• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 31

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
அத்தியாயம் 31

"சாப்பிடு டா.. ட்ரைனிங்னு உள்ளூர்ல எங்கயாவது போடுவான்னு பாத்தா சென்னையாம் சென்னை.. என்னத்த சொல்ல!" என்று வைதேகி புலம்ப,

"அந்த பணத்த வாங்கி குடுத்தானா இல்லையா கேளு டி!" என்றார் அருகில் இருந்து வீரபாகு.

இன்னும் ஒரு மாத காலத்தில் கிளம்பி சென்று விட்டாள் தன் மகனுக்கு தன் கையால் என்று சமைத்து கொடுக்க என நினைத்தவர் இப்போதே அவனுக்கு பிடித்ததாய் பார்த்து பார்த்து சமைக்க ஆரம்பித்து விட்டார்.

இருவரின் பேச்சும் காதில் விழுந்தாலும் கோழி குருமாவை ருசித்து சாப்பிட்டவன் கைகளை கழுவ,

"அதான் சொன்னானே! தேவை இருந்தா தான் வங்குவேன்னு" என்றார் வைதேகி.

"பரவாயில்லையே! இந்த அளவுக்கு தெரியுதே வைதேகிக்கு!" என்று கிண்டல் பேசி அமர,

"பணத்த குடுத்துருந்தா இங்க எங்கனயும் போட்ருப்பானுங்க இல்ல?" என்று கணவன் கேட்ட கேள்வியும் சரியாய் தோன்ற மகனைப் பார்த்தார்.

"இப்படி எதுக்காகவும் வேணுமேனு தான் கேட்டு வச்சேன்.. ஆனா இப்ப வாங்க ரொம்ப யோசிக்க வைக்குது.. சேருறதுக்கு முன்னவே கடங்காரனா போகவா?" என்று சத்யா கூறினான்.

"இந்த எழவுக்கு தான் நான் பணத்த போறட்டுதேன்னேன்.. அவன்கூட சேர்ந்து நீயும் வேண்டாம்னுட்ட.." என மனைவியை பிடித்துவிட்டார்.

"ம்மா! இப்ப என்ன? ட்ரைனிங் தான? ஆறு மாசமோ ஒரு வருஷமோ! அடுத்து போஸ்டிங்னு ஒன்னு வரும் அப்போ நம்ம ஊருக்கு மாத்தல் வாங்கிக்குவோம்.. இடையில கல்யாணத்த வேற பண்ணனும்.. அம்புட்டு பணத்தையும் பொறட்ட முடியுமான்னு கேட்டு வை!" என்றவன் நடந்து வெளியே சென்றுவிட,

"யார் கல்யாணத்தங்க சொல்றான்?" என்றார் அப்பாவியாய் வைதேகி.

"ஆன்! காலம் போன கடைசில எனக்கு தான் கல்யாணம் பண்ணிக்கோ வைக்க போறான்.. கேட்குறான் பாரு கேள்வி.. துர அவனோட கல்யாணத்த தான் சொல்லிட்டு போறான்!" என்றவருக்கும் அவன் சொல்வது சரி தான் என்றே பட்டது.

ட்ரைனிங் என்று ஒரு வருடத்துக்குள் எடுத்துக் கொண்டாலும் நந்தினி ஆறு மாதங்கள் முன்பே வரன் பார்க்க ஆரம்பித்து இருக்க, வேளை கிடைத்த பின்பும் தள்ளி போடுவது சரி ஆகாது என்றே தோன்ற, வீரபாகுவும் அமைதியாகிவிட்டார்.

வீட்டில் மட்டும் தான் அமைதி எல்லாம்.. வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார் என்றால் போகும் வழி வரும் வழி என அவருக்கு எதிரில் யார் வந்தாலும் பிடித்த வைத்து தன் மகன் போலீஸ் என பெருமையாய் கூறி எதிரில் வருபவன் ரத்தக் காதுடன் தான் திரும்பி செல்வான்.

"எடேய் வீரபாகு எதிர்ல வாராரு.. வேற வழில வண்டிய வுடு!" என்று கூறும் அளவுக்கு இருந்தது வீரபாகுவின் அலப்பறை.

நந்தினி விஷயம் கேள்வி பட்டதும் அவ்வளவு மகிழ்ச்சி இருந்த போதும் சென்னை என்று கூறியது கலங்கி தான் போனாள்.

ஆனால் இதுவரை அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை. காட்டிக் கொள்ளும் சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை.

"என்ன போலீஸ்காரர்களா.. எக்ஸாம்ல பாஸ் ஆனதுக்கே ட்ரீட் கொடுத்து அசத்துனீங்க.. இப்ப வேலையே கன்ஃபார்ம் ஆயாச்சு.
சிங்கிள் ஸ்டார் ஹோட்டலா இல்ல ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா?" என நந்தினியைப் பார்க்க கல்லூரிக்கு சத்யா வந்திருந்த போது தான்யா கேட்க,

"சிங்கிளா இருந்தப்போ கேட்டத செஞ்சோம்.. இனி கல்யாணம் வேற பண்ணனும்.. பொறுப்பு இருக்கும்ல.. காச எப்படி சும்மா செலவு பண்ணுறதாம்?" என சத்யா கூற, நந்தினி முகம் சிவக்க,

"ஆத்தி! இப்பவே இம்புட்டு பேச்சா? சரி தான்.. உன்கிட்ட கேட்டதுக்கு.. எங்க அந்த சங்கர? அவன்கிட்ட கேட்டுக்குறேன்!" என்று தான்யா.

"அவங்க அம்மாக்கு உடம்பு சரி இல்ல.. அதான் அவனை கூட்டிட்டு வரல.. சரி வாங்க கேன்டீன்ல போய் பேசலாம்!" என நடக்க, தான்யா முன்னே சென்றுவிட்டாள் நந்தினி அழைப்பை கேட்டும் கேட்காதவளாய்.

"உனக்கு தெரியும் தான?" சத்யா நந்தினியிடம் கேட்டான்.

"என்ன?"

"அப்பாயின்மென்ட் லெட்டர் வந்தது உனக்கு தெரியும் தான?"

"எனக்கு எப்படி தெரியும்? சொன்னியா என்ன"

"ஓஹ்! அப்ப உனக்கு தெரியாது.. அதான் விஷ் பண்ணல?"

"ஆமா!"

"சங்கர் உனக்கு மெசேஜ் பண்ணவே இல்ல?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி நின்று கேட்க,

"அப்ப தான தெரியும்! எனக்கு ஸ்பெஷலா எல்லாம் யாரும் சொல்லலையே!" என்றாள் அவனை காணாமலே!

"நம்ம ஊருல இருந்து மூணு பேரு செலக்ட் ஆகி இருக்காங்க ம்மா.. பரவாயில்ல!" என்று மெச்சுதலாய் அண்ணன் கூறியது இப்போதும் காதில் கேட்பதை போல இருந்தது நந்தினிக்கு.

"ஸ்பெஷலா சொல்லனும்னா எப்படி? நான் உன் வீட்டுக்கு வந்து சொல்லி இருக்கணுமா? சரி வா போலாம்.. உன் வீட்டில வச்சே சொல்றேன்!" என்றவன் அவள் கைகளை பிடிக்க போக,

"ஆஊனா பயம் காட்டுவியே! நான் ஒன்னும் அப்படி சொல்லல!" என்றவள் நடக்க ஆரம்பிக்க,

"பின்ன! உன்ன பாக்கும் போது தான நான் சொல்ல முடியும்? போன்லயோ மெசேஜ்லயோ சொல்ற விஷயமா இது?" என்றான் சத்யாவும்.

"அதான் தெரிஞ்சுக்கிட்டேனே இப்ப என்ன?" என்று புரியாமல் அவள் கேட்க,

"அப்ப நீ கோவமா இல்லையா?" என்றான்.

"ஏன்?"

"என்ன ஏன்? நான் வந்து இவ்வளவு நேரம் ஆச்சு? விஷ் பண்ணி மெசேஜ் பண்ணலைனாலும் பரவால்ல.. இவ்வளவு நேரம் ஆகியும் நீ இன்னும் விஷ் பண்ணல!" என்றான் அவள் வாழ்த்தை எதிர்பார்த்து.

சத்தியமாய் அவள் அப்படி நினைக்கவே இல்லையே! இவன் ஜெயித்து விடுவான் என நம்பிக்கை இருந்தது.. தெரிந்தது தானே என்ற எண்ணமும் இருந்தது.. வாழ்த்து சொல்ல மட்டும் எப்படி மறந்தேன் என நினைத்தவள் சட்டென கைநீட்டிவிட்டாள் அவன் முன்.

"சங்கர்க்கு முன்ன அண்ணா சொல்லிட்டாங்க.. ஆனா இதை மறந்துட்டேன்!" என்று சொல்லி நீட்ட,

"ம்ம்ம்!" என்றவன் புன்னகையுடன் கைகுலுக்காமல் அவள் விரல்களைப் பற்றிக் கொண்டு நடக்க, விதிவிதிர்த்துப் போனவள்,

"சத்யா!" என்றாள் காற்றாகி போன குரலில்.

"நானும் விஷ்க்காக கேட்கல.. நமக்குள்ள அதெல்லாம் வேணுமா என்ன?" என்றவன் பேச்சு வேறு உரிமை பேச்சாய் வர, நொடியில் தடுமாற வைத்துவிட்டான்.

"இந்தா இருக்க கேன்டீனுக்கு நீங்க நடந்து வர ஒரு மணி நேரம்.. நான் ஃபுல்லா சாப்பிட்டு முடிச்சுட்டேன்.. பில் நீயே குடுத்துடு னோ ப்ரோப்லேம்! நல்லா இருக்கு டா உங்க லவ்வு!" என்று தான்யா கிண்டல் செய்யும் அளவு மெதுவாய் நடந்து வந்திருந்தனர்.

பேசி சாப்பிட்டு முடித்து வெளியே வர, "ப்ராஜெக்ட் பைனல் டேட், வைவா எல்லாம் அந்த டைம்ல தான் இருக்குமே! என்ன பண்ண போறீங்க?" என்றாள் நந்தினி சத்யா சங்கரை.

"டூ டு த்ரீ டேய்ஸ் தானே? வந்துட்டு போற மாதிரி இருக்கும்.. அதெல்லாம் பாத்துக்கலாம்!" எனக்கு எளிதாய் கூறிவிட்டான் சத்யா.

அந்த அளவுக்கு எளிதாய் எல்லாம் இல்லை.. படிப்பில் கவனமாய் இருப்பவன் தான் என்றாலும் அதிகமாய் காவல் தேர்வுக்கு உடல்தகுதி தேர்வுக்கு என மெனக்கட்டிருக்க, இந்த ஒரு மாதத்தில் அதிகமாய் நேரம் எடுத்துக் கொண்டனர் சத்யா சங்கர் இருவரும் மாதிரிகளில்.

"அந்தந்த வயசு வந்தா தான் பொறுப்பும் வரும் போல!" என வீரபாகு கூறும் அளவுக்கு சத்யாவின் மாற்றங்கள் இருக்க,

"எம்புள்ள எப்பவும் பொறுப்பானவன் தான்.. உங்களுக்கு இப்ப தான் புரியுது!" என்று நொடித்துக் கொள்வார் வைதேகி.

"அத்த! நந்து! காபி!" என விஜயலக்ஷ்மிக்கும் நந்தினிக்கும் காபியை கொடுத்துவிட்டு ஜெயா தன்னுடைய காபியுடன் அமர,

"ஜாஸ் இன்னுமா தூங்குறா அண்ணி?" என்றாள் நந்தினி.

"நைட்டெல்லாம் அவங்க அப்பாவோட விளையாட்டு.. அஞ்சு மணிக்கு அப்புறம் தான் பாலைக் கொடுத்து தூங்கவே வச்சேன்!" என்றாள் ஜெயா.

பெரிய மாற்றம் தான்.. சொல்லில் புரிய வைக்க முடியாத ஒன்றை ஜீவன் மௌனத்தால் உணர வைத்திருந்தான் ஜெயாவிற்கு.

ஏன் எப்படி என எந்த கேள்வியும் கேட்காமல் அவளை எப்படி இருந்தாலும் ஏற்று கொள்ள தயாராய் இருந்தவர்கள் இப்பொழுது முழு மனதாய் ஒன்றாகி இருந்தார்கள்.

"ஜீவா எங்க ம்மா? அவனும் தூங்குறானா?" விஜயா கேட்க,

!அவங்க கிளம்பிட்டு இருக்காங்க த்த.. காபி வேண்டாம் டிபன் சாப்பிட்டு கிளம்புறேன்னு சொன்னாங்க.." என்று கூறவும் வெளிவந்தான் ஜீவன்.

ஜீவன் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, ஜெயா பரிமாறிய நேரம்,

"லேட்டாகிட்டா பா?" என்றார் அன்னை.

"இல்ல ம்மா சொல்லுங்க!" என்றான் சாப்பிட்டபடி ஜீவனும் அன்னை பேச வருவது தெரிந்து..

அதில் அவர் நந்தினியைப் பார்க்க, புரிந்தவனாய் "நந்து! பாப்பா கட்டில் ஓரமா படுத்திருந்தா.. தலையணை வச்சேன்.. போய் பாரு!" என்று ஜீவன் கூற, அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நந்தினியும் இவர்களின் சைகை புரிந்து எழுந்து சென்றாள்.

தொடரும்..