அத்தியாயம் 15
இறுதி ஆண்டின் முதல் நாள்.. வந்ததும் தான்யா வேறு தான் கூறியதை சத்யாவிடம் அவள் முன்பே கூறி இருக்க, அவன் பார்த்த அந்த ஒற்றை பார்வைக்கு பின் இவள் அவன்புறம் திரும்பவே இல்லை.
சத்யாவும் எதுவும் பேசாமல் இருந்தான் என்பதில் தான் சங்கருக்கு சந்தேகமே!
தனி தனி ப்ராஜெக்ட் என்று கூறி ஆசிரியர் அந்த ஆண்டு என்னென்ன வகுப்பு, செய்முறை என விளக்கி முடித்து செல்ல, அடுத்து கொஞ்சம் இலகுவானது மாணவர்களுக்கான நேரம்.
"துரத்தி துரத்தி லவ் பண்ணின.. அப்புறம் லைட்டா அங்கங்க நின்னு லவ் பண்ணின.. இப்ப அந்த பொண்ண கண்டுக்க மாட்டுக்க.. உன் கூடயே இருக்க என்னாலேயே புரிஞ்சிக்க முடியல.. பாவம் தான் உன் அப்பா!" என்றான் சங்கர்.
"அவரை விடு.. உனக்கு என்ன தெரியனும்?" என்றான் சத்யா நாளைக்கு நடக்க இருக்கும் பரீட்சைக்காக புத்தகத்தை புரட்டியபடி.
"எனக்கென்ன? அந்த புள்ளையே குழம்பி போய் இருக்குன்னு சொல்லுறேன்.. அவளுக்காக காலேஜ் வந்து சேர்ந்துட்டு இப்ப அவளை யாருன்னு கேட்குற மாதிரி இருக்கியே.. அதான் என்ன விஷயம்னு கேட்குறேன்.." என்றான் தெளிவாய்.
"பார்க்கல பேசலைன்னா அது லவ் இல்லைனு ஆகிடுமா? ரெண்டே ரெண்டு ரீசன் தான்.. அதுவும் ஒன்னு தான்.. நான் காக்கி ட்ரெஸ் போடணும்.. உலகத்த திருத்த இல்ல.. என்னால முடிஞ்சதை மாத்த.. அண்ட் நானும் கெத்தா போய் மச்சா உன் தங்கச்சிய குடுனு கேட்கலாம் பாரு" என்றவன் பேச்சில் கருவிழி சுழற்றி அடித்தது சங்கருக்கு.
"நீ டீப்பா இறங்கிட்டனு தெரியும்.. ஆனா எவ்வளவு டீப்புன்னு இப்ப தான் டா தெரியுது"
"தெரிஞ்சா போதாது.. இத்ஹ் வெறும் சின்ன ரேஞ்ச் தான்.. இதுக்கு அப்புறம் சப் இன்ஸ்பெக்டர்ல இருந்து இன்ஸ்பெக்டர் வரை எல்லாம் எக்ஸாம் தான்.. நான் மட்டும் இல்ல நீயும் பாஸ் ஆகி தான் ஆகணும்.. வந்து இதை பாரு" என்றவன் பேச்சில் கண்ணைக் கட்டிவிட, உள்ளே இழுத்துக் கொண்டான் சத்யா.
"என்ன டி பன்றாங்க இவங்க ரெண்டு பேரும்.. போலீஸ் எக்ஸாம் என்ன அவ்வளவு கஷ்டமா?" தான்யா தான் சத்யா சங்கர் இருவரையும் பார்த்தபடி கேட்க,
"இருக்கலாம்.. ஆனா எவ்வளவு பெரிய மாற்றம் இல்ல? அப்பல்லாம் ரொம்ப கோபமா வந்தது.. இப்படி எந்த எய்மும் இல்லாம காலேஜ்ல என்னை தேடி வந்திருக்காங்களேனு.." அவர்களைப் பார்த்தபடியே தான் பேசினாள் நந்தினியும்.
"அப்போ ஓகே.. அப்ப இப்போ?" என்று கிண்டலாய் தான்யா கேட்க,
"இப்ப என்ன? அதான் அவங்களுக்குன்னு ஒரு எய்ம் இருக்கேன்னு சொல்ல வந்தேன்" என்றவள் பேச்சில் உண்மையும் உன்னையும் எனக்கு தெரியும் என்பதாய் தான்யா பார்க்க, நந்தினி பார்வை முழுதும் சத்யாவிடமே!
தோன்றியதா? தெரிந்ததா? என்று அறியாமல் சட்டென சத்யா திரும்பி நந்தினி புறம் பார்க்க, எதிர்பாராத நந்தினி திகைத்து போனவள் வேறு புறம் திரும்ப மறந்துவிட, அதற்குள் என்ன என தலையை வேறு சாய்த்து கேட்டான் சத்யா.
வேக வேகமாய் ஒன்றும் இல்லை என்பதாய் நந்தினி தலை அசைத்தவள் தான்யா புறம் திரும்ப, சத்தமிட்டு சிரித்துவிட்டாள் தான்யா.
சத்யாவும் அதில் மௌனமாய் புன்னகைத்தவன் தன் வேலையை தொடர, நந்தினியை அவ்வளவு வெட்கப்பட வைத்தாள் தான்யா.
அடுத்த நாள் சத்யா சங்கர் இருவரும் விடுமுறை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட, வாழ்த்தி விடைகொடுத்தனர் நந்தினி தான்யா.
பரீட்சை முடிந்து மாலையே கிளம்பி அடுத்த நாள் கல்லூரிக்கு வர வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு அதைப் போலவே முடிந்ததும் பேருந்தில் ஏறி நடு இரவில் தங்குமிடமும் வந்து சேர்ந்தனர்..
"என்னவோ டென்ஷனா இருக்கு டா.. ஈசி கொஷின் தான்.. நான் தான் இன்னும் கொஞ்சம் நல்லா ப்ரிப்பார் பண்ணி இருந்து இருக்கனும்.. சட்டிஸ்ஃபை ஆகவே இல்ல" சங்கர் இன்னும் புலம்பலை விடாமல் இருந்தான்.
"என்ன டா கூலா இருக்க? உனக்கு பயமா இல்லையா? சாரி சாரி! நீயெல்லாம் பயப்படுற ஆளா? ஆஃபர் லெட்டர் கைக்கே வந்தாலும் அசராம இதே லுக் தான் குடுப்ப" என்றான் அவனே!
"எக்ஸாக்ட்லி மச்சா! அதான் முடிஞ்சுடுச்சே! அப்புறம் என்ன? எழுதியாச்சு.. வர்றது வரட்டும்னு விடுவியா.." என்றவன்,
"ஆமா இந்நேரம் நந்து என்ன பண்ணுவா?" என்று திடீரென மல்லாக்க படுத்திருந்தவன் கேட்க,
"எதே?" என்று எழுந்துவிட்டான் சங்கர்.
"நந்தினி என்ன பண்ணுவானு கேட்டேன்.. எதுக்கு உனக்கு இவ்வளவு ஷாக்?"
"ஏன்டா மனுஷனா நீயெல்லாம்? பகல் பூரா அவளை கண்டுக்காம இவன் லவ் பன்றானா இல்லையானு குழம்ப விட்டு இப்படி அர்த்தராத்திரில அந்த புள்ள என்ன பண்ணும்னு கேட்குறீயே! உன்னயெல்லாம்..." என்று கோபமாய் சங்கர்.
"நேத்து ஏன் அவ என்னை அப்படி பார்த்தா... ஹப்பா! என்ன பவர் தெரியுமா?"
"தெரியும் டா.. தெரியும்.. சும்மாவா சொன்னாங்க லவ் பண்றவன் சாவகாசம் வச்சுக்க கூடாதுன்னு... ஒரு நாளாவது ஒரே மாதிரி இருக்குறியா.. உன் கூட இருந்தா நான் தூங்கின மாதிரி தான்" என்ற சங்கர் பேச்சினூடேயே தலையணை பாய் என எடுத்திருக்க,
"டேய்! டேய்! இரு டா..." என்ன சத்யா சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே,
"நான் லாபிலயே தூங்கிக்குறேன்!" என்று ஓடி இருந்தான்.
சுத்தமாய் தூக்கம் கண்ணா தொடவில்லை சத்யாவிற்கு.. நீண்ட நாட்களுக்கு பின் மீண்டுமாய் இந்த அவஸ்தை.
காதல் கொள்ளை கொள்ளையாய் மனதில் தேக்கி வைத்து கொஞ்சம் அவள்பால் தெளித்த போது மயங்கி நின்றவன், இடைப்பட்ட நாட்களில் அவளோடு வாழ வேண்டிய வாழ்வை குறித்து கூடவே கடமையாய் நினைத்து லட்சயத்திற்கும் பாதை வகுத்து வைத்திருக்க, இன்று மனம் மூளை என எல்லாம் அவளைவிட்டு அகலாமல் சதி செய்து அவனை சித்ரவதை செய்தது.
அந்த ஒற்றைப் பார்வை... முதல் முறை அவளை பின் தொடர்ந்த போது பார்த்த பயந்த பார்வை.. தொடர்ந்து வந்த போது நின்ற கோபப் பார்வை.. முதல் முறை அவளை நிறுத்தி தன் காதலை கூறிய போது புரியாதா உனக்கு என பார்த்த ஆயாசப் பார்வை என அத்தனையும் அத்தனை பிடித்தம் தான் என்ற போதும்,
நேற்று தந்த பார்வையை அவனால் பிரித்தறிய முடிந்தது... அருகில் இருந்து, பின் தொடர்ந்த போது கிடைக்காத ஒன்று, தான் தேடிய ஒன்றை அந்த பார்வையில் முழுதாய் கண்டு கொண்டான்.
இத்தனை நாட்களாய் இல்லாத புது உணர்வொன்று அந்த நொடியே அவனை தாக்கி இருக்க, முயன்று தான் மனதை திசை திருப்பப் பார்த்திருந்தான்.
கண்கள் புத்தகத்தில் இருந்த பொழுதும் நந்தினியின் கண்களை அது பிரதிபலிக்க, சில நிமிட இடைவெளி எடுத்து தங்கள் வாழ்க்கைக்கான அடுத்த கட்டம் என ஒரு நிலைக்கு வந்து அவன் தன் படிப்பை தொடரவே சில நிமிடங்கள் எடுத்தது.
இன்று அப்படி இல்லையே! வந்த வேலையை முடித்து பேருந்தில் ஏறியதும் கண்களை மூடிக் கொண்டவனை தூங்குவதாய் நினைத்து சங்கர் தொந்தரவு தரவில்லை.
ஆனால் அப்போது முதல் இந்த நொடி வரையும் அவன் கண்களுக்குள் புகுந்து கண்களை சிமிட்டிக் கொண்டிருந்தாள் நந்தினி.
உடனே பார்க்க வேண்டும் என்பதைப் போல ஒரு தவிப்பு.. அவளை கைகளுக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்பதை போல ஒரு படபடப்பு.
பாதி இரவில் கனவில் மிதக்க ஆரம்பித்தவன் விடியும் நேரமே கண்களை மூடி சிறு தூக்கத்திற்கு சென்றிருக்க, வந்து எழுப்பிவிட்டான் சங்கர்.
"மனுஷனை நிம்மதியா இருக்க விட மாட்டியா டா நீ?" சத்யா தூக்க கலக்க்கதோடு கேட்டான்.
"இதை நீ சொல்ற பார்த்தியா! எல்லாம் நேரம்.. எப்படி நைட்டு கனவுல மட்டும் நந்தினி கூட டூயட் பாடினா போதுமா? இப்ப காலேஜ் வந்தேன்னா நேர்ல பாக்கலாம்!" என்றவன் பேச்சில் மீண்டும் நந்தினி நியாபகம் அலைஅலையாய் மனதில் பரவ, சிறு புன்னகையும் தொற்றிக் கொண்டது சத்யாவிற்கு.
"என் தலையெழுத்து! இதையெல்லாம் பார்க்க வேண்டி இருக்கு.. எப்ப என்ன பண்ணுவானோன்னு அதுக்கும் நான் தான் பயந்துட்டு இருக்கனும்.." என முணகிக் கொண்டே கிளம்பினான் சங்கர்.
"என்ன ரெண்டு பேரையும் இன்னும் காணும்? லீவ் சொல்லவும் இல்லையே!" என்று வகுப்பு ஆரம்பித்த பின்பும் வராத சங்கர் சத்யாவை தான்யா கேட்க,
"எக்ஸாம் முடிச்சுட்டு லேட்டா வந்திருப்பாங்களா இருக்கும்..? மதியம் வருவாங்க போல!" என்றாள் நந்தினி.
"ஆஹான்! நீ சொன்னா சரி தான்!"
"ப்ச்! சும்மா இரு டி.
எப்ப பாரு கிண்டல் பேசிகிட்டு.. லேப் போகணும்.." என்று பேசிக் கொண்டிருக்க, சங்கர் உள்ளே நுழைந்தான் சத்யாவோடு.
"வந்தாச்சா? இப்ப தான் காணுமேன்னு கேட்டுட்டு இருந்தேன்.. எக்ஸாம் எப்படி பண்ணீங்க? ஓகே ஆகிடுமா?" என்ன தான்யாவே பேச,
"அதை ஏன் கேட்குற.. நல்லா எழுதின மாதிரியும் இருக்கு.. இல்லாத மாதிரியும் இருக்கு.. ரிசல்ட் வர்ற வரை டென்ஷன்லேயே தான் இருக்கனும் போல!" என்றான் சங்கர்.
"நல்லா எழுதாதவன் தான் எழுதலைனு போயிடுவான்.. எழுதி இருந்தா தான் இந்த குழப்பம் எல்லாம் வரும் விடுங்க பார்த்துக்கலாம்!" என்று இருவரும் பேசிக் கொண்டிருக்க,
வகுப்பில் நுழைந்தது முதல் நந்தினியை மட்டுமே சத்யா பார்த்து நிற்க, நந்தினி தான் அதை எதிர்கொள்ள முடியாமல் அங்கும் இங்குமாய் பார்த்தபடி நின்றாள் நெஞ்சம் படபடக்க.
'கொஞ்ச நாள் கோமால இருந்தாங்களா என்ன? எதுக்கு இப்படி பாக்குறாங்க.. எல்லாரும் பார்ப்பாங்க தான?' என நினைத்தாலும் அதை அவனிடம் சொல்லிட முடியவில்லை.
"ஏன்டா இப்படி பாத்து வைக்குற.. உன்னோட அக்கப்போரா இருக்கே!" சத்யாவை கவனித்த சங்கர் கூற,
"என் நந்தினியை நான் பாக்கறேன்.. எவன் கேட்பான்.." என்றான் வெகு இயல்பாய்.
"நல்லவேளைக்கு என் பொண்டாட்டினு சொல்லாம விட்ட!" என்று கூறவும்,
"ஏன் சொல்ல மாட்டேனா? அது தான உண்மை.. அவ என்..." என்று கூற வர, அவன் வாயை மூடி விட்டான் சங்கர்.
"உலகம் தாங்காது டா.. அநியாயம் பண்ணாம உட்காரு.." என்று கூற,
"என்னவாம்?" என்று கிண்டலாய் கேட்டாள் தான்யா.
"வேப்பிலை அடிச்சா கூட தெளியுமானு தெரியல.." என்றவன் பதிலில் தான்யா நந்தினியைப் பார்க்க, முகம் சிவந்தவள் வேறு பக்கமாய் திரும்பிக் கொண்டாள்.
தொடரும்..