• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 28

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 28

"இவ்வளவு தைரியம் எப்படி டா உனக்கு? மனுசனா நீ எல்லாம்? இப்படிலாம் எவனுக்கும் பயப்பட மாட்டேன்னு இருக்காத.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரனுக்கு எதிரிங்க எங்குட்டு வேணா வருவாங்க.. நாம அதுல தான் வாழ்க்கைய கொண்டு விட்ருக்கோம்.. அதனால கொஞ்சமாச்சும் பயம் பொறுப்புன்னு எல்லாத்தையும் எடுத்துக்க பழகு முதல்ல.. இப்ப நாம தனி ஆளு தான்.. ஆனா கல்யாணம்னு ஒன்னு ஆகி ஒரு பொண்ணு உன்னை நம்பி வரும் போது அவளுக்குன்னு நீ தான் உலகமா இருப்ப.. அதுவும் அந்த பொண்ணு நந்தினினா.. நீ பார்த்து பார்த்து ரசிச்சு ரசிச்சு கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு.. வேலை எவ்வளவு முக்கியமோ அதைவிட பல மடங்கு குடும்பமும் முக்கியம்.." சங்கர் மிக தீவிரமாய் அறிவுரை கூறிக் கொண்டு இருந்தான் சத்யாவிற்கு.

"இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படி அறுத்துட்டு இருக்க நீ?" என்றான் பிடிக்காதவனாய் சத்யா.

"அறுக்குற மாதிரி இருக்கா உனக்கு? டேய் மச்சா! சீரியஸா ஒன்னு சொல்றேன் கேளு.. நான் எப்படிப்பட்ட போலீஸ்காரனா இருப்பேன்னு எனக்கு தெரியாது தான்.. ஆனா ஸ்ரீதர் சந்தியா விஷயத்துல நான் பாத்துட்டேன் உன்ன.. நீ எப்படி வர போறனு என்னால கெஸ் பண்ண முடியுது.."

"சோ?"

"இப்படி எல்லாத்துலயும் கெத்தா தான் இருப்பேன்னு மெய்ன்டைன் பண்ண முடியாது டா.. என்ன தைரியத்துல நீ நந்தினி அண்ணன்கிட்ட போய் பேசின?" என்றான் நேராய்.

"அதுக்கு தைரியம் வேணுமா என்ன? எப்பனாலும் ஒரு நாள் தெரிய போறது தான? இதுல அவ வேற இருக்கு ஆனா இல்லனு பாட்டு பாடுறா.. மாப்பிள்ளை தேடுறதா பேசிக்குறாங்க.. வேற என்ன பண்ண சொல்ற என்ன?" என்றான் சத்யா.

அவன் பக்கமும் நியாயம் இருப்பதாய் தெரிந்தாலும் இப்படி எடுத்ததும் ஜீவனின் முன் சென்று நின்றிருக்க வேண்டாமோ என தான் தோன்றியது சங்கருக்கு.

"இனி மாப்பிள்ளை பாக்க எப்படியும் யோசிப்பாங்க இல்ல.. கூடவே இப்ப எனக்கு என்ன குறை?" என்று சத்யா கேட்ட விதம் வேறு சங்கர் மனதை உறுத்தியது.

அழகில் சத்யாவிற்கு என்று எந்த குறையும் கூற முடியாது சரி.. இப்போது வேலையும் கிடைத்திருப்பது சிறிய அளவிலான போஸ்டிங் என்றாலும் அவன் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது..

எல்லாம் நியாயம் தான் என்றாலுமே என்ன நம்பிக்கையில் தன்னிடமும் கூறாமல் தனியாக சென்றான் என்பதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஜீவன் நல்லவன் தான்.. கோபக்காரன்.. கடும் கோபக்காரன்.. இவன் பேசும் விஷயம் அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் யோசிக்கவே மாட்டான் சட்டென கைவைத்து விடுவான்.. அதோடு நிற்குமா.. சத்யா மட்டும் என்ன? பதிலுக்கு அவனும் மல்லுக்கு நின்றிருப்பானே என நினைக்க,

"இன்னும் ஏன் டா பேயரைஞ்சா மாதிரி நிக்க?" என உலுக்கினான் சத்யா.

"நீ என்ன சொல்லு.. தனியா போயிருக்க கூடாது அவ்வளவு தான்.. ஆமா என்ன சொன்னன் உன் மச்சான்? அதையும் சொல்லு.. எனக்கு தெரியணும்.. பெர்சனல்னு சொல்ல மாட்டேன்னு எல்லாம் நீ சொல்ல முடியாது.. பெர்சனல்னாலும் பரவால்ல சொல்லு" என்று கேட்க, அவன் பயத்தில் அதிகமாய் சிரித்தான் சத்யா.

"உனக்கு ஏன் டா இவ்வளவு டென்ஷன்? என் luvவை கேட்டு நந்தினி அண்ணனே இவ்வளவு டென்ஷன் ஆகல!"

"ஏன் ஏன் ஏன்? ஏன் டென்ஷன் ஆகல?" என அதையும் கலவரமாய் சங்கர் கேட்டான்.

நந்தினியிடம் கூறியதை போல ஜீவனிற்கு ஏற்கனவே சந்தேகம் வந்திருக்கலாம் என தனக்கு தோன்றியதை கூறி, "அதுக்கும் மேல இவ்வளவு வந்த அப்புறம் வேற எவனாச்சும் போய் என்னையும் நந்தினியையும் தப்பா அவ அண்ணன்கிட்ட சொன்னா நல்லா இருக்குமா? அதான் நானே பேசிட்டேன்!" என்றான் கூலாய்.

"அதுக்கு இது தான் வழியா? ஏன் உன் அப்பா அம்மாவை போய் பொண்ணு கேட்க சொல்ல வேண்டியது தான?" கடுப்பாய் மட்டுமே சங்கர் கேட்க,

"அதுவும் யோசிச்சேன் டா!" என கூறி நெஞ்சில் தீயள்ளி வீசினான் சத்யா.

"என்ன சொல்லற?"

"அம்மா அப்பாவை போக சொல்ல ஒரு நிமிஷம் ஆகுமா? கையில மட்டும் அப்பொய்ன்மெண்ட் ஆர்டர் இருந்துருக்கணும்... சீனே வேற மாதிரி இருந்திருக்கும்.. அதுக்கு தான் குறைஞ்சது மூணு மாசம் ஆகுமே! அதுக்குள்ள வீரபாகுகிட்ட இதை சொல்லி ஏன் அவரையும் மலை ஏத்தணும் யூ தான் சொல்லல!" என்று இலகுவாய் சொல்ல,

'எவ்வளவு அசால்ட்டா சொல்ற!" என பார்த்து நின்றான் சங்கர்.

"சரி சொல்லு! என்ன தான் பேசிகிட்டீங்க?" என அதிலேயே நின்றான்.

"சொல்லு!" என கூறி கூறிய கண்களால் எதிரில் நின்றவனை முழுதாய் ஆராயும் பார்வை பார்த்து நின்றான் ஜீவன்.

இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சத்யாவின் கண்களில் தற்சயலாய் ஜீவன் அகப்பட்டிருக்க, யோசிக்கவே இல்லை.. அவன் முன் சென்று நின்றிருந்தான்.

"உங்ககிட்ட ஒரு பத்து நிமிஷம் பேசனும்!" எடுத்ததும் சத்யா இப்படி கூற, நொடியில் அவனை கண்டு கொண்டான் ஜீவனும்.

தங்கை முகமும் ஒரு நொடி கண்முன் வந்து செல்ல, நிதானமாய் தான் நின்றான்.

அவனைப் பற்றி அவன் அறிந்த, கேள்விபட்ட, விசாரித்த வகையில் என அனைத்திலுமே ஜீவனை கொஞ்சம் கவர்ந்திருந்தான் சத்யா.

ஆனாலும் தங்கையை கொடுக்கும் அளவிற்கு இன்னும் சிந்திக்காமல் இருக்க, சத்யா இப்படி நேராய் வந்து நின்றது கூட ஜீவனுக்கு அவன் மேல் ஒரு நல்ல அபிப்ராயத்தை கொடுத்திருக்க, அதை கண்களில் காட்டிடாத வண்ணம் நின்றான் ஜீவன்.

"நானும் நந்தினியும் ஒரே காலேஜ் ஒரே கிளாஸ்!" என்றுவிட்டு ஜீவன் முகம் பார்க்க, மேலே சொல்லு என்பதை போன்ற பாவம்.

"எனக்கு நந்தினியைப் பிடிக்கும்.. பிடிக்கும்னா லவ் பண்றேன்.." என்று கூறி நேராய் நிமிர்ந்து ஜீவன் கண்களைப் பார்க்க அப்போதும் எதுவும் கூறாமல் நிற்க, சத்யாவும் அதை கவனித்தவன் தொடர்ந்தான்.

"இப்பனு இல்லை.. இது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே!" என்றதும் ஜீவன் முகத்தில் சிறு மாற்றம் வந்து போனதை குறித்துக் கொண்டான் சத்யா.

"முழுசா சொல்லிடுறேன்.. அப்புறம் உங்க இஷ்டம்.." என்ற சத்யா,

"நந்தினிக்காக தான் அந்த காலேஜ்ல ஜாயின் பண்ணேன்.. ஆனா அப்புறம் என்னென்னவோ நடந்துருச்சு.. அதை டீடெயிலா இன்னொரு நாள் முடிஞ்சா உங்ககிட்ட பேசுவேன்னு நினைக்குறேன்.. அதோட சீரியஸ்நெஸ் தெரியாமல் நான் எதுவும் பண்ணல.. எது வந்தாலும் என்னால ஹண்ட்ல் பண்ண முடியும்.. இப்படி எதுக்காகவோ ஓட ஆரம்பிச்சு இப்ப தான் சின்னதா ஒரு மைல்கல் தொட்ருக்கேன்.." என்றவன் வேலை கிடைத்த விஷயத்தை கூற, அதற்கும் பெரிதாய் எந்த பிர திபலிப்பும் இல்லை ஜீவனிடம்.

அதற்கு மேல் எப்படி என்ன கூறுவது என சில நிமிடம் அமைதியாய் நின்றுவிட்டான் சத்யாவும் ஜீவனின் இந்த அமைதி மற்றும் பார்வையில்.

"இன்னும் சொல்ல வந்ததை சொன்ன மாதிரி தெரியலையே!" என்று ஜீவன் வாய் திறக்க,

"நந்தினிக்கு மாப்பிள்ளை பாக்குறதா கேள்விபட்டேன்.. பொண்ணு கேட்டு வர எனக்கு இது சரியான நேரமா தெரியல.. இல்லைனா அம்மா அப்பா கூட வந்திருப்பேன்.. நீங்க என்ன தான் தேடி தேடி மாப்பிள்ளை பார்த்தாலும் அதெல்லாம் வேஸ்ட் தான். நீங்க என்ன நினைச்சாலும் ஓகே! பட் நந்தினி விஷயத்துல ஐம் வெரி சீரியஸ்.. இனி பார்க்க மாட்டிங்கனு நம்புறேன்.. கூடிய சீக்கிரமே மறுபடியும் உங்க முன்னாடி வருவேன்.. உங்க டைம் எனக்கு குடுத்ததுக்கு தேங்க்ஸ்!" என்றவன் திரும்பிவிட, ஒரு மெச்சுதல் பார்வையை கவனிக்கவில்லை சத்யா.

"அப்புறம்! பொண்ணு பாக்க யாரு வந்தாலும் உங்க தங்கச்சி வேண்டாம்னு எல்லாம் சொல்ல மாட்டாங்க.. ஆனா வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கவும் மாட்டாங்க.. இவ்வளவு கான்ஃபிடண்டா பேசினதும் நந்தினியை நீங்க தப்பா நினைச்சுடாதிங்க.. ஆசை இருந்தாலும் அதைவிட பயமும் உங்க மேல பாசமும் அதிகமா இருக்கு அவங்களுக்கு.. இதுவரை எங்களுக்குள்ள நாங்க கன்வே பண்ணிக்கிட்டது இல்ல.. ஆனாலும் சொல்றேன்.. எனக்கு தெரியும்.. அவ உங்க மேல வச்சிருக்க பாசத்தை வச்சு நீங்க விளையாட மாட்டிங்க நம்புறேன்!" என்று கூறிக் கொண்டே திரும்பி நடந்து சென்றிருந்தான்.

அதில் தான் பெரிதாய் அதிர்ந்து இருந்தான் ஜீவன்.. நந்தினி இன்னும் சத்யாவின் காதலை ஏற்று கொள்ளவில்லை அது தானே சத்யாவின் இறுதி வார்த்தைகள் கொடுத்த அர்த்தம்? அப்படி இருக்க இவ்வளவு தைரியமாய் அவனும் தைரியத்தை இழந்து ஒவ்வொரு முறையும் பயந்து தயங்கி தன் முன் நின்ற தங்கையும் என இருவருமே ஆச்சர்யமாகிப் போனார்கள் ஜீவனிற்கு.

கேட்ட சங்கர் தலை சுற்றி போயிருந்தான்..

"முடிவா என்ன தான் டா சொல்லி இருந்த? எனக்கே புரியலையே அவ அண்ணனுக்கு புரிஞ்சிருக்குமா?" என்று சங்கர் கேட்க,

"புரியலைன்னா புரிய வைப்பான் இந்த சத்யா!" என்றிருந்தான் சத்யா.

தொடரும்..