• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 27

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 27

"உன் அண்ணனுக்கு சந்தேகம் வந்து வெளில விசாரிச்சு.. இதெல்லாம் தேவையா? இதுல உனக்கு மாப்பிள்ளை வேற தேடி!..." என்றவன், உஃப்... என காற்றை இழுத்து விட, அது பலமாய் தாக்கி நின்றாள்.

"முன்னவாச்சும் என் அம்மா அப்பாக்கு புள்ள, இந்த காலேஜ் ஸ்டுடென்ட்னு சொல்லிகுறதுக்கு தவிர வேற ஒன்னும் இல்ல.. ஆனா இப்ப என்னோட ஐடின்ட்டியே வேற! இப்பவும் நான் பேசாம இருந்தா தான் தப்பு.. எனக்கு வேணும்னா நான் தான கேட்கணும்.. எனக்கு வேணும் நான் கேட்டேன்.. உனக்கு வேணும்னா அவங்க கேட்கும் போது சொல்லு!" என்றவன் அவ்வளவு தெளிவாய் கூற, இமைக்க மறந்து பார்த்திருந்தாள் நந்தினி.

இப்பொழுதே கைகள் நடுங்கும் போல இருக்க, "நிஜமாவே உன் அண்ணா எதுவுமே கேட்கலையா?" என மீண்டும் சத்யா கேட்க, அப்பொழுது தான் உறுதியானது நந்தினிக்கு சத்யா தன் அண்ணனிடம் தான் பேசி இருக்கிறான் என்று.

இல்லை என தலையாட்டியவள், "எப்ப நடந்தது?" என்று கேட்க, அவள் குரல் வெளி வரவே இல்லை. சத்யாவிற்கே பாவமாய் இருந்த போதும் எத்தனை நாட்களுக்கு இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் என்று தோன்ற, இளகாமல் நின்றான்.

"ரெண்டு நாள் முன்னாடி.. நைட் தற்சயலா தான் மீட் பண்ணினேன்.. ஆனா அப்பவே பேசிடறது நல்லதுனு தோணுச்சு.. பேசிட்டேன்.. உன் அண்ணா ஷாக் எல்லாம் ஆகவே இல்லை.. கெஸ் பண்ண மாதிரி ஹி க்னோஸ்!" என்று கூற, அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

அத்தனை பலவீனமாய் உணர்ந்தாள் நந்தினி தன்னை தானே!

"நந்தினி! சில விஷயம் கேட்க கஷ்டமா இருந்தாலும் உண்மை தான? அதை ஒத்துக்கோ..இப்படி இருக்காத!" அவள் நிலை காண சகியாமல் சத்யா கூற, அசையவே இல்லை அவள்.

எத்தனை ஆசையாய் வளர்த்தார்கள்? எத்தனை நம்பிக்கை என் மீது வைத்திருப்பார்கள்? அண்ணி வந்த பின் சில மாறுதல் என்றாலும் அண்ணனின் அன்பில் துளி மாற்றமும் இருந்தது இல்லையே?

என்னை என்ன என்னவெல்லாம் நினைத்திருப்பார்கள்? என எண்ணம் முழுக்க நந்தினிக்கு அங்கேயே இருக்க, தன் முன் சொடுக்கிட்டு அவளை கலைத்தான் சத்யா.

"நீ இப்படிலாம் இருந்து என்னை ஒரு மாதிரி பீல் பண்ண வைக்காத! நான் லவ் பண்றேன்.. எனக்கு வேணும்னு தான் நான் உன் அண்ணன்கிட்ட பேசினேன்.. உன்னை பத்தி எனக்கு தெரியாதே! என்கிட்ட எப்பவாச்சும் என்னைப் பிடிக்கும்னு சொன்னியா என்ன?" என்று கேட்டவன் குரலில் மெல்லிதான காரம்.

"நான் கிளம்புறேன்!" என எழுந்து கொண்டாள்.

"நீ உன் அண்ணன்கிட்ட என்னை வேண்டாம்னு கூட சொல்லிக்கோ! ஆனா அடுத்து என் கண்ணுல பட்டுடாத!" இவ்வளவு சொல்லியும் கோபமாய் கிளம்புபவள் மீது கோபம் கொண்டு சத்யா கூற,

"என்ன என்ன? என்ன வேணும் உனக்கு? விட்டா ரொம்ப பேசுற? என் அம்மா அண்ணா பத்தி என்ன தெரியும் உனக்கு? ஊருக்குள்ள கேட்டா மரியாதையானவங்க.. அவ்வளவு தான்.. ஆனா எனக்கு எல்லாம். எல்லாமே அவங்க.. என்கிட்ட பிரண்ட் மாதிரி பழகுறவங்க.. அவங்ககிட்ட போய் நான்...." என்று திரும்பி வந்த வேகத்தில் கோபமாய் பொறியா, அசையாமல் நின்றுவிட்டான் அவள் பேச்சில் சத்யா.

"ஈசியா சொல்ற.. நான் சொல்லிட்டேன் உனக்கு வேணும்னா சொல்லுன்னு.. என்ன பஞ்சு மிட்டாயா கேட்க போறேன்.. அவங்களுக்கு எவ்வளவு ட்ரீம் இருக்கும் பெத்து வளர்த்த பொண்ணு மேல? அதெல்லாம் நான் யோசிச்சா அது தப்பா? தப்புன்னா அப்படி தான் யோசிப்பேன்.. என்ன செய்வ?" என்று கேட்க,

அவள் பேச பேச நிச்சயம் அவள் காதலை அவள் வீட்டில் கூற போவதில்லை என முடிவுக்கே வந்து முறைத்து நின்றவனுக்கு நந்தினி இவ்வளவு பேசுவதும் இது தான் முதல் முறை என்ற நினைவும் சுட, இடை வராமல் பேசவிட்டு நின்றான்.

"நீயா முடிவு பண்ணுவியா நான் இப்படி தான்னு? எனக்கு வேணும்னா நான் தான் கேட்கணும்னு எனக்கு தெரியாதா? ஆனா அதுக்கான நேரம்னு ஒன்னு இருக்குல்ல? நீ பையன்.. என் அண்ணனை போற போக்குல பாத்த.. பேசனும் தோணவும் பேசிட்ட.. நானும் வீட்டுல போய் பேக்'க கழட்டி வச்சுட்டு பேசிற முடியுமா? நீ சொன்னதும் எனக்கு ஷாக் ஆக கூடாதா?" என்று கேட்க கேட்க, முறைக்கும் பாவம் சென்று ஆச்சர்யத்துடன் சத்யாவின் இதழ்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிய தொடங்கியது.

"நீயா பின்னாடி வருவ, பேசுவ, காலேஜ் ஜாயின் பண்ணுவ.. திடீர்னு கோபப்படுவ, திடிர்னு பாசமா பாப்ப, திடிர்னு உனக்கு என்கிட்ட பேச தோணும்.. உனக்கு என்னலாம் தோணுதோ அதை எல்லாம் செய்வ.. அதுல நானும் இருக்கேனேனு என்னைக்காவது என்கிட்ட ஒத்த வார்த்தை கேட்டியா ஏன், எப்படி, எதுக்கு, செய்வோமா, வேண்டாமானு? நீயா பண்ணிட்டு வந்து நீ என்ன வேணா பண்ணிக்கனு சொன்னா? எனக்கு கோபம் வராதா? இதுல உனக்கு கோபம் வேற வருதா?" என்று கேட்டவளுக்கு மூச்சு வாங்க, அமைதியாய் பார்த்து நின்றவண் தண்ணீரை எடுத்து நீட்டினான்.

முறைத்தபடி அதை வாங்காமல் நின்வளை, "குடி மா!" என்றவனை இன்னும் பார்வையால் வதம் செய்துவிட்டு பிடுங்கி தான் குடித்தாள்.

"ஹும்" அவ்வளவு தானா இன்னும் இருக்கா?" என்றவன் கேள்விக்கு அவன் புறம் திரும்பாமல் நிற்க,

"எப்பப்பா! நந்து என்ற நந்தினி தானா? என்னா கோவம்? நான் கூட சைலன்ட்டான பொண்ணுன்னு நினச்சேன்!" என்று கிண்டல் செய்ய, இன்னும் கோபம் அடங்காமல் நின்றாள்.

"ஓகே சரண்டர்! கொஞ்சம் அதிகமா தான் பேசியிருக்கேன்னு உன் பேச்சுல ம்ம்ஹும்ம் உன் கோபத்தில எனக்கு தெரியுது.. ஆனா என்ன சொன்ன? உன்னை கேட்காம நானா முடிவெடுத்தேனா?" என்று கேட்க,

"ஆமா! எப்ப என்ன யாருகிட்ட பேச போறனு எப்பவாச்சும் சொல்லி இருப்பியா?" என்று கேட்க,

"மேடம்! அதுக்கு என் லவ்வை நீங்க அக்செப் பண்ணி இருக்கோணும்.. அப்புறம் உங்க லவ்வை என்கிட்ட சொல்லி இருக்கோணும்" என்றவன்,

"எப்படி? முதல்ல தோண்டோனும்..." என்று கிண்டலாய் உதட்டை வளைத்து கூற, வாயடைத்து போனாள் நிதர்சனம் உணர்ந்து.

கோபங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிட, முகத்தை எங்கே ஒளித்துக் கொள்வது என தெரியாமல் விழித்தவளை அழகாய் ரசித்து நின்றான் சத்யா.

"ஓகே! இவ்வளவு நாள் பண்ணின தப்புக்கு எல்லாம் சாரி! இப்ப சொல்லு.. நான் என்ன பண்ணனும்?" என்று சத்யா கேட்க,மீண்டும் வீட்டின் நியாபகம் நந்தினிக்கு..

"தெரியல! அதான் எல்லாம் பண்ணியாச்சே!" என்றாள் கவலையாய்.

"சாரி நந்தினி" என்றவன் வருத்தப்படுகிறானோ என அவள் பார்க்க,

"உன் சிட்டுவேஷன் எல்லாம் புரியுது.. கஷ்டமா தான் இருக்கு.. ஆனா அதுக்கும் மேல எனக்கு இப்ப சந்தோசமா இருக்கு.. அதனால சிரிக்கனும்னு தோணுது.. இப்ப தானே என்கிட்ட கேட்டு செஞ்சியானு கோவமா கேட்ட.. இப்ப கேட்குறேன் சொல்லேன் நான் சிரிக்கவா?" என்று கேட்க,

"உன்ன!" என்றவள் கீழே குனிந்து அங்கும் இங்கும் என எதையோ தேடி எடுத்து அவனருகே வர,

"இன்னும் இன்னமும் சந்தோசமா இருக்கே!" என்றவன் எழுந்து ஓட தயாராக, வந்துவிட்டனர் தான்யா சங்கர்.

"என்ன டா நடக்குது இங்க?" என்று சங்கர் ஆச்சர்யமாய் பார்த்ததை வைத்து கேட்டான் என்றால்,

"அடிப்பாவி!" என பார்த்து நின்றாள் தான்யா.

'அய்யோ!' என்ற நந்தினி புத்தகத்தைக் கொண்டு முகம் மறைக்க,

"இவங்க டிஸ்டர்பா இருக்காங்களா நண்டினி.. அனுப்பிடவா?" என்று புன்னகையுடன் சத்யா கேட்க,

"சும்மா இரு!" என நந்தினி உதடசைத்து கண்களால் மிரட்ட,

"அவங்க ரெண்டு பேருமே மானஸ்தர்கள் தான் நண்டினி!" என மீண்டு அவன் வம்பிழுக்க, 'வந்திருக்க கூடாதோ' என நினைத்தவர்கள் மயங்கி விழாதது தான் குறை தான்யாவும் சங்கரும்.

"அடேய் அடேய்! சும்மாவே ஆடுவ.. இனி உன் அக்கப்போர் தாங்காதே டா!" என சங்கர் புலம்ப,

"என்ன டி பூனைக்குட்டி வெளில வந்துடுச்சு போல!" என தான்யா ரகசியம் பேச, 'ஷ்ஷ்' என அடக்கி தான்யாவை கூட்டிக் கொண்டு சென்றாள் நந்தினி.

"மச்சா!" என சத்யாவோடு சங்கர் கைகோர்த்து ஆரவாரம் செய்ய, சத்யாவின் முகத்தில் பொங்கி வழிந்தது காதலும் சந்தோசமும்.

தொடரும்..