• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 11

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அத்தியாயம் 11

"வாசு நான் வேணா வேலைக்கு போகட்டுமா?" சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு வாசு அருகே வந்து கேட்டாள் அனாமிதா. வாசுவின் அக்கா.

"ஏன் அனுக்கா, என்மேல நம்பிக்கை இல்லையா?"

"இல்ல வாசு! அம்மாவும் நானும் வீட்ல சும்மாவே தானே இருக்கோம்? எனக்கு எங்கேயாவது வேலை கிடைச்சா உனக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும்ல?"

"அக்கா என்னால முடியாதுனு ஒரு சூழ்நிலை வந்தா சொல்றேன். அப்ப அதை பத்தி யோசிக்கலாம். இப்ப ஸ்ட்ரிக்ட்லி நாட் அல்லவ்டு" என சிரித்தவள் அவள் கையில் ஒரு காபி கப்பை கொடுத்துவிட்டு அம்மா மல்லிகா இருந்த அறை நோக்கி சென்றாள்.

அனாமிதா திருமணம் நிச்சயமான நேரம், இரண்டு வருடங்களுக்கு முன் ஒருநாள் பேருந்தில் அனுவும் மல்லிகாவும் செல்லும் போது ஏற்பட்ட பேருந்து விபத்தில் மல்லிகாவிற்கு கண்களில் கண்ணாடி குத்தி கண் பார்வை போனது. அனுவின் கால்கள் அந்த பஸ்ஸின் உடைந்த பகுதியில் மாட்டிக் கொள்ள ஒருகாலை அப்போது இழந்தாள்.

அப்பா சிறு வயதிலேயே இறந்து விட, மல்லிகாவும் அனுவும் அப்போது இருந்து வெளியில் வருவதே இல்லை. வாசு அத்ற்குபின் தான் தன் முகத்தைப் பற்றிய கவலையைவிட்டு குடும்ப பொறுப்பை ஏற்று இன்றுவரை அவர்களைத் தாங்கி வருகிறாள்.

"அம்மா! காபி" என ஒரு கப்பை அவர் கையில் கொடுக்க, அதை வாங்கி பருகிக் கொண்டே சிரித்தார்.

"ஏன்மா சிரிக்குறீங்க?"

"மதியம் நிவி போன் பண்ணியிருந்தா டா"

"அந்த லூசுக்கு வேலையே இல்ல. உங்களுக்கு எல்லா நியூஸ்ஸும் சொல்லிட்டாளா? அதுக்கு ஏன் இப்ப சிரிக்குறீங்க?"

"இல்ல இந்த நிவி பாப்பா இன்னும் உன்னை பத்தி தெரியாம இருக்கே.. அதை நினச்சு சிரிச்சேன்"

"ஆமா பாப்பா! தலையில தூக்கி வச்சு கொஞ்சுங்க. வர வர அவ பேச்சே சரி இல்ல மா"

"ஏன்மா! அவளும் உனக்கு ஒரு நல்லது நடக்கணும்னு தானே சொல்றா? அந்த தம்பி ரொம்ப நல்லவராம் டா"

"ம்மா அவனை பத்தி பேசாதீங்க! அவனும் ஒரு லூசு தான். பெரிய தியாகினு நினைப்பு. எனக்கு வாழ்க்கை கொடுக்குறானாம். அதான் நல்லா கண்ணம் பழுக்குற மாதிரி ஒன்னு விட்டேன்"

"என்ன வாசு சொல்ற? அடிச்சியா?"

"பின்ன? எவ்வளவு தைரியம் இருந்தா..." பாதி வார்த்தைகளில் அம்மாவின் கைத்தடம் பட்டு கண்ணம் எரிந்தது.

"எப்படி டி ஒரு ஆம்பள பையன கைநீட்டி அறஞ்ச? உனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலனு சொல்லிட்டு விட வேண்டியது தான? அந்த பையன் நல்லவனா இருக்க போய் தான் திருப்பி அடிக்காம விட்ருக்கான். நிவி சொன்னது வச்சு பார்க்கும் போது நல்ல பையன்னு தான் தெரியுது. உனக்கு வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லிடு. கைநீட்டி எந்த பிரச்சனையும் இழுத்துட்டு வராத வாசு. நாளைக்கே நீ மன்னிப்பு கேட்கணும். அப்புறம் வந்து என்கிட்ட பேசு" என்றவர் தட்டுத்தடுமாறி எழுந்து கொள்ள,

"ம்மா! எப்படிம்மா கரெக்ட்டா கன்னத்துல அறஞ்சிங்க?" அவரின் பேச்சு எதுவுமே காதில் விழவில்லை என்பதை போல, எப்படி கண் தெரியாமல் சரியாக கன்னத்தில் அடித்தார் என்ற யோசனையில் அதை அவரிடமே கேட்க, மீண்டும் கோபம் போய் சிரித்துவிட்டார் மல்லிகா.

"நான் உன் அம்மா டி. நீ என் பக்கத்துல உட்கார்ந்து பேசும்போது உன்முகம் மட்டும் தூரமாவா இருக்கும்?"

"அதானே!" என்று அசடு வழிந்து "முதல்ல இந்த நிவியை.." என மொபைலுடன் மொட்டை மாடிக்கு சென்றாள்.

வீட்டிற்கு வந்த நிவியும் காபியுடன் டேபிளில் அமர்ந்திருக்க, அன்னை திருமணப் பத்திரிக்கை பற்றி சொல்லுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

"நமக்கு எந்த வேலையும் இல்ல நிவி அவங்களே எல்லாம் பாத்துக்குறதா சொல்லிட்டாங்க" நிவி அன்னை சொல்ல, நிவியின் மொபைல் ஒலித்தது.

அவள் எடுத்ததும் வாசு மானவாரியாய் நிவியை திட்ட, அதற்காகவே காத்திருந்தது போல சில நொடிகள் கேட்டுக் கொண்டிருந்தவள் பின் கட் செய்யாமலே டேபிள்மேல் வைத்துவிட்டு காபியை ரசித்து குடித்தாள்.

கௌதம் ராமுடன் திருமண ஏற்பாடுகளை பற்றி பேசிக் கொண்டிருந்தான்.

“எக்மோர்ல அந்த மண்டபம் பார்த்தேன் டா. அது செட் ஆகும்னு தோணுது. நாளைக்கு அதைபோய் ஒரு நேரம் பார்த்துட்டு வந்துடலாம்" கௌதம் சொல்ல, "ம்ம் போலாம்" என்றான் ராம்.

"என்ன டா ஏதோ யோசனைல இருக்க?" கௌதம் கேட்க,

"வேறென்ன? உன்னை பத்தி தான். ஆமாம் வாசு என்ன டா சொன்னா?" ராம் கேள்வியில் மௌனமானான் கௌதம்.

"உன்னோட பர்சனல் நான் கேட்க கூடாது தான்..." ராம் சொல்ல,

"டேய் ச்சி நிறுத்து! நீ நினைக்குற மாதிரிலாம் ஒன்னும் இல்ல. இங்க பாரு கண்ணம் பழுத்துடுச்சு" கௌதம் சிரிப்புடனே கன்னத்தை காட்ட,

"அது எனக்கு மதியமே தெரியுமே!" அதே சிரிப்புடன் கூறினான் ராம்.

"அடப்பாவி! தெரிஞ்சே தான் கிண்டல் பண்ணியா?"

"டேய்! இப்பவாச்சும் பரவால்ல, மதியம் உன் கண்ணம் பன்னு மாதிரி வீங்கி இருந்துச்சு. அப்பவே தெரியும். ஆனா சிஸ்டர் முன்னாடி கேட்க முடியாதே அதான் கேட்கல. சரி என்ன சொல்றா வாசு?"

"ஹ்ம்ம் அதான் உன் சிஸ்டர்னு சொல்றியே! உன்னை மாதிரி கொஞ்சம் அழுத்தம் தான். கொஞ்சம் டைம் ஆகும் ஆனால் சரி பண்ணிடலாம்" கௌதம் உறுதியுடன் சொல்லவும் நிவியிடம் இருந்து அழைப்பு வந்தது.

"என்னடா உனக்கு கால் பண்ணறதை விட்டுட்டு எனக்கு பண்றா?"

"முதல்ல பேசு டா" ராம்.

"சொல்லு நிவி! ராம்கிட்ட பேசணுமா?"

நிவி "அண்ணா கிண்டலா?"

"இல்ல காலைல லவ் ப்ரொபோஸ் எல்லாம் பண்ணிட்டு இந்நேரம் அண்ணனுக்கு கால் பண்ணிருக்கியே அதான் கேட்டேன். சொல்லு டா என்ன விஷயம்?" கௌதம் கேட்க, வாசு வரும் வழியில் கூறியதை அப்படியே கௌதமிடம் கூறினாள் நிவி.

"அவ சொல்றதும் சரி தானே நிவி?"

"அண்ணா?"

"நீயும் அவளை மாதிரி முட்டாள் இல்லைனு நினைக்குறேன்" கௌதம் ஒரு இறுக்கத்துடன் சொல்ல,

"சாரி அண்ணா! நான் அவகிட்ட பேசி பார்க்கலாம்னு தான்.. "

"நீ நினைச்சது தப்பு இல்ல நிவி. ஆனா காதல் ஸக்கஷன்ல வரக் கூடாது. சரி ஓவர் பீலிங்கா போக வேண்டாம் விடு. இப்ப என்ன? வாசு அம்மா அக்காக்காக பீல் பண்றா அதானே? ம்ம் பாத்துக்கலாம் விடு" என்றவன் ராமிடன் 'பேசுறியா?' என ஹஸ்கி வாய்ஸில் கேட்டு மொபைலை நீட்ட, வேண்டாம் என தலையாட்டி எழுந்து கொண்டான் ராம்.

இன்னும் ராம் நிவி இருவரும் மொபைல் எண்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்பது கௌதமின் எண்ணம்.ஆனால் அதை நேராய் கேட்பது இங்கீதம் இல்லை என்பதால் அப்படியே விட்டுவிட்டான்.

வருண் அம்மா அவனை மொபைலில் தொடர்பு கொண்டு போலீஸ் வந்து சென்றதாக சொல்லி பயம் கொள்ள, எனக்கு எதுவும் இல்லை. எந்த தவறும் செய்யவில்லை என சமாளித்து வைத்தவன் நிவியை பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தான்.

நிவியின் அழகுக்காக மட்டுமே அவன் அவளை வேலையில் சேர்த்துக் கொண்டது. அதனால் தான் அவளை பற்றியும் அவளுக்கு ரெக்கமன்ட் செய்தவர்களை பற்றியும் பெரிதாக அவன் எடுத்துக் கொள்ளவில்லை. வாசுவையும் அவன் ஒரு பொருட்டாக எடுத்ததில்லை.

இப்போது யோசித்து பார்த்தால் ஒன்றுக்கு ஒன்று அனைத்தும் முரணாய் பட்டது. இதுவரை நிவி எந்த வேலையிலும் ஈடுபாட்டோடு செய்ததாய் தோன்றவில்லை. தன்னை பார்க்கும் போதெல்லாம் ஏதோ அலட்சியம் அவள் முகத்தில் வந்ததை அப்போது உணராத வருண் இப்போது உணர்ந்தான்.

உடனே சில ஆட்களை தொடர்பு கொண்டு நிவி மற்றும் வாசு பற்றிய தகவல்களை அறிய ஏற்பாடு செய்தான்.

"என்னடா, ஏதோ பெரிய பிரச்சனை போல? இல்லைன்னா என்னை எல்லாம் உனக்கு ஞாபகமே வராதே?" மதியம் முதல் வருண் தங்கியிருக்க நண்பன் நிரஞ்சன் தான் அவனிடம் இரவு கேட்டான்.

"ப்ச்! எல்லாம் போச்சு டா. பலகோடி ரூபா சரக்கு, டாக்குமெண்ட்ஸ்னு எல்லாம் ஒரே நிமிஷத்துல..."

"ஏன்? என்ன ஆச்சு? எல்லாமே நீ சீக்ரெட்டா பண்றது ஆச்சே?"

"ஐ டோன்ட் க்நொவ் நிரா! எங்க விட்டேன்னு தான் தேடிட்டு இருக்கேன்"

"அப்ப போலீஸ்?"

"வீட்டுக்கு போயிருக்கு.. இன்னைக்கு ஒருநாள் தான் டா. லாயர்கிட்ட பேசிட்டேன். நாளைக்கு அவரு பாத்துப்பாரு"

"சரி சரி ரொம்ப டென்ஸனா இருக்க? போய் கொஞ்சம் தூங்கு. நாளைக்கு பாத்துக்கலாம்"

"இல்ல டா முக்கியமா ஒரு போன் வரணும்" சரியாக மொபைல் அழைத்தது.

அதேநேரம் உடன் வேலைபார்க்கும் தினேஷ் நிவிக்கு அழைத்து உன்னை பற்றிய தகவல்களை ஒருவன் கேட்டு செல்வதாக சொல்ல உடனே நிவி ராமிற்கு அழைத்தாள்.

ஆம் ராம் நிவி இருவரிடமும் மற்றவர் நம்பர் உண்டு. ஆனால் அழைத்தது இல்லை. இதோ சற்றே சிக்கலான சூழ்நிலை என தோன்றவும் கௌதமை மறந்து ராமின் ஞாபகம். தயக்கம் விட்டு அழைத்து விட்டாள்.

இரவு 10 மணிக்கு ராம் மொபைல் அலற யார் இந்த நேரம் என முதலில் பார்த்தது கௌதம் தான்.

விது என திரையில் பெயர் விழ, யார் அந்த விது என தெரியாமல் கௌதம் கண் சுருக்கி பார்க்கும் நேரம் மொபைலை கையில் எடுத்த ராம் பெயரை பார்த்து சிரித்துவிட்டு அட்டன் செய்து எதுவும் பேசாமல் காதில் வைத்தான்.

நிவியாக இருக்குமோ என நினைத்தாலும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.

"யாரு விது? என்னனு கேட்டாங்களாம்?"

அப்போதைய மனநிலையில் நிவி அவனின் விது என்ற அழைப்பை கவனிக்கவில்லை.

"யாருன்னு தெரில ராம். பட் நீ நான் கௌதம் அண்ணா வாசு நாலு பேரும் இருந்த போட்டோ வச்சு தான் கேட்ருக்காங்க. எனக்கு என்னவோ வருண் ஆர் வருண் ஆளுங்க தான்னு தோணுது"

"ம்ம் எக்ஸக்ட்லி! பட் நீ பயப்பட தேவை இல்ல. மார்னிங் நான் இல்லனா கௌதம் உன்னை ஆபிஸ்ல ட்ராப் பண்றோம். ஈவ்னிங் கூட பிக்கப் பண்ற வர வெளில வராதீங்க. இந்த ப்ராஜெக்ட் உனக்கு முடியுற வர வருண் தொந்தரவு இருக்கும். அது முடியும் போது வருண்னு ஒருத்தன் இருக்க சான்ஸ் இல்ல. கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு அண்ட் வாசுகிட்டகூட சொல்லிடு"
சரியான முடிவை கூறிய ராம் மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டே வைத்தான்.

இவ்வளவு நேரமும் அருகில் கௌதம் இருக்கிறான் என்பதையும் மறந்து அவன் பேசியிருக்க, முடிவில் கௌதம் சம்மனமிட்டு நாடியில் கைவைத்து கட்டிலில் அமர்ந்து ராமையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ராம் பேசியதில் இருந்தே எல்லா விஷயங்களும் புரிந்தது.

ராம் "ஏன்டா இப்டி பாக்குற?"

"உனக்கு எப்படி டா நிவி நம்பர் வந்துச்சு?"

"டேய்! ஷி இஸ் மை லவ்"

"பார்றா! ஹான் அப்புறம்?"

"என்ன கதையா சொல்றாங்க? போன்ல பேசினத கேட்டல்ல? நாளைல இருந்து வாசுவை நீ பிக்கப் பண்ணிக்கோ நான் நிவியை பிக்கப் பண்ணிக்குறேன்"

"அப்புறம் ஏன் நிவிகிட்ட நான் இல்லைனா கௌதம் வருவோம்னு சொன்ன?"

"அதுக்காக நான் வர்றேன்னு சொன்னா அவ எதாவது கற்பனை பண்ணிட கூடாதுல்ல.. அதான்.. இப்ப என்ன? ஒரு நல்ல சான்ஸ். வாசுவை இப்ப மட்டும் இல்லாம ஃபுல்லா பிக்கப் பண்ற வழிய பாரு. வந்துட்டான் கேள்வி கேட்க!" என்ற ராம் போர்வையை இழுத்து தலைவரை மூடி தூங்க செல்ல,

"அப்ப ஏன்டா விதுன்னு கூப்பிட்ட?" கௌதமின் கேள்விக்கு குறட்டை விட்டு நடிப்பது போல ராம் சத்தம் கொடுக்க, அவனின் விளையாட்டு தெரிந்தாலும், 'இன்னைக்கு தான் கன்னத்துல வாங்கியிருக்கு மறுபடியும் அவகிட்டயே கோர்த்து விடுறானே' என்ற எண்ணத்திலும் தினமும் அவளை சந்திக்க கிடைத்த வாய்ப்பிலும் நிம்மதியுடன் தூங்கி போனான்.

தொடரும்..
 

Lakshmi murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
653
130
63
Coimbatore
அந்த சுரேஷ் மூர்த்தி அவர்கள் இருவரும் ஆபீஸ் போகவேண்டாம் என்று சொன்னாரே.
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அந்த சுரேஷ் மூர்த்தி அவர்கள் இருவரும் ஆபீஸ் போகவேண்டாம் என்று சொன்னாரே.
அது வருண் ஆபீஸ்க்கு சிஸ்...