• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 16

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 16

"எப்பவும் இதே வேலையா வச்சிருந்தா நான் என்ன தான் பண்றது.. எங்களுக்குன்னு கடைசில ஒன்னும் இல்லாம தான் நிக்கணும் போல.. எங்கேருந்து தான் எனக்குன்னு வாய்க்குதோ!" சத்தமாகவே ஜெயா புலம்பியபடி ஹாலில் அமர்ந்திருக்க, அதை கேட்டும் கேளாதவராய் சமையலறையில் நின்றார் விஜயலக்ஷ்மி.

"அவ என்ன சின்ன பொண்ணா? பேசாம கல்யாணத்தயாவது அப்பவே முடிச்சு வச்சிருக்கலாம்.. மறுபடியும் படிப்பு செலவு வேற! எல்லாம் என் நேரம்!" புலம்பல்கள் தொடர,

"இந்தா ம்மா ஜூஸ்!" என கொண்டு வந்து நீட்டினார் விஜயலக்ஷ்மி.

"என்னை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு? லூசு மாதிரி புலம்புறானு நினைப்பா?" என்று நேராய் மாமியாரிடம் கேட்க,

"முதல்ல இதை குடி ஜெயா.. இவ்வளவு கோபம் புள்ளைக்கு ஆகாது!" என்றார் அவ்வளவு மென்மையாய்.

"எங்க என்னைய நிம்மதியா இருக்க விடுதிங்க.. நீங்களும் உங்க பொண்ணும் இருக்குற வரை எனக்கு நிம்மதி கிடைச்சிருமா?" என்று பேச, அமைதியாகவே நின்றார் விஜயா.

"ம்மா!" என்ற மகனின் சத்தம் கேட்க, சட்டென தன் முகத்தை மாற்ற முயற்சித்து ஜூசை கையில் வாங்கிக் கொண்ட ஜெயா அதை பருகியபடி இருக்க, உள்ளே நுழைந்தான் ஜீவன்.

"வாப்பா!" என்று மட்டும் கூறி புன்னகைக்க, அவரைப் பார்த்தவன் தன் மனைவியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

"கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாங்க ம்மா" என்றான்.

"ஜூஸ் குடிக்குறிங்களா?" என்று ஜெயா கேட்க,

"ம்ம்ஹ்ம்ம்!" என்று தலையசைத்து சோபாவில் சாய, தண்ணீருடன் வந்துவிட்டார் அன்னை.

"அந்த இடம் சரி வராதும்மா.. பையன் நல்லவனா தான் இருக்காங்க.. ஆனா பேமிலி சரி இல்ல.. அதான் போன் பண்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்" என்று கூற, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த விஜயலக்ஷ்மியும்,

"சரிப்பா!" என்றுவிட்டார் உடனே.

"ப்ச்! அமைஞ்சிடும் நினச்சேன் ம்மா!" என்று கூற,

"எப்ப யாருக்கு என்னனு எழுதி இருக்கோ! இன்னும் அவ படிப்பை முடிக்கலையே.. பாத்துக்கலாம் ப்பா!" என்று கூற, அவனும் தலையசைத்தான்.

சரி என்று தன் அறைக்குள் அவர் சென்றுவிட, "ஸ்டேஷன் போகலையாங்க?" என்றாள் ஜெயா.

"போகணும்!" என்றவன் அங்கேயே கண்களை மூடி அமர்ந்துவிட, சில நிமிடங்கள் பார்த்தவள் பின் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

எப்போதாவது அதிக அலைச்சல் இல்லையெனில் அதிக வேலை இருந்தால் மட்டுமே இப்படி ஒரு வார்த்தை பதில் மௌனம் என ஜீவன் இருப்பான் என்பதால் பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் அவள் சென்றுவிட, கண் விழித்தவன் அன்னை அறைக்கு சென்றான்.

"என்ன ஜீவா எதாவது வேணுமா?" துணிகளை மடிக்க எடுத்தவர் மகன் அறைக்குள் வரவும் வேகமாய் கேட்க,

"என்னம்மா நடக்குது இங்க?" என்றான் முகத்தினில் எதையும் காட்டிடாமல்.

"இங்கயா? என்ன ஜீவா? எதை கேட்குற?" என்றவருக்கு நிஜமாய் புரியவில்லை.

"ம்மா! நிஜமா சொல்லுங்க.. ஜெயா உங்ககிட்ட எப்படி நடந்துக்குறா?" என்று கேட்கவும் திக்கென்று ஆனது.

முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை நொடியில் மறைத்தவர் "இதென்ன டா கேள்வி? அதுவும் வருஷம் கடந்து?" என்று கேட்க, அந்த வார்த்தை இன்னுமாய் மகனை தைத்தது.

ஜீவன் பார்த்துவிட்டான்.. அன்னை முகத்தில் வந்து சென்ற மாறுதலை கவனித்துவிட்டான்.

மௌனமாய் என்றாலும் அன்னையை மட்டுமே பார்த்து நிற்க,

"என்ன ஜீவா புதுசா இதென்ன பார்வை? நான் என்ன பொய்யா சொல்ல போறேன் உன்கிட்ட?" என்றார் சாதாரணம் போல.

"நான் கேட்டேன் மா.. நான் வீட்டுக்கு வந்து கால் மணி நேரம் ஆச்சு" என்றான் அப்போதும் அமைதியாய்.

"என்ன என்ன கேட்ட?" உள்ளத்தின் படபடப்பு கூட தான் செய்தது மகன் பேசியதில்.

என்ன மாதிரியான நேரம் இது? ஜெயாவை இவன் பார்த்துக் கொள்ள வேண்டிய நேரம் என்று மட்டும் இல்லாமல் பொதுவாகவே கணவன் மனைவி இருவருக்கும் சண்டை வர கூடாது என விலகி செல்பவர் இன்றும் இந்த பேச்சை வெட்டி விட தான் நினைத்தார்.

"ம்மா!" என்றவன் அழைப்பு அவன் என்ன கேட்டானோ என பதட்டம் கொள்ள வைக்க, அதை மறைத்தவர்,

"என்ன டா பேசிட்டு இருக்க? நானும் ஜெயாவும் தான் இவ்வளவு நேரமும் டிவி பார்த்துட்டு இருந்தோம்.. தொண்டை வறண்ட மாதிரி இருக்கு சொன்னா அதான் ஜூஸ் போட்டு குடுத்தேன்.. அவளுக்கு முடியலை இல்லைனா அவளே ரெண்டு பேருக்கும் எடுத்துட்டு வந்திருப்பா" என்று கூற,

"யாரை மா காப்பாத்துறீங்க? நான் கேட்டேன் என் காதால? நிம்மதி இல்லைனு சொல்றா அதுவும் நீங்களும் நந்தினியும் தான் காரணம்னு சொல்றா.. நீங்க நான் கேட்டும் எதுவும் சொல்ல மாட்டறீங்க?" என்று கேட்டவனுக்கு, வீட்டை கவனிக்க தவறிய குற்ற உணர்வு.

"ஜீவா! என்ன நீ? இவ்ளோ தானா? நானும் என்னவோ எதோனு நினச்சுட்டேன்.. மாசமா இருக்கப்போ இப்படி தான் டா மனசு மாத்தி மாத்தி யோசிக்கும்.. இதை போய் பெருசா பேசிகிட்டு.."

"ம்மா!"

"ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ! நம்ம வாரிசு அவகிட்ட இருக்கு.. நீ அவளை எவ்வளவு சந்தோசமா பார்த்துக்குறியோ அவ்வளவு நல்லது நம்ம வம்சத்துக்கு.. இதெல்லாம் சகஜம் மாசமா இருக்க சமையத்துல.. அவளை எதாவது கேட்டு வைக்காத.. போ போய் அவளைப் பாரு!" என்றவர்,

"துணி இன்னும் மேல கிடக்குது.. நான் போய் எடுத்துட்டு வர்றேன்.." என்று சென்றுவிட, அன்னை தன் கண்களைப் பார்த்து பேசாத போதே அணைத்தும் புரிந்தாலும் அவர் கூறிய உண்மையும் சுட்டது.

மேலே வந்த விஜயலக்ஷ்மிக்கு மகன் கேட்டுவிட்டேன் என்று கூறியதே நெஞ்சடைக்கும் போல வந்தது.

அனைத்தையும் சொல்லி விடலாம் தான்.. ஆனால் சொல்லி? நிச்சயம் அதில் நல்லது எதுவும் விளைய போவதில்லை. ஜெயா மாறுவது எல்லாம் நடக்காத காரியம். அனுசரித்து போனால் கூட மகன் பேரன் பேத்தி என்று முகம் பார்த்து காலத்தை தள்ளிக் கொள்ளலாம் என்று தான் தோன்றியது.

ஆனாலும் மகன் இனி அமைதி மியை இருக்க மாட்டான். நிச்சயம் அவனின் ஒரு கண் இனி வீட்டில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.. அதற்கு ஏற்றார் போல இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

நூறு சதவிகிதம் தான் கேட்டது பொய் இல்லை என்று உணர்ந்தவன் அதில் தான் கவனிக்க தவறிய பெரும் குற்றம் நெருப்பாய் சுட்டது ஜீவனிற்கு.

இந்த வேளையில் ஜெயாவை ஏதேனும் கேட்டுவிடவும் முடியாது.. ஆனாலும் அவள் கூறிய வார்த்தைகள்... என் அம்மாவும் தங்கையும் இருப்பதால் நிம்மதி இல்லையா இவளுக்கு என நினைத்தவனுக்கு மனைவி மேல் அத்தனை கோபம்.

வந்ததும் கேட்டு விடலாம் என்று தான் நினைத்தான்.. ஆனால் இது எத்தனை நாட்களாய் நடக்கிறது.. தான் எங்கிருந்து கவனிக்க தவறினோம் என்று அவன் பார்க்க நினைக்க, மொத்தமும் தன் மனைவியானவள் தவறு என்பதை விரைவில் புரிந்து கொள்ளும் தருணம் வர இருக்கிறதே!

அதன்பின் அன்னையிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.. மகன் தான் கூறியதை நம்பிவிட்டதாய் நினைத்தார் தாய். அவன் கணக்கை அவர் அறியவில்லை.

எட்டாம் மாதங்கள் தொடங்க இருந்தது ஜெயாவிற்கு. இன்னும் ஆறு ஏழு மாதங்களில் நந்தினிக்கும் கல்லூரி முடிந்துவிடும்.. அதற்குள் நல்ல வரன் ஒன்றை தங்கைக்கு பார்த்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான் ஜீவன்.

அந்த ஒரு நாளுக்கு பின் மனைவியிடம் நிறையவே வித்யாசங்களை தெரிந்து கொண்டான் ஜீவன். 'இதெல்லாம் இந்த மாதிரி நேரத்துல சகஜம் பா' என அவன் பார்வைக்கே விளக்கம் கொடுத்தார் அன்னை.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் ஜீவன் வீட்டிற்கு வரும் நேரம் மிகவும் சோர்வாய் அமர்ந்திருந்தாள் ஜெயா.

அதிகப் பேச்சுக்கள் மனைவியிடம் இல்லை.. கூடவே பணிச் சுமை வேறு அதிகமாய் இருந்த நேரம் என்பதால் வீட்டில் எப்போதாவது தான் காண முடிந்தது அவனை ஜெயா.

"என்னாச்சு?" என்று ஜீவன் கேட்க

"என்னவோ அடி வயித்துல இருந்து புரட்டுது.. எழுந்துக்கவே முடியலை!" என்றவளுக்கு நிஜமாய் அன்று முடியவில்லை.

"ஓஹ்!" என்றவன் சிந்தனையில் இருக்க,

"என்னங்க வலிக்குதுன்னு சொல்றேன்.. அமைதியா இருக்கீங்க?" ஜெயா கேட்க,

"நிஜமாவே வலிக்குதா?" என்றான் சட்டென்று.

தன் வாரிசு எவ்வளவு முக்கியம் என்பதை அவனும் உணர்ந்தே இருந்தான்.. அன்னையும் அதை சொல்லி தானே அவளிடம் எதுவும் கேட்காதே என்றது.. எனவே இதுவரை அமைதியாய் இருந்தவன் இப்படி கேட்க,

"என்ன கேள்வி இது? நிஜமா வலிக்குது.." என்றாள் வயிற்றை தடவியப்படி..

அன்னையும் ஒரு கஷாயத்தை கலந்து உள்ளே நுழைந்தவர் "நீ எப்ப வந்த ஜீவா?" என்றுவிட்டு,

"சூடு வலி தான்.. சரியாகிடும்!" என்று மருந்தை புகட்ட, அவளும் பேசாமல் குடித்து முடித்தாள்.. சில நிமிடங்கம் எடுத்தது அவள் வலி குறைய.

"இப்ப பரவால்லையா ஜெயா?" விஜயா கேட்க,

"ம்ம்ம்! பரவால்லை" என்றாள்.

"ம்மா! தமிழ் மாசத்துக்கு நெக்ஸ்ட் மந்த் வளைகாப்பு பண்ணனும்ல?" என்று கேட்க,

"ஆமா டா! இன்னும் ரெண்டே மாசத்துல உன் கையில ஒரு குட்டி ஜெயாவோ ஜீவாவோ இருப்பாங்க" என்று புன்னகைத்தார்.

"ம்ம்!" என்றவனுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும் அதை காட்டிட முடியவில்லை.

"இன்னைக்கு எனக்கு இனி ரெஸ்ட் தான்.. கிளம்பு உன் வீட்டுல ட்ரோப் பண்றேன்!" என்றான் நேராய் ஜெயாவிடம்.

அவள் அதிர்ந்து பார்க்க ல, அதற்கு மேல் அதிர்ந்தது என்னவோ விஜயலக்ஷ்மி தான்.

"என்ன டா திடீர்னு?" என்றார் ஜெயாவை முந்திக் கொண்டு.

"ம்மா! இந்த மாதிரி நேரத்துல அம்மா அப்பா கூட இருக்கனும்னு தோணும்னு சொல்லுவாங்க.. இவ அம்மாவும் இவளை பாக்கனும்னு நினைப்பாங்க இல்ல? கொஞ்ச நாள் அங்க இருக்கட்டும்.. இன்னும் நாலு நாள்ல நந்தினிக்கு வேற பத்து நாள் லீவ் வருதாம்.. நீங்க அவளை கவனிங்க" என்றுவிட்டான்.

அவ்வளவு தான்.. ஏற்கனவே செல்ல விருப்பம் இல்லாதவளுக்கு கணவனை அவன் தாய்க்கும் தங்கைக்கும் நடுவில் விட்டுவிட்டு இங்கே என்ன நடக்கிறது என தெரியாமல் அங்கே போய் இருக்க சுத்தமாய் விருப்பம் இல்லை..

"நான் எங்கேயும் போகல. வளைகாப்பு முடியட்டும்.. எனக்கு உங்களை விட்டு போக முடியாது!" என்றாள் இறுக்கமாக முகம் வைத்து ஜெயா.

"நான் உன்கிட்ட கேட்கல.. சொன்னேன்.. கிளம்புன்னு சொன்னேன்.. நானே கூப்பிட வருவேன்... அப்ப வந்தா போதும்" என்று கட்டளையாய் அவன் கூற, இதுவரை தன்னிடம் இப்படி பேசி அறியாத கணவனை கூர்ந்து பார்த்தவளுக்கு ஆசான் முகத்தில் இருந்து எதையும் கணிக்க முடியவில்லை.

ஆனாலும் அவன் கோபமாய் இருப்பது ஓரளவு புரிய... ஒரீரண்டு நாட்களில் அவனே வரும்படி செய்திட வேண்டும் என நினைத்தபடி உள்ளே சென்றாள்.

"என்ன டா நினைச்சுட்டு இருக்க? நான் அவ்வளவு சொல்லியும் நீ ஜெயாவை சந்தேகப்படுறியா? அவளை
அனுப்பிட்டு தான் நீ உன் அம்மா தங்கச்சி கூட சந்தோசமா நேரத்தை செலவழிக்க முடியுமா?" என கோபமாய் கேட்க,

"நிச்சயமா உங்க மகன் அவ்வளவு மோசமா யோசிக்குறவன் இல்லை ம்மா.. என் பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிட்டு தான் நான் என் அம்மா தங்கைனு சந்தோசப்பட்டுக்கணும்னு நினைக்கவே மாட்டேன்.. நீங்க தானே அவ கஷ்டப்படக் கூடாது இந்த நேரம்நஹ் சொன்னிங்க.. என் புள்ள வெளில வரட்டும்.. அப்புறம் பார்த்துக்குறேன்" என்றவன் பேச்சின் தீவிரத்தில் விஜயலக்ஷ்மியே அரண்டு போனார்.

தொடரும்..
 
  • Love
Reactions: Durka Janani