முரளிதரன் காண்பித்த காணொளியை நம்ப முடியாமல் பார்த்திருந்த அபய்யிடம், “எனக்கு ஆச்சர்யமே மாமா எப்படி இப்படி ஒரு பெண்ணை உனக்கு தேர்ந்தெடுத்தார் என்பது தான்..”
“நல்லவேளை முதல்லயே நீ தப்பிச்சுட்ட மாப்பிள்ளை ஒருவேளை அவளை உன் பொண்டாட்டியா ஏத்துகிட்டு வாழ்ந்து குழந்தை பிறந்த பிறகு தெரிஞ்சிருந்தா என்ன ஆகிறது?! நினைச்சு பார்க்கவே முடியலைடா..."
“வாட் ரப்பிஷ் இஸ் திஸ்! முதல்ல இப்படி பேசறதை நிறுத்துங்க மாமா..” என்று பொறுக்க முடியாமல் கத்திவிட்டான் அபய் ஸ்ரீவத்ஸன்.
“அபய்...”
“எனக்கு நயனியை பற்றி நல்லா தெரியும். இப்படி அபாண்டமா பேசாதீங்க, என் சஞ்சுவுக்கும் அவளுக்கும் எந்த வித்யாசமும் கிடையாது”
“நீதானே டா இந்த பொண்ணு உன் சஞ்சுவை ஏதோ செய்திருப்பான்னு சொன்ன. கொலை செய்யவே அஞ்சாதவள் இதுக்கா அஞ்ச போறா..”
“மாமா சஞ்சு கடைசியா இவளை பார்க்க போனதாலும் இவ எந்த மறுப்பும் இல்லாமல் கல்யாணத்துக்கு உடனே சம்மதிச்சதாலும் தான் அப்படி இருக்குமோன்னு சந்தேகப்பட்டேன். மற்றபடி நயனி ரொம்பவே நல்ல பொண்ணு இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை..”
“மாப்பிள்ளை ஆனா இதெல்லாம் நிஜம் டா”
“என்ன நிஜம்?! கண்ணால் காண்பது பொய்யாகவும் வாய்ப்பு இருக்கு. இன்னொருமுறை நயனியை தப்பா பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன்.. சரி எங்க உங்க மாமா? நான் இனி அவர்கிட்ட பேசிக்கிறேன்” என்று நேராக தந்தையை தேடி சென்றான்.
“யாரை கேட்டு நயனிகாவை காலேஜ் விட்டு நிறுத்தினீங்க? கண்டவனும் பழி சொன்னா அதை அப்படியே நம்புவீங்களா?! மனசாட்சி இல்லையா டாடி உங்களுக்கு?!”
“எனக்கு கௌரவம் ரொம்ப முக்கியம் அபய். அதுக்கு களங்கம் விளைவிக்கிறவங்க யாரா இருந்தாலும் நான் பொறுத்துக்க மாட்டேன்...”
“அப்போ உங்களுக்கு இந்த அளவுக்கு தான் அவளை தெரியுமா?! பிறகு என்ன தைரியத்துல இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணீங்க?!”
“இதை ரெண்டு வருஷமா காணாமல் போன நீ கேட்க கூடாது அபய். இன்னைக்கு இவ்ளோ ஆவேசமா கேள்வி கேட்கிறது நீ வேண்டாம்னு விட்டுட்டு போன பொண்ணுக்காக தான் அதை மறந்துடாத...”
“நயனியை தான் நீ உன் மனைவியா ஏத்துக்கவே இல்லையே பிறகு எதுக்கு உனக்கு இந்த பேச்சு. போய் உன் வேலையை பாரு அதுக்கு முன்னாடி டிவோர்ஸ்கு அப்ளை பண்ணு..”
“போதும் நிறுத்துங்க ப்பா. இன்னும் எத்தனை காலத்துக்கு தான் என்னை உங்க இஷ்டப்படி ஆட்டி வைக்க போறீங்க?! இத்தனை வயசாகியும் யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே கண்மூடித்தனமா நம்புவீங்களா?!”
“என்ன பேசற அபய்?! நான் உன் அப்பா...”
“அப்பாவா இருக்கிறதால தான் இவ்ளோ பொறுமையா பேசறேன். உங்க மண்ணாங்கட்டி கௌரவத்துக்காக ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சு கூட்டிட்டு வந்தவர் அவளை பற்றி யார் என்ன சொல்லி இருந்தாலும் நீங்க அவளுக்கு ஆதரவா இருந்திருக்கணும்..”
“ஆனா நீங்க அவளை நம்பாமல் கண்டவங்க சொன்னதையும் கண்ட குப்பையையும் நம்பி அவளை வீட்டை விட்டு அனுப்பி இருக்கீங்க.. உங்களுக்கே உங்களை நினைச்சு அசிங்கமா இல்லையாப்பா”
“அபய்...”
“ஒத்துக்கிறேன் நான் இங்கிருந்து இருந்தால் இப்படி நடக்காமல் கூட போகலாம் ஆனா என்னையும் அவளையும் இந்த பந்தத்துல சேர்த்த நீங்க இங்கிருந்தும் எப்படி இதை நடக்க விட்டீங்க”
“எல்லாமே ஆதாரத்தோடும் ஸ்டூடெண்ட்ஸ் கொடுத்த சாட்சியை வச்சும் தான் நான் முடிவு எடுத்தேன்..”
“ஆனா அவளை வீட்டை விட்டு அனுப்புற அதிகாரத்தை யார் கொடுத்தா? எனக்கு ஒரு வார்த்தை சொல்லி இருக்கனுமா இல்லை”
“எங்க இருக்கன்னே தெரியாத உன்னை எப்படி நாங்க தேடி தகவல் கொடுக்க?!”
“அப்போ நான் வரும் வரை பொறுமையா இருந்திருக்கணும். இனி நீங்க நயனி விஷயத்துல தலையிடாதீங்க” என்றவன் உடனே சுதர்ஷனை தேடி சென்றான்.
பாதி வழியிலேயே அவனை ஹோட்டலில் சந்தித்தவன், “அப்படி அன்னைக்கு என்ன தான்டா நடந்தது இப்பவாவது சொல்லி தொலைடா” என்று கைபேசியில் இருந்த புகைப்படங்களை காண்பித்தான்.
“சொன்னா..”
“ப்ச் ஏற்கனவே நான் கில்ட்ல இருக்கேன், உன் பங்குக்கு நீயும் என்னைய குத்தி கிழிக்காத மச்சான்..”
“ரெண்டு வருஷம் எங்க இருக்க? எப்படி இருக்க ?அட்லீஸ்ட் கல்யாணம் பண்ணி விட்டுட்டு போன அந்த பொண்ணு வீட்ல எப்படி இருப்பாங்கறது பற்றி கூட யோசிக்காமல் இருந்துட்டு இப்ப மட்டும் என்னடா பாசம் பொங்குது”
“நான் பண்ணினது தப்பாவே கூட இருக்கட்டும் அதை குத்தி காட்டும் நேரம் இது கிடையாதுடா.. தயவுசெஞ்சு சொல்லு” என்றான்.
“இப்போ நீ இப்படி பேசுறதை நம்புவதற்கு நான் என்ன முட்டாளா?! உனக்கு என்ன திடீர்ன்னு நயனி மேல கரிசனம்?”
“ப்ளீஸ் மச்சான் நீ என்னை எவ்ளோ திட்டனுமோ திட்டு ஆனா அதுக்கு முன்னாடி என்ன நடந்தது என்று சொல்லிட்டு திட்டுடா” என்றான் கெஞ்சலாக.
அவன் பேச்சில் சற்று இறங்கி வந்தவன், “சொல்லு என்ன தெரியனும்?!”
“எனக்கு நயனியை பற்றி நல்லா தெரியும் அவ நிச்சயம் மோசமான பொண்ணு கிடையாது இதுல வேற ஏதோ சூழ்ச்சி இருக்கு நயனிக்கு என்ன நடந்தது? இப்போ எங்க இருக்கா?”
“நயனி பற்றி உனக்கு தெரிஞ்சு என்னடா பிரோஜனம்?! உன் குடும்பத்துக்கு தெரியலையே! நயனி தான் மருமகளா வரணும்னு அடம் பிடிச்ச உங்க அப்பாவுக்கு தெரியலையே?! எவனோ ஒரு நாய் கொடுத்த ஆதாரத்தை வச்சு எவ்வளவு ஈஸியா அவங்க மேல பண்ணி சுமத்திட்டாங்க..”
“இதுல கொடுமையே அவ அப்பன் பேசுன பேச்சு தான்!! அவங்க அம்மாவால நயனியை அவங்க வீட்ல கூட வச்சுக்க முடியல. எங்க நான் தப்பான முடிவுக்கு போயிடுவாங்களோன்னு ஹாஸ்டல்ல சேர்த்து விட பயமா இருந்தது..”
“அதனால தான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டேன்”
“ஹப்பா! அப்போ நயனி இப்போ சேப்பா இருக்கா அப்படி தானே?!”
“ஆமா..”
“அதுபோதும் ஆனா இது எப்படி நடந்ததுன்னு எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லு மச்சான்..”
“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அதாவது நயனிக்கு தெரிஞ்ச வரைக்கும் சொன்ன விஷயங்கள் இதுதான்..” என்று தன் பேச்சை ஆரம்பித்த சுதர்ஷன்,
“அந்த ஃபோட்டோவில் இருக்கிற பையன் நயனியோட ஸ்டூடண்ட் தான்! ஃபைனல் இயர்ல இருக்கான். கிளாஸ்ல ரெண்டு மூணு முறை டிரக்ஸ் எடுத்துட்டு வந்து உட்கார்ந்திருக்கான்..”
“அதோடு பொண்ணுங்களை ரொம்பவே மோசமா பேசுறது வர்ணிக்கிறது என்று அவனோட அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி போயிருக்கு..”
“ஒவ்வொரு முறையும் அவனை வார்ன் பண்ணின நயனி கடைசியா ஒரு பெண்ணை டார்ச்சர் கொடுத்ததை பார்த்துட்டு இன்னொரு முறை இந்த மாதிரி நடந்ததுன்னா நிச்சயமா மேனேஜ்மென்ட்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்னு வார்ன் பண்ணி இருக்காங்க...”
ஆனாலும் அந்த பையன் தொடர்ந்து தன் போக்கில் இருந்ததால வேற வழி இல்லாம அவன் பேரன்ட்ஸ் வரவழைச்சு பேசின நயனி அடுத்த கம்ப்ளைன்ட் வந்தால் நேரடியா சஸ்பென்ட் பண்ண போறதா சொல்லி இருக்காங்க”
“அதனால அந்த பையனுக்கு அவங்க மேல கோபம் இருந்திருக்கு.. ஆனாலும் வெளிக்காட்டிக்காமல் நயனி போற இடமெல்லாம் பின்னாடி போய் மன்னிக்க சொல்லி கேட்டிருக்கான்..”
“அது மட்டும் இல்ல அவனை செமஸ்டர் அட்டென்ட் பண்ண அலோ பண்ணல. போதாததுக்கு இவனுக்கும் இன்னொரு பையனுக்கும் கிளாஸில் ஏதோ தகராறு ஆகி இருக்கு..”
“அப்போ நயனி அந்த பையனோட பக்கம் ஸ்டான்ட் எடுத்ததுல அவன் இன்னுமே காண்டாகி போயிருக்கான். அந்த பையன் பக்கம் நியாயம் இருந்ததால் மட்டுமே அவனுக்கு ஸ்டான்ட் எடுத்திருக்காங்க ஆனா அவன் அதை தப்பா புரிஞ்சுட்டு இருந்திருக்கான்..”
“நயனியை பழிவாங்க சந்தர்ப்பம் தேடிட்டு இருந்தவனுக்கு காலேஜ்ல நடந்த ஒரு ஃபங்ஷன்ல நயனி கேர்ள்ஸ்கு புடவை கட்டி விட போயிருக்காங்க, அப்போ அவன் லவ் பண்ற பொண்ணு மூலமா மயக்க மருந்து கலந்து கொடுத்திருக்கான்..”
“என்னடா சொல்ற?” என்று அபய் கேட்ட அதேவேளை சுதர்சனின் வீட்டிலிருந்து நயனிகா உணர்வுகள் அற்ற முகத்தோடு அன்றைய நாளை நினைவுகூர்ந்தாள்.
கடந்த இரண்டு வருடம் அபய் இல்லாமல் போனாலும் அந்த வீட்டின் மருமகளாக அவள் எந்த குறையும் இல்லாமல் தான் நடந்து கொண்டாள்.
நிர்மலா அவளிடம் அதிகம் பேசாவிட்டாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவள் அதிகாலையை எழுந்து அனைவருக்கும் காபி டீ போடுவதில் தொடங்கி சமையல் செய்வது வரை எந்தக் குறையும் இல்லாமல் தான் நடந்து கொண்டாள்.
முதலில் அவள் சமைப்பதற்கு முரளிதரனும் இளங்கொடியும் எதிர்ப்பு தெரிவிக்க வினோதனும் சக்கரவர்த்தியும் அவளுக்கு பக்கபலமாக நின்றனர்.
பின்னே கட்டிக்கொண்டு வந்த மனைவியை மகன் இப்படி விட்டுச் செல்வான் என்று எதிர்பாராதவர் மருமகளுக்கு குறைந்தபட்சம் அந்த வீட்டின் மருமகளான உரிமைகளை கொடுத்து ஈடுகட்ட முயன்றார்.
‘இதுதான் தன் குடும்பம்’ என்ற முடிவோடு இருந்த நயனிகாவும் மனதார தான் அனைவருக்கும் செய்து கொண்டிருந்தாள்.
கணவன் விட்டுச் சென்றது அவளுக்கும் பேரதிர்ச்சி என்றாலும் நிச்சயம் சில நாட்களில் திரும்பி வந்து விடுவான் என்று தான் அவள் நினைத்தால் ஆனால் நாட்கள் மாதங்களை கடந்து மாதங்கள் வருடங்களை எட்டிய போதும் அவன் வராததில் நயனிக்கு மனம் கசந்து போனது.
இதற்கு மேலும் தோழியின் கட்டளையை நிறைவேற்றுவதால் பலன் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவள் அவனிடம் உண்மையை சொல்லி விடலாம் என்று முடிவு செய்த போதும் அதை தெரிவிக்க கணவன் அருகில் இல்லை.
அவன் வருகைக்காக அவள் காத்திருந்த ஒரு நாளில் தான் அன்றைய கொடூரம் நடந்தேறியது.
Last edited: