• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 35

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 35

நிதானத்திற்கு வரவே நீண்ட நேரம் எடுக்க, தன்னைத் தானே சமன்படுத்திக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்த சத்யாவை தான் பார்திருந்தனர் கிட்டத்தட்ட அனைவரும்.

ஜீவன், ஜெயா, விஜயலக்ஷ்மியோடு வைதேகியும் மகனை புரியாமல் பார்திருக்க,

"என்ன டி பன்றான் உன் மவன்? வந்த இடத்துல இப்படி தான் உட்காந்து இருப்பானா?" என மனைவியிடம் மெதுவாய் என்றாலும் கோபமாய் கேட்க,

"இம்புட்டு நேரம் பெரும பேசிட்டு இப்போ என் மவனாம்" என காதுபட கூறிவிட்டு மகன் அருகில் எழுந்து சென்றார் வைதேகி.

நந்தினியின் வீட்டில் தான் இருந்தனர் சத்யா குடும்பம். சத்யா வந்து அரை மணி நேரத்திற்கு மேலாகியும் அவனால் இன்னும் நடப்பதை நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு பயமும், கோபமுமாய் வந்து சேர்ந்திருக்க, நடப்பதோ முற்றிலும் அவன் எதிர்பாராதது.

அன்னையுடன் கலந்து பேச ஜீவன் உள்ளே சென்றதும் ஜெயா வீரபாகு வைதேகிஉடன் பொதுவாய் பேசிக் கொண்டு இருந்தாள்.

"சொல்லுங்க ம்மா!" என்று உள்ளே சென்ற ஜீவா கேட்க,

"நான் என்ன டா சொல்ல?" என்றார் நந்தினியைப் பார்த்தாவாறு அன்னை.

உடனே நந்தினி பக்கம் திரும்பினான் ஜீவன்.

"நீ சொல்லு நந்து!" என்று அண்ணன் கேட்கவும் மிரட்சி கலந்த பார்வை தான் அவளிடத்தில்.

"நீ சொல்லு.. உன்னை பொண்ணு கேட்டு வந்திருக்காங்க.. என்ன சொல்லட்டும்.." என்றான் தெளிவாய்.

முன்னே வந்தவர்களும் அதற்காய் தான் வந்திருக்க, அப்போது கேட்காத கேள்வி இப்போது கேட்கப்படவும் தவித்துப் பார்த்தாள்.

"நேராவே கேட்குறேன் நந்துமா நீ சொல்லு.. சத்யா உனக்கு ஓகேவா?" என்று கேட்க,

"ண்ணா!" என்றவளுக்கு அப்போதும் பேச்சு வரவில்லை.

"சத்யாகிட்ட நான் பேசினேன்.. ஆனா உன் முடிவும் தெளிவும் எனக்கு முக்கியம்.. அது மட்டும் தான் முக்கியம்.. சொல்லு!" என்று அழுத்தமாய் கூற,

"ண்ணா.. நான்... நான்.. சத்யா..." என்றவளுக்கு கண்ணீர் தான் முட்டிக் கொண்டு வந்தது.

"ஜீவா! போதும் டா.. அவளை படுத்தாத.. என் பொண்ணை எனக்கு தெரியும்.. நீ போய் அவங்ககிட்ட பேசு.." என்று அன்னை கூற,

"ம்மா!" என்றவள் தாவி அணைத்துக் கொண்டாள் அன்னையை.

ஜீவன் முகத்தில் கூட அப்போது தான் மெல்லிய புன்னகை.

"சாரிம்மா.. நான் வேணும்னு பண்ணல ம்மா!" என்று அழுகையோடு கூற,

"அப்போ யார் வேண்டாம்னு பண்ணியாம்?" என்றான் ஜீவன் கிண்டலாய்.

"ண்ணா!" என்றவள் அவன் தோளில் சாய,

"அவ்ளோ கான்ஃபிடண்ட்டா சொல்றான் மா என்கிட்டயே.. நீ எவ்வளவு பெரிய மாப்பிள்ள பாத்தாலும் அவ கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு!" என்று கிண்டல் போல கூறினாலும், தங்கையின் உச்சியில் கைவைத்து வருடவும் மறக்கவில்லை.

ஏங்கிக் கொண்டே அழுத்தவள் அத்தோடு மெல்ல புன்னகைக்க,

"போய் பேசு டா.. நீ வர்றேன்!" என்றார் புன்னகையுடன் அன்னையும்.

"சரி!" என்றவன், "சந்தோசமா இருக்கனும்!" என தங்கை முகம் பார்த்து கூறிவிட்டு சென்றான்.

"தப்பா நினைச்சுக்காதீங்க மாமா!" என வந்தமர்ந்தவன் முக மலர்ச்சி சத்யாவின் பெற்றோருக்கும் மகிழ்ச்சியை கொடுக்க,

"இப்போ காபி எடுத்துட்டு வா ஜெயா!" என்று ஜீவன் கூறிய போது மறுக்கவில்லை இருவரும்.

"அம்மா ஒன்னும் சொல்லலையே தம்பி!" வீரபாகு கேள்விக்கு,

"அம்மாக்கு சம்மதம் தான் மாமா.. எங்க எல்லாருக்குமே!" என்ற ஒற்றை சொல்லில் நிமிர்ந்து அமர்ந்தார் வீரபாகு.

"அத எடு டி!" என்று கூற, கொண்டு வந்த பைக்குள் இருந்து பூ, பழம், வெத்தலை என ஒரு தட்டில் வைதேகி எடுத்து வைக்க, ஜீவன் புன்னகையோடு பார்க்க, விஜயலக்ஷ்மியும் வந்துவிட்டார்.

"அட! மாப்பிள்ளையும் வந்துட்டார்!" ஜெயா காபியோடு வந்தவள் வாசல் பார்த்து சொல்ல, அனைவரின் பார்வையும் அங்கே.

தடதடக்கும் இதயத்தோடு பயணத்தை வெறுத்து வியர்க்க விருவிறுக்க வேகமாய் வந்தவன் நடை வாசலில் தான் நின்றது.

என்னென்னவோ கேள்விபட்டு எப்படி எப்படியோ கற்பனையில் அவன் வர, வீட்டின்னுள் அனைவரும் புன்னகை முகமாய் கூடவே வீரபாகு, வைதேகி அவர் கைகளில் தட்டு என பார்த்தவனுக்கு தலை சுற்றியது.

"உள்ள வாங்க!" என ஜெயா அழைக்க, "வாங்க தம்பி!" என்று விஜயா அழைக்க, வா எனுமாறு ஒரு சைகையும் புன்னகையும் ஜீவனிடம்.

"ம்மா!" என அன்னை அருகே வந்தான்.

"என்னம்மா?" என அதே ஆற்றாமை குரலில் அன்னை மட்டும் கேட்கும்படி அவன் கூற,

"முதல்ல தட்ட மாத்திக்கலாம்.. பரிசம் போட நல்ல நாள் பார்த்துக்குவோம்.. இன்னைக்கு தட்ட மாத்தி உறுதி பண்ணிக்கலாமே!" என்றார் வீரபாகு மகனை விடுத்து அங்கிருந்தோரிடம்.

"என்ன?" என சத்தமாய் கேட்டு ஒவ்வொருவர் முகத்தையும் மாறி மாறி அவன் பார்க்க,

"சத்யா! ஆர் யூ ஆல்ரைட்?" என்றான் ஜீவன்.

"ஒன்னும் இல்ல.. அவனுக்கு எதுவும் தெரியாது.. அதான் புரியாம பேசுதான்!" என வைதேகி சமாளிக்கப் பார்க்க,

"இதுல புரியாம போக என்ன இருக்கு உன் மகனுக்கு?" என வீரபாகு கோபம் கொள்ள,

"கல்யாணம் பண்ணிக்கோ போறவர்.. அவருக்கு தெரிய வேண்டாமா?" என்றாள் ஜெயா கிண்டலாய்.

கூடவே கொஞ்சம் கொஞ்சமாய் அங்கே நடந்ததை வைதேகி கூற, பேச்சுவாக்கில் விஜயலக்ஷ்மியும் பெண் கேட்டு வந்தவர்களைப் பற்றி கூற, என கேட்டவன் பெரும் காற்றை ஊதித் தள்ளி நிம்மதி மூச்சுடன் சோபாவில் சாய்ந்திருந்தான்.

"டேய்! என்ன பண்ணுத? எங்கள அந்த விரட்டு விரட்டிட்டு இப்போ என்ன உனக்கு?" என மகன் காதுக்குள் வைதேகி கேட்க,

"என்ன சத்யா? எனி ப்ரோப்லேம்?" என்றான் ஜீவன்.

"ஹான்! ம்ம்ஹும்.. நத்திங்..." என மெல்ல புன்னகைக்க, ஓரளவு தெளிவாகி இருந்தான்.

"உங்களுக்கு சம்மதம் தானுங்க?" என்று வீரபாகு விஜயாவிடம் கேட்க,

"ரொம்ப சந்தோஷம்!" என்றவர்,

"இதோ வர்றேன்!" என்றுவிட்டு வெத்தலை பூ என வைத்து ஒரு தட்டினை கொண்டு வந்தார்.

"வீட்டுல இவ்வளவு தான் இருக்கு!" என்று கூறி, மகன் மருமகளுடன் விஜயலக்ஷ்மி தர,

"பொண்ண வைக்க இடத்துல பூவ வச்சா என்ன பூ வைக்க எடத்துல பொண்ண வச்சா என்ன?" என்று முழு மனதாய் மாற்றிக் கொண்டனர் வைதேகி வீரபாகு.

அப்போது தான் துள்ளலாய் எழுந்து தலையை கலைத்து மீண்டும் கோதி, முகம் துடைத்து, காலரை சரி செய்து என மீண்ட தன் முகத்துடன் சத்யா புத்துணர்ச்சியோடு எழ,

"ஹப்பா! இப்ப தான் மாப்பிள்ளை லுக்கு வருது!" என்றாள் ஜெயா.

"ம்மா!" என்று தாயின் கையை அவன் சுரண்ட,

"நீ எந்திரிச்ச பவுசுலயே நீ என்னவோ என் மண்டைய உருட்ட போறனு தெரிஞ்சு போச்சு.. வீட்டுக்கு போற வர என்னட்ட பேசாத.." என்றுவிட்டார் வைதேகி.

"இப்ப நீ கேட்கலைனா வீரபாகு மீசைகிட்ட போய் கேட்பேன்" என்று மிரட்ட,

"சீக்கிரம் கல்யாணத்த முடிச்சி அவ கையில உன்னைய குடுத்தறனும்.. அப்போ தான் நான் நிம்மதியா இருக்க முடியும்" என முறைக்க,

"என்னவாம்?" என்றார் சத்தமாய் தந்தை.

"பொண்ணு பாக்க வந்திங்களே பொண்ண பாத்திங்களான்னு கேட்ருப்பாரு!" என ஜெயா மீண்டும் கிண்டல் பேச, ஜீவன் கூட புன்னகைத்தான்.

"யக்கா!" என்று அவன் ஒரு கும்பிடு வைக்க,

"டேய் டேய்! இவன் அலம்பல் தாங்கல.. மானத்த வாங்காத டா!" எனும் போதே,

"நந்துவை கூட்டிட்டு வா ஜெயா!" என்றார் விஜயா.

"க்காவ்!" என ஜெயா அருகில் சென்றவன் அவள் காதில் என்னவோ கூற, பெற்றவர்களை தவிர ஜீவன் விஜயா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

"கொஞ்சம் சேட்டை புடிச்சவன்..!" வைதேகி கூற,

"ஓஹ்! தெரியுமே!" என்றான் ஜீவன் வேகமாய். அதில் தலையை சொறிந்தபடி அன்னை அருகே வந்து அமர்ந்தான் சத்யா.

ஐந்தே நிமிடத்தில் முகம் கழுவி பூ,பொட்டு வைத்து என துப்பட்டாவில் எளிதாய் வந்து நின்றாள் அவர்கள் முன் நந்தினி.

நிமிரவில்லை.. நிமிரவே இல்லை.. இன்னும் சத்யா வந்த சுவடை அவள் அறியாமல் இருக்க, அதை சொல்ல வேண்டாம் என கூறி சத்யா ஜெயாவை அனுப்பி இருக்க, நந்தினியைப் பார்த்த சத்யாவின் பார்வையில் தான் அத்தனை மாற்றங்கள்.

தொடரும்..
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,105
679
113
Ariyalur
எப்பா ஒரு வழியா இருவீட்டார் சம்மதத்தோட தட்டு மாத்தியாச்சு சீக்கிரம் கல்யாணத்தை வைங்க விருந்துக்கு வரோம் writer சகி 😍😍😍😍😍😍
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
எப்பா ஒரு வழியா இருவீட்டார் சம்மதத்தோட தட்டு மாத்தியாச்சு சீக்கிரம் கல்யாணத்தை வைங்க விருந்துக்கு வரோம் writer சகி 😍😍😍😍😍😍
கடைசி பந்தி அது தான் சகி 😍