அத்தியாயம் 29
"உன் மவன் என்ன கொஞ்ச நாளா வால சுருட்டிகிட்டு கிடக்கான்.. எதுவும் செய்தி இருக்கோ?" வீரபாகு மனைவியிடம் கேட்க,
"அவன் உள்ள தான் இருக்கான். வேணா கூப்பிடுத்தேன் கேளுங்களேன்!" என்றார் பதிலுக்கு வைதேகி.
"உள்ளயா? அவன் எப்ப வந்தான்? காலையில கிளம்பி போனான்ல?"
"இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் தான் காலேஜினு சொன்னான்.. இந்த வாரம் என்னமோ இன்னைக்கு போயிட்டு உடனே வந்தவன் நாளைக்கும் போனும்னு சொல்லுதான்.. அந்த புள்ளய பாக்க போனானா இல்ல நாளைக்கு தான் அத பாக்க போறானானு தெரியல" என்று பேசிக் கொண்டே சமையலையும் செய்தார்.
"எம்புட்டு சாதாரணமா சொல்லுத நீ? வேலை கிடைச்சா மட்டும் போதுமாமா?" வீரபாகு.
"ஏன் வேற என்ன வேணுமாம்?"
"பொல்லாத மவன பெத்துட்டோம்னு பெருமை வேற இவளுக்கு.." ஏன முனகியவர்,
"பாத்துட்டே இரு! அந்த புள்ளைக்கு அவ அண்ணன் வேற இடத்துல மாப்பிள்ளை பாத்து கட்டி..." எனக்கு சொல்லிக் கொண்டு இருக்க, சத்யா கதவை திறந்து வெளிவருவதை பார்த்தவர்,
"குழம்புக்கு இப்படியா டி உப்பள்ளி கொட்டுவ.. கொஞ்சமா தான் போடேன்!" என்று பேச்சை மாற்றி வேக வேகமாய் அறைக்குள் சென்றுவிட்டார்.
"முழுசா அந்த வார்த்தைய சொல்லி இருந்தா நானே சூடு வச்சிருப்பேன்.. மவனுக்கு பயந்து ஓடுதாரு.. கொஞ்சமாச்சும் கூறு வேண்டாம்.. அபசகுனமா பேசிகிட்டு.." என்று புலம்பிக் கொண்டு வைதேகி நிற்க,
"என்னவாம் வீராவுக்கு?" என்று வந்தான் சத்யா.
"அடுத்து நீயா? அவரு இருக்கட்டும்.. நான் கேட்கதுக்கு பதில சொல்லு.. நாளைக்கு அந்த புள்ளய தான பாக்க போற?" என்றார்.
"ப்பா! என்ன ஒரு வெளிச்சம் மம்மி உங்க முகத்துல.. வேணா நீயும் நாளைக்கு அவ வீட்டுல போய் பாத்துட்டு அப்படியே பூவு கீவு வச்சுட்டு.."
"அன்! அப்படியே கல்யாணத்துக்கு நாள் குறிச்சுட்டு.. ஆளப் பாரு.. அந்த மனுசன் வேற பீதிய கிளப்பிட்டு போறாரு.. இவன் ஒருத்தன்!" என்றார் மகனை.
"பின்ன! நானே நாளைக்கு கேள்வி கேட்டா பதில் சொல்லணுமேனு ப்ராஜெக்ட்டோட சுத்தி வரேன்.. என்கிட்ட போய் புள்ள பாக்க போறியா பிள்ள பிடிக்க போறியானு கேட்டா!" என்றான் நல்லவனாய்.
"சரி சரி! எனக்கும் தோணிகிட்டே இருந்துது.. மாப்பிள்ள பாக்கதா சொன்னாங்களே.. இப்ப ஒண்ணும் பிரச்சனை இல்லையா.. நீ எதுவும் பேசினியானு தெரிஞ்சிக்க தான் கேட்டேன்.." என்றார் தாய்.
"அந்த அளவுக்கு விடுவோமா ம்மா? இன்னும் கொஞ்ச நாள் தான்.." என்றான் அனைவரிடமும் கூறியதையே அன்னையிடமும்.
ஜீவனிற்கு குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஓடி இருந்தது.. வாரம் இரு முறையாவது விஜயலக்ஷ்மி சென்றுவிடுவார் பேத்தியை காண..
கூடவே நந்தினியும் கல்லூரி அல்லாத நாட்களில் சென்று குழந்தையை மடியில் வைத்து மணிக் கணக்கில் அமரந்துவிடுவாள்.
ஜீவன் சத்யாவுடன் பேசி ஒரு மாதம் ஆகி இருந்தாலும் அதைப் பற்றி யாரிடமும் இன்னும் கூறி இருக்கவில்லை.
"பக்கத்து வீட்டு பங்கஜம் அவங்க ஒன்னுவிட்ட தம்பிக்கு நந்தினியை கேட்டு நடையா நடக்குது டா!" என விஜயலக்ஷ்மி ஜீவனிடம் கூற,
"இப்போதைக்கு கல்யாணத்துக்கு பாக்கலனு சொல்லிடுங்க ம்மா.. காலேஜ் முடிக்கட்டும்" என்றுவிட்டான்.
மகனாய் எதுவும் கூறவில்லை என்றதும் நேராய் ஒரு நாள் அன்னை கேட்டார் "அந்த பையன் சத்யாவை பத்தி என்ன டா நினைக்குற?" என்று.
"ஏன் ம்மா?"
"இல்ல நந்தினி விருப்பமும் முக்கியம் இல்ல?"
"அவ நாம யாரை சொல்றோமோ அவங்களை தான் கல்யாணம் பண்ணுவா" என்று கூற, மகனிடம் அதற்கு பின் எதுவும் கேட்கவில்லை அவர்.
ஜெயாவும் இப்பொழுது எதுவும் பேசுவதில்லை.. சாதாரணப் பேச்சுக்களே இல்லை என்ற போது எங்கே அவள் சண்டை இட.
ஜீவன் நந்தினி விஜயலக்ஷ்மி என மூவருமா மை ஒரு நாள் குழந்தையை பார்க்க ஜெயா அன்னை வீட்டிற்கு சென்றிருக்க,
"ஜீவா! அதான் நாலு மாசம் முடிய போகுதே! அஞ்சாம் மாசம் பாப்பாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம் டா!" என்று அன்னை கேட்க, ஆசையாய் பார்த்தாள் ஜெயாவுமே!
"பார்க்கலாம் ம்மா!" என்றதோடு அவன் முடித்துக் கொள்ள, என்ன முயன்றும் அழுகையை அடக்க முடியாமல் அறைக்குள் எழுந்து சென்றாள் ஜெயா.
ஜீவன் கண்டாலுமே காணாததாய் இருந்து கொள்ள, இன்று வரை அன்னையும் தங்கையும் கவனிக்க தவறி இருந்தனர் ஜெயா தங்களுடன் மட்டும் அல்ல, அவள் கணவன் ஜீவனுடனும் பேசவில்லை என்று.
அதையே அறியாதவர்கள் அதற்கு காரணம் ஜீவன் என்பதை எப்படி அறிவார்கள்.
தண்டனை தான்.. நான்கு மாதங்கள் தொடர்ந்தது ஜீவன் ஜெயாவிற்கு தந்திருந்த தண்டனை.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அன்றே ஜெயாவிடம் தெளிவாய் பேசிவிட்டான் ஜீவன்.
"முன்னாடி எப்படி இருந்தன்னு எனக்கு இப்ப தான் சந்தேகமா இருக்கு.. ஒருவேளை அம்மா சொன்னது நிஜமா இருந்து ப்ரெக்னன்சி சிக்னாலுமே நீ அவ்வளவு ஹார்ஸா அம்மாவை பேசனும்னு தேவை இல்லை.. அமைதியா எழுந்து போயிருக்கலாம்.. அவங்களை நீ பேசினத என்னால ஏத்துக்க முடியல.. அதுவும் என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்றதை நீ அப்ப முடிவு பண்ணி பேசினதை சுத்தமா ஏத்துக்க முடியல.. இப்ப வரை அம்மா உனக்கு சப்போர்ட் பண்ணி தான் பேசிட்டு இருக்காங்க.. ஆனா நீ அந்த வீட்டுக்கு இனி வரணும்னா.. எப்படி இருக்கனும்னு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. உனக்கே தெரியும்.. நீ என் அம்மாவை உன் அம்மாவாவும் நினைக்க வேண்டாம் உன் பிரண்ட் மாதிரியும் பழக வேண்டாம்.. ஜஸ்ட் அவர்களுக்கான மரியாதை நீ குடுத்தே ஆகணும்.. அது நான் என்னை பெத்தவங்களுக்கு குடுக்குற மரியாதையா பாக்குறேன்!" என்றவன்,
"இவ்வளவு நாள் நீ பண்ணின பாவத்துக்கு...." என்றவன் எதுவும் சொல்லாமல் கிளம்பி இருந்தான்..
அன்று பேசியது தான்.. இதுவரை அவளுடன் பேசவில்லை. ஜெயாவின் தாய் மறைமுகப் பேச்சுக்கும் செவி சாய்க்கவில்லை.
வருபவன் ஆசையாய் தன் மகளை அள்ளி கொஞ்சிவிட்டு சொல்லிக் கொள்ளாமலே சென்றுவிடுவான்.
இன்று அன்னையே அழைத்து செல்லலாம் என்று கூற, அதற்கும் நேராய் பதில் கூறவில்லை.
ஜெயாவின் அமைதி தெரிந்தாலும் இன்னும் உள்ளுக்குள் கலக்கம் உடையவில்லை ஜீவனுக்கு.
தான் இல்லாத நேரம் அவள் மீண்டுமாய் ஏதேனும் செய்து வைத்தாள் என்று அஞ்சினான்.
அப்படி இனி விட போவது இல்லை தான்.. ஆனாலும் கொஞ்சம் அலெர்ட் ஆவதில் தவறில்லை என முடிவெடுத்து இருந்தான்.
விஜயலக்ஷ்மி அன்று மட்டும் இல்லாமல் தொடர்ந்து மகனை நச்சரித்து ஐந்தாம் மாதம் ஆரம்பம் ஆகவுமே மருமகளை குழந்தையோடு அழைத்து வர ஏற்பாடு செய்துவிட்டார்.
அதுவும் அன்று தான் விஜயலக்ஷ்மியின் பிறந்தநாள் வேறு. பெரிதாய் அன்னைக்கு என்று எதுவும் ஸ்பெஷலாய் செய்ததில்லை ஜீவன் நந்தினி இருவரும்.. வாழ்த்துக்கள் கூறி இரவு அவர்களுக்குள் கேக் கட் செய்து முடித்துக் கொள்வர்.
இப்பொழுது குழந்தை அழைப்பும் அன்னை பிறந்தநாளும் ஒன்றாய் வரவே ஜீவன் ஒரு முடிவிற்கு வந்தான்.
"நந்து உன் காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் கூப்பிடு.. அன்னைக்கு சின்னதா ஃபன்க்ஷன் வச்சுக்கலாம்.." என கூற, நந்தினி விழிகள் மீண்டும் மீண்டுமாய் விரிந்து கொண்டது.
யாரை அழைப்பது? நெருங்கிய நண்பர்கள்.. அதுவும் அன்னை பிறந்தநாள் விழாவிற்கு என அழைக்கும் அளவுக்கு நெருக்கம் என்றால் யாரை சொல்வாள்?
தான்யா தவிர்த்து பார்த்தால் அங்கே சங்கர்.. அடுத்தபடியாய் என நினைக்கையிலேயே தொண்டைக் குழி ஏறி இறங்கியது.
அண்ணன் வைக்கும் விஷப் பரீட்சை என தெரிந்தால் இன்னும் என்னாவாளோ?
ஜீவன் கூறியதை கல்லூரி வந்து தான்யாவிடம் கூற விழுந்து விழுந்து சிரித்தாள் தான்யா.
"இப்ப யாரை பிரண்ட்ஸ்னு நீ கூட்டிட்டு போக போற?" என்று இன்னும் அவள் சிரிக்க,
"பேசாம இரு டி.. எனக்கு நீ மட்டும் தான் பிரண்ட்னு அண்ணாகிட்ட சொல்ல போறேன்.." என்றாள்.
"அப்ப சத்யாவை பிரண்ட் லிஸ்ட்ல இருந்து ப்ரோமோஷன் குடுத்துட்டியா?" என அதற்கும் சிரித்தாள்.
அதில் பெரிதாய் ஒரு கவலை நந்தினிக்கு.. அவனை அழைக்கவா வேண்டாமா என்று.
எப்படியாம்? அண்ணன் இன்னும் சத்யாவிடம் பேசியது குறித்து எதுவும் அவளிடம் கூறிடவில்லை.. சத்யாவும் என்ன பேசினான் என சொல்லவில்லை.. என நினைத்து கவலை கொள்ள,
"எதுக்கு டென்ஷன் ஆகுற? பேசாம சத்யாக்கு கால் பண்ணி பேசு.. அவனே டிஸைட் பண்ணட்டும்" என்ற தான்யா கூற்று சரி என பட, முதல் முறையாய் அவனுக்கு அழைத்தாள் நந்தினி.
தொடரும்..