• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் கேட்கும் அமுதம் நீ - 18

kkp11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
78
116
33
Tamil nadu

அதிர்ச்சியில் இருந்து மீண்ட அபய் ஸ்ரீவத்ஸன் "என் சஞ்சுவுக்கு என்னாச்சு?" என்று கண்ணீரை உள்ளிழுத்தபடி கேட்டான்.​

"எனக்கு தெரியாது. ஆனால் என்ன நடந்ததுன்னு உங்களுக்கு சொல்லி இருக்க வாய்ப்பு உண்டு..." என்றவள் எப்படி அவளுக்கு இந்த கடிதம் கிடைத்தது என்பதை சொல்லி,​

"ப்ளீஸ் இந்த லெட்டரை படிங்க.. உங்களுக்கே புரியும்"​

"அப்போ உனக்கு தெரியாதா?!"​

"இல்லை.. இந்த லெட்டர் உங்க அப்பா என்னை பெண் கேட்டு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னாடி தான் என் கைக்கு கிடைச்சது. அதுல சஞ்சு என்ன சொல்லி இருந்தாளோ அதை தான் நான் செய்தேன். இதோ இது அவ எனக்கு எழுதிய லெட்டர் உங்களுக்கு சந்தேகம் இருந்தா படிச்சு பாருங்க.." என்றவளுக்கு 'அங்கே இருப்பதா கூடாதா?' என்ற குழப்பம்.​

'சற்று நேரம் அவனை தனிமையில் இருக்க விடுவது சிறந்தது' என்ற முடிவோடு கதவை திறந்து கொண்டு வெளியில் சென்று விட்டாள்.​

"என் உயிரினும் மேலான ஸ்ரீமாக்கு.."​

"எப்படி இருக்கீங்க? நிச்சயம் நான் இல்லாததுல நீங்க நல்லா இருக்க மாட்டீங்கன்னு தெரியும்.. நான் ஏன் திடீர்னு காணாமல் போனேன்?! அதுக்கு யார் காரணம்? எனக்கு என்ன ஆச்சு? இது எல்லாம் உங்களை தூங்க விடாது என்று எனக்கு நல்லா தெரியும்..."​

"நம்ம காதல் ஜெயிக்கணும்னு நாம நினைச்சா போதுமா? ஆண்டவனும் நினைக்கணும் இல்லையா? விதியை யாராலும் வெல்ல முடியாது ஸ்ரீமா.. நம்முடைய காதல் சேரனும்னு விதிக்கல.. அதனால தான் நானே எதிர்பார்க்காத எத்தனையோ விஷயம் அந்த ஒரு நாள் ராத்திரில நடந்து முடிஞ்சிடுச்சு"​

"ஸ்ரீ உங்களுக்கு ஞாபகம் இருக்கா நான் காணாம போறதுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடி நம்ம காலேஜ்ல போதை பொருட்கள் விநியோகம் அதிகமாயிடுச்சுன்னு சொல்லி நான் ஒரு பையனை காலேஜ் விட்டு சஸ்பெண்ட் பண்ண வச்சேனே..."​

"போலீஸ் அவனை விசாரிக்க தொடங்கிய போது அவன் மூலமாக ரொம்ப பெரிய கும்பலை கைது செய்தாங்க இதுக்கு தொடக்கப்புள்ளி நான் தான் என்பதை தெரிந்துகொண்ட அந்த கும்பலுக்கு என் மேல கொலை வெறி ஆத்திரம் கிளம்பி இருக்கு ஸ்ரீ.. ஆனால் அது தெரியாமலே நான் இருந்திருக்கேன்..."​

"கிட்டத்தட்ட ஒரு மாதமாகவே நான் எங்க போறேன் வரேன்னு என்னை பின் தொடர்ந்து கண்காணிச்சு இருக்காங்க.. ஒருமுறை நாம ரெஸ்டாரென்ட் போயிட்டு நீங்க வாஷ்ரூம் போயிருந்த போது என்னை இடிக்கிற மாதிரி ஒரு வண்டி வந்ததுன்னு சொன்னேனே, அது இவங்க தான்!!"​

"அன்னைக்கு நீங்க என்னோடு இருக்கிறதை பார்த்துட்டு நினைச்சதை செய்யாம போயிட்டவங்க அடுத்து நான் எப்போ சிக்குவேன்னு காத்திருந்திருந்தவங்க நான் நயனியை பார்க்க வந்த போது யாருக்கும் சந்தேகம் இல்லாத வகையில் என்னை தூக்கிட்டாங்க..."​

"அவங்க என்னை கடத்தினதும் மெயின் ரோட்டை விட்டு விலகி ஏதோ ஒரு ஒத்தையடி பாதையை எடுத்தாங்க அதுவரை தான் நியாபகம் இருக்கு. எங்க போறோம் அடுத்து என்னன்னு எதுவுமே தெரியாம இருந்த நான் உதவிக்கு ஆள் கூப்பிடகூட முடியாத நிலை.."​

"என்னால அவங்களுக்கு பல லட்சம் நஷ்டமாம். தொழிலும் முடங்கி போச்சு முன்ன மாதிரி சுதந்திரமா வேலை செய்ய முடியாம போனதுக்கு காரணமான என்னை ஆறு பேர்.. அவங்க மொத்தம் ஆறு பேர் ஸ்ரீமா! என்னை கூட்டிட்டு போன வேன் உள்ளேயே வச்சு ராத்திரி முழுக்க மாறி மாறி என்னை நாசம் பண்ணிட்டாங்க.."​

"நான் எவ்வளவோ தடுக்க போராடினேன் ஆனா அப்படி நான் செய்யறப்போ எல்லாம் அடி ஒவ்வொன்னும் கன்னமே கிழிந்து போற அளவுக்கு அடிச்சாங்க. சத்தம் வரக்கூடாதுன்னு வாய்க்கு டேப் ஒட்டி கையை கட்டி அவங்க பண்ணின சித்திரவதையை என்னால முழுசா சொல்லக்கூட முடியாது. அந்தளவு மனுஷ தன்மையே இல்லாமல் நடந்துகிட்டாங்க.. "​

"நான் என்ன யாருமே செய்யக்கூடாத அவ்வளவு பெரிய தப்பா செஞ்சுட்டேன்.. போதை கலாச்சாரம் நம்ம காலேஜ் உள்ளேயும் நுழைஞ்சிடுச்சு அதை எப்படியாவது ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என்று தானே போராடினேன் அதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை ஏன் கொடுக்கணும்?"​

"இப்ப இதை உங்களுக்கு எழுதும் போது கூட என் நடுக்கத்தை கட்டுப்படுத்த முடியலை.. மனசுல அப்படியே பாரங்கல்லை தூக்கி வச்ச மாதிரி இருக்கு ஸ்ரீமா.."​

"அது மட்டுமில்ல இன்னொரு முறை அவங்க வழியில் நான் குறுக்க வரக்கூடாதுன்னு சொல்லி எனக்கு எச்ஐவி இன்ஃபெக்ட் ஆகியிருந்த ரத்தத்தை ஏத்திட்டாங்க. அதுக்கப்புறம் என்னை குப்பையை அள்ளி வீசுற மாதிரி எங்க வீட்டு வாசல்ல வீசிட்டு போயிட்டாங்க.."​

"எல்லாமே முடிஞ்சு போச்சு ஸ்ரீமா! அன்னைக்கு ராத்திரியோட என்னோட கனவு ஆசை எல்லாமே முடிஞ்சு போச்சு. அது நள்ளிரவு நேரம் என்பதால யாருமே என் உதவிக்கு இல்லை. என்னால எந்திரிச்சு நிற்க கூட முடியலை. உடம்பு முழுக்க அப்படி ஒரு வலி நான் எடுத்து வச்ச ஒவ்வொரு அடிக்கும் உயிர் போய் உயிர் வந்தது, அப்படி ஒரு வலி "என்று அவள் கண்ணீர் விழுந்த தடம் தெரிய அபய் ஸ்ரீ வத்ஸனின் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென இறங்கியது.​

"எப்படியோ மெல்ல நடந்து என் வீட்டு கதவை தட்டின உடனே எனக்காக காத்திருந்த என் அப்பா அம்மா உடனே திறந்து வெளியே வந்தவங்க என்னை அந்த கோலத்திலே எதிர்பார்க்கலை.."​

"இவ்ளோ நடந்த போதும் உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல தோன்றலையான்னு நீங்க நினைக்கலாம். சத்தியமா அன்னைக்கு எனக்கு இருந்த அதிர்ச்சியில என்னால எதையுமே யோசிக்க முடியல"​

"பிரம்மை பிடிச்ச மாதிரி ரெண்டு நாளைக்கு இருந்ததா அப்புறம் அம்மா சொன்னாங்க. பின்னே! சொடக்கு போடுற நேரத்துல என் வாழ்க்கை தலைகீழாக புரட்டிப்போடப்படும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை"​

"எங்க அப்பா அம்மா அன்னைக்கு ராத்திரி நான் அழுததை பார்த்து பயந்து போனவங்க அக்கம் பக்கம் எல்லாம் காலையில வந்து கேள்வி கேட்கவும் ஒன்னும் இல்லன்னு சொல்லி அனுப்பிட்டாங்க எப்படியாவது என்னை குணப்படுத்திடனும் என்று முடிவு பண்ணவங்க, இந்த விஷயத்தையும் யாருக்கும் தெரியாம காதோடு காது வச்ச அடுத்த நாள் காலையிலேயே என்னை கூட்டிட்டு கேரளாவுக்கு போயிட்டாங்க.."​

"எங்களுக்கு கேரளாவில் யாரும் சொந்தம் இல்லையேன்னு நீங்க நினைக்கலாம் அது நிஜம் தான்! அங்கு எங்களுக்கு யாரும் சொந்தக்காரர் கிடையாது.. ஆனால் அந்த சூழல் என்னை கொஞ்சம் மாற்றும் என்று என் அப்பாவோட வேலை செய்த ஒருத்தரோட சொந்த குக்கிராமத்துக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க.​

"அதுக்கு அப்புறம் தினம் தினம் நான் படும் வேதனையை பார்த்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போகணும்னு சொன்னாங்க ஆனா நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.."​

"உங்களுக்கு இந்த இடத்தில் என் மேல கோபம் வரும். வந்தாலும் பரவாயில்லை.. ஏன்னா என்னைப் பற்றிய விபரத்தை அவங்களுக்கு சொன்னதே போலீஸ்காரங்க தான்! திரும்ப அங்க போறதுல எனக்கு விருப்பமில்லை.."​

"அதே நேரம் உங்களை எப்படி நான் பார்க்க முடியும்? நான் இந்த அளவுக்கு கோழையான்னு உங்களுக்கு இப்ப தோன்றலாம்.. ஆனால் அன்னைக்கு ராத்திரி நான் அனுபவிச்ச நரகத்தை கண்ணால பார்த்திருந்தால் உங்களால அப்படி சொல்ல முடியாது ஶ்ரீமா"​

"அப்ப நீங்க உங்க ஃப்ரென்ட் கல்யாணத்துக்காக கோவாவுக்கு போயிருந்தீங்க என்னால நீங்க பாதிக்கப்பட வேண்டாம் நான் கஷ்டப்படுவதை விட என்னை பார்த்து நீங்க அதிகமா கஷ்டப்படுவீங்க அவங்கள தேடி போவீங்க அதனால உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்னால தாங்க முடியாது"​

"ஸ்ரீ என்னை சீரழிச்சதோடு விட்டிருந்தா கூட எனக்கு வாழனும் என்ற ஆசை இருந்திருக்கும் ஆனால் எச்ஐவி செலுத்தின பிறகு நான் உங்க கண்ணு முன்னாடி வரக்கூட விரும்பலை.. யார் எதிர்த்தாலும் காலம் முழுக்க ஒன்னா இருக்கணும்னு நினைச்சேன் ஆனா நம்ம காதலுக்கு ஆயுசு ரொம்பவே குறைவு ஸ்ரீமா" என்ற வரிகளை படித்தவனின் கைகள் நடுக்கம் கொள்ள கடிதத்தை இறுக பற்றினான்.​

"எனக்கு உங்களோடு வாழனும்! உங்க தாலியை சுமந்து உங்க குழந்தையை சுமந்து உங்களை என்னைக்குமே என் மனசுல சுமக்க ரொம்பவே ஆசைப்பட்டேன் ஆனால் எல்லாமே இப்போ நிராசையா போயிடுச்சு.."​

"என்னோட செல்போன் அவனுங்க கிட்ட போராடினதிலேயே நான் தொலைச்சுட்டேன்.. என் அப்பா அம்மாவும் எங்க அவங்களால திரும்ப எனக்கு பிரச்சனை வந்துடுமோன்னு பயந்து அவங்களோட மொபைல் சிம் கார்டு எல்லாம் தூக்கி போட்டுட்டாங்க..."​

"அவங்களுக்கு நான் மட்டுமே முக்கியமாக இருந்தேன்! ரெண்டு மூணு நாள் கழிச்சு தான் நான் பேசவே ஆரம்பிச்சதா சொன்னாங்க..."​

"எனக்கு அருவெறுப்பு தாங்காமல் ஒவ்வொரு நாளும் அப்படியே என் உடம்பு கீறி விட்டுப்பேன்.. ஒரு நாளைக்கு பத்து முறை குளிச்சு அவங்களால என் மேல பட்ட கரையை அழிக்க முயற்சிப்பேன்... ஆனாலும் எதையுமே என்னால மறக்க முடியலை"​

"அதுக்கு அப்புறமா தான் எனக்கு உங்க ஞாபகமும் நயனியுடன் ஞாபகமும் வந்தது. முதலில் எல்லாமே உங்க கிட்ட சொல்லணும்னு நான் எவ்வளவு துடிச்சேன் தெரியுமா?"​

" ஆனால் அப்புறம் தான் யோசிச்சேன் நான் சொல்றதால நடந்ததுல எது மாறிட போகுது? அதிகபட்சம் அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பீங்க அவ்வளவுதானே?! மத்தபடி நீங்களும் நானும் கனவு கண்ட வாழ்க்கை?"​

"அது என்னைக்குமே நமக்கு கிடைக்கப் போறது இல்லையே அப்புறம் ஏன் உங்களையும் கஷ்டப்படுத்தணும்னு முடிவு செய்தேன்.."​


"ஆனா எனக்கு கர்மா மேல நம்பிக்கை உண்டுன்னு உங்களுக்கு தெரியுமே?! அப்படி என்னை நாசம் பண்ணினவங்க எல்லாரும் அடுத்த இரண்டு மணி நேரத்துலயே ரயில்வே கிராசிங்ல சிக்கி ட்ரைன் மோதியதுல அங்கேயே இறந்துட்டாங்க.. அந்த விஷயமே எனக்கு ரொம்ப தாமதமாக தான் தெரிய வந்தது. அப்போ தான் ஆண்டவன் இருக்கான் என்ற நம்பிக்கையே அதிகமாச்சு"​


"என்ன தான் அவங்களுக்கான தண்டனை கிடைச்சுட்டாலும் நான் இழந்ததை மாற்ற முடியாதே. என்னால ரெண்டு நாள் நடக்கவே முடியல ஸ்ரீமா. என் அப்பா அம்மாவால நான் படுற வேதனை பார்க்க முடியலை, அங்கிருந்து ஆயுர்வேத ட்ரீட்மென்ட் கொடுக்குறவங்கலை கொண்டு வந்து எனக்கு, என்னுடைய காயத்துக்கு வைத்தியம் பார்க்க வச்சாங்க...:​

"அதுக்கப்புறம் தான் நான் அவங்க கிட்ட எனக்கு எச்ஐவி இன்ஜெக்ட் பண்ணி இருக்க விஷயத்தை சொல்ல அவங்க மொத்தமா நொறுங்கி போயிட்டாங்க... எப்படியாவது என்ன காப்பாத்தணும்னு அவங்க தேடி போகாத ஹாஸ்பிடல் இல்ல ஆனாலும் என்னை டெஸ்ட் பண்ணி பார்த்தவங்க சொன்னதைக் கேட்டு எங்க அப்பாவுக்கு நெஞ்சு வலியே வந்துடுச்சு"​

"ஏன் ஸ்ரீ எனக்கு மட்டும் இந்த நிலைமை? நம்ம கல்யாணம் குழந்தைங்க அவங்க கல்யாணம் வரைக்கும் நம்ம எவ்வளவு பிளான் பண்ணி இருந்தோம்"​

"ஆனால் எனக்கு உங்களோடு வாழ கொடுத்து வைக்கல எனக்கு ஒவ்வொரு நாளும் அவங்க எனக்கு கொடுத்து பிசிகல் டார்ச்சர் எனக்கு மெண்டல் டார்ச்சரா மாறிடுச்சு என்னால் அதை மறக்க முடியல.. கெட்ட கனவா நினைச்சு வெளிய வந்துடு சொன்ன எனக்குள்ள அவங்க செலுத்தின அந்த எச்ஐவி வைரஸ் மறுக்க விடல.."​

"நிஜமாவே எனக்கு அதுக்கு மேல வாழவே பிடிக்கல.உயிரோடு இருந்து தினம் தினம் இந்த கொடுமையை நான் அனுபவிச்சு என் அப்பா அம்மாவுக்கும் கொடுக்குறதுக்கு பதிலா நான் போயிட்டா எல்லாருமே நிம்மதியா இருக்கலாமே முக்கியமா நீங்க!!"​

"நான் இல்லைன்னு தெரிஞ்சா நிச்சயமா நீங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் ஆனால் என்னால நீங்க உங்க வாழ்க்கையை இழப்பதை என்னால ஏத்துக்க முடியாது.. அதனால தான் உங்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடிவு செய்தேன்.."​

"அப்போ தான் நயனியை விட உங்களுக்கு நல்ல துணை யாருமே இருக்க முடியாதுன்னு எனக்கே புரிஞ்சது..."​

"இந்த லெட்டரை நீங்க படிக்கும் போது கண்டிப்பா உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்திருக்கும்" என்று நம்புகிறேன்.​

"ஏன்னா என் நயனி பற்றி எனக்கு தான் தெரியும்"​

"அவ என்னைக்குமே கொடுத்த வாக்கை காப்பாற்றுவாள் நான் கேட்டுகிட்ட சத்தியத்தை நிச்சயம் மீறாததால தான் இப்ப நீங்க இந்த லெட்டரை படிச்சிட்டு இருக்கீங்க.."​

"உங்களுக்கு தோன்றலாம் நான் எங்க போனேன் என்ன ஆனேன் என்று தெரியாமல் இருக்கும் போது அவள் உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது உங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக கூட இருக்கலாம்..."​

"ஆனால் உண்மை அது கிடையாது. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் நயனி வரலை. அவளோட காதலுக்கு இடைஞ்சலா தான் நான் வந்திருக்கேன் அதாவது உங்க மேல அவள் கொண்டிருந்த காதலை தான் நான் தட்டி பறிச்சு இருக்கேன் ஶ்ரீமா.." என்றவள் எப்படி என்பதையும் விளக்கமாக சொல்லியிருக்க படித்துக்கொண்டிருந்த அபய்யிடம் அசைவில்லை.​

 
Last edited: