அத்தியாயம் 4
"என்ன டா இன்னைக்கு டல்லா இருக்கிற மாதிரி இருக்கு? நந்தினி ஸ்டாப் ரூம் தானே டா போயிருக்கா?" தான்யா கிண்டலாய் கேட்க,
"நீ வேற! அவ இந்த கிளாஸ தாண்டினாலே மச்சிக்கு கை கால் ஓடாது.. இல்ல டா" என தான்யாவை தொடர்ந்தான் சங்கர்.
"ப்ச்! டேய்!" என்று முறைத்த சத்யா அப்போது தான் ஏதோ தோன்றியவனாக,
"தனு! உங்களுக்கு ஹாஸ்டல்ல ஏதாவது ப்ரோப்லேம் இருக்கா?" என்றான்.
"எங்களுக்கு என்ன ப்ரோப்லேம்?" தான்யா புரியாமல் கேட்க,
"இல்ல! சீனியர் ஜூனியர்னு ராக்கிங் அந்த மாதிரி ஏதாவது" என்று கேட்கவும்,
"நம்ம காலேஜ்ல அந்த பிரச்சனை எல்லாம் இல்லை சத்யா.. ஆனா இங்க ஒருத்தன் இருக்கான்.. இந்த ஊரு மந்திரி மகன்னு... சரியான பொறுக்கி.. அவனால தான் காலேஜ்ல அப்பப்ப பிரச்சனை வரும்னு சொல்றாங்க.. உங்க ஹாஸ்டல் தான்.. கொஞ்சம் பார்த்து அவன்கிட்ட ஒதுங்கியே இருந்துக்கோங்க" என்றாள்.
"யாரு அவன்? ஆமா உனக்கு எப்படி தெரியும்?" சங்கர் கேட்க,
"இங்க வந்ததுமே சீனியர்ஸ் சிலர் கூப்பிட்டு கேர்ஃபுல்லா இருக்கணும்னு சொல்லி தான் கிளாஸ்க்கே அனுப்பினாங்க" என்றாள்.
"நீ சொன்னது அவனா பாரு?" என ஜன்னல் வழியே ஜெய் கைகாட்ட,
"அவனே தான்!" என்ற தான்யா, நீட்டி இருந்த சத்யாவின் கைகளை தட்டிவிட்டு வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.
"அவன் திசைக்கே திரும்பாம இருக்குறது தான் நல்லது.. வந்தோமா படிச்சோமா போனோமான்னு இருந்துப்போம்.. மேனேஜ்மென்ட் கூட டொனேஷன் அதிகமா வருதுன்னு அவனை கண்டுக்க மாட்டாங்களாம்" என்றாள் தனக்கு தெரிந்ததை எல்லாம்.
"ஹாய்!" என்று வந்த நந்தினி,
"இதை காப்பி பண்ண சொன்னாங்க!" என்றபடி நோட்டை நீட்ட, நந்தினி தன்னைப் பார்ப்பத்தையும் உணராமல் அவளைப் பார்த்தபடி இருந்தான் சத்யா.
"டேய்! வந்த ரெண்டு நாளுலேயே டிசி வாங்க வச்சுடுவ போல.. ஏன் டா அப்படி பாக்குற?" என்று அடித்து சங்கர் கேட்ட பின் தான் தெளிந்து பார்த்த சத்யாவிடம், 'என்ன?' என்று நந்தினி கண்ணசைக்க,
'ஒன்றும் இல்லை' என தலையசைத்தான் அவனும்.
"ஆமா! அவன் பேரு என்ன?" என்று சத்யா கேட்க,
"யாரு பேரு?" என்றாள் நந்தினி.
"ஸ்ரீதர் ராமலிங்கம்" என்று தான்யா கூறவும்,
"எதுக்கு அவனை கேட்குற?" என்றாள் நந்தினி.
"சும்மா தான்.." என்றவனுக்கு இன்னும் நேற்று தன்னை கடந்து அழுத முகத்தோடு சென்ற பெண்ணின் எண்ணம்.
"சும்மா மாதிரி தெரியலையே?" தான்யாவும் கேட்க,
"அவன் நேத்து..." என்று ஆரம்பித்து நேற்றைய தினம் விடுதியில் நடந்ததையும் மாலை சந்தித்த அந்த பெண்ணையும் என சங்கர் கூற,
"இப்படி தான் வம்பை விலைக்கு வாங்குவியா? படிக்க வந்தா அந்த வேலையை மட்டும் பாரு" என்ற நந்தினி,
"அந்த பொண்ணு எதுக்கு அழுதுச்சுன்னு தெரியாம நாமளா கற்பனை பண்ண வேண்டாம்.." என்று கூற,
"அப்போ அவனுக்கு சம்ப்ல தண்ணி எடுத்து குடுத்துட்டு வர சொல்றியா?" என்றான் சத்யா.
"அதுக்கு அமைதியா பதில் சொல்ல முடியாதா உனக்கு?" என்று தான்யா கேட்க,
"ப்ச்! என்ன பேசுறீங்க ரெண்டு பேரும்.. தப்புன்னு தோணுச்சு.. அதை சொன்னா கண்டுக்காதன்னு சொல்ற மாதிரி பேசுறீங்க" என்றான்.
"கண்டுக்காதன்னு தான் சொல்றோம் சத்யா! பிரச்சனை வேண்டாம்.." தான்யா கூற,
"அந்த பொண்ணுக்கு பிரச்சனையாவே இருந்தாலும் அவளுக்கு பரண்ட்ஸ் இருப்பாங்க இல்ல மானேஜ்மெண்ட்ல சொல்லட்டும்.. நமக்கு பிரச்சனை வேண்டாம் சத்யா" என்றாள் நந்தினியும்.
அதன்பின் சத்யா அதைப் பற்றி பேசாமல் இருக்க, அடுத்தடுத்த வகுப்புகளும் நடந்து முடிந்திருந்தது.
"அந்த பொண்ணு யாருன்னு உனக்கு தெரியுமா டா?" கல்லூரி முடிந்து கிளம்பும் பொழுது சத்யா கேட்க,
"நீ இன்னும் அதுல இருந்து வெளில வரலையா டா? நானும் உன் கூட தானே வர்றேன்.. எனக்கென்ன தெரியும்.. தெரிஞ்சு தான் என்ன பண்ண முடியும்? இதெல்லாம் வேண்டாத வேலை டா.. அவங்கவங்க பிரச்சனையை அவங்கவங்க தான் சால்வ் பண்ணனும்.. நீ அதை ரொம்ப திங்க் பண்ணுற" என்றுவிட்டான் சங்கர்.
எதையோ மனதில் நினைத்து கணக்கிட்டுக் கொண்டு தன் அறைக்கு வந்து சேர்ந்தான் சத்யா.
"டிபன் வேணா ரூம்க்கு எடுத்துட்டு வரவா டா? ரொம்ப மூட் அவுட்டா தெரியுற இன்னைக்கு" என்று கேட்டவனுக்கு மறுப்பு கூறி தானும் சாப்பிட மெஸ்ஸிற்கு சென்றான் சத்யா.
தான் உண்டு தனக்கு உண்டு என்பதற்கான சில கோட்பாடுகளை சங்கர் சத்யாவிற்கு கூறியபடி அமர்ந்திருக்க, சத்யா தோசையை எடுக்கவும், அதை தட்டி விட்டபடி வந்து நின்றிருந்தான் ஸ்ரீதர் தன் நண்பர்களுடன்.
"யார் மச்சி இவன்?" உடன் வந்தவன் கேட்க,
"மாமனா மச்சானான்னு நேத்து கேட்டானே.. அது இவன் தான்.." என்றான் பார்வையை சத்யாவிடம் இருந்து திருப்பாமல் ஸ்ரீதர்.
"நீ தானா அது? சரி இப்பவே முடிவு பண்ணிடலாம்.. சொல்லு உனக்கு தங்கச்சி இருக்கா அக்கா இருக்கா?" என்று கேட்க, சத்யா எழுந்து நின்ற வேகத்தில் சங்கரே மிரண்டு விட்டான்.
"பிரண்ட்ஸ்! பிரண்ட்ஸ்! ப்ளீஸ்! நாங்க காலேஜ்க்கு புதுசு.. எதாவது தெரியாம பண்ணி இருந்தா சாரி.. விட்ருங்க ப்ளீஸ்" சத்யா கைகளைப் பிடித்த சங்கர் சுமுகமாய் பேச,
"என்ன டா படுத்துட்டான்?" என்று சிரித்தான் இன்னொருவன்.
"இந்த பயம் எப்பவும் இருக்கணும்" என்றபடி அவர்களை கடந்து செல்ல, சத்யா சாப்பிடாமலே வந்து விட்டான் அறைக்கு.
"இந்தா!" என்று சப்பாட்டை கொண்டு வந்த சங்கரை சத்யா முறைக்க,
"ஒரு பிரச்சனைக்குள்ள தலையை குடுத்தா அடுத்தடுத்துன்னு அது நம்மை துரத்தும்.. நீ என் பிரண்ட்டு டா.. அதுவும் ஊரு விட்டு ஊரு வந்திருக்கோம்.. உன்னை நான் பார்த்துக்கணும்.. என்னை நீ தான் பார்த்துக்கணும்.. அவன் பெரிய இடம்னு வேற சொல்றாங்க.. நாம பேசாம படிப்பை பாக்குறது தான் நமக்கு நல்லது" சங்கர் அவன் பார்வைக்கே விளக்கம் கொடுக்க,
"ப்ச்!" என்று தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான் சத்யா.
இன்னும் இன்னும் அந்த பெண்ணிற்கு என்னவோ என்று தான் மனம் ஓடிக் கொண்டிருக்க, சங்கரிடம் எதுவும் கூறாமலே படுத்துவிட்டான்.
"வேணாம்ன்னா போ! உன்னால நானும் தான் சாப்பிடாம வந்தேன்" என்ற சங்கர் அவனே எடுத்து சாப்பிட, சத்யா கண்களை மூடிக் கொண்டான்.
"நீ வெளில போனதும் நந்தினி ஒன்னு கேட்டுச்சு" சங்கர் அவனை திசை திருப்ப கூற, சட்டென்று கண் விழித்தவனுக்கு உடனே என்னவென்று கேட்கும் வேகம் இருந்தாலும் கெத்தை விட மனமில்லை.
"ஹப்பா! நல்லா சாப்பிட்டாச்சு!" என்றவன் தட்டை கழுவி எடுத்து வந்து வைத்துவிட்டு போர்வையை எடுக்க,
"என்னவாம்?" என்றான் சங்கர் முகத்தைப் பார்க்காமல் சத்யா.
ஒரக் கண்ணால் பார்த்தாலும் கேட்காததைப் போல சங்கர் போர்வையை உதற,
'நமக்கு மேல சீனப் போடுறானே!' நினைத்தாலும் சத்யா எழுந்து அமர்ந்தவன்,
"சொல்லு! நந்து என்ன சொன்னா?" என்று மெல்லிய குரலில் கேட்க, உள்ளுக்குள் சிரித்த சங்கர் அப்போதும் அசரவில்லை.
"சொல்லித் தொலை டா.. என்ன சொன்னா?" என்று சத்தமாய் கேட்க,
"அது! அப்படி கேளு! லவ் பண்றவனுக்கு எதுக்கு இவ்வளவு பந்தா?" என்ற சங்கர்,
"சத்யா ரொம்ப கோபக்காரனான்னு கேட்டா" என்று கூற,
"நீ என்ன சொன்ன?" என்றான் சந்தேகமாய் பார்த்து.
"என்ன சொல்ல! அதானே உண்மை.. அப்ப ஆமான்னு தானே சொல்லணும்?"
"எனக்கு எதிரி வெளில எல்லாம் இல்லை.. கூடவே வச்சுட்டு சுத்திட்டு இருக்கேன்.." என்றவன்,
"வேற என்ன சொன்னா?" என்று கேட்க,
"ஹான்! சொன்னா லவ் பண்றதை விட்டுட்டு வேலையைப் பார்க்க சொல்லுன்னு" என்றவன் மேல் தலையணையை எறிந்தவன்,
"எக்ஸ்ட்ரா பிட்டெல்லாம் போடாத.. நந்து அப்படி எல்லாம் சொல்லிருக்க மாட்டா" என்றவனை,
"அட! அவளை அவ்வளவு தெரியும்னு நினைப்பா டா உனக்கு?" என்று கிண்டல் செய்த சங்கர்,
"ஆமா! அதென்ன நேர்ல நந்தினி.. இங்க நந்து..?" என்று கேட்க,
"படிக்குற பொண்ணை செல்லமா கூப்பிட்டு டைவேர்ட் பண்ண கூடாது இல்ல?" என்று வெட்க சிரிப்பு சிரித்தவன் சற்று முன் இருந்த சத்யா இல்லை என்று நன்றாய் தெரிய,
"சகிக்கல.. தயவு செஞ்சு மூஞ்சை மாத்து" என்ற சங்கர்,
"இவர் டைவேர்ட் பண்ணதும் டைவேர்ட் ஆகி இவரு மடில விழ தான் அது காத்துகிட்டு கிடக்குது.. போ டா!" என்றவன் கால் முதல் முகம் வரை இழுத்து மூடி படுத்து விட,
"இரு டா.. ஒரு நாள் நடக்கும்.. அப்ப பாத்துக்குறேன் உன்னை" என்று விட்டு படுத்த சத்யா நந்தினி நினைவிற்கு மாறியவன் நன்றாய் உறக்கத்தை தழுவி இருந்தான்.
அடுத்த நாள் கல்லூரி வந்த சத்யாவிற்கு பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்து வந்த மாணவி சந்தியா வயிற்று வலியால் மரணம் என்ற செய்தி தான் வரவேற்றது.
கல்லூரி முழுவதும் தீயாய் பரவிய அந்த செய்தியை காலையில் கேட்கும் வரை அதை மறந்திருந்த சத்யா கேட்ட நொடி ஆடிப் போனான்.
என்னவோ தன்னால் முடிந்தும் காப்பாற்றாமல் விட்டு விட்ட மனநிலையில் அவன் இருக்க, சர்வ நிச்சயமாய் அவன் அந்த வயிற்று வலி பொய்யை நம்பவில்லை.
வகுப்பில் வந்து அமர்ந்து தலையைப் பிடித்து அமர்ந்தவனைப் புரியாமல் நண்பர்கள் பார்த்து நிற்க,
"டேய்! என்ன டா?" என்றான் சங்கர்.
"எவ்ளோ கேட்டேன்.. என்னென்னவோ சொல்லிட்டிங்களே டா.." என்றவன் பேச்சு புரியவே இல்லை நண்பர்களுக்கு.
"என்ன டா சொல்ற!" தான்யா கேட்க,
"அடிச்சு சொல்றேன் அது அந்த பொண்ணு தான்.. அவ இறந்தது அந்த ஸ்ரீதர்னால தான்" வகுப்பு அதிர சத்யா கத்திவிட, அவன் வாயை மூடி விட்டான் சங்கர்.
"லூசா நீ? யார் என்னனு தெரியாம சும்மா உளராத!" சங்கர் யாரும் கேட்டிருக்க கூடாதே என்று சுற்றிப் பார்த்தபடி அதட்ட,
"இல்ல.. இல்ல.. இல்ல.. அது அந்த பொண்ணு தான்.. அந்த பொண்ணு கிளாஸ் முன்னாடி நாம போகும் போது தான் அந்த பொண்ணு அழுதுட்டு போனது.. நினச்சு பாரு.. ஸ்டெப்ஸ்கிட்ட தானே நாம பார்த்தோம்? ஆப்போசிட் கிளாஸ்ல அவன் நின்னான்.. அது அந்த பொண்ணோட கிளாஸ் தான்.. அந்த கிளாஸ் பொண்ணு தான் இப்ப இறந்திருக்குறது.. இதுக்கு மேல என்ன டா வேணும் ரெண்டும் ஒன்னு தான்னு சொல்றதுக்கு?" என்றவன் அவ்வளவு ஆக்ரோஷமாய் இருக்க, வகுப்பில் இருந்த அனைவருமே அவனை தான் பார்த்திருந்தனர்.
இன்னும் வகுப்பிற்கு ஆசிரியர் யாரும் வராமல் இருக்க, நண்பர்கள் சத்யாவின் இந்த முகத்தில் ஸ்தம்பித்து அவன் கூறும் செய்தியில் அதிர்ந்து நின்றனர்.
தொடரும்..

Last edited: