங்க வச்சு வளக்குறோம்னு சொன்னாங்க, ஆனா எனக்கு அப்ப எந்த தாய் பாசமும் வரல, அதனால மாசம் ஒரு அமௌன்ட் மட்டும் அந்த காப்பகத்துக்கு நான் டொனேஷன் பண்ணிக்கிட்டே இருந்தேன்..

இப்ப கூட நான் உரிமை கொண்டாடணும்னு வரல, ஆனா எனக்கு உன்னையும் இவனையும் ஒண்ணா பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சுடா.. நான் விட்டா கூட அவனை நீ விடாம இருக்கியே, இதுதான் அப்பா பாசம்ங்கிறது என்று அவள் அடுக்கடுக்காய் சொல்லிக் கொண்டே போக

இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மீரா,” அர்ஜுன் என்ன சொல்றா, இவ யாரு?” என்று கையை நீட்டி அவள் முன் கேட்க

“சாரி மிஸ்ஸஸ் அர்ஜுன் நான் உங்க கூட சக்காளத்தி சண்டை போடலாம் வரல, எனக்கு அர்ஜுன எப்பவுமே புடிக்கும் ..ஆனா எனக்கு இந்த கல்யாணம் குழந்தை கமிட்மெண்ட்ஸ் பிடிக்காது, அதனால தான் நான் அவனை விட்டேன்,

இல்லன்னா நான் விட்டு இருக்கவே மாட்டேன் . அவன் என்னை எப்படி உருகி உருகி லவ் பண்ண தெரியுமா?

நாங்க ரெண்டு பேரும் ரிலேஷன்ஷிப்ல இருக்கும்போது ஐயோ அதெல்லாம் வார்த்தையால உங்க கிட்ட சொல்ல முடியாது” என்று அவள் சொல்ல

“ஹே யார் டி நீ ..என்ன எல்லாம் பேசிட்டு இருக்க, மீரா அவ சொல்றது எதையுமே நம்பாதே” என அவன் தன்னை நிரூபிக்க எவ்வளவு போராடினான்

ஆனால் நிவேதா சொன்னது அனைத்தும் அர்ஜுன் சொன்ன கதையோடு நன்றாக ஒத்துப்போனது.. அதனால் மீராவின் பார்வையில் அவன் குற்றவாளியாக தான் தெரிந்தான்.

“மீரா எனக்கு நிவேதா யாரையுமே தெரியாது. மீரா நான் சொல்றத நம்பு,ஏய் உன்ன கொன்றுவேண்டி யாரு நீ” என்று அவன் கோபமாக கேட்க

“எதுக்கு இப்படி ரோட்ல வச்சு கத்திட்டு இருக்க அர்ஜுன்..நான் உன்கிட்ட எதுவுமே கேட்கலையே என்கிட்ட இல்லாத காசா பணமா ஜஸ்ட் உன்னையும் பையனையும் பார்த்தேன் சந்தோஷம்.அந்த சந்தோஷத்துல இப்படி சொல்ற,அவ்வளவுதான் மத்தபடி உங்க குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கெல்லாம் நான் வரல.. லாஸ்ட்டா உன் டைம் என் பையன் கிட்ட நான் பேசுகிறேன்” என்று அவள் சொல்லி மனிஷ் அருகே முட்டியிட்டு “செல்லக்குட்டி உங்க டாடி கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்”என்று சொல்லி அவன் நெற்றியில் ஒரு முத்தமிடமும்

அவன் பயந்தபடி மீராவின் பின்னே சென்று ஒழிய

“அர்ஜுன் என்னதான் நீ என்ன மறந்துட்ட பட் இருந்தாலும் ஐ லவ் யூ டா “என்று நேராக எந்திரித்தவள் அவனையும் அணைத்தபடி அவன் கன்னத்திலும் அவள் இதழை பதிக்க

“தள்ளி போடி நீ “என்று அவளை தள்ளிவிட்டபடி தன் கையை கொண்டு அவள் முத்தமிட்ட இடத்தை அவன் துடைத்துக் கொண்டு இருக்க

ஓகே மிஸஸ் அர்ஜுன்.. நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க என்னோட அர்ஜுன் கிடைக்கிறதுக்கு, ஆனா நான்தான் அன் லக்கி என்று அவள் சொல்ல

அவளின் முகத்தை ஏறெடுத்துக்கூட பார்க்காமல் நிவேதாக்கும் அவனுக்கும் இடையே நின்று கொண்டு இருந்த மனிஷும் பயத்தில் அவளைபிடித்துக் கொண்டு இருந்தான்

அர்ஜுன் உங்க வீடு, அட்ரஸ் கூட என்கிட்ட இல்ல..காலேஜ் படிக்கும் போது நீ வேற வீட்ல இருந்தே இல்ல, அட்ரஸ் மட்டும் கொஞ்சம் கொடுக்கிறியா ..போன் நம்பர் நல்லவேளை சேஞ்ச் பண்ணாம வச்சிருந்தீங்க,அதான் அப்ப அப்ப டச்சுலயே இருக்கு முடிஞ்சது.

“ஆனா நீ நம்ம பையனை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்னு என்கிட்ட கூட சொல்லல பாத்தியா, எவ்ளோ நாள் என்கிட்ட பேசுற ஒரு தடவையாவது சொன்னியா டா” என்று அவள் கேட்கவும்

“ஏய் யார்டி நீ.. என்ன எல்லாம் பேசிட்டு இருக்க, நான் எப்பேண்டி உனக்கு போன் பண்ணேன்” என்று அவன் சொல்ல

“ஹேய் இதெல்லாம் உன் வைப்புக்கு தெரியாதா அவங்க நேம் மீரா தானே” என்று அவள் கேட்க

அவளுக்கும் அதிர்ச்சி மேல அதிர்ச்சி.. அவளது முட்டை கண்கள் வெளியேவே விழுந்து விடும் போல அந்த அளவுக்கு கோபத்தில் முறைத்து பார்க்க

“சாரிடா நான் ஒன்னும் பிரச்சனை பண்ண வரல.. மீரா சாரி ஏதும் தப்பா நினைக்காதீங்க,

எனக்கு அர்ஜுன மேரேஜ் பண்ணனும்னு ஆசை வந்தா எனக்காக விட்டுக்கொடுப்பீங்களா” என்று அவள் கேட்ட கேள்வியில் அவள் உயிரை வேரோடு பிடுங்குவது போல இருந்தது

அப்போதும் அப்படி மௌனம் காத்தாள் எதுவும் பேசாமல்..

“ஜஸ்ட் ஜோக்கிங் எனக்கெல்லாம் மேரேஜ் பண்றது ஐடியாவே இல்ல..”என அவள் சிரித்தபடி தன் கூலரை நெற்றி மீது இருந்து இழுத்து கண்ணில் மாட்டியபடி சொல்ல

சரிடா நான் கிளம்புறேன்.. என்று அவள் சொல்லிவிட்டு கிளம்ப

யாரு இவள் புயலாய் வந்தால் பூகம்பமாய் ஏதேதோ சொல்லிவிட்டு செல்ல, அதனால் கலங்கி போய் நிற்பது மீரா மட்டும் தான்..

அவளை இப்போது தான் அர்ஜுன் கொஞ்சம் கொஞ்சமாக தேற்றினான்.ஆனால் இப்போது மொத்தமாக இடிந்து போயிருக்கிறாளே!

அவள் சொல்வது அனைத்தும் உண்மை போல் சொன்னதால் மீரா எப்படி இவனை புரிந்து கொள்வாளோ..

அவள் சென்றதும் அர்ஜுன் காரில் ஏறியவன் “மீரா அங்க பாரு அவ யாருன்னு எனக்கு தெரியாது” என்று சொல்ல

அவன் சொன்னது எதுவும் தன் காதல் கேட்காதபடி இரண்டு கைகளையும் காதில் வைத்து அவள் அடைக்க

“ஹே நான் சொன்னது எல்லாமே பொய் டி ,நான் காலேஜ் டைம்ல யாரையுமே லவ் பண்ணல நிவேதா யாரையுமே எனக்கு தெரியாது ,என்ன நம்பு” என்று அவன் முகத்தை பார்த்தபடி காரை ஓட்டிக்கொண்டே சொல்ல

மீராவின் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை, கண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது..

தன்னை ஏமாற்றி விட்டானோ.. ’தன் மகனையே எங்கள் மகனாக இந்த வீட்டிற்கு இப்படி கொண்டு வந்து வளர்க்கும் அளவுக்கு அவன் கதைகள் சொல்லி என்னை பைத்தியக்காரி ஆக்கிவிட்டானோ’ என்று அவள் மனதில் ஒரு எதிரொலி ஒளித்துக் கொண்டே இருந்தது..

தன் காதல் கணவனை வேறு ஒருத்தி சொந்தம் கொண்டாடுவதே அவளால் தாங்க முடியவில்லை, அதிலும் இப்போது அவள் சந்தோசம் முழுவதும் மனிஷ் மட்டுமே அவனையும் சேர்த்து சொந்தம் கொண்டாடுகிறாளே..

அதனால் தான் குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்று நினைக்கும் போது மனிஷை இவன் அழைத்து வந்தானோ என மீராவின் மனதில் ஏற்பட்ட கற்பனைகள்..

அந்த கற்பனைக்கு அவள் உயிர் கொடுத்து வளர்த்துக் கொண்டு இருக்கிறாள்..

காரில் செல்லும் போது அர்ஜுன் எவ்வளவு கதறியும் மீரா அவனுடன் பேசவே இல்லை. அவளின் கோபம் அர்ஜுன் மீது மட்டும்தான் என்று பார்த்தால் மணிஷையும் அவள் திரும்பிப் பார்க்க,

அவள் பின் சீட்டில் தனியாக உட்கார வைத்து இருந்தாள் அவனை..

மீராமா மீராமா என்று அவனும் அழைக்க, அவளுக்கு யார் மீது கோபப்படுவது என்று தெரியாமல் யாரிடமும் பேசாமல் அனைத்து கஷ்டங்களையும் மனதில் போட்டு குழம்பிக் கொண்டே வந்தாள்..

“ஏய் பேசு டி என்கிட்ட, நெஜமாவே சொல்றேன் நான் எதுவும் பண்ணல.. பேசு அந்த நிவேதா யாருன்னு எனக்கு தெரியாது நான் சொன்னா நீ நம்ப மாட்டியா?
என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா” என்று அவளை திரும்பியபடி பேச அவன் காரை ஓட்டினாலும் கவனம் முழுவதும் மீரா மீது தான் இருந்தது..

“தன் கலங்கிய கண்களை துடைத்தாள்.. உன் புள்ளையை நம்ம வீட்டிலேயே வச்சு வளர்க்கறதுக்கு பிளான் பண்ணி இருக்கேல்ல, எனக்கு தெரிஞ்சு நீ தான் ஆக்சிடென்ட் வேணும்னே பண்ணி என்னால ஒரு குழந்தையை பெத்துக்க விட முடியாமல் பண்ணி இருப்பியான்னு சந்தேகமா இருக்கு அர்ஜுன் உன் மேல“என அவள் சொல்லவும்

அப்படியே நொறுங்கிப் போனான்.. அர்ஜுன் அவளின் கனவுகளுக்கு அழகாய் உயிர் கொடுக்க வந்தவன் தான்.. ஆனால் இவள் நிவேதா என ஒரு பெண் சொன்ன பொய்யினால் மனதில் என்னென்னமோ கற்பனை கோட்டையை கட்டி தன்னையே சந்தேகப்படுறா என்று உடைந்து விட்டான் அவன்..

“என்னடி சொல்ற நீ, நான் அப்படி பண்ணுவேனா?” என்று அவன் அவள் கையைப் பிடித்து கேட்க

“என்ன தொடாதடா..என்ன நீ தொட்ட கார்ல இருந்து குதிச்சுடுவேன்” என்று அக்னியாய் கொதித்தாள் மீரா..

இப்போது தான் இந்த வாழ்க்கை நன்றாக போகிறது என்று அர்ஜுன் நினைத்தான். இந்த மனநிலையை அவள் எப்படி தாங்குவாளோ என்று அவளைப் பற்றிய அவன் நினைத்தபடி காரை ஒட்டி வீட்டை அடைந்தான்..

அவள் மனிஷை கூட தூக்காமல் வேகமாக படிகளில் ஏறி தன் அறையை அடைந்தாள்..

“அப்பா ஏன் அம்மா கோவமா போறாங்க” என்று சிறுவனின் கேள்விக்கு விடை என்ன சொல்வதென்று புரியாமல் தவித்தான் அர்ஜுன்…

கீழே இருந்த அவனின் ஒட்டுமொத்த குடும்பமும் அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்க,” மீரா மீரா கதவ தொற” என்று அர்ஜுன் சொல்லவும்

“என்னாச்சுடா” என்று அவன் அம்மா கேட்க

“போகும் போது நல்லாத்தான போனீங்க, இப்ப என்ன பிரச்சனை” என்று யாழினி கேட்க

அவன் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான்..

“என்ன அர்ஜுன் நீ,உனக்கு நிஜமாவே நிவேதா யாருன்னு தெரியாதா” என்று அவள் கேட்க

“தெரியாது அண்ணி.. ஏதோ விளையாட்டுக்காக சொல்ல போய் இன்னைக்கு அது என் குழந்தைன்னு இவ நினைச்சுட்டு இருக்கா

நான் எப்படி அண்ணி வேற ஒரு பொண்ணு கிட்ட இந்த மாதிரி நடந்துப்பேன் நீங்க சொல்லுங்க உங்க தங்கச்சி கிட்ட” என்று அவன் சொல்ல

“நீயே சொல்லு புரிஞ்சுப்பா மீரா” என்று அவன் சொல்லவும்

“என்கிட்ட எதுவுமே பேசல,அவ என்ன சந்தேகம் படுறா” என்று சொல்லும்போதே அவன் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது

எதுவும் புரியாமல் மனிஷ் சுற்றி விழித்துக் கொண்டு இருந்தான்..

அவளுக்காக தான் இந்த குழந்தையை நான் கொண்டு வந்தேன்.அவளுக்கு இவன ரொம்ப பிடிக்கும். அவளால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சு ரொம்ப உடைஞ்சு போயிருந்தா, எப்படி அதில் இருந்து அவளை மீட்டு வெளியே கொண்டு வரதுனே தெரியல..

இந்த பையன் கூட ஸ்கூல்ல அவ ரொம்ப பாசமா இருப்ப, அதனால தான் அண்ணி இவனை கூப்பிட்டு வந்தேன்.. சத்தியமா இவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவன் சொல்லவும்

“டேய் அர்ஜுன், என்னடா சொல்ற மீராவாள குழந்தை பெத்துக்க முடியாது அன்னைக்கு நீ உன்னால என்று சொன்ன” என்று அவன் அம்மா கேட்க

“அம்மா அது வந்து..” என்று அவன் தொண்டை குளிக்குள் எச்சிலை விழுங்கியபடி நிற்க

“என் கிட்ட பொய் சொல்லி இருக்காடா, இந்த அம்மாவோட உனக்கு மீரா தான் முக்கியமா போயிட்ட இல்ல.. தாய்க்கிட்டே பொய் சொல்லி இருக்கியே அர்ஜுன், எதுக்கு எப்படி எல்லாம் பண்ண “என்று அவள் கேட்கவும்

“ஏன் பண்ணி இருப்பான் அவனுக்கு நம்ம தேவை இல்ல அந்த மீரா தான் தேவை” என்று அவன் அப்பாவும் பேச

“ஐயோ அப்படியெல்லாம் இல்ல, நான் எல்லாத்தையும் உங்ககிட்ட அப்புறமா சொல்றேன்.. முதல்ல மீரா கதவை திறந்து வெளியே வா “என்று அவன் சொன்னதும் படார் என்று கதவை திறந்தவள்

“என்ன நான் செத்துப் போயிருவேன் பயந்துட்டியா.. பயப்படாத நான் சாகமாட்டேன், நான் ஏன் சாகணும்.
நீங்க தப்பு பண்ணுங்க எனக்கு ஒரு பிரச்சனை இல்ல, ஆனா என் குழந்தையா இனிமேல் இவனை வளர்க்க மாட்டேன், உனக்கு அந்த நிவேதாவா கல்யாணம் முடிச்சு இந்த வீட்டிலேயே வச்சுக்கோ” என்று அவள் அடுக்கடுக்காய் அவனை குறை சொல்லிவிட்டே போக

“நான் சொல்றது ஒரு நிமிஷம் கேளுடி” என்று அவன் சொல்ல

“என்னடா கேக்கணும்” என்று அவன் கையை நீட்டி அவள் கண்ணீருடன் கேட்க

“நெஜமா என் மேல எந்த தப்பும் இல்ல, உனக்காக தான் இதெல்லாம் பண்ண”என்று அவன் சொல்ல

“நான் கேட்டனா நான் மனிஷ இங்க கூப்பிட்டுவானு கேட்டனா,நீயா தானே கூப்பிடு வந்த.. மனிஷா யாராவது தப்பா சொன்னா என் பையன் நீ சொல்லும்போதே எனக்கு சந்தேகம் வந்து இருக்கணும்.ஆனா இந்த மரமண்டைக்கு தான் எதுவுமே ஏறல” என்று அவள் தலையில் அடித்தபடி சொல்லவும்

“ஏய் இல்ல மீரா உனக்கு இவனை ரொம்ப பிடிக்கும் இல்ல அதனால தான் கூப்பிட்டு வந்தேன்”என அர்ஜுன் சொல்ல

“எனக்கு பிடிக்கும் நீ கூப்டு வரல, உன் புள்ள இந்த வீட்ல வளரணும் அதனால கூட்டிட்டு வந்து இருக்க அப்படித்தானே”என்று மீரா கேட்க

“நெஜமா அப்படியெல்லாம் இல்லடி.. வேணா எங்க ரெண்டு பேருக்கும் டிஎன்யு டெஸ்ட் எடுக்கலாமா, எடுத்து உன்கிட்ட நான் உண்மை என்னன்னு நிரூபிக்கிறேன்” என்று அவன் சொல்ல

*எனக்கு ஒரு டெஸ்ட் வேண்டாம். அதான் தெளிவா சொல்லிட்டு போயிட்டாளே அவ இது உன்னோட பையன் தானே, இதுக்கு மேல என்னடா வேணும்..

என்ன நீ எவ்வளவு முட்டாளா நெனச்சி இருக்க இல்ல, அந்த பையன் கிட்ட நீ அப்பான்னு சொல்லி நெருங்கும் போதே நினைச்சேன். எப்படி யாரோ ஒரு குழந்தையை உன் புள்ளையா நினைக்க முடியுதுன்னு,

என்கிட்ட குறை இருக்கு அதனால என்னால ஏத்துக்க முடிஞ்சுது.. ஆனா நீ ஏன் ஏத்துக்கிட்ட” என்று அவன் சட்டையை பிடித்து அவள் கேட்க

“ஏன்னா ஐ லவ் யூ மீரா அதனாலதான்”என்று அவன் பதில் சொல்ல

“அர்ஜுன் எனக்கு எதுவுமே வேண்டாம்.. நான் இப்பவே இந்த வீட்டை விட்டு போறேன்” என்று அவள் சொல்ல

“ஏய் தப்பா எதுவும் முடிவு எடுக்காத சொல்றதை கேளு” என்று யாழினி சொல்ல

“உன் கொழுந்தன் நல்லவன் நினைச்சு நீ தப்பா புரிஞ்சு இருக்க, அவன் நல்லவன் எல்லாம் கிடையாது.. காலேஜ் படிக்கும்போதே ஒரு பொண்ணு கூட இருந்து அங்க பாரு எவ்வளவு பெரிய பையன் வீட்டுக்கே தெரியாம வளத்து வச்சிருக்கான்” என்று அவள் சொல்ல

“என் புள்ளைய பத்தி எப்படி எல்லாம் பேசினா நடக்கிறதே வேற ..குறையை நீ வச்சுக்கிட்டு என் பையன தப்பு சொல்றியா?” என்று அர்ஜுன் அம்மா பேசவும்

“ஐயோ அத்தை உங்க பையன் தங்கம் தான்.. நீங்களே வச்சுக்கோங்க தங்கத்தை “என்று அவள் அவன் கையை எடுத்து கும்பிட்டபடி சொல்ல

“இங்க பாருப்பா மீரா உண்மை என்னன்னே தெரியாம இப்படி எல்லாம் பேசாத, என் பையன நான் அப்படி எல்லாம் வளர்த்து வைக்கல” என அவன் அப்பா சொல்ல

“ரொம்ப நல்ல வளர்த்து வச்சிருக்கீங்க வீட்டுக்கு தெரியாம இன்னும் எத்தனை பேருக்கு பிள்ளையை கொடுத்திருக்காங்க” என்று அவள் பேச

தன் மகனை குறை சொல்வதை பொறுக்க முடியாமல் அர்ஜுனன் அம்மா, “என்ன பேசிட்டு இருக்க.. உனக்கு பாவம் நினைக்க போய் அவன் உன்னை இரண்டாவது கல்யாணம் பண்ணான். நான் அன்னைக்கே சொன்னேன் ஆனா அவன் தான் எனக்கு மீரா வேணும்னு சொன்னா..இப்போ உன்கிட்ட இருக்குற குறைய கூட அவன் சொல்லல.. அவன் மேல் குறை சொல்லும் போது நீ அமைதியா எல்லாத்தையும் கேட்டுட்டு தான் இருந்த..

இப்ப என்னன்னா உனக்காக எங்கேயோ இருந்து ஒரு அனாதையா ஏத்திக்கிட்டு வந்து இருக்கான்.அதையும் அவன் பிள்ளை என்று சொல்கிறாயா நீ” என்று கண்கள் சிவந்தபடி கோவமாய் பேச

“ஓ சூப்பர் அத்தை.. இவ்வளவு நாள் இது எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சுட்டு தான் என்கிட்ட நல்லவங்க மாதிரி நடிச்சு இருக்கீங்களா,

நான் கேட்டேன? நான் எனக்கு ரெண்டு தந்திரமா வாழ்க்கை கொடு என்று அவன் கால்ல விழுந்து நான் கேட்டன?

இல்ல இல்ல செஞ்சிட்டு சொல்லி காட்டுறீங்க.. எனக்கு நீங்க யாருமே தேவையில்லை என்ன தயவு செஞ்சு விட்ருங்க” என்று அவள் வேகமாக வெளியே செல்ல

“ஏய் போகாத மீரா ப்ளீஸ் ப்ளீஸ்” என்று அர்ஜுன் அவள் கையைப் பிடிக்கவும்

மீராமா என மனிஷ் சொல்ல,

அவள் திரும்பிப் பார்த்து கண்ணீருடன் அவன் வீட்டிலிருந்து வெளியே சென்றாள்..

“அண்ணி மீரா கிட்ட ஏதாவது சொல்லுங்க.. அவ போறா” என்று அர்ஜுன் கதறியதை யாராலும் பார்க்க முடியவில்லை

விடுடா அவ போகட்டும்.உன்ன பிடிச்சது போயிடுச்சு நிம்மதியா இரு அப்படியே அனாதையையும் தூக்கி எங்க இருந்து கூட்டிட்டு வந்தியோ,அங்கேயே போய் விட்டுட்டு வா.. உனக்கு இன்னொரு வாழ்க்கை இருக்கு அதை வாலு, சும்மா இன்னும் மீரா மீரா அவ பின்னாடியே போகாத” என்று அவன் அம்மா சொல்ல

“என்னம்மா இப்படி பேசுறீங்க” என அவன் அம்மாவிடம் கேட்க

“உனக்கு அவ தான் முக்கியம்னு இன்னொரு தடவை பின்னாடி போன அப்புறம் எங்க எல்லாத்தையும் நீ விட்டுற வேண்டியதுதான் அர்ஜுன்.. அவ்வளவுதான்” என்று அம்மா சொல்ல

ஆண் கலங்கக் கூடாது தான் ஆனால் கலங்கி போய் நிற்கிறான் அர்ஜுன்..