• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 34

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 34

"பிடிக்கலைனா பிடிக்கல போக சொல்லுங்கனு சொல்லி தொலைய வேண்டியது தான? அண்ணன் அம்மா குடும்பம்னு பேசி பேசி என் உயிர வாங்குறா!" தான்யா கூறியதை கேட்டதில் இருந்து பேருந்தில் நிலைகொள்ளாமல் அமர்ந்திருந்தான் சத்யா.

நந்தினியை மனதுக்குள் அத்தனை பேசிவிட்டான்.. நேரில் இருந்தால் அடித்தே இருப்பானோ எனும் அளவுக்கு அத்தனை ஆதங்கம் அவள் மேல் உருவாக, இந்நேரத்திலா பெற்றோரும் போக வேண்டும் எனும் ஆற்றமையும் சேர்ந்து பந்தாட, எதுவுமே செய்ய முடியாத நிலை.

கைகளை பிசைந்தபடி சமையலறையில் விஜயலக்ஷ்மி நிற்க, அருகே ஜெயா.

"அதான் உங்க மகன் பார்த்துப்பேன்னு சொன்னாங்க இல்ல.. ஏன் த்த இப்படி டென்ஷன் எடுத்துக்குறீங்க?" என்றாள் ஜெயா.

"இப்படி திடுதிப்புன்னு பொண்ணு பாக்க வருவாங்கனு நினைக்கல ஜெயா.. சொந்தக்காரங்க வேற.. என்ன ஆக போகுதோனு பயமாவே இருக்கு.. ஜீவாக்கு ரொம்ப நேரம் எல்லாம் பொறுமையா பேச வராது!" என்று கூற,

"சொல்லாம கொள்ளாம இப்படி தட்ட தூக்கிட்டு வந்தது அவங்க தப்பு.. இவங்களுக்கு எல்லாம் பேசுற விதத்துல பேசினா தான் புரியும்.. உங்க மகன் பார்த்துப்பார் விடுங்க!" என்ற ஜெயாவின் ஆறுதல் வார்த்தைகள் நிச்சயம் தேவையாய் தான் இருந்தது விஜயாவிற்கு.

"அங்க நந்தினி கண்ணுல கண்ணீர் பொங்கி நிக்கிது.. ஏத்துக்கவும் முடியாம சொல்லவும் முடியாம விழுங்க நினைக்குறா.. அவளை போய் பாருங்கனு சொன்னா.. சொந்தக்காரங்கன்னு யார் யாருக்கோ பாவம் பாக்குறீங்க.." என்ற ஜெயா,

"போய் நந்தினியை சமாதானம் பண்ணுங்க த்த! இங்க சீக்கிரம் அனுப்பி விடற வேலைய பாக்கணும்.. காபி குடிச்சா தான் பேசவே ஸ்டார்ட் பண்ணுவாங்க போல.. நான் காபி கொண்டு குடுத்துக்குறேன்.. நீங்க போங்க!" என காய்ச்சிய பாலை அனைவருக்கும் தேநீர் தயாரித்தாள்.

அங்கே கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமை பறந்து கொண்டிருந்தது ஜீவனிற்கும்.

சொந்தம் என்ற பெயரில் வந்திருந்தவர்கள் அவர்களுக்குள் பேசி அவர்களுக்குள்ளாகவே முடிவெடுத்துக் கொண்டிருக்க, தனக்கான நேரம் வரட்டும் என ஜீவன் அமர்ந்திருக்க,

"அப்பா இல்லாம வளந்த பசங்க... விஜயலக்ஷ்மி என்ன தான் படிக்க வச்சு போலீஸ் ஆகி இருந்தாலும் ஜீவாவும் சின்ன பையன் தான? அவனுக்கு என்ன தெரியும் நல்லது கெட்டது எல்லாம்.. நாம தான் பார்த்து பக்குவமா பண்ணனும்.. நந்தினிக்கு இந்த இடம் தான் பொருத்தமான இடமா இருக்கும்.. இன்னைக்கே பூ வச்சி பேசி முடிச்சிரலாம்!" என வந்திருந்தவர்களில் பெரியவர் ஒருவர் கூற, ஜெயா காபியை கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

"எல்லாம் சரி தான்.. விஜயாக்கா இத்தனை பேர் பேசிட்டு இருக்கும் போதும் வெளில வராம இருக்காங்களே! அவங்களுக்கு புடிக்கலையோ என்னவோ?" என பெண்மணி ஒருவர் கூற,

"அட என்ன ம்மா நீ? நல்லா விஷயம் பேசும் போது அவ முன்ன வந்து நிப்பாளா? என்ன இருந்தாலும் பொண்ணு வாழ்க்கை இல்ல? அதான் காபியையே மருமககிட்ட குடுத்து விட்ருக்கா.." என்றவர் பேச்சில் அத்தனை வன்மம்.

தனியாய் ஒரு பெண்மணி பெற்ற பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய போது வராத சொந்தங்கள் தான் இப்போது வந்து நடுவீட்டில் அமர்ந்து நியாயம் பேசி அன்னையையே ஒதுக்கி வைக்கப் பார்க்க, அதற்குமேல் பார்த்துக் கொண்டிருப்பானா என்ன?

"எல்லாரும் மன்னிக்கணும்.. வீடு தேடி வந்துட்டீங்களேனு தான் இவ்வளவு நேரம் அமைதியா இருந்தது.. தங்கச்சிக்கு ஆல்ரெடி மாப்பிள்ளை பார்த்தாச்சு.. நிச்சயத்துக்கு எல்லாருக்கும் சொல்லலாம் நினைச்சோம்.. அதுக்குள்ள அவரசப்பட்டுட்டிங்க.. நிச்சயம் அம்மா தான் பத்திரிக்கை கொண்டு வருவாங்க உங்க எல்லாருக்கும்" என்று ஜீவன் கையெடுத்து கும்பிட,

"என்னடே பேசுத.. இவ்வளவு சொந்தம் இருக்கோம்.. யாருகிட்டயும் சொல்லாம எப்ப மாப்பிள்ளை பாத்திங்க? உன் அம்மா அவ்வளவு பெரிய ஆள் ஆயாச்சா? அப்போ நாங்க எல்லாம் வேண்டாமா?" என்றார் அந்த மூத்தவர்.

"எல்லாரும் வேணும் பெரியப்பா.. நீங்க தான் அட்சதை போட்டு தங்கச்சிய வாழ்த்த வரனும்.. இப்போ வர்றதுக்கு முன்னாடி ஒரு போன் பண்ணி இருந்தா இவ்வளவு கஷ்டம் தேவை இருந்திருக்காது" என்று சொல்லி விட்டான்.

"அவ்வளவு தானா? எங்க உன் அம்மா? உன்ன பேசவிட்டு வேடிக்கை பாக்குறாளா?"

"பெரியப்பா! நான் மரியாதையா பேசிட்டு இருக்கேன்.. உங்க வார்த்தை எதுவும் வந்ததுல இருந்தே சரி இல்ல.. இப்பவும் அம்மாக்காக தான் பாக்குறேன்" என்றவன்,

"அவங்க நான் சொல்லாம வர மாட்டாங்க.. இவ்வளவு நாளும் இந்த வீட்டோட தேவைக்கு நீங்க எட்டி எங்க இருந்திங்களோ இப்பவும் அங்கேயே இருந்தா உறவு நல்லா இருக்கும்.. இல்ல நான் தான் பேசுவேன்னு பேசுனா நானும் பேச வேண்டி இருக்கும்" என்று கூறவுமே அனைவரும் ஸ்தம்பித்து நின்றுவிட, இடையில் தான் தான்யா வந்து பார்த்து சென்றது.

"என் அம்மாக்கு தெரியும் எனக்கும் என் தங்கைக்கும் என்ன செய்யனும்னு.. இப்ப எனக்கும் ஓரளவு தெரியும்.. என் அம்மா வழிகாட்டுதலோட அவங்க தலைமையில தான் நந்தினி கல்யாணம் நடக்கும்.. நீங்க கிளம்பலாம்!" என்று நேராய் கூறி விட,

சிலர் மௌனமாய் வெளியேற, சிலர் வாய்க்கு வந்ததை பேசியப்படி வெளியேற, எதையும் கண்டு கொள்ளவில்லை வீட்டினார்.

யாருக்கும் அழுத்தமாய் திடமாய் பேசிய ஜீவனை அந்த இடத்தில் எதிர்த்து பேசி கேட்டிடவும் முடியாமல் முணுமுணுத்துக் கிளம்ப, ஜீவனே சற்று தளர்ந்து தான் போனான்.

இன்னும் எத்தனை நாட்கள் தான் இப்படி என்பதை போன்ற எண்ணத்துடன் அவன் அமர்ந்திருக்க,

"நீங்க ஸ்டேஷன் கிளம்பலையா?" என்றாள் ஜெயா.

"அம்மா நந்து என்ன பன்றாங்க?" என்றான்.

"அம்மா நந்துகிட்ட..." என கூற வந்தவள், வாசலைப் பார்த்து நின்றுவிட, என்ன என திரும்பிப் பார்த்து ஜீவனுமே வீரபாகு வைதேகியைப் பார்த்து புருவம் சுருக்கியவன், பின் சுதாரித்து,

"அம்மாவை வர சொல்லு ஜெயா!" என்றுவிட்டு வாசலுக்கு விரைந்தான்.

"அத்த அத்த! கொஞ்சம் சீக்கிரம் வாங்க!" என படபடப்பாய் வந்து ஜெயா அழைக்க, என்னவோ என கேட்டப்படி வந்த விஜயாவும் பேச்சச்சு நின்றுவிட, பின்னால் வந்த நந்தினியும் கால்களை அகற்ற முடியாமல் நின்றுவிட்டாள்.

"உள்ள வங்க மாமா! உள்ள வாங்க த்தை!" என வரவேற்றுக் கொண்டிருந்தான் ஜீவன்..

வைதேகியும் வீரபாகுவும் மட்டும் தான் வந்திருந்தனர். வீரபாகு முகத்தில் ஒரு பெருமிதம் என்றால் சிறு கூச்சம் என்றும் கூறலாம் வைதேகியிடம்.

"என்ன ஜெயா இது?" புரியாமல் விஜயா நிற்க,

"அதை அப்புறம் பேசிக்கலாம்.. வந்தவங்கள வாங்கனு போய் கூப்பிடுங்க!" என்று ஜெயா கூறிய பின் தான் நியாபகம் வந்தவராய் சென்றார்.

"வாங்க!" என்று அழைத்த விஜயலக்ஷ்மி மகன் முகத்தையும் பார்த்து வைத்துக் கொண்டார்.

'என்ன டா இது? ஆளாளுக்கு சொல்லாம வர்றாங்க?' என்பது போன்ற பார்வை.

"ஜெயா குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வா!" என்று ஜீவன் கூற,

"அதெல்லாம் இருக்கட்டும் தம்பி! எனக்கு சுத்தி வளச்சு எல்லாம் பேச தெரியாது.. நேராவே பேசிருதேன்.. என் மவன உங்களுக்கு தெரியும் நினைக்கேன்.. இப்போ தான் போலீஸ் வேலை கிடைச்சு போயிருக்கான்.." என்று கூற, நந்தினி விரல்கள் நடுங்க ஆரம்பிக்க, பார்த்தபடி நின்றவளை ஜீவன் கண்ணசைவில் உள்ளே அழைத்து சென்றாள் ஜெயா.

விஜயலக்ஷ்மிக்கே படபடப்பாய் தான் வந்தது அந்த நிமிஷம்.. வந்ததும் சட்டென விஷயத்திற்கு வந்து விட்டாரே!

"அவனை நானே பெருமையா சொல்ல கூடாது.. நீங்களே வெளில விசாரிச்சுக்கலாம்.. சொன்னதை செஞ்சு காட்டுவான்.." என்று கூறையில் தான் எத்தனை பெருமிதம் தந்தையாய் அவருக்கு.

"இந்த வீட்டு பொண்ணை தொல்லை பண்ணுதான்னு எனக்கு தகவல் வந்தப்போ நானும் கோவப்பட்டு அவன்கிட்ட எவ்வளவோ கத்தி பாத்தேன்.. ஆனா அந்த புள்ளய மட்டும் மனசால நினச்சு இன்னைக்கு இந்த இடத்துல இருக்கான்.. அவனுக்காக தான் பேச வந்திருக்கோம்!" என்று முடித்த வீரபாகு இருவரின் முகத்தையும் பார்த்தார்..

"ரொம்ப பேசி என்ன ஆக போகுது.. உங்க பொன்னானங்க வீட்டுக்கு தாங்க.. தங்கமா பாத்துக்குவான்.. நாங்க மகளா பாத்துக்குவோம்!" என்று கூறி,

"சொல்லு டி!" என்றார் மனைவியிடம்.

எங்கே பேச? கணவரின் பேச்சில் வாயடைத்து போயிருந்தார் அவர்.. 'மனுஷனுக்கு இம்புட்டு அமைதியா பேச வருமா?' என நினைக்க ஆரம்பித்து, 'இவரு பேச்சுல நானா இருந்தா பொண்ண தூக்கி கையில குடுத்துருப்பேன்.. எங்கய்யா கத்துக்கிட்ட இந்த பேச்ச?' என வாய் திறந்து பார்த்திருந்தவர் கணவர் தன் பக்கம் திரும்பவும் தான் 'என்ன?' என விழித்தார்.

"கேளுன்னு சொன்னேன்!" என்ற குரல் மனைவிக்கு மட்டும் கேட்கும் படி காரமாய் வர,

"எனக்கு புரியுதுங்க மாமா!" என அவர் பேச்சில் கூறிய ஜீவன்,

"ஒரு ரெண்டு நிமிஷம்.. இதோ வந்துடுறோம்!" என்றுவிட்டு,

"ம்மா!" என்று அழைத்து சென்றான் நந்தினியின் அறைக்கு.

"ஜெயா! அவங்க எதுவும் நினைச்சுக்க கூடாது..." என்று ஜீவன் கூறவும் புரிந்து,

"நான் அவங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்!" என்று கூறி வெளியேறிவிட்டாள் ஜெயா.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
அப்பாடா.....
ஜீவனின் பேச்சில் இப்போ தான் எங்கள்
ஜீவனே வந்தது.... 🤩💐💐💐
 
  • Haha
Reactions: Rithi

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,105
679
113
Ariyalur
வீரபாகு பேச்சுலயும் செயலாளயும் தூள் கிளப்பிட்டாரு 😄😄😄😄முன்னாடி பொண்ணு கேட்ட பெருசுங்க வேற மாப்பிள்ளைக்கா அத தான்யா வேற மாதிரி புரிஞ்சிகிட்டு சத்யா கிட்ட சொல்லிட்டாளா 🙄🙄🙄🙄
 
  • Wow
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
வீரபாகு பேச்சுலயும் செயலாளயும் தூள் கிளப்பிட்டாரு 😄😄😄😄முன்னாடி பொண்ணு கேட்ட பெருசுங்க வேற மாப்பிள்ளைக்கா அத தான்யா வேற மாதிரி புரிஞ்சிகிட்டு சத்யா கிட்ட சொல்லிட்டாளா 🙄🙄🙄🙄
இல்லையே நந்தினிக்கு தான்.. எதிர்பாரா வருகை..