• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன் பார்வையில் கரைந்தேனடி- 31

gomathi nagarajan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 18, 2025
36
5
8
chennai
மீரா சென்று விட்டாள், ஆனால் அவளின் உயிரான மனிஷை எப்படி அவளால் விட்டு செல்ல முடியும் என்று அர்ஜுன் யோசித்துக் கொண்டே இருந்தான்.

அவள் தன்னை நன்றாக புரிந்து கொண்டாள் என்று நினைத்தேனே, இப்படி அனைவர் முன்னிலும் விட்டு சென்றாளே என்று தன்னைத்தானே அவன் நினைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான்..

அம்மா முக்கியமா,மனைவி முக்கியமா என்று கேட்டால் அவன் என்ன சொல்லி விட முடியும்..

அதனால் அம்மாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தான். ஆனால் மனிஷ்க்கு தான் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அம்மா எங்கே அம்மா எங்கே என்று கேள்வியை தவிர அவனிடம் வேறு எதுவும் வரவில்லை..

அவள் எங்கே சென்றாள்.தன் அம்மா வீட்டிற்க்கா இல்லை வேறு எங்கேயுமா யோசித்துக் கொண்டே இருந்தவன் திடீரென அவனின் அறை கதவு திறக்க,திரும்பிப் பார்த்தவன்,

அண்ணி என்று அவன் கலங்கி போய் அவளை அழைக்கவும் “சாரி அர்ஜுன், என் தங்கச்சி இப்படியெல்லாம் பண்ணுவா என்று நான் நினைக்கல, உன்னோட வாழ்க்கையை நான் தான் இப்படி ஆக்கி வச்சிட்டா என்ன மன்னிச்சிடு” என்று அவள் சொல்ல

“உங்க மேல எந்த தப்பும் இல்லையே அண்ணி, எனக்கு தான் ஒரு பொண்ணு எப்படி காதலிக்கணும் தெரியல.. என் மேல காதல் இருந்தா அவ என்ன இப்படி விட்டுட்டு போயிருப்பாளா” என்று அர்ஜுன் கலங்கியபடி சொல்லவும்

“அர்ஜுன் நான் ஒன்னு கேட்டா டா டா…நீ தப்பா நினைக்க மாட்டியே?” என்று அவள் இழுக்கவும்

“என்ன அண்ணி நீங்களும் என்னை சந்தேகப்படுறீங்களா? நிஜமா இவன் என்னோட..”என்று அவன் ஏதோ சொல்ல வர

அதற்குள் மனீஷ் பாவமாக அவனைப் பார்க்கவும், “செல்லக்குட்டி அந்த ரூம்ல போய் டிவி பாரு” என்று சொல்ல

“அப்பா நான் டிவி பார்த்த மீராமா வந்துருவாங்களா?” என்று அவன் கேட்கவும்

“நீங்க டிவி பாருங்க மீரா மா வந்துருவாங்க” என்று அவன் சொல்லி அந்த சிறுவனை அனுப்பிவிட்டு பின்னாடி திரும்பி தன் அண்ணியை பார்த்து,” என்ன நீ நீங்களும் சந்தேகப்படுறீங்க.. மனிஷ் இப்ப தான் என்னோட பையன் இதுக்கு முன்னாடி நிஜமா அவன் ஏன் ரத்தம் இல்லை,என்ன நம்புங்க” என்று அவன் சொல்ல

“அப்புறம் யாருடா அந்த பொண்ணு” என்று அவள் கேட்க

“எனக்கு நிஜமா தெரியல நான் பொண்ணுங்க கூட பேசவே மாட்டேன், குனிஞ்சதலை நிமிறவே மாட்டேன்னு எல்லாம் சொல்லல,ஆனா இந்த அளவுக்கு நான் யார்கிட்டயும் பேச மாட்டேன்.. அது உங்களுக்கே தெரியும் இல்ல,

உங்களுக்கே தெரிஞ்ச விஷயம் ஏன் மீராக்கு தெரியாம போச்சு..யாரோ ஒருத்தி வந்து என்னை இப்படி சொன்னா அவ நம்பி இருப்பாளா” என்று அவன் கண்ணில் கண்ணீர் வடிக அண்ணியிடம் கேட்க

அவனை அந்த நிலையில் பார்க்க முடியாதவள் “நான் வேணா மீரா கிட்ட பேசி பார்க்கட்டுமா அர்ஜுன்?” என்று யாழினி கேட்க

“வேண்டாம் அண்ணி,பேசி ஒரு நல்லது நடக்க போறதில்லைன்னு தெரிஞ்சு போச்சு, அவள் என்னை புரிஞ்சுகிட்டு வந்த வரட்டும்..இல்லனா எனக்கு இந்த பையன் போதும்” என்று அவன் சொல்ல

“இல்ல அத்தை சொன்னாங்க மீராவே போயிட்டா இன்னும் இந்த பையன் எதுக்குன்னு” என்று அவள் மெதுவாக தயக்கத்துடன் சொல்ல

“என்ன அண்ணி சொல்றீங்க.. பெரியவங்க மனசு தான் நிமிஷத்துக்கு நிமிஷம் மாறும் உங்க தங்கச்சி மாதிரி.. குழந்தைங்க மனசு மாறாது. அவன் மனசுல இப்ப நான் அப்பான்னு பதிஞ்சுட்டேன், எப்படி கொண்டு போய் திரும்ப அந்த காப்பகத்தில் விட முடியும்.. கஷ்டமா நஷ்டமோ அவன் என் கூட இருக்கட்டும், என் மகன் நான் நல்ல வளத்துப்பேன்” என்று அவன் சொல்ல

சிறிது நேரத்தில் அவளின் மொபைல் ஒலிக்க,” ஒரு நிமிஷம் அர்ஜுன் வீட்ல இருந்த அம்மா தான் போன் பண்றாங்க” என்று போனை அவள் எடுத்ததும்” அம்மா உங்களுக்கு எவ்வளவு நேரம் தான் போன் பண்ண, போன் பண்ணா எடுக்க மாட்டியா” என்று கோபமாக யாழினி சொல்ல

“என்னடி போனை வச்சிட்டு பக்கத்துல சிவன் கோவில் போயிருந்தேன், இன்னைக்கு பிரதோஷம்னு.. எதுக்கு இத்தனை தடவை போன் பண்ணி இருக்க என்ன விஷயம் “என்று அவள் கேட்க

“மீரா அங்க தானமா இருக்கா,அவளுக்கு போன் பண்ண சுவிட்ச் ஆப்னு வருது. போன் அவ கிட்ட குடு” என்று யாழினி எதுவும் தெரியாமல் கேட்க

“என்னடி சொல்ற, மீரா எதுக்கு இங்க வரப்போறா.. எனக்கு எதுவும் போன் கூட பண்ணலையே” என்று அம்மா சொன்னதும் அவள் கொஞ்சம் அதிர்ந்து போனாள்..

“என்னது மீரா உங்களுக்கு போன் பண்ணலையா? நம்ம வீட்டுக்கு வரலையா என்னம்மா சொல்றீங்க” என்று அவள் கேட்டதில்லையே அர்ஜுன் பார்வை யாழினி மீது பட

“என்னாச்சு அண்ணி, இன்னும் மீரா வீட்டுக்கு போகலையா?” என்று அவனும் ஒரு வித பயத்தில் கேட்க

“சரிமா ஒன்னும் இல்ல போன வை” என்று யாழினி சொல்ல

“ஏய் என்னடி லூசா நீ,போன் பண்ண மீரா கிட்ட போன குடுன்னு சொல்லிட்டு இப்ப வையுங்க..எங்கடி போனா மீரா” என்று அம்மாவும் ஆத்திரத்தில் கேட்க

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. நான் சொல்றேன்” என்று அவள் சொல்லும் போதே அவளின் அம்மாவிற்கு ஒரு வித பயம் வந்துவிட்டது..

“ஏதாவது திரும்ப பிரச்சனையா மீரா, இப்ப தானடி சந்தோசமா இருந்தா எங்கேயோ இருந்து ஒரு குழந்தையை அர்ஜுன் அவளுக்காக கூப்பிட்டு வந்து அம்மான்னு சொல்லி அவன் பேசுறது அவளுக்கு மனசு நிறைவா இருக்கு, நீ என்கிட்ட சொன்னா இப்ப என்ன பிரச்சனை..அவ எங்க போனா” என்று கேட்க

“அம்மா கொஞ்சம் அமைதியா இருங்க, நான் எல்லாத்தையும் அப்புறமா சொல்றேன்” என்று யாழினி சொல்லிவிட்டு எதுவும் பேசாமல் போனை வைக்க

“அண்ணி என்ன ஆச்சு” என்று அர்ஜுன் கேட்கவும்

“இன்னும் மீரா வீட்டுக்கு போகல” என்று அவள் சொல்ல

“என்ன நீ சொல்றீங்க, அப்ப அவள் எங்க போயிருப்பா.. அவ போன் சுவிட்ச் ஆப்னு வருது, இவ்ளோ நேரம் ஆகுது ஒருவேளை அங்க நடந்த பிரச்சினையில் ஏதாவது தப்பா..” என்று அர்ஜுன் யோசிக்கும்போது

“இல்ல அவ அப்படியெல்லாம் கிடையாது, எங்க போனா ஒண்ணுமே புரியலையே” என்று யாழினி குழம்பிக் கொண்டு இருக்க

“ஏய் இங்க வந்து என்ன பேசிட்டு இருக்க” என்று அர்ஜுன் அம்மா அவளிடம் வந்து கேட்க

“அது ஒன்னும் இல்ல, அத்தை இன்னும் மீரா வீட்டுக்கு போகல” என்று அவள் சொல்ல

“உன் தங்கச்சி எங்க போனா என்ன, இன்னும் அர்ஜுன கஷ்டப்படுத்தலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து..

அவளை கல்யாணம் முடிச்சு வச்சதோட நீ விட்டியா யாழினி, அவளால ஒரு குழந்தை பெத்துக்க முடியாதுன்னு உனக்கு உண்மை தெரிஞ்சும் அதை என்கிட்டே நீ மறச்சிருக்க,

இப்ப பாரு என்ன ஆச்சுன்னு,கடைசில என் பையனை குறை சொல்லிட்டு போறா..அவன் அவளுக்காக எவ்வளவு விட்டுக்கொடுத்து போய் இருக்கான்னு தெரியுமா?” என அவளின் அத்தை சொல்ல

“இல்ல அத்தை அவள் ஏதோ புரிந்து கொள்ளாமல் பேசிட்டா, அவளை கண்டிப்பா நான் புரிய வைக்கிறேன்” என யாழினி சொல்ல

“ஒன்னும் தேவை இல்ல, நீ முதல்ல எந்திரிச்சு ரூமுக்கு போ.. ரித்வி உன்ன தேடிட்டு இருக்கான்” என்று அவள் அதிகாரமாய் சொன்னதில் கொஞ்சம் பயந்து போனாள் யாழினி..

அர்ஜுனுக்கு இப்போது மீரா இப்படி சென்று விட்டாள் என்று கவலை கொள்வதா? அல்லது எங்கு சென்று விட்டாள் என்று நினைத்து கவலை கொள்வதா என யோசித்துக்கொண்டே இருந்தான்.

“அர்ஜுன் இங்க பாரு,நான் சொல்றதை கேளு.. அந்த அனாதைய கொண்டு போய் அந்த காப்பகத்தில் விட்டு நம்மளால முடிஞ்ச காசு வேணும்னா கொடுப்போம் .உனக்கு தான் ஒரு குறையா இல்லையேடா.. அப்புறம் எதுக்கு அந்த பையன் நம்ம வீட்டுல இருக்கணும்” என்று அம்மா சொல்ல

“அவன் போனும்னா நானும் இந்த வீட்டை விட்டு போகணும்” என இரண்டு அடியில் திருக்குறள் போல் அழகாய் சொல்லி முடித்தான் அர்ஜுன்

அதற்கு மேல அவனிடம் பேச விரும்பாத அம்மா கதவை படார் என்று சாற்றிவிட்டு வெளியே செல்ல

அவளுடன் பள்ளியில் வேலை பார்க்கும் அனைவருக்கும் அவன் போன் பண்ணி மீராவை பற்றி கேட்க, யாருக்கும் அவள் எங்கே சென்றாள் என்று தெரியவில்லை..

“அவளை எங்க போய் தேடுவது பேசாமல் போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா?” என்று யோசித்தான்..

அவன் மனிசை அழைத்து வேகமாக வெளியே வந்து காரில் ஏறியதும், அவன் அப்பா “எங்க போற அர்ஜுன்” என்று கேட்க

“மீரா காணும் அப்பா, அவங்க வீட்டுக்கு போகல.. எங்க போய் இருக்கான்னு தெரியல” என்று அவன் சொல்ல

“அவ எங்க போனா உனக்கு என்ன.. உன்ன தான் வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாளே, இன்னும் அவ பின்னாடி எதுக்குடா போற” என கோபமாக சொல்ல

அப்பா அதுக்காக அவளை எப்படி விட முடியும் என்று அர்ஜுன் கேட்கவும்

அதற்குள் அவன் அம்மா “இப்ப எங்கடா போற” என அம்மாவின் குரல் கேட்டவன் வேகமாக திரும்பிப் பார்த்து,

“போலீஸ்க்கு போறேன் மீராவ காணோம்னு கம்ப்ளைன்ட் கொடுக்க போறேன்” என அவன் சொல்ல

“அப்படியே சொல்லு, எங்க அம்மா தான் அடிச்சு துரத்திட்டாங்க.எங்க அப்பா வேற வரதட்சணை கேட்டாங்கன்னு, குடும்ப ஒட்டுமொத்தத்தையும் பிடிச்சு அவங்க ஜெயில்ல போடட்டும்.. அதானே உன்னோட ஆசை,

வீட்டுல சண்டை போட்டுட்டு போயிருக்கா இப்ப போலீஸ்லாம் வந்து நம்ம வீட்ட விசாரிக்கணும்.. பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் என்னை தப்பா நினைக்கணும்,அதான் உனக்கு வேணும்” என அம்மா கேட்கவும்

சிஎன்னம்மா இப்படி சொல்றீங்க” என அவன் சொல்லு

“ஒழுங்கா வீட்டுக்குள்ள போ, அவளை தேடணும்னா தேடு..ஆனா போலீஸ்க்கு மட்டும் போகாத அவ்வளவுதான் சொல்லுவேன்

அதனால நம்ம வீட்டு மானம் தான் போகும்” என்று சொன்னபடி அனைவரும் வீட்டுக்குள் செல்ல

மனிசை வைத்துக் கொண்டு அவன் எங்கே செல்வான், யாரை போய் விசாரிப்பான்.காரில் ஏறியவன் யோசித்துக் கொண்டே இருக்க,

திடீரென அவனே நம்பருக்கு ஒரு போன் வந்தது.

அதை எடுத்து காதில் வைத்தவன் ஹலோ என்று சொல்ல

“சார் உங்க வைஃப் நேம் மீரா வா?” என்று மறுமுனையில் கேட்கவும்

அவன் தயங்கியபடி “நீங்க யாரு” என்று கேட்க

“நான் s2 போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசுறேன். கொஞ்சம் நான் சொல்ற இடத்துக்கு நீங்க வர முடியுமா?” என்று அவர் சொல்ல

“என்னாச்சு சார்” என்று குரலில் ஒரு வித கலக்கத்துடன் அர்ஜுன் கேட்டான்
 

Attachments

  • Picsart_25-06-19_14-14-37-984.jpg
    Picsart_25-06-19_14-14-37-984.jpg
    195.3 KB · Views: 8