அத்தியாயம் 12
"இங்க இருக்குற ஹாஸ்டல்ல இருந்து மகாராணிக்கு தனியா வர முடியாதாம்.. கிளம்பிருக்காரு வண்டிய தூக்கிட்டு.. யாரை சொல்லி என்ன ஆக போவுது.. எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி" புலம்பியபடி ஜெயா ஹாலில் அமர்ந்திருக்க,
சமையலறையில் நின்றிருந்த விஜயலக்ஷ்மி கேட்டாலும் கேட்காததைப் போல வேலையில் நின்றார்.
தன் அறையில் இருந்த நந்தினிக்கு ஜெயா பேச பேச தலைவலியே வந்துவிட்டது.
"என்னுடன் பிறந்தவன் என்னை அழைக்க வந்தது அவ்வளவு பெரிய குற்றமா?" என நினைத்தவளுக்கு தான் தாங்க முடியவில்லை.
"இனி ஒரு தடவை இந்த மாதிரி நடக்கட்டும் அப்போ தெரியும் நான் யாருன்னு!" என்ற ஜெயா எழுந்து தன்னறைக்கு சென்றுவிட, ஒரு பெருமூச்சோடு மகளுக்கு ஜூஸை எடுத்து சென்றார் விஜயலக்ஷ்மி.
"என்னம்மா இது?" நந்தினி ஆதங்கமாய் கேட்க,
"எப்பவும் நடக்குறது தானே நந்து ம்மா.. உன் அண்ணா வேற ஊர்ல இல்ல.. சொல்லனுமா உன் அண்ணிக்கு!" என்று அன்னை கேட்டார்.
"ப்ச்! என்னவோ ம்மா.. ஆசையா தான் வந்தேன்.. ஏன் வந்தோம்னு இருக்கு.."
"அதெல்லாம் நினைக்காத நந்து.. காலேஜ் எல்லாம் எப்படி போகுது.. எக்ஸாம் எப்ப?" என அன்னை கேட்க, கல்லூரி பற்றிய கதைக்கு சென்றாள் நந்தினி.
"அந்த சத்யா அன்னைக்கு ரொம்ப கோபப்பட்டான்னு சொன்ன.. அப்புறம் சரியாகிட்டானா?" விஜயலக்ஷ்மி கேட்க,
"ஹ்ம் ஆமாம்மா.. யாருமே எதிர்பார்க்கல.. அவ்ளோ கோபம்.. நான் கூட பயந்துட்டேன்.. நடந்த எதையுமே இப்பவும் எங்களால நம்ப முடியலை.. அந்த பொண்ணு இறந்ததே இன்னும் குழப்பதுல இருக்கு.. இதுல அதுக்கு காரணமானவனும் இறந்தது தான்... ஆனாலுக்கு கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு தோணுச்சு ம்மா.. அவன் மட்டும் உயிரோட இருந்திருந்தா இன்னும் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கை என்ன ஆகுமோ.. அதோட சத்யாவும் படிக்க வந்திருப்பானான்றது டவுட்டு தான்" என்று கூறி முடித்தாள்.
"நீ சொல்ல சொல்ல எனக்கே பயமா இருக்கு.. இப்ப வர்ற பசங்களை சொல்லவா.. இல்ல பொண்ணுங்களை தப்பு சொல்லவான்னே தெரியல.. எதையும் கையாள தெரியாம தான் இப்படி எல்லாம் நடக்குது.. கொஞ்சம் யோசிச்சாலே போதும்.. அதுக்கு யாருக்கு நேரம் இருக்கு" என்று கூறிய அன்னை,
"அந்த பையன் இப்பலாம் உன்கிட்ட நல்லா பேசுறதா சொன்ன.. வேற எதுவும் பிரச்சனை இல்லையே?" என்றார் மகளையும் கவனிக்க வேண்டுமே! தாயாய் கொஞ்சம் கவனமாய் அன்னை கேட்க,
"இல்லம்மா! காலேஜ் வந்தது படிக்க மட்டும் தான்னு தெளிவா தான் சொன்னான்.. அப்புறம் அந்த பொண்ணு பத்தின பிரச்சனைல தலையிட வேண்டாம்னு நான் சொன்னதுல என் மேல ஒரு கோபம்.. ரொம்ப எல்லாம் பேசுறது இல்ல.." என்று கூற,
"ஹ்ம்! எதுக்கும் நாம கவனமா இருக்கனும் டா.. எல்லாரையும் நம்பவும் கூடாது.. நம்பாமல் இருக்கவும் கூடாது.. உண்மையான அக்கறை கூட அந்த பையனுக்கு இருந்திருக்கலாம் இறந்த பொண்ணு மேல.. ஆனா உலகம் யாரையும் நம்பற மாதிரி இல்லையே" என்று கூறி எழுந்து செல்ல, அன்னை கூற வந்தது புரியவே இல்லை நந்தினிக்கு.
"சத்யா எங்க ம்மா?" என வைதேகியிடம் கேட்டு வீட்டிற்குள் சங்கர் வர, எதிரே வந்து நின்றார் வீரபாகு.
"ஆத்தி! இந்த ஆளு வீட்டுல இருக்காருன்னு தெரிஞ்சிருந்தா இந்த பக்கமே வந்திருக்க மாட்டேனே!" என கண்களை உருட்டி சங்கர் விழிக்க,
"முழிக்குறான் பாரு ஆடு திருடனவனாட்டம்.. எங்க டா போறிங்க?" என வீரபாகு கேட்க,
"அதுவா ப்பா.. இங்க தான் ப்பா பக்கத்துல" என்றவன் இன்னும் பயந்து விழிக்க,
"எங்கன்னு கேட்டா பதிலா சொல்ல முடியல.. அப்போ என்னமோ உருப்பட போற வழி இல்ல.. படிக்க லீவுன்னு தானடி நீ சொன்ன.. உன் மகன் நல்லா படிப்பானாட்டம் இருக்கு" என்று மனைவியிடமும் கேட்க,
"படிக்க லீவு குடுத்தா முழு நேரமும் படிச்சுகிட்டே இருப்பானுங்களாக்கும்.. அங்கங்க போயி கொஞ்சம் உலாவிடடு தான் வரட்டுமே.. வீட்டுல இருந்தாலும் எதையாவது சொல்ல தான போறீங்க?" என்று கேட்க,
"நீ தான் அவன் இப்படி போறதுக்கு மொத காரணம்.. என்னமோ பண்ணு" என்றவர் வெளியே கிளம்பிவிட,
"எங்க அவனை? இந்த ஆளு இல்லாத நேரம் கூப்புடுன்னு சொன்னா கேட்குறானா!" என்று சங்கர் நடுவீட்டிற்குள் வர,
"யாரை பார்த்து அந்த ஆளு இந்த ஆளுங்குற.. உன்னை!" என்று அடிக்க வந்த வைதேகியிடம் தப்பித்து சத்யா அறைக்குள் நுழைந்திருந்தான் சங்கர்.
"என்ன டா விளையாடிக்கிட்டு இருக்குற.. இப்படி மூச்சு வாங்குது?" சத்யா கிண்டல் செய்ய,
"குடும்பமா டா இது? உங்க அப்பா உன்ன திட்ட, உன் அம்மா உங்க அப்பாவை திட்ட, என்னனு கேட்டா என்னை ஆளாளுக்கு திட்ட.. ஷப்பா!" என்றவன் முதுகில் தட்டி வெளியே அழைத்து வந்தான் சத்யா.
"எங்க டா போறீங்க?" வைதேகி கேட்டவரிடம்,
"இதை கேட்டதுக்கு தானே வீரபாகு கோச்சிட்டு போற மாதிரி பேசினீங்க.. இப்ப அதே கேள்விய நீங்க கேட்குறீங்க?" என்றான் சத்யா கிண்டலாய்.
"எல்லாம் கேட்டுட்டு தான் உள்ள கிடந்தியாக்கும்.. சாப்பிட வீட்டுக்கு வந்துரனும்.. அதுக்கும் அவருகிட்ட பேச்சு வாங்குத மாதிரி வச்சுக்காத" என்று கூற,
"அதெல்லாம் நேரத்துக்கு வந்துருவோம் ம்மா!" என்றது சங்கர்.
"வா டா!" என சத்யா அவனை இழுத்துக் கொண்டு சென்றது அந்த ஊரின் நூலகத்திற்கு.
"இங்க எதுக்கு டா வந்திருக்கோம்?" என்று புரியாமல் சங்கர் கேட்க,
"லைப்ரரி எதுக்கு வருவாங்க?" என்றவன் உள்ளே செல்ல,
"இந்த புக்கை எல்லாம் பாத்தாலே மனசு டென்சன் ஆயிடுது.. இதுல இவன் வேற.. இருக்குற புக்கு பத்தாதுன்னு.." என முனகிக் கொண்டு வந்தான்.
சத்யா தேர்வு செய்த புத்தகங்களைப் பார்த்த சங்கருக்கு புரிந்து போக,
"டேய்! என்னவோ அந்த நேரத்துல உணர்ச்சி வசப்பட்டு பேசுறன்னு நினச்சேன்.. நிஜமா முடிவு பண்ணிட்டியா?" என்றான் சங்கர் வாய் பிளந்து.
"பின்ன? சத்யா பொய் சொல்ல மாட்டான்!" என்றவன், எடுத்த நூலகளில் பாதியை சங்கர் கைகளில் கொடுக்க,
"எனக்கெதுக்கு?" என்றான் சங்கர்.
"புரியல?" என்று சிரித்தவன் சிரிப்பில் வில்லங்கம் இருப்பதாய் தோன்ற,
"உன்னை விட்டுட்டு நான் எதை தான் டா பண்ணி இருக்கேன்" என்றதில்,
"இங்க பாரு! என்னைய கை தூக்கி விட்டு இம்புட்டு தூரம் கூட்டிட்டு வந்தது எல்லாம் சரி தான்.. இந்த போலீஸ் வேலை எல்லாம் நமக்கு ஆகாது.. நான் எண்ணமும் செஞ்சி பொழச்சிக்குவேன்..ஆளை விடு" என்ற சங்கரை கதற கதற புத்தகத்தை கட்டி கூட்டி வந்தான் சத்யா.
"இன்னும் ஆறு மாசத்துல எக்ஸாம் வருது.. காலேஜ்ல அரியர் இல்லாம படிக்கறது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு இந்த எக்ஸாமும் முக்கியம்னு நினச்சு படி.. போலீஸ் ஆகுறோம்.. மாஸ் பண்றோம்!" என்றவனிடம் மன்றாடிப் பார்த்தும் சங்கர் புலம்பல் எடுபடாமல் போனது.
"நந்தினியை பார்க்க எப்ப போன?" தன்னையும் கோர்த்து விட்டவன் மேல் கோபம் இருந்தாலும் அதை விட்டு சத்யாவிடம் சங்கர் கேட்க,
"நான் எப்ப போனேன்னு சொன்னேன்?" என்றான் சத்யா.
"நிஜமாவா? நந்தினியை நீ பார்க்கவே இல்லையா?" ஆச்சர்யமாய் கேட்டான் சங்கர்.
கல்லூரி விடுமுறை கொடுத்து இன்றோடு ஆறு நாட்கள் கடந்திருக்க, சத்யா இன்னும் நந்தினியைப் பார்க்கவில்லை என்பதை நம்ப முடியவில்லை சங்கரால்.
"சும்மா நடிக்காத டா!" என்று சங்கர் கூற,
"நம்பாட்டி போ!" என்றவன் காரணம் கூற மாட்டான் என்பதோடு அவன் தோரணையே அவன் கூறுவது உண்மை என்பதையும் கூற,
"ஏன் டா?" என்றான்.
"என்ன ஏன் டா?"
"நீ வர வர என்ன பண்றன்னே தெரிய மாட்டுது சத்யா.. ஆனா உன்கிட்ட எதுவோ சரி இல்ல.. அந்த புள்ள மேல எதுவும் கோபமா இருக்கியா?" சங்கர் கேட்க, பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தான் சத்யா.
"என்னனு தான் சொல்லேன்.. எல்லாத்துக்கும் புடிச்சி தொங்கணும்.. கூடவே போற இடத்துக்கெல்லாம் என்ன உரிமைல என்னை சேர்த்துக்குறியோ அந்த உரிமைல தான் நானும் கேட்குறேன்!" என்று சங்கர் கேட்க, அவன் கேட்டதில் கேட்ட விதத்தில் ஒரு சிறு புன்னகை சத்யாவிடம்.
"என்ன டா.. சொல்லு!" என மீண்டும் கேட்க,
"என்ன சொல்றது? பார்க்கலைனா பார்க்கல அவ்வளவு தான்.. இதுக்கு என்ன காரணம் வேணும்?" என்றான் விட்டேற்றியாய்.
"ஓஹ்! அப்ப அந்த பொண்ண கழட்டி விட முடிவு பண்ணிட்ட?" என்று கேட்கவும் சத்யா அவனை முறைக்க,
"பின்ன என்ன எழவுன்னு தான் சொல்லி தொலையேன் டா.. காதலிக்குறவனை பிரண்ட்டா வச்சுட்டு நான் படுற பாடு!" என்று புலம்பிய சங்கர்,
"இவரு அவங்களுக்காக அதே காலேஜ்க்கு படிக்க போவாங்களாம்.. ஆனா ஒரு வாரமா ஒரே ஊர்ல இருந்தும் பார்க்க முயற்சி பண்ணாம இருப்பாங்களாம்.. சொன்னதும் சரின்னுட்டு நான் வேற போகணுமாம்" என்று சங்கர் கோபம் கொள்ள,
"ப்ச்!" என்று சலித்துக் கொண்டான் சத்யா.
"ரொம்ப சலிச்சுக்காத.. சொல்லி தான் ஆகணும்!" என நின்றான் தோழன்.
"என்ன சொல்ல? என்னவோ ஒரு கடுப்பு.." சத்யா கூற,
"நந்தினி மேலயா?" என்றான் சங்கர்.
"ஹ்ம்!" என்று தலையாட்டியவன்,
"அன்னைக்கு நான் அவ்வளவு பேசியும் அந்த சந்தியாக்கு என்ன ஆனா நமக்கென்னனு நின்னா.. அங்க என்னவோ எனக்கு நீ எப்படி அப்படி சொல்லலாம்னு ஒரு கோபம்.. அதெல்லாம் முடிஞ்சிட்டுன்னு சொன்னாலும்.. இன்னும் அதை மறக்க முடியலை டா.. இதே மாதிரி நாளைக்கு எதாவது பிரச்சனைனா..." என்றவன் முடிக்கும் முன்பே குறுக்கிட்டான் சங்கர்
"டேய்! டேய்! போதும் நிறுத்து! சொல்றான் பாரு விளக்கெண்ணெய் வெங்காயம் தான் காரணம்னு.. ஏன்டா உனக்கு ஒரு விஷயம் முக்கியம்னு பட்டுச்சு நீ முன்ன நின்னு குரல் கொடுத்த சரி.. ஆனா அதையே ஏன் டா அவகிட்டயும் எதிர்பாக்குற? ஏன் அவளுக்கு அந்த பிரச்சனையை விட நீ முக்கியம்னு நினைச்சிருக்கலாம்ல? அப்படி நினச்சுப் பாரேன்!" என்று கூறவும், சத்யா எதுவும் பேசாமல் நிற்க,
"சூர்யா கிட்டார தூக்கிட்டு ஓடுன மாதிரி பேகை தூக்கிட்டு ஓடுனா மட்டும் போதாது மகனே! காதல்னா நாலும் வர தான் செய்யும்.. இதெல்லாம் ஒரு மாட்டார்னு.." என்றவன்,
"நாளைக்கு அய்யனார் கோவில்ல அவங்க முறைக்கு பூஜையாம்.. பொங்கல் வச்சு சாமிய கும்பிடுதாங்க.. அதை சொல்ல தான் நினச்சேன்.. நீ தான் அவளை மறந்துட்ட போலயே!" என்றான் சங்கர் சீண்டலாய்.
"டேய்!" என்று சத்யா குரல் அதிகரிக்க,
"எவனையும் எதுலயும் நம்ப கூடாது போல.. நாளைக்கு போறதுன்னா நீ மட்டும் போ.. என் வீட்டு பக்கம் எல்லாம் வந்துறாத.." என்று கூறியபடியே கிளம்பி இருந்தான் சங்கர்.
தொடரும்..