• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 37

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அத்தியாயம் 37

பலத்த அமைதி சத்யா நந்தினிக்கு இடையில் நிலவ, அவனே பேசட்டும் என நினைத்து வெகு நேரமாய் காத்திருந்தாள் நந்தினி.

நிச்சயம் முடிந்து ஏழு மாதங்கள் ஆகிறது.. வேலை சென்னையில் என உறுதி ஆகி அங்கே சேர்ந்தும் ஒரு மாதம் ஆகிறது.

சத்யா சொந்த ஊருக்கு விடுப்பில் வந்தும் ஐந்து நாட்கள் ஆகிறது.

இந்த ஐந்து நாளில் முதல் நாள் காலை அழைத்து வந்து சேர்ந்ததை நந்தினியோடு பகிர்ந்து கொண்டவன் அடுத்து அழைக்கவே இல்லை.. கூடவே அவனிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை.

எப்படியும் தன்னைப் பார்க்க வருவான் என அவள் நினைத்து வீட்டில் காத்திருக்க நாட்கள் தான் நான்கு கடந்ததே தவிர்த்து அவன் வரவில்லை.

கிளம்புவதற்கும் இரண்டு மணி நேரம் முன்பு நந்தினியின் வீட்டிற்கு வந்தவன் விஜயாவிடம் சொல்லிக் கொண்டு நந்தினியோடு வந்து சேர்ந்தான் ஒரு ஹோட்டலுக்கு.

நீண்ட நேரம் என்றால் வெகு நீண்ட நேரத்தை கடந்தும் அவன் பேசுவது போல இல்லை என்றதும் நந்தினி தான் இறங்கி வந்தாள்.

"உன் மேல செம்ம கோவத்துல இருக்கேன்.. ஏன் எதுக்குனு கேட்டு இன்னும் டென்ஷன் பண்ணாம இப்ப எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தனு சொல்லிட்டு கிளம்பு" என்று நந்தினி கூற,

"வாட்? மச்சான் உன்கிட்ட சொல்லல?" என்றான் புருவத்தை சுருக்கி கேள்வியாய்.

அத்தனை நெருக்கமும் உண்டாகி இருந்தது சத்யா, ஜீவன் இருவருக்கும் இடையில்.

"ஓஹ்! அண்ணாவை தான் கல்யாணம் பண்ணிக்க போறியா?" கோபம் கலந்து நக்கலாய் நந்தினி கேட்க,

"ப்ச்! நந்து!" என்றவன் முகம் சரி இல்லை என தெரிந்தாலும் தன்னிடம் பகிர்ந்து கொள்ள அவன் நினைக்காமல் தானே தன்னை பார்க்க வரவில்லை என்ற கோபமும் இருக்க தான் செய்தது.

"ஒரு பொண்ணை ரேப் பண்ணி கொன்னுருக்காங்க நாலு பேர்.. எல்லாம் பெரிய இடம்னு அவனுங்க பேர்ல நாலு பேருங்க யார்னே தெரியாதவங்களை உள்ள வச்சுட்டு அந்த பொருக்கிங்கள வெளில விட்ருக்காங்க.. என்ன சார்னு ஒரு ஹெட் கான்ஸ்டபிள்கிட்ட கேட்டா இதெல்லாம் இங்க சாதாரணம்ன்றார்.." என்றவன் முன் உச்சி முடியை இரு கைகளாலும் பிடித்தபடி டேபிளில் குனிந்தான்.


என்ன சொல்ல என தெரியாமல் அமைதியானாள் நந்தினி. ஏற்கனவே கூறியது தான்.. ஜீவன் அவன் ஸ்டேஷனில் நடக்கும் எதையுமே வீட்டில் மறந்தும் கூறிட மாட்டான்.. நியாயமானவன் தான்.. அவனால் குற்றவாளிக்கு என்ன முடியுமோ அதை செய்பவன் அதற்கு மேல் அதிகமாய் வாழ்க்கைக்குள் கொண்டு வரமாட்டான்.

சத்யா அதற்கு அப்படியே எதிர்மாறாய் இருந்தான். இந்த மாதிரியான செய்திகள் எல்லாம் டிவியில் வரும் போது ஒரு உச்சுக் கொட்டலுடன் பார்த்து கடந்து வந்த சாதாரண பெண் தான் நந்தினி எனும் போது இப்படி சத்யா பலவீனமாய் இருப்பதை கண்டு எண்ணங்கள் வேறு மாதிரியாய் எழ தான் செய்தது.

இப்படி வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகாமல் முதல் ஆரம்பத்திலேயே அவன் நொறுங்கி நிற்பது முதலில் பயத்தை தான் கொடுத்தது.

இப்படி ஒவ்வொரு கேஸ் வரும் பொழுதும் அதை பெர்சனலாய் எடுத்துக் கொண்டு மன அழுத்தம் எடுத்து கொண்டால்? என அவன் மீதான அக்கறை தான் அவளுக்கு தோன்றியது.

அதை கூறினால் அதற்கும் கோபம் கொள்வான் என சந்தியா விஷயத்திலேயே தெரிந்திருக்க, அவனை எப்படி சமாதானம் செய்து கொண்டு வர என தெரியாமல் விழிக்க,

"நாடு எங்க போய்ட்டு இருக்கு நந்து? எனக்கு புரியல.. சிட்டினா கெத்தா சொல்லலாம்னு தான் நானும் நினச்சேன்.. ஆனா அப்படி இல்லனு தோணுது.. பூனைக்கு பயந்து சட்டியை மூடி வைக்குற நிலைமை எப்போ தான் மாறும்? இன்னும் எவ்வளவு நாள் இப்படி? அய்யோ எனக்கு பைத்தியம் பிடிக்குது!" என மீண்டும் தலையை பிடிக்கும் நேரம் அவன் தோளில் ஒரு கை விழ, நந்தினி நிமிர்ந்து பார்த்தாள்.

ஜீவன் தான் வந்திருந்தான்.. "அண்ணா!" என நந்தினி எழுந்து கொள்ள, "உட்காரு டா!" என்றவன்,

"வர சொன்னியே என்னாச்சு சத்யா?" என்று கேட்டு, 3 காபி என ஆர்டர் கொடுத்துவிட்டு சத்யா முகத்தைப் பார்க்க, அவன் ஜீவனை தான் முறைத்துக் கொண்டிருந்தான்.

"ண்ணா! என்னென்னவோ சொல்றான்.. எனக்கு பயமா இருக்கு.. ஆல்ரெடி காலேஜ்ல இப்படி தான் ஒரு பிரச்சனை ஆச்..." என கூற வந்தவள் சட்டென வாயை மூடிக் கொண்டாள்.

அதை சொல்வதா வேண்டாமா என்றொரு குழப்பம்..

"அவளை ஏன் டா பயம் காட்ற?" ஜீவன் கேட்க,

"அவ என்ன பச்ச புள்ளையா பயம் காட்ட? என் வைஃப்கிட்ட நான் புலம்ப கூடாதா?" என்றான் சத்யா.

நந்தினி விழிக்க, "புலம்புறனு உனக்கே தெரியுது இல்ல? அவளையும் ஏன் டென்ஷன் பண்றனு தான் கேட்டேன்.." என்றவன்,

"நந்து! காபி ரெடினா வாங்கிட்டு வா!" என அனுப்பிவிட்டு சத்யா புறம் முழுதாய் திரும்பினான்.

"ஒரு ஸ்ரீதரை நீ அழிச்சுட்ட சரி.. ஒவ்வொரு ஸ்ரீதரையும் அழிக்க ட்ரை பண்ற சரி.. அது முடியலைன்னா அடுத்து உன்கிட்ட எவன் மாட்றானோ அவன்கிட்ட உன் கோபம், கடுப்புனு எல்லாத்தையும் காட்டணும்.. இப்படி புலம்ப கூடாது.. அன்னைக்கே உன்கிட்ட சொன்னேனே டா!" ஜீவன் கூற,

"கண்ணு முன்னாடி திமிரா போறானுங்க தப்பு பண்ணிட்டு.. என்னால முடியல!" என்ற சத்யாவிற்கு நிஜமாய் அவ்வளவு ஆத்திரம் இருந்தது உண்மை.

"நூறு குற்றவாளி தப்பிக்கப்படலாம் ஒரு நல்லவன் தண்டனை அனுபவிக்க கூடாதுன்றது எல்லாம் அந்த காலம்.. நல்லவனையும் காப்பாத்தணும் கேட்டவனையும் சம்ஹாரம் பண்ணனும்.. அது தான் இந்த காலம்.. ஏன் அவனுங்க உன்கிட்ட மாட்டவே மாட்டாங்களா? போலீஸ் வேலை கிடைச்சா எல்லாத்தையுமே லீகலா பண்ணிட முடியாது சத்யா.. உன்னால முடியும் உனக்கு அது தான் திருப்தினா அதை நீ தான் முடிக்கணும்.. சாமி கும்பிட பூசாரி வழி விடலனு சொல்லாத.. மனசால நினைச்சுட்டா கடவுள் நம்ம முன்னாடி தான் நின்னுட்டு இருப்பாரு.."

"இதுவரை நான் ஸ்டேஷன்ல என்ன பண்றேன், ரவுடிங்களை எப்படி ஹண்ட்ல் பண்றேன் எதுவும் பேமிலிக்கு தெரியாது.. இனியும் தெரிய விட மாட்டேனே தவிர நான் என் ரூட்ல சரியா இருப்பேன்.." என்று கூறிக் கொண்டு இருக்க, நந்தினி காபியுடன் வந்து சேர்ந்தாள்.

சிந்தனையில் இருந்தான் சத்யா. ஜீவன் சொல்வதும் சரி தானே காக்கி எல்லா விதத்திலும் உதவிடுமா என்ன என சத்யா நினைத்துக் கொண்டு இருந்தான்.

நிச்சயம் முடிந்த ஓரிரு நாட்களில் ஜீவனை சந்தித்து கல்லூரியில் நடந்ததை கூறிவிட்டான் சத்யா.

"இதனால பிரச்சனை வரும்னு உங்ககிட்ட இதை நான் சொல்லல.. உங்களுக்கு இன்ஸ்பெக்டர் **** மூலமா ஓரளவு தெரியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். சொல்லனும் தோணுச்சு.. சொல்லிட்டேன்" என்றிருந்தான்.

அப்போதே ஜீவன் சத்யாவின் குணநலன், அவன் கேரக்டர் என அனைத்தையும் புரிந்து கொண்டவன் தானும் தனக்கு தெரிந்த சில நுணுக்கங்களை அவ்வபோது சொல்லிக் கொடுக்க தான் செய்தான்.

நந்தினி வந்த போது ஓரளவு தெளிந்து தெரிந்தான் சத்யா.

"ண்ணா!" என்று கலக்கமாய் நந்தினி அழைக்க,

"என்ன அண்ணா? சொல்ல வந்ததை சொல்லியாச்சு இல்ல.. கிளம்புங்க காத்து வரட்டும்.. இன்னும் ஒன் ஹவர்ல நான் கிளம்பிடுவேன்" என்றான் சத்யா ஜீவனிடம்.

நந்தினி அவனை முறைக்க, "ரொம்ப தான் ஆடுற டா.. கூப்பிட்டவன் நீ தான?" என்று கூறி முறைத்து,

"அதெல்லாம் சரி ஆகிடுவான் டா!" என நந்தினிக்கு தைரியம் சொல்லி,

"வந்ததுக்கு காபியாச்சும் குடிச்சுட்டு போறேன்!" என கூறி குடித்துவிட்டு கிளம்பிவிட்டான்.

"ப்ச்! ஆமா நீ என்னவோ சொல்லிட்டு இருந்தியே! என் மேல கோவமா இருந்தியா? ஏன்?" என கேட்டவன் சற்று முன் பார்த்ததற்கு அப்படியே எதிர்.

"என்ன அப்படி பாக்குற?" என மீண்டுமாய் கேட்டு வைத்தான்.

"உன்னை என்னனு புரிஞ்சுக்க.. இப்ப தான் காச்மூச்னு கத்தின..?" நந்தினி.

"அதெல்லாம் உன் அண்ணன் கொண்டு போயிட்டார்.. நீ சொல்லு என்ன கோவம்?"

"என்ன என்ன கோவம்? நீ வந்து எத்தனை நாள் ஆச்சு? என்னை பார்க்க வர கூட நேரம் இல்ல.. அடலீஸ்ட் போன் பண்ணி இருக்கலாம் இல்ல.. இப்பவே இப்படி.. இன்னும் கல்யாணம் முடிஞ்சா என்னை கண்டுக்கவே மாட்ட போல!" என்றவளை பேச்சில் முன் பாதி தன் புலம்பலை மறக்க வைத்திருந்தான்.

"கல்யாணம் முடிஞ்சிட்டுனா உன்கிட்ட இப்படி பேசிட்டு இருக்க எனக்கு நேரம் இருக்குமா.. சில்லி கேர்ள்!" சட்டென சொல்லியவன் சொல்லியதன் அர்த்தம் புரிந்தவள் விழித்த விழி பார்த்து அடக்கமுடியாமல் சிரித்தான் சத்யா.

"சாரி மா.. என்னால சம்டைம்ஸ் ஹைப்பர கண்ட்ரோல் பண்ண முடியல.. ஊர்ல இருக்கும் போதே மச்சானுக்கு போன் பண்ணி புலம்பினேன்.. நாலு நாள் லீவ் போட்டு வந்து ரிலாக்ஸ்டா இருன்னு சொன்னாரு.. நாலு நாளும் அதே டென்ஷன்ல இங்க வந்தும் டைம் வேஸ்ட் பண்ணிட்டேன்.." என்று கூறியவன்,

"வந்ததுக்கு ஒரு குட் நியூஸ் டா.. கல்யாணத்துக்கு நாள் குறிக்க நம்ம வீட்டுல நாளைக்கு போறாங்க.. அதான் ஜாப் பிளேஸ் கன்ஃபார்ம் ஆகிட்டே.. அதான் நானும் சரினுட்டேன்.. சீக்கிரமே ஐயாவோட வர ரெடி ஆகிக்கோ.. நான் போய் பார்த்து நல்லதா ஒரு வீடு பாக்கணும்.. உனக்கு பிக் அனுபுறேன்.. உனக்கு எந்த வீடு ஓகேனு சொல்லு.. ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்!" என்று அவன் பேச,

சண்டை கோபம் என எல்லாம் மறக்கும் அளவுக்கு மொத்தமாய் பேசி அனைத்தையும் மறக்க வைத்துவிட்டே கிளம்பி இருந்தான் சத்யா.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
கடுமையான ஆத்திரத்தில்
கட்டுப் படுத்த முடியாமல்
காதலியிடம் புலம்புவது போல
மச்சானுடம் பகிர்ந்து கொள்ள
( நல்ல மச்சான் மாப்பிள்ளை)
கோபத்தோடு வந்தவளை
காதலோடு அனுப்பி வைத்த
காவ ( த) ல் மன்னன் சத்யா 💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻