• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் கேட்கும் அமுதம் நீ - 4

kkp11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
78
116
33
Tamil nadu

அமுதம் - 4​

"அக்கா இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை. நீ முடியாதுன்னு சொல்லு" என்ற நிதிஷாவை வெறுமையாக பார்த்த நயனிகா வர்ஷி,​

"நிது என் வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கனும் என்று எனக்கு தெரியும். நீ அதிகம் பேசாம உன் வேலையை மட்டும் பாரு" என்று கண்டிப்பாக சொல்லிவிட அதன்பின் எதுவும் பேசாதவள் அவள் தலை அலங்காரங்களை கலைத்து விட்டு கூந்தலை தளர பின்னலிட்டாள்.​

என்ன தான் நயனிகா சிறு வயது முதலே ஹாஸ்டலில் இருந்த போதிலும் வாரம் ஒருமுறை அவளை பார்க்க வரும் தனலட்சுமியோடு பார்கவ்வும், நிதிஷாவும் வந்து விடுவார்கள்.​

அக்கா மீது மிகுந்த பாசம் அவர்களுக்கு, நயனிக்குமே அப்படி தான். ஒரே ஊரில் இருந்து கொண்டு ஏன் ஹாஸ்டலில் இருக்கிறாய் எங்களோடு இரு என்று பலமுறை அவர்கள் அழைத்த போதும் அவள் செல்லவில்லை.​

விடுமுறை நாட்களில் மட்டுமே நயனி வீட்டிற்கு வர தனலட்சுமி அனுமதிப்பார். அப்போதுதானே மற்ற இருவருக்கும் விடுமுறை இருக்கும். மூவரும் ஒன்றாக இருக்கையில் மகள் இன்னுமே பாதுகாப்பாக இருப்பாள் என்ற நம்பிக்கை அவருக்கு.​

பள்ளியில் மட்டுமல்ல அதன் பின் கல்லூரி படிப்பு, வேலையில் சேர்ந்து சம்பாதித்த போதிலும் அவள் வீட்டில் இருப்பதை விரும்பவில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் சேதுராமன்!!​

ஆம் சிறு வயதில் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டாலும் அவள் பருவம் எய்திய பின் அவர் பார்வையும் பேச்சும் மெல்ல மாற்றம் பெற்றது. அதை கண்டுவிட்ட தனலட்சுமி, “அவ நம்ம பொண்ணு” என்று சொல்ல,​

“எனக்கா பிறந்தா?!” என்று அலட்சியமாக அவர் கேட்ட விதத்திலேயே தனலட்சுமிக்கு புரிந்து போனது. இனி மகளுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை என்பது. அதனாலேயே முடிந்தவரை அவளை ஹாஸ்டலிலேயே இருக்க செய்தார்.​

வீட்டில் வரும் நாட்களையும் மற்ற பிள்ளைகள் உடன் இருப்பது போல அமைத்து கொண்டதால் சேதுராமனால் ஒரு கட்டத்திற்கு மேல் நயனியை நெருங்க முடியவில்லை.​

அவளுமே முதலில் தந்தைக்கு ஏன் தன்னை பிடிக்கவில்லை என்ற நிலையில் இருந்தவள் பெண்களுக்கே உண்டான உள்ளுணர்வு அவர் தொடுகை தவறு என்று ஒருமுறை எச்சரித்ததில் அவரோடு தனியாக இருப்பதி தவிர்த்துவிடுவாள்.​

சேதுராமனின் தொல்லை தாங்காமலே மகளுக்கு சீக்கிரம் திருமணம் செய்து அனுப்பி விட வேண்டும் என்று அவர் நினைத்திருக்க சேதுவோ ஊர் பட்ட கடன் இருக்கு அதோடு இவ படிப்புக்கு அள்ளி கொட்டினதும் எக்கச்சக்கம் அதனால படிச்ச படிப்புக்கு முதல்ல சம்பாதிச்சு போடட்டும் அப்புறம் கல்யாணத்தை பார்க்கலாம்..” என்று சொல்லிவிட்டார்.​

அப்படி கடந்த மூன்று வருடங்களாக நயனியின் சம்பாத்தியத்தை முழுமையாக பெற்று கொள்ளும் சேதுராமன் சக்கரவர்த்தியே அவர்கள் வீடு தேடி வந்ததில் தன் மனதை மாற்றிக்கொண்டார்.​

தங்கள் கல்லூரியில் பணிபுரியும் நயனிகா வர்ஷியை பல விழாக்களில் சந்தித்துள்ளார்.​

அதோடு அவள் பொறுமை நிதானம் மட்டுமல்ல பின்புலமும் அறிந்தவர். சேதுராமனின் பேராசை நிச்சயம் சம்மதிக்க வைக்கும் என்று கணக்கு போட்டிருந்தவருக்கு அவள் சஞ்சனாவின் நெருங்கிய தோழி என்பதால் நிச்சயம் மகனின் மனதை மாற்றிவிடுவாள் என்ற நம்பிக்கை.​

அதோடு அவர்கள் தகுதிக்கு பெண் எடுத்தால் நாளை அவரல்லவா மற்றவர்களிடம் கைகட்டி பதில் சொல்ல வேண்டிய நிலை வந்துவிடும். நிச்சயம் மகன் அந்நிலையில் தன்னை நிறுத்துவான் என்பதை அவர் அறிந்தே இருந்தார்.​

அதனாலேயே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருந்தார்.​

பின்னே! அவருக்கு அவர் கௌரவமும் முக்கியம்! அதே நேரம் மகனால் யாருக்கும் கைகட்டி பதில் சொல்லிவிடக்கூடாது என்பதாலேயே நயனியை தன் மருமகளாக்க முடிவு செய்து மகனின் காதல் தொடங்கி இப்போது அவன் திருமணம் வரையில் எதையும் மறைக்காமல் சொல்லிவிட சேதுராமன் என்ன மறுக்கவா போகிறார்?!​

ஆனால் அவரே எதிர்பாராதது நயனி உடனே இந்த சம்மந்தத்திற்கு சம்மதித்தது தான். அதில் சக்கரவர்த்திக்கு மருமகளை பிடித்து போனது என்றால் அபய்க்கு இதனாலேயே அவளை சுத்தமாக பிடிக்காமல் போனது.​

சொல்லப்போனால் இந்த சம்பந்தம் பேசும் வரை அபய் ஸ்ரீவத்ஸன் நயனிகா இடையிலான உறவு மிக அழகானதாக தான் இருந்தது. அவர்களின் பெரும்பாலான சந்திப்புகளில் நயனியும் உடன் இருப்பாள்.​

சக்கரவர்த்தி போலவே அவள் பெற்றோரும் அத்தனை எளிதாக திருமணத்திற்கு சம்மதிக்க கூடியவர்கள் கிடையாது. ஆனால் ஒரே பெண்ணான அவளின் ஆசையை நிச்சயம் மறுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இருந்தது.​

“உங்களுக்கு இடையில் நான் எதுக்கு சஞ்சு?” என்று அவளே மறுத்தாலும் அபய் விடமாட்டான்.​

“நாங்க லஞ்ச்கு போறோம் நயனி. உன்னை விட்டுட்டு போனா உன் பிரென்ட் அங்கிருந்து கிளம்புற வரை உனக்கு என்னெல்லாம் பிடிக்கும்னு பேசிட்டு இருப்பாளே தவிர்த்து என்னோடு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டா. ஸோ எங்களோட ஜாயின் பண்ணிக்கோங்க லஞ்ச் முடிச்சுட்டு உன்னை ஹாஸ்டல்ல டிராப் பண்ணிடுறேன்” என்று அபய் அழைக்க அவளால் மறுக்க முடியாது அவர்களோடு இணைந்து கொள்வாள்.​

சேதுராமனிடம் மகன் காதல் குறித்து சொன்னவர் இப்போது இல்லையென்றாலும் நிச்சயம் மகன் நயனியை ஏற்று கொள்வான் அதற்கு ஈடாக என்ன வேண்டுமானாலும் செய்வதாக சொல்ல சேதுராமனும் திருமணத்திற்கு தன் புறம் சில கண்டிஷ்ன்ஸ் உண்டு என்றவர் தன் கடன் சுமைகளை சொல்லி பேரம் பேசி நயனியை அவர்கள் குடும்பத்தின் மருமகளாக அனுப்புகிறார்.​

இதை தட்டி கேட்ட தனலக்ஷ்மியிடம், “உன் மகளை வச்சு எனக்கு அடிச்சிருக்க ஜாக்பாட் இது!! அப்படி இதை நடத்த விடமாட்டேன்னு சொன்னா நீ சம்பாதிச்சு கடனை அடைடி”​

“எனக்கு.. என்னால எப்படிங்க அவ்ளோ பணம் புரட்ட முடியும்?”​

“உன்னை விட்டு சம்பாதிச்சு கொடுடி” என்றதில் முழுதாக உடைந்து போனார் தனலட்சுமி.​

நயனி தான் அவரை தேற்றி தனக்கு இதில் முழுமனதாக சம்மதம் எதையும் தடுக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாள்.​

மகளுக்காக பால் கொண்டு வந்த தனலட்சுமி "மாப்பிள்ளை மனசு மாறும்னு எனக்கு நம்பிக்கை இல்ல வர்ஷி, அவர் ஊதாரிதனமா சொத்தை அழிச்சதுக்கு உன்னை பலி கொடுக்க நான் தயாரா இல்லைடா, என் தலையை அடமானம் வச்சாவது அந்தாளு கேட்கிற பணத்தை நான் புரட்டி கொடுக்கிறேன் உனக்கு இது வேண்டாம், சொன்னா கேளுடா" என்றார் கண்ணீரோடு​

"ம்மா ப்ளீஸ், எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். இந்த பேச்சை இதோடு விடுங்க" என்றவள் பாலை குடித்துவிட்டு படுத்து விட்டாள்.​

படுத்துவிட்டாளே தவிர்த்து உறக்கம் சுத்தமாக அவளை அண்டவில்லை.​

அபய்யை தன்னால் கையாள முடியும் என்று தைரியமாக சம்மதித்து விட்டாளே தவிர்த்து இப்போது அவனது விலகளில் உள்ளுக்குள் உதறல் எடுக்க தான் செய்தது.​

சஞ்சனா அபய் ஸ்ரீவத்சனின் காதலை அதன் ஆழத்தை அவளை விடவும் நன்கு அறிந்தவர் வேறு யாருமில்லை.​

அவனை போலவே தான் அவளும் சஞ்சனவை தேடாத இடமில்லை. முடிந்த வரை அவள் நட்பு வட்டம், சொந்தங்கள் என்று ஒருவரை விடாமல் அனைவரையும் அவள் விசாரித்து தான் இருந்தாள். என்ன பயன் அவளுக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் அபய் மட்டும் தான் அதை நம்ப மறுக்கிறான்.​

பழைய நினைவுகளில் மூழ்கியவள் விழிகளை மூடிய நேரம் இமையோரம் நீர் கசிந்தது.​

"என்னம்மா இது அக்கா இப்படி இருக்காங்க?! சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல்ல இருந்தது கூட பரவால ஆனா இப்போ ஜெயில்ல போய் அடைபட பார்க்கிறது கொஞ்சமும் நல்லா இல்லை"​

"..."​

"என்னமோ போ ம்மா. அப்பாக்கு பயப்படாம நீயாவது அக்காவுக்கு நல்ல புத்தி சொல்லு" என்றவள் வெளியேற உறங்கி கொண்டிருந்த மகள் அருகே மெளனமாக அமர்ந்தார் தனலட்சுமி.​

காலை விடியல் அழகாக விடிந்திட திருமண சடங்குகளும் இனிதே தொடங்கியது.​

அபய் தயாராகி கொண்டிருக்க அங்கே வந்த முரளிதரன், "இது உன் வாழ்க்கை மாப்பிள்ளை. மாமா வார்த்தைக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. உன் முடிவை யாருக்காகவும் மாத்திக்காத" என்றார்.​

அவன் பதில் சொல்லும் முன் அங்கே வந்த நிர்மலா, "போதும் முரளி. ஏற்கனவே வீடு வீடா இல்லை. இந்த கல்யாணத்துக்கு பிறகாவது பழையபடி சந்தோஷம் திரும்பனும்னு தான் நான் தவிக்கிறேன், உனக்கு அது புரியலையாடா?"​

"நீ சொல்றபடி செய்தா குடும்பத்துல சந்தோஷம் இருக்கு ஆனா என் மாப்பிள்ளைக்கு இருக்காது க்கா.."​

"அதுக்காக சௌந்தர்யாவுக்கு கட்டி வச்சுட்டா மட்டும் நடந்துடும்னு நினைக்கிறியாடா நீ?!"​

"க்கா..."​

"வாயை மூடு! உன்னை என் வீட்டோடு கொண்டு வந்து வச்சது எவ்ளோ தப்புன்னு இப்போதான் புரியுது. அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று நீ காத்துக்கிட்டு இருக்கிறது எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா?!”​

“என்னக்கா பேசற அப்படி எதுவும் இல்லை...”​

“போதும் முரளி, அவரும் நீயும் சேர்ந்து உங்க இஷ்டத்துக்கு அவனை வளைக்க நினைக்காதீங்க என் மகனை நிம்மதியா விடு. போ இங்கிருந்து” என்று தம்பியை விரட்டியவர்,​

“அபய்!!” என்று மகன் தோளை தொட, “முகூர்த்ததுக்கு நேரமாச்சு.. நீங்க இங்க என்னம்மா பண்றீங்க?” என்றான்.​

“சஞ்சுவை கண்டு பிடிக்க முடிஞ்சதாப்பா? எங்கிருந்தாலும் கூட்டிட்டு வா நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் ஆனா இந்த கல்யாணம் உனக்கு வேண்டாம்” என்றார் மகன் தலையை வருடியபடி,​

“....”​

“உனக்கு மட்டுமில்ல அந்த பெண்ணுக்குமே இந்த தண்டனை வேண்டாம். உங்கப்பாவை நான் சமாளிக்கிறேன்”​

“ம்மா முகூர்த்ததுக்கு நேரமாச்சு” என்றவன் கதவை திறந்து மணமேடைக்கு சென்றான்.​

நயனியும் மணமேடைக்கு வர திருமண சடங்குகள் தொடங்கப்பட்டது.​

ஒருவித படபடப்போடு அமர்ந்திருந்த நயனியின் பார்வை நொடிக்கு ஒருதரம் அவன் மீது படிந்து மீண்டது.​

ஆனால் கற்சிலை போல அமர்ந்திருந்தவன் தன்னருகே ஒருத்தி அமர்ந்திருக்கிறாள் என்ற எண்ணமே இல்லாமல் அமர்ந்திருந்தான்.​

ஆனால் திருமண சடங்குகள் தொடங்கிட அபய்யின் விலகல் அவன் ஒவ்வொரு அசைவிலும் தென்பட்டது. மஞ்சள் கயிறில் கோர்க்கப்பட்ட மாங்கல்யம் அவன் கைகளுக்கு வந்து சேர மனதில் நிறைந்திருக்கும் சஞ்சனாவின் நினைவுடன் நயனிக்கு மூன்று முடிச்சிட்டான்.​

ஆனால் மறந்தும் அவன் விரல் அவளை தீண்டவில்லை.​

தாலி கட்டியவனுக்கு மட்டுமல்ல தாலியை வாங்கி கொண்டவளின் மனம் முழுக்க சஞ்சனாவே தான் நிறைந்திருந்தாள்!!​

“நீதான் சஞ்சு எங்களோட வாழ்க்கை நல்லபடியா அமைச்சு கொடுக்கணும்” என்ற வேண்டுதலுடன் அமர்ந்திருந்தாள் நயனிகா.​

மண்டபத்தில் மற்றவர்கள் எதிரில் அவன் எதையும் வெளிகாட்டாமல் இருந்தாலும் அவன் ஒவ்வொரு அசைவிலும் அவளை துச்சமாகத்தான் நடத்தினான்.​

யாருடைய வார்த்தையும் அவனை கட்டுப்படுத்தவில்லை.​

முதல் இரண்டு முறை மகனை மிரட்டிய சக்கரவர்த்தியும் “இதுக்கு மேலயும் என்னை கட்டாயபடுத்த நினைச்சா இப்படியே போய் டிவோர்ஸ் ஃபைல் பண்ணுவேன்..”​

“அபய் உனக்கென்ன மூளை கெட்டு போச்சா?!”​

“நான் உங்க பையன் ப்பா. உங்களோட பிஸினஸ் மைன்ட் எனக்கு கொஞ்சம் கூடவா இருக்காது?!” என்று எள்ளலாக பார்த்தவன்,​

“இவ கழுத்துல தாலி கட்டுறதால எனக்கென்ன ஆதாயம் என்று தான் நானும் பார்த்தேன். இன்னொருமுறை ட்ரஸ்ட்ல ஏதாவது உங்க வேலையை காட்ட நினைச்சா உங்க மருமகள் நடத்தை சரியில்லன்னு சொல்லி டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணுவேன். உங்களுக்கு வசதி எப்படி?” என்றதில் வாயடைத்துப் போனார் சக்கரவர்த்தி.​

 
Last edited:

Rampriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 13, 2022
39
41
18
Otteri, Chennai
அருமையான பதிவு 🤩🤩
சேதுராமன்....அட கிராதகா 😤😤😤😠😠😡😡 மகளை தப்பா பார்க்கிற உன்னை எல்லாம்... சீ 👋👋👋👋👋👊👊👊👊
உன்னை போன்ற ஈனப்பிறவி சிலர் ஆண்கள் இருப்பதால் தான் 😠😠😡😡😤😤 குழந்தையோடு இருக்கும் பெண்கள் மறுமணம் செய்ய யோசிக்கிறாங்க 😥😥😥😨😨😨

அபய்..... இந்த மிரட்டலை முன்பே செய்து இருக்கலாமே 😟😟😟😟
 

Indhumathy

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 8, 2021
102
39
43
Madurai
சேதுராமன் என்ன ஜென்மம் நீ எல்லாம் 🤬🤬🤬🤬🤬🤬🤬

ஸ்ரீ இனி அவனோட கோபத்தை எல்லாம் நயனி மேல தான் காட்டுவான் 🙁🙁🙁🙁 இதுக்கு இவனும் எங்கயாவது ஓடிப் போயிருக்கலாம் 😆

முரளி 🤫🤫🤫 இருக்குற பிரச்சனையில குறுக்க மறுக்க ஓடிகிட்டு 🤣
 
  • Haha
Reactions: kkp11

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
466
253
63
Tamilnadu
சேது ராமனை திட்டறதா இல்லை அபய் திட்டுறதானு தெரியலை 🥵🥵